Jump to content

முதல் பார்வை: கர்ணன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முதல் பார்வை: கர்ணன்

 

karnan-movie-review

 

ஊர் மக்களின் நன்மைக்காக நாயகன் உரிமைக் குரல் எழுப்பினால், அதனால் போராட்டங்களைச் சந்தித்தால் அதுவே 'கர்ணன்'.

நெல்லை மாவட்டத்தில் உள்ள பொடியங்குளம் ஒரு குக்கிராமம். பஸ் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் அந்த ஊர் மக்கள் அல்லல்படுகின்றனர். பக்கத்து ஊரான மேலூருக்கு நடந்து சென்று போய் பஸ் ஏறினால்தான் வெளியூருக்குப் போக முடியும். அப்படிப்பட்ட நிலையில் மேலூர்க்காரர்கள் பொடியங்குளம் மக்களைச் சம்பந்தமில்லாமல் சண்டைக்கு இழுக்கின்றனர். இளம்பெண்ணை கேலி செய்கின்றனர். அதைக் கண்டிக்கும் ஆண்களை இழுத்துப் போட்டு அடிக்கின்றனர். இதனால் வெகுண்டெழும் கர்ணன் (தனுஷ்) மேலூரைச் சேர்ந்த ஆதிக்க சாதியினரின் அகந்தைக்குத் தகுந்த பாடம் புகட்டுகிறார். இதனால் பிரச்சினை வலுக்கிறது. அது கபடி போட்டியிலும் எதிரொலிக்கிறது.

 

1617966958751.jpg

 

பொடியங்குளம் கிராமத்தில் நிற்காமல் செல்லும் பேருந்துகளால் கர்ப்பிணிப் பெண், கல்லூரி செல்லும் மாணவி, ராணுவத் தேர்வுக்காகச் செல்லும் நாயகன் உள்ளிட்ட அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் கர்ப்பிணிப் பெண் மருத்துவமனை செல்வதற்காக பஸ்ஸை நிறுத்தாதபட்சத்தில் அவரது மூத்த மகன் கல்லெறிகிறான். இதனால் நிலவரம் கலவரமாகிறது. அது தொடர்பான விசாரணைப் படலமும், பொடியங்குளம் ஊர் மக்களின் அணுகுமுறையும் போலீஸ் அதிகாரி கண்ணபிரானின் (நட்டி நட்ராஜ்) ஈகோவை உரசிப் பார்க்கிறது. அதற்குப் பிறகு அந்த ஊர் என்ன ஆனது, ராணுவத்தில் வேலை கிடைத்த நிலையில் நாயகன் என்ன முடிவெடுக்கிறார், பொடியங்குளம் கிராமத்துக்கு அடிப்படை வசதிகள் கிடைத்தனவா, போராட்டம் முடிவுக்கு வந்ததா போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்கிறது திரைக்கதை.

'பரியேறும் பெருமாள்' மூலம் அரசியல் சினிமாவை நுட்பமாகக் கொடுத்துப் பரவலான கவனத்தை ஈர்த்தவர் மாரி செல்வராஜ். சாதிய வன்முறையால் பாதிக்கப்படும் இளைஞன் அதையே எதிரிக்குப் பரிசளிக்காமல் அதிலிருந்து விலகி நின்று கல்வியை ஆயுதமாகக் கொள்கிறான். 'கர்ணன்' படத்தில் கல்வி, வேலைவாய்ப்பைப் பெறுவதற்காக நாயகன் போராட்டத்தை ஆயுதமாகக் கொள்கிறான். அரசியல் சினிமாவை பிரச்சார நெடி இல்லாமல் அவ்வளவு சாதாரணமாகப் படைத்துவிட முடியாது. ஆனால், அரசியலை அழகியலுடன் மிக நேர்த்தியாகக் கொடுப்பது எப்படி என்ற கலை மாரி செல்வராஜுக்கு கை வந்திருக்கிறது. தன் நேர்மையையும், உழைப்பையும் அப்படியே கொட்டி கர்ணனைக் கொடுத்திருக்கிறார்.

 

1617966974751.jpg

'கர்ணன்' என்றால் கொடுப்பவன், கொடை வள்ளல் என்று புராணங்கள் சொல்கின்றன. இந்தக் 'கர்ணன்' ஊர் மக்களின் தேவைக்காக, பிரச்சினைக்காக, உரிமையைக் கேட்கிறான். சுயமரியாதையின் முகமாக நிமிர்ந்து நிற்கின்றான். அனுமதி மறுக்கப்படுவதை, உரிமை மீறல்களைத் தட்டிக் கேட்கின்றான். அந்த வகையில் 'கர்ணன்' மகாபாரதத்தின் தலைகீழ் விகிதமாக, தலைகீழ் பிம்பமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்று சொல்லலாம்.

'கர்ணன்' கதாபாத்திரத்தில் தனுஷ் தன் முழுமையான ஆற்றலை அப்படியே அள்ளிக் கொடுத்திருக்கிறார். உரிமைக்காக குமைந்துகொண்டு, பிரச்சினை என்றால் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்திக் கொண்டு வருபவர் அடுத்தடுத்து பாய்ச்சலை நிகழ்த்துகிறார். தார்மீக ரீதியாக கோபப்படுவது, நல்லதைச் சொல்வது, தனி மனிதனாகக் களத்தில் இறங்குவது, உரிமைக்காக ஓங்கிக் குரல் கொடுப்பது, நிமிர்ந்து நிற்கும் அரசியலில் திருப்பி அடிப்பது, காதலியுடனான ஊடலில் இழவு வீட்டில் ஆடித் தன் துயரை வெளிப்படுத்துவது, பஸ்ஸை நிறுத்துவதற்காக காலில் தொடர்ந்து அடித்து எகிறிப் போய் விழுவது, காவல் நிலையத்தைக் களேபரமாக்குவது என நாயகனின் அத்தனை அம்சங்களையும் இம்மி பிசகாமல் செய்கிறார். தென் மாவட்ட வட்டார வழக்கில் தனுஷ் பேசும் லாவகமும், உடல் மொழியும் அபாரம்.

 

1617967005751.jpg

 

தனுஷின் ஆசானாக, வழிகாட்டியாக, ஏமராஜாவாக லால் பின்னி எடுத்திருக்கிறார். தமிழ் சினிமாவில் சில படங்களில் லால் வீணடிக்கப்பட்டுள்ளார். ஆனால், இதில் லாலுக்கு மகுடம் சூட்டியுள்ளார் மாரி செல்வராஜ். அவரின் உயிர்ப்பான நடிப்பு படத்துக்குப் பெரிதும் பலம் சேர்க்கிறது. தனுஷ்- லால் இணை அன்பின் அடர்த்தியைப் பரப்புகிறது.

காமெடியனாகப் பார்த்தே பழக்கப்பட்ட யோகி பாபு 'பரியேறும் பெருமாள்' படத்தில் குணச்சித்ர முகத்தைக் காட்டினார். அதன் நீட்சியாக இதிலும் பக்குவமான நடிகனுக்குரிய இயல்புகளை வெளிப்படுத்துகிறார்.

1617967018751.jpg

 

ரஜிஷா விஜயன் நாயகிக்குரிய பங்களிப்பில் எந்தக் குறையும் இல்லை. ஆனால், அந்தப் பாத்திரம் வழக்கமும் பழக்கமும் ஆனதாகவே இருப்பதால் பெரிதாக ஈர்க்கவில்லை. கௌரி கிஷனுக்குப் பெரிய அளவில் முக்கியத்துவம் இல்லை என்றாலும் படிக்க முடியாத ஏக்கத்தையும், வருத்தத்தையும் வெளிப்படுத்தி ஸ்கோர் செய்கிறார். தனுஷின் அக்காவாக லட்சுமி ப்ரியா சந்திரமௌலி தேர்ந்த நடிப்பில் பிரமாதப்படுத்துகிறார்.

குற்ற உணர்ச்சியும், இயலாமையும் மிகுந்த தனுஷின் தந்தை கதாபாத்திரத்துக்கு 'பூ' ராமு அவ்வளவு பொருத்தம். ஆதிக்க சாதியின் கர்வத்தை அழகம் பெருமாள் நுட்பமாக வெளிப்படுத்துகிறார். நட்டி நட்ராஜ் சாதியின் கோர முகத்தை அப்பட்டமாக பிரதிபலித்துள்ளார். ஊர்ப் பெரியவராக ஜி.எம்.குமாரின் நடிப்பு கச்சிதம். சண்முகராஜன், சுபத்ரா, ஜானகி ஆகியோரும் தங்கள் கதாபாத்திரங்களின் நோக்கங்களை நிறைவேற்றுகிறார்கள்

 

1617967034751.jpg

தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவும், ராமலிங்கத்தின் கலை இயக்கமும், சந்தோஷ் நாராயணனின் இசையும் படத்தின் தரத்தை வேற லெவலுக்குக் கொண்டு சென்றுள்ளன. கண்டா வரச் சொல்லுங்க, மஞ்சனத்தி பாடல்கள் ரிப்பீட் ரகம்.

கதையமைப்பில், கதாபாத்திரக் கட்டமைப்பில் இயக்குநரின் மெனக்கெடல் தெரிகிறது. நாயகி தவிர்த்து மற்ற அத்தனை பெண் பாத்திரங்களும் அழுத்தமான வார்ப்புகள். லால் தன் முன்னாள் காதலியிடம் 10 ரூபாயைத் திருடுவது, அதை அறிந்த அவர், ''மஞ்சனத்தி புருஷா... 10 ரூபாய் போதுமா... வேணும்னா ஒரு முத்தம் கொடுத்துட்டுப் போ'' என்று சொல்வது. லால் அவரின் தலையில் முத்தம் பதித்துச் செல்வது, லால்- தனுஷ் இணையின் காட்சிகள் ஆகியவை ரசனை அத்தியாயங்கள்.

பேருந்து எரிப்பு, பேருந்து மீது கல்வீச்சு என்று பேருந்து தொடர்பான அரசியல் தென் மாவட்டங்களில் அதிகம். அதனை நினைவுகூரும் விதமான காட்சிகளை இயக்குநர் மாரி செல்வராஜ் பதிவு செய்துள்ளார். இறந்துபோன தனுஷின் தங்கையை நாட்டார் தெய்வமாக முன்னிறுத்துவது, தலை துண்டிக்கப்பட்ட புத்தரின் சிலை, தலையை மட்டும் வரையாமல் ராணுவ உடையில் இருக்கும் ஓவியம், காவல் நிலையத்தில் அம்பேத்கர் படம் எனப் படம் முழுவதும் பல குறியீடுகள் உள்ளன. அத்துடன் வாளால் மீன் வெட்டும் மரபு, நாணயங்களை வைத்து சூதாடுவது என மண் சார்ந்த பண்பாட்டு அடையாளங்களையும் படத்தில் வைத்துள்ளார்.

1617967049751.jpg

கர்ணனை நாயகனாக்கி, அவரது காதலியாக திரௌபதியைக் காட்டி, ஊர்ப் பெரியவருக்கு துரியோதன் என்று பெயர் சூட்டி, அவருடன் இருக்கும் அடிப்பொடியை அபிமன்யுவாக்கி, வில்லனைக் கண்ணபிரானாகக் காட்டி மகாபாரதத்தை மாரி செல்வராஜ் தனக்கே உரிய பாணியில் மாற்றி அமைத்துள்ளார். அந்த நுட்பமான அரசியல் ஆச்சரியம் அளிக்கிறது.

இந்த உலகம் அனைத்து உயிர்களுக்கும் சொந்தமானது என்பதை உணர்த்தும் விதமாக மனிதர்களுடன், கிராமத்து மக்களுடன், கோழிக்குஞ்சு, பருந்து, கழுதை, குதிரை, யானை, மாடுகள், பன்றிகள் என அத்தனை உயிர்களையும் காட்சிப்படுத்தியுள்ளார். அவரின் மனிதம் மகிழ்ச்சி அளிக்கிறது.

இவ்வளவு பலங்கள் நிறைந்து கிடந்தாலும் சில பலவீனங்கள் இருப்பதையும் மறுப்பதற்கில்லை. கொடியங்குளம் சாதிக் கலவரத்தைத்தான் படத்தின் மையமாக மாரி செல்வராஜ் வைத்துள்ளார். அதை ஏன் மறைக்க வேண்டும்? தனுஷ்- ரஜிஷா விஜயன் காதலுக்கு ஏன் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? அதை எடிட்டர் ஆர்.கே.செல்வாவின் ஒத்துழைப்புடன் அப்படியே கத்தரித்திருந்தால் நீளம் குறைந்திருக்கும். சீரியஸ் படத்தில் காதல் காட்சிகள் தொய்வை ஏற்படுத்துகின்றன. கமர்ஷியல் காரணத்துக்காகச் சேர்க்கப்பட்டாலும் அது படத்துடன் ஒட்டவில்லை.

1617967084751.jpg

முதல் பாதியில் மெதுவாக கதை சொல்லும் உத்தியைத் தவிர்த்திருக்கலாம். மக்களோடு மக்களாக நின்று, எதிர்க்கும் நாயகன் இறுதியில் தனித்து நின்றுக் களமாடுவதாகக் காட்டுவது எதனால்? நாயக பிம்பத்தைத் தூக்கிப்பிடிக்கும் காட்சிகள் அதிகம் உள்ளன. எப்போது தனுஷ் வாள் எடுத்துச் சுழற்றுவார், குதிரை மீது ஏறி அமர்ந்து வருவார் என்று பில்டப்பை ஏற்றிக்கொண்டே செல்கிறார்கள். அவற்றைக் குறைத்திருக்கலாம்.

இவற்றைத் தவிர்த்துப் பார்த்தால் 'கர்ணன்' தமிழ் சினிமாவில் தனித் தடம் பதித்துள்ளது. வன்முறை தெறிக்கும் காட்சிகள் அதிகம் உள்ளன. அதை நியாயப்படுத்துவது படத்தின் நோக்கமல்ல. ''என் தேவை என்ன, என் பிரச்சினை என்னன்னு புரிஞ்சுக்க முடியல. நான் எப்படி பேசுறேன், எப்படி நிக்குறேன்னு மட்டும்தான் உனக்குப் பிரச்சினையா தெரியுது'' என்ற மாரி செல்வராஜின் வசனத்தை உள்வாங்கிக் கொண்டால் 'கர்ணன்' உங்களுக்குக் காவியமாகத் தெரியும்.

https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/656862-karnan-movie-review-5.html

 

 

தனுஷ் அனுப்பிய I Love You Message! - 'கர்ணன்' ரகசியம் பகிர்ந்த மாரி செல்வராஜ் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிர்வுகளை ஏற்படுத்தி வரும் கர்ணன்!

 

spacer.png

தமிழக அரசியலில், சமூகத்தில், ஊடகங்களில், தயாரிப்பாளர்கள் மத்தியில் கர்ணன் படத்திற்கு தமிழகம் முழுவதும் கிடைத்த ஓபனிங் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது . சில இடங்களில் மாஸ்டர் படத்தின் முதல்நாள் வசூலை முறியடித்து முன்னேறியிருக்கிறது. வசூல் விபரங்களை கேட்டு தமிழ் சினிமா வட்டாரம் ஆச்சரியப்பட்டு போயிருக்கிறது.

கர்ணன் படம் திருநெல்வேலிக்கு அருகில் கோவில்பட்டியில் படமாக்கப்பட்டது நேற்றைய தினம் காலை 5 மணி காட்சிக்கு திருநெல்வேலியில் வேன், டிராக்டர்களில் தேவேந்திர குல வேலாளர்கள் அமைப்பின் கொடியுடன் திரையரங்குகளில் குவிந்து படத்தை கொண்டாடி தீர்த்தனர். மாஸ்டர் படத்தின் முதல் நாள் வசூலை காட்டிலும் இங்கு கர்ணன் அதிகம் வசூல் செய்திருக்கிறது. முதல் நாள்மொத்த வசூல் 74 லட்ச ரூபாய் ஆகியுள்ளது.

மதுரை, தேனி, விருதுநகர், திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டங்களை உள்ளடக்கிய விநியோக பகுதியில் 36 திரைகளில் திரையிடப்பட்ட கர்ணன் படத்துக்கான ஓபனிங் விஜய், அஜீத் படங்களின்.

ஒபனிங்கை முறியடித்திருக்கிறது. 36 திரைகளில் சாதாரண டிக்கெட் கட்டணத்தில் 1 கோடியே 36 லட்சம் ரூபாயை மொத்த வசூலாக குவித்திருக்கிறது கர்ணன்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு பகுதிகளில் திரையரங்குகளில் இயல்பான தனுஷ் ரசிகர்களுடன் பட்டியலின சமூக இளைஞர்கள் இது எங்கள் உரிமையை, பெருமையை பேசுகிற படம் என்கிற கர்வத்துடன் கூட்டம் கூட்டமாக திரையரங்குகளில் கூடியதை ஆச்சர்யத்துடன் திரையரங்க உரிமையாளர்களும், ஊழியர்களும் பார்த்தனர்.

கர்ணன் படம் பார்க்க வந்த கூட்டம் வழக்கமாக தியேட்டருக்கு வருகிற கூட்டமல்ல குறிப்பிட்ட சமூகம் தன் எழுச்சியாக கிளம்பி வந்த கூட்டமாகவே பார்க்க முடிகிறது.

2020 பிப்ரவரியில் வெளியாகி வெற்றிபெற்ற திரெளபதி படத்திற்கு இது போன்ற கூட்டத்தை காணமுடிந்தது என்றனர். செங்கல்பட்டு, காஞ்சிபுரம் விநியோக பகுதியில் தமிழகத்திலேயே அதிகபட்சமாக 2 கோடியே 85 லட்சம் ரூபாய் முதல்நாள் மொத்த வசூல் செய்திருக்கிறது கர்ணன்.

இதற்கு இணையாக வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கடலூர், சிதம்பரம், பாண்டிச்சேரி பகுதிகளை உள்ளடக்கிய வட ஆற்காடு, தென்னாற்காடு விநியோக பகுதியில் 1 கோடியே 24 லட்சம் ரூபாய் கர்ணன் படத்திற்கு திரையரங்குகள் மூலம் மொத்த வசூல் ஆகியுள்ளது

சென்னை நகரம் பொதுவான சினிமா ரசிகர்கள், தனுஷ் ரசிகர்கள் கர்ணன் படத்தை காலை 5 மணி சிறப்பு காட்சி முதலே திரையரங்குகளை நிரப்பி கல்லாவை நிரப்பியிருக்கின்றனர்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள உட்லாண்ட்ஸ் திரையரங்கில் சுல்தான் முதல் வாரம் செய்த மொத்த வசூலை நேற்று. ஒரே நாளில் செய்திருக்கிறது என்பதுடன் கொரோனா முடக்கத்துக்கு பின் திரையரங்குகள் இயங்க தொடங்கினாலும் உட்லாண்ட்ஸ் தியேட்டரில் அரங்கு நிறைந்த காட்சிகளாக எந்த படமும் ஓடவில்லை. அதை நேற்றைய தினம் கர்ணன் முறியடித்திருக்கிறது. இந்த திரையரங்கில் சென்னை நகரத்தின் முதல் நாள் மொத்த வசூல் 1 கோடியே 18 லட்சம் ரூபாய்

திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், நாகப்பட்டினம், திருவாரூர் பகுதிகளை உள்ளடக்கிய திருச்சி விநியோக பகுதியில் கர்ணன் 95 லட்சம் ரூபாயை மொத்த வசூல் செய்திருக்கிறது .

சேலம், தர்மபுரி, நாமக்கல், திருச்செங்கோடு மாவட்டங்களை கொண்ட சேலம் விநியோக பகுதியில் முதல் நாள் மொத்த வசூல் 77 லட்சம் ரூபாய் கர்ணன் படத்திற்கு கிடைத்திருக்கிறது

கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, பொள்ளாச்சி மாவட்டங்கள் இடம்பெறும் கோயம்புத்தூர் விநியோக பகுதியின் மொத்த வசூல் செங்கல்பட்டு ஏரியாவுக்கு இணையாக இருக்கும். ஆனால் கர்ணன் திரைப்படத்தின் முதல்நாள் மொத்த வசூல் 1 கோடியே 48 லட்ச ரூபாய் என்பது நிறைவானது என்றாலும் குறைவானது என்கின்றனர் வர்த்தக வட்டாரத்தில்.

முதல்நாள் மொத்தவசூல் அளவிற்கு இரண்டாம் நாள் வசூல் இருக்காது என்றாலும் சென்னை, செங்கல்பட்டு, மதுரை விநியோக பகுதியில் முதல்நாள் மொத்த வசூலை நெருங்கும் என்கின்றனர் தியேட்டர் வட்டாரத்தில்.

பரியேறும் பெருமாள், அசுரன், இந்த இரண்டு படமும் பாக்ஸ்ஆபீஸ் அடிப்படையில் வெற்றி படங்கள் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறது. இவை இரண்டும் பட்டியலின உரிமை பற்றி பேசிய படங்கள் அதன் வரிசையில் கர்ணன் உரிமையை பற்றி பேசுவதாக கூறப்பட்டாலும் இந்த நாட்டின் பூர்வகுடிகள், வாளேந்தி ஆண்ட பரம்பரை நாங்கள் என்பதை திரைமொழியில் நுட்பமாக கூறியிருப்பது, மற்ற முண்ணனி நாயகர்களின் படங்களுக்கு கிடைக்காத ஓபனிங் கிடைக்க அடித்தளமிட்டதை மறுக்க முடியாது என்கின்றனர்.

நேர்மையான சினிமா விமர்சகர்கள். கர்ணன் படத்தின் வெற்றி தமிழ் சினிமாவில் படத்தயாரிப்பின் திசைவழியை மாற்றுவதற்கான கூறுகளாக அமையும் என்கின்றனர் தயாரிப்பாளார்கள்.

 

 

https://minnambalam.com/entertainment/2021/04/10/50/karnan-movie-collection

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

`கர்ணன்' பேசும் கொடியன்குளம் சம்பவம்... ஜெயலலிதா ஆட்சியில் நடந்தது ஏன் கருணாநிதி ஆட்சி என மாறியது?!

கர்ணன்

கர்ணன்

ஆதிக்கச்சாதியினரின் மனநிலையையும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைப்போராட்டத்தையும் சித்திரிப்பதுதான் மாரி செல்வராஜின் நோக்கமாக இருக்கிறதே தவிர, குறிப்பிட்டு 'இந்த ஆட்சிக்காலத்தில்தான் ஒடுக்குமுறை இருந்தது' என்று சித்திரிக்கும் நோக்கம் இருப்பதாகத் தெரியவில்லை.

'கர்ணன்' திரைப்படம் வெளியாவதற்கு முன்பே அது கொடியன்குளம் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட படம் என்ற பேச்சுகள் இருந்தன. திரைப்படம் வெளியாகிவிட்டது. 'பொடியன்குளம்' என்று காட்டப்படும் கிராமம் கொடியன்குளம் சம்பவத்தைத்தான் சுட்டிக்காட்டுகிறது என்பது பார்வையாளர்கள் எல்லோருக்கும் புரியும். இந்நிலையில், "1995-ல் ஜெயலலிதா ஆட்சியின்போது நடந்த கொடியன்குளம் சம்பவத்தை 1998-ல் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் நடந்ததைப்போல் மாற்றிக்காட்டலாமா, மாரி செல்வராஜ் ஏன் வரலாற்றைத் தவறாகச் சித்திரிக்கிறார்" என 'கர்ணன்' படத்தின் மீது விமர்சனக் குரல்கள் எழுந்திருக்கின்றன.

கொடியன்குளம் சம்பவம் எந்த ஆண்டு நடந்தது?

1991-96 ஜெயலலிதா ஆட்சிக்காலத்திலும் சரி, 1996-2001 கருணாநிதி ஆட்சிக்காலத்திலும் சரி தென்மாவட்டங்களில் சாதி மோதல்கள் நடைபெற்றன. இவற்றை வழக்கமான சாதிய வன்முறையாக மட்டும் பார்த்துவிட முடியாது. 1990-91 அம்பேத்கர் நூற்றாண்டுவிழாவையொட்டி தலித் இலக்கியம், தலித் அரசியல், தலித் பண்பாடு குறித்த விவாதங்கள் நடைபெற்றன. இன்னொருபுறம் ஆதிக்கச்சாதியினரின் வன்முறைகளை எதிர்க்க ஒடுக்கப்பட்டவர்களும் அவர்களைப்போலவே வன்முறை போராட்டங்களில் இறங்கினர். குறிப்பாக கல்வி, வேலைவாய்ப்பு பெற்ற ஒடுக்கப்பட்ட இளைஞர்கள் தங்கள் தந்தையையும் குடும்பப் பெரியவர்களையும் சாதித்தொழிலில் ஈடுபடவிடாமல் தடுத்தனர்.

கர்ணன்
 
கர்ணன்

பொருளாதாரத்திலும் ஓரளவு அவர்கள் வாழ்க்கை மேம்பட்டது. இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் ஆதிக்கச்சாதியினர் வன்முறையை ஏவியபோது காலங்காலமாகப் பொறுத்துக்கொண்டதைப் போல் அல்லாமல் ஒடுக்கப்பட்ட மக்கள் திருப்பித் தாக்கினர். எனவே ''இதை வெறுமனே சாதிக்கலவரமாகப் பார்க்கக்கூடாது. ஒடுக்கப்பட்ட மக்களின் சுயமரியாதைக்கான போராட்டமாகப் பார்க்கவேண்டும்'' என்று பல்வேறு அமைப்புகள் அப்போது வலியுறுத்தின.

 

வரலாற்று நாயகர்களின் பெயர்கள்

1997-ல் முதலமைச்சராக இருந்த கருணாநிதி போக்குவரத்துக்கழகங்களுக்குத் தலைவர்கள் மற்றும் வரலாற்று நாயகர்களின் பெயர்களைச் சூட்டினார். அப்படித்தான் கட்டபொம்மனின் படைத்தளபதியான, ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த வீரன் சுந்தரலிங்கனார் பெயரையும் சூட்டினார். ''சுந்தரலிங்கனார் பெயர் சூட்டப்பட்ட பேருந்தில் ஏற மாட்டோம்'' என்று ஆதிக்கச்சாதியினர் போராட்டம் நடத்தினர். இருதரப்பிலும் கலவரம் மூண்டது. வன்முறைகளைத் தொடர்ந்து கருணாநிதி எல்லாப் போக்குவரத்துக்கழகத்தில் இருந்த பெயர்களையும் நீக்க வேண்டியதானது.

அதே 1997-ல்தான் மேலவளவு ஊராட்சி மன்றத் தலைவரான முருகேசன் மற்றும் பட்டியலினத்தைச் சேர்ந்த 6 பேர் ஆதிக்கச்சாதியினரால் படுகொலை செய்யப்பட்டார்கள். பட்டியலினத்தைச் சேர்ந்த கே.ஆர்.நாராயணன் இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்த காலகட்டத்தில் ஊராட்சித் தலைவராக ஒரு பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் இருந்ததை ஆதிக்கச்சாதியினரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ''சுந்தரலிங்கனார் பெயர் சூட்டப்பட்ட பேருந்தில் ஏற மாட்டோம்'' என்பதும் ''ஒரு தலித்தை ஊராட்சித் தலைவராக ஏற்றுக்கொள்ள மாட்டோம்'' என்பதும் அப்பட்டமான சாதிய மனநிலை. தீண்டாமை சட்டப்படி குற்றம் என்றாலும் அதை வெளிப்படையாக ஆதிக்கச்சாதிகள் கடைப்பிடிக்கும் சூழல் நிலவியது. சாதியும் தீண்டாமையும் பல நூற்றாண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டாலும் அதைப் பொதுவெளிக்குக் கொண்டுவந்து அம்பலமாக்கியதும் அதற்கு எதிரான போரில் ஒடுக்கப்பட்ட மக்கள் இறங்கியதும் 90-களில் நிகழ்ந்தன.

கர்ணன்
 
கர்ணன்

இந்த வரலாற்றைத்தான் 'கர்ணன்' படத்தில் மாரி செல்வராஜ் காட்டியிருக்கிறார். பேருந்து என்பது நவீனத்துக்கான குறியீடு. ''ரயிலும் தொழிற்சாலைகளும் இந்தியாவில் சாதியத்தின் இறுக்கத்தைக் குறைக்கும்'' என்றார் கார்ல் மார்க்ஸ். ரயிலும் தொழிற்சாலைகளும் வந்தபிறகும் இந்தியாவில் சாதி ஒழிந்துவிடவில்லை. தொழிலாளர்களே சாதிரீதியாகத் திரண்டு சங்கங்களை நிறுவும் அவலம் நடக்கிறது. பேருந்து என்னும் நவீன வாகனமும் சாதியத்தின் கறைபடிந்துதான் இருக்கிறது. யார் பேருந்தில் அமர வேண்டும், யாருடைய பெயர் சூட்டப்பட வேண்டும் என்பது தொடங்கி சாதியத்தின் விதிகள் பேருந்துகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டன. இதற்கு எதிரான போராட்டங்களும் பேருந்துகளில் இருந்து தொடங்கின.

 

ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டம்

ஆதிக்கச்சாதியினரின் மனநிலையையும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைப்போராட்டத்தையும் சித்திரிப்பதும்தான் மாரி செல்வராஜின் நோக்கமாக இருக்கிறதே தவிர, குறிப்பிட்டு 'இந்த ஆட்சிக்காலத்தில்தான் ஒடுக்குமுறை இருந்தது' என்று சித்திரிக்கும் நோக்கம் இருப்பதாகத் தெரியவில்லை. ஏனெனில் சாதி என்பது அரசையும் மீறியது, ஆட்சியாளர்களையும் பணியவைப்பது.

1989-ம் ஆண்டில் டாக்டர் அம்பேத்கர் பிறந்த மராட்டிய மாநிலத்திலுள்ள மரத்வாடா பல்கலைக் கழகத்திற்கு அம்பேத்கர் பெயர் சூட்டக்கூடாது என்று சாதியவாதிகளும் மதவாதிகளும் போராடினார்கள். ஆனால், 1972-லேயே சென்னையில் அம்பேத்கர் பெயரில் கலைக்கல்லூரியை உருவாக்கியவர் கருணாநிதி. அம்பேத்கர் நூற்றாண்டுவிழாவையொட்டி 1990-ல் சென்னை சட்டக்கல்லூரிக்கு டாக்டர் அம்பேத்கர் பெயரைச் சூட்டினார் கருணாநிதி. 1997-ல் இந்தியாவிலேயே முதல் சட்டப்பல்கலைக்கழகத்தையும் அம்பேத்கர் பெயரில் உருவாக்கியதும் அதே கருணாநிதி. ஆனால் அந்தக் கருணாநிதி ஆட்சியில் சுந்தரலிங்கனார் பெயரிலான போக்குவரத்துக்கழகத்தை ஆதிக்கச்சாதியினரால் ஏற்றுக்கொள்ளவைக்க முடியவில்லை என்பதும் வரலாறு.

கலைஞர் கருணாநிதி
 
கலைஞர் கருணாநிதி

அரசு என்பது முதல்வருடன் முடிந்துவிடுவதில்லை. போலீஸ் கான்ஸ்டபிள், கிராம நிர்வாக அலுவலர், பேருந்து நடத்துனர் வரை அது விரிந்துபரவியிருக்கிறது. இங்கெல்லாம் நிலவும் சாதியமனநிலை அரசின் முடிவுகளின்மீது தாக்கத்தை ஏற்படுத்தும். தமிழக வரலாற்றில் கொடியன்குளம், வாச்சாத்தி, குண்டுபட்டி, மாஞ்சோலை என்று போலீஸ் வன்முறை எதை எடுத்துக்கொண்டாலும் அங்கெல்லாம் காவல்துறை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக இருந்ததுதான் வரலாறு. ஆதிக்கச்சாதியினரின் மனநிலையைத்தான் காவல்துறையும் பிரதிபலித்துள்ளது. இதைத்தான் 'கர்ணன்' படத்தில் வரும் கண்ணபிரான் என்னும் காவல்துறை அதிகாரியும் நிரூபிக்கிறார்.

ஆதிக்கச்சாதியினருக்கு ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வியிலும் பொருளாதாரத்திலும் உயர்நிலை அடைவதைப் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை. அதனாலேயே சாதிய மோதல்களின்போது அவர்களின் கல்விச்சான்றிதழ்களைக் கிழித்துப்போடுவது, குடிசை வீடுகளில் இருந்து ஓட்டு வீட்டுக்கு நகர்ந்தவர்களின் ஓடுகளை அடித்து நொறுக்குவது, டி,வி, ஃபிரிட்ஜ் போன்ற பொருட்களை நொறுக்குவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். காவல்துறையும் இதே ஆதிக்க மனநிலையில்தான் அதேமாதிரியான வன்முறையை ஒடுக்கப்பட்ட மக்கள்மீது செலுத்துகிறது என்பதையும் காட்சிப்படுத்தியிருக்கிறார் மாரி செல்வராஜ்.

 

தென்மாவட்ட சாதி மோதல்கள்

தென்மாவட்டங்களில் நிகழ்ந்த சாதிமோதல்களைத் தொடர்ந்துதான் அனைத்துச்சாதியினரையும் ஒரே இடத்தில் குடியேற்றும் 'பெரியார் நினைவு சமத்துவபுரங்களை' கருணாநிதி உருவாக்கினார். தி.மு.க.வில் பட்டியலின மக்களின் பிரதிநிதித்துவம் குறித்த விமர்சனங்கள் எழுந்தபோது தலைமைக்குழு தொடங்கி ஒவ்வொரு மாவட்டத்திலும் துணைப்பொதுச்செயலாளர்களில் ஒருவர் ஆதிதிராவிடராகவும் ஒருவர் பெண்ணாகவும் இருக்கவேண்டும் என்று கட்சிவிதிகளில் திருத்தம் கொண்டுவந்தார். அதுமட்டுமல்ல, யாரைக் கோயில்களுக்குள் நுழையவிடக்கூடாது என்ற நிலை நிலவியதோ அந்த ஆதிதிராவிடரையும் பெண்களையும் அறங்காவலர்குழுவில் கட்டாயம் நியமிக்கவேண்டும் என்ற புரட்சிகர சட்டத்தையும் கொண்டுவந்தவர் கருணாநிதியே. ஆனால் சட்டங்களும் திட்டங்களும் ஓரளவு சாதியத்தின் இறுக்கத்தைக் குறைக்க உதவுமே தவிர ஒட்டுமொத்த சமூக மாற்றமே சாதி ஒழிப்பைச் சாதிக்கும். அதற்கு ஆதிக்கச்சாதியினரின் மனநிலை மாற்றியமைக்கப்பட வேண்டும்.

கர்ணன்
 
கர்ணன்

மேலும் வெவ்வேறு காலகட்டங்களில் நடந்ததை கதையின் மையநோக்கத்துக்காக அருகருகே நிறுத்துவதும் புதிது அல்ல. 'விசாரணை' திரைப்படத்தில் 'லாக்கப்' நாவல் கதையையும் வேளச்சேரி என்கவுன்ட்டர் சம்பவத்தையும் வெற்றிமாறன் இணைத்திருப்பார். இரண்டுமே வெவ்வேறுகாலத்தில் நிகழ்ந்தவை. அதே வெற்றிமாறனின் 'அசுரன்' திரைப்படத்திலும் வரலாற்றுப்பிழைகள் உள்ளன. அசுரனின் கதை நிகழும் திருநெல்வேலியில் பஞ்சமி நிலம் இல்லை. படத்தில் சித்திரிக்கப்பட்டிருப்பதுபோல் கம்யூனிஸ்ட் இயக்கங்கள் பஞ்சமிநில மீட்புப்போராட்டத்தில் ஈடுபடவுமில்லை. கீழ்வெண்மணிச் சம்பவம் போன்ற சம்பவத்தையும் அசுரனில் கொண்டுவந்திருப்பார் வெற்றிமாறன். 'விசாரணை'யின் நோக்கம் மனித உரிமைமீறலைச் சித்திரிப்பது, 'அசுரன்' நோக்கம் சாதிய ஒடுக்குமுறையையும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைப்போராட்டத்தையும் சித்திரிப்பது. அதற்கேற்றபடி வெவ்வேறுகாலகட்டத்து சம்பவங்களை இணைத்து கதையாக்கியிருப்பார். இதையேதான் மாரிசெல்வராஜும் 'கர்ணன்' படத்தில் செய்திருக்கிறார்.

 

 

https://cinema.vikatan.com/tamil-cinema/mari-selvaraj-directorial-karnan-movie-controversy-and-the-real-history

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ  கர்ணன் படத்தின் வசூல்  ,

சாதியை வைச்சு கலவரத்தையும் பாக்கலாம்

காசையும் பார்க்கலாம்,என்று சொல்கிறதா?

எது எப்படியோ பரியேறும் பெருமாள், கர்ணன் படத்தின் மூலம் மாரி செல்வராஜ் என்ற அற்புதமான ஒரு படைப்பாளியை தமிழ் திரையுலகம் நீண்ட காலத்தின் பின்னர் சந்திதிருக்கிறது.

தனுஷுக்கு இந்த படத்துக்கும் தேசியவிருது கிடைக்கலாம் என்று சொல்கிறார்கள், நடிப்பு தயாரிப்பாளர் என்று ஏற்கனவே 4 முறை தேசியவிருது பெற்றிருக்கிறார்.

போற போக்கில கமலைவிட அதிகம் தேசியவிருது வாங்கியவர்கள் பட்டியலில் தனுஷ் இணையலாம்.

கர்ணன் படத்தின் மீதான தாக்கத்தின் தனது பாடல்கள்மூலம் பெரிய எதிர்பார்ப்பையே உருவாக்கிவிட்ட சந்தோஷ் நாராயணனுக்கும் பெரும் பங்குண்டு.

மாரி படத்தின் ஒலிப்பதிவின்போது வரும் இந்த பாட்டியை பார்த்தால் சொந்த பாட்டிபோல ஒரு உணர்வு, அதுவும் மாரி தடுக்கி விழப்பார்த்தபோது மனசு பதறினதை பார்த்தால் பாசக்கார அம்மம்மா ஜாபகம்தான் வருது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கர்ணன் ஒரு பார்வை- ராஜசங்கீதன்

வாக்கு கேட்டதற்காக பட்டியல்சாதி இளைஞன் கொல்லப்படும் சூழலில்தான் வெளிவருகிறான் கர்ணன். கதைக்களமாக இருக்கும் 96-97 காலகட்டத்திலிருந்து இன்று வரை எதுவும் மாறிவிடவில்லை. பேருந்து செல்லாத ஊரும் அதிகாரம் பெற வாக்கு கேட்கமுடியாத ஊரும்தான் தமிழகத்தின் யதார்த்தமாக இருக்கிறது.கொடியங்குளத்தில் நடந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படத்தில் பேசப்பட வேண்டிய விஷயங்கள் அதிகமாக இருக்கின்றன. குறிப்பாக, வெளிப்படையாக பேசாமல் தொட்டுச் சென்ற பல முக்கியமான விஷயங்களும் பேசப்பட வேண்டியவையாக இருக்கின்றன.நான் விரும்பும் ஓர் அரசியலை மாரி செல்வராஜ் படத்தில் முன் வைக்கிறார். 

சாதியம் என்பது சமூகப் பிரச்சினையாக இருக்கும் போதிலும் அதற்கான உயிர் வாயுவை கொடுத்துக் கொண்டிருப்பது அரசுதான். ஆதிக்க சாதியை முதல் படத்தில் உரையாட அழைத்த மாரி செல்வராஜ் இரண்டாம் படத்தில் சாதியை ஆதிக்கம் செலுத்த அனுமதித்திருக்கும் அரசு மீது பாய்ந்திருக்கிறார்.பேருந்து நிற்காத ஊரின் சிறுவன் கல்லெறியத் தொடங்கி, ஊரை சேர்ந்த கர்ணன் உள்ளிட்ட சிலரும் சேர்ந்து அடித்து நொறுக்கும் அந்த பேருந்து, பேருந்து மட்டுமே அல்ல. அரசு இயந்திரம்!இன்னொரு விஷயமாக நான் ரசித்தது, இதே அரசுக்குள் கிடைக்கும் வேலையை கர்ணன் தூக்கி எறிவதுதான். ஊருக்குள்ளிருந்து ஒருவனாவது அரசு வேலை பெற்று முன்னேறி விட வேண்டும் என்கிற பார்வையை உடைக்கப்படுகிறது. 

சமூகத்திலிருந்து அரசை கேள்வி கேட்டு உலுக்கும் உரிமையும் அரசு வேலைக்குள் சென்ற பிறகு பறிபோகும். அங்கிருந்து நியாயமான உரிமைகளை நாம் வென்றெடுப்பதற்கான கொஞ்ச நஞ்ச வாய்ப்புகள் இருப்பினும் அமைப்பு அதை செய்ய விடாது. கர்ணன் சரியாக அதை புரிந்து கொள்கிறான்.பேருந்தை நிறுத்த கேட்கிறான். நிறுத்த மறுக்கப்படுகையில் உயிரை பொருட்படுத்தாமல் வெளியே பாயும் கர்ணன், பிறகு அதே பேருந்தை கல்லெறிந்து உடைத்து எதிர்க்கத் துவங்கி பிறகு அது மீசை முறுக்கி அதிகாரமாக வருகையில் அதன் கழுத்தை அறுத்து எறிவதாக முடிகிறது படம். அற்புதம்!வெளிப்படையாக இக்கதையை பேசும் கர்ணன் உள்ளீடாக சில குறியீடுகளை வைக்கிறான். யானை, குதிரை முதலிய குறியீடுகளை களத்தில் இறக்கி விட்டு விளையாடி பார்க்கிறான். தளபதி பட விளம்பரம் பொறித்த டி ஷர்ட் அணிந்து தான் பேசவிருக்கும் கதை ட்ரீட்மெண்ட்டை அறிவிக்கிறான். ‘தளபதி’ நாம் அனைவரும் அறிந்தபடி துரியோதன – கர்ணன் நட்பின் மீட்டுருவாக்கம்தான். மணிரத்னம் அதை பல இடங்களில் சிலாகித்திருக்கிறார். மகாபாரதத்தை புனை கதையாக்கும் மகத்துவத்தை நிகழ்த்தி விட்டதற்கான கொண்டாட்ட கேவல் அது. மணிரத்னத்திடம் அதைதான் நாம் எதிர்பார்க்க முடியும். ராமாயண மகாபாரத கதையாடலை தன் வளர்ச்சிக்காக விரித்து நீட்டி போதித்து வந்த கூட்டத்தை சேர்ந்தவர் அவர். அதனால்தான் அங்கு தொடங்கி அவர் சரியாக பொன்னியின் செல்வனில் வந்து நிற்கிறார்.மணிரத்னம் முன் வைக்கும், பார்ப்பனியத்துக்குள்ளான அடையாளத் தேடலை புரிந்து கொள்ள முடிகிறது. நாமும் அதே வேலையை செய்வதைத்தான் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஆதிக்க சாதி காவலனாக வருபவனின் பெயர் கண்ணபிரான். அவன் பொடியன்குள குடும்பனின் பெயரை கேட்கிறான். அவர் துரியோதனன் என்கிறார். அவனால் தாங்க முடியவில்லை. ‘நீயெல்லாம் துரியோதனனா ?’ என கேட்கிறான். படத்தின் இறுதியில் கர்ணன் கேட்கும் political statement-ம் அதுவாகவே இருக்கிறது.’கந்தையன் மகன் நீ கண்ணபிரானா இருக்கும்போது மாடசாமி மகன் நான் கர்ணனா இருக்கக் கூடாதா, துரியோதனனா இருக்கக் கூடாதா’ என நாயகன் காவலனிடம் கேட்கிறார்.அதிகாரத்தை துவம்சம் செய்வதற்கான தயாரிப்புகளோடு திருவிழா போல் இரவெல்லாம் சமைத்து உண்டு விழித்து காத்திருக்கும் மொத்த ஊரை, கர்ணன் அழைத்துச் செல்வது பார்ப்பனியம் வழங்கிய சட்டகத்துக்குள்ளான அடையாளத்தை தேடித்தானா என்பதே கேள்வி.காலாவில் ராமன் – ராவணன் கதையாடலின் பின்னணியில் உள்ள ராம எதிர்ப்பும் ராவண ஆதரவும் பார்ப்பன எதிர்ப்பு கொண்ட பூர்வகுடி அடையாள மீட்பே என்பதற்கான வரலாற்று போக்குகள் இந்தியாவில் பல இடங்களில் காண முடியும். மேலும் ராமனை அடையாளமாக கொண்டு நிகழ்த்தப்பட்ட நில அபகரிப்பே காலாவிலும் களமாக இருந்தது. போலவேதான் வெற்றிமாறனின் அசுரனும். அசுரன் என்கிற வார்த்தை பார்ப்பனன் நமக்கு சூட்டிய பெயர் என்ற போதும் கூட அப்பெயர் சூட்டப்பட்டவன் பார்ப்பனன் கட்டிய வருணாசிரமத்தை எதிர்த்து எப்படி களம் கண்டு அழிக்கிறான் என்பதே கதையானது.கர்ணன் படமோ, அதிகாரியாக முயன்ற ஒருவன் பார்ப்பனியத்தை அடிவருடி கண்ணபிரானாக மாறிய வழியை தனக்கான வழியாகவும் வரித்துக் கொள்ள முயன்றுவிட்டதோ என்பதே நம் கவலையாக இருக்கிறது. இந்தியாவின் பார்ப்பனியம் பல விதங்களில் தன்னை ஊடாட வைக்கிறது. இந்தியாவில் நிலப்பிரபுத்துவமும் முதலாளித்துவம் கைகோர்த்து கொண்டதாக சொல்கிறோம். இரண்டின் கைகளையும் பிடித்து சேர்த்து வைத்தவனே பார்ப்பனன்தான். அப்போதுதான் வருணாசிரமத்தை காக்க முடியும்; காக்கவும் படுகிறது.வருணாசிரமத்தின் வருண நிலைகளில் ஏறுவது ஏற்றத்தை கொடுக்கலாம். தேவைக்குரிய சாத்தியமாக பார்க்கப்பட்டாலும் கூட அது முழு சாதி ஒழிப்பை எப்போதுமே நிபந்தனையாக வைக்க முடியாது. ஏனெனில் வருணத்தின் இருப்பே சாதிகளின் தழைவில்தான் இருக்கிறது. மநுவின் உயிர்ப்பில்தான் இருக்கிறது. 

பார்ப்பனியத்தின் நீட்சியில்தான் இருக்கிறது.எனவேதான் தோழர் திருமாவளவன் விசிகவின் அடிப்படை நிபந்தனையாக பார்ப்பனிய எதிர்ப்பை கட்டமைத்தார். அதனால்தான் விசிக உருவாக்கப்பட்ட இத்தனை காலத்துக்கு பிறகும் அவரால் மநுவை விட்டு விளாச முடிகிறது. அதே நேரத்தில் அவருக்கான அங்கீகாரம் வழங்கப்பட்டு விட்டதா என கேட்டால் நிச்சயமாக அளிக்கப்படவில்லை என்பதே பதில். ஆனால் சாதி ஒழிப்பு என்பதற்கான நோக்கத்தில் இன்றைய பெருமளவு இளைஞர்களை அவரால் ஈர்க்க முடிந்திருக்கிறது. ஈர்த்து மாற்றவும் முடிந்திருக்கிறது.சனாதனத்தை எதிர்த்து சண்டை கட்டும் தோழர் திருமா அதிகாரம் பற்ற நாமும் அவருடன் கை கோர்க்க வேண்டுமே தவிர, விலகிச் சென்று அவருக்கு நேரெதிர் அரசியலில் தஞ்சமடைந்துவிடக் கூடாது. தஞ்சமடைதல் திருமாவுக்கு மட்டுமல்ல, சாதியொழிப்பை நிலைப்பாடாக கொண்டு இயங்கும் ஒரு பெரும் கூட்டத்துக்கு இழைக்கும் துரோகமும் கூட.கர்ணன் படம் அதிகாரத்தை எதிர்க்கையில் புல்லரிக்கிறது. பார்ப்பனியத்தை அமைதியாக ஏற்கையில் அதிர்ச்சி ஏற்படுகிறது. என்னுடைய கர்ணன், ஐராவதம் என்கிற பார்ப்பனிய யானையிலேறி வலம் வர விரும்புபவன் அல்ல. அந்த ஐராவதத்தை கொன்று வீழ்த்தி இந்திரனை தரையிறக்கி தனக்கு சமமாக நிற்க வைத்து சண்டை கட்டுபவன்!
 

https://inioru.com/கர்ணன்-ஒரு-பார்வை-ராஜசங்/

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சக்திவாய்ந்த படம் - தனுஷின் கர்ணன் படத்தை பாராட்டிய ஐபிஎஸ் அதிகாரி

சக்திவாய்ந்த படம் - தனுஷின் கர்ணன் படத்தை பாராட்டிய ஐபிஎஸ் அதிகாரி

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். இதில் ஹீரோயினாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். மேலும் லட்சுமி பிரியா, நட்டி நட்ராஜ், யோகிபாபு, லால், கவுரி கிஷான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். தாணு தயாரித்துள்ளார்.

பெரும் எதிர்பார்ப்புக்கிடையே, கடந்த 9-ந் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தைப் பார்த்த பலரும் தனுஷ் மற்றும் மாரி செல்வராஜ் உட்பட படக்குழுவினரை பாராட்டி வருகின்றனர். 

 

அந்தவகையில், கர்ணன் படத்தை பார்த்து ரசித்த திருப்பத்தூர் எஸ்.பி. விஜயகுமார் ஐபிஎஸ், படம் குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “கர்ணன்... நியாயமற்ற அநீதிக்கு எதிராக கிளர்ந்தெழுகிறான். பார்வையாளர்களை சிந்திக்க வைக்கும் சக்திவாய்ந்த படம். கர்ணன் நேர்த்தியாக எடுக்கப்பட்டுள்ள சிறந்த திரைப்படம்” என குறிப்பிட்டுள்ளார்.

 

https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2021/04/12145344/2525835/Tamil-cinema-IPS-officer-says-about-karnan-movie.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

''எளிய மக்களின் யுத்தம் எப்படி வன்முறையாகும்?!'' - 'கர்ணன்' குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ்!

மாரி செல்வராஜ்

மாரி செல்வராஜ்

''அப்போது யாருடைய ஆட்சி நடந்துகொண்டிருந்தது என்று சொல்லவேண்டும் என்றால் நான் போலீஸ் ஸ்டேஷனிலோ, கலெக்டர் அலுவலகத்திலோ ஆட்சியாளர்களின் படங்களைவைத்து காட்டியிருக்கலாம். என்னுடைய நோக்கம் அதுவல்ல.

தனுஷ் நடிப்பில், மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் 'கர்ணன்' திரைப்படம் வசூல்ரீதியாகவும், விமர்சனரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. எளிய மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை, அவர்களின் வாழ்வியல் பிரச்னைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் 1990-களில் பேருந்துகள் தொடர்பாக நடைபெற்ற போராட்டங்கள் மற்றும் கொடியன்குளம் கலவரம் ஆகியவை படத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. ''கொடியன்குளம் கலவரம் நடந்த ஆண்டு 1995 எனும்போது, மாரி செல்வராஜ் ஏன் '1997-ன் முற்பகுதியில்' இருந்து எனக் படத்தை தொடங்குகிறார்'' என்கிற விமர்சனங்கள் எழுந்தன. இதுகுறித்தும், 'கர்ணன்' படத்தின் குறியீடுகள் குறித்தும் இயக்குநர் மாரி செல்வராஜிடம் பேசினேன்.

 

''படத்தில் ஏராளமான விலங்குகள், உயிரினங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருகின்றன. இதற்கு ஏதும் குறிப்பிட்ட காரணங்கள் இருக்கிறதா?''

''நான் பத்தாண்டுகள் கிராமத்தில் ஆடு, மாடுகள் மேய்த்திருக்கிறேன். பனிரெண்டாவது படிக்கும்வரை ஆடு, மாடுகளோடுதான் அதிகம் பழகியிருக்கிறேன், பேசியிருக்கிறேன். என்னுடைய உணர்வுகள், பிரச்னைகள், காதல் என எல்லாவற்றையும் முதலில் பகிர்ந்துகொள்வது விலங்குகளிடம்தான். விலங்குகளிடம் என்னுடைய குரல், என்னுடைய எண்ணங்களுக்கான ஒப்புதல் கிடைப்பதாக உணர்ந்திருக்கிறேன். அதில் ஒரு ஆறுதல் கிடைக்கும். என்னுடைய சிறுகதைகள், கவிதைகள் என எல்லாவற்றிலும் விலங்குகள் அதிகம் இருக்கும். ஒரு தெரு என யோசித்தால் அதில் விலங்குகள் இல்லாமல் எப்படியிருக்க முடியும்?! மிக முக்கியமாக மனிதர்களின் ஆன்மாவை படம்பிடித்துக்காட்டுவதற்கு விலங்குகள் ஒரு கருவியாக இருப்பதாக நான் நம்புகிறேன். சக மனிதர்களோடு உறவாடுவதைவிட, அவர்களை பார்ப்பதைவிட, விலங்குகளோடு மனிதர்களுக்கு வெளியே யாருக்கும் தெரியாத ரகசியப்பிணைப்பு ஒன்று உண்டு. அதனால் உயிரினங்களைவைத்து கதை சொல்லும்போது அதன்வழியாக மனிதர்களின் ஆன்மாவைக் கண்டுபிடித்துவிடலாம். அதன்மூலம் உணர்வுகளை அவர்களுக்குள் கடத்திவிடலாம். அதனால், மனிதர்களின் உணர்வுகளோடு பேசுவதற்கு விலங்குகளைவிட்டால் மிகச்சரியான உருவகம் (Metaphor) இல்லை என்றுதான் நினைக்கிறேன். ''

 

'' 'கர்ணன்' படத்தில் குறிப்பிடப்பட்ட 1997-ம் ஆண்டு என்பது சர்ச்சையாக மாறியிருக்கிறது. இதுகுறித்து உங்கள் பதில் என்ன?''

கர்ணன் படப்பிடிப்பில் மாரி செல்வராஜ், தனுஷ், லால்
 
கர்ணன் படப்பிடிப்பில் மாரி செல்வராஜ், தனுஷ், லால்

''நான் படத்தில் ஆண்டை குறிப்பிட்டதே ஆட்சியாளர்களை காட்டுவதற்காக அல்ல. ஆட்சியாளர்களைக் காட்டவேண்டும் அல்லது அப்போது யாருடைய ஆட்சி நடந்துகொண்டிருந்தது என்று சொல்லவேண்டும் என்றால் நான் போலீஸ் ஸ்டேஷனிலோ, கலெக்டர் அலுவலகத்திலோ ஆட்சியாளர்களின் படங்களைவைத்து காட்டியிருக்கலாம். என்னுடைய நோக்கம் அதுவல்ல. இந்த கதை நடக்கும் நேரத்தில் மக்களிடத்தில் என்னவெல்லாம் இருந்தது, என்னவெல்லாம் இல்லை என்பதற்காக அப்போது பேருந்து வசதியில்லை, மொபைல் இல்லை எனப் புரிந்துகொள்வதற்காக ஆண்டை குறிப்பிட்டேன். மேலும் படம் சென்சாருக்குப் போய்விட்டுத்தான் வெளியே வந்திருக்கிறது. அங்கே அவர்கள் சிலவற்றை சாப்பிட எடுத்துக்கொண்டார்கள்.

நான் ஒரு புனைவை உருவாக்கியிருக்கிறேன். அதில் ஒட்டுமொத்த மனித சமூகத்தில் எளிய மக்கள் என்னவெல்லாம் யுத்தம் நடத்தினார்களோ, என்னென்ன பிரச்னைகளுக்காக எல்லாம் போர் புரிந்தார்களோ, சமர் புரிந்தார்களோ அதையெல்லாம் காட்சிப்படுத்துவதுதான் என்னுடைய நோக்கம். ஆனால், புனைவில் ஒரு ஒரிஜினல் எமோஷன் சேரும்போது அதில் பிரச்னைகள் வரும் என்பது இப்போது புரிகிறது. அது பிழையா என்று கேட்டால் பிழைதான். அதை நான் மறுக்கவில்லை. அந்தப் பிழையை சரிசெய்துகொள்வதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. அதனால் அதை இப்போது மாற்றிவிட்டோம். நாளை முதல் படத்தில் ஆண்டே குறிப்பிடப்படாது.''

''படத்தில் மிக முக்கியமான குறியீடாக இருப்பது தலை இல்லாத ஓவியம்... அந்த ஓவியம் யாரைக் குறிப்பிடுகிறது?!''

கர்ணன்
 
கர்ணன்

''எதற்கும் ஒற்றை பதில் கிடையாது. ஒரு படைப்பாளியிடம் இது யார், இதற்கு என்ன அர்த்தம் எனக் கேட்பதே ஒரு மோசமான வன்முறை. ஏனென்றால் படம் பார்க்கும் ஒவ்வொருவருக்குள்ளும் அது பலவிதமான அர்தத்தை, புரிதலைக் கொடுக்கும். ஒரு படைப்பாளனாக நான் நினைப்பது ஒவ்வொருமுறை படத்தைப் பார்க்கும்போதும் வெவ்வேறு அர்த்தங்கள் கிடைக்க வேண்டும். நேரடியாக இப்படித்தான் படத்தைப் பார்க்க வேண்டும், இப்படித்தான் புரிந்துகொள்ளவேண்டும் என்றால் இவ்வளவு மெனக்கெட வேண்டும் என்கிற அவசியம் இல்லை. இவ்வளவு உழைப்பு அவசியம் இல்லை. நான் உருவாக்க வேண்டும் என ஆசைப்படுவது பத்து நாள் கழித்து படம் பார்க்கும்போது அது வேறு ஒன்றாகத் தெரியவேண்டும். 40 வருடம் கழித்துப் பார்க்கும்போது வேறு ஒரு உருவமாகத் தெரியவேண்டும். அன்றைக்கு நடந்த விஷயத்தைவைத்து அதில் வேறு அர்த்தம் கிடைக்க வேண்டும். காலம் கடந்து நிற்கவேண்டும் என்பதற்காகத்தான் Metaphor-களை நிறைய பயன்படுத்துகிறோம். இந்த விஷுவல் காலம் கடந்து நிற்கவேண்டும். இது பல அர்த்தங்களை உருவாக்கவேண்டும். பல வழித்தடங்களை உருவாக்கவேண்டும். ஒரே அர்த்தத்தை, ஒரு பதிலை சொல்வதற்கு உருவகம் தேவையில்லை. அதற்கு ஒரு வசனத்தை சொல்லிவிட்டுப் போகலாம். படம் பார்க்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையோடு, வெவ்வேறு புரிதல்களோடு பார்க்கிறார்கள். படம் பார்க்கும் ஒவ்வொருவரோடும் பயணிக்கக்கூடிய தகுதி ஒரு படைப்பாளனாக எனக்கு இருக்க வேண்டும். படம் பார்க்கும் அத்தனை மனிதர்களின் மூலைக்குள்ளும் சென்றுவந்தால்தான் நான் முழுமையான கலைஞன்.''

 

''படத்தில் நாயக பிம்பம் அதிகமாக இருப்பது குறித்த விமர்சனங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

'' எப்போதுமே ஒரு பிரச்னையை தொடங்குவதற்கு, அதைப்பற்றி பேசுவதற்கு ஒருவர் தேவைப்படுகிறார். புளியங்குளம் எனும் ஊரில் எவ்வளவோ பேர் இருந்தும் அந்த ஊரின் கதையை நான் வந்துதான் சொல்லியிருக்கிறேன். ஒரு மனிதனிடம் இருந்துதான் எல்லாமே தொடங்கும். மக்கள் பிரச்னைகளைப்பார்த்து அதை நெறிப்படுத்துவதற்கு, அதை சரிப்படுத்துவதற்கு, அதை தொடங்கிவைப்பதற்கு ஒரு கல், ஒரு கை தேவைப்படுகிறது. அப்படிப்பட்ட கையாகத்தான் நான் கர்ணணைப் பார்க்கிறேன்.''

''படத்தில் போலீஸுக்கு எதிராக வன்முறையை கையில் எடுப்பது சரியா... வன்முறைக்கு வன்முறைதான் தீர்வா?''

''எளிய மக்களின் யுத்தம் எப்படி வன்முறையாகும்?!'' - 'கர்ணன்' குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ்!
 

'' இந்தப் படம் வன்முறைப் படமாகப் புரிந்துகொள்ளப்படக்கூடாது, இதன் நோக்கம், இதன் ஆன்மா, திசை திருப்பப்பட்டுவிடக்கூடாது என நிறையவே மெனக்கெட்டிருக்கிறேன். எளிய மக்களின் போராட்டத்தை, அவர்களின் வாழ்வியலைத்தான் படமாக எடுத்திருக்கிறேன். இந்தப்பக்கம் ஆயிரம் குதிரைகள், அந்தப்பக்கம் ஆயிரம் குதிரைகள், காலாப்படை, யானைப்படை எனப் போர்புரிந்த ராஜாக்களின் யுத்தங்கள் யுத்தமாகவே இருக்கும்போது, எளிய மக்களின் யுத்தம் மட்டும் எப்படி வன்முறையாகப் பார்க்கப்படுகிறது என்பது புரியவில்லை. நான் எடுக்க நினைத்தது யுத்தப் படம்தான். யுத்தங்கள் இன்றும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. எளிய மக்கள், வறண்ட பூமிக்களில் யுத்தத்தை நடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள். கண்ணபிரானை, கர்ணன் கொலைசெய்யும்போதுகூட, எப்படி அதைக் காட்சிப்படுத்துவது எனத் தெரியாமல் கஷ்டப்பட்டேன். படத்தில் நேரடியாகக் கர்ணன் ஒரு கொலைதான் செய்வான். அதற்கும் கதறிஅழுவான். ஒட்டுமொத்த வாழ்க்கையையும் நினைத்து, வாழ்வு நிர்கதியானதை நினைத்து, அனைத்து உயிரினங்களையும் நினைத்து கதறித் துடிப்பான். அந்தக் கொலையை வீரமாக மிகைப்படுத்தி படத்தில் ஒரு காட்சிகூட இருக்காது. என் பயத்தை தன்னுடைய அசாத்திய நடிப்பால் தனுஷ் சார் போக்கிவிட்டார். எனக்கு பெரிய பதற்றம் இருந்தது. இப்படி ஆகிவிடுமோ, இப்படி மாறிவிடுமோ, வேறு மாதிரி புரிந்துகொள்ளப்படுமோ என்கிற என் நிம்மதியின்மையை தன்னுடைய பர்ஃபாமென்ஸால் ஆற்றுப்படுத்தினார் தனுஷ் சார். அப்படியிருந்தும் இன்னும் பயந்து அந்த ஷாட் முடிந்ததும் குழந்தை இன்சர்ட் வைப்பது, கழுதைக்குட்டி இன்சர்ட் வைப்பது என எல்லாமுமே செய்தேன். இவ்வளவு இருந்தும் எளிய மக்களின் போராட்டம் வன்முறையாகத் தெரிகிறது என்றால் நான் இன்னும் நிறைய சினிமா கற்றுக்கொள்ளவேண்டும் என்றுதான் நினைக்கிறேன்.''

 

 

https://cinema.vikatan.com/tamil-cinema/director-mari-selvaraj-explains-about-karnan-controversies

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய வாகனம் தொடர்பில் விசாரணை! 19 MAR, 2024 | 11:08 AM   விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நீதிமன்றில் ஆஜராகும் போது பயன்படுத்தியதாக கூறப்படும் வாகனம் கைதிகளின் குழந்தைகளை ஏற்றிச் செல்வதற்காக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தினால் வழங்கப்பட்டது என முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தினால் வழங்கப்பட்ட இந்த வாகனம் கைதிகளின் குழந்தைகளை ஏற்றிச் செல்வதற்காக மாத்திரமே என்பதுடன் இதில் கைதிகளை ஏற்றிச்செல்ல முடியாது எனும் நிபந்தனையை மீறி கெஹலிய ரம்புக்வெல்ல இந்த வாகனத்தை பயன்படுத்தியுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பில் இரகசிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/179097
    • 19 MAR, 2024 | 11:21 AM   வெடுக்குநாறிமலை வழக்கில் கைது செய்யப்பட்ட எட்டுப்பேரும் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று  கைதுசெய்யப்பட்ட ஆலயபூசகர் உள்ளிட்ட 8 பேரையும் இன்று செவ்வாய்க்கிழமை  (19) வரை விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிமன்று  உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து அவர்கள் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் அது தொடர்பான வழக்கு இன்றையதினம் நீதிமன்றில் மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த 8 பேரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்த நீதிபதி வழக்கினையும் தள்ளுபடிசெய்தார்.  குறித்த வழக்கில் ஆலயநிர்வாகம் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணிகளான என்.சிறிகாந்தா, அன்ரன் புனிதநாயகம்,  அருள், க.சுகாஸ், தலைமையில் பல சட்டத்தரணிகள் முன்னிலையாகியிருந்தனர்.   https://www.virakesari.lk/article/179099
    • காசாவில் அல்ஜசீரா ஊடகவியலாளரை கைதுசெய்து சித்திரவதை செய்த இஸ்ரேலிய படையினர் - தொடர்கின்றது ஊடகவியலாளர்களை இலக்குவைக்கும் இஸ்ரேலின் நடவடிக்கை Published By: RAJEEBAN    19 MAR, 2024 | 10:56 AM   காசாவில் அல்ஜசீரா ஊடகவியலாளரை கைதுசெய்த இஸ்ரேலிய படையினர் 12 மணிநேரத்தின் பின்னர் அவரை விடுதலை செய்துள்ளனர். காசாவின் அல்ஸிபா மருத்துவமனையில் ஊடகவியலாளரை கைதுசெய்த இஸ்ரேலிய  படையினர் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். அல்ஸிபா மருத்துவமனையை இலக்குவைத்து நான்காவது தடவையாக இஸ்ரேல் மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்த செய்திசேகரிப்பதற்காக சக ஊடகவியலாளர்களுடன் அல்ஜசீராவின் அல்கூலும் மருத்துமவனைக்கு சென்றிருந்தார். அல்ஜசீராவின் செய்தியாளரை இஸ்ரேலிய படையினர் இழுத்துச்சென்றனர், அவரது ஊடக உபகரணங்களை அழித்தனர் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். ஊடகவியலாளர்களிற்கான அறையில் குழுமிய ஏனைய ஊடகவியலாளர்களையும் கைதுசெய்தனர் என விடுதலை செய்யப்பட்ட பின்னர் அல்ஜசீரா ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களின் கண்கள் கைகளை கட்டிய இஸ்ரேலிய படையினர் அவர்களை நிர்வாணமாக்கி தாக்கினார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாராவது அசைந்தால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்வோம் என இஸ்ரேலிய படையினர் எச்சரித்தனர் எனவும் குறிப்பிட்டுள்ள அவர் எனது சகாக்கள் சிலரும் விடுதலை செய்யப்பட்டனர் என்பதை அறிகின்றேன் அவர்கள் எங்கிருக்கின்றார்கள் என்பது தெரியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். காசாவின் மீது இஸ்ரேல் கடந்த ஐந்து மாதங்களாக மேற்கொண்டு வரும் தாக்குதல் குறித்த செய்திகளை வெளியிடும் செய்தியாளர்களிற்கான தளமாக அல்ஷிபா மருத்துவமனை காணப்படுகின்றது. அல்ஜசீரா செய்தியாளரை கைதுசெய்து சித்திரவதை செய்தனர் தாக்கினார்கள் என அல்ஜசீராவின் மற்றுமொரு செய்தியாளரான ஹனி மஹ்மூட் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179096
    • 🙏🏾 🌺 உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் நிலவு உலாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான் மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.