Jump to content

காவல் படையை உருவாக்கினாராம் மேயர் கொதிக்கிறதாம் கொழும்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கேள்விகள்.
இந்த சிந்தனையில் நாம் சிந்திக்கவில்லை.
எது எப்படியோ மணிவண்ணன் ஒரு கீரொ வாகிவிட்டார்.
அடுத்த தேர்தலில் அவரை அரவணைக்க கட்சிகள் போட்டி போட போகுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இணைப்புக்கு குணா கவியழகன்  உணர்ச்சி அரசியலில் சிக்குண்டு போயிருக்கும்  நம்மினத்துக்கு உங்களின் ஆக்கம் பெரும்தெளிவை கொடுப்பது பேரினவாதிகளுக்கும் பேரினவாதத்துக்கு துணை போகிறவர்களும் உங்கள் மீது கோபத்தை திருப்புவார்கள் ஆகவே உங்களின் ஆக்கங்களை தரவு  சேமிப்பாக வைத்திருங்கள் எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நந்தனசேன டக்கிளஸை வைச்சே ஒரு புலிப்படையையே உருவாக்கிவிடுவார்... தன்ர தேவைக்கு.

இந்தக் கைதில் அரசியல் இருக்கு. நந்தனசேனவுக்கு இலாபமும் இருக்கு. 

ஆனால்... இவர் சொல்லுறது கொஞ்சம் உருப்பெருத்த விம்பம். 

யாழ் மாநகர எல்லை என்பது ஒரு பெரிய பரந்தது அல்ல. மேலும் குடிமனைகள் அதிகம் கொண்ட இடம். மக்களிடம்.. ஒரு கண்காணிப்பை அதிகரிப்பதன் மூலம்.. பொதுச் சுகாதார அளவு மட்டத்தை குறைந்த செலவில் யாருக்கும் இடைஞ்சல் இல்லாமல் செய்யலாம் என்று மணிவண்ணன் எண்ணி இருக்கக் கூடும். கொழும்பு மாநகரில்.. வாகனத் தரிப்பிட நிதிவசூலில் இருக்கும் மாநகர ஊழியர்கள் புலிக் காவல்த்துறை சீருடையில் இருக்க கண்டு நானே வியந்திருக்கிறேன். புலிச் சீருடை.. மலேசிய காவல்த்துறை உட்பட பல நாடுகளில் பாவிக்கப்படுகிறது. 

லண்டனிலேயே பொதுக்கழிப்பிடங்கள் பராமரிப்புச் செலவு கருதி மூடப்படுகின்றன.. அல்லது கட்டண வசதி ஆக்கப்படுகின்றன. அதுபோக எம்மவர்கள் வாழும்.. அதிக பகுதிகளில் வெற்றிலை துப்பல் கூடி.. அந்தந்த கவுன்சில்கள் அதை கட்டுப்படுத்தப் படுற பாடு...  அதற்கு ஏன் வெற்றிலை இறக்குமதிக்கு பிரிட்டன் தடைவிதிக்கவில்லை என்று கேட்பது போல் உள்ளது.. இவரின் உருப்பெருத்த விம்பம்.

இவர் குணா என்பவர் இப்ப வரவர அதிகப் பிரசிங்கித்தனமா இருப்பதாக தென்படுகிறது... தனக்கான காணொளியாளர்களை அதிகரிக்க. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா குணா,

நீங்கள் குறிப்பிடும் தரம் 1 உணவகங்கள் ஏற்கனவே கழிவறை வசதிகளுடன் தான் இயங்குகின்றன. 

இங்கு பிரித்தானியாவில் council களால் எத்தனை பொதுக் கழிப்பிடங்கள் பராமரிக்கப்படுகின்றன ?

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.