Jump to content

ஏ40 - "ஏபோர்ட்டி" என்ற கார்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of car and outdoors

May be an image of car

ஏ40 - "ஏபோர்ட்டி" என்ற கார். 

 

கார் என்றால் ஏபோர்ட்டி என்ற காரைத் தவிர எதையும் அறிந்திராத காலமது.
காரைநகரில் இருந்து கணபதிப்பிள்ளை அண்ணையின் கறுத்த நிற கார் வந்து எங்கள் ஒழுங்கை முகரியில் நின்று... அதிலிருந்து பலர் இறங்கினால்
நல்ல செய்தி சொல்லி அழைக்க வருகிறார்கள் என்று அர்த்தம்.
அவர் தனியே வந்தால் துக்க செய்தி ஒன்றை அறிவிக்க வருகின்றார் என்று அர்த்தம்.
 
பாடசாலைக்கு ஆண்களின் வாசனை படாது பக்குவமாக பெண் பிள்ளைகளை கூட்டிச் செல்லவும்... கூட்டி வரவும்....
சந்தையில் இருந்து ஒவ்வோர் வியாபாரிகளும் தங்கள் தங்கள் ஊர்களுக்கு சாமான்களை ஏற்றிச் செல்லவும்....
குடும்பமாக எப்போதாவது இரவுக் காட்சிப் படத்திற்கு செல்லுவதற்கு.... அல்லது பகல் நேர விசேடங்களுக்கு செல்லுவதற்கு...
குறிப்பாக புகையிரதத்திற்கு கூட்டிச் செல்லவும் கூட்டி வரவும்...
மேலாக இரவு வேளைகளில் ஒருவருக்கு நோய் கண்டு விட்டால் அல்லது அடிவயிற்றில் நோவு கண்டு விட்டால் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல....
மீன் சந்தைகளுக்கு கடற்கரைகளில் இருந்து மீனைக் காவி வர...
எல்லாவற்றிற்கும் இந்த ஏபோர்ட்டிக் கார் தான்.
 
கறள் பிடித்த ஏபோர்ட்டிக் காரை நான் கண்டதேயில்லை.
ஊருக்கு 2-3 ஏபோர்ட்டிக் கார்கள் நிற்கும்.
அவர்களை வாடகைக் குஅமர்த்திய காசு கொடுக்கவே 2-3 மாதங்கள் செல்லும் - ஆட்டு இறைச்சிப் பங்கின் காசு கொடுக்க தாமதமாவது போல...
டக்ஸி என்பது அறிமுகம் செய்யப்பட்ட போதும் இந்த ஏபோர்ட்டிக் கார்கள் தான்.
 
பின்பு கொஞ்சம் பெரிதான சோமசெற் கார் வந்தாலும் இந்த ஏபோர்ட்டியின் வலு அதில் இருக்கவில்லை என அறிந்தோர் அறிவோர்.
சில மேள செற்காரர்களும்... வக்கீல்களும் இந்த சோமசெற் காரை வைத்திருந்ததாக ஞாபகம்.
 
May be an image of car
 
அதன் பின்பே Volkswagen என்று பொதுவாக அழைக்கப்பட்ட ஓஸ்ரின் கார் வந்தது நினைக்கின்றேன். ஆமைக்குட்டிக் கார் என்பார்கள்.
கட்டையான உருண்டையான எனது பௌதிக ஆசிரியர் திரு. தனபாலசிங்கம் இந்தக் காரை வந்திருந்தார். அவரின் தோற்றத்திற்கு பொருத்தமானது என நாம் கிசுகிசுத்துக் கொள்வோம்.
 
காலங்கள் மாறி... புலம் பெயர்ந்து கார் என்பது போக்குவரத்துச் சாதனம் என்ற நிலை மாறி கௌரவச் சின்னமாக மாறி பென்ஸ் என்றும அவ்டி என்றும் இலட்சக் கணக்கான காசை மொத்தமாக செலுத்தி வாங்கியிருந்தாலும் சரி... கட்டுக்காசுக்கு மாதாமாதம் செலுத்தி வாங்கியிருந்தாலும் சரி... ஏபோர்ட்டிக் காருக்குள் கிழங்கு அடுக்கிய மாதிரி நெருக்குப்பட்டு பயணப்பட்ட அனுபவங்கள் என்றும் இனிமையானவை.
நெஞ்சில் இட்ட கோலம் எல்லாம் அழிவதில்லை.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று கோயிலுக்கு போவதற்கு திரும்புவதற்கு சமிக்ஞை சந்தியில் நின்ற போது பின்னுக்கு 6,7 கார்கள். "என்னப்பா *****  இவையும் பென்ஸ் வாங்கீட்டினம் போல"  என்றவர் திருமதி.   

"பிள்ளையாரை மட்டும் இப்ப நினையுமப்பா"  என்றது அடியேன் ....

Link to comment
Share on other sites

  A40 Devon,  A40 somerset இரண்டுமே Austin கார் நிறுவனத்தின் தயாரிப்புகள் தான்.  இலங்கையில் A 40 என்ற பெயரால் Devon கார் மட்டுமே மக்களால்  அழைக்கப்பட்டாலும் உண்மையில் somerset காரும் A40 வகை தொடர்ச்சி  கார் தான்.   அதன் பின்னர் வந்த Cambridge காரும் A40 வகையை சேர்ந்த கார் தான்.  

Volkswagen ஒஸ்ரின்  கார் அல்ல . Austin நிறுவனம் இங்கிலாந்தை சேர்ந்தது. Volkswagen ஜேர்மன் நிறுவனம். 

Link to comment
Share on other sites

இப்போதெல்லாம் Detroit பிக் 3 (GM, Ford, Chrysler) ஆலைகள் ஒன்ராறியோவைச் சேர்ந்த தமிழ் பொறியாளர்களால் நிரம்பியுள்ளன. இந்த தமிழ் பொறியாளர்களில் பெரும்பாலோர் கனேடிய பல்கலைக்கழகங்களின் பட்டதாரிகள். எனவே அமெரிக்க வாகனத் தொழிலின் எதிர்காலம் அழிந்துவிட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

83 க்குப் பின் வெளிநாடு வேண்டாம் உள்ளூரிலேயே உழுவோம் என்று எ40 வான் வாங்கி வியாபாரம் செய்தேன்.பெற்றோல் தட்டுப்பாடு.ஒரு கலனில் முன்னுக்கு வைத்திருந்தே பாவித்தோம்.
நிறையவே அனுபவம்.
பதிவுக்கு நன்றி சிறி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோமர்செட், ஆஸ்டின், மோரிஸ் மைனர், A 40 போன்றவை பிரித்தானிய கார்கள். தமது காலணிகள் முழுவதும் வித்து விட்டிருந்தார்கள்.

நான் அறிந்த மட்டில், நல்லூர் முருகன் ஆலய முதலியார் ஒரு ஒஸ்க்போர்ட கார் வைத்து இருக்கிறார்.

பிரிட்டனில், இந்த பழைய வகை கார் கம்பெனிகளில் மிச்சி இருந்தது ரோவர் மட்டுமே. அதனை சீனாக்காரன் வாங்கி, அப்படியே ஒரு நட்டு விடாமல் கழட்டி சீனா கொண்டு போய் சேர்த்து விட்டான்.

இப்போது இருக்கும் கொம்பனிகளில், ஜாக்குவார், லேண்ட் ரோவர் கொம்பனிகள் தான் உலக புகழ் மிக்கவை. ரோவர் கொம்பனியின், வெற்றி கரமான லேண்ட் ரோவர் பகுதியை, ரோவர் கம்பனியை சீனாவுக்கு விக்க முதலே, போர்ட் கம்பெனி வாங்கி இருந்தது. பின்னர்தான் இந்திய டாடா வாங்கியது. இது வாங்கிய பின்னர் தான், இந்திய சந்தையில் இன்னும் பிரபலமானது. இயக்குனர் சங்கர், நடிகர் விஜய், நடிகர் சந்தானம் என்று பலர் இதனை வாங்கினர். 

Range Rover - Wikipedia

பிரிட்டனின் ரோல்ஸ் ரொயிஸ் கார்களும் புகழ் மிக்கவை. அந்த நிறுவனம் செய்யும் ஜெட் என்ஜின்கள், போயிங், ஏர்பஸ் பயன்படுத்துகின்றன.

****

லலித் அத்துலத் முதலியார், ஏ 40 கார் வைத்திருந்த வல்வெட்டி ஆள் குறித்த ஒரு கதை ஒன்றினை பாராளுமன்றில் முன்னர் சொல்லி இருந்தார்.

ஆள் கஞ்சா கடத்தல் பார்ட்டி. இந்தியாவில் இருந்து கொண்டுவந்து கொழும்புக்கு அனுப்புவது வேலை.

அதனால் ஆனையிறவு செக் போயிண்டில் கடுமையான சோதனை. கொழும்புக்கு சரக்கு போகவில்லை.

கொழும்பு வால்கெர் நிறுவனத்தில், ஏ 40 லீசுக்கு எடுத்து இருந்தார், வல்வெட்டி ஆள்.

காரை ஊருக்கு கொண்டு போய் விட்டார். இரண்டு மாதத்துக்கு பிறகு காசு கட்டவில்லை.

தலைமை அலுவலகத்தில் இருந்து வெள்ளை அதிகாரி, ஆட்களுடன் வந்து, காரை கைப்பற்றி கொண்டு போறார். வெள்ளை எண்டபடியால் நோ செக்கிங். கார் கொழும்புக்கு கிட்டத்தில் வரும் போது, காரை வழிமறித்தார், வல்வெட்டிக்காரர்.

அய்யா, உங்களை தேடி, நான் இங்கை வர, நீங்கள் அங்கை போட்டியள்.... வெயிலில வேற கறுத்து போட்டியள்.

இந்தாருங்கோ, காசு... பிடியுங்கோ.... அய்யா எண்டு கட்டவேண்டிய காசையும், அடுத்த ரெண்டு, மூன்று மாத காசையும் கட்டி காரை வாங்கிக் கொண்டு போட்டார்.

இப்படியாக.... கஞ்சா, விக்கினம் இன்றி கொழும்பு வந்து சேர்ந்தது.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட ஊரிலயும் ஒருவர் வைத்திருந்தார் அவரிடம் கார் கயர் பண்னினால் அவரது தாயார் அவருக்கு தெரியாமல் காசை வாங்கிப் போயிடவார.சில நேரம் இரன்டு பேருக்கும் காசு கொடுத்த சம்பவமும் உண்டு.😜பழசை ஞாபகப் புடுதியமைக்கு நன்றி சிறியர்.🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

***

வெயில் நேரத்தில், இந்த காரின் லெதர் இருக்கைகளில் இருந்து வரும் மணம், மழை பெய்தால் வரும், புழுதி மணம் எல்லாமே மனதில் பதிந்து விட்ட மண்வாசனைகள்.  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.