Jump to content

யாழ் மக்களுக்கு இராணுவத் தளபதியின் வேண்டுகோள்!

Recommended Posts

யாழ் மக்களுக்கு இராணுவத் தளபதியின் வேண்டுகோள்!

யாழ் மக்களுக்கு இராணுவத் தளபதியின் வேண்டுகோள்!

வெளிநாட்டு தொடர்புடைய தமிழ் மக்கள் சிலர் ராணுவத்திற்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்கிறார்கள் என யாழில் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றிற்கு இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வீட்டினை கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இன்றையதினம் யாழ்ப்பாண மாவட்டத்தில் யாழ்ப்பாண பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பெண் தலைமைத்துவத்தை கொண்ட கணவனை யுத்தத்தின் போது இழந்த ஒரு குடும்பத்தினருக்கு ஒரு வீட்டினை இராணுவத்தினரால் அமைத்து கொடுத்திருக்கின்றோம்.

அவர் தனது கணவனை இழந்த பின்னரும் தனது விடா முயற்சியின் காரணமாக சுய தொழிலினை வாழ்வாதாரமாக மேற்கொண்டு வாழ்ந்து வரும் நிலையில் இராணுவத்தினரின் உதவியுடன் இந்த வீடானது இன்றைய தினம் கட்டி முடிக்கப்பட்டு அவர்களின் வாழ்க்கைக்கு ஒரு முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம்.

இலங்கை இராணுவத்தினரால் வீடு மட்டுமல்லாது வீட்டுக்குத் தேவையான குளிர்சாதனைப்பெட்டி உட்பட்ட அனைத்து பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. அத்தோடு குறித்த குடும்பத்தில் ஒரு மாணவியும் உள்ளார் அவருக்கான கல்விக்கான நிதி உதவி மற்றும் பாடசாலை உபகரணங்களை வழங்கி வைத்திருக்கின்றோம். அத்தோடு மேலதிகமான அந்த மாணவிக்கு உரிய கல்வி செயற்பாடுகளுக்கு உதவ தயாராகவுள்ளோம்.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் யுத்த காலத்தில் இடம்பெற்ற சண்டையின் போது கொல்லப்பட்ட ஒருவருக்கே இன்று இராணுவத்தினரால் வீடு அமைத்துக் கொடுத்திருக்கிறோம். இலங்கை இராணுவமானது ஒரு மனிதாபிமான ஒரு இராணுவம். யாழ்ப்பாணத்தில் வசிக்கும் தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள்.

இலங்கையின் முப்படையினரும் தமிழ் மக்களுக்கு மனிதாபிமான செயற்பாட்டை முன்னெடுக்கிறார்கள் என யாழ்ப்பாணத்தில் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் நன்கு அறிவார்கள். ஏனைய தமிழ் மக்களுக்கும் அது நன்றாக புரியும்.

ஆனால் வெளிநாட்டில் இருப்பவர்கள் இங்கு குழப்பத்தை ஏற்படுத்தும் முகமாக இங்குள்ளவர்களுக்கு காசுகளை அனுப்பி, இங்கு காசு வருகிறவர்கள் அல்லது வெளிநாட்டு தொடர்பு கொண்டுள்ளவர்கள் இங்கே இராணுவத்துக்கு எதிரான பொய் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றார்கள். இந்த இராணுவம் கொடுமையானது. ராணுவம் இங்கே தேவையற்றது என. ஆனால் தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள் இங்கு உள்ள இராணுவத்தினரால் தமிழ் மக்களுக்கு நன்மை செய்யப்படுகின்றது என.

அத்தோடு தமிழ் மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் நாங்கள் முப்படையினரும் புரிவோம். அத்தோடு இன்றைய தினம் புத்தாண்டை முன்னிட்டு தமிழ் குடிமகன் ஒருவருக்கு இந்த வீட்டை அமைத்துக் கொடுத்ததையிட்டு இலங்கை ராணுவத்தினர் ஆகிய நாங்கள் பெருமைப்படுகிறோம்

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்று நாம் விஜயத்தினை மேற்கொண்டு யாழ்ப்பாணத்தில் தற்போது உள்ள பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்து உள்ளேன்.

அத்தோடு கொரோனா நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளேன். அத்தோடு தற்போதுள்ள கொரோனா நிலையினை எவ்வாறு நிர்வகிப்பது போன்ற விடயங்கள் தொடர்பில் நான் இன்று ஆராய்ந்து இருந்தேன். எதிர்வரும் நாட்களில் சிங்கள தமிழ் புத்தாண்டு வர இருக்கின்றது. எனவே பொதுமக்கள் தமது புத்தாண்டை மிகவும் அமைதியான முறையில் கொண்டாடுவது மிகவும் சிறந்தது எனவும் தெரிவித்தார்.
 
-யாழ். நிருபர் பிரதீபன்-

யாழ் மக்களுக்கு இராணுவத் தளபதியின் வேண்டுகோள்! (adaderana.lk)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டுடன் தொடர்புடைய சிலர் பொய் பிரசாரம் செய்கின்றனர் – யாழில் இராணுவத்தளபதி!

வெளிநாட்டுடன் தொடர்புடைய தமிழ் மக்கள் சிலர் இராணுவத்திற்கு எதிராக பொய் பிரசாரம் செய்கிறார்கள் என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

யாழில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றிற்கு இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வீட்டினை கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் யுத்த காலத்தில் இடம்பெற்ற சண்டையின்போது கொல்லப்பட்ட ஒருவரின் குடும்பத்துக்கே இன்று இராணுவத்தினரால் வீடு அமைத்துக் கொடுத்திருக்கிறோம்.

இலங்கை இராணுவமானது ஒரு மனிதாபிமான ஒரு இராணுவம் என்பதை யாழ்ப்பாணத்தில் வசிக்கும் தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள். ஏனைய தமிழ் மக்களுக்கும் அது நன்றாக புரியும்.

ஆனால் வெளிநாட்டில் இருப்பவர்கள் இங்கு குழப்பத்தை ஏற்படுத்தும் முகமாக இங்குள்ளவர்களுக்கு பணத்தை அனுப்பி அல்லது வெளிநாட்டு தொடர்பு கொண்டுள்ளவர்கள் இங்கே இராணுவத்துக்கு எதிராக பொய் பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த இராணுவம் கொடுமையான இராணுவம். இங்கே தேவையற்றது என பிரசாரம் செய்கிறார்கள். ஆனால் இங்கு உள்ள இராணுவத்தினரால் தமிழ் மக்களுக்கு நன்மை செய்யப்படுகின்றது என்பதை தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள்.

அத்தோடு தமிழ் மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் நாங்கள் முப்படையினரும் புரிவோம். அத்தோடு இன்றைய தினம் புத்தாண்டை முன்னிட்டு தமிழ் குடிமகன் ஒருவருக்கு இந்த வீட்டை அமைத்துக்கொடுத்ததையிட்டு இலங்கை இராணுவத்தினராகிய நாங்கள் பெருமைப்படுகிறோம்.

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்று நாம் விஜயத்தினை மேற்கொண்டு யாழ்ப்பாணத்தில் தற்போது உள்ள பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்து உள்ளேன்.

அத்தோடு கொரோனா நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளேன். அத்தோடு தற்போதுள்ள கொரோனா நிலையினை எவ்வாறு நிர்வகிப்பது போன்ற விடயங்கள் தொடர்பில் நான் இன்று ஆராய்ந்து இருந்தேன்.

எதிர்வரும் நாட்களில் சிங்கள தமிழ் புத்தாண்டு வர இருக்கின்றது. எனவே பொதுமக்கள் தமது புத்தாண்டை மிகவும் அமைதியான முறையில் கொண்டாடுவது மிகவும் சிறந்தது” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Saventhra-Silwa-3.jpg

Saventhra-Silwa-2.jpg

https://athavannews.com/2021/1209405

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

ஓமடாப்பா, உங்களுக்கு அரசாங்கம் ஒதுக்கிற காசிலை இதை செய்து போட்டு கனக்க கதைக்கிறியள். வெளிநாட்டுக்காசு வாறது இப்ப கண்ணுக்கை குத்துது போலை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வாதவூரான் said:

ஓமடாப்பா, உங்களுக்கு அரசாங்கம் ஒதுக்கிற காசிலை இதை செய்து போட்டு கனக்க கதைக்கிறியள். வெளிநாட்டுக்காசு வாறது இப்ப கண்ணுக்கை குத்துது போலை

அவங்களுக்கு அது கண்ணுக்குள் குத்தினாலும்  700 வீடுகளுக்கு மேல் அமைத்து கொடுத்துள்ளதாக இங்கு செய்திகள் பிரசுரமாகிறது . ஆனால் வெளிநாட்டு காசு வெளிநாட்டில் உள்ள அவங்கவங்க சொந்தங்களுக்கு மட்டுமே கிடைக்கிறது என்பதும் உன்மை இல்லாதவர்களுக்கு சில அமைப்புகளினூடாக வீடு அதுவும் அரைபகுதியுடன் நின்று போகிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அவங்களுக்கு அது கண்ணுக்குள் குத்தினாலும்  700 வீடுகளுக்கு மேல் அமைத்து கொடுத்துள்ளதாக இங்கு செய்திகள் பிரசுரமாகிறது . ஆனால் வெளிநாட்டு காசு வெளிநாட்டில் உள்ள அவங்கவங்க சொந்தங்களுக்கு மட்டுமே கிடைக்கிறது என்பதும் உன்மை இல்லாதவர்களுக்கு சில அமைப்புகளினூடாக வீடு அதுவும் அரைபகுதியுடன் நின்று போகிறது 

ராசன்! மட்டக்களப்பு ஏரியாவிலையும் உப்பிடித்தான் ராணுவம் வீடுகள் கட்டி குடுக்குதோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாம் உழைத்து வளமாக வாழ்ந்த பிரதேசத்திற்கு இவர்கள் ஏன்வந்தார்கள்?  இந்த மக்களின் வீடு எப்படி உடைந்தது? யுத்தம் ஏன் வந்தது?  எதற்காக வீடு கட்டிக்கொடுக்க இராணுவம் வரவேண்டும்? யுத்தத்திற்கு முன் இராணுவத்தை கொண்டா இந்த மக்கள்  வீடு  கட்டினார்கள்? நீங்கள் உடைத்ததை  உங்கள் திட்டப்படி    கட்டுகிறீர்கள். பிச்சை போட்டதாக படம் காட்டுகிறீர்கள். நீங்கள் உடைத்தது, அழித்தது எல்லாம் நாமறிவோம், சர்வதேசமும் அறியும், ஆதாரமாக உள்ளது. இதன் பின்னால் என்ன நடக்கும் என்பதையும் நாமறிவோம். உங்கள் செயற்பாடுகளே உங்களின் கொடுமைகளுக்கு சாட்சி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

ராசன்! மட்டக்களப்பு ஏரியாவிலையும் உப்பிடித்தான் ராணுவம் வீடுகள் கட்டி குடுக்குதோ?

மட்டக்களப்பில் சில வீடுகள் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளரால் கட்டிக்கொடுக்கப்பட்டது சஜித்தினால் தற்போது எந்த திட்டங்களும் வரவில்லை  ஆனால் இரானுவத்தில் பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் இணைந்துள்ளார்கள் சேர்ந்தவர்கள் பணக்கார இளைஞர்கள் கிடையாது அவர்களுக்கு இராணுவத்தினரால் வீடு கட்டிக்கொடுக்கப்படலாம் . சில தகவல்கள் எடுக்கிறார்கள் சில வேளை கட்டிக்கொடுக்கலாம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

மட்டக்களப்பில் சில வீடுகள் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளரால் கட்டிக்கொடுக்கப்பட்டது சஜித்தினால் தற்போது எந்த திட்டங்களும் வரவில்லை  ஆனால் இரானுவத்தில் பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் இணைந்துள்ளார்கள் சேர்ந்தவர்கள் பணக்கார இளைஞர்கள் கிடையாது அவர்களுக்கு இராணுவத்தினரால் வீடு கட்டிக்கொடுக்கப்படலாம் . சில தகவல்கள் எடுக்கிறார்கள் சில வேளை கட்டிக்கொடுக்கலாம் .

அதாவது சிறீலங்கா இராணுவத்தில் சேர்ந்தால் வீடு கிடைக்க வாய்ப்புள்ளது??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராணுவம், கடற்படை, விசேட அதிரடிப்படை, பொலீஸ் ஆகிய அரச படைகளில் தமிழர்கள் இணைவதை மட்டக்களப்பில் இருந்த காலங்களில் கண்டிருக்கிறேன். வேலைவாய்ப்பு என்று மட்டுமே பார்த்து இணைகிறார்கள். யாழ்ப்பாணத்தில் 80 கள்வரை கடற்படை மற்றும் பொலீஸில் இருந்தார்கள், பின்னர் குறைந்துவிட்டது.

பசியென்று வரும்போது மற்றையவை எல்லாமே பறந்துவிடும். இதுதான் நடக்கிறது. 

படித்தும் வேலையில்லையென்பதால் ராணுவத்தில் இணைகிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ரஞ்சித் said:

படித்தும் வேலையில்லையென்பதால் ராணுவத்தில் இணைகிறார்கள். 

அதாவது படித்தாலும் சிறீலங்காவில் வேலையில்லை ஆனால் இராணுவத்தில் மட்டும் தாராளமாக இருக்கிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

மட்டக்களப்பில் சில வீடுகள் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளரால் கட்டிக்கொடுக்கப்பட்டது சஜித்தினால் தற்போது எந்த திட்டங்களும் வரவில்லை  ஆனால் இரானுவத்தில் பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் இணைந்துள்ளார்கள் சேர்ந்தவர்கள் பணக்கார இளைஞர்கள் கிடையாது அவர்களுக்கு இராணுவத்தினரால் வீடு கட்டிக்கொடுக்கப்படலாம் . சில தகவல்கள் எடுக்கிறார்கள் சில வேளை கட்டிக்கொடுக்கலாம் .

தமிழர் பிரதேசங்களிலை இராணுவம்தான் வீடு வளவு கட்டிக்குடுக்கோணும் எண்டால் உங்கை இருக்கிற தமிழ் அரசியல்வாதிகளுக்கு என்ன வேலை? 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, விசுகு said:

அதாவது படித்தாலும் சிறீலங்காவில் வேலையில்லை ஆனால் இராணுவத்தில் மட்டும் தாராளமாக இருக்கிறது

அப்படித்தான் என்று நினைக்கிறேன். 

ராணுவம் தமிழர்களை இணைத்துக்கொள்வதன்மூலம் தமிழர்களின் கனவைச் சிதைக்க நினைக்கிறது. அது இணைவோருக்குப் புரிவதில்லை, புரிந்தாலும் எனக்கென்ன என்று இணைகிறார்கள். எமக்கு வேலையில்லை, உணவில்லை என்று கூறுபவர்களிடம் உரிமைபற்றிப் பேசுவது கடிணம் என்பது எனது தாழ்மையான கருத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரஞ்சித் said:

எமக்கு வேலையில்லை, உணவில்லை என்று கூறுபவர்களிடம் உரிமைபற்றிப் பேசுவது கடிணம் என்பது எனது தாழ்மையான கருத்து

மகிழ்ச்சி....இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக நிதர்சனம் புரிகிறது போல் .. நாம் என்னதான் உரிமை, கொள்கை, கோட்பாடு  என்று கூப்பாடு போட்டாலும் நாட்டிலிருப்பவர்கள் மூன்று வேளை சாப்பிட வேண்டும் அதற்கு கையில் பசை வேண்டும். அவர்களால் முடிந்த வகையில் அதனை தேடிக்கொள்கிறார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, விசுகு said:

அதாவது படித்தாலும் சிறீலங்காவில் வேலையில்லை ஆனால் இராணுவத்தில் மட்டும் தாராளமாக இருக்கிறது

அண்ணை,

இதை நீங்கள் எப்பிடி எடுத்துக்கொண்டீர்களோ தெரியவில்லை, ஆனால் அவர்கள் செய்வதை நான் சரியென்று வாதாடுவதற்காக எழுதவில்லை.

88 - 90 காலப்பகுதியில் மட்டக்களப்பில் வாழ்ந்த போது பறங்கியர் சமூகத்தில் பலர் கடற்படையில் வேலைபார்த்து வந்தனர். அவர்கள் கூட தம்மை தமிழர்களாகவே அடையாளப்படுத்தியிருந்தனர். இதேபோல மட்டக்களப்பு நகரில் பல படித்தவர்கள் அரச வேலையென்பதற்காக பொலீஸில் இணைந்துவந்தனர். 90 இல் ராணுவம் தமிழர்களை நரவேட்டையாடிய காலத்திலேயே இது நடந்தது. எம்முடம் படித்த தாமரைக்கேணிப் பகுதியில் வசித்த வசதிபடித்த மாணவன் விசேட அதிரடிப்படையில் இணைந்துகொண்டான். 

90 - 93 காலப்பகுதியில் கிருலப்பனையில் நாம் வாடகைக்குத் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் ஒரு பொலீஸ் அதிகாரி. வடமராட்சி துன்னாலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். மன்னாரில் வேலை பார்த்துவந்தார். புலிகளுடனான மோதலில் கொல்லப்பட்டார். அவர் இறந்தபோது நாம் அவரது வீட்டின் மேல்மாடியில் குடியிருந்தோம். இறந்தபின்னர் பொலீஸ் அதிகாரியானவர்களுக்குக் கொடுக்கப்படும் கொடுப்பனவு அவரின் குடும்பத்திற்குக் கிடைத்துவந்தது.

1998 இல் எம்மைப் பல்கலைக் கழகத்திலிருந்து இழுத்துச் சென்று சித்திரவதை செய்த பொலீஸ் அதிகாரி ஜெயரட்ணம் கூட வடமராட்சித் தமிழர்தான். 

அதேபோல 2000 இல் கொழும்பில் வாழ்ந்தபோது மட்டக்களப்பைச் சேர்ந்த பொலீஸ் அதிகாரியொருவரை எனக்குத் தெரிந்திருந்தது. அவரின் மகனுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்து வந்தேன். அவுஸ்த்திரேலியா வருவதற்காக பொலீஸ் நற்சான்றுப் பத்திரம் பெறுவதற்கு நான் அலைந்துகொண்டிருந்தபோது, சிறுதொகைப் பணத்தை வாங்கிக்கொண்டு எனக்கு அதைச் செய்துகொடுத்தார். வீட்டில் பேசும்போது புலிகளுக்கு ஓரளவு ஆதரவாகப் பேசுவார், ஆனால் பொலீஸில் உயர் பதவியில் இருந்தார். இவரைப்போன்றே யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இன்னொரு உயரதிகாரியின் பிள்ளைகளுக்கும் பாடம் சொல்லிக் கொடுத்தேன், ஒரு கட்டத்தில் புலிகளுக்குச் சார்பானவர் என்று கருதப்பட்டு ஒதுக்கப்பட்டார். 

2018 இல் நீண்டநாட்களுக்குப் பின்னர் யாழ்ப்பாணம் சென்றபோது, ஊர்காவற்றுரை (மனைவியின் ஊர்) எங்களின் வாகனத்தை மறித்துச் சோதனையிட்ட பொலீஸார் தமிழர் என்பதை அன்றிரவு அவர் வேலை முடிந்து எமது வீட்டிற்குவந்தபோது அறிந்துகொண்டேன். அவரது பிரிவில் இன்னும் பல தமிழர்கள் இருக்கிறார்கள் என்று எனக்கு களுத்தறை பொலீஸ் கல்லூரியில் அவர் தனது தமிழ் நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றைக் காட்டினார். 

இவை எல்லாவற்றிற்கும் மேலாக எனது மாமனார் ஒரு முன்னாள் கடற்படை வீரர். சிங்களம் படித்தால் மட்டுமே பதவி உயர்வு என்று கூறியதால் 1980 இல் வேலையை விட்டு விட்டு வர்த்தகக் கப்பல்களில் போய்வந்தவர். அவருக்கும் ஏழ்மை ஒரு காரணமாக இருந்தது.

சிலர் பொலீஸிலும் ராணுவத்திலும் இணைவதை வேலைவாய்ப்பாகவும், பாதுகாப்பிற்காகவும்,  நிரந்தர வருமானமாகவும், ஓய்வூதியத்திற்கான வழியாகவும் பார்க்கிறார்கள். புலிகளுடனான யுத்தம் அற்ற நிலையினால், உயிருக்கு அச்சப்படத் தேவையில்லை என்பதும், ராணுவத்தில் இணைவதால் அதே ராணுவத்திடமிருந்து தமக்குப் பாதுகாப்புக் கிடைக்குமென்பதாலும் சிலர் இணைகிறார்கள். ஆனால், அரச சேவையில் தமிழர்கள் மேல் காட்டப்படும் மாற்றாந்தாய் மனப்பான்மை இவர்கள் மேலும் காட்டப்படும். தமிழர்கள் என்பதனால் தொடர்ச்சியான சந்தேகப் பார்வை இருக்கத்தான் போகிறது. உருவேற்றப்பட்டுவரும் சிங்களப் பேரினவாதம் ஒருநாள் இவர்களையும் அரச சேவையிலிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கும். அதுவரை அவர்கள் தமது அன்றாட வாழ்க்கையினை இதைப் பாவித்து ஓட்டிக்கொள்ளட்டும். 

வேறு என்ன சொல்வது ?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரஞ்சித் said:

உங்கள் கருத்து முற்றிலும் உண்மை. ஆனால் வருங்காலங்களில் தமிழ் இராணுவமும் போலீசுமே தமிழரின் போராட்டத்தை அடக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/4/2021 at 17:35, தனிக்காட்டு ராஜா said:

அவங்களுக்கு அது கண்ணுக்குள் குத்தினாலும்  700 வீடுகளுக்கு மேல் அமைத்து கொடுத்துள்ளதாக இங்கு செய்திகள் பிரசுரமாகிறது . ஆனால் வெளிநாட்டு காசு வெளிநாட்டில் உள்ள அவங்கவங்க சொந்தங்களுக்கு மட்டுமே கிடைக்கிறது என்பதும் உன்மை இல்லாதவர்களுக்கு சில அமைப்புகளினூடாக வீடு அதுவும் அரைபகுதியுடன் நின்று போகிறது 

முனிவர், ராணுவம் இலங்கையில் ஒரு பெரிய யானை. அந்த யானையை கட்டி தீனி போட முடியாமல் அரசாங்கம் தடுமாறுகிறது. 

பொருளாதாரம் மேலும், மோசமாகும் போது, ராணுவத்தின் அளவு குறைக்கப்படவே வேண்டும்.

இன்றய நிலையில், வேறு வழி இல்லாமல், ராணுவத்தினை, சும்மா சம்பளத்தினை கொடுத்து வைத்திருக்க முடியாது என்பதால், வேறு வேலைகள் கொடுக்கிறார்கள். ராணுவத்தளபதிக்கும், கொரோனா தடுப்புக்கும் என்ன தொடர்பு? சும்மா தானே இருக்கிறாய் என்று கொடுத்து உள்ளனர். அதேபோல, வீடு கட்டுதல், ரோட்டு போடுதல் என்று செய்யினம்.

இப்ப, யோசிப்பினம், புலிகள் இருந்திருந்தால், நாம நல்லா இருந்திருப்போம், இப்படி ஆச்சுதே, நம்ம நிலைமை என்று.

Link to comment
Share on other sites

On 12/4/2021 at 18:23, satan said:

தாம் உழைத்து வளமாக வாழ்ந்த பிரதேசத்திற்கு இவர்கள் ஏன்வந்தார்கள்?  இந்த மக்களின் வீடு எப்படி உடைந்தது? யுத்தம் ஏன் வந்தது?  எதற்காக வீடு கட்டிக்கொடுக்க இராணுவம் வரவேண்டும்? யுத்தத்திற்கு முன் இராணுவத்தை கொண்டா இந்த மக்கள்  வீடு  கட்டினார்கள்? நீங்கள் உடைத்ததை  உங்கள் திட்டப்படி    கட்டுகிறீர்கள். பிச்சை போட்டதாக படம் காட்டுகிறீர்கள். நீங்கள் உடைத்தது, அழித்தது எல்லாம் நாமறிவோம், சர்வதேசமும் அறியும், ஆதாரமாக உள்ளது. இதன் பின்னால் என்ன நடக்கும் என்பதையும் நாமறிவோம். உங்கள் செயற்பாடுகளே உங்களின் கொடுமைகளுக்கு சாட்சி. 

இவ்வளவு கேள்விக்கும் சிங்களம் நேர்மையாக தனக்குள் விடை  தேடி இருந்தால்  இவ்வளவு கடன் நாட்டுக்கு வந்திருக்காது. ஒரு சிங்கபூராகவோ அல்லது அதற்கு மேலாகவோ இருந்திருக்கும். சீனா ,இந்தியா, மேற்கு நாடுகளுக்கு  அடிபணிய வேண்டிய தேவையும் இருந்திருக்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/4/2021 at 00:27, விசுகு said:

அதாவது சிறீலங்கா இராணுவத்தில் சேர்ந்தால் வீடு கிடைக்க வாய்ப்புள்ளது??

சிலருக்கு ராணுவத்தில் உள்ள நலன்சார்ந்த அமைப்புக்களால் வீடு அமைத்து கொடுக்கப்படுகிறது  ஒரு சிலர் வங்கியில் கடன் பெறுவதாக இருந்தால் கூட அரச வேலை வேண்டும் உயர்த்தரம் மேல்படிப்பை தொடர முடியாதவர்கள் வேஎறு தெரிவின்றி இராணுவம் கடற்படை விமானப்படை பொலிஸ் என்பதை தொழிலாக தெரிவு செய்கிறார்கள் அவர்களின் வயிற்று பிழைப்புக்காக அவர்களை குறை சொல்ல முடியாது அல்லவா 

On 14/4/2021 at 01:58, குமாரசாமி said:

தமிழர் பிரதேசங்களிலை இராணுவம்தான் வீடு வளவு கட்டிக்குடுக்கோணும் எண்டால் உங்கை இருக்கிற தமிழ் அரசியல்வாதிகளுக்கு என்ன வேலை? 😁

இதுவரை என்ன செய்திருக்கிறார்கள் கிணறு கொங்கிறீட் ரோட்டுக்கு றிபன் கட்டி திறக்கிறார்கள் மற்ற ஒன்றும் பெரிதாக செய்ததாக இல்லை மாறி உங்களால் தெரிவு செய்த பிள்ளையான் என்ன செய்கிரார் என கேட்பீர்கள் தேவையானவற்றை செய்து கொண்டிருக்கிறார்கள் ஆனால் முழுமையாக இன்னும் பல வருடங்கள் எடுக்கும் ஆனால் ஆட்சி மாறினால் மீண்டும் கிடப்பில் கிடந்துவிடும் 

On 14/4/2021 at 04:59, அக்னியஷ்த்ரா said:

மகிழ்ச்சி....இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக நிதர்சனம் புரிகிறது போல் .. நாம் என்னதான் உரிமை, கொள்கை, கோட்பாடு  என்று கூப்பாடு போட்டாலும் நாட்டிலிருப்பவர்கள் மூன்று வேளை சாப்பிட வேண்டும் அதற்கு கையில் பசை வேண்டும். அவர்களால் முடிந்த வகையில் அதனை தேடிக்கொள்கிறார்கள்

விளங்கினாலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் அக்னி . ஆனால் அதுதான் உண்மையும் 

15 hours ago, Nathamuni said:

முனிவர், ராணுவம் இலங்கையில் ஒரு பெரிய யானை. அந்த யானையை கட்டி தீனி போட முடியாமல் அரசாங்கம் தடுமாறுகிறது. 

பொருளாதாரம் மேலும், மோசமாகும் போது, ராணுவத்தின் அளவு குறைக்கப்படவே வேண்டும்.

இன்றய நிலையில், வேறு வழி இல்லாமல், ராணுவத்தினை, சும்மா சம்பளத்தினை கொடுத்து வைத்திருக்க முடியாது என்பதால், வேறு வேலைகள் கொடுக்கிறார்கள். ராணுவத்தளபதிக்கும், கொரோனா தடுப்புக்கும் என்ன தொடர்பு? சும்மா தானே இருக்கிறாய் என்று கொடுத்து உள்ளனர். அதேபோல, வீடு கட்டுதல், ரோட்டு போடுதல் என்று செய்யினம்.

இப்ப, யோசிப்பினம், புலிகள் இருந்திருந்தால், நாம நல்லா இருந்திருப்போம், இப்படி ஆச்சுதே, நம்ம நிலைமை என்று.

மீண்டும் இராணுவத்துக்கு ஆள் சேர்க்கப்படுகிறது ஆயிரத்துக்குமேல் பட்டவர்கள் பயிற்ச்சிக்காக காத்து இருக்கிரார்கள் கடிதம் வந்தால்  சரி இலங்கை ராணுவம் படைக்கு ஆட் களை சேர்த்துக்கொண்டுதான் இருக்கிறது இதில் காத்திருப்பவர்கள் தமிழ் இராணுவத்தினர் என்றாக் உங்களால் நம்ப முடிகிறதா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடுகளில் வாழும் சிங்கள மக்களும் இலங்கையில் உள்ளவர்களுக்கு காசு அனுப்பி அவர்களை வைத்து அலுவல்கள் பார்க்கின்றார்கள்தானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

வெளிநாடுகளில் வாழும் சிங்கள மக்களும் இலங்கையில் உள்ளவர்களுக்கு காசு அனுப்பி அவர்களை வைத்து அலுவல்கள் பார்க்கின்றார்கள்தானே.

தமிழர்கள் அனுப்பும் அளவுக்கு அவர்களால் அனுப்ப முடியாது என நினைக்கிறன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/4/2021 at 01:16, விசுகு said:

அதாவது படித்தாலும் சிறீலங்காவில் வேலையில்லை ஆனால் இராணுவத்தில் மட்டும் தாராளமாக இருக்கிறது

தற்போது இராணுவத்தில் உள்ள பல பிரிவுகளுக்கு ஆட் களை இணைக்கிறார்கள் கட்டிட வேலை , தட்ச்சு தொழில் , உடை வடிவமைப்பு ( ரெய்லர்) சாரதி , மின் இணைப்பாளர், தட்டச்சு , முகாமைத்துவ உதவியாளர்  மட்டக்களப்பில் எனது நண்பர் கோப்ரல் எனும் பதவியில் உள்ளார் அவரிடம் விசாரிச்ச போது இது போன்ற பல விடயங்களை சொன்னார் அதுமட்டும் இல்லாமல் நேர்முக பரீட்சையிலும் அவரே இருந்து நேர்முக பரீட்சையையும் நடத்தினார்.

2020 வரை பொலிசில் இணைந்த இளைஞர்களை கணக்கு பார்த்தால்  3,4 ஆயிரம் பேருக்கு கூடுதலாக இருக்கும் கொரோனா காலம் சந்தியில் நிற்கக்கூடாது வீட்ட போங்கள் என்று சொன்னார் ஒரு ராணுவம் அவரை அவரின் சிங்கள உச்ச்சரிப்பை கேட்டதும் நீங்க தமிழா என்று கேட் க ஓம் என்றார் அவர் மலையத்தை பிறப்பிடமாக கொண்டவர் . வயிற்றுப்பிழைப்பு ஆகிப்போனது இப்போது தொழில் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தனிக்காட்டு ராஜா said:

மீண்டும் இராணுவத்துக்கு ஆள் சேர்க்கப்படுகிறது ஆயிரத்துக்குமேல் பட்டவர்கள் பயிற்ச்சிக்காக காத்து இருக்கிரார்கள் கடிதம் வந்தால்  சரி இலங்கை ராணுவம் படைக்கு ஆட் களை சேர்த்துக்கொண்டுதான் இருக்கிறது

எந்த நாட்டோடு  போராடபோகினமாம் ஆள் சேர்த்து? சிங்கள  இராணுவத்துக்கெதிரான குற்றச் சாட்டுக்களை நீத்துப்போகச் செய்வதற்கான தந்திரமாக இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த மூன்று மாத காலப்பகுதியில் 1600 தமிழ் இளைஞர்கள் இராணுவத்தில் இணைந்துள்ளனர்.

Lt.-Gen.-Shavendra-Silva.jpg

கடந்த மூன்று மாத காலப் பகுதியில் யாழ் மாவட்டத்தை
சேர்ந்த 1600 தமிழ் இளைஞர்கள் இராணுவத்தில் இணைந்துள்ளனர் என இராணுவதளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
 
இன்னமும் பிரிவினைவாதத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பவர்களை நாங்கள் பார்க்கின்றோம் அந்த நிலையில் 1500 பேர் இராணுவத்தில் இணைந்துள்ளமை பெரும் வெற்றி என அவர் தெரிவித்துள்ளார்.
 
ரோனா வைரஸ் காலத்தில் படையினர் பொதுமக்களிற்கு ஆற்றிவரும் சேவையையும் அவர் பாராட்டியுள்ளார்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, satan said:

எந்த நாட்டோடு  போராடபோகினமாம் ஆள் சேர்த்து? சிங்கள  இராணுவத்துக்கெதிரான குற்றச் சாட்டுக்களை நீத்துப்போகச் செய்வதற்கான தந்திரமாக இருக்கலாம்.

எப்படித்தான் உங்களால் யோசிக்க முடிகிறதோ தெரியல இ ப்படித்தான் கனபேர்  சுத்துறாங்கள் ஒரு ராணுவ ( இலங்கை ) வீரருக்கு 22 வருடங்கள் சேவைகள் புரிய வேண்டும்  22 வருடங்கள் முடிந்த பிறகு ஓய்வு பெறலாம் யுத்தம் முடிந்து 10 ஆண்டுகளுக்கு மேலாகிறது அநேகமாக யுத்தத்தில் கலந்து சண்டையிட்டவர்கள் ஓய்வு  பெற்று இருக்கலாம்  தற்போது புதியார்கள் இணைகிறார்கள் பழய முன்னாள் ராணுவத்தினர் தளபதிகள் முக்கியமானவர்கள் மட்டும் இருக்கலாம்  ஆனால் அவர்களுக்கு நாடு தடை போடலாம் தண்டனை கொடுக்க முடியாது . 

தற்போது பல முன்னாள் இராணுவத்தினர் விலகி சொந்த வியாபாரத்திலும் சிலர் வங்கிகளில் ( ஆயுத பயிற்ச்சி எடுத்தவர்கள் ) செக்க்யுரிட்டி வேலையும் செய்யுறார்கள்  நாம  அந்த இடத்திலே நிற்கிறம் வெளியால வாங்கோ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடக்கம் ஆசிரியர்கள், நீதிபதிகள், பேராசிரியர்கள், மருத்துவர்கள், கிராம சேவைஅலுவலர் வரை அனைவருமே இலங்கை அரசாங்கத்திற்கு கூலிக்கு வேலை செய்கிறார்கள். இந்த வகையில் இலங்கை இராணுவம், இலங்கை காவல்துறை, இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படையில் இணைந்து பணியாற்றுவது ஒன்றும் குற்றம் அல்லவே. இராணுவத்தில் தமிழர்கள் ஏற்கனவே உயர் பதவியும் வகித்து உள்ளார்கள். 

வெளிநாட்டு காசு ஊரில் எல்லாருக்கும் கிடைப்பது இல்லையே. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.