Jump to content

குப்பைகொட்டுவதை தடுக்க நடராஜர் சிலை வைப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

குப்பைகொட்டுவதை தடுக்க நடராஜர் சிலை வைப்பு

 
image0-5-1-696x421.jpeg
 27 Views

யாழ்ப்பாணம் நல்லுார் – பாணங்குளம் பகுதியில் குப்பை கொட்டப்படுவதை தவிர்ப்பதற்காக நடராஜர் சிலை  ஒன்று அப்பகுதியில் வைக்கப்பட்டிருக்கின்றது.

குறித்த சிலை வைக்கப்பட்டதன் பின்னரும் அப்பகுதியில் குப்பை கொட்டப்படுவதாக தொிவிக்கப்படுகின்றது.

யாழ்.மாநகர சபைக்கு முன்பாக உள்ள வீதியில் நல்லூர் பாணாங்குளம் அமைந்துள்ளது. அதனைச் சூழ தொண்டு நிறுவனங்கள் உள்பட குடியிருப்புகள் உள்ளன.

image0-5.jpeg

இந்த நிலையில் அந்தப் பகுதியில் வெளியில் இருந்து வரும் நபர்களால் குப்பைகள் போடப்படுவதாக பல தரப்பினரிடமும் முறையிடப்பட்டது.

பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் அந்தப் பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதைத் தடுக்க முடியவில்லை. அதனால் குப்பைகள்  கொட்டப்படும் இடத்தில் திடீரென நடராஜப் பெருமானின் சிலை ஒன்று வைக்கப்பட்டது.

அந்த சிலையை இன்று அவதானிக்க முடிந்தது. எனினும் சிலை வைக்கப்பட்ட பின்பும் அந்தப் பகுதியில் குப்பைகள்  கொட்டப்படுகின்றன.

 

https://www.ilakku.org/?p=47186

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, உடையார் said:

எனினும் சிலை வைக்கப்பட்ட பின்பும் அந்தப் பகுதியில் குப்பைகள்  கொட்டப்படுகின்றன.

நல்லூருக்கு... சுற்றுலா வரும், 
சிங்களவர், முஸ்லீம்கள்  குப்பை கொட்டுகிறார்கள் போலுள்ளது. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுக்கு பிறகும் குப்பை கொட்டுவதை கூட பொறுத்துக்கொள்ளலாம் 

கொட்டுவதுக்கு குப்பை இல்லாமல் ... நடராஜர் சிலையை கொண்டுவந்து ஒரு கோமாளி 
கொட்டி இருக்கிறது என்று பேசிக்கொண்டே ... கொட்டுவதைத்தான் பொறுக்க முடியவில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை முழுவதும் இதுதான் நிலை குப்பைகளை பொது இடங்களில் கொட்டுவதும் யாரும் இல்லாத நேரத்தில் வீசி விடுவதும் பழக்கமாகி விட்டது இதில் நடராசருக்கு பார்சல் விழுந்திருக்கு  அந்தாள் ஒற்றைக்காலில் இருந்து பிரித்து அறியவேண்டியதுதான் எங்கள் பகுதியாக இருந்தால் பசளை பையில் மாட்டுக்கால் கிடந்திருக்கும் அல்லது அறுக்கப்பட்ட கோழிக்கழிவுகள் கொட்டப்பட்டிருக்கும் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.