Jump to content

தேங்காய் எண்ணெயும் இரு கோடுகளும் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தேங்காய் எண்ணெயும் இரு கோடுகளும் !
================================

ஒரு தாளில் உள்ள ஒரு கோட்டை அழிக்காமல் சிறியதாக்குவது எப்படி? இதற்கு விடை உங்களில் பலருக்கு தெரியும் என்று நான் நம்புகிறேன். இன்றைய அரசியல் சூழலிலும் இந்த இருகோடுகள் தத்துவம் பல நாடுகளில் வெற்றிகரமாக பின்பற்றப்படுகிறது. சரி, தேங்காய் எண்ணெய்க்கும் இந்த இரண்டு கோடுகளுக்கும் என்ன தொடர்பு? இந்தக் கட்டுரையின் இறுதியில் உங்களுக்கே புரியும் !

கடந்த ஒரு வாரமாக அரசியல்வாதிகள் மட்டத்திலும் மக்கள் மத்தியிலும் முக்கிய பேசுபொருளாகி இருப்பது இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய்க்குள் புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய இரசாயனம் கலந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டும் அதன் பின்னரான வாதப் பிரதிவாதங்களும்  ஆய்வுகூட அறிக்கைகளும் அவை தொடர்பாக பல்வேறு அமைச்சர்கள், அதிகாரிகளின் முன்னுக்குப் பின்னான அறிக்கைகளுமே.

அஞ்சுதல் அஞ்சாமை பேதைமை என்ற வள்ளுவன் வாக்கு என்றும் உண்மையானதே. இந்த நச்சுத்தொற்று விடயத்திலும் நாங்கள் அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவது சரியானதே. ஆனால் இந்தக் இரண்டு வார காலப்பகுதியில் தேங்காய் எண்ணெய் விவகாரம் கையாளப்படும் விதம் பல்வேறு கேள்விகளையும் எழுப்புகிறது.

முதலில் இந்த எண்ணெய் விவகாரத்தில் சொல்லப்படும் இரசாயனக் கலப்பு பற்றி சுருக்கமாகப் பார்ப்போம். Aspergillus என்ற பூஞ்சணம் (Fungi) தேங்காய் கொப்பறாவில் வளரும்போது அது aflatoxin என்ற சுரப்பை வெளியேற்றுகிறது.கொப்பறாவில் வளரும் பூஞ்சனத்தின் வகையைப் பொறுத்து B1, B2, G1 & G2 என நான்குவகையான aflatoxins இருப்பதாக விடய ஞானமுள்ளவர்கள் கூறுகிறார்கள். இந்த aflatoxins கொப்பறாவில் இருந்து எண்ணெய் தயாரிக்கும்போது அழிவடையாது எண்ணெய்க்குள்ளும் போய்விடுகிறது. குறித்த பங்கசினால் சுரக்கப்படும் இந்த நச்சுப் பதார்த்தம் நாம் தேங்காய் எண்ணெய்யை உணவுடன் பயன்படுத்தும்போது  எமது உடலுக்குள் சென்று எமது ஈரலை பாதிக்கக்கூடியதாக இருக்கிறது. இந்தப் சுரப்பு ஒரு carcinogenic பதார்த்தமாகும். அதாவது இது எமது உடலில் கான்சரை ஏற்படுத்தக்கூடியது.

ஆனால் இவ்வாறு aflatoxin உள்ள எண்ணெயை ஓரிரு தடவைகள் மட்டும் உட்கொள்வதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுவிடாது. ஆனால் தொடர்ந்து பயன்படுத்தும்போது எமது ஈரலைப் பாதித்து ஈரல் அழற்சி, மஞ்சள் காமாலை, அல்லது ஈரல் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடும். ஆனால் அதேநேரம் நீங்கள் பாவிக்கும் எண்ணெயில் உள்ள aflatoxin இன் அளவு குறைவாக இருந்தால் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தாது.

கடந்த ஒரு வாரமாக அமைச்சர்களும் ஊடகங்களும் அல்லோலகல்லோலப்படுவதைப் பார்த்தால் இந்த aflatoxin புதிதாக கண்டறியப்பட்ட ஒரு விடயமோ என்று ஒரு பொதுமகன் நினைக்கக்கூடும். ஆனால் இதில் வேடிக்கையான விடயம் என்னவென்றால், இந்த aflatoxin தேங்காய் எண்ணெயில் இருப்பதை 1980ம் ஆண்டளவிலேயே இலங்கையில் தென்னை உற்பத்திப் பொருட்கள் தோடர்பான ஆராய்ச்சி செய்தவர்கள் ஆராய்ந்து ஆய்வுக் கட்டுரைகளும் வெளியிட்டிருக்கிறார்கள். அதோடு, சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெயில் உள்ள இந்த நச்சுப் பொருளை solar radiation மூலம் சுதிகரிக்கலாம் என்பதையும் ஒரு முன்னோடி பரிசோதனை மூலம் நிரூபித்து ஆய்வுக் கட்டுரையும் சமர்ப்பித்துள்ளனர். (U. Samarajeewa, C. L. V. Jayatilaka, A. Ranjithan, T. V. Gamage & S. N. Arseculeratne). 

இந்த ஆய்வில் ஈடுபட்டவர்களில் ஒருவரான பேராசிரியர் உபாலி சமரஜீவா, தனது கருத்தை கடந்த வாரம் Island பத்திரிகையில் தனது கட்டுரையில் மீண்டும் வலியுறுத்தி உள்ளதுடன், aflatoxin உள்ள எண்ணெயை தற்போது இலங்கையில் உள்ள வசதிகளைப் பயன்படுத்தி சுத்தமாக்க முடியும் என்பதையும் சொல்லியிருக்கிறார். (இணைப்பு – கீழே comment இல்). அத்தோடு அவர் அரசின் கையாலாகத்தனத்தையும் கேலி செய்யவும் தவறவில்லை.

இதைவிட Nuwan B.Karunarathna, Chandima J.Fernando, D.M.S.Munasinghe , RuchikaFernando ஆகியோர் 2019 ஜூலை மாதம் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையில் இலங்கையில் பாவனையில் உள்ள தேங்காய் எண்ணெயில் கிட்டத்தட்ட 38% எண்ணெயில் aflatoxins இருப்பதாகவும், அதன் அளவு 2.25 to 72.70μg/kg ஆக இருப்பதாகவும் Aflatoxin B1 இன் அளவு 1.76 to 60.92 μg/kg ஆக இருப்பதாகவும் அறிக்கைப்படுத்தியுள்ளனர். மறுபுறத்தில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத் தலைவர் Dr. Anuruddha Padeniyaவும் இலங்கையில் விற்கப்படும் தேங்காய் எண்ணெயில் 80% ஆனவை சுத்தமற்றவை என்று கடந்தவாரம் Island பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளார். 

அதாவது, இந்த aflatoxin விடயம் ஒன்றும் இலங்கைக்குப் புதிய விடயம் இல்லை என்பதும், aflatoxin இன் பாதிப்பைக் குறைக்கும் சுத்திகரிப்பு வசதி இலங்கையிலேயே இருப்பதாகவும் கொள்ள முடியும். அதேநேரம் aflatoxin இன் அளவு அதிமாக இருக்கும்போதே அது உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும், அவாறு உயர்ந்த அளவில் aflatoxin அதிகம் உள்ள எண்ணெயை நீண்டகாலம் பயன்படுத்தும்போதே பாதிப்பு அதிகமாக இருக்கும் என்பதையும் புரிந்து கொள்ளலாம்.

இனி இந்த விவகாரத்தில் என்ன வில்லங்கம் இருக்கிறது என்று பார்ப்போம். 
1. இந்த விவகாரம் கடந்த ஒரு வாரமாகவே சூடு பிடித்திருந்தாலும், கடந்த மார்ச் 23ம் திகதியே All Ceylon Traditional Coconut Oil Producers’ Association ஒரு ஊடக சந்திப்பில், 13 கொள்கலன்களின் இறக்குமதி செய்யப்பட்ட பாவனைக்குதவாக தேங்காய் எண்ணெய் சந்தைக்குள் விடப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தியது. அதன் தலைவர் Buddhika De Silva இதே நச்சுப் பதார்த்தம் இறக்குமதி செய்யப்பட்ட வேறு சமையல் எண்ணெய்களிலும் இருப்பதாகக் கூறினார். இதில் கேட்கப்பட வேண்டிய கேள்வி – எந்த பரிசோதனையும் இல்லாது அவர் எப்படி இரண்டு வாரங்களுக்கு முன்னரே இந்தக் குற்றச் சாட்டை முன்வைத்தார்? எங்கிருந்து அவர் தரவுகளைப் பெற்றார்?

2. ஆரம்பத்தில் இந்தக் குற்றச்சாட்டை மறுத்த சுங்கத் திணைக்களம், தொற்று ஏற்பட்டதாக சொல்லப்படும் எண்ணெய் தங்கள் காவலிலேயே இருப்பதாகக் கூறிவந்தது. ஆனால் இந்தவாரம் வெளியிட்ட அறிக்கையில், தொற்று ஏற்பட்ட எண்ணெய் விநியோகச் சந்தைக்குள் போயிருக்கலாம் என்று சொல்லுகிறது. ஒரு பொறுப்புள்ள அரச திணைக்களம் ஏன் இவ்வாறு முன்னுக்குப் பின் முரணான கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும்?

3. சுங்கத் திணைக்களம் மேற்சொன்னபடி முரண்பட்ட கருத்தை தெரிவித்துள்ள நிலையில், அமைச்சு மட்டத்தில், இன்னமும் பாவனைக்குதவாக எண்ணெய் சந்தைக்குள் விடப்படவில்லை என்றும் கொள்கலன்கள் அனைத்தும் சுங்கத் திணைக்கள சேமிப்பு கிட்டங்கியில் இருப்பதாக தெரிவித்துள்ளது. ஆனால் சுங்கத் திணைக்கள தலைமை அதிகாரியோ எண்ணெய் கொள்கலன்கள் அவற்றை இறக்குமதி செய்த நிறுவனங்களின் கிட்டங்கிகளில் இருப்பதாகச் சொல்கிறார். ஆனால் ஏப்ரல் முதலாம் திகதி அதிகாரிகள் தம்புள்ளை வர்த்தக வலயத்தில் ஒரு எண்ணெய் கொள்கலன் கொண்ட பார ஊர்தியைகே கைப்பற்றி இருக்கிறார்கள். அதேபோல தங்கொட்டுவ பகுதியில் தரித்து நின்ற இரண்டு பார ஊர்திகளையும் மார்ச் 31 ம் திகதி போலீசார் கைப்பற்றி இருக்கிறார்கள். அப்படியென்றால் சுங்க அதிகாரி சொல்வதுதான் உண்மை என்றுதானே கருத வேண்டியுள்ளது? (April 4 – Sunday Times)

4. தம்புள்ளையிலும் தங்கொட்டுவையிலும் எண்ணெய் கொள்கலன்கள் கைப்பற்றப்பட்ட நிலையில் சுங்கத் தலைமை அதிகாரி இப்போது, எண்ணெய் இறக்குமதியாளர்கள் உண்மையில் குறித்த சுத்தமற்ற எண்ணெய்யை சந்தைக்குள் விட்டுவிட்டார்களா என்று விசாரித்து வருவதாகக் தெரிவித்துள்ளார். அப்படியென்றால் இதே அதிகாரி என்ன அடிப்படையில் கடந்த வாரம், கொள்கலன்கள் எல்லாம் தமது கட்டுப்பாட்டில் இருப்பதாகத் தெரிவித்திருந்தார்?

5. பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கத் தலைவர் உபுல் ரோகண (Upul Rohana) ஏற்கனவே இந்த Aflatoxinஉள்ள எண்ணெய் சந்தைக்குள் விடப்பட்டிருந்தால், அதை பரிசோதனைகள் மூலம் உடனடியாகக் கண்டறிவது கடினம் என்று கூறியுள்ளார். இதுவரை நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்து நூற்றுக்கு மேற்பட்ட எண்ணெய் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ள போதிலும் அவற்றின் முடிவுகளைப் பெற ஒரு மாதத்திற்கும் மேலாக காத்திருக்க நேரிடும் என்று சொல்கிறார். இதற்கு அரச ஆய்வுகூட நடைமுறைகள் மெதுவாக செயல்படுவதே காரணம் என்றும் தெரிவித்துள்ளார். (ஏப்ரல் 4ம் திகதி (Sunday Times)

6. குறித்த தொகுதியில் இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் சந்தைக்குள் விடப்பட்டு விட்டதா என்பதை கண்டறிவதில் உண்மையில் மிகப்பெரிய சிக்கல் உள்ளது. இலங்கையில் ஏற்கனவே விற்கப்படும் தேங்காய் எண்ணெயில் 80% ஆனவை சுத்தமற்றவை (அரச வைத்திய அதிகாரிகள் சங்கத் தலைவர் Dr. Anuruddha Padeniya வின் கூற்று) என்று சொல்லப்படும் நிலையில் தற்போது எடுக்கப்படும் மாதிரிகள் புதிதாக சந்தைக்கு வந்த எண்ணெயா அல்லது ஏற்கனவே சந்தையில் காணப்பட்ட Aflatoxin கலந்துள்ள எண்ணெயா என்பதைக் கண்டறிய யாரிடமும் எந்த மந்திரக் கோலும் இல்லை என்பதே யதார்த்தம். மேலும் சில அதிகாரிகள் சந்தேகிப்பதுபோல குறித்த தொகுதியில் வந்த எண்ணெய் ஏற்கனவே சந்தையில் இருந்த எண்ணெயுடன் கலக்கப்பட்டிருந்தால் Aflatoxin சதவீதம் ஆபத்தான அளவில் இல்லையென்று  பரிசோதனை முடிவில் சொல்லிவிடுவதற்கும் சந்தர்ப்பம் உள்ளது.

7. பிந்திய செய்திகளின்படி சுங்கத் திணைக்களப் பணிப்பாளர் விஜித ரவிப்ரிய (Majar General Vijitha Ravipriya) மேற்படி கொள்கலன்கள் எந்த நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டனவோ அந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படும் என்று சொல்லியுள்ளார். Aflatoxin தொடர்பாக 35 வருடங்களுக்கு முன்பிருந்தே ஆய்வு செய்த, அதனை எண்ணெயிலிருந்து நீக்கும் முறையையும் பரிசோதனை செய்த அனுபவமுள்ள பேராசிரியர் சமரஜீவ போன்றவர்கள் இந்த எண்ணெய்யை சுத்தமாக்கும் வசதிகள் இலங்கையிலேயே இருப்பதாகக் தெரிவித்துள்ள நிலையில் எதற்காக அவசரமாக இந்தக் கொள்கலன்களை அரசு திருப்பி அனுப்ப நினைக்கிறது?

8. இதைவிட இந்தத் தொகுதி எண்ணெய்க்கான அனுமதி 2016 வழங்கப்பட்டதாகவும் அந்தத் தொகுதி எண்ணெயே இந்த வருடம் இறக்குமதி செய்யப்படதாகவும் உறுதிப்படுத்தாக ஒரு செய்தியும் உலவவிடப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசு இந்தப் ஆனால் அதில் உண்மை இருக்க வாய்ப்புக் குறைவு. ஏனெனில் 2017 வழமையை விட 20% அதிகமாக 10,000 MT எண்ணெயும் 2019ம் ஆண்டு அதைவிட அதிகமாக 30,000 MT எண்ணெயும் இறக்குமதி செய்யப்படும் இருக்கும் நிலையில், 2016 நல்லாட்சி அரசினால் வழங்கப்பட்ட அனுமதியின் கீழ் இந்த வருடம் வந்த எண்ணெய்தான் இது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

இவ்வளவு வில்லங்கமான விடயங்கள் இடம்பெறுவது ஒருபுறம் இருக்க இது தொடர்பாக அரசின் பிரதிநிதிகள் தெரிவித்த கருத்துக்களை நினைவுபடுத்திப் பார்த்தால் உங்களுக்கு பெரும் ஆச்சரியம் ஏற்படும் என்பதில் ஐயமில்லை.

1. கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச - தேங்காய் எண்ணெயில் புற்றுநோயை ஏற்படுத்தும் மூலக்கூறு உள்ளதாகப் பரப்பப்படும் செய்திகளின் பின்புலத்தில் பாம் ஒயில் வர்த்தகர்களே இருக்கிறார்கள்.  பாம் ஒயில் மீது கொண்டுவரப்பட்ட தடை காரணமாகவே இவ்வாறு செய்கிறார்கள் என்று அவர் தெரிவித்தார். 

2. இளைஞர்கள், விளையாட்டு அலுவல்கள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ  - புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய தேங்காய் எண்ணெய் விவகாரம் பொய்யென்றால், அதன் பின்னணியிலுள்ள சக்திகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.

3. இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன - இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து தேங்காய் எண்ணெய் மாதிரிகளும் தரமற்றவை என இலங்கை தர கட்டளைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் உறுதிபடுத்தியுள்ளார். 

4. அமைச்சர் அருந்திக பெர்னான்டோ – சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெய் இறக்குமதி செய்யப்படுவது இனி நிறுத்தப்படும். உள்ளூரில்  தூய தேங்காய் எண்ணெய்யை உற்பத்தி செய்து  மக்கள் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

5. வர்த்தக அமைச்சர்  பந்துல குணவர்தன (மார்ச் 26) - சர்ச்சைக்குரிய தேங்காய் எண்ணெய் உள்ள சேமிப்புக் கிட்டங்கி நுகர்வோர் அதிகார சபையால் சீல் வைக்கப்பட்டுள்ளது. முறையான பரிசோதனையின் பின்னர் அனுமதி பெற்ற பின்னரே அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

6. Minister Dr. Ramesh Pathirana (March 30) – இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெயில் கான்சர் வரக்கூடிய aflatoxin இருப்பதான சதி கோட்பாடு பாம் எண்ணெய் உற்பத்தியாளர்களால் உருவாக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டை நான் நிராகரிக்கவில்லை. 

7. அமைச்சர் உதய கம்மன்பில  - குறித்த தொகுதி எண்ணெய் நான்கு கம்பனிகளாலேயே இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. ஆனால் அவை இன்னமும் சந்தையில் விடப்படவில்லை.

இந்த ஒரு தேங்காய் எண்ணெய் விவகாரம் ஒரு சாதாரண விடயம் இல்லைதான். சரியான நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியம்தான். ஆனால் இப்படி இத்தனை திணைக்களங்களும் ஆளுக்காள் வேறுவேறு கருத்துககளைச் சொல்வதும் ஏழு அமைச்சர்கள் இதுபற்றி கரிசனமாக கருத்துத் தெரிவிப்பதும் ஏன்? இதன்மூலமாக இவர்கள் எந்தப் பெரிய கோட்டை சிறியதாக்க முயற்சிக்கிறார்கள்?

அண்மையில் இலங்கை சம்பந்தப்பட்ட சில முக்கியமான விடயங்கள் உங்களுக்கு நினைவிருக்கும் என்று நம்புகிறேன்!

1. UNHRC வாக்கெடுப்பில் இலங்கைக்கு எதிராக அதிக வாக்குகள் கிடைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக அமைச்சர்கள் தமது கூட்டல் கழித்தல் திறமைகளைக் காட்டியபோதும் மக்களும் ஊடகங்களும் அரசைக் கழுவி ஊற்றிவிட்டார்கள்.

2. இலங்கை வரலாற்றில் முதல் முறையாக இலங்கை ரூபாவின் பெறுமதி தாறுமாறாக விழுந்து ஒரு அமெரிக்க டொலர் Rs.200.00 ஐத் தாண்டிவிட்டது.

3. சிங்கராஜ வனத்தில் அரச அனுசரணையோடு நடாத்தப்பட்ட காடழிப்பு, பாக்யா அபேரத்ன என்ற இளம் பெண்ணின் துணிச்சலால் வெளிக் கொணரப்பட்டு தற்போதைய அரசின் இயற்கையைப் பாதுகாக்கும் உறுதிமொழி கேள்விக்கும் கேலிக்கும் உட்படுத்தப்பட்டது.

4. நீர்கொழும்பில் வனப்பகுதியில் விளையாட்டு மைதானம் அமைக்கும் திட்டம்,  நீர்கொழும்பு நீரேரித் திட்டத்தினால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புத் தொடர்பாக வனவியல் அதிகாரி Devani Jayathikala தொடர்ந்தும் தெரிவித்துவரும் எதிர்ப்பும் அரசுக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்திருந்தது. 

5. அதேபோல சீனா அன்பளிப்பாகக் கொடுத்த 600,000 Sinapharm வக்சின்கள் தொடர்பாகவும் அதன் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாக இலங்கை மருத்துவ உலகில் அமைச்சருக்கும் மருத்துவ அதிகாரிகளுக்கும் இடையிலான இழுபறியும் இந்தக் காலப்பகுதியில்தான் நடைபெற்று வந்தது.

யோசித்துப் பாருங்கள் !! மேற்கூறிய ஐந்து விடயங்கள்தானே இரண்டு வாரங்களுக்கு முன்னர் பெரிய கோடுகளாக இருந்தன. ஆனால் இன்று? 

இன்று அதனருகே “தேங்காய் எண்ணெய் – Aflatoxin  - புற்றுநோய் – மரணம்” என்ற பெரிய கோட்டை அரசு கீற முயல்கிறதோ என்ற கேள்வி எழுகிறது. 

இந்த ஒரு விவகாரத்திற்கு தினமும் ஒரு அறிவித்தல், அடிக்கடி ஊடக சந்திப்புகள், ஏழு அமைச்சர்கள் கருத்துத் தெரிவிப்பு, அதிகாரிகள் முன்னுக்குப் பின்னான கருத்துத் தெரிவிப்பு என பெரிய கோடு கீறும் வேலைதானா  என்ற கேள்வி எழுகிறது! உங்களில் பலருக்கும் இதே கேள்விகள் எழுந்திருக்கக்கூடும் என்றே நம்புகிறேன்.

https://www.facebook.com/101881847986243/posts/304601631047596/?d=n

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • https://online.srilankaevisa.lk/ யாராவது முயற்சி செய்து பார்த்தீர்களா? எனக்கு சரிவர வேலை செய்யவில்லை.
    • சர்கரை இல்லாங்கால்லிலுப்பை அஃதுபோல் சொல் ஒன்றின்றி நகைக்க லொல். உடான்ஸ்சுவாமி உரை எவ்வாறு சர்க்கரை இல்லாதவிடத்து, இனிப்பு சுவைக்கு இலுப்பை உபயோகிக்கப்படுகிறதோ, அதே போல,  சிரிப்பதை, நகைப்பு என சொல்லால் எழுதாமல், குறியீடாக லொல் எனவும் எழுதலாம்.  
    • வீசா பெறுவது இலகுவாக்கபடுவது முக்கியம். இழுபறி கூடாது. மற்றும்படி கட்ணங்கள் சம்மந்தமாக குறை சொல்ல ஏதும் இல்லை. அது எல்லாருக்கும் பொதுவானது தானே.  ஆனால் இங்கே என்ன கவனிக்கப்படவேண்டும் என்றால் நாங்கள் வீசா பெற்று சென்று இறங்கும்போது விமானநிலையத்தில் இலங்கை குடிவரவுப்பகுதி கையூட்டு/கைவிசேடம் கேட்டு எங்களுக்கு கரைச்சல் தரக்கூடாது. 
    • ஓம்….இடையிடே இச்சையின்றி வரும் yeah, தோள் குலுக்கல், கண் மேலே உருட்டல், பிறகு கடையில் வாய்தவறி £இல் விலை கேட்பது… எதையும் 100% மறைக்க முடியாது…. ஆனால் அப்பட்டமாய் ஜொலி ஜொலித்தால்…..ஏமாறும் சதவிகிதம் எகிறும். அதே போல் வெளிநாடு என தெரிந்தாலும், ஏமாற்ற முடியாது, விசயம், விலை தெரியும் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதும் கைகொடுக்கும். எந்த வளர்முக நாட்டுக்கு போனாலும் உதவும் உத்திகள்தானே இவை.     நன்றி🙏
    • நான் இதன் மறுவளமாகவே பார்க்கிறேன். அங்கே மண்னெணை, முதல், மா, சகலதும் மானிய விலையில்தான் மக்களுக்கு தரப்படுகிறது.  ஏன் என்றால் அதை விட கூட விலைக்கு விற்றால் அந்த மக்களால் வாங்க முடியாது. அதே போலவே வடையும். அங்கே இவற்றுக்கான விலை அந்த மக்களின் வாங்கு திறனை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் நாம் ஒரு பிரிதானியா வாங்கு திறனோடு போய், இலங்கை வாங்குதிறனுக்குரிய விலையில் பொருட்களை வாங்குவது - ஒரு வகையில் அந்த மக்களிடம் அடிக்கும் கொள்ளையே. ஆனால் எம் அந்நிய செலவாணி வரவால் அதை விட அதிகம் கொடுக்கிறோம் என்பதால் நன்மையே அதிகம். இது எல்லா 3ம் உலக நாட்டுக்கும் பொருந்தும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.