Jump to content

நம்பிக்கையை இழக்காதீர்கள்! உரிமையை வென்றெடுப்போம்!! - சித்திரைப் புத்தாண்டில் சம்பந்தன்.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நம்பிக்கையை இழக்காதீர்கள்! உரிமையை வென்றெடுப்போம்!! - சித்திரைப் புத்தாண்டில் சம்பந்தன்.!

Screenshot-2021-04-14-11-33-20-514-com-a

தமிழ் மக்கள் பல துன்பங்களுக்கு மத்தியில் சித்திரைப் புத்தாண்டை வரவேற்கின்றார்கள். என்னதான் துன்பங்கள், இடையூறுகள் வந்தாலும் எமது மக்கள் தங்கள் நம்பிக்கையை இழக்கக்கூடாது. ஜனநாயக வழியில் இறுதி வரை போராடி எமக்கான உரிமைமையை நாம் வென்றெடுப்போம். இந்த நம்பிக்கையில் நாம் தொடர்ந்தும் ஓரணியில் பயணிக்க வேண்டும்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"இந்த நாடு தற்போதைய பாதையில் தொடர்ந்து பயணிக்க முடியாது. தற்போதைய பாதை பேராபத்து மிக்கது.

நாட்டில் உண்மையான நல்லிணக்கம் ஏற்படக்கூடிய வகையில் தேசிய பிரச்சினையான அரசியல் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடந்த அநீதிகளுக்கு அரசு பொறுப்புக்கூறியே ஆக வேண்டும். அந்தக் கடமையிலிருந்து அரசு விலகக்கூடாது. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நல்லுறவுகளை அரசு பேண வேண்டும். இவையெல்லாம் தவிர்க்க முடியாத கருமங்களாகும்.

உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் கொடுத்த பல வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் அரசு இன்று தத்தளிக்கின்றது. இது நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லதல்ல. விசேடமாக இந்த ஆட்சிக்கு உகந்ததல்ல.

தமிழர்களாகிய நாங்கள் நாட்டைப் பிரித்துத் தருமாறு கோரவில்லை. பிளவுபடாத ஒருமித்த நாட்டுக்குள் போதிய அதியுச்ச அதிகாரப் பகிர்வு ஏற்படுத்தப்பட்டு எங்கள் இறைமையை நாங்கள், சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் - தமிழர்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்த பிரதேசங்களில் பயன்படுத்த வேண்டும். அதுதான் எங்களுடைய கோரிக்கை.

உலகத்தில் பல்வேறு நாடுகளில் இவ்விதமான நிலைமை இருக்கின்றது. இந்த நிலைமை எமது பிரதேசங்களிலும் ஏற்பட வேண்டும் என்றே நாங்கள் கேட்கின்றோம். இதற்காக நாங்கள் கடுமையாக உழைப்போம். உழைத்துக்கொண்டிருக்கின்றோம். இந்த நோக்கம் நிறைவேறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது" - என்றார்.

http://aruvi.com/article/tam/2021/04/13/24816/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

நம்பிக்கையை இழக்காதீர்கள்! உரிமையை வென்றெடுப்போம்!! - சித்திரைப் புத்தாண்டில் சம்பந்தன்.!

அதானே.... பொழுது, விடிஞ்சிடுச்சு... ஆளை இன்னும் காணவில்லையே என்று பார்த்தன். :grin:
இவர் இல்லாமல், ஒரு புத்தாண்டா... வா தலைவா..... 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

அதானே.... பொழுது, விடிஞ்சிடுச்சு... ஆளை இன்னும் காணவில்லையே என்று பார்த்தன். :grin:
இவர் இல்லாமல், ஒரு புத்தாண்டா... வா தலைவா..... 🤣

இவரின் செய்திக்காகத்தானே காத்திருந்தீர்கள். நீங்கள் இனி ஆரம்பிக்கலாம் உங்கள் கொண்டாடட்டத்தை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வானம் பொய்க்கலாம்.....வரலாறு கூட மாறலாம்!

ஆனால், ஐயாவின் வாழ்த்துச் செய்தி மட்டும் மாறாது...!😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு நடந்த அநீதிகளுக்கு அரசு பொறுப்புக்கூறியே ஆக வேண்டும்’- இரா. சம்பந்தன்

12-8-696x392.jpg
 86 Views

“இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடந்த அநீதிகளுக்கு அரசு பொறுப்புக்கூறியே ஆக வேண்டும்“ என  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தனது புதுவருட வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

தமிழ் மக்கள் பல துன்பங்களுக்கு மத்தியில் சித்திரைப் புத்தாண்டை வரவேற்கின்றார்கள். என்னதான் துன்பங்கள், இடையூறுகள் வந்தாலும் எமது மக்கள் தங்கள் நம்பிக்கையை இழக்கக்கூடாது. ஜனநாயக வழியில் இறுதி வரை போராடி எமக்கான உரிமைமையை நாம் வென்றெடுப்போம். இந்த நம்பிக்கையில் நாம் தொடர்ந்தும் ஓரணியில் பயணிக்க வேண்டும்.

இந்த நாடு தற்போதைய பாதையில் தொடர்ந்து பயணிக்க முடியாது. தற்போதைய பாதை பேராபத்து மிக்கது.

நாட்டில் உண்மையான நல்லிணக்கம் ஏற்படக்கூடிய வகையில் தேசிய பிரச்சினையான அரசியல் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடந்த அநீதிகளுக்கு அரசு பொறுப்புக்கூறியே ஆக வேண்டும். அந்தக் கடமையிலிருந்து அரசு விலகக்கூடாது. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நல்லுறவுகளை அரசு பேண வேண்டும். இவையெல்லாம் தவிர்க்க முடியாத கருமங்களாகும்.

உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் கொடுத்த பல வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் அரசு இன்று தத்தளிக்கின்றது. இது நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லதல்ல. விசேடமாக இந்த ஆட்சிக்கு உகந்ததல்ல.

தமிழர்களாகிய நாங்கள் நாட்டைப் பிரித்துத் தருமாறு கோரவில்லை. பிளவுபடாத ஒருமித்த நாட்டுக்குள் போதிய அதியுச்ச அதிகாரப் பகிர்வு ஏற்படுத்தப்பட்டு எங்கள் இறைமையை நாங்கள், சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் – தமிழர்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்த பிரதேசங்களில் பயன்படுத்த வேண்டும். அதுதான் எங்களுடைய கோரிக்கை.

உலகத்தில் பல்வேறு நாடுகளில் இவ்விதமான நிலைமை இருக்கின்றது. இந்த நிலைமை எமது பிரதேசங்களிலும் ஏற்பட வேண்டும் என்றே நாங்கள் கேட்கின்றோம். இதற்காக நாங்கள் கடுமையாக உழைப்போம். உழைத்துக்கொண்டிருக்கின்றோம். இந்த நோக்கம் நிறைவேறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது” என்றார்

 

 

 

https://www.ilakku.org/?p=47301

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடந்த அநீதிகளுக்கு அரசு பொறுப்புக்கூறியே ஆக வேண்டும்“ என  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தனது புதுவருட வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

சரி தீபாவழிக்கு பார்ப்போம்.விடுங்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

தமிழர்களுக்கு நடந்த அநீதிகளுக்கு அரசு பொறுப்புக்கூறியே ஆக வேண்டும்’- இரா. சம்பந்தன்

நன்றி வணக்கம் மீண்டும் சந்திக்கும் வரை விடை பெறுகின்றோம். 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா சம்பந்தன் அவர்களே,


வணக்கம்,


ஐயா உங்களோடு சில கேள்விகள், நீங்கள் தமிழர்களுடைய அரசியல் சார்ந்து ஒரு நீண்ட பயணத்தில் இருக்கின்றீர்கள், மேலோட்டமாக நான் குறிப்பிடுவது நீங்கள் விடுதலைப்புலிகளின் காலத்திலும் அதற்கு முன்பும் அதோடு விடுதலைப் புலிகள் பின்பும் நீங்கள் அரசியல் தளத்தில் இருக்கின்றீர்கள்.  அதற்கு முதற்கண் உங்களுக்கு மரியாதை செய்ய வேண்டிய கடமை ஒவ்வொரு தமிழனுக்கும் உண்டு.


ஆனால் உங்களுடைய இயலாமையின், உங்களை பொறுப்பின்மை அரசியல் அல்லது  அரசியல் அரசியல் அறிவின் அறிவின் அருமை, பெருமையை உணராதவர் ஆக இருக்கின்றீர்கள்.


நீங்கள் விடுதலைப் புலிகள் தங்களுக்கான ஒரு ஆட்சி அதிகாரத்தை நிறுவ ஆயுதம் கொண்டு போராடியவர்களில் சமகாலத்தில், அவர்களுக்கு வெளியில் நின்று நீங்களும் அரசியல் ரீதியாக ஸ்ரீலங்கா அரசியலில் ஒரு அரசியல் நாடகத்தை நடத்திக்கொண்டு இருந்தீர்கள்.


அது ஏதோ;

உங்களுடைய கருத்து அல்லது செல்வாக்கு தமிழ் மக்களிடையே எடுபடவில்லை என்பதன் பால் நீங்கள் உங்களுடைய உருவை மாற்றிக் கொண்டீர்கள். அதாவது நாங்கள் இங்கே குறிப்பிடுவது உதாரணமாக நீங்கள் விடுதலைப்புலிகள் அரசியல் கருத்துகளை உள்வாங்கி ஏதோ அவர்களால் நீங்கள் முழுவதுமாக ஆட்கொள்ளப் பட்டவர்களாக காட்சி அளித்து உங்களுக்கான வருங்கால அரசியல் அங்கீகாரத்தை பெற்றுக் கொண்டீர்கள்.


அதனோடு கூட பயணித்து காலத்தில் விடுதலைப் புலிகளின் பலம் அற்றுப்போய்விட்டது. ஆனால் ஒரு சுதந்திரமான தமிழ் மக்களின் பிரதிநிதியாக நீங்கள் உங்களுடைய அரசியலை செய்வதை அடியோடு மறந்து போனீர்கள். 


உங்கள் மீது வைக்கப்படுகின்ற அதியுச்ச விமர்சனம் நீங்கள் புலிகளின் போராட்டம் ஓய்ந்த பின்னர் எவ்வகையான அரசியல் நிலைப்பாட்டை எடுத்தீர்கள் என்பதே.


பிரதான குற்றச்சாட்டு:
2009 ஆம் ஆண்டுக்கு பின் நடந்து பொறிமுறைகள் உருப்படியாக இல்லை என்பதே அதாவது நீங்கள் போராட்டத்தின் பின்பு முக்கியத்துவம் அளித்து, அளிக்கவேண்டிய சந்தர்ப்பங்கள் ஆக இருந்தது,


    அவர்களுடைய தொழில் மற்றும் தொழிலாளர்களுக்கான உடனடித் தீர்வுகளை ஆராய்ந்து கலையை செய்து     தீர்வுகளை பெற்றுக் கொடுத்து அதற்கு அவர்களுடைய மண்சார்ந்த உழவுத் தொழில் ,மீன்பிடி சிறு     கைத்தொழில்கள் அடங்கும்.


    அந்த மக்களின் சுகாதார மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்வதற்கான ஒரு விரைவான கட்டமைப்பை     அமைக்காமல் விட்டது.


    அவர்களுடைய கல்வி சம்பந்தமான தேவைகள் கல்வி,கல்வி கற்பதற்குரிய வசதிகளை ஏற்படுத்தி     கொடுக்காமல் விட்டது.


    அவசர வீடமைப்புத் திட்டங்களை ஏன் அல்லது உங்களால் பரிந்துரைக்கப்பட வேண்டி இருந்த வீட்டு     சேவைகள் அல்லது குடியிருப்பு சம்பந்தமான திட்டங்களை நீங்கள் உருவாக்கவில்லை.


    போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு தெளிவான கட்டுமானங்களையும்

    அதாவது அவர்களுடைய நிலங்களை பெற்றுக்கொள்ளுதல் அல்லது மீள் குடியேற்றங்கள் , குடியேறுதல்     சம்பந்தமான ஒரு தெளிவான கட்டமைப்பை உருவாக்கி வைத்துக் கொள்ளவில்லை அல்லது அதனை     எதிர்த்தரப்பு பரிந்துரைக்கவில்லை.


    உங்களுடைய தேவைகள் எதுவென்பதை உங்களால் புரிந்து கொள்ளாமல் விட்டு அது பாரிய நெருக்கடியை     தமிழ் மக்களுக்கு உருவாக்கித் தந்தது, வெளிநாடுகள், வெளிநாடு துறை சார்ந்த     நிறுவனங்களுக்கு     உங்களுடைய தேவைகளை உங்களால் ஆணித்தரமாக எடுத்து வைக்க முடியவில்லை.


அதற்குரிய காரணங்களாக பெரும்பாலானவர்கள் எடுத்துரைப்பது,


    உங்களுக்கு அரசியல் வெற்றி அல்லது இருக்கை என்பதே இலக்கு.


    அல்லது ஸ்ரீலங்கா அரசோடு ஒரு மறைமுகமான இணங்கி கடந்து போதல். 


    அது ஸ்ரீலங்காவை வரும் நாட்களில் அல்லது கடந்து போன நாட்களில் வெளிநாட்டு அமைப்புகளில் இருந்து     வருகின்ற அச்சுறுத்தல்கள் அதாவது மனித உரிமைகள் மற்றும் ஒடுக்கப்பட்டோர் நலன் சார்ந்து போராடும்     அமைப்புகளை சாந்தப்படுத்துவது.


    உங்களை ஒரு அடையாளமாக காட்டிக்கொள்ள விட்டமை.


    இலங்கை தமிழர்களின் புனர்வாழ்வு அல்லது அவர்களின் நலனில் எள்ளளவும் அக்கறையற்ற மறைமுக     ஒடுக்குமுறைகளை தூண்ட நினைக்கின்ற இந்திய அரசோடு நட்போடு இருத்தல். 


அதன் பின்னணி கருதும்,சில எடுகோள்கள்:
     நீங்கள் திரு சுமந்திரன் அவர்களே தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு உள் வாங்கினீர்கள். திரு சுமந்திரனுக்கும் அரசியலுக்கும் அதாவது தமிழர் அரசியலுக்கும் மிகத் தொலைவு. நீங்கள் இந்தியாவின் அறிவுறுத்தலின்படி ராஜபக்ஷே களின் ஆணைப்படி திரு சுமந்திரனை தமிழ்தேசியகூட்டமைப்புக்கு கொண்டு வந்தீர்கள்.


    திரு கோட்டாபய ராஜபக்ச, திரு சுமந்திரன் அவர்கள் ( Madras University) மெட்ராஸ் யுனிவர்சிட்டி பழைய மாணவர்கள். அவர்களை ஒருசேர தங்களின் மேலாண்மையை தக்கவைப்பது இந்தியாவால் உயர்சாதி வகுப்பாக தங்களை அடையாளப்படுத்தும் ஒரு குழுவினர். அவர்களின் பரவல் தமிழ்நாட்டிலும் இந்திய மத்திய அரசிடம் இருந்துகொண்டு தமிழர்கள் அனைவரையும் கட்டுப்படுத்தி ஒன்றுமில்லாமல் ஆக்கச் செய்துகொண்டிருப்பது அவர்களது வேலை. நடப்பதை தெளிவாக உங்களுக்கு  கூறுகின்றோம்.


    அடுத்து பின்னாளில் உங்களிடம் சேர்க்கையாக வந்து சேர்ந்தவர் திரு ஸ்ரீதரன் அவர்கள். 


அவர்கள் உங்களின் ஒரு இல்லா தன்மைக்காக காத்துக்கிடக்கும் விச கிருமிகள். நீங்கள் விட்டுச்செல்ல போகின்ற அந்த ஸ்ரீலங்கா, இந்திய அழு வருடிகள் மீண்டும் அவர்கள் எவ்வாறு தமிழரை மீண்டும் ஒரு இக்கட்டான அடிமைப்பட்ட தரத்துக்கு, தளத்துக்கு கொண்டு செல்லப் போகிறார்கள் என்பதை கவனமாக கவனியுங்கள்.


    போராட்டத்தின் ஓய்வுக்குப் பின் புலன்பெயர் தமிழர்களையும் உள்நாட்டு தமிழர்களையும் ஏதோ ஒரு விதத்தில் கட்டுப்படுத்திய கவர்ந்த ஊடகமாக திரு சிறிதரனின் சகோதரன் , திரு குகன் அவர்களின் தனிப்பட்ட ஊடகங்கள் பெரும் பங்கு ஆற்றின.
             அதை பின்னாளில் ஐபிசி (IBC)  என்கின்ற குழுமம் அதாவது திரு பாஸ்கரன் என்பவரால் கொள்வனவு செய்யப்படுகிறது. அது போராட்டத்தின் பின் இலகுவாக இலங்கையிலும் கால் பதிக்கிறது. இலங்கை அரசின் பூரண ஒத்துழைப்போடு அது பல கட்டமைப்புகளை உருவாக்கி உள்ளது. எப்பொழுதுமே ஊடகங்களை தடை செய்கின்ற அரசு, ஐபிசி (IBC) எந்தத் தடையும் கொடுக்கவில்லை அதற்கு மாறாக, அவர் அறிவுறுத்தப்பட்டது போல் ஒரு மனிதனுடைய எவ்வளவு தனிப்பட்ட தகவல்கள், ஒரு சமுதாயம் சார்ந்து இரகசியமாக பேணப்படும் அதனைத் தாண்டி அங்கே பாதிக்கப்பட்டவர்களின், தந்திரமாக உதவி என்ற பெயரின் அடிப்படையில் தனது ஊடகங்களில் பிரசுரித்தார்.


    அவர்களுக்குத் (IBC) தெரியும் ஒரு தனி மனிதனுடைய ரகசியமும், வாழ்க்கை முறையும் எவ்வாறு பாதுகாக்க பட வேண்டும் என்பது. அவர்கள் உதவி செய்ய எத்தனையோ படிமுறைகள், வழிமுறைகள் இருப்பது எல்லோருக்கும் தெரியும். 


இவர்கள் வேலை கூட்டாகச் சேர்ந்து தகவல்களை சேகரித்து இந்திய, இலங்கை அரசுகளுக்கு அல்லது கொள்கை வகுப்பாளர்களுக்கு அந்தப் பேதை மனிதர்களின் இயலாமையை தெரியப்படுத்தி விடுதல். அதன்பால் கிடைக்கின்ற தகவல்களை வைத்து, தங்களுக்கான கொள்கைகளை வகுத்து தமிழர்களின் அரசியல்  இருப்பை தகமை படுத்துதல்.


உங்களிடம் தயவாக கூறுவது நீங்கள் அரசியலில் ஓய்வு எடுக்கும் காலம் வந்துவிட்டது. தமிழர்கள்  தங்களுடைய அரசியல் பிரதிநிதிகள் யார் என்பதை தாங்களாகவே உணர்வார்கள். தயவுசெய்து நீங்கள் ஓய்வாக இருங்கள்.
நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா, ஓய்வாகத்தானே பல காலமாக இருக்கின்றார். மேலும், எப்ப அவரும் கூட்டமைப்பும் சொந்தமாக சிந்தித்து வேலை செய்தவர்கள்?

spacer.png

 


spacer.png

spacer.png

spacer.png


spacer.png

spacer.png

 

 

Link to comment
Share on other sites

 

Quote

நம்பிக்கையை இழக்காதீர்கள்! உரிமையை வென்றெடுப்போம்!! - சித்திரைப் புத்தாண்டில் சம்பந்தன்.!

 

வருச பிறப்பு நாளில் கடுப்பு ஏத்திரிங்கள் மை லார்ட்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் இவர்ர கருத்துக்கு பதில் எழுதுவர்களை நிநைக்த்தான் கடுப்பு ஏறுது மை லார்ட்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு துடப்ப கட்டையை TNA  சார்பில் தேர்தலில் நிக்க வைத்தாலும் வெல்லும் என்று இன்னும் கனவில் இருக்கிறார் போல் உள்ளது . ஒரு ஜனநாயக தேர்தலில் நம்பிக்கை கொண்ட தமிழ் மக்களை இவ்வளவு இழிவாக முட்டாள்கள் என  சிங்கள கட்சிகள்  கூட எண்ணியதில்லை . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, zuma said:

வருச பிறப்பு நாளில் கடுப்பு ஏத்திரிங்கள் மை லார்ட்.

என்னாது ....உங்களுக்கே கடுப்பாக இருக்குதோ, 
ஐயாவிற்கு  இதைவிடகேவலமான,வெட்கக்கேடான விடையமுண்டோ, கூத்தாடிகள் கூத்தைப்பார்த்து  கோ.ப.செக்களே கடுப்பாகுறினம்  

10 hours ago, கிருபன் said:

ஐயா, ஓய்வாகத்தானே பல காலமாக இருக்கின்றார். மேலும், எப்ப அவரும் கூட்டமைப்பும் சொந்தமாக சிந்தித்து வேலை செய்தவர்கள்?

என்ன கிருபண்ணை 
இப்படி ஆயிட்டீங்கோ , ஐயா முன்னோக்கி பாயப்போறார் என்று நீங்க காட்டிய பில்டப்பை பார்த்து நாங்கள் பயந்து நடுநடுங்கிபோய் கிடக்க, ஐயாவோ பழைய சாண(ணி)க்கிய தனத்தை மீண்டும் கிளறி உங்களுக்கும் பிரஷர் எத்திறார் போல, 

ஐயா எம காதகன் அவர் போவதற்கு முன் கனபேருக்கு பிரஷர் சூட்அப் பண்ணி முன்னமே அனுப்பிவைத்துவிட்டுதான் பெட்டியை காட்டுவார் போல கிடக்கு       

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அக்னியஷ்த்ரா said:

என்ன கிருபண்ணை 
இப்படி ஆயிட்டீங்கோ , ஐயா முன்னோக்கி பாயப்போறார் என்று நீங்க காட்டிய பில்டப்பை பார்த்து நாங்கள் பயந்து நடுநடுங்கிபோய் கிடக்க, ஐயாவோ பழைய சாண(ணி)க்கிய தனத்தை மீண்டும் கிளறி உங்களுக்கும் பிரஷர் எத்திறார் போல, 

ஐயா எம காதகன் அவர் போவதற்கு முன் கனபேருக்கு பிரஷர் சூட்அப் பண்ணி முன்னமே அனுப்பிவைத்துவிட்டுதான் பெட்டியை காட்டுவார் போல கிடக்கு

ஐயாவையோ, கூட்டமைப்பையோ ஒரு நாளும் நம்பியதில்லை. 😀

ஆனால், கூட்டமைப்பை விட மற்றவர்கள் (கஜேன்&கஜன், விக்கியர், புள்ளையான் எக்ஸட்ரா) இன்னும் ஆபத்தானவர்கள்! 

மொத்தத்தில் தூரநோக்கில் சிந்தித்து செயற்படுபவர்கள் இப்போதைய அரசியல் தலைமைகளில் இல்லை. ஆனால் எதிர்காலத்தில் வருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

மொத்தத்தில் தூரநோக்கில் சிந்தித்து செயற்படுபவர்கள் இப்போதைய அரசியல் தலைமைகளில் இல்லை. ஆனால் எதிர்காலத்தில் வருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கு!

Vadivelu How Do IDell U GIF - Vadivelu HowDoIDellU Tamil - Discover & Share  GIFs | Funny gif, Comedy memes, Cute gif

கொஞ்சம் ஓவரா தெரியல்லைசாமி உங்களுக்கே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

கொஞ்சம் ஓவரா தெரியல்லைசாமி உங்களுக்கே

கண் முன் அநீதியும், அடக்குமுறைகளும் நிகழும் போது “இதனால் எனக்கு ஆபத்தில்லையே” என யோசிக்கும் ஒரு தலைமுறை வளர்ந்துவருவது உண்மைதான். ஆனால், அரசியல் ரீதியாக விழிப்புணர்வு கொண்டுள்ள இளைஞர்களில் இருந்து சரியானவர்கள் வருவார்கள்.  இப்போது முதியோர்களாக இருக்கும் தலைவர்கள், அடுத்த நிலை தலைவர்களையோ, அல்லது இளைஞர்களையோ வளர்ப்பதாகத் தெரியவில்லை. அப்படி யாராவது வளர வெளிக்கிட்டாலும் தமது இருப்புக்கு ஆபத்து என்று ஒதுக்க ஆரம்பித்துவிடுவார்கள். ஒரு சங்கிலித் தொடர்ச்சியான தலைமை இல்லாததால், இந்த முதியோர்களின் காலம் முடியும்போது திறமையுள்ளவர்கள் தலைவர்கள் ஆவார்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கிருபன் said:

கண் முன் அநீதியும், அடக்குமுறைகளும் நிகழும் போது “இதனால் எனக்கு ஆபத்தில்லையே” என யோசிக்கும் ஒரு தலைமுறை வளர்ந்துவருவது உண்மைதான். ஆனால், அரசியல் ரீதியாக விழிப்புணர்வு கொண்டுள்ள இளைஞர்களில் இருந்து சரியானவர்கள் வருவார்கள்.  இப்போது முதியோர்களாக இருக்கும் தலைவர்கள், அடுத்த நிலை தலைவர்களையோ, அல்லது இளைஞர்களையோ வளர்ப்பதாகத் தெரியவில்லை. அப்படி யாராவது வளர வெளிக்கிட்டாலும் தமது இருப்புக்கு ஆபத்து என்று ஒதுக்க ஆரம்பித்துவிடுவார்கள். ஒரு சங்கிலித் தொடர்ச்சியான தலைமை இல்லாததால், இந்த முதியோர்களின் காலம் முடியும்போது திறமையுள்ளவர்கள் தலைவர்கள் ஆவார்கள்!

இலவு காத்த கிளி பழமொழி தான் எனக்கு நியாபகம் வருகிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, பெருமாள் said:

ஒரு துடப்ப கட்டையை TNA  சார்பில் தேர்தலில் நிக்க வைத்தாலும் வெல்லும் என்று இன்னும் கனவில் இருக்கிறார் போல் உள்ளது . ஒரு ஜனநாயக தேர்தலில் நம்பிக்கை கொண்ட தமிழ் மக்களை இவ்வளவு இழிவாக முட்டாள்கள் என  சிங்கள கட்சிகள்  கூட எண்ணியதில்லை . 

ஆனால் தமிழருக்கு அதை விட வேறு வழி இல்லை இதுவரை??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ஈழப்பிரியன் said:

சரி தீபாவழிக்கு பார்ப்போம்.விடுங்க.

ஐயா தீபாவளிக்கு வாயே திறக்க மாட்டாரே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, satan said:

ஐயா தீபாவளிக்கு வாயே திறக்க மாட்டாரே.

வருடம் வருடம் வாறதாலை எந்த தீபாவளி என்று கொஞ்சம் தடுமாற்றம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, கிருபன் said:

ஐயா, ஓய்வாகத்தானே பல காலமாக இருக்கின்றார். மேலும், எப்ப அவரும் கூட்டமைப்பும் சொந்தமாக சிந்தித்து வேலை செய்தவர்கள்?

spacer.png

 


spacer.png

spacer.png

spacer.png


spacer.png

spacer.png

 

 

நன்றி கிருபா,

என்னால்  படங்களை இணைக்க முடியவில்லை. உங்களுடைய நிர்வாகம் அதற்குரிய பிரிவிலிஜ் (privilege) தரவில்லை.

21 hours ago, பெருமாள் said:

ஒரு துடப்ப கட்டையை TNA  சார்பில் தேர்தலில் நிக்க வைத்தாலும் வெல்லும் என்று இன்னும் கனவில் இருக்கிறார் போல் உள்ளது . ஒரு ஜனநாயக தேர்தலில் நம்பிக்கை கொண்ட தமிழ் மக்களை இவ்வளவு இழிவாக முட்டாள்கள் என  சிங்கள கட்சிகள்  கூட எண்ணியதில்லை . 

அவர்களின் நோக்கம் TNA என்பது முழுக்க முழுக்க தமிழரசுக் கட்சியினால் ஆளப்பட வேண்டும். இதர கட்சிகளும் தமிழரசுக் கட்சியுடன் ஒட்டியிருக்க வேண்டும் என்ற ஒரு வரையறை செய்யப்படாத சண்டித்தனம் செய்வதாக அறிந்தோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விசுகு said:

ஆனால் தமிழருக்கு அதை விட வேறு வழி இல்லை இதுவரை??

அதுதான் நாங்கள் எல்லாரும் கூட்டாக சேர்ந்து விடுகின்ற ஒரு மாபெரும் தப்பு, எல்லோரும் ஓரணியில் ஒத்த கருத்துடன் அவர்களுக்கு தெரியப்படுத்தினால் அவர்கள் சற்று சிந்திப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, கிருபன் said:

மொத்தத்தில் தூரநோக்கில் சிந்தித்து செயற்படுபவர்கள் இப்போதைய அரசியல் தலைமைகளில் இல்லை. ஆனால் எதிர்காலத்தில் வருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கு!

அம்பிகா அன்ரி வடிவில் என்று சொல்லாமல் சொல்லுறீங்கோ ....
அன்ரியோட பல்லு கொஞ்சம் எடுப்பாகவும் மூக்கு கொஞ்சம் புடைப்பாக இருப்பதாலும் நிச்சயம் தமிழ் மக்களுக்கு தீர்வு உறுதி   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, அக்னியஷ்த்ரா said:

அம்பிகா அன்ரி வடிவில் என்று சொல்லாமல் சொல்லுறீங்கோ ....
அன்ரியோட பல்லு கொஞ்சம் எடுப்பாகவும் மூக்கு கொஞ்சம் புடைப்பாக இருப்பதாலும் நிச்சயம் தமிழ் மக்களுக்கு தீர்வு உறுதி   

அரசியலில் தமிழ் பெண்கள் ஈடுபட முயல்வது எவ்வளவு கஷ்டம் என்பதை கடந்த பொதுத்தேர்தலில் பார்த்தோமே. சமூகவலைத் தளங்களில் யாரும் யாரையும் சேறடிக்கலாம் என்ற நிலை இருக்கும்போது, பெண்களின் நிலை இன்னும் பரிதாபம்தான். ஆண்களின் மூக்கையோ, தொந்தியையோ, வழுக்கையையோ யாரும் கண்டுகொள்வதில்லை. ஆனால் பெண் என்றால், போடும் உடுப்பு, கையில் வைத்திருக்கும் ஹாண்ட்பாக், மேக்கப், பக்கத்தில் நிற்பவர் என்று எல்லாவற்றிலும் கவனம் வந்துசேரும். 

அம்பிகா அன்ரி இது எல்லாத்தையும் கண்டுகொள்ளாமல் இருந்தால் எதிர்காலத்தில் நல்ல தலைவராகவும் வரலாம்😀

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.