Jump to content

மணிவண்ணன் ஏன் கைது செய்யப்பட்டார்? ஏன் விடுவிக்கப்பட்டார்? - நிலாந்தன்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

மணிவண்ணன் ஏன் கைது செய்யப்பட்டார்? ஏன் விடுவிக்கப்பட்டார்? - நிலாந்தன்

 

1FAB09B8-7083-43B8-B14E-881CB77B3B8F.jpe

நிலாந்தன்

“அனந்தி தேர்தலில் முதல்முறையாக போட்டியிட்டபோது ராணுவம் அவரது வீட்டில் தாக்குதல் நடத்தியது ஞாபகம் வருகிறது……”

இவ்வாறு தனது முகநூல் பக்கத்தில் எழுதியிருப்பவர் டாண் டிவியின் அதிபர் குகநாதன். முக்கியமான அரசியல் விவகாரங்களின்போது கொடுப்புக்குள் சிரித்தபடி அவர் இவ்வாறு தெரிவிக்கும் பூடகமான கருத்துக்களில் பல அர்த்தங்கள் மறைந்திருப்பதுண்டு. மேற்கண்டவாறு அவர் பதிவிட்டது மணிவண்ணன் கைது செய்யப்பட்ட அன்று. இதன் மூலம் அவர் என்ன கூற வருகிறார்? மணிவண்ணனை கைது செய்ததன்மூலம் இலங்கை அரசாங்கம் அவருடைய இமேஜை உயர்த்தி இருக்கிறது. இது எதிர்காலத்தில் மாகாண சபை தேர்தலில் சில தரப்புக்கள் அவரை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவதற்கு தேவையான அடிப்படைகளை உருவாக்கிக் கொடுக்கும் என்ற பொருள்பட அவர் அவ்வாறு கூறி இருக்கிறாரா? அதாவது மணிவண்ணனின் பிம்பத்தை உயர்த்த அரசாங்கம் விரும்புகிறது என்று பொருள்.

 

இருக்கலாம் ஆனால் மணிவண்ணன் கைது செய்யப்பட்டமை என்பது அரசாங்கம் வேண்டுமென்றே திட்டமிட்டு மேற்கொண்ட ஒரு நடவடிக்கையா? என்ற கேள்விக்கு விடை இங்கு முக்கியம்.

அது ஒரு நாடகம் என்று எடுத்துக் கொண்டால் அந்த நாடகத்துக்கு எதிர்வினை ஆற்றிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்; எனைய சிங்கள கட்சிகளை சேர்ந்த அரசியல்வாதிகள் ; புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் நாடுகளில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள்; மற்றும் வெள்ளைக்கார அரசியல்வாதிகள் ;அரசியல் செயற்பாட்டாளர்கள் ;அதிலும் குறிப்பாக அமெரிக்க கண்டத்தை சேர்ந்த சில மாநகர சபைகளின் வெள்ளைகார முதல்வர்கள்; இவர்களோடு இலங்கையிலுள்ள அமெரிக்க தூதுவர் உட்பட ராஜதந்திரிகள் போன்ற அனைவரும்
இதுவிடயத்தில் கருத்துக் கூறப்போய் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா?

அல்லது மணிவண்ணனின் விவகாரத்தை அரசாங்கம் இலேசாக எடுத்துக் கொண்டு கைது செய்யப் போய் அதற்கு உலக அளவில் எதிர்வினை வந்ததும் இதற்குமேலும் அவரை உள்ளே வைத்திருந்தால் அது அவரின் இமேஜை உயர்த்தும் என்று கணித்து பிடித்த அன்றே அவரை விடுதலை செய்தது என்ற வாதம்தான் சரியா?

ஆனால் இந்த இடத்தில் மேலும் சில கேள்விகளை எழுப்ப வேண்டும். மணிவண்ணனின் இமேஜை உயர்த்துவதால் யார் யாருக்கு லாபம்? அரசாங்கத்துக்கு இதில் என்ன லாபம்? அவர் எதிர்காலத்தில் வட மாகாண முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவதால் அரசாங்கம் என்ன நன்மை அடையும் ? அல்லது இக்கேள்வியை மறுவளமாகக் கேட்கலாம் அவரை அவ்வாறு முதலமைச்சர் வேட்பாளராக முன்நிறுத்த எந்த தரப்பு தயார்?

கடந்த ஞாயிற்றுக்கிழமை என்னை பேட்டி கண்ட கப்பிட்டல் டிவியின் ஊடகவியலாளர்கள் இதுதொடர்பில் ஒரு கேள்வி கேட்டார்கள். உத்தியோகப்பற்றற்ற தகவல்களை நம்பி ஆய்வுகளைச் செய்ய முடியாது என்று அவர்களுக்குச் சொன்னேன்.

மணிவண்ணனை அவ்வாறு முதலமைச்சர் வேட்பாளராக தெரிந்தெடுக்கப்போவதாக தாங்கள் எங்கேயும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என்று விக்னேஸ்வரனின் கட்சியைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள். அதேசமயம் சுமந்திரன் அணியே அவரை அவ்வாறு முன்நிறுத்த முயற்சிகிறார் என்ற ஒரு ஊகம் யாழ்பாணத்திலும் கொழும்பிலும் பரவலாக உண்டு.

 

சுமந்திரனுக்கும் மாவைக்கும் இடையிலான பனிப்போரின் பின்னணியிலேயே இவ்வாறான ஊகங்கள் வெளிக் கிளம்புகின்றன. அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக மாவை நிற்பதை தடுக்கும் நோக்கத்தோடு சுமந்திரன் அவ்வாறு ஒரு பொது வேட்பாளரை முன்னிறுத்த முயற்சிப்பதாக ஊடகங்கள் ஊகிக்கின்றன. ஏற்கனவே சுமந்திரன் ஒரு ஓய்வு பெற்ற அரச அதிபரை அவ்வாறு முன்னிறுத்த யோசித்திருந்ததாக தகவல்கள் வெளிவந்தன.

கடந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளில் மாவை தோற்றதும் அவருடைய இடத்தை பிடிப்பதற்கு சுமந்திரனும் சிறிதரனும் முயற்சித்தார்கள். கூட்டமைப்பின் நியமன உறுப்பினர் விடயத்திலும் கலையரசனை தெரிவு செய்ததன்மூலம் சுமந்திரன் மாவையை மிகவும் சாதுரியமாக ஓரங்கட்டினார். அதற்கு பின்னரும் சுமந்திரன் மாவையை ஓரம் கட்டும் விதத்தில் நுட்பமாக காய்களை நகர்த்தினார். மாவை கூடும் கூட்டங்களில் சுமந்திரனும் போய்க் குந்திக்கொண்டிருந்தார். இதுவிடயத்தில் மாவையை விடவும் சுமந்திரனிடம் தந்திரங்களும் நெளிவு சுளிவுகளும் தலைமைத்துவப் பண்பும் ஒப்பீட்டளவில் அதிகம் என்பதை இங்கே சுட்டிக்காட்ட வேண்டும்.

ஆனாலும் சுமந்திரன் திட்டமிட்டது போல மாவையை முழுவதுமாக ஓரங்கட்ட முடியவில்லை. சுமந்திரனின் நகர்வுகளுக்கு பின்னரும் மாவை ஒப்பீட்டளவில் பலமாகவே காணப்படுகிறார். அதற்கு காரணம் மாவையின் தலைமைத்துவ பண்பு அல்ல.அவரிடம் அப்படி ஒன்றும் கிடையாது. மாவை தமிழரசுக் கட்சியின் தலைவராக நீடித்திருப்பது என்பது முதலாவதாக அக்கட்சியின் பாரம்பரியத்தின் பாற்பட்டது எனலாம். இரண்டாவதாக மாவையின் மூப்பின் அடிப்படையிலானது எனலாம். மூன்றாவதாக அவர் தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வந்ததும் ஒரு காரணம்.ஆனால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவர் தோல்வியுற்றதும் அவருடைய பதவி ஆட்டம் காணத் தொடங்கியது. ஏனென்றால் மாவை என்றைக்குமே தனது தலைமைத்துவ பண்பை நிரூபித்திருக்கவில்லை. கடந்த வடமாகாண சபைத் தேர்தலின்போது மாவை இருக்கத்தக்கதாக சம்பந்தர் விக்னேஸ்வரனை உள்ளிறக்கியதும் அதனால்தான். தனது நிலைப்பாட்டை நியாயப்படுத்த சம்பந்தர் அதிக நேரம் பாடுபட்டார். மாவையை ஓரங்கட்டி விக்னேஸ்வரன் உள்ளிறக்கப்பட்டமை என்பது மாவையின் சொந்தக் கட்சியே அவரிடம் தலைமைத்துவ பண்பு இல்லை என்று நம்புவதைக் காட்டவில்லையா?

அந்த நிலைமை இப்பொழுதும் உண்டு. ஆனாலும் எல்லாரையும் அரவணைத்துப் போகும் சுபாவம் மாவையை பாதுகாத்தது. சுமந்திரனை குறித்து கட்சிக்குள்ளேயே ஏற்பட்ட அதிருப்தி அவருக்கு அணியைத் திரட்டி கொடுத்தது. கட்சியின் தோல்விக்கு சுமந்திரன் காரணம் என்று கருதியவர்களும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியுற்றவர்களும் அவரோடு அணி சேர்ந்தார்கள். இவை எல்லாவற்றுக்கும் அப்பால் தமிழரசுக்கட்சியின் மிகப் பலமான அடித்தளம்தான் மாவையின் பலம். பல தசாப்தகால பாரம்பரியத்தை கொண்ட ஒரு கட்சி என்ற அடிப்படையில் அதன் தலைவராக அவர் தொடர்ந்தும் தன்னை பாதுகாத்துக் கொள்ளக் கூடியதாக இருக்கிறது. அவரிடம் தலைமைத்துவப் பண்பு இல்லை என்ற போதிலும் கட்சியின் பலம் அவரை பாதுகாக்கின்றது. அதுதான் சுமந்திரனுக்கும் பிரச்சினை. சுமந்திரன் அவர் நினைத்தபடி பாவையை வெட்டி ஓட முடியாதிருக்கிறது .வரக்கூடிய மாகாணசபைத் தேர்தலிலும் சுமந்திரன் தனது விருப்பங்களை நிறைவேற்ற அதுதான் தடையும்.

அதனால்தான் சுமந்திரன் வெளியிலிருந்து பொது வேட்பாளர்களை கொண்டுவர முயற்சிப்பதாக ஒரு ஊகம் பரவலாக நிலவுகிறது. ஆனால் இது விடயத்தில் சுமந்திரனால் விக்னேஸ்வரனை கூட்டுச்சேர்க்க முடியும் என்று தோன்றவில்லை. ஒரு முதலமைச்சராக வரும் தகுதி மாவைக்கிருப்பதாகக் விக்னேஸ்வரன் கருதவில்லை.ஆனால் அதற்காக சுமந்திரனின் பொது வேட்பாளரை அவர் ஏற்றுகொள்வார் என்று எங்கேயும் வெளிப்படையாகக் கூறியிருக்கவில்லை. கூட்டமைப்புக்கு உள்ளேயும் குறிப்பாக தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் அவ்வாறு வெளியிலிருந்து ஒரு வேட்பாளரை இறக்க ஒப்புக் கொள்வார்களா என்று தெரியவில்லை. எனவே சுமந்திரன் திட்டமிடுவது போல கட்சிக்கு வெளியிலிருந்து ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக இறக்குவதற்கு தமிழரசுக் கட்சியோ அல்லது கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளோ ஒத்துக்கொள்ளுமா என்பது சந்தேகமே.

எனவே மணிவண்ணனை கைது செய்த அன்றே அரசாங்கம் விடுவித்ததை வைத்தும் சுமந்திரன் தலைமையிலான வழக்கறிஞர்கள் அவரை பிணையில் விடுவித்தமை என்பதை வைத்தும் கூட்டிக் கழித்து ஒரு கணக்குப் போட்டு அடுத்த மாகாணசபை தேர்தலோடு அக்கணக்கின் முடிவை முடிச்சுப் போடுவது என்பது காலத்தால் முந்தியது பொருத்தமற்றது என்றே இப்பொழுது தோன்றுகிறது.

அரசாங்கம் தனது தனிச்சிங்கள வாக்காளர்களை திருப்திப்படுத்தும் நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் மணிவண்ணனை கைது செய்தது. ஆனால் நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் அதற்கு வந்த எதிர்ப்பை கண்டு அரசாங்கம் தன் முடிவை மாற்றியிருக்கலாம். மேலும் அவருக்கு எதிரான குற்றச்சாட்டு பலவீனமானது என்று அரசாங்கம் கருதியிருக்கலாம். எனவே இது விடயத்தில் மணிவண்ணனை விடுவிக்கக்கோரி நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்து வந்த கோரிக்கைகளை கூட்டிக் கழித்துப் பார்த்த அரசாங்கம் இதன்மூலம் மணிவண்ணனின் இமேஜ் மேலும் உயரலாம் என்று கருதி அவரை பிடித்த அன்றே விடுதலை செய்திருக்கலாம். அவரை விடுவிப்பது என்று தீர்மானித்ததின் அடிப்படையில் அவர்மீது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடுக்காமலும் விட்டிருக்கலாம்.கடந்த 12 ஆண்டு கால தமிழ் மிதவாத அரசியல் பரப்பில் மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட ஒருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டமை இதுதான் முதற்தடவை. இதன்மூலம் மணிவண்ணனின் செல்வாக்கு அதிகரித்திருக்கிறது என்பதே சரி. அவரை கைது செய்யப் போய் அரசாங்கம் அவரை பலப்படுத்தி இருக்கிறது என்பதே உண்மை. அதுதான் மற்றவர்கள் அதை வைத்து ஊகிப்பதற்கு அடிப்படையாகவும் காணப்படுகிறது.

 

https://www.meenagam.com/மணிவண்ணன்-ஏன்-கைது-செய்ய/

 

Link to comment
Share on other sites

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Similar Content

 • Topics

 • Posts

  • இது இப்போது தான் தெரியுமா? ....நான் எனது சொந்த அனுபவங்களை சொல்லுகிறேன் .  கேளுங்கள்   2021.இல்    வறுமையை ஒழிப்போம். என்ற ஒரு அமைப்பு  என்னை தொடர்பு கொண்டு முல்லைத்தீவு கோப்புலவில்  ஒரு ஏழை பையனுக்கு சைக்கிள் வேண்ட 25 ஆயிரம் ரூபாய் உதவி செய்ய முடியுமா என்று கேட்டார்கள்  அத்துடன் ஒரு கணணி உம் வேண்டித் தரலாம்  எவ்வளவு முடியும் என்று சொல்லும் படி கேட்டேன்   நல்ல கணணி க்கு 70 ஆயிரம் வேண்டும் என்றார்கள்  சரி தரலாமென்று  ஒரு இலட்சத்து ஐந்து ஆயிரம் அனுப்பினேன்   அவர்கள் முதல் அனுப்பிய பையனின் படமும் கணணி கொடுத்த பின் கணணி...சைக்கிள்..உடன் நின்ற பையனும் வெவ்வேறு நபர்கள்  எவனாவது பயன் படுத்தினால் சரி என்று விட்டுட்டேன்    😛 மேலும் அவர்கள் உதவியை எதிரபார்த்தார்கள்   நான் கடன் என்றால் தரலாம். சும்மா தர முடியாது   என்றேன்  கோழி பண்ணை அமைக்க உதவும்படி கேட்டார் சரி பத்து இலட்சம் கடனாகக் தர முடியும் என்றேன்    ஆறு மாதத்துக்குள் செலவு கூட சீமெந்து விலையேற்றம்  என்று மொத்தம் பதின்நான்கு இலட்சம் அனுப்பியுள்ளேன்“  இதே காரணம் சொல்லி சுவிஸ் அறக்கட்டளை இலும் பணம் வேண்டியவர்கள்  ஆரம்பத்தில் படம் அனுப்பினார்  பிறகு அனுப்பவில்லை  கோழி பண்ணையும் தொடங்கவில்லை மாறாக வீடு கட்டியுள்ளார்கள்    அதாவது உடம்பை முறித்துக் உழைக்க விருப்பமில்லை   இதற்கு என்ன செய்யலாம் சொல்லுங்கள் பார்ப்போம் 🤣 மொத்தம் ஆறு ஆயிரம் யூரோ  அனுப்பியுள்ளேன்“   அவருக்கு சரிதா என்று பெயர் வங்கி கணக்கு பிரசான்ன நவரத்தினம் என்ற பெயரில் உண்டு   நான் அவருக்கு சொன்னேன் இன்று அந்த ஆறு ஆயிரம் யூரோ  21 இலட்சம் ரூபாய் வரும் என்று   அவர் சொன்னார் இப்ப அதை பற்றி யோசித்து என்ன பலன்   இதுகளைப் பற்றி கவலை படுவது சுத்த வெஸ்ட்       ஒரு நாலு ஐந்து போத்தல்கள் மட்டின் விரான்டியை  குடித்து விட்டு குப்பிறப் படுத்துக்கிடக்கலாம்  😂🤣
  • இலங்கையில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருவதாக சிறார்களுக்கான ஐ.நா அமைப்பான யுனிசெப் அண்மையில் வெளியிட்ட தகவல், தற்போது பேசுபொருளாகியிருக்கிறது. ஊட்டச்சத்து குறைபாடுடைய சிறார்கள் வாழும் நாடுகள் பட்டியலில், இலங்கை எந்த இடத்தில் இருக்கிறது தெரியுமா?  
  • மண்ணெண்ணெய் குண்டு சம்பவங்கள்: திருமாவளவன், சீமான் எழுப்பிய சந்தேகமும், ஐ.ஜி. எச்சரிக்கையும் 5 மணி நேரங்களுக்கு முன்னர்   பட மூலாதாரம்,GETTY IMAGES சேலத்தில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் வீட்டில் மண்ணெண்ணெய் பாட்டில் குண்டு வீசிய வழக்கில் எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியை சேர்ந்த ஆர்எஸ்எஸ் பிரமுகர் ராஜன் என்பவர் வீட்டில் இன்று அதிகாலை மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலில் நெருப்பு பற்ற வைத்து, வீட்டின் முன்பு மர்ம நபர்கள் வீசியுள்ளனர். அதிர்ஷ்டவசமாக இதில் எந்தவித சேதமும் ஏற்படவில்லை. இதுதொடர்பாக சேலம் மாநகர், அம்மாபேட்டை காவல் நிலையத்தில், ராஜன் அளித்த புகாரின்பேரில் ஏழு பேரை அழைத்து சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தினர். மேலும் அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவை வைத்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.   இதில் சிசிடி கேமரா பதிவின்படி காதர் உசேன், சையத் அலி ஆகிய இருவர் மண்ணெண்ணெய் பாட்டில் குண்டு வீசியதாக போலிசாருக்குத் தெரியவந்தது. இதை தொடர்ந்து எஸ்டிபிஐ மாவட்ட தலைவர் சையத் அலி மற்றும் 34 வது கோட்ட கிளை எஸ்டிபிஐ தலைவர் காதர் உசேன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த இருவர் மீதும் தீவைத்து பாதிப்பு ஏற்படுத்த முயற்சித்தல், சமூக நல்லிணக்கத்திற்கு எதிராக செயல்படுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்பட்டது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து நீதிமன்ற காவலில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.   'மண்ணெண்ணெய் பாட்டில் வீசிய சில உண்மை குற்றவாளிகள் கைது' - சைலேந்திர பாபு "நான் திராவிடத்தை நிராகரிக்கவில்லை; திராவிடம் பிளஸ் வேண்டுமென்கிறேன்" - அண்ணாமலை பேட்டி   இதற்கிடையே சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்மல் ஹோதா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், சேலம் மாநகரில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டின் மீது மண்ணெண்ணெய் குண்டு வீசிய சம்பவம் தொடர்பாக உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி சந்தேகத்திற்குரிய நபர்கள் இருவரை பிடித்து விசாரணை செய்ததில் சையதுஅலி, காதர் உசேன் ஆகிய இருவரும் மண்ணெண்ணெய் குண்டு வீசியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இருவரையும் கைது செய்துள்ளோம். மேலும் அவர்கள் பயன்படுத்திய இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர்களுடன் தொடர்பில் இருந்த நபர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சேலம் மாநகரம் முழுவதும் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று மாநகர காவல் ஆணையர் நஜ்மல் கோடா தெரிவித்தார். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எஸ்டிபிஐ மாவட்ட செயலாளர் ஷெரிப்பாஷா, பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா பொதுச்செயலாளர் முகமது ரஃபி, மற்றும் இஸ்லாமிய இயக்கத்தை சேர்ந்த முகமது இஸ்மாயில், முகமது ஆரிஸ், காஜா உசேன் ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருமாவளவன் எழுப்பிய சந்தேகம்   திருப்பூர், திண்டுக்கல், விழுப்புரம் போன்ற இடங்களில் பாஜக, ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் வீடுகளில் தாங்களே பெட்ரோல் குண்டு வீசிக்கொண்டு பிறர் வீசியதாக கூறிய நிகழ்வுகள் ஊடகங்களில் செய்தியாக வெளியாகியுள்ளன என்று கூறிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், சமீபத்திய நிகழ்வுகளின் பின்னாலும் பாஜக, ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்கள் இருக்க வாய்ப்புண்டு என்று இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார். தமிழ்நாடு காவல்துறை இந்த கோணத்திலும் அந்த வழக்குகளை விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். சீமான் குற்றச்சாட்டு நாடெங்கிலும் மதப்பூசல்கள் ஏற்பட்டபோதும் அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்த தமிழ்நாட்டில் மதக் கலவரங்களை ஏற்படுத்த இந்துத்துவ இயக்கங்கள் செய்யும் பிரித்தாளும் சூழ்ச்சிகள் பெரும் அதிர்ச்சியைத் தருவதாகக் கூறி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு அறிக்கை விடுத்துள்ளார். டிவிட்டரில் அவர் பகிர்ந்துள்ள அந்த அறிக்கையில் தென் மாநிலங்களே தமது இலக்கென பாஜகவின் தலைவர்கள் கூறிவரும் நிலையில் அதற்கு அடித்தளமிடும் வகையில் தமிழ்நாட்டில் மதமோதல், கும்பல் வன்முறைகளை ஏற்படுத்த இந்துத்துவ இயக்கங்கள் முயல்கின்றனவோ என்ற ஐயம் வலுப்பதாக கூறியிருக்கும் சீமான் "ஆங்காங்கே ஆர்.எஸ்.எஸ்., பாஜக நிர்வாகிகள் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாகவும், வாகனம் எரிக்கப்பட்டதாகவும் வருகிற செய்திகள் கடந்த காலத்தையை நினைவூட்டுகின்றன. தாங்களே தங்கள் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசி, தங்கள் வாகனத்தை எரித்து அரசியல் லாபம் பெற முயன்ற பாஜக நிர்வாகிகளின் முந்தைய செயல்பாடுகள் யாவும் சமகாலச் சான்றுகளாக இருக்க, அதன் தொடர்ச்சியாக இதுவும் இருக்கலாம் என்னும் வாதத்தில் உண்மையில்லாமல் இல்லை..." என்றும் கூறியிருக்கிறார். Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 அத்துடன் ஆர்.எஸ்.எஸ். 50 இடங்களில் நடத்தத் திட்டமிட்டுள்ள ஊர்வலம் பற்றி குறிப்பிட்ட சீமான், உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வலுவான வாதங்களை வைக்கத் தவறியதன் விளைவாகவே அந்த ஊர்வலங்களுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது என்று குறிப்பிட்டார். ஐ.ஜி அஸ்ரா கார்க் எச்சரிக்கை இந்நிலையில் விளம்பரத்திற்காக தனக்கு தானே பெட்ரோல் குண்டு வீசிக் வீசிக்கொண்டது விசாரணையில் உறுதி செய்யப்பட்டால் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க் செய்தியாளரிடம் பேசுமையில், "திண்டுக்கல் அடுத்துள்ள குடைபாறைபட்டியைசேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் மேற்கு மாநகரத் தலைவர் செந்தில் பால்ராஜ் செட்டில் இருந்த கார் மற்றும் ஐந்து இருசக்கர வாகனங்களை நேற்று அதிகாலை மர்ம நபர்கள் தீ வைத்த வழக்கில் திண்டுக்கல் நகர் டிஎஸ்பி கோகுல கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் பேகம்பூரைச் சேர்ந்த சிக்கந்தர் (29) என்பவரை கைது செய்துள்ளனர். இது தொடர்பாக முழு விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் மேலும் யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது. தென் மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. சுமார் 20,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். முக்கியமான பகுதிகளில் இரவு நேரங்களில், சரக காவல்துறை துணைத் தலைவர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர்கள் தலைமையில் ரோந்துப் பணிகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.   ''ராமாயண, மகாபாரத புராண குப்பைகளை மக்கள் மூளையில் திணித்துள்ளனர்'' - திருமாவளவன் தமிழ்நாட்டில் பாஜகவினர், ஆதரவாளர்கள் வீடுகள், வாகனங்கள் மீது தாக்குதல் - எங்கெங்கு நடந்தன?   தற்போதைய சூழலில் விசாரணை என்பது முழு முன்னேற்றத்தில் சீராக சென்று கொண்டிருக்கிறது. முக்கியமான இடங்களில் துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் சில்லறையில் பெட்ரோல் மற்றும் டீசல் வழங்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அவர்களும் காவல்துறையின் அறிவுறுத்தலை கடைபிடித்துக் கொண்டிருக்கிறார்கள். தென் மாவட்டங்களில் யாரெல்லாம் முக்கிய நபர்கள் குறித்து முழு விவரம் சேகரிக்கப்பட்டிருக்கிறது. அவர்களுடைய வீடு, அலுவலகம் அவர்கள் வியாபாரம் செய்யும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது." என்று தெரிவித்தார். 'முதல்வர் விழித்து கொள்ள வேண்டும்'   கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இதுகுறித்து பேசுகையில், "மத்திய அரசு அமலாக்கத் துறை, மாநில காவல் துறை இணைந்து செய்த சோதனைக்கு பாஜக தொண்டன் என்ன செய்வான்? பாஜக தொண்டரின் வீடு உட்பட 25 இடங்களுக்கு மேல் குண்டு போட்டிருக்கிறார்கள். தமிழக காவல்துறை எத்தனை பேரை கைது செய்துள்ளது. தமிழக முதல்வர் விழித்துக் கொள்ள வேண்டும். கோவை மாவட்ட காவல்துறை நடந்து கொண்ட விதம் சரியில்லை. இது திமுகவுக்கும் பாஜகவுக்கும் நடக்கின்ற போர். காவல்துறை அதிகாரிகள் இதில் சிக்கிக் கொள்ளாமல் விலகி இருக்க வேண்டும். தமிழ்நாடு காவல்துறை ஆளுங்கட்சியின் கைப்பாவையாக இல்லாமல் நடுநிலையோடு செயல்பட வேண்டும். பாஜக தொண்டர்களிடம் அத்துமீறிய அனைத்து காவல்துறை அதிகாரிகள் மீதும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் நானே புகார் அளிப்பேன்." என்றார். https://www.bbc.com/tamil/india-63026410
  • காட்டுப்பகுதியிலிருந்து உரப் பையில் சுற்றப்பட்ட நிலையில் சிசுவொன்று உயிருடன் மீட்பு By T YUWARAJ 25 SEP, 2022 | 08:54 PM  பண்டுவஸ்நுவர, பண்டாரகொஸ்வத்தை, உகுருஸ்ஸகம ஏரிக்கரையில் உள்ள காட்டுப்பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் சிசுவொன்று உரப் பையில் சுற்றப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குழந்தை அழும் சத்தம் கேட்டு கால்நடைகளை கட்ட சென்ற பெண் ஒருவர் பை ஒன்றில் சுற்றப்பட்ட நிலையில் இருந்த குழந்தையை கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதையடுத்து அம்பியுலன்ஸ் மூலம் குழந்தை நிகவெரட்டிய வைத்தியசாலைக்கு  கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், வாரியபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/136414
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.