Jump to content
 • Veeravanakkam
 • Veeravanakkam
 • Veeravanakkam

வரலாற்றை திரிபுபடுத்த முனையும் முன்னாள் ஆயுதக்குழு உறுப்பினர்கள்!


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

 

வரலாற்றை திரிபுபடுத்த முனையும் முன்னாள் ஆயுதக்குழு உறுப்பினர்கள்!

E59A4C32-29AB-4B2F-AA7E-ADF45958D60C.jpe

அஞ்ஞானி

ஒவ்வொரு இளைஞனும் தங்கள் போராட்டப் பங்களிப்பை வழங்க ஓவ்வொரு இயக்கத்தைத் தேர்ந்தெடுத்தனர். தங்கள் தங்கள் இயக்கத்தினுள் என்ன நடந்தது என்பதை மறந்து புலிகளே மோசமானவர்கள் என நிறுவ முன்னாள் புளொட் மற்றும் ஈரோஸ் இயக்கத்தைச் சேர்ந்த சிலர் தலைகீழாக முயன்று வருகின்றனர். அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு வரலாறு தெரியாது தானே என்ற நம்பிக்கையில் தான் தங்கள் நடவடிக்கையில் இவர்கள் தீவிரமாக உள்ளனர்.
கடந்த 10 திகதி வெருகல் படுகொலை நினைவு நாள் என்ற பெயரில் சமூக அமைப்புகள் அதனை நடத்துவதாக விளம்பரப்படுத்தப்பட்டது.

1016B47A-3988-482B-922B-A94D8DABE387.jpe

முதலில் ஆயுத மோதல் என்பதற்கும் படுகொலை என்பதற்கும் வித்தியாசம் தெரியவில்லை இந்தப் புத்திஜீவிகளுக்கு. இந்தியாவில் ஆயுதப் பயிற்சி பெற்று அங்கேயே விலகிக்கொண்ட முன்னாள் புளொட் இயக்க உறுப்பினரும் ,தற்போதைய கிழக்கு பல்கலைக்கழக நுண்கலைப்பீட விரிவுரையாளருமான களுதாவளையைச் சேர்ந்த சுந்தரம்பிள்ளை சீவரத்தினமும் (யோகன்) இவர்களில் ஒருவர். இவர் சார்ந்த இயக்கமான புளொட் மாலைதீவைத் தவிர வேறு எங்கும் சில மணிநேரம் கூட கட்டுப்பாட்டில் வைத்திருந்த வரலாறு இல்லை. ஆகையால் சமர் என்பது இவருக்குப் புரியாது.


வெருகல் ஆற்றின் இரு கரைகளிலும் இருந்து மோதிக்கொண்ட இருதரப்பினரின் கைகளிலும் ஆயுதம் இருந்தது. எந்த ஆயுதமும் உயிரைக் குடிக்கும் என்பது இந்த விரிவுரையாளருக்குத் தெரியாமல் போனது துரதிஷ்டமே. இரு தரப்பினருமே தங்களால் இயன்றவரை போராடினார்கள். காயங்கள் ஏற்பட்டன, உயிரிழப்பு ஏற்பட்டது. சரணடைந்த கருணா தரப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் விடுவிக்கப்பட்டார்கள் என்பதை வசதியாக மறந்து விட்டார் சீவரத்தினம்.
எவ்வாறிருந்தாலும் இந்த முரண்பாட்டில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவது என்பது ஒரு உணர்வுபூர்வமான விடயம். அதனை மறுக்க முடியாது. ஆனால் சமூக அமைப்புக்களின் சார்பில் இந் நிகழ்வை நடத்துவதாகக் குறிப்பிட்ட விரிவுரையாளர் தனது பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் ரவீந்திரநாத் ,தம்பையா ,மாணவி தனுஷ்கோடி பிறேமினியின் உறவுகளின் துயர் பொருட்படுத்தத் தக்கவையல்ல என்ற முடிவுக்கு ஏன் வந்தார்? இது வரைக்கும் எங்காவது இவர்களை நினைவு கூரஏதாவது ஏற்பாட் டைச் செய்திராத இவர் நான் நடுநிலையுடன் பேச முயற்சிக்கின்றேன் என்பது சுத்த அபத்தம் .


இவர்களில் எவருமே ஆயுதம் தாங்கியவர்கள் அல்ல என்பது தனக்குத் தெரியாது என்பது போலவும் வெருகலில் கருணா தரப்பினர் ஆயுதமின்றி வெள்ளைக் கொடியுடன் தான் நின்றனர் என்ற மாதிரியும் நிரூபிக்க முயல்கிறார்.


இவருக்கு மனச்சாட்சி இருந்தால் கூட்டுப்பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டபின் துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட பிறேமினியின் இடத்தில் தனது மகளை ஒரு கணமேதும் வைத்துச் சிந்தித்திருப்பார்.


சுமார் 40 ஆயுத அமைப்புக்கள் தோன்றிய போதும் கிழக்கில் இருந்து எவையும் உருவாகவில்லை; அங்கிருந்து (வடக்கிலிருந்து) வந்த குழுக்களிலேயே இங்குள்ள தமிழ் இளைஞர்கள் இணைந்து கொண்டனர் என்பதன் மூலம் இந்த விரிவுரையாளர் வரலாற்றை மாற்றியமைக்க முயல்கிறார்.
இரா. பரமதேவாவுக்கும் பிரபாகரனுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஒரு ஆயுதப் போராட்ட அமைப்பை ஆரம்பித்தார் பரமதேவா. துரதிஷ்டவசமாக இவரும் இவரைச் சேர்ந்த சிலரும் (நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள்) கைதாக நேர்ந்தது. ஆனால் இவரோடு தொடர்புபட்ட பலர் அதே உணர்வுடன் இருந்தனர். உண்மையில் மட்டக்களப்பு சிறையுடைப்பின் முக்கிய பங்காளி இவர்தான். தப்பிச் செல்வதற்கான தோணிகள் முதலானவை முதற்கொண்டு இவரது தொடர்பினாலேயே சாத்தியமாகின. (ஆனால் உரிமை கோரியவை வேறு மூன்று இயக்கங்கள்) தான் விடுதலையாவதற்கு சில நாட்களே உள்ளன என்ற நிலையிலும் புலிகள் இயக்கத்தினரைக் கொண்டு செல்லும் பொறுப்புத்தானே ஏற்றதால் இவரும் சிறையிலிருந்து போகவேண்டி ஏற்பட்டது .


புலிகள் இயக்கத்திலேயே இணைவது என்பது இவரும் இவரது நண்பர் ரஞ்சனும் எடுத்த முடிவு (பொத்துவில் எம். பி கனகரத்தினத்தின் மகன் தான் ரஞ்சன். இயக்கப் பெயர் சைமன்)
அடுத்தது தமிழீழ கழுகுகள் படை .இந்த இயக்கத்தின் நிறுவனர்களில் ஒருவரான ராஜ்மோகனை இந்த விரிவுரையாளர் முன்னர் அங்கம் வகித்த புளொட் இயக்கமே காணாமற் செய்தது.
மூன்றாவது தமிழீழ நாகபடை. இதன் நிறுவனர்கள் ஒட்டமாவடியைச் சேர்ந்தவர்களான ஜுனைதீன், தவ்பீக் , பதூர்தீன் (சுப்பையா லேன்) ஆகிய மூன்று முஸ்லீம் இளைஞர்களும் மற்றும் ஸ்ரீபத்மன் (புளியந்தீவு), கணேசமூர்த்தி பையா (மாமாங்கம்) ,சிமிட்டி தயா (புளியந்தீவு),இராசநாயகம் இராஜேந்திரன் (சின்னவன் – ஏறாவூர்), ஐயா – பையாவின் மருமகன் (மாமாங்கம் ), ஜூட் பத்மநாதன்( புளியந்தீவு ) , கண்ணன் (முகத்துவாரம்), சுபாஷ் (தாமரைக்கேணி )உள்ளிட்ட சிலர். இதில் ஜுனைதீனும் சுபாஷ்சும் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டனர் .


இந்த ஜுனைதீன்தான் முதல் முஸ்லீம் மாவீரர் நான்காவது ` ஈஸ்டன் குரூப்` என்றழைக்கப்பட்ட குழு. மட்டக்களப்பு கச்சேரிக்குள் விவசாயி களிடமிருந்து மீளப் பெறப்பட்ட வேட்டைத் துப்பாக்கிகளை வைத்திருந்தார்கள். இதனை கைப்பற்றிய இக் குழு தோணிகள் மூலமாக ஆற்று வழியாகக் கொண்டு சென்றது. குறிப்பிட்ட இலக்கை அடையமுன்னர் விடிந்து விட்டது. எனவே இதனை ஆற்றங்கரையோரமாகப் புதைத்தது. இந்த ஆயுதங்களை புளொட் அபகரித்தது. ஆயுதங்களை புளொட் திருடியதும்,கச்சேரிக்குள் புகுந்தோர் தேடப்பட்டதும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. அவர்கள் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இணைந்து கொண்டனர்.


இக் குழுவில் கப்டன் கரன்( கல்லடி),கப்டன் முத்துசாமி (களுவாஞ்சிக்குடி),லெப் .மொட்டைக் கஜன்(புளியந்தீவு) . லெப் உமாராம்(கல்லடி), லெப் பயஸ் (நாவற்குடா), லெப்.ஈசன் (வந்தாறுமூலை) ஆகியோர் வீரச்சாவெய்தி னர். இவ்வாறு வரலாறு இருக்க மட்டக்களப்பில் எந்த இயக்கமும் சுயமாக உருவாகவில்லை என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்த முனைகிறார் இவர்.
புலிகளில் இணைந்து கொண்ட பரமதேவா, ரஞ்சன் முதலானோர் இந்தியா வழங்கிய பயிற்சியினையும் பெற்றுக்கொண்டனர் (முதலாவது முகாம்) . பரமதேவா பற்றி ஏற்கெனவே அறிந்திருந்த பிரபாகரன் பயிற்சி முடித்து அவர் வந்ததும் ஒரு தலைமைக்குரிய பண்பும், இலட்சிய உறுதியும் கொண்டவராக இவரை இனங்கண்டார். கிழக்குக்கான தலைமை அங்கேயே உருவாகவேண்டும் என்று அடிக்கடி கூறும் அவர் தனது எண்ணத்துக்குப் பொருத்தமானவராக இவர் இருப்பதையிட்டுத் திருப்தி கொண்டார்.


ஒட்டுசுட்டான் பொலீஸ் நிலையத் தாக்குதலில் பரமதேவா மிகத் திறமையாகச் செயற்பட்டார். இத் தாக்குதல் முடிந்ததும் மட்டக்களப்புக்குப் பொறுப்பாக அனுப்பப்பட்ட போராளியிடம் ” பரமதேவாவைக் கூட்டிக்கொண்டு போங்கள்; ஓரிரு தாக்குதலின் பின்னர் அவரிடம் பொறுப்பை ஒப்படையுங்கள்.தனியாக இயக்கம் தொடங்கவும் அவருக்கு அனுமதியுண்டு“ எனக் குறிப்பிட்டார் மாத்தையா.


இதுவரை எவருக்குமே வழங்கப்படாத அனுமதி இது. மட்டக்களப்புக்கான கடற்பயணம் தாமதமாகவே முல்லைத்தீவில் ஒரு வாடியில் இவர்கள் தங்கியிருக்க வேண்டியிருந்தது. அச் சமயம் அப்போராளி பரமதேவா விடம் “ஓரிரு சண்டைகளின் பின்னர் உங்களிடம் பொறுப்பை ஒப்படைக்குமாறு பணிக்கப்பட்டுள்ளேன். தனியாக இயக்கம் தொடங்கவும் உங்களுக்கு அனுமதி உண்டு எனவும் சொல்லியிருக்கிறார்களே“ எனக் கேட்டார்.


இதற்கு “தம்பி (பிரபாகரன்) என்னிடம் இது பற்றி குறிப்பிட்டார். அதற்கு நான் உங்களுக்கும் எனக்குமான புரிந்துணர்வு தனித்துவமானது . இதனைப்போல நாளைக்குப் புதிதாக என்னுடன் இணைந்து கொள்பவர்களுக்கும் இருக்குமென்று சொல்லமுடியாது. நீங்கள் தேவையான ஆயுதங்கள்,ரவைகள் மற்றும் ஏனைய உதவிகளைத்தான் செய்யமுடியும். புரிந்துணர்வு என்பதைப் போராட்டத்தில் புதியவர்களான அவர்களிடம் எதிர்பார்க்கமுடியாது. நாளைக்கு இது பெரும் ரத்தக்களரியில் முடியும். எனக்கு நீங்கள் சரியான தலைவராகத் தெரிகிறீர்கள். உங்கள் தலைமைக்கு கீழேயே நான் போராடுவேன் எனக் கூறி அன்பாக மறுத்து விட்டேன்” என்று கூறினார் பரமதேவா .


தமிழரின் துரதிஷ்டம் மட்டக்களப்பில் நடந்தமுதல் தாக்குதலிலேயே பரமதேவாவை இழக்கவேண்டி ஏற்பட்டது. காயமடைந்த நிலையில் இருந்த அவரையும் ரவி (வாமதேவனையையும்) வாகனத்தின் அருகிலேயே விட்டு விட்டு ஏனையோர் பொலிஸ் நிலைய வளாகத்தினுள் புகுந்தனர். எனினும் எதிர்பார்த்த மாதிரி சண்டை நடைபெற வில்லை. பாதகமாகவே போய்க்கொண்டிருந்தது. பின் வாங்கிக்கொண்டு காயமடைந்தவர்களையும் ஏற்றிக்கொண்டு செல்வோமென முடிவெடுக்கப்பட்டது. பரமதேவாவிடம் சென்ற போது “நான் பாரமானவன்; என்னைத் தூக்கிக்கொண்டு போவது சாத்தியமில்லை. நிலைமையை உணர்ந்து நானும் ரவியும் ஏற்கெனவே சைனட் உட்கொண்டு. விட்டோம் இனி எங்களோடு நேரத்தைச் செலவழிப்பதில் பயனில்லை. ஒன்று மட்டும் செய்யுங்கள்.அம்மாவிடம் போய்ச் சொல்லுங்கள் உங்கள் மகன் சண்டையில் தான் செத்தானென்று . அண்ணர் (வாசுதேவ) புளொட் டில் இருக்கிறார் ஆனபடியால் வேற மாதிரி கதைகள் வரலாம். சீக்கிரம் போங்கள் ” என்றபடியே உயிரைவிட்டுக்கொண்டிருந்தார். ரவி ஏற்கெனவே உயிர் இழந்து விட்டார்.
இந்த வார்த்தைகளை சொல்லத்தான் மனவலிமையுடன் அவர் காத்துக்கொண்டிருந்தார் என்பதை உணரமுடிந்தது.


பயிற்சி முடித்து வந்த போராளிகளை முதலில் வீட்டுக்கு அனுப்பி பெற்றோரைச் சந்திக்க வைப்பது வழக்கமாக இருந்தது. பரமதேவாவின் அம்மா இருப்பதோ கல்லடியிலுள்ள இராணுவத்தினரின் பிரதான முகாமுக்கு அருகில் (சகோதரி வீட்டில்) .எனவே அமிர்தகழியிலேயோ வேறேங்கோதான் தாயாரைச் சந்திக்கவேண்டியிருக்கும். இந்த நிலமையைச் சொல்லி அவரது முடிவைக் கேட்டார் ஒரு போராளி. அதற்கு பரம தேவா சொன்ன பதில் “நான் இந்த ஆயுதப் போராட்டத்தில் ஈடு பட்டபின் என்னை ஒரு கைதியாகவே அம்மா பார்த்திருக்கிறார். எனவே இந்த மண்ணில் நடக்கும் தாக்குதலில் எதிரியிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஒரு ஆயுதத்துடன் வீரனாகத் தான் அம்மாவைப் பார்க்க விரும்புகிறேன் அதுவரை பொறுத்திருக்கிறேன்” என்றார். ஆனால் அவரது கனவுகள் ……..

மரணிக்கும் தறுவாயிலும் இயக்கத்துக்குக் கெட்ட பெயர் வந்து விடக் கூடாதே என்பதற்காக அவர் சொன்ன வார்த்தைகள்… அதிலும் புளொட் பற்றி அவர் கொண்டிருந்த கருத்துக்கள்; எத்தனை தீர்க்கதரிசனமானவை என்பதை ஸ்டாலின் ஞானமும், சீவரத்தினமும் நிரூபித்துக் காட்டுகின்றனர். (இன்னும் சில புத்தி ஜீவிகள் பட்டியல் உண்டு )


சீவரத்தினம் சகோதரப்படுகொலைகளை தன் கையாலே ஆரம்பித்து வைத்தவர் பிரபாகரன் என்று சொல்கிறார். இதுவும் தவறான தகவல். தமது புளொட்டுக்குள் என்ன நடந்தது என்றே தெரியாதவர்கள் புலிகள் பற்றி வகுப்பு எடுக்கின்றனர். அதற்கு முன்னரே வரலாற்றில் ஒரு சம்பவம் நடந்தது. ஆனால் பிரபாகரன் சம்பந்தப்படவில்லை. அந்தக் காலத்தைப் பற்றி இந்த விரிவுரையாளருக்கு விபரிப்பது சிரமம் .மேலும் மைக்கலின் விடயம் ஒரு ஒழுக்காற்று நடவடிக்கை. இது தனியே பிரபாகரன் மட்டும் எடுத்த முடிவல்ல.


வந்தாறுமூலையைச் சேர்ந்த கைலாயத்தாரின் மகன் சுரேஷ் (இயக்கப் பெயர் பிரசன்னா) பாண்டிருப்பைச் சேர்ந்த விமல்ராஜ் ஆகியோர் மீது எடுக்கப்பட்டதாக கூறும் நடவடிக்கைகள் இதேபோலத்தான் மேற்கொள்ளப்பட்டன. வெருகலில் மட்டக்களப்பு பக்கமாக நின்று படைநடத்தியவரைக் கேட்டால் இது பற்றி கூறுவார் (இந்தக் காரணங்களை விட பல மடங்கு……… )

63B482AE-B5C8-48FA-BAFE-EB339F3457C8.jpe

மேலும் இந் நிகழ்வுக்கு தலைமை தாங்கிய முன்னாள் ஈரோஸ் உறுப்பினரும், தமிழர் தளம் பத்திரிகையின் ஆசிரியருமான மணிசேகரம் தராக்கி (சிவராம்) நடேசன் முதலானோரின் அஞ்சலி நிகழ்வுகளை இதே மக்கள் அமைப்பின் பெயரில் நடத்தத் தயாராக இருக்கின்றாரா என்பதை வெளிப்படுத்தினால் நல்லது. 1980 ல் புலிகள் அமைப்பில் ஏற்பட்ட பிளவுக்கு பின் உருவான பாதுகாப்பு பேரவை என்ற இயக்கத்தின் அமைப்பாளர்களின் ஒருவரான நெப்போலியன் மணிசேகரம் சார்ந்த ஈரோஸ் இயக்கத்தால் மலையகத்தில் வைத்து கொலை செய்யப்பட்டார் அல்லது காணாமற் செய்யப்பட்டார் என்பது பற்றியும் , சர்வோதய அமைப்பின் தலைவர் கந்தசாமி என்ன காரணத்துக்காக கொல்லப்பட்டார் என்பதையும் இன்னொரு நினைவேந்தல் நிகழ்வில் சொல்வாரென எதிர்பார்க்கின்றோம் 

 

https://www.meenagam.com/வரலாற்றை-திரிபுபடுத்த-மு/

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 15/4/2021 at 08:53, கிருபன் said:

மரணிக்கும் தறுவாயிலும் இயக்கத்துக்குக் கெட்ட பெயர் வந்து விடக் கூடாதே என்பதற்காக அவர் சொன்ன வார்த்தைகள்… அதிலும் புளொட் பற்றி அவர் கொண்டிருந்த கருத்துக்கள்; எத்தனை தீர்க்கதரிசனமானவை என்பதை ஸ்டாலின் ஞானமும், சீவரத்தினமும் நிரூபித்துக் காட்டுகின்றனர். (இன்னும் சில புத்தி ஜீவிகள் பட்டியல் உண்டு )

நிர்வாகம் பிழையென்றால் நீக்கிவிடவும் !!!!!!

வெற்றிச்செல்வனின்  ஒப்புதல் வாக்குமூலம் கீழே 

பல தோழர்களும், சில நண்பர்களும் எனது பதிவுகள் செயலதிபர் உமா மகேஸ்வரனை மட்டுமே குற்றவாளியாக காட்டி பதிவு செய்கிறீர்கள், ஏன் உங்கள் மற்ற தலைவர்கள் இயக்கத்தை தவறாக வழி நடத்தவில்லையா? ஏன் அவர்களைப் பற்றி எழுதவில்லை என்று கேட்டார்கள் கேட்கிறார்கள். எங்கள் இயக்க நடைமுறை பற்றி உண்மையில் பலருக்கு தெரியாது. ஏன் பயிற்சிபெற்ற ஆயிரக்கணக்கான தோழர்களுக்கு கூட தெரியாது. எமது அமைப்பில் பலவித அணிகள் இருந்தன. உதாரணத்துக்கு விவசாய தொழிலாளர் மீனவ போன்ற அணிகள். அதுபோல் வெளியுலகத்திற்கு தெரிந்த கட்டுப்பாட்டு குழு,மத்தியகுழு ,பொதுக்குழு போன்றவை. ஆரம்பத்தில் மத்திய குழுவில் இருந்தவர்கள் பெரும்பான்மையோர் பெரிய ஐயாவின் (உமா மகேஸ்வரன்)விசுவாசிகள். அதோடு மத்திய குழுவிலிருந்த ஜான் மாஸ்டர் போன்ற தீப்பொறி குழுவினர் அவர்கள் இயக்கத்தில் இருக்கும் வரை செயலதிபர் உமா மகேஸ்வரனுக்கு எதிராக மத்திய குழுவில் எந்தக் கருத்தும், இயக்கத்தின் தவறான நடவடிக்கைகளுக்கு எதிராக எந்த உட்கட்சி போராட்டத்தையும் பின் தளத்தில் நடத்தியதாக தெரியவில்லை. சந்ததியார் மட்டும் பல இடங்களில் எமது இயக்க தவறானசெயல்பாடுகளை சுட்டிக்காட்டியிருந்தார். எமது தவறான போக்குகளை சந்ததியார் பல தோழர்கள் இடமும் விவாதித்திருக்கிறார். இயக்கத்தில் இருக்கும் வரை சந்ததியாருக்கு பின் தளத்தில் பக்கபலமாக இருக்காமல் , பின் தளத்தில் இருந்துவிட்டு ரகசியமாக ஓடி சென்றபின் தீப்பொறி குழுவினர் பல உண்மைகளை எழுதினார்கள். அதன் முடிவு எங்கள் இயக்க அரசியல் செயலாளர் சந்ததியார் இன் கொலை. அதுமட்டுமல்ல சந்ததியார் ஒரு போதை மருந்து கடத்தல் பெண்ணுடன் வெளிநாட்டுக் ஓடிவிட்டதாக கதை கட்டப்பட்டது.
அடுத்தது மத்திய குழு உறுப்பினராக இருந்த நிரஞ்சன் என்ற சிவனேஸ்வரன் ((மிக மூத்த உறுப்பினர்)செயலதிபர் உமாமகேஸ்வரன் இன் தனி மனித ஒழுக்கத்தைப் பற்றி நேரடியாக கண்டித்தபடியால் கொலை செய்யப்பட்டார்.அடுத்தது எங்கள் பின் தள ராணுவ பயிற்சி போன்றவற்றில் தீவிரமாக செயல்பட்ட, ராஜனை ஒடுக்குவதற்கு செயலதிபர் உமாமகேஸ்வரன்செய்த முயற்சிகள் பலன் அளிக்காததால் 1986இல் நமது இயக்கம் உடைந்து இரண்டாகி விட்டது. பல நூற்றுக்கணக்கான தோழர்கள் மனம் வெறுத்து இயக்கத்தை விட்டு வெளியேறிய சம்பவமும் நடந்தது.
எமது இயக்கம் சம்பந்தமான எல்லா முடிவுகளும் தனிப்பட்ட செயலதிபர் உமாமகேசுவரனால்மட்டுமே எடுக்கப்பட்டது. ஆனால் முடிவுகள் அறிவிக்கும் போது கட்டுப்பாட்டு குழு சார்பாக, மத்திய குழு சார்பாக என்று அறிக்கைகள் வெளி வரும். சந்ததியார், ராஜனுக்கு பின்பு யாரும் மத்திய குழுவில் ஓ, தனிப்பட்ட முறையிலோ பின் தளத்தில் இயக்கத் தவறுகளை சுட்டிக்காட்ட யாருக்கும் தைரியம் இருக்கவில்லை.அதேநேரம் இயக்கத்தின் அதிஉயர் அங்கமான கட்டுப்பாட்டு குழுவில் இருந்த கண்ணன் என்றோ சோ திஸ் வரணும், இரா வாசுதேவா இருவரும் தவறுகளை சுட்டிக்காட்டும் நிலையில் இருக்கவில்லை.ஆமாம் சாமி தான்.
இயக்க ஆரம்பகாலம் முதல் செயலதிபர் இன் மரணம் வரை எல்லா முடிவுகளும் உமா மகேஸ்வரனால்மட்டுமே எடுக்கப்பட்டன. அவரின் நேரடி பார்வையிலேயே எனது வேலைகளும் இருந்தன. அதனால் எனது பதிவுகளில் அவரின் தவறுகளே முதன்மையாக இருக்கின்றது.
சில சில நண்பர்கள் செயலதிபர் உமா மகேஸ்வரனின் எல்லா தவறுகளும் தெரிந்துகொண்டு, அதை தட்டிக் கேட்காமல், அவரின் தவறுகளுக்கு நானும் துணை போனதாகவும், இல்லாவிட்டால் இயக்கத்தை விட்டு விலகி போய் இருக்க வேண்டும் என்று கேட்டார்கள். தவறை தட்டிக் கேட்க எமது இயக்கத்தில் எனக்கு எந்த பக்க பலமும் இல்லை. அதேநேரம் தனி ஒருவனாக தவறை தட்டிக் கேட்க நான் முட்டாளும் இல்லை. அதேநேரம் நான் இயக்கத்தில் இருந்தவரை நடந்த தவறுகளுக்கு இயக்க உறுப்பினர் என்ற முறையில் நானும் தான் பொறுப்பு என்பதை மறுக்கவில்லை.நானும், அதே மாதிரி பல பொறுப்புக்களில் இருந்த தோழர்களும் எமது வேலைகளை தவறுகள் இன்றி சிறப்பாக செய்தோம். நாங்களும் எங்கள்வேலைகளில் தவறுகள் செய்துசொகுசாக இன்று வாழ்ந்திருந்தால் இந்தப் பதிவுகள் வந்திருக்காது. இயக்கத்துக்கு வந்த நான் உட்பட பல தோழர்களுக்கு உமாஉமாமகேஸ்வரன் மட்டும் இயக்கமாக தெரியவில்லை. அதிலிருந்த ஆயிரக்கணக்கான தோழர்களும் இயக்கமாக தெரிந்தார்கள். நான் 1976 ஆண்டு கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே தமிழர் விடுதலைக் கூட்டணியின் தீவிர அரசியலில் இருந்தேன்.1979 ஆண்டு முதல் பயங்கரவாத தடை பிரிகேடியர் வீரதுங்க முகாமிக்கு கொழும்பிலிருந்து கைதுசெய்யப்பட்டு கொண்டு போன அவர்களில் நானும் ஒருவன். சந்தர்ப்ப வசத்தில் இயக்கத்துக்கு வரவில்லை. எமது இயக்கம் ஒருநாள் நல்ல நிலைமைக்கு வரும். போராட்டத்தில் முக்கியப் பங்கு பெறும் என்ற நம்பிக்கை இருந்தபடியால் இயக்கத்தை விட்டு போவதற்கு அன்று எவ்வளவோ வசதி இருந்தும் மனம் வரவில்லை.
1989 ஆண்டு கொழும்பு போய் அங்கு இயக்க நிலைமைகள், செயலதிபர் உமாமகேஸ்வரன் பற்றிய பல உண்மைகளை தெரிந்த பின்பு, இயக்கத்தை விட்டு போய்விட வேண்டும் என்று எண்ணம் மேலோங்கியது. அதேநேரம் மனம் விட்டு பேசக் கூடிய பல தோழர்களிடம் கழக தவறுகளை மனம்விட்டு தைரியமாக பேசக் கூடியதாக இருந்தது. இதற்கு காரணம் வசந்த்.
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வந்துவிட்டன. யாழ் மாவட்டத்தில் நுவரெலியா மாவட்டத்தில் எங்களுக்கு எந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவியும் கிடைக்கவில்லை. எதிர்பார்த்ததுதான் ஆனால் எல்லோர் முகத்திலும் ஒரு சோகம் தெரிந்தது. உமாமகேஸ்வரன் மட்டும் மிகக் கடுமையாக நடந்து கொண்டார். தள மாநாட்டை கூட்டி, இயக்கத்தை சீர்திருத்த வேண்டும், ஏதோ தோழர்கள் தான் தவறானவர்கள் மாதிரி காட்டிக்கொண்டார்.
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, balakumar2 said:

அண்ணா... நீங்கள் சொன்ன இடத்தில் ஒரு பத்தோ பதினைந்தோ தான் இருக்கீறது(தொடர்).  மொத்தமாகவும் சில்லறையாகவும் எங்கு கிடைக்கும்?

(கிடைத்தால் யாழில் மொத்தமாக எழுதி ஒரு ஆவணபடுத்தி விடலாம். அதான் கேட்கிறேன். படங்களோடு போட்டுவிடுவேன். தயவு கூர்ந்து கூறுங்கள்.)

பிரைவேட் ல் உங்கள் மெயில் ஐடி யை போட்டு விடுங்கள் பகுதி 1லிருந்து கடைசியாய் அவர் போட்ட பகுதி 77 மட்டும் உள்ளது .முதலில் இருபக்கமும் அனுமதி எடுக்கப்பாருங்கள் வெற்றியிடமும் ஓம் படுவாரோ தெரியலை ? அதே போல் இங்கும் நிர்வாகத்திடம் அனுமதியை கேட்டு விடுங்கள் என்னால் அவற்றை இணைக்கமுடியாது ஈழம் என்ற கனவுடன் வெளிக்கிட்டவர்களை இந்தியாவில் வைத்தே போட்டு தள்ளி யுள்ளார்கள் யார் பின்தளம் அமைக்க உதவினார்களோ அந்த மக்களை கொள்ளை கொலை பாலியல் வல்லுறவு செய்துள்ளார்கள் ராஜீவ் கொலைக்கு முன்பே தென் இந்திய மக்களின் வெறுப்பை உருவாக்கி உள்ளார்கள் எனக்கு சில சமயங்களில் உமாமகேஸ்வரன் என்பவர் இலங்கை அரசின் திட்டமிடப்பட்டு  அனுப்ப பட்ட உளவாளியோ என்ற சந்தேகம் பல இடங்களில் வந்து போவதை தவிர்க்க முடியவில்லை .

பாஸ்தியாம்பிள்ளை அழிப்பில் செட்டியை  போட்டு கொடுத்தவர் என்று உமாவும் ஊர்மிளாவும் பிரபாகரனை நம்ப வைக்கிறார்கள்   இது அய்யரின் பதிவில் எடுக்கப்பட்டது ஆனால்  நான் கேள்விப்பட்டது ஊர்மிளாக்கு செட்டியின்  கடிதம் கிடைத்தவிடையம் சந்தேகமானது அதை தவிர செட்டியின் எழுத்து திறமை யற்றவர் . இப்படி பல துரோகங்கள் வரலாற்றில் மறைக்கப்பட்டுள்ளது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பெருமாள் said:

பிரைவேட் ல் உங்கள் மெயில் ஐடி யை போட்டு விடுங்கள் பகுதி 1லிருந்து கடைசியாய் அவர் போட்ட பகுதி 77 மட்டும் உள்ளது .முதலில் இருபக்கமும் அனுமதி எடுக்கப்பாருங்கள் வெற்றியிடமும் ஓம் படுவாரோ தெரியலை ? அதே போல் இங்கும் நிர்வாகத்திடம் அனுமதியை கேட்டு விடுங்கள் என்னால் அவற்றை இணைக்கமுடியாது ஈழம் என்ற கனவுடன் வெளிக்கிட்டவர்களை இந்தியாவில் வைத்தே போட்டு தள்ளி யுள்ளார்கள் யார் பின்தளம் அமைக்க உதவினார்களோ அந்த மக்களை கொள்ளை கொலை பாலியல் வல்லுறவு செய்துள்ளார்கள் ராஜீவ் கொலைக்கு முன்பே தென் இந்திய மக்களின் வெறுப்பை உருவாக்கி உள்ளார்கள் எனக்கு சில சமயங்களில் உமாமகேஸ்வரன் என்பவர் இலங்கை அரசின் திட்டமிடப்பட்டு  அனுப்ப பட்ட உளவாளியோ என்ற சந்தேகம் பல இடங்களில் வந்து போவதை தவிர்க்க முடியவில்லை .

பாஸ்தியாம்பிள்ளை அழிப்பில் செட்டியை  போட்டு கொடுத்தவர் என்று உமாவும் ஊர்மிளாவும் பிரபாகரனை நம்ப வைக்கிறார்கள்   இது அய்யரின் பதிவில் எடுக்கப்பட்டது ஆனால்  நான் கேள்விப்பட்டது ஊர்மிளாக்கு செட்டியின்  கடிதம் கிடைத்தவிடையம் சந்தேகமானது அதை தவிர செட்டியின் எழுத்து திறமை யற்றவர் . இப்படி பல துரோகங்கள் வரலாற்றில் மறைக்கப்பட்டுள்ளது.

அண்ணே, நான் எல்லாத்தையும் எழுதப்போறதில்லை. அந்த தொடரில் எங்கெல்லாம் புளொட் செய்த திருகுதாளங்கள் வருகிறதோ அவற்றை மட்டும் எடுத்து வைத்துவிடுவோம். பின்னாளில் யாரேனும் கம்பு சுற்ற வந்தால் இதை எடுத்துக் காட்டி விடுவோம்... 😁😁


இந்த எண்ணம் எப்படி?😇

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எதை எவர் மறைத்தாலும் அத்தனையும் பூனை கண்ணை மூடி கொண்டு பால்குடித்த கதை தான்.  அப்பாவிகளை துரோகி என்று அவதூறு பட்டம் கொடுத்து படுகொலை செய்த‍ விடயத்தில் ஈழப்போராட்டத்தில் ஈடுபட்ட  அனைத்து ஆயுத இயக்கங்களும் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல என்பது மக்களுக்கு தெரியும். சாதாரணமாக மக்கள் அனைவரும் உரையாடும் விடயம் இது. 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, balakumar2 said:

அண்ணே, நான் எல்லாத்தையும் எழுதப்போறதில்லை. அந்த தொடரில் எங்கெல்லாம் புளொட் செய்த திருகுதாளங்கள் வருகிறதோ அவற்றை மட்டும் எடுத்து வைத்துவிடுவோம். பின்னாளில் யாரேனும் கம்பு சுற்ற வந்தால் இதை எடுத்துக் காட்டி விடுவோம்... 😁😁


இந்த எண்ணம் எப்படி?😇

ஒருத்தர் இப்பவே கம்பு சுற்றுகிரார் முதலில் அவரை கவனியுங்கள் .😁

 • Haha 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
4 hours ago, tulpen said:

எதை எவர் மறைத்தாலும் அத்தனையும் பூனை கண்ணை மூடி கொண்டு பால்குடித்த கதை தான்.  அப்பாவிகளை துரோகி என்று அவதூறு பட்டம் கொடுத்து படுகொலை செய்த‍ விடயத்தில் ஈழப்போராட்டத்தில் ஈடுபட்ட  அனைத்து ஆயுத இயக்கங்களும் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல என்பது மக்களுக்கு தெரியும். சாதாரணமாக மக்கள் அனைவரும் உரையாடும் விடயம் இது. 

ருல்பன்/துல்பன் அண்ணே...
நான் அவங்கள பற்றி எழுதப் போறன் என்டு சொன்னதுக்கு நீங்கள் எதுக்கண்ணே குதிக்கிறியள்? 

(செஞ்சத தானே எழுதப் போறன் என்டனான்🤔. இதுக்கே இவ்வளோ துள்ளலா?🤔.... கிரிகாலா கவனமா இரு😖)
 

3 hours ago, பெருமாள் said:

ஒருத்தர் இப்பவே கம்பு சுற்றுகிரார் முதலில் அவரை கவனியுங்கள் .😁

கூத்து தொடங்குறத்துக்கு முன்னாலையே கல்லடியா😖😖Rendu Images : Vadivelu Memes Images Download | Vadivelu In Rendu Tamil Memes | Online Memes Generator For Vadivelu Create Your Own Memes Using Rendu Images - Memees.in

Edited by balakumar2
 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, tulpen said:

எதை எவர் மறைத்தாலும் அத்தனையும் பூனை கண்ணை மூடி கொண்டு பால்குடித்த கதை தான்.  அப்பாவிகளை துரோகி என்று அவதூறு பட்டம் கொடுத்து படுகொலை செய்த‍ விடயத்தில் ஈழப்போராட்டத்தில் ஈடுபட்ட  அனைத்து ஆயுத இயக்கங்களும் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல என்பது மக்களுக்கு தெரியும். சாதாரணமாக மக்கள் அனைவரும் உரையாடும் விடயம் இது. 

எல்லாவற்றையும் விட அதி  பயங்கரமானது ஈழம் வேண்டும் என்று நம்பி போராட  வந்தவர்களை உமாமகேஸ்வரனின் கட்டளைக்கு பணிந்து ராமேஸ்வரம் சவுக்கம் காடுகளில் இரவோடு இரவாக மண்டையில் போட்டு தாட்டது . உமாமகேஸ்வரன் ஜே ஆரின் திட்டமிடப்பட்டு தமிழரின் போராட்டத்தை அழிக்க  என அனுப்ப பட்ட ஒரு ஆள் ஊர்மிளாவும் அவ்வாறானவரே.

உலகிலே தன்  இனத்துக்கு என்று போராட வெளிக்கிட்டு அதே போராளிகளால் தோழர்களால்  கொல்லப்பட்ட துரோகி உமாமகேஸ்வரன்தான் .

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, balakumar2 said:

ருல்பன்/துல்பன் அண்ணே...
நான் அவங்கள பற்றி எழுதப் போறன் என்டு சொன்னதுக்கு நீங்கள் எதுக்கண்ணே குதிக்கிறியள்? 

(செஞ்சத தானே எழுதப் போறன் என்டனான்🤔. இதுக்கே இவ்வளோ துள்ளலா?🤔.... கிரிகாலா கவனமா இரு😖)
 

கூத்து தொடங்குறத்துக்கு முன்னாலையே கல்லடியா😖😖Rendu Images : Vadivelu Memes Images Download | Vadivelu In Rendu Tamil Memes | Online Memes Generator For Vadivelu Create Your Own Memes Using Rendu Images - Memees.in

நான் உங்களை பற்றி கூறவில்லையே. உங்களுக்கு என்ன பிரச்சனை? நான் கூறியது அனைத்து இயகங்களும் செய்த திருகு தாளங்கள் குறித்து. அது தமிழ்மக்கள் அனைவரும் அறிந்த வெளிப்படையான விடயங்கள் தானே. அப்படி நேர்மையாக அனைத்தையும்  எழுதும் நேர்மை உங்களிடம்  இல்லை என்பதை வெளிப்படையாக ஒத்துக்கொண்டதற்கு நன்றி. விருப்பப்படி நீங்கள் எழுதலாம் 

2 minutes ago, பெருமாள் said:

எல்லாவற்றையும் விட அதி  பயங்கரமானது ஈழம் வேண்டும் என்று நம்பி போராட  வந்தவர்களை உமாமகேஸ்வரனின் கட்டளைக்கு பணிந்து ராமேஸ்வரம் சவுக்கம் காடுகளில் இரவோடு இரவாக மண்டையில் போட்டு தாட்டது . உமாமகேஸ்வரன் ஜே ஆரின் திட்டமிடப்பட்டு தமிழரின் போராட்டத்தை அழிக்க  என அனுப்ப பட்ட ஒரு ஆள் ஊர்மிளாவும் அவ்வாறானவரே.

உலகிலே தன்  இனத்துக்கு என்று போராட வெளிக்கிட்டு அதே போராளிகளால் தோழர்களால்  கொல்லப்பட்ட துரோகி உமாமகேஸ்வரன்தான் .

உண்மை அதை நான் மறுக்கவில்லை. நீங்கள் கூறியது போல் ஈத்திற்காக போராட வந்தவர்களை கொன்றவர்களும் , ஈழத்திற்கக போராட வந்த ரெலோ இயக்க இளம் போராளிகளை படு கொலை செய்தவர்களும், கைது செய்து வைத்திருந்த ஈபிஆர்எல் எவ போராளிகளை ஈவிரக்கமின்று படுகொலை செய்தவர்களும் என்னை பொறுத்தவரை ஒரே ரகத்தினரே. 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, tulpen said:

உண்மை அதை நான் மறுக்கவில்லை. நீங்கள் கூறியது போல் ஈத்திற்காக போராட வந்தவர்களை கொன்றவர்களும் , ஈழத்திற்கக போராட வந்த ரெலோ இயக்க இளம் போராளிகளை படு கொலை செய்தவர்களும், கைது செய்து வைத்திருந்த ஈபிஆர்எல் எவ போராளிகளை ஈவிரக்கமின்று படுகொலை செய்தவர்களும் என்னை பொறுத்தவரை ஒரே ரகத்தினரே. 

தமிழ் ஈழ கனவுடன் இளவயதில்  வந்தவர்களை தலைமையை எதிர்த்தார்கள் என்ற சப்பை காரணம் சொல்லி ஆயிரக்கணக்கான இளம் தலைமுறையை தென்னிந்திய சவுக்கம்காடுகளுக்கள் உரமாக போட்டவர்கள்  அவர்களை விட  மக்களுக்காக போராடி மாண்டவர்கள் மீதுதான் உங்கள் ஓரவஞ்சனை பலதடவை அதுக்கான காரணம் கூறப்பட்டது  நல்லாயிருக்கு உங்கள் நியாயம் அதை எதிர்பார்ப்பது என் முட்டாள் தனம் .

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
5 hours ago, tulpen said:

நான் உங்களை பற்றி கூறவில்லையே.

அண்ணே... இவ்வளவு நாளாக இத்திரிக்கு வராமல், நான் புளட்டின் திருகுதாளங்களை ஆவணப்படுத்தபோகிறேன் என்று பறைந்தவுடன்,  தாங்கள் வலியவந்து அவ்வாறு கருத்திட்டதன் நோக்கம்? 

(எனது எண்ணம்: தங்களது புலிவெறுப்பும் பிற ஒட்டுக்குழுக்கள் மீதான விருப்பமுமே.😇😁  )
 

Quote

உங்களுக்கு என்ன பிரச்சனை? நான் கூறியது அனைத்து இயகங்களும் செய்த திருகு தாளங்கள் குறித்து. அது தமிழ்மக்கள் அனைவரும் அறிந்த வெளிப்படையான விடயங்கள் தானே.

அண்ணே,

நான் அமைதியாகத் தானே கேட்டேன்?

தாங்கள் ஏன் பொங்குகிறீர்கள்? 
 
(குற்ற உணர்ச்சியால் பொங்குகிறீர்கள் போலும். சரி, பரவாயில்லை, மூத்தவர்தானே.🤣)

Quote

அப்படி நேர்மையாக அனைத்தையும்  எழுதும் நேர்மை உங்களிடம்  இல்லை

அண்ணே, நான் வேறொருவர் எழுதியதை ஆவணப்படுத்தப்போகிறேன் என்றதற்கும் நேர்மைக்கும் என்ன தொடர்பு என்று இந்த அவையில் மொழிவீர்களா?😀 இது வரை ஆவணப்படுத்தப்படாத புளொட்டின் திருகுதாளங்களை நான் நேர்மையாகத்தான் ஆவணப்படுத்த போகிறேன்.. இதில் உங்களுக்கு என்ன சிக்கல்?

ஓ, அதாவது நீங்கள் சார்ந்த இயக்கத்தின் திருகுதாளங்களை ஆவணப்படுத்த வேண்டாம் என்று மறைமுகமாக கெஞ்சுகிறீர்கள்? அப்படித்தானே😜😜

அப்புறம், நான் கண்டவரை, நீங்களே இதுவரை நேர்மையாக எழுதியதில்லை,🥴  இதில் அடுத்தவனிடம் ஏனதை எதிர்பார்க்கிறீர்கள்? 😒

 • குறிப்பு: நான் நேர்மையாகத்தான் ஆவணப்படுத்துவேன். சொட்டுக் கூட தவற விடமாட்டேன். கவலை வேண்டா😁😆

----------------------------------------------------------------------------------

 ஆனால், நான் முதலில் கேட்ட கேள்விக்கு நீங்கள் கடைசிவரை மறுமொழி அளிக்கவில்லை.
மீண்டும்... 

 "நான் அவங்களைப் பற்றி ஆவணப்படுத்தப் போகிறேன் என்று அறிவித்ததற்கு நீங்கள் ஏனண்ணே குதிக்கிறீர்கள்? "🤣

 

 

Edited by balakumar2
 • Thanks 1
 • Haha 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, balakumar2 said:

 "நான் அவங்களைப் பற்றி ஆவணப்படுத்தப் போகிறேன் என்று அறிவித்ததற்கு நீங்கள் ஏனண்ணே குதிக்கிறீர்கள்? "🤣

அவர் ஏன் குதிக்கிறார்  தங்களின் உண்மைகள் வெளியில் வந்து விடும் அதன் பின் புலியின் மீது கல் எறிய  முடியாது கீழே வெற்றி செல்வன் தொடர் நம்பர் 67ல் ஒரு சிறு சம்பவம் விபரிக்கின்றார் .

 

தினசரி காலையில் தமிழ்நாடு காவல்துறை கியூ பிராஞ்ச் அதிகாரிகள் சந்திக்க வந்து விடுவார்கள். எவ்வளவுதான் அவர்கள் நட்பாக பழகினாலும் பேசினாலும் மனதுக்குள் ஒரு பயம் இருந்துகொண்டே இருக்கும். காரணம் எமது செயலதிபர் உமா மகேஸ்வரனின் நேரடி கண்காணிப்பில் இயங்கிய வசந்த் தலைமையிலானரகசிய கொள்ளை கோஷ்டி, பற்றிய விபரங்கள் தெரிந்திருக்குமோ அல்லது அவர்கள் யாரும் பிடிபட்டு பிரச்சினையோ என்று பயமாய் இருக்கும். தமிழகத்தில் எனது தலைமையில் எதுவும் சட்டவிரோதமாக நடைபெற்றால் என்னையும் தூக்கி சிறையில் போடுவதாக கூறியிருந்தார்கள். நான் இதைப்பற்றி பெருமுயற்சி எடுத்து கஷ்டப்பட்டு ஒருமுறை கொழும்பில் இருந்த செயலதிபர் உமா மகேஸ்வரனுக்கு இதுபற்றி கூறிய போது,என்ன நடந்தாலும் அவர்கள் எமது இயக்கத்தில் எனது கட்டுப்பாட்டில் இல்லாதவர்கள் என்று கூறி விடும்படி கூறி இருந்தார். அதோடு அவர்களின் நடவடிக்கைகளில் குறுக்கிடும் செய்யக்கூடாது என கட்டளையிட்டார்.
இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம் இயக்கங்களை சேர்ந்தவர்களை தற்காலிகமாக கைது செய்து போலீஸ் நிலையத்தில் காவல் வைப்பார்கள். கியூ பிரான்ச் எஸ்பி முதல் நாளே ரகசியமாக கூறிவிடுவார் நாளை உங்களையெல்லாம் தற்காலிகமாக கைது செய்ய அதிகாரிகள் வருவார்கள் என்று. நானும் என்னோடு இருந்த தோழர்களும் இரவு முன் கதவுக்கு பூட்டு போட்டுவிட்டு பின்கதவால் வீட்டுக்குள் வந்து லைட் எல்லாம் மறைத்துவிட்டு சத்தம் போடாமல் இருப்போம். அதிகாலை நாலு மணிக்கு கியூ பிரான்ச் போலீசார் வந்து பார்த்து வீட்டைப் பூட்டிவிட்டு ஓடிவிட்டார்கள் என்று கதைப்பது கேட்கும். அடுத்தநாள் பகல் வரை உள்ளேயே இருப்போம்.பின்பு எங்களது விளையாட்டு எங்களை கண்காணிக்கும் கியூ பிராஞ்ச் இன்ஸ்பெக்டர் ஏகாம்பரத்துக்கு தெரிந்துவிட்டது. நாங்கள் எந்தவித பிரச்சினையும் கொடுக்காததால், எங்களை கண்டும் காணாமல் விட்டு விட்டார். எங்களை காலையில் சந்திக்க வரும் கியூ பிரான்ச் ஹெட் கான்ஸ்டபிள் ராஜசேகரன் பலமுறை எனக்கும் நண்பர்களுக்கு தேநீர் வாங்கிக் கொடுத்திருக்கிறார். எங்கள் நிலையறிந்து அனைவருக்கும் பகல் சாப்பிட பல நாள் காசு கொடுத்து இருக்கிறார். நாங்கள் மறுத்தாலும் ஒரு சகோதரனாக நினைத்து வாங்கிக்கொள் என்று கூறுவர். அவர்கள் செய்த உதவியை மறக்க முடியாது. இவர்கள் எங்களுக்கு மட்டுமல்ல கஷ்டப்பட்ட பல இலங்கைத் தமிழர்களுக்கு பலவித உதவிகள் செய்து உள்ளார்கள். அதேநேரம் குற்றச்செயலில் ஈடுபட்ட இலங்கை தமிழர்கள், ஈழ விடுதலை என்று கூறிக்கொண்டு, இந்தியாவில் தங்கியிருந்து கொண்டு தமிழ் நாட்டு விடுதலை இயக்கங்களோடு, இந்தியா எதிர்ப்பு இயக்கங்களோடு சேர்ந்து மறைமுகமாக இயங்கும் இலங்கை தமிழர்கள் போன்றவர்கள் பிடிபட்டால் மிகக் கடுமையான சித்திரவதை தான். இப்படியானவர்களின் செயலால் பலஅதிகாரிகள் அதிகாரிகள் எல்லா இலங்கை தமிழர்களையும் குற்றவாளிகள் போல் தான் பார்த்தார்கள். ஒரு சில அதிகாரிகள் தான் இலங்கைத் தமிழர்களின் வித்தியாசங்களை கண்டு மனிதாபிமானத்தோடு நடந்து கொண்டார்கள். குறிப்பாக கியூ பிரான்ச்இன்ஸ்பெக்டர்கள் ஏகாம்பரம் முரளி போன்றவர்கள் ஒரு இயக்க பையனைப் பார்த்து எந்த இயக்கம் என்று சரியாக கூறிவிடுவார்கள். ஒரு முறை அவரிடம் எப்படி உங்களால் முடிகிறது என்று கேட்டேன். ஒவ்வொரு இயக்க பையன்களுக்கும் நடை உடை பேசும் விதத்தில் வித்தியாசம் இருக்கிறது. எங்கள் இயக்கத்தை பற்றி கேட்டேன். உங்கள்இயக்க தோழர்கள் எடுத்தெறிந்து பேசுவார்கள், அதிகாரிகளை மதிக்கமாட்டார்கள். சரியாக பதில் சொல்ல மாட்டார்கள். நீயும், சித்தார்த்தனும் மட்டும்தான் வித்தியாசமானவர்கள் அதிகாரிகளை மதித்து நடந்து கொண்டவர்கள் என்று ஏகாம்பரம் இன்ஸ்பெக்டர் கூறினார். ஆனால் பொதுவாக தமிழ்நாட்டு கியூ பிரான்ச்அதிகாரிகளை இலங்கை தமிழர்கள் எல்லோரும் கடுமையாகவிமர்சித்து எழுதுகிறார்கள் எழுதுவார்கள். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க ஏற்பட்ட அமைப்பு, ஈழவிடுதலை என்று கூறிக்கொண்டு தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்குக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக நாங்கள் நடந்து கொண்டால், அவர்கள் அமைதியாகபார்த்துக் கொண்டிருப்பார்கள், எங்களை கௌரவமாக நடத்துவார்கள் என எதிர்பார்ப்பது தவறு. அதேநேரம் ஒவ்வொரு இயக்கமும் தங்கள் இயக்கத்துக்கும், தங்கள் தலைமைக்கும் பிரச்சினை வந்துவிடக் கூடாது என்று சொந்த தமிழ் இளைஞர்களை பிடித்து சித்திரவதை செய்து கொலை செய்து இருக்கிறோம். ஒரு விடுதலை இயக்கமே இப்படி இருக்கும்போது, தமிழ்நாட்டு அரசாங்கத்தின் போலீசார் மட்டும் எங்களிடம் நாங்கள் என்ன செய்தாலும் அமைதியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியா,?
ஒரு நாள் அதிகாலை வசந்த், கரூர் விஜயனும் ஒரு வேனை எடுத்துக் கொண்டு வந்து, சென்னையில் இருந்த இயக்க முக்கியமான ஆவணங்கள், நாலு பெரிய பெட்டிகளிலும், நான் டெல்லியில் சேகரித்து வைத்திருந்த எமது இயக்க, மற்ற இயக்க வெளியீடுகள் மற்றும் முக்கியமான ஆவணங்கள் எல்லாம் மூன்று பெட்டிகளில் இருந்தன, எல்லாவற்றையும் இலங்கைக்கு அனுப்ப lசொல்லி செயலதிபர் உமா மகேஸ்வரன் சொல்லியிருக்கிறார் எனவும் அவற்றை எடுத்துக்கொண்டு தாங்கள் போவதாகவும் சொன்னார்கள். அதோடு இரண்டு நாளில் தாங்கள் செயலதிபர் ஓடு வயர்லெஸ் செட்டில் பேசப் போவதாகவும், விரும்பினால்என்னையும் வரச் சொன்னார்கள். எனக்கும் ஒரு மாற்றம் என்று சந்தோசமாக அவர்களுடன் வேனில் கிளம்பிவிட்டேன். வசந்தும், கரூர் விஜியனும் மாரி மாரி வண்டியோட்டி போனார்கள். போகும்போது திருச்சி சமயபுரத்தில் வைத்து வண்டியின் முன் கண்ணாடி சிதறிவிட்டது. ஒரு மாதிரி ஒட்டிக் கொண்டு போய் கரூரில் சிறு தொழில் செய்த வசந்தின் நண்பன் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த கணவன் மனைவி அவர்கள் வீட்டில் பாதுகாப்பாக எமது இயக்க எல்லா பெட்டிகளையும் இறக்கி வைத்துவிட்டு, நாங்கள் திருச்சி ஸ்ரீரங்கம் வசந்தின் இடத்திலிருந்து உடனடியாக நானும் வசந்ததும் ரயில் மூலம் கேரளா போனோம்.
போகும்போது வசந்த் கேரளாவின் பல இடங்களை குறிப்பிட்டுக் காட்டினார். அந்த இடங்களில் எல்லாம் தாங்கள்கைவரிசையை காட்டியுள்ளதாக கூறினார். நாங்கள் திருவனந்தபுரம் போய் இறங்கி, இருந்து பஸ் மூலம் இரண்டு மணி நேரம் பயணம் செய்து, பின்பு ஜீப்பில் காட்டுப் பிரதேசம் ரப்பர் தோட்டங்கள் உள்ள இடங்களில் இரண்டு மணி நேரம் பயணம் செய்து, அதன்பின்பு 2மணிநேரம் மலை உச்சியில் நடை பயணம் செய்து வசந்த் கூட்டிக்கொண்டு போனார். சன நடமாட்டமே இல்லை. எனக்கு பயமாகி விட்டது. செயலதிபர் உமா மகேஸ்வரனும் வசந்த இடம் என்னை கொலை செய்ய கூறிவிட்டார் என்று நம்பி விட்டேன். வசந்த் இடம் உண்மையைக் கூறும்படி கேட்டேன் என்னை கொலை செய்ய தானே கூட்டி கொண்டு போகிறாய் என்று. வசந்த் சிரித்த சிரிப்பு இருக்கிறதே, எனக்கு பயமாகி விட்டது. எமது வயர்லெஸ் செட் இங்கு மலை உச்சியில் இருக்கும் கேரள தீவிர நக்சலைட் ஒருவரின் வீட்டில் இருப்பதாகவும் அங்கு எமது தோழர் ஒருவர் நிரந்தரமாக இருப்பதாகவும் கூறினார். எங்களைக் கண்டவுடன் எமது தோழருக்கு மிகவும் சந்தோசம். வெளியுலகத் தொடர்பும் இன்றி, டீ குடிப்பதற்கு கூட மூன்று கிலோ மீட்டர் நடந்து போய் வர வேண்டும். கேரளா நக்சலைட் தோழரின் தூரத்தில் இருக்கும் ரகசிய வீட்டிலிருந்து காலையில் தேநீர் வரும் . பின்பு பகலும் இரவும் சோறும் மாட்டு இறைச்சியும் தாராளமாக வரும். நக்சலைட்தோழரும் வந்து இருந்து கதைத்துக் கொண்டிருப்பார். கரண்ட் இல்லை. எமது வயர்லெஸ் செட் கார் பேட்டரி மூலம் இயக்கி கொண்டிருந்தார்கள்.
இரவில் வீட்டைச்சுற்றி காட்டு மிருகங்களின் நடமாட்டம் இருக்கும். மயான அமைதி. அங்கிருந்த நாலு நாட்களும் செயலதிபர் உமாமகேஸ்வரன்உடன் வசந்த தொடர்பு கொள்ள முடியவில்லை. நானும் வசந்தம் திரும்ப வரும்போது அங்கிருந்த தோழருக்கு மிகவும் கவலை சோகம். இந்த கேரளா நக்சலைட் தோழர் நாங்கள் கொண்டு போக அன்போடு நிறைய செவ்வாழை பழங்கள் கொடுத்துவிட்டார். நானும் வசந்தனும் திரும்ப திருவனந்தபுரம் மூவி பஸ் மூலம் செங்கோட்டை வழியாக மதுரை வந்தோம். வரும்போது வசந்த் பல கதைகளைக் கூறினார். இந்தியாவுக்கு கொடுத்த ஆயுதங்களை உமா மகேஸ்வரன் இந்த கேரளா நக்சலைட் தொடர்பு மூலம் பல ஆயுதங்களை விற்றதாகவும், சிலதை சும்மா கொடுத்ததாகவும் கூறினர். அதோடு கேரளாவில் தாங்கள் இந்த நக்சலைட்டுகளின் உதவிய கொள்ளைகள் செய்திருப்பதாகவும், அந்தப் பணத்தையும் தங்கமாக மாற்றி, இலங்கைக்கு செயலதிபர் உமாமகேஸ்வரநுக்கு அனுப்பி வருவதாகவும் கூறினர். பயணத்தின்போது இருவரும் மனம் விட்டுபேசிக் கொண்டதில் நாங்கள் ஒரு விடுதலை இயக்கத்தை விட ஒரு கொள்ளை கூட்ட இயக்கத்தில் இருப்பது போல் தெரிகிறது என்று கவலைப் பட்டோம்.
வசந்த் தவறான இந்த வேலைகளை செய்தாலும், மனதுக்குள் எமது இயக்கத் தலைமையைப் பற்றி கொதித்து கொண்டிருந்தான் என்பதுதான் உண்மை. தனது அம்மா அப்பா தான் செய்யும் இந்த வேலைகளை வெளிப்பட்டால் உயிரையே விட்டு விடுவார்கள், அதோடு தானும் இயக்கத்திற்கு வரும்போது தனது வாழ்க்கை போராளியாக இல்லாமல் ஒரு பொறுக்கியாக மாறும் என்று நினைக்கவே இல்லை என்றும் கூறி வருத்தப்பட்டார். பல எமது இயக்கத் தோழர்களின் மனநிலை உண்மையில் அப்படித்தான் இருந்தது வெளியில் காட்டிக் கொள்ள முடியவில்லை என்பது தான் உண்மை.
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
12 hours ago, balakumar2 said:

அண்ணே... இவ்வளவு நாளாக இத்திரிக்கு வராமல், நான் புளட்டின் திருகுதாளங்களை ஆவணப்படுத்தபோகிறேன் என்று பறைந்தவுடன்,  தாங்கள் வலியவந்து அவ்வாறு கருத்திட்டதன் நோக்கம்? 

(எனது எண்ணம்: தங்களது புலிவெறுப்பும் பிற ஒட்டுக்குழுக்கள் மீதான விருப்பமுமே.😇😁  )
 

அண்ணே,

நான் அமைதியாகத் தானே கேட்டேன்?

தாங்கள் ஏன் பொங்குகிறீர்கள்? 
 
(குற்ற உணர்ச்சியால் பொங்குகிறீர்கள் போலும். சரி, பரவாயில்லை, மூத்தவர்தானே.🤣)

அண்ணே, நான் வேறொருவர் எழுதியதை ஆவணப்படுத்தப்போகிறேன் என்றதற்கும் நேர்மைக்கும் என்ன தொடர்பு என்று இந்த அவையில் மொழிவீர்களா?😀 இது வரை ஆவணப்படுத்தப்படாத புளொட்டின் திருகுதாளங்களை நான் நேர்மையாகத்தான் ஆவணப்படுத்த போகிறேன்.. இதில் உங்களுக்கு என்ன சிக்கல்?

ஓ, அதாவது நீங்கள் சார்ந்த இயக்கத்தின் திருகுதாளங்களை ஆவணப்படுத்த வேண்டாம் என்று மறைமுகமாக கெஞ்சுகிறீர்கள்? அப்படித்தானே😜😜

அப்புறம், நான் கண்டவரை, நீங்களே இதுவரை நேர்மையாக எழுதியதில்லை,🥴  இதில் அடுத்தவனிடம் ஏனதை எதிர்பார்க்கிறீர்கள்? 😒

 • குறிப்பு: நான் நேர்மையாகத்தான் ஆவணப்படுத்துவேன். சொட்டுக் கூட தவற விடமாட்டேன். கவலை வேண்டா😁😆

----------------------------------------------------------------------------------

 ஆனால், நான் முதலில் கேட்ட கேள்விக்கு நீங்கள் கடைசிவரை மறுமொழி அளிக்கவில்லை.
மீண்டும்... 

 "நான் அவங்களைப் பற்றி ஆவணப்படுத்தப் போகிறேன் என்று அறிவித்ததற்கு நீங்கள் ஏனண்ணே குதிக்கிறீர்கள்? "🤣

 

 

பாலகுமார், நான் கொதிக்கவும் இல்லை பொங்கவும் இல்லை. எனது கருத்தை மட்டுமே பதிவிட்டேன். நான்கு வரியில் பொதுவாக  நான் கூறிய உண்மை தெளிவானது. உங்களை கருத்தை பாதிப்பதும் அல்ல. சாதாரண அனைத்து தமிழ் மக்களுக்கும் தெரிந்த பகிரங்க உண்மைகளே. இதை எவராலும் மறைக்க முடியாது. தெளிவான அந்த கருத்து தவறானது என்று உங்கள் மனச்சாட்சியால் கூற முடியாது. அதனால் அதை மறுக்கவோ ஏற்றுக்கொள்ளவோ முடியாத நீங்கள் என்னை வலுக்கட்டாயமாக  ஏதோ ஒரு இயக்கத்திற்குள் அடைக்க முற்படுகின்றீர்கள். இதே யாழ் களத்தில் புலி எதிர்ப்பு உள்நோக்கத்தோடு புலிகளை கொச்சைபடுத்த முற்பட்டவர்களோடு  கூட நான் எதிர்த்து  விவாதித்துள்ளேன். என்னைப்பொறுத்தவரை கண்மூடித்தனமாக புலிஎதிர்ப்பு மனநிலை கொண்டவர்களும் கண்மூடித்தனமான புலிஆதரவு மனநிலை கொண்டவர்களும் ஒரே ரகத்தினரே. இவர்களில் எந்த வித்தியாசத்தையும் கண்டு பிடிக்க முடியாது. இந்த இரு ரகத்தினரும் எமது இனத்தை அழிக்கும் அழிவுச்சக்திகளே. இந்த இரு அழிவுச்சக்திகளின் அழிவில் தான் தாயகத்தில் தமிழ் மக்களின் தேசியத்தின் இருப்பு காப்பாற்றப்படும்.

வரலாற்றை அறிய விரும்பும் மாணவனாக உங்களை நீங்கள் உங்களை ஆரம்ப அறிமுகத்தில் அறிமுகப்படுத்தியதினீர்கள், ஒரு காலக்கட்டதின் வரலாறு என்றால் அக்காலகட்டத்தில் நடைபெற்ற எல்லா உணமைகளையும் கூறுவதேயாகும். இதில் பாரபட்சம் தேவையில்லை என்பதை மட்டுமே நான் உங்களுக்கு சுட்டிக்காட்டினேன்.  எந்த ஆயுதக்குழுவினதும் நீதிக்கு மாறான படுகொலைகளையும் மறைக்கவேண்டிய அவசியமோ, அவ்வாறு  படுகொலைகள் செய்த எந்த குற்றவாளிக்காகவும் வக்காலத்து வாங்கும் தேவை எனக்கும் இல்லை உங்களுக்கும் இல்லை.

எனது கருத்து உங்களுக்கு புரியவில்லை என்றால் மீண்டும் அந்த கருத்தை விளக்கமாக கூறுகிறேன்.

ஈழப்போராட்டம் என்று புறப்பட்ட இயக்கங்களான தமிழீழ விடுதலை புலிகள், புளொட், ரெலோ, ஈபிஆர்எல்எவ் ஆகிய நான்கு  இயக்கங்களிலும் முழுமையான அர்ப்பணிப்புடன் போராட வந்த தியாக போராளிகளும் இருந்தார்கள் அதேவேளை மிக மோசமான குற்றவாளிகளும் இருந்தார்கள். இந்த நான்கு இயக்கங்களின் தலைமைகளும் போராட வந்த அப்பாவி போராளிகளை ஈவிரக்கமற்று படுகொலை செய்த வரலாறு தமிழ் மக்களை அனைவருக்கும் தெரிந்த உண்மை.

 மேற்கண்ட நான் தெரிவித்த கருத்து தாயகத்திலோ, வெளிநாடுகளிலோ சாதாரண மக்கள் தம்முள்  உரையாடும் போது அடிக்கடி கூறும் கருத்து தான் இது.  ஆனால் ஒவ்வொரு இயக்கத்தின் விசுவாசிகளும் தமது இயக்கம் செய்த கொலைகளை மறைத்து அடுத்தவர் மீது பழி போட முற்படுவது தொடர்ந்து  நடைபெற்றே வருகிறது. பல உண்மைகள் மக்களுக்கு தெரியும் என்பதால் அது பலிக்காது என்பதே எனது எண்ணம். எனது இந்த கருத்து புளொட் செய்த அநியாய படுகொலைகளை வெளிக்கொண்டு வரும் தங்கள் முயற்சிக்கு எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாது. உங்கள் முயற்சியை ஆதரிக்கும்.

நான் எழுதிய மேற்கண்ட எனது கருத்துககளுக்கு மட்டும் தான் என்னால் பொறுப்பேற்கமுடியும். உங்களது  கற்பனையில் ஆயுத குழுக்களுக்குள் என்னை அடைத்து என்னை முத்திரை குத்தும் தந்திரங்களுக்கு என்னால் பொறுப்பேற்கவோ பதில் கூறவோ முடியாது.  

 

Edited by tulpen
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 23/4/2021 at 16:07, tulpen said:

 

உண்மை அதை நான் மறுக்கவில்லை. நீங்கள் கூறியது போல் ஈத்திற்காக போராட வந்தவர்களை கொன்றவர்களும் , ஈழத்திற்கக போராட வந்த ரெலோ இயக்க இளம் போராளிகளை படு கொலை செய்தவர்களும், கைது செய்து வைத்திருந்த ஈபிஆர்எல் எவ போராளிகளை ஈவிரக்கமின்று படுகொலை செய்தவர்களும் என்னை பொறுத்தவரை ஒரே ரகத்தினரே. 

ஈகத்துக்காக போராடவந்தவர்கள் தங்கள் வேலையை பார்த்துக்கொண்டு இருந்து இருக்கலாம் 
சொந்த போராளிகள் தளபதிகள் (தாஸ் அண்ணா உட்பட) கொன்றுவிட்டு 
ஊரில் ஏப்பம் விட்டுக்கொண்டு திரிந்ததை கூட பொறுத்துக்கொண்டுதான் போனார்கள் 

புலிகளின் தளபதி கப்டன் லிங்கத்தை வேட்டையாடி பின்பு கூட 
எல்லோரையும் ஓடும்படி நேருக்கு நேர் நின்று  ஒலிபெருக்கியியில் அறிவித்துவிட்டு 
நேரம் காலம் இடம் கூறிவிட்டுதான் ஆயுதங்களை வாங்க சென்றார்கள் 
அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்தவர்களை ... அதே பாணியில் எதிர்கொண்டார்கள்.

நேரடியாக போராட துப்புக்கெட்டவர்கள் தங்கள் வேலையை பார்த்துக்கொண்டு இருந்து இருக்கலாம் 
உங்களின் பொய்களை நம்புவதுக்கு உங்களை போன்ற சிலர்தான் உண்டு. 

புலி பசித்தாலும் புல்லை தின்னாது 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.