Jump to content

அமெரிக்கா அழைக்கிறது புலம்பெயர் தரப்பை. "உள்ளேன் ஐயா" சொல்ல எத்தனை பேர்

Recommended Posts

இந்த சலுகையை நிராகரிக்க வேண்டாம், அமெரிக்காவின் முன்னாள் நிர்வாகங்கள் புலிகளுக்கு பல சலுகைகளை கோரியுள்ளன.
அனைத்து கோரிக்கையும் புலிகளால் நிராகரிக்கப்பட்டது. அதன் விளைவு அனைவருக்கும் தெரியும்.
அனைத்து அமெரிக்க கோரிக்கைகளையும் யூதர்கள் திறமையாக நிர்வகித்தனர்.
விளைவு ஒரு சக்திவாய்ந்த நாடு இஸ்ரேல். இஸ்ரேல் தங்கள் நாட்டுக்கு ஒரு பெரிய விலை கொடுத்தார்.
இஸ்ரேலிஸ் மாமா சாமுக்கு பல முக்கியமான தொழில்நுட்பங்களை இலவசமாக வழங்கினார். மத்திய கிழக்கில் பிழைக்க.

Good Luck Tamils.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஈழப்பிரியன் said:

நான் ரெடி

நீங்க ரெடியா?

நானும் ரெடி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குணா நீங்க சொல்வதைத் தானே இந்தியா செய்திருந்தது.
தாங்கள் விரும்பிய மாதிரி செயற்படக் கூடியரை வைத்திருந்தது.
மீறிப் போன புலிகளை போட்டுத் தள்ள முயற்சி செய்து கடைசியில் வெற்றியும் கண்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று, நேற்று அல்ல, பல ஆண்டுகளாக சொல்லி வருகிறேன் இந்த தளத்தில்.

மருதருடனும், இன்னுமொருவருடனும் விவாதித்துளேன். 

ஹொங்கோங்க்கினை இழந்து விட்ட மேற்குலகுக்கு, ஒரு பொருளாதார தளம் தேவை படுகின்றனது.

ஆசியாவின் 7 பொருளாதார புலிகளும் பிரச்சனை உள்ளவர்கள். தென்கொரியாவின் பிரச்சனை வட கொரியா. தாய்லாந்தின் பிரச்சனை, அரசியல் நிலைப்பாட்டில் தளம்பல். இந்தோனேசியா, மலேசியா முஸ்லிம் நாடுகள். சிங்கப்பூரிலோ 72% சீனர்கள். தைவான், சீனாவின் கழுகுகண்களில். ஹொங்கோங் போயே போய் விட்டது.

இலங்கையில் சீனா தென்பகுதியில் புகுந்து விட்டது.

மிஞ்சி இருப்பது வட, கிழக்கு. அந்த பகுதிகளின், பூர்வீக  குடிகள் பலர் இப்போது மேலை நாடுகளின் குடிகள். நம்பிக்கை வைக்க கூடியவர்கள்.

இந்த அகதிகளாக சென்று குடிகளான, 'குடியியல் நிலை' சார்ந்த நம்பிக்கையே, மத்திய கிழக்கில், இஸ்ரேல் என்னும் பலமிக்க நாடு ஒன்றினை அமைக்கவும், இன்றுவரை அமெரிக்க சார்பு நாடாக அது இருக்கவும் முடிந்தது.

அந்த நம்பிக்கையே அமெரிக்கா கொண்டுள்ளது. அதனை செயல்படுத்தவே, இப்போதைய அழைப்பு மட்டுமல்ல, கோத்தபாய ஜனாதிபதி ஆகியதும் நடந்தது. 

ஒரு போர் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரது குரல் சர்வதேசத்தில் வலுவாக இராது என்பதாலேயே, அமெரிக்க குடியுரிமையினை வேகமாக ரத்து செய்து, போட்டி இட வைத்தார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

ஆசியாவின் 7 பொருளாதார புலிகளும் பிரச்சனை உள்ளவர்கள். தென்கொரியாவின் பிரச்சனை வட கொரியா. தாய்லாந்தின் பிரச்சனை, அரசியல் நிலைப்பாட்டில் தளம்பல். இந்தோனேசியா, மலேசியா முஸ்லிம் நாடுகள். சிங்கப்பூரிலோ 72% சீனர்கள். தைவான், சீனாவின் கழுகுகண்களில். ஹொங்கோங் போயே போய் விட்டது.

உண்மையிலேயே, உங்களுக்கு இந்தியா ஒரு பொருளாதாரப் பூனை மாதிரியாகவாவது தெரியவில்லையா,நாதம்?

ஐ ஆம் ரியல்லி ஸாட்...!😗

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, புங்கையூரன் said:

உண்மையிலேயே, உங்களுக்கு இந்தியா ஒரு பொருளாதாரப் பூனை மாதிரியாகவாவது தெரியவில்லையா,நாதம்?

ஐ ஆம் ரியல்லி ஸாட்...!😗

இந்தியாவின் வங்கியியல் துறை மிக, மிக மோசமானது. அது ஒழுங்காக, இருந்திருந்தால், விஜய், மல்லையா லண்டனில், இருக்க முடியாது. அதாவது கடனே கிடைத்திருக்காது.

பிரிட்டனில், வங்கி ஒன்றில், மில்லியன் கணக்கில் கடன் வாங்கிக் கொண்டு, புங்கையர், ஆஸ்திரேலியா ஓடி விட்டார் எண்டு நிலைமை ஒருபோதும் வராது. காரணம், கடன் - இடர் கணக்கு பண்ணி தான் கடனே கொடுப்பார்கள்.

Thomas Cook நிறுவனம், பலர் வேலை செய்து கொண்டிருந்தார்கள். 200மில்லியன் இருந்தால், தப்பி பிழைக்கும் என்ற நிலை. 

அரசும் உதவ மறுக்க, வங்கிகளும் கடன் தர மறுக்க, பழமையான ஒரு நிறுவனம், சுருண்டது.

loan -risk ஆய்வின் படி.... நிறுவனம் தாக்குப்பிடிக்காது என்று தெரிந்தே மறுத்தார்கள்.

இந்தியாவில், லஞ்சம், அரசியல் நெருக்கடி.... 

******

வட அமெரிக்காவிலும் பார்க்க, பிரிட்டனின் வங்கியியல் சிறப்பானது.

ஆசியாவில், ஹொங்கோங் தான் வங்கியியலில் முதலாம் இடம். அங்கே தான் HSBC வங்கி தலைமை அலுவலகம் இருந்தது.

சீனாவுக்கு ஹொங்கோங் கொடுக்க முதலே, லண்டனுக்கு தலைமை அலுவலகத்தினை, பிரிட்டிஷ் அரசு நகர்த்தி விட்டது.

அடுத்த, வங்கியியல் சிறப்பு, சிங்கப்பூர். அதுவும் 72% வீத சீனர்கள் உள்ள நாடு.

இலங்கை வங்கியியல் இப்போதும் கூட சிறப்பாக உள்ளது. இந்திய பொருளாதாரம் சிறப்பாகும் போது, இலங்கை வங்கித்துறையையே பயன்படுத்தும், அதாவது, அந்தளவுக்கு சிறப்பானதாக உள்ளது, என்று, இலங்கையின் பல பொருளாதார நிபுணர்கள் எழுதினார்கள். Credibility and quality of service.

இந்தியாவில் தனியார்துறை வங்கிகள் கூட, அரச வங்கிகள் போலவே அதிகாரிகள் எடுப்புச்சாய்ப்பு. (red tape-ism).

கரூர் வைஸ்யா , வியஜா பேங்க், பஞ்சாப் தேசிய வாங்கி, கனரா வங்கி இப்படி எல்லாம் புத்தீசல் போல வங்கிகள்.... எப்படி விளங்கும்?

London stock exchange, Colombo stock exchange இணை வாங்கி உள்ளதை அறிவீர்கள்.

ஹிட்லரை உதாரணத்துக்கு இழுக்கும் உந்த நாசமருந்த அரசியல் வாதிகளினால் என்ன நிலைமையில் நாடு இருக்கிறது என்பது தெரியும் தானே.

வங்கியியல் சிறப்பாக இருக்க, சிறிய நாடு தான் தோதானது போல தெரிகிறது.

ஆக, உங்களைப் போன்ற படித்த, கிருபனை போன்ற, IT வித்தகர்கள் நாட்டுக்கு போகும் போது, வங்கியியல் ஆசியாவில் சிறப்பானதாக இருக்கும்.... தமிழ் ஈழத்தில்...

Link to comment
Share on other sites

ஐந்து கண் நாடுகள் (USA,UK,Canada, Australia, NZ) உலகப் பொருளாதாரத்தில் மேலும் 6 நூற்றாண்டுகளுக்கு ஆதிக்கம் செலுத்தும்.
முழு இலங்கையும் + இந்தோனேசியாவும் சீனா அல்லது இந்தியாவின் செல்வாக்கின் கீழ் வந்தால், ஐந்து கண் நாடுகள் இந்தியப் பெருங்கடலில் ஆதிக்கத்தை இழக்கும்.
மேற்கூறிய அறிக்கைகள் பென்டகன் மற்றும் RAND கார்ப்பரேஷனால் வழங்கப்படுகின்றன.
கடந்த நான்கு அமெரிக்கா நிர்வாகங்கள் இந்த எச்சரிக்கையை புறக்கணித்தன. இப்போது வாஷிங்டன் டி.சி (Washington DC) இந்தியப் பெருங்கடலின் அறியாமையை அறுவடை செய்து வருகிறது.
ஐந்து கண் நாடுகளுக்கு எதிராக சீனாவும் இந்தியாவும் அனைத்து துறைகளிலும் சவாலாக வளர்ந்து வருகின்றன.
ஐந்து கண் நாடுகள் பொருளாதார முன்னணியில் மற்றும் மக்கள் முன்னணியில் இழந்து வருகின்றன.
ஆங்கிலம் பேசும் மற்றும் ஆங்கில அன்பான புலம்பெயர்ந்தோர் ஆசியாவிற்கு முன்னிலைப்படுத்த (Pivot to Asia-Pacific)மிகவும் முக்கியம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

இந்தியாவின் வங்கியியல் துறை மிக, மிக மோசமானது. அது ஒழுங்காக, இருந்திருந்தால், விஜய், மல்லையா லண்டனில், இருக்க முடியாது. அதாவது கடனே கிடைத்திருக்காது.

பிரிட்டனில், வங்கி ஒன்றில், மில்லியன் கணக்கில் கடன் வாங்கிக் கொண்டு, புங்கையர், ஆஸ்திரேலியா ஓடி விட்டார் எண்டு நிலைமை ஒருபோதும் வராது. காரணம், கடன் - இடர் கணக்கு பண்ணி தான் கடனே கொடுப்பார்கள்.

Thomas Cook நிறுவனம், பலர் வேலை செய்து கொண்டிருந்தார்கள். 200மில்லியன் இருந்தால், தப்பி பிழைக்கும் என்ற நிலை. 

அரசும் உதவ மறுக்க, வங்கிகளும் கடன் தர மறுக்க, பழமையான ஒரு நிறுவனம், சுருண்டது.

loan -risk ஆய்வின் படி.... நிறுவனம் தாக்குப்பிடிக்காது என்று தெரிந்தே மறுத்தார்கள்.

இந்தியாவில், லஞ்சம், அரசியல் நெருக்கடி.... 

******

ஆசியாவில், ஹொங்கோங் தான் வங்கியியலில் முதலாம் இடம். அங்கே தான் HSBC வங்கி தலைமை அலுவலகம் இருந்தது.

சீனாவுக்கு ஹொங்கோங் கொடுக்க முதலே, லண்டனுக்கு தலைமை அலுவலகத்தினை, பிரிட்டிஷ் அரசு நகர்த்தி விட்டது.

அடுத்த, வங்கியியல் சிறப்பு, சிங்கப்பூர். அதுவும் 72% வீத சீனர்கள் உள்ள நாடு.

இலங்கை வங்கியியல் இப்போதும் கூட சிறப்பாக உள்ளது. இந்திய பொருளாதாரம் சிறப்பாகும் போது, இலங்கை வங்கித்துறையையே பயன்படுத்தும் என்று, இலங்கையின் பல பொருளாதார நிபுணர்கள் எழுதினார்கள். London stock exchange, Colombo stock exchange இணை வாங்கி உள்ளதை அறிவீர்கள்.

ஹிட்லரை உதாரணத்துக்கு இழுக்கும் உந்த நாசமருந்த அரசியல் வாதிகளினால் என்ன நிலைமையில் நாடு இருக்கிறது என்பது தெரியும் தானே.

ஆக, உங்களைப் போன்ற படித்த, கிருபனை போன்ற, IT வித்தகர்கள் நாட்டுக்கு போகும் போது, வங்கியியல் ஆசியாவில் சிறப்பானதாக இருக்கும்.... தமிழ் ஈழத்தில்...

நாதமுனி...உங்கள் பதிவு...சில பழைய நினைவுகளைக் கிளறி விட்டது!

நாங்கள் வெளி நாடு வெளிக்கிட்ட காலத்தில் முதன் முதலில் எங்களுடன் எடுத்துச் சென்ற முதலீடு இவர்களது பயணக் காசோலை நூறு பவுண்ட்ஸ் பெறுமதியானது தான்! வந்த சில நாட்களிலேயே அதைப் பதிவுத் தபாலில் திருப்பி அனுப்பி விட்டோம் என்பது வேறு கதை!

அந்த நாட்களில் பிறிஸ்டல் என்று ஒரு சிகரட் இருந்தது! அதை விளம்பரப் படுத்தும் போது...Bristol won several gold medals என்று தான் விளம்பரம் செய்வார்கள்! முதன் முதலாக கொப்பன் கேஹன் விமான நிலையத்தில்...தற்காலிக நண்பனாகிய ஒரு வெள்ளையிடம், எமது சிகரட்டின் பெருமையை எடுத்து விளக்கிய எம்மவர் ஒருவர் அவருக்கு அன்பளிப்பாக ஒரு சிகரட்டைக் கொடுத்தார்! இரண்டே இரண்டு இழுவை தான்...! சிகரட்  கொடுத்தவருக்கே திருப்பிக் கொடுக்கப்பட்டது! கொடுத்தவருக்கே நம்பவே முடியவில்லை!

இது போலத் தான்...இந்தியப் பொருளாதாரமும்..! தரம் என்பது அறவே கிடையாது! நாங்கள் வாங்கும் மளிகைச் சாமானிலிருந்து call centres  வரை எல்லாவற்றிலுமே ஒரு சுத்து மாத்து மறைந்திருக்கும்! அது பொருளாதரப் பூனயாக மட்டுமல்ல...பொருளாதார எலியாகக் கூட வர முடியாது!

நன்றி...நாதம்ஸ்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, புங்கையூரன் said:

நாதமுனி...உங்கள் பதிவு...சில பழைய நினைவுகளைக் கிளறி விட்டது!

இது போலத் தான்...இந்தியப் பொருளாதாரமும்..! தரம் என்பது அறவே கிடையாது! நாங்கள் வாங்கும் மளிகைச் சாமானிலிருந்து call centres  வரை எல்லாவற்றிலுமே ஒரு சுத்து மாத்து மறைந்திருக்கும்! அது பொருளாதரப் பூனயாக மட்டுமல்ல...பொருளாதார எலியாகக் கூட வர முடியாது!

நன்றி...நாதம்ஸ்..!

இரு எழுத்து பெயரில் பிராண்ட் பெயரைக் கொண்ட, மளிகை பொருட்களை உருவாக்கி, வியாபாரம் செய்யும் கனேடிய நிறுவனம்.

இதன் கனேடிய உரிமையாளர், ஐரோப்பிய சந்தையினை குறிவைத்து, கனடாவில் இருந்து பொருட்களை அனுப்பினார், அவரது London மச்சான் மூலமாக.

ஆர்வமில்லாமல் தொடங்கிய அவரோ, வியாபாரத்தினை பார்த்து ஆர்வமாகி விட்டார்.

எதுக்கு ஒரு சிறு கமிஷன் மட்டும் என்று, இந்தியாவில் இருந்து ஆர்டர் பண்ண தொடங்கினார், கனடாகாரருக்கு தெரியாமல், அதே பிராண்டில்.

வந்தது, தரம் குறைவானது, தடை செய்யப்பட்ட பொருட்களுடன் வந்த நான்கு கொள்கலன்களை தடுத்து விட்டார்கள்.

இறுதியில், கனடா பிராண்டினை அப்படியே வைத்துக்கொண்டு, நாலு எழுத்தில் வேறு பிராண்டினை உருவாக்கி, இந்தியாவில் இருந்து எடுத்து சந்தைப்படுத்துகிறார்கள். ஆனால், நான் இரண்டையுமே வாங்குவது இல்லை.

இதுதான் இந்திய சந்தை நிலை. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.