Jump to content

நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு - தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு - தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.!

vivkek-1618555381.jpg

சென்னை: நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

திரைப்படப்படப்பிற்காக சமீபத்தில் வட இந்திய மாநிலங்களுக்கு சென்று திரும்பியிருந்தார் விவேக். நேற்றைய தினம் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். தடுப்பூசி போட்டுக்கொள்ள அனைவரும் தயக்கம் காட்டக்கூடாது என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார் விவேக்.

இன்று காலையில் அவரது உடல் நலம் பாதிக்கப்படவே அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். விவேக்கிற்கு மூச்சுத்திணறலும் இருப்பதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. விவேக்கிற்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

https://tamil.oneindia.com/news/chennai/actor-vivek-has-a-heart-attack-admitted-to-the-intensive-care-unit-of-a-private-hospital-417999.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

நல்ல, நகைச்சுவை நடிகர். விரைவில் நலம் பெற வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏனோ எனக்கு இவரை எப்போதும் பிடிக்கும்...!

விரைவில் நலம் பெற வேண்டும்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புங்கையூரன் said:

ஏனோ எனக்கு இவரை எப்போதும் பிடிக்கும்...!

விரைவில் நலம் பெற வேண்டும்..!

 

 

 

ஓம்.. புங்கையூரான், இவர்...  வடிவேலு, கவுண்டமணி, செந்தில் போன்ற 
நகைச்சுவை நடிகர்களின்  காலத்திலேயே... 
தனக்கென்று... வித்தியாசமான பாணியில் நடித்தவர்.

இலங்கைத் தமிழர் மீது... மிகுந்த பற்றுக் கொண்டவர் மட்டுமல்லாது...
தனக்கு கிடைத்த சந்தர்ப்பங்களில்... இலங்கைத் தமிழை பேசி நடித்து,
மட்டக்களப்பு, அவுஸ்திரேலியா போன்ற இடங்களுக்கு செல்லும் நேரத்தில்...
எம்முடன்... ஒன்றாக  இருந்து, தனது அன்பை காட்டியவர்.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நடிகர் விவேக் மாரடைப்புக்கும் கொரோனா தடுப்பூசிக்கும் தொடர்பா? என்ன சொல்கிறது தமிழக அரசு?

புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்
விவேக்

பட மூலாதாரம்,VIVEK/TWITTER

தமிழ் திரைப்பட நடிகர் விவேக் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக சேர்க்கப்பட்டுள்ளார்.

குடும்பத்தினருடன் வீட்டில் பேசிக் கொண்டிருக்கும்போது விவேக் மயங்கி விழுந்தார் என்றும், உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்றும், பரிசோதனை முடிவில் ஆஞ்சியோ சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் திரைப்பட மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் கூறியிருந்தார். நடிகர் விவேக் தற்போது சுயநினைவோடு உள்ளார் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், நடிகர் விவேக்கின் உடல்நிலை தொடர்பாக அவர் சிகிச்சை பெற்று வரும் சிம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் விஜயகுமார் சொக்கன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "காலை 11 மணியளவில் சுயநினைவிழந்த நிலையில், நடிகர் விவேக் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு அவரது குடும்பத்தால் கொண்டு வரப்பட்டார் என்று கூறப்பட்டுள்ளது. அவரது உடல்நிலையை நிபுணர்கள் குழு பரிசோதித்தது. பின்னர் அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் எக்மோ சிகிச்சையில் உள்ள விவேக்கின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது," என்று கூறப்பட்டுள்ளது.

இது மாரடைப்பு அதிர்ச்சியுடன் கூடிய இதய குறைபாடு பிரச்னை. இதற்கும் கோவிட் தடுப்பூசிக்கும் தொடர்பு இல்லை என்று அந்த செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, விவேக்கின் உடல்நிலை தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜே. ராதாகிருஷ்ணன் அந்த மருத்துவமனைக்கே நேரில் வந்து மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்தினார். பின்னர் மருத்துவமனை நிர்வாகிகளுடன் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், "ஒரு வாரத்திற்கு முன்பே விவேக் தானாகவே தடுப்பூசி போட வருகிறேன் என்று கேட்டிருந்தார். அவர் போட்டுக்கொண்டால் அதனை பார்த்து பலர் தடுப்பூசி போடுவதற்கு முன்வருவார்கள் என்று கூறி அவரே நேற்று வருகை தந்திருந்தார். மத்திய அரசின் தடுப்பூசி வழிகாட்டு நெறிமுறைகளின் படி, இதய கோளாறு, புற்றுநோய் போன்ற பல்வேறு நோய் உள்ளவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், விவேக்கின் நிலைமை எங்களுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியாகத்தான் உள்ளது. நேற்றைய தினம் எங்களுடன் இருந்தவருக்கு, இன்றைய தினம் இதுபோன்ற இதய கோளாறு ஏற்பட்டுள்ளது. எனினும், இதற்கும் நேற்று தடுப்பூசி போட்டதற்கும் எந்த தொடர்பும் இல்லை," என்று தெரிவித்தார்.

"விவேக் தடுப்பூசி செலுத்திக்கொண்ட மருத்துவமனையில் நேற்று மட்டும் 800 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது, இன்றும் அங்கு ஏராளமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ரத்தக்குழாயில் ஒரே நாளில் அடைப்பு ஏற்படாது. இணை நோய் உள்ளவர்களும் நிச்சயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். மாற்றுத்திறனாளிகளும் போட்டுக்கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கும், விவேக்கின் உடல்நிலை பாதிக்கப்பட்டதற்கும் நூறு சதவீதம் தொடர்பில்லை," என்று ராதாகிருஷ்ணன் கூறினார்.

தடுப்பூசி போட்டுக்கொண்ட மறுநாள்

முன்னதாக, நேற்று வியாழக்கிழமை சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அரசு உயர் சிறப்பு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் விவேக். கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது தொடர்பாக மக்களிடம் அச்சம் நிலவுவதாகவும், அந்த அச்சத்தைப் போக்கவே அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொண்டதாகவும் அவர் அப்போது ஊடகங்களிடம் தெரிவித்தார்.

இதற்காக, சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவமனையின் டீன் மருத்துவர் ஜெயந்தி ஆகியோருக்கும், இரு மருத்துவர்களுக்கும் நன்றி தெரிவித்து அவர் ட்வீட் செய்திருந்தார்.

தமது கருத்தான நகைச்சுவைக் காட்சிகளுக்காக, சின்னக் கலைவாணர் என்று புகழப்படும் நடிகர் விவேக், 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பத்மஸ்ரீ விருது பெற்றவர் விவேக்.

(தமது சிந்திக்கவைக்கும் நகைச்சுவைக் காட்சிகளுக்காகப் பெயர் பெற்ற பழம் பெரும் நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன் கலைவாணர் என்று அழைக்கப்படுகிறார்)

நடிகர் விவேக் மாரடைப்புக்கும் கொரோனா தடுப்பூசிக்கும் தொடர்பா? என்ன சொல்கிறது தமிழக அரசு? - BBC News தமிழ்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாளை நாடு முழுவதும் அதிக வெப்பநிலை! மனித உடலால் உணரக்கூடிய அதிக வெப்பநிலை, நாளை (20) முழுவதும் நாடளாவிய ரீதியில் பல மாகாணங்களில் சில இடங்களில் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, வடமேற்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களுக்கும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, மொணராகலை, ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கும் வளிமண்டலவியல் திணைக்களம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. https://thinakkural.lk/article/296333
    • கற்பனைக் கதை தானே அண்ணை?!
    • நல்லாயிருக்கு....கந்தையர்  😁 👍🏼 இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் ஜேர்மனியர்களுக்கு  இருந்த ஒரு சட்டம் தான் பக்கது ஊர்களுக்கு போகமுடியாது.இடம்பெயர முடியாது. காரணம் பாதிப்பில்லாத இடங்களை நோக்கி மக்கள் இடம் பெயர்ந்ததினால்  அழிந்த இடங்களை மீண்டும் புனரமைக்க முடியாது.  இதற்காக அந்தந்த இடத்து மக்களை அந்த இடத்திலையே அமர வைத்து நாட்டை முன்னேற்றினார்கள். அதே சட்டத்தை  பின்னர் அகதிகளுக்கும் கொண்டு வந்தார்கள். காரணம் வரும் அகதிகள் எல்லோரும் பெரிய பெரிய நகரங்களை நோக்கியே சென்றார்கள். அதனை கட்டுப்படுத்தவே  எந்த நகரத்தில் வந்து இறங்குகின்றீர்களோ அந்த இடத்தில் தங்க வைத்து  வெவ்வேறு ஊர்களுக்கு பிரித்து பிரித்து அனுப்பினார்கள். ஜெர்மனியில்  அகதிகள் விடயத்தில் ஒரு சிறப்பு அம்சம் என்னவெனில்  அகதிகளை ஒரே நகரத்தில் குவிக்காமல்  நாடு முழுவதும் குக்கிராமங்கள் ஈறாக எல்லா இடத்திலும் வீடுகளை கொடுத்து தங்க விட்டார்கள்
    • முந்தி ஒரு திரியிலை காம்பிலை பெட்டிச்சாப்பாடு பற்றி கதைக்கேக்கை எனக்கு அப்பிடி ஒரு அனுபவமும் இல்லையெண்டது ரீலா கந்தையர்? 😎 அப்ப நீங்களும் ஜெயில் எல்லாம் போய் இருக்கிறியள். நீங்களும் தியாகி தான் 🤣
    • தேர்தல் காலத்து அரசியல் நாடகங்களை விளங்காத பாலகர்கள் வையகத்தில் இன்னும் உளர். 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.