Jump to content

மக்கள் மத்தியில் எமது இனம் சார்ந்த அரசியல் உருவாகாவிட்டால் மாற்றுச் சமூகம் எம்மை ஆக்கிரமிக்கும் நிலை ஏற்படும்!-த.கலையரசன்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் மத்தியில் எமது இனம் சார்ந்த அரசியல் உருவாகாவிட்டால் மாற்றுச் சமூகம் எம்மை ஆக்கிரமிக்கும் நிலை ஏற்படும்!-த.கலையரசன்

IMG_20210415_163818.jpg

(குமணன்)

எமது இனம் சார்ந்த அரசியலை எமது உறவுகள் மத்தியில் நாங்கள் உருவாக்காவிட்டால் மாற்றுச் சமூகம் எங்களைக் கூறுபோட்டுத் துண்டாடி எம்மை ஆக்கிரமிக்கக் கூடிய ஒரு நிலைமையே ஏற்படும். எம்மை இன்னும் ஏமாற்றுகின்ற விடயங்களுக்கு எமது மக்கள் இடம்கொடுக்கக் கூடாது என அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.
காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணப்பிள்ளை ஜெயசிறில் அவர்களின் ஏற்பாட்டில் புலம்பெயர் தேச உறவுகளின் அனுசரணையில் பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் , வறிய குடும்பம் ஒன்றிக்கு தையல் உபகரணம் , திருச்சபைக்கு குதிரைகள் வழங்கி வைக்கும் நிகழ்வில் இந்த கருத்தினை முன்வைத்தார்.

எமது உறவுகள் சிறப்பாக வாழ வேண்டும் என்ற சிந்தனையுடன் தான் நமது புலம்பெயர் உறவுகள் சிலர் எமக்கான உதவித் திட்டங்களைச் செய்து வருகின்றார்கள். அதனைக் கொண்டு நாங்களும் எதிர்காலத்திலே முயற்சியுள்ளவர்களாகச் செயற்பட வேண்டும். எமது சமூகத்திலே மிக மோசான சிந்தனையொன்றுள்ளது. முயற்சி என்பது மிகக் குறைவு ஏதேனும் கிடைக்குமா என்ற சிந்தனையுள்ளவர்களே அதிகமாக இருக்கின்றார்கள். இந்த நிலைமை மாற வேண்டும்.

நாங்கள் கடந்த காலங்களிலே பல உதவித் திட்டங்களைச் செய்துள்ளோம். ஆனால் அரசினால் வழங்கப்பட வேண்டிய பல உதவித் திட்டங்கள் எமக்குப் புறக்கணிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக குடிநீர்ப் பிரச்சினை முற்றுமுழுதாகத் தமிழர் பிரதேசங்களிலே புறக்கணிக்கப்பட்ட ஒரு விடயம். ஆனால் எங்களுடைய முயற்சியால் நான் பாராளுமன்றம் சென்ற பிற்பாடு எமது கட்சியின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்களுடன் உரிய அமைச்சரிடம் நேரடியாகச் சென்று இவ்விடயம் தொடர்பில் ஆவணங்களைச் சமர்ப்பித்திருந்தோம். அதன் பணிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. எதிர்வரும் காலங்களில் அம்முயற்சிகள் வெற்றியடையக் கூடிய நிலைமை காணப்படுகின்றது. பலரும் பலவாறு பேசலாம். ஆனால் எமது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும், முன்னேற்றங்கள் காணப்பட்டும் இருக்கின்றன.

அம்பாறை மாவட்த்திலே பொத்துவில் பிரதேசம் தமிழர் நிலப்பரப்பின் எல்லையாக இருக்கின்றது. இங்கு எமது மக்களின் காணி தொடர்பான பல விடயங்கள் இருக்கின்றன. இது தொடர்பிலும் நாங்கள் எமது முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். அந்தக் காணி விடயங்களைத் தீர்ப்பதற்குரிய பணிகளையும் முன்னெடுத்திருக்கின்றோம். நிச்சயம் எதிர்காலத்தில் அதுவும் வெற்றியளிக்கும் என்று நம்புகின்றோம்.

தமிழ்த் தேசியம் என்று சொல்லப்படுகின்ற தூய்மையான அரசியலை முன்னெடுக்கின்ற அரசியல்வாதிகளால் மாத்திரமே எமது மக்களின் பிரச்சினை குறித்தான விடயங்களுக்கான தீர்வினைப் பெற்றுக் கொடுக்க முடியும். நாங்கள் யாருக்கும் சோரம் போய் யாருக்கும் அடிபணிந்து எமது சமூகத்தை விற்றுப் பிழைப்பதற்குத் தயாரில்லை. எமது பிரதேசங்களின் அனைத்து விடயங்களும் அறிந்தவர்களாகவே நாங்கள் செயற்படுகின்றோம்.

எமது சமூகம் ஏமாற்றப்படும்; சமூகமாக இருந்து விடக் கூடாது. எமது ஒவ்வொரு பிரதேசங்களிலும் தலைவர்கள் உருவாக்கப்பட வேண்டும். உள்ளுர் அரசியலில் மிகவும் சிறப்பாகச் செயற்படக் கூடியவர்களை நாங்கள் இனங்காண வேண்டும். எதிர்வருகின்ற ஒவ்வொரு தேர்தல்களிலும் எமது இனம்சார்ந்த அரசியலை எமது உறவுகள் மத்தியில் நாங்கள் உருவாக்காவிட்டால் மாற்றுச் சமூகம் எங்களைக் கூறுபோட்டுத் துண்டாடி, எம்மை ஆக்கிரமிக்கக் கூடிய ஒரு நிலைமையே ஏற்படும்.

அபவிருத்திக் குழுக் கூட்டங்களின் போது எமது பிரதேசங்கள் எவ்வாறு பார்க்கப்படுகின்றது என்ற விடயத்தைப் பலரும் அறிந்திருப்பீர்கள். அண்மையில் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் நடைபெற்றது. எமது பிரதேசங்கள் அபிவிருத்திகளில் புறக்கணிக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சிநிரல் அங்கு இருந்தது. இது தொடர்பில் சம்மந்தப்பட்ட அமைச்சர்கள், அபிவிருத்திக் குழுத் தலைவர்களைச் சந்தித்துப் பேசியிருக்கின்றோம்.

நாங்கள் எமது மக்களின் தேவைகளுக்காக, பணிகளுக்காகத் தொடர்ச்சியாகப் பயணிப்போம். எம்மை இன்னும் இன்னும் ஏமாற்றுகின்ற விடயங்களுக்கு எமது மக்கள் இடம்கொடுக்கக் கூடாது. எம்மை நாமே ஆளக்கூடிய, எம்மை எமது மக்களே தெரிவு செய்யக் கூடிய நல்லதொரு எதிர்காலத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் திட்டங்களைத் தயார்ப்படுத்தி எமது மக்களை வளப்படுத்தக்கூடிய விதத்தில் நாங்கள் செயற்படுவோம் என்று தெரிவித்தார்.

http://www.battinews.com/2021/04/blog-post_639.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதெப்படி... மாமியார் உடைச்சா மண்குடம், மருமகள் உடைச்சா பொன்குடம்?

நான் சொல்லுறது.... சீமான் மாற்றுச் சமூகம் எம்மை ஆக்கிரமித்து விட்டது எண்டால்  இனவாதம் பேசுறார் எண்டு பிழை பிடிக்கிறது.

ஆனால், இனம் சார்ந்த அரசியல் உருவாகாவிட்டால் மாற்றுச் சமூகம் எம்மை ஆக்கிரமிக்கும் நிலை ஏற்படும் எண்டு இவர் சொல்லுறதை கொண்டாந்து ஓட்டுறது...

விளங்கேல்லயே... 🤔

ஓமோம்.... இவர்... தீம்கா ஆதரவாளர் தானே..😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

ஆனால், இனம் சார்ந்த அரசியல் உருவாகாவிட்டால் மாற்றுச் சமூகம் எம்மை ஆக்கிரமிக்கும் நிலை ஏற்படும் எண்டு இவர் சொல்லுறதை கொண்டாந்து ஓட்டுறது...

விளங்கேல்லயே... 🤔

ஓமோம்.... இவர்... தீம்கா ஆதரவாளர் தானே..😁

செய்தியை ஒட்டினா, அதில் உள்ளதெல்லாம் எனது கருத்து என்று நம்புற அளவுக்கு நீங்கள் இருப்பீர்கள் என்று நான் நினைத்திருக்கவில்லை!😂

நான் ஒன்றும் தீம்கா ஆளில்லை. நீங்கள் என்னதான் ஸ்டாலினை வறுத்தாலும் எனக்கு சுடாது.😜

இனவாதத்திற்கும், இனப்பற்றுக்கும் நூலிழை இடைவெளிதான். அண்மையில் குணா கவியழகனும் ஒரு யூடியூப் வீடியோவில் சொல்லியிருந்தார். 

அதை விளங்கினால் நல்லது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

சீமான் பத்திய செய்தியை ஒட்டி, உங்கள் கருத்துக்களை அடிச்சு சொல்லுற மாதிரி, இப்படி செய்தியை ஓட்டினா, உங்கள் கருத்தையும் சொல்லனும்.

உங்கள், போதனைகளை கேட்டு, திருந்தி கொண்டு வரேக்க, எங்களை குழப்பக்கூடாது.

இப்ப, எதுக்கு குணா பத்தி? எங்களுக்கு கிருபன் அய்யா சொல்லுறது தான் வேதம்.

அதுசரி, ப்ரொபைல் படம்.... யாரு? நீங்களே?

**

அது கிடக்குது... ஒரு உதவி வேணுமே.

யாழில், பழைய பதிவுகளை தேடிப் பிடிப்பது எப்படி எண்டு சொல்லுங்கோ.

2015 முன்னம் உள்ள பதிவு ஒண்டை தேடினேன், கிடைக்கவில்லை. நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, Nathamuni said:

இப்படி செய்தியை ஓட்டினா, உங்கள் கருத்தையும் சொல்லனும்.

யாரும் பதில் வைக்காவிட்டால் நானும் ஒன்றும் சொல்வதில்லை! ஏதாவது பத்தினால் நானும் என் கருத்தை வைப்பதுண்டு!

கலையரசன் சொல்லும் இனம் சார்ந்த அரசியல் இனப்பற்று இருக்கவேண்டும் என்ற அர்த்தத்தில். அபிவிருத்தி அரசியல் என்று புள்ளையான், கருணா அம்மான், வியாழன் செய்வது அடிமை சேவக அரசியல்.

58 minutes ago, Nathamuni said:

அதுசரி, ப்ரொபைல் படம்.... யாரு? நீங்களே?

நானேதான்! 😀 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, Nathamuni said:

அது கிடக்குது... ஒரு உதவி வேணுமே.

யாழில், பழைய பதிவுகளை தேடிப் பிடிப்பது எப்படி எண்டு சொல்லுங்கோ.

2015 முன்னம் உள்ள பதிவு ஒண்டை தேடினேன், கிடைக்கவில்லை. நன்றி.

2015 க்கு முன்னர் என்றால் மோகன் archive இல் போட்டிருப்பார். யாழில் உள்ள தேடு பெட்டியில் தேடினால் கிடைக்காது. ஆனால் கூகிளில் தேடினால் கிடைக்கும்!

இப்படித் தேடினால் சிலவேளை கிடைக்கும்.

site:yarl.com “பிகிலு”

Link to comment
Share on other sites

On 17/4/2021 at 08:35, கிருபன் said:

திருச்சபைக்கு குதிரைகள் வழங்கி வைக்கும் நிகழ்வில் இந்த கருத்தினை முன்வைத்தார்.

தென்னிலங்கையிலிருந்து தெல்லிப்பளை யூனியன் கல்லூரிக்குத் திருச்சவையைச் சேர்ந்தோர் அத்தனை விரைவாக எப்படி வரமுடிந்தது என்று இப்போது விளங்கியது.🧐 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, கிருபன் said:

2015 க்கு முன்னர் என்றால் மோகன் archive இல் போட்டிருப்பார். யாழில் உள்ள தேடு பெட்டியில் தேடினால் கிடைக்காது. ஆனால் கூகிளில் தேடினால் கிடைக்கும்!

இப்படித் தேடினால் சிலவேளை கிடைக்கும்.

site:yarl.com “பிகிலு”

தேடியது கிடைத்தது, கூகிளில். நன்றி கிருபன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தான் நாம் தொடர்பு சொல்லி வருகிறோம்

ஆனால் புலம்பெயர் தமிழர்கள் பொத்திக் கொண்டு இருந்தால் போதும் என்று ஆகிவிட்டது

ஆனால் நாட்டின் நிலமை அப்படி அல்ல.

காலம் உணர்த்தும்

அதுவரை????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

இதைத்தான் நாம் தொடர்பு சொல்லி வருகிறோம்

ஆனால் புலம்பெயர் தமிழர்கள் பொத்திக் கொண்டு இருந்தால் போதும் என்று ஆகிவிட்டது

ஆனால் நாட்டின் நிலமை அப்படி அல்ல.

காலம் உணர்த்தும்

அதுவரை????

அப்ப அப்ப கதைப்பார் கண்டுக்காதீங்க போனஸ்சும் இல்லையென்றால்  போஸ்ட்டர் அடிச்சிருப்பானுகள்  அம்பாறை மாவட்டத்திற்கு இவரு காணி போறதைப்பற்றி கதைக்கிறார் காணி போன இடங்கள் வளத்தாப்பிட்டி , வீரமுனை , சம்மாந்துறை , குளனி , திராய்க்கேணி , அட்ட்ப்பள்ளம் , அக்கறைப்பற்று ஆலங்குளம் , 40 ம் கட்டை பொத்துவில் , காட்டுப்பகுதி உகந்தை வரைக்கும் போய்க்கொண்டு இருக்கிறது தெரிந்த பிரதேசங்களை வரையறுத்து கூறியுள்ளேன் இவர்களால் என்ன செய்ய  முடிந்தது  இதுவரைக்கும் 

நீங்கள் சொன்ன கூற்றுக்கு வருகிறேன் உங்களை தள்ளி அம்பாறையில் உள்ள புலம்பெயர்ந்தவர்கள் காணிகளை வாங்கியுள்ளார்களா மாறாக புலம்பெயர்ந்தவர்கள் அதிக விலைக்கு விற்றுள்ளார்கள் இனியும் அம்பாறையை கட்டியெல்லாம் காப்பற்ற   முடியாது தற்போது சங்கமான் கண்டியில் புத்தர் சிலை வைக்க முனைகிறார்கள் எவராலும் தடுக்க முடியாது , எங்களுக்கு புத்தர் சிலைவந்தால் ஒன்றும் ஆகப்போவதில்லை  இவர்கள் அரசியல் செய்தும் ஒன்றும் ஆகப்போவதில்லை ( எவரும்) 
இதில் மாற்றுக்கட்சிகளும் அடங்கும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

ஆனால் புலம்பெயர் தமிழர்கள் பொத்திக் கொண்டு இருந்தால் போதும் என்று ஆகிவிட்டது

புலம்பெயர் தமிழர்கள் நீரோடு செல்கின்ற ஓடம் போன்றவர்கள் அந்த ஓடம் எங்கெல்லாம் செல்லுதோ அங்கெல்லாம் சென்று வாழ்வார்கள். எதிர் நீச்சல் போடும் வல்லவர்களே பிறந்த தாய் மண்ணில் வாழ்பவர்கள்.  எதிர் நீச்சல் போட்டு வாழ்ந்தே ஆகவேண்டும்  இதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என நான் நினைக்கிறன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

இது உங்கள் கருத்து சகோ.

நீங்கள் உங்களுக்கு தெரிந்தவற்றை நீங்கள் அறிந்தவற்றை உங்கள் அனுபவங்களை வைத்து எழுதுகிறீர்கள்.

ஆனால் புலம்பெயர் தமிழர்களாகிய எமது அனுபவங்களும் அறிந்தவைகளும் பட்டவைகளும் வேறு

அவற்றை வார்த்தைகளில் வார்த்துவிட முடியாது.

அதனால் தான் மண்ணின் தேவையையும் அதன் முக்கியத்துவத்தையும் அதன் அருமையையும் உணர்கிறோம்.

இதனை சொன்னால் உங்களால் புரிந்து கொள்ள முடியாது. இங்கு வந்த சில வாரங்களிலிலேயே நீங்கள் அதை தேட விரும்ப காக்க தொடங்கி விடுவீர்கள். அது தான் இங்கு வந்தவர்கள் வந்த பின்னர் செய்வது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

புலம்பெயர் தமிழர்கள் நீரோடு செல்கின்ற ஓடம் போன்றவர்கள் அந்த ஓடம் எங்கெல்லாம் செல்லுதோ அங்கெல்லாம் சென்று வாழ்வார்கள். எதிர் நீச்சல் போடும் வல்லவர்களே பிறந்த தாய் மண்ணில் வாழ்பவர்கள்.  எதிர் நீச்சல் போட்டு வாழ்ந்தே ஆகவேண்டும்  இதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என நான் நினைக்கிறன் 

உவ்விடம் இருப்பவர்கள்  தமிழரின் பிரச்சனைகளை சொல்லி வீதியில் இறங்கி போராட முடியாது.பல சொற்களை கூட பகிரங்கமாக கதைக்க முடியாது. ஆனால் புலம்பெயர் தமிழர்கள் அதை தக்க வைத்துக்கொண்டிருக்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, விசுகு said:

இது உங்கள் கருத்து சகோ.

நீங்கள் உங்களுக்கு தெரிந்தவற்றை நீங்கள் அறிந்தவற்றை உங்கள் அனுபவங்களை வைத்து எழுதுகிறீர்கள்.

ஆனால் புலம்பெயர் தமிழர்களாகிய எமது அனுபவங்களும் அறிந்தவைகளும் பட்டவைகளும் வேறு

அவற்றை வார்த்தைகளில் வார்த்துவிட முடியாது.

அதனால் தான் மண்ணின் தேவையையும் அதன் முக்கியத்துவத்தையும் அதன் அருமையையும் உணர்கிறோம்.

இதனை சொன்னால் உங்களால் புரிந்து கொள்ள முடியாது. இங்கு வந்த சில வாரங்களிலிலேயே நீங்கள் அதை தேட விரும்ப காக்க தொடங்கி விடுவீர்கள். அது தான் இங்கு வந்தவர்கள் வந்த பின்னர் செய்வது.

அப்படி புலம்பெயர்ந்தவர்கள் அத்தனை பேரும் காக்க நினைத்திருந்தால் ?? இன்று இந்த நிலமை வந்திராது என்று சொல்லிக்கொள்லலாமா ??

20 hours ago, குமாரசாமி said:

உவ்விடம் இருப்பவர்கள்  தமிழரின் பிரச்சனைகளை சொல்லி வீதியில் இறங்கி போராட முடியாது.பல சொற்களை கூட பகிரங்கமாக கதைக்க முடியாது. ஆனால் புலம்பெயர் தமிழர்கள் அதை தக்க வைத்துக்கொண்டிருக்கின்றார்கள்.

இருந்தும் இதுவரைக்கும் கிடைத்த சாதகமான பலன் கள் அல்லது முடிவுகள் ? ஏதும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

அப்படி புலம்பெயர்ந்தவர்கள் அத்தனை பேரும் காக்க நினைத்திருந்தால் ?? இன்று இந்த நிலமை வந்திராது என்று சொல்லிக்கொள்லலாமா ??

இதை ஏற்றுக் கொள்கிறேன்

எமது இனத்தின் சாபக்கேடு இது

அது புலம்பெயர்ந்தோரிடம் மட்டும் இல்லை   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

இதை ஏற்றுக் கொள்கிறேன்

எமது இனத்தின் சாபக்கேடு இது

அது புலம்பெயர்ந்தோரிடம் மட்டும் இல்லை   

ம் ஏற்றுக்கொள்கிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அப்படி புலம்பெயர்ந்தவர்கள் அத்தனை பேரும் காக்க நினைத்திருந்தால் ?? இன்று இந்த நிலமை வந்திராது என்று சொல்லிக்கொள்லலாமா ??

இருந்தும் இதுவரைக்கும் கிடைத்த சாதகமான பலன் கள் அல்லது முடிவுகள் ? ஏதும் 

ஜேர்மனியில் நான் ஒரு அகதி. ஜேர்மனியர்கள் நீ யார் எதற்கு இங்கு வந்தாய் என்று என்னை கேட்கும் போது இலங்கை வரலாற்றை/ ஈழத்தமிழர் தமிழர் வரலாற்றை சொல்ல வேண்டிய அவசியம் உள்ளது. அண்மைக்கால ஈழத்தமிழரின் அழிவுகளும் சாட்சிகளாக அமைந்து வருகின்றது. 

நீங்கள் எதையோ தெரிந்து கொள்ள விரும்புகின்றீர்கள்.😁

எனது பார்வையில் 100 வருடங்கள் சென்றாலும் உண்மையும் நியாயமும் ஜெயிக்கும். இதுதான் நியதி.😷
 
நியாயம் என்பது

பசிக்கும் போதே சாப்பாடு கிடைக்க வேண்டும்  பசி தீர்ந்த பின் கிடைக்கும் சாப்பாடு ??

Link to comment
Share on other sites

14 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நியாயம் என்பது

பசிக்கும் போதே சாப்பாடு கிடைக்க வேண்டும்  பசி தீர்ந்த பின் கிடைக்கும் சாப்பாடு ??

பசி தீர்ந்தபின் கிடைக்கும் சாப்பாட்டை, சாப்பாடு கிடைக்காமல் பசியோடு வாடும் பலருக்கும் கொடுக்கும் மனநிலை கொண்ட உறவுகள் பலரை யாழ்களத்திலும் காண முடியும் ராசாவே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/4/2021 at 12:51, Paanch said:

பசி தீர்ந்தபின் கிடைக்கும் சாப்பாட்டை, சாப்பாடு கிடைக்காமல் பசியோடு வாடும் பலருக்கும் கொடுக்கும் மனநிலை கொண்ட உறவுகள் பலரை யாழ்களத்திலும் காண முடியும் ராசாவே.

நான் யாரையும் இழுத்து சொல்லவில்லை அண்ண எனது கருத்து நீதியென்பது உடனுக்குடனாவது கிடைக்க வேண்டும் 

பள்ளியில் ஒரு குழந்தை ஒரு குழந்தைக்கு அடிக்கிறான் என்றால் அந்த குழந்தை அழும் அழுதுகொண்டே இருக்கும் அடித்த குழந்தைக்கு ஆசிரியர் அடித்தால் அழுத குழந்தை அழுகையை நிறுத்தும் . 

Link to comment
Share on other sites

1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

பள்ளியில் ஒரு குழந்தை ஒரு குழந்தைக்கு அடிக்கிறான் என்றால் அந்த குழந்தை அழும் அழுதுகொண்டே இருக்கும் அடித்த குழந்தைக்கு ஆசிரியர் அடித்தால் அழுத குழந்தை அழுகையை நிறுத்தும் . 

 அழும் குழந்தையின் அழுகையை நிறுத்த அடித்த குழந்தையை அடிப்பது தவரானது. ஆசிரியருக்குப் பயிற்சி போதாது. அரவணைத்து ஆறுதல்படுத்தத் தெரியவேண்டும். அதுபோலவே எங்களுக்கு நியாயம் கிடைக்காது தடுப்பவர்களைத் தண்டிக்க முயலக்கூடாது.

"இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்"  என்று திருவள்ளுவரும் கூறியுள்ளார். இதனை நன்றாக உணர்ந்துள்ள மூன்று நான்கு தமிழர்களை எங்களுக்கு வழிகாட்டிகளாக தமிழர்களே தெரிவுசெய்துள்ளார்கள். அவர்கள் யாரென்று உங்களுக்கு நான்சொல்லித் தெரியவேண்டியதில்லை.🧐

Link to comment
Share on other sites

பிடன் நிர்வாகம் இலங்கை தமிழ் இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை அடுத்த நிர்வாகத்திற்கு அனுப்பும்.
வெள்ளை மாளிகை மெமோ கசிந்தது.
இலங்கைக்கு 1948 சுதந்திரம் கிடைத்ததிலிருந்து 1.2 மில்லியனுக்கும் அதிகமான தமிழர்கள் தங்கள் உயிரை இழந்ததாக வெள்ளை மாளிகை மதிப்பிட்டுள்ளது.
இலங்கை தமிழ் இனப்படுகொலை குறித்து இந்தியாவுக்கு முழுமையும் பொறுப்பும் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Sean said:

இவ்வளவு, தகவல்கள் இருந்தும்...........
எமக்கு, விடிவு கிடைக்க முடியாமைக்கு முக்கிய காரணம்...
அடிப்படை அரசியல் அறிவற்ற,  தமிழ்த்  தலைமைகள்.

இந்தக் கூட்டம் இன்னும், 
சிங்களவனுக்கு, வெள்ளையடிக்க நினைக்குதே  தவிர,
சொந்தப்  புத்தி, இல்லாமல்... மூளை, விருத்தி பெறாத விசர் கூட்டத்திடம்,
ஈழத் தமிழர் படும்  கொடுமைகளை... என்னவென்பது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/4/2021 at 18:08, தனிக்காட்டு ராஜா said:

அப்படி புலம்பெயர்ந்தவர்கள் அத்தனை பேரும் காக்க நினைத்திருந்தால் ?? இன்று இந்த நிலமை வந்திராது என்று சொல்லிக்கொள்லலாமா ??

முடியாது  இது. இலங்கையரசின்  கையிலுள்ள விடயம்...இந்த இலங்கையரசு.  இலங்கையிலுள்ள சிங்களவரின் கையிலுள்ளது.  மாறாக புலம்பெயர்தமிழர் கையிலில்லை. இருப்பினும். நாம் எம்மால் இயன்றவற்றைச்செய்கிறோம் பலன் பூச்சியம் என்பது எமக்கும் தெரியும் .ஆனாலும். இங்குள்ள அரசாங்கங்கள்  இலங்கை பற்றி நிறையாவே கற்றுக்கொண்டுள்ளன.  சர்வதேசயரங்கில் இலங்கை பொய் கூறமுடியாத  ஒர் நிலையுண்டு  இது புலம்பெயர்தமிழரின் வெற்றியாகும் 

On 19/4/2021 at 18:08, தனிக்காட்டு ராஜா said:

இருந்தும் இதுவரைக்கும் கிடைத்த சாதகமான பலன் கள் அல்லது முடிவுகள் ? ஏதும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/4/2021 at 17:58, தனிக்காட்டு ராஜா said:

நியாயம் என்பது

பசிக்கும் போதே சாப்பாடு கிடைக்க வேண்டும்  பசி தீர்ந்த பின் கிடைக்கும் சாப்பாடு ??

தனி.   சாப்பிட்டால் தான்.  பசி தீரும்.  எப்படி உங்களுக்கு பசி தீர்த்தது?இப்போ உங்களுக்கு யார் சாப்பாடு தந்தது. ? என்னைப்பொறுத்தளவில் சாப்பிடவுமில்லை..பசி தீரவுமில்லை.  எவரும். சாப்பாடு தரவுமில்லை...இவற்றுக்குப் போராடிக்கொண்டிருக்கிறோம். இடையிடை கிடைக்கும் சாப்பாட்டை நாம்மவரே  தட்டி விடுகிறார்கள். குமாரசாமியண்ணை. அவரது பூட்டப்பிள்ளைகள். உரிமையுடன் வாழுமென நம்புகிறார்  அவர்  இப்படியாவது  உரிமையுடன் வாழட்டும்..😜

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.