Jump to content
 • Veeravanakkam
 • Veeravanakkam
 • Veeravanakkam

கும்பமேளாவால் பரவும் கொரோனா... அசராத உத்தரகாண்ட் அரசு... இது சரிதானா மோடி?


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
Kumbh Mela

Kumbh Mela ( AP Photo/Karma Sonam )

கடந்த இரண்டு நாள்களில் மட்டும் கும்பமேளாவில் பங்கேற்ற சுமார் 1,000 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. வெவ்வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அங்கே ஒன்றுகூடுவதால் அதன் மூலம் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பரவல் அதிகரிக்கும் என்று பலரும் எச்சரிக்கின்றனர்.

கொரோனா இரண்டாவது அலை இந்தியாவை உலுக்கிக் கொண்டிருக்கும் வேளையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் நடக்கும் கும்பமேளாவில் பல லட்சம்பேர் பங்கேற்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. 14-ம் தேதி ஒருநாள் மட்டும் ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு அங்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது பலரையும் கலங்கடித்திருக்கிறது.

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் கடந்த 1-ம் தேதி தொடங்கிய மகாகும்பமேளா வரும் 30-ம் தேதி வரை நடக்கவிருக்கிறது. இந்த நிகழ்வில் பங்கேற்பதற்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் தினம்தோறும் அங்கே திரள்கின்றனர்.

Kumbh Mela

 

Kumbh Mela AP Photo/Karma Sonam

 

கும்பமேளாவுக்கு வருகிறவர்கள் கொரோனா நெகட்டிவ் என்ற சான்றிதழுடன் வர வேண்டும், கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும், அதேபோல தனிமனித இடைவெளியையும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. ஆனாலும், லட்சக்கணக்கில் திரளும் மக்களால் அந்தக் கட்டுப்பாடுகள் காற்றில் பறக்கவிடப்பட்டன.

கும்பமேளா நடைபெறும் பகுதியில் நாளொன்றுக்கு 50,000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அதில் 500 மாதிரிகளுக்கு 20 மாதிரிகளில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த இரண்டு நாள்களில் மட்டும் கும்பமேளாவில் பங்கேற்ற சுமார் 1,000 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. வெவ்வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அங்கே ஒன்றுகூடுவதால் அதன் மூலம் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பரவல் அதிகரிக்கும் என்று பலரும் எச்சரிக்கின்றனர்.

ஆனால், கும்பமேளாவை பாதியிலேயே நிறுத்துவதற்கு வாய்ப்பு இல்லை என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதை முன்வைத்து பல்வேறு சர்ச்சைகள் வெடித்துள்ளன. கடந்த ஆண்டு தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்டவர்களால்தான் கொரோனா பரவியது என்று பேசியவர்கள் இப்போது எங்கே போனார்கள்? இதை ஏன் கண்டிக்கவில்லை அல்லது தடுக்கவில்லை என்று சமூக ஊடகங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மருத்துவச் செயற்பாட்டாளர் புகழேந்தி

 

மருத்துவச் செயற்பாட்டாளர் புகழேந்தி

 

இதுதொடர்பாக சமூகச் செயற்பாட்டாளரும் மருத்துவருமான புகழேந்தியிடம் பேசினோம், ``இதுபோன்ற கூட்டங்களை அனுமதிக்கக் கூடாது. அப்படி அனுமதித்தால், அது கொரோனா பரவல் அதிகரிப்பதற்கு வழிவகுக்கும் என்று அறிவியல் சொல்கிறது.

ஆனால், தனிப்பட்ட லாபங்களுக்காக இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டும் என்று அரசியல் சொல்கிறது என்ற கோணத்தில்தான் இதைப் பார்க்க வேண்டும். நிலைமை இப்படி மோசமாகிக் கொண்டிருக்கும் சூழலில், கும்பமேளாவில் இத்தனை லட்சம் பேர் கூடுவது முற்றிலும் தவறானது. அதை மறுப்பதற்கில்லை. ஆனால், நாம் கும்பமேளாவை மட்டும் தவறு என்று சொல்லக் கூடாது. தவறு என்றால் எல்லாமே தவறுதான்.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி இயற்கை பேரழிவுகளின்போது தேர்தலையே தள்ளி வைக்க வழிவகை உள்ளது. ஆனால், இவர்கள் அதைச் செய்தார்களா? தேர்தல் பிரசாரத்தின்போது கொரோனா விதிகளை மீறி அவ்வளவு கூட்டம் கூடினார்களே அவர்கள் யார் மீதாவது நடவடிக்கை எடுத்தார்களா? இல்லவே இல்லை. இன்று ஏராளமான வேட்பாளர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். சட்டம் என்றால் எல்லோருக்கும் சமமானதாக இருக்க வேண்டும்? இந்தக் கேள்வி பிரதமர் மோடியிடமிருந்து கேட்கப்பட வேண்டும்.

Hindu devotees gather to take holy dips in the Ganges River during Kumbh Mela

 

Hindu devotees gather to take holy dips in the Ganges River during Kumbh Mela AP Photo/Karma Sonam

 

அயோத்தியில் நடந்த பூஜையில் கலந்துகொண்ட ஸ்ரீ ராம் ஜன்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் தலைவர் மஹந்த் நிருத்யா கோபால் தாஸுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பூஜையின்போது பிரதமர் நரேந்திர மோடிதான் அவரை கைத்தாங்கலாகக் கூட்டிச் சென்றார். ஆனால், மோடி தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளவில்லை, கொரோனா பரிசோதனையும் செய்துகொள்ளவில்லை. விதிகளைப் பிறப்பிப்பதுடன் நின்றுவிடாமல் அவர்களும் விதிகளைப் பின்பற்றினால்தான் மக்களும் பின்பற்றுவார்கள். கொரோனா நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குப் பரவிக் கொண்டிருக்கிறது. ஆகையால், எந்த பேதமும் இல்லாமல் எல்லோரும் விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். அப்போதுதான் கொரோனாவை வெல்ல முடியும்" என்றார்.

https://www.vikatan.com/news/india/govt-should-have-been-restricted-kumbh-mela-2021-gatherings-amidst-pandemic?fbclid=IwAR2ZRWRYk64OUcuzh416WdbHyEKjDBHtHLk9WO8v-2FNnNY-wWSIx9PLL6s?utm_source=Newsleter&utm_medium=email&utm_campaign=17th_apr_2021_Cont6

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மிகப்பெரும் பேரவலம்நடக்க போகுது  அல்லது அதிசயம் அல்லது செய்தி ஒன்றுமே வெளிவராது .

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people, people standing and text

மாஸ்க்கை... இடம் மாறி, போட்டு விட்டார்கள்  என்று இணையத்தில் கலாய்க்கின்றார்கள். :)

 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இந்துக்களின் நம்பிக்கை கங்கா நதியில் மூழ்கி எழுந்தால் நோய்கள் தீர்ந்துவிடும் என்பது. எனவே கங்கா நதியில் மூழ்கி எழுந்தால் இந்தக் கொரானா வைரசும் ஓடிவிடும்.  

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாலி said:

இந்துக்களின் நம்பிக்கை கங்கா நதியில் மூழ்கி எழுந்தால் நோய்கள் தீர்ந்துவிடும் என்பது. எனவே கங்கா நதியில் மூழ்கி எழுந்தால் இந்தக் கொரானா வைரசும் ஓடிவிடும்.  

இந்தியாவின் சனத்தொகையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இதைவிட அருமையான வாய்ப்பேதும் கிடைக்குமா? இந்தியாவின் பொருளாதார, தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பங்களிப்பவர்களிலும் பார்க்க, இந்தியாவுக்கு சுமையாக இருப்பவர்களே இந்த கும்பமேளாவில் பங்குகொள்பவர்களில் அதிகம், ஆகவே அவர்கள் இறைவனடி சேர அனைத்து தெய்வங்களையும் வேண்டிக்கொள்கிறேன்.

6 hours ago, பெருமாள் said:

மிகப்பெரும் பேரவலம்நடக்க போகுது  அல்லது அதிசயம் அல்லது செய்தி ஒன்றுமே வெளிவராது .

 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மீரா

எங்கிருந்தாலும் ஓடி வரவும்.

🤣🤣

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Kapithan said:

மீரா

எங்கிருந்தாலும் ஓடி வரவும்.

🤣🤣

என்ன பாசம்ப்பா உங்களுக்கு.... உங்கள் பாசம் என்னைக் கட்டிவிட்டதே!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Kapithan said:

மீரா

எங்கிருந்தாலும் ஓடி வரவும்.

🤣🤣

55 minutes ago, MEERA said:

என்ன பாசம்ப்பா உங்களுக்கு.... உங்கள் பாசம் என்னைக் கட்டிவிட்டதே!

 

போன பிறவியிலை நீங்கள் இரண்டு பேரும் சகோதரங்கள். 😁

 • Haha 2
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.