Jump to content

சுமந்திரனை கட்சியில் வைத்திருந்து தமிழினத்தை அழித்த அவப்பெயரை வரலாற்றில் சூடிக்கொள்ளாதீர்கள்: இரா.சம்பந்தனிற்கு அதிரடி கடிதம்!

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

விரைவில் விழித்துக் கொள்ளுங்கள். இலங்கை தமிழ் அரசு கட்சியை அழித்தவர் என்ற அவப்பெயரை வரலாற்றில் சூடிக் கொள்ளாதீர்கள் என காட்டமான கடிமொன்றை இரா.சம்பந்தனிற்கு அனுப்பி வைத்துள்ளார் இலங்கை தமிழர் அரசு கட்சியின் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிற்கு நேற்று (16) இந்த கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.

அரச ஆதரவு தனியார் தொலைக்காட்சியொன்றிற்கு அண்மையில் நேர்காணல் வழங்கிய  கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், கடந்த பொதுத்தேர்தலில் யாழ் மாவட்டத்தில் வெற்றிபெற்ற கூட்டமைப்பு வேட்பாளர்கள் தனிப்பட்ட செல்வாக்கினால்தான் வெற்றிபெற்றார்கள், கட்சிக்கு மக்கள் வாக்களிக்கவில்லை, அப்படி வாக்களிததிருந்தால் கட்சித்தலைவர், செயலாளர் வெற்றிபெற்றிருப்பார்கள் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தமிழ் அரசு கட்சியின் பிரமுகர் கே.வி.தவராசாவினால், இரா.சம்பந்தனிற்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தின் சாராம்சம் வருமாறு-

தங்களின் தலைமைத்துவ காலத்தில் தமிழர்களின் அரசியல் பலத்தை சிதைத்த அவப்பெயரை சம்பாதித்து கொள்ளாதீர்கள்.

கட்சிக்கு வாக்களிக்கவில்லை,  தனிப்பட்ட ரீதியான வாக்குகளாலேயே வெற்றியடைந்ததாக ஆபிரஹாம் சுமந்திரன் அகங்காரத்துடன் தெரிவித்திருப்பது, வாக்களித்த மக்களை அவமதிப்பதாகும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் இன்னும் நியமிக்கப்படவில்லை. எனினும், ஆபிரஹாம் சுமந்திரன், தானே பேச்சாளர் என பிரதிபலித்துக் கொண்டு கருத்து வெளியிட்டு வருவது கட்சியின் இருப்பிற்கே ஆபத்தானது.

பசில் ராஜபக்சவிற்கு ஆதரவளிக்க தயாரன அறிவித்து முதல் தனிப்பட்ட வாக்கினால் வென்றதாக கூறியது வரையானது கட்சிக்கு வாக்களித்த மக்களை அதிருப்திக்குள்ளாக்கும்.

இப்படி பொறுப்பற்ற வகையில் செயற்படும் நபரை உடனடியாக கட்சியை விட்டு நீக்க வேண்டும்.

குறித்த நபர் ஊடகப்பேச்சாளர் அல்லவென்பதை விரைவில் அறிவித்து, கட்சிக்கு ஏற்பட்ட அவப்பெயரை சரி செய்ய முயற்சியுங்கள். கட்சிக்கு எதிராக செயற்படும் ஆபிராஹாம் சுமந்திரனின் பின்னணி என்ன?

இந்த இக்கட்டான நிலையில் உங்களின் கடமையை சரியாக செய்யாவிட்டால், தமிழ் தேசிய கூட்டமைப்பு இறுதி அத்தியாயத்தை எழுத நேரிடும். அப்படியொரு சம்பவம் நடந்தால், அதற்கு பொறுப்பானவராக நீங்களே இருப்பீர்கள்.

https://pagetamil.com/2021/04/16/சுமந்திரனை-கட்சியில்-வைத/

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

"செவிடன் காதில் ஊதிய சங்கு" பழமொழி.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

காலம் கடந்த வேண்டுகோள், கட்சித் தலைமையை எப்படி பொறுப்பெடுப்பது என்ற முயற்சியில் அவர்.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அவர் குடியேறி கோயிலாகி விட்டார்.இனி எதுவுமே வேலைக்காகாது 😂

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

முன்பெல்லாம் சுமத்திரனை  திட்டுவதுக்கு நிறைய தயார் பண்ணனும் ஒரு சிறிய பிழை என்றாலும் கத்தி பாய்ந்துவிடும் . இப்ப என்னடா என்றால் அவரின் கட்சி ஆட்களே அவரை அரசியலில் இருந்து கலைப்பதுக்கு  முன்னுக்கு நிக்கினம் .

கனடா தமிழரசு கட்சி தலைவர் கூட சுமத்திரனுக்கு எதிரா போர்க்கொடி தூக்கியுள்ளார் அவர்  கடைசியாக அனுப்பிய பணத்தை சுமத்திரன் லவட்டி விட்டாராம். இப்ப தவராசா இன்னும் வரிசையில் வருவினம் பாருங்க . 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

நான் சுமந்திரனின் ஆதராவாளன் அல்ல. எனினும் எனது அபிப்பிராயம் சுமந்திரனின் தனிப்பட்ட கொள்கைகள் தமிழரசு கட்சியின் கொள்கைகளுக்கு மாறுபட்டு நிற்பதுதான் இப்போதுள்ள பிரச்சினை. ஒரு தனி மனிதனாக சுமந்திரனின் சாதுரியம், விவேகம், புத்திகூர்மை, ஆளுமை என்பவற்றை எடைபோடும் போது தமிழரசு கட்சியில் வேறு எவரும் அவரை நெருங்க முடியாது. ஆகவே கட்சி தலைமை சரியான அறிவுறுத்தலுடன் அவரை ஒரு கட்டுப்பாடுக்குள் இயங்க வைப்பது தான் சரியான தீர்வாக அமையும்.

Edited by vanangaamudi
 • Like 2
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

எதிர் காலத்தில் சுமந்திரனும் சாணக்கியனும் தான் தமிழரசு கட்சியை வழிநடத்துவார்கள், வரும் தேர்தலுடன் யாழ் மேயர் மணிவண்ணன் அவர்களுடன் இணைவார். மாவை அவர்கள் தலைமைத்துவத்துக்கு உகந்தவர் அல்ல. 

 • Like 2
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, zuma said:

எதிர் காலத்தில் சுமந்திரனும் சாணக்கியனும் தான் தமிழரசு கட்சியை வழிநடத்துவார்கள், வரும் தேர்தலுடன் யாழ் மேயர் மணிவண்ணன் அவர்களுடன் இணைவார். மாவை அவர்கள் தலைமைத்துவத்துக்கு உகந்தவர் அல்ல. 

உங்களின் கற்பனை எக்ஸ்பெயர்  டேட் ஆகி விட்டது வேறு விதமாய் கற்பனை பண்ணி பார்க்கவும் பிளீஸ் .😆

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கபித்தானை யாராவது பாத்தாக்கா, கொஞ்சம் களத்துக்கு வரச் சொல்லிவிடுங்களேன். 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

கபித்தானை யாராவது பாத்தாக்கா, கொஞ்சம் களத்துக்கு வரச் சொல்லிவிடுங்களேன். 

பாசக்காறப் பயபுள்ளீங்க தொல்லை தாங்க முடியல..

வந்திட்டேனையா வந்திட்டேன்.....

🤣🤣

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இனி அமக்களம் தான்! 

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனின் இடத்திற்கு (தற்போதைய சூழலில்) மாற்று என்று யாரை தவராசா முன்வைக்கிறார்.? 

TNA என்பது உலக்கை தேய்ந்து உளிப்பிடியாகி பல வருடங்களாயிற்று. புதிய, ச்மூக நோக்குள்ள, தூர நோக்குள்ள, உலகத்திலுள்ள தமிழர்களை ஒன்றிணைக்கும் தலைமைத்துவம் ஒன்று TNA க்குள் இருந்து வர நீண்ட காலம் செல்லும்.  

என்னைப் பொறுத்து, புதிய சிந்தனைகளை தமிழரிடையே கொண்டுவர  புலம் பெயர்ந்தவர்களின் புதிய தலைமுறைதான் இலங்கைத் தமிழர் அரசியலின் ஆகச் சிறந்த தெரிவாக அமையும். 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, zuma said:

எதிர் காலத்தில் சுமந்திரனும் சாணக்கியனும் தான் தமிழரசு கட்சியை வழிநடத்துவார்கள், வரும் தேர்தலுடன் யாழ் மேயர் மணிவண்ணன் அவர்களுடன் இணைவார். மாவை அவர்கள் தலைமைத்துவத்துக்கு உகந்தவர் அல்ல. 

நான் ஏற்கனவே கூறியதுதான்.

கொறோனா பிரச்சனை முடிவதற்குள் சம்பந்தனும் மாவையும் போய்ச் சேர்ந்து விடுவர் (உவர் தவராசா சம்பந்தனின் உடல்நிலை அறிந்துதான் உப்பிடி ஒரு அறிக்கை விட்டவரோ தெரியாது... 😂)

அதன் பின்னர் குறிப்பிட்ட காலத்திற்கு TNA சுமந்திரன் + சாணக்கியன் கட்ட்டுப்பாட்டில் (மேற்கின்) இருக்கும். 

இந்னிலையில் இலங்கைத் தமிழரை யார் கட்டுப்படுத்துவது என்கின்ற போட்டியில் இந்தியா குட்டையைக் கிளறிக்கொண்டிருக்கையில் முசிலிம்களும் சிங்களமும் எம்மை சாப்பிட்டு முடித்திருப்பார்கள். 

இருதியில்

உனக்கும் பெப்பே உன் அப்பனுக்கும் பெப்பே..

☹️

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Kapithan said:

சுமந்திரனின் இடத்திற்கு (தற்போதைய சூழலில்) மாற்று என்று யாரை தவராசா முன்வைக்கிறார்.? 

TNA என்பது உலக்கை தேய்ந்து உளிப்பிடியாகி பல வருடங்களாயிற்று. புதிய, ச்மூக நோக்குள்ள, தூர நோக்குள்ள, உலகத்திலுள்ள தமிழர்களை ஒன்றிணைக்கும் தலைமைத்துவம் ஒன்று TNA க்குள் இருந்து வர நீண்ட காலம் செல்லும்.  

என்னைப் பொறுத்து, புதிய சிந்தனைகளை தமிழரிடையே கொண்டுவர  புலம் பெயர்ந்தவர்களின் புதிய தலைமுறைதான் இலங்கைத் தமிழர் அரசியலின் ஆகச் சிறந்த தெரிவாக அமையும். 

 அது.. தலைவா! அதற்காத்தான் உமது வருகை வரை வாயே திறக்காமல்  காத்திருதேன்.  எங்கே நீங்கள் வனவாசம் போய்விட்டீர்களோ என்று கலங்கிப்போனேன்.  ஒரு காலத்தில் முன்னாள் நீதியரசர்  விக்னேஸ்வரனுக்கு எதிராக  கட்சிக்குள் போர்க்கொடி கிளம்பியபோது: மக்கள் அவருக்குதானே அதிக விருப்பு வாக்குகள் அளித்திருந்தார்களே என்றொரு கருத்து வைக்கப்பட்டது. அதற்கு பெரிய தலையால் ஒரு விளக்கமளிக்கப்பட்டது. அதாவது விக்கினேஸ்வரனை கட்சிதான் மக்களுக்கு அறிமுகப்படுத்தியது அதனாற்தான் மக்கள் அவருக்கு வாக்குப்போட்டார்களாம். இன்று அதே சூழ்நிலையில் சுமந்திரன் வேறொரு விளக்கமளித்துள்ளார்.  அதாவது அன்று விக்கினேஸ்வரனுக்கு விழுந்த வாக்குகள் அவருக்கு விழுந்த  தனிப்பட்ட வாக்குகளா? இன்று சுமந்திரனுக்கு விழுந்த வாக்குகள் கட்சிக்கு விழுந்த வாக்குகள் என்று கொள்ளலாமா? இந்த வழக்கிற்கு நீங்கள்தான் ஒரு நல்ல முடிவு சொல்ல வல்லவர்.  ஒன்று சொல்வார்கள் "நாக்கில் சனி."  என்னைப்பொறுத்தவரை எமது வாக்கே எம்மைத் திருப்பித் தாக்கும் என்பது உண்மைபோல் தெரிகிறது. இதற்கு ஒரு நல்ல தீர்ப்பு சொல்லு தலைவா!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, satan said:

வனவாசம் போகவில்லை சாத்தான். கொறோனா (வெரியன்ற்) வந்து தப்பிப் பிழைத்துள்ளோம், முழுக் குடும்பமும். சிறார் பள்ளிக்கூடத்திலிருந்து கொண்டுவந்தார்கள்.  இந்தக் கொடுமையான நாட்களில் எனது குடும்பம் செய்த நன்மை தீமைகளை எடைபோடும் வாய்ப்பு கிடைத்தது. ஆதலால் Kரோனாவுக்கு ஒரு மிகப் பெரிய நன்றி. 🙏

சாத்தான், 

உண்மையில் எங்கள் அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளில் எனக்கு(நம் எல்லோருக்குமே) துளியளவும் நம்பிக்கையும் இல்லை என்பதுதான் உண்மை. ஆனால் விதண்டாவாதத்திற்கும் வேறு தெரிவுகள் இல்லை என்பதாலும் நாம் எல்லோருக்கும் முண்டு கொடுக்கிறோம். 

ஆனால் எனது நிலைப்பாடு என்னவென்றால், ஏற்கனவே நொந்து நூலாகியுள்ள எம்மக்களை மேலும் பலவீனப்படுத்தும்(சாதி, சமயம், பிரதேசம்) எவற்றிற்கும் ஆதரவளிப்பதில்லை என்பதே.

சுமந்திரன் என்று வரும்போது 

1) சாணக்கியன் வருகை TNA யை மேலும் பலப்படுத்தும். தனி ஆவர்த்தனம் வாசிக்க முடியாதல்லவா. 😀

2) சுமந்திரனின் பின்ணணியில் புதிய அரசியற் சிந்தனையுள்ள இளைய தலைமுறை(சட்டத்தரணிகள்) உருவாகிவருகிறார்கள் என்று தோன்றுகிறது(ஆனால் இப்போதக்கு அவர்களால் எந்தப்பிரயோசனமும் இல்லை)

3) சுமந்திரனும் விக்கியரும் ஒன்றுதான். எமக்கு வேறு தெரிவுகள் இல்லாதபடியால் இவர்களுக்கு வாக்களிக்கிறோம். விக்கி (தவராசாவும் உள்ளே) இந்தியா - சுமந்திரன் மேற்கு.  கடந்த தேர்தலில் சுமந்திரனுக்கு இணையாக (personality ) வேறு யாரும் களத்தில் இல்லை. இருந்திருந்தால் சுமந்திரனின் நிலை கேள்விக்குறியாக முடிந்திருக்கும். தற்போதும் அதே நிலைதான். அதுதான் சுமந்திரனின் பலமே. tna யில் சுமந்திரனுக்குப் போட்டிக்கு ஒருவருமே இல்லை.

இலங்கை சைவ சமய்க் காவலனாக சுமந்திரன் தோற்றமெடுக்கும் நாட்கள் வெகுதூரத்தில் இல்லை. 

விக்கியரை மக்கள் வரவேற்றதற்குக் காரணம் சமயம் அல்ல. தேசியம் மீதான அவரது கருத்துக்களும் அவரது தகுதியும்தான் அவரை மக்கள் தெரிவுசெய்யக் காரணம். இந்தியாவின் சொல்கேட்டு சமயத்தை முன்னிறுத்துவதால் அவருக்கும் சச்சியர் போன்றோருக்கும் அரசியல் எதிர்கலமே இல்லை எமது மண்ணில். 

TNA என்கின்ற வட்டத்திற்குள் நின்று சிந்திப்பதைவிட்டு வெளியே வரவேண்டிய நேரம் வந்துவிட்டது. 

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கும் குடும்பத்துக்கும்  ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைக்காக வருந்துகிறேன்.

6 minutes ago, Kapithan said:

சுமந்திரனுக்கு இணையாக (personality ) வேறு யாரும் களத்தில் இல்லை. இருந்திருந்தால் சுமந்திரனின் நிலை கேள்விக்குறியாக முடிந்திருக்கும். தற்போதும் அதே நிலைதான்.

 எனது கேள்விக்கு நேரிடையாக பதில் சொல்லாது சளாப்புவீர்கள்  என்பது தெரியும். சரி, அதை விடுங்கோ! அவர் வல்லவர், தீரர் இப்படியே சொல்லிச் சொல்லி ஏய்த்து கொண்டிருக்கிறார்களேயொழிய, இவர் சாதித்தது என்னவென்றால்: எல்லாம் பூஜ்ஜியமே. தனித்து வெளிநாட்டு ராஜதந்திரிகளை சந்திப்பதும், அது வெளுத்தவுடன் மற்றவர்கள் மேல் குற்றம் சுமத்துவதையுந் தவிர, வேறு யாரும் எழுந்து விடக்கூடாது என்பதில் சுமந்திரன் மிகக் கவனமாக செயற்படுகிறார். அப்படி யாராவது எழுந்தால், தூரநோக்கு இல்லாத தலையை வைத்து அவர்களை அரசியலில் இருந்து விரட்டுவதிலும், அல்லது அவர்களை வளைத்துப்போட்டு கட்சியை சுருட்டுவதிலுமே  குறியாய் இருக்கிறார். இதனாலேயே கட்சிக்குள்  விரிசலும், விமர்சனமும் எழுகிறது.  கட்சிக்குள் புகுந்த கறுப்பாடு இது. இது துரத்தப்பட வேண்டும்.

25 minutes ago, Kapithan said:

சாணக்கியன் வருகை TNA யை மேலும் பலப்படுத்தும்.

கொஞ்ச காலம் எடுக்கும் இவர் நிறம் வெளுக்க ......?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இதே சுமந்திரன், விக்கினேஸ்வரனுக்கு ஒரு சவால் விட்டார். அதாவது முடிந்தால் தமிழ் தே. கூட்டமைப்பை விட்டு வெளியேறி தேர்தலில் நின்று வென்று காட்டட்டும் என்று. அதை அவர் செய்து காட்டியுள்ளார். முடிந்தால் சுமந்திரன் கட்சியை விட்டு வெளியேறி செய்து காட்டட்டும் பாப்போம்! 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, satan said:

உங்களுக்கும் குடும்பத்துக்கும்  ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைக்காக வருந்துகிறேன்.

 எனது கேள்விக்கு நேரிடையாக பதில் சொல்லாது சளாப்புவீர்கள்  என்பது தெரியும். சரி, அதை விடுங்கோ! அவர் வல்லவர், தீரர் இப்படியே சொல்லிச் சொல்லி ஏய்த்து கொண்டிருக்கிறார்களேயொழிய, இவர் சாதித்தது என்னவென்றால்: எல்லாம் பூஜ்ஜியமே. தனித்து வெளிநாட்டு ராஜதந்திரிகளை சந்திப்பதும், அது வெளுத்தவுடன் மற்றவர்கள் மேல் குற்றம் சுமத்துவதையுந் தவிர, வேறு யாரும் எழுந்து விடக்கூடாது என்பதில் சுமந்திரன் மிகக் கவனமாக செயற்படுகிறார். அப்படி யாராவது எழுந்தால், தூரநோக்கு இல்லாத தலையை வைத்து அவர்களை அரசியலில் இருந்து விரட்டுவதிலும், அல்லது அவர்களை வளைத்துப்போட்டு கட்சியை சுருட்டுவதிலுமே  குறியாய் இருக்கிறார். இதனாலேயே கட்சிக்குள்  விரிசலும், விமர்சனமும் எழுகிறது.  கட்சிக்குள் புகுந்த கறுப்பாடு இது. இது துரத்தப்பட வேண்டும்.

சளாப்புதல் அல்ல சாத்தான். 

நீங்கள் சுமந்திரன் என்கின்ற தனி மனிதனூடாகப் பார்க்கிறீர்கள். நானோ தமிழர் அரசியல் என்று பார்க்கிறேன். அவ்வளவுதான். 

எந்த ஒரு சந்தர்ப்பத்திலாவது சுமந்திரன் வெட்டிப் புடுங்குவார் என்று கூறினேனா..? அல்லது போராட்டத்தைக் கொச்சைப் படுத்தும் கருத்துக்களை விமர்சிக்காமல் இருந்தேனா..? 

எங்கே காட்டுங்கள் பார்க்கலாம்.. 👍

tna க்குள் சுமந்திரனைத்தவிர தலைமைத்துவத்திற்கு தகுதியான யாரையாவது உங்களால் அடையாளம் காட்ட முடியுமா..?

சாணக்கியன் திறமை உள்ளவராகத் தெரிகிறார். ஆனால் தலைமையை  ஏற்கும் தகுதிக்கு அவர் தன்னை கொண்டுவரவேண்டும்/நிரூபிக்க வேண்டும். அதற்குக் காலம் செல்லும். 

சுமந்திரனுக்கு முண்டு கொடுக்கிறேன் என்கின்ற கண்ணாடியூடாக பார்க்காமல் நான் சொல்வதிலுள்ள உண்மைத் தன்மையை மட்டும் பாருங்கள். 

சுமந்திரனுக்கு பிரதியீடாக தகுதியான ஒருவரை முன்னிறுத்துவீர்களானால் அவர் தானாகவே காணாமல் போய்விடுவார். 

அதுதவிர சுமந்திரனின் ஊழல்கள் என்பதை எமது இதுப்போன அரசியலின் ஒரு அங்கமாகத்தான் பார்க்க வேண்டுமே தவிர தனி மனித ஊழலாகப் பார்க்காதீர்கள். அப்படி இல்லையெனில் சுமந்திரன் திருந்தினால் tna யின்/தமிழர் அரசியல் திருந்திவிட்டதாக கொள்ளவேண்டியேற்படும். இல்லாவிட்டால் திரும்பவும் ஏமாறப்போவது நாங்கள்தான். 

நான்/நாங்கள் முட்டாள்களாக இருக்கலாம் அனால் மக்கள் முட்டாள்கள் அல்லவே..

😀

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, satan said:

வேறு யாரும் எழுந்து விடக்கூடாது என்பதில் சுமந்திரன் மிகக் கவனமாக செயற்படுகிறார். அப்படி யாராவது எழுந்தால், தூரநோக்கு இல்லாத தலையை வைத்து அவர்களை அரசியலில் இருந்து விரட்டுவதிலும், அல்லது அவர்களை வளைத்துப்போட்டு கட்சியை சுருட்டுவதிலுமே  குறியாய் இருக்கிறார். இதனாலேயே கட்சிக்குள்  விரிசலும், விமர்சனமும் எழுகிறது.  கட்சிக்குள் புகுந்த கறுப்பாடு இது. இது துரத்தப்பட வேண்டும்.

54 minutes ago, Kapithan said:

இலங்கை சைவ சமய்க் காவலனாக சுமந்திரன் தோற்றமெடுக்கும் நாட்கள் வெகுதூரத்தில் இல்லை

இந்த கருத்து ஆச்சரியமானது. ஒருதடவை சுமந்திரனின் செயற்பாடு குறித்து  ஒரு உறவு கருத்து எழுதியபோது, இன்னொருவர் அவர் கிறிஸ்தவர் என்கிற காரணத்தால்தான் இவ்வளவு விமரிசனம் அவர்மேல் எழுவதாக சீறினார். ஆனால் இப்போ, இப்படி மாறியது நீங்களா? அல்லது சுமந்திரனா? அரசியலில் இதெல்லாம் சகஜம். கிறிஸ்தவ கோசம் எடுபடவில்லை போலத் தெரிகிறது 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, satan said:

இதே சுமந்திரன், விக்கினேஸ்வரனுக்கு ஒரு சவால் விட்டார். அதாவது முடிந்தால் தமிழ் தே. கூட்டமைப்பை விட்டு வெளியேறி தேர்தலில் நின்று வென்று காட்டட்டும் என்று. அதை அவர் செய்து காட்டியுள்ளார். முடிந்தால் சுமந்திரன் கட்சியை விட்டு வெளியேறி செய்து காட்டட்டும் பாப்போம்! 

உங்களுக்கு சுமந்திரன் பிரச்சனையா அல்லது அவரது அரசியல் நிலைப்பாடு பிரச்சனையா.. 🤥

சுமந்திரன் என்கின்ற வெள்ளாள, கொழும்பை மையமாகக் கொண்ட, தமிழர் அரசியல் வரலாறே தெரியாத, சம்பந்தனால் வலிந்து அரசியலிற்குள் கொண்டுவரப்பட்ட கிறீத்துவ மத போதகர்தான் பிரச்சனையென்றால் அதனை மாற்ற ஒருவராலும் ஒன்றும் செய்ய முடியாது. 

ஆனால் சுமந்திரனின் அரசியல் நிலைப்பாடு தவறென்று கருதுவீர்களானால் அவருக்கு மாற்றீடான சிறந்த ஒருவரை முன்னிலைப் படுத்துவீர்களானால் அவர் தானாகவே காணாமல் போய்விடுவார். 

உங்களிடம் நல்ல தெரிவு இல்லை என்றால்   என்னால் என்ன செய்ய முடியும்..? 

அடுத்த மாகாணசபை தேர்தலில் டக்கிளஸ் முதலமைச்சராக வரப்போகிறார். அப்போது என்ன செய்வீர்கள்..? 

அப்பொஇதும் இதே பல்லவிதான் பாடிக்கொண்டிருப்பீர்களா.. ? அல்லது எங்கே பிழை விட்டோம் என யோசிப்பீர்களா.. ?

(வட மாகாணத்தில் என்ன நடக்கிறது என்பதாவது தெரியுமா. ..? 🤥)

2 minutes ago, satan said:

இந்த கருத்து ஆச்சரியமானது. ஒருதடவை சுமந்திரனின் செயற்பாடு குறித்து  ஒரு உறவு கருத்து எழுதியபோது, இன்னொருவர் அவர் கிறிஸ்தவர் என்கிற காரணத்தால்தான் இவ்வளவு விமரிசனம் அவர்மேல் எழுவதாக சீறினார். ஆனால் இப்போ, இப்படி மாறியது நீங்களா? அல்லது சுமந்திரனா? அரசியலில் இதெல்லாம் சகஜம். கிறிஸ்தவ கோசம் எடுபடவில்லை போலத் தெரிகிறது 

தற்போது நடைபெறுவதைக் கூறியுள்ளேன். பொறுத்திருந்து பாருங்கள் புரியும்.

(கிறீத்துவர் என்பதற்காக அவர் எதிர்க்கப்பட்டார் என்கின்ற எனது கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. )

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kapithan said:

அடுத்த மாகாணசபை தேர்தலில் டக்கிளஸ் முதலமைச்சராக வரப்போகிறார். அப்போது என்ன செய்வீர்கள்..?

அடுத்த மாகாண சபைத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அதிருப்த்தி உள்ள பலர் டக்கிலஸுடன் சேர வாய்ப்புள்ளது. டக்கிலஸும், சிங்களமும் அதை நோக்கியே நகருகிறது. இதற்கு யார் காரணம்? 

6 minutes ago, Kapithan said:

சுமந்திரன் என்கின்ற வெள்ளாள, கொழும்பை மையமாகக் கொண்ட, தமிழர் அரசியல் வரலாறே தெரியாத, சம்பந்தனால் வலிந்து அரசியலிற்குள் கொண்டுவரப்பட்ட கிறீத்துவ மத போதகர்தான் பிரச்சனையென்றால் அதனை மாற்ற ஒருவராலும் ஒன்றும் செய்ய முடியாது. 

சாதி, சமயம், பிரதேசவாதம் எனக்குத் தேவையில்லாத ஒன்று. நான் குறிப்பிடுவது: மற்றவர் மேல் சேறு பூசும்போது, தன்மேல் சேறு படாமல் பாத்துக்கொள்ள வேண்டும். தன் சேற்றை மற்றவர் மேல் பூசக்கூடாது.  

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பெருமாள் said:

கனடா தமிழரசு கட்சி தலைவர் கூட சுமத்திரனுக்கு எதிரா போர்க்கொடி தூக்கியுள்ளார் அவர்  கடைசியாக அனுப்பிய பணத்தை சுமத்திரன் லவட்டி விட்டாராம்.

இது எப்ப நடந்தது? தேர்தல் காலங்களில் சுமந்திரன்மேல் பண  மோசடி குற்றச்சாட்டு வந்தபோது, அப்படி ஏதும் நடக்கவில்லை, குற்றம் சுமத்திய பெண்மணி  கட்சிக்குள் நடந்ததை  வெளியில் கதைத்தது தவறு, சுமந்திரனைப்போல் திறமையானவர்கள் கட்சிக்கு வேண்டும் என்றாரே. இவர் வேறொருவரோ?  

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, satan said:

1 அடுத்த மாகாண சபைத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அதிருப்த்தி உள்ள பலர் டக்கிலஸுடன் சேர வாய்ப்புள்ளது. டக்கிலஸும், சிங்களமும் அதை நோக்கியே நகருகிறது. இதற்கு யார் காரணம்? 

2)) சாதி, சமயம், பிரதேசவாதம் எனக்குத் தேவையில்லாத ஒன்று. நான் குறிப்பிடுவது: மற்றவர் மேல் சேறு பூசும்போது, தன்மேல் சேறு படாமல் பாத்துக்கொள்ள வேண்டும். தன் சேற்றை மற்றவர் மேல் பூசக்கூடாது.  

1) சுமந்திரன், உங்கள் விருப்பம்போல்.. 😀

2) யதார்த்தத்தை மீறி உங்களால் ஒன்றுமே செய்ய முடியாது. 

சுமந்திரனுக்கு பிரதியீடாக அல்லது அவரைவிட திறமையான ஒருவரை (தற்போதைய சூழலில்) உங்களால் முன்னிறுத்த முடியுமா ? இல்லையென்றால் நீங்கள் இங்கே குத்தி முறிவது வீண். 

ஏனென்றால் முடியாத ஒன்றைப் பற்றி விவாதிப்பது வீண். 

(உங்கள் கரிசனை சுமந்திரன் என்கின்ற தனி மனிதன் பற்றியது. எனது அக்கறை தமிழர் அரசியல் தொடர்பானது. மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு) 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் என்பவர்; புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்து அரசின் கட்சியாக செயற்படுவோருடன் இணைய வைக்க அரசினால் நியமிக்கப்பட்ட சகுனி.  அதை அவர் சரிவர செய்து த. தே. கூட்டமைப்பின்   உறுப்பினர்களை குறிப்பிட்ட கட்சியின் பக்கம் தள்ளிக்கொண்டே இருக்கிறார். கட்சி நொறுங்கி, அழியும்வரை இவர் கட்சியை விட்டு வெளியேற மாட்டார். மற்றவரை முன்வர விடவும் மாட்டார். ஒருவேளை சம்மந்தர் தலைசாய்ந்தபின் நிறைவேற்றலாம். அதற்குத்தான் தன் கைக்குள் ஒவ்வொருவராய் இழுத்துக்கொண்டு இருக்கிறார். மாவை இவர் சுழிக்குள் அகப்படாமல் இருந்திருந்தால் ஒருவேளை நிலைமை மாறியிருக்கும். ஒரு துளி விஷம் போதும் எல்லாவற்றையும் அழிப்பதற்கு.

இவர் திறமையானவராக இருந்திருந்தால்: இவர் அரசியலுக்குள் நுழைந்த காலத்திலிருந்து நமது பிரச்சனைகள் தீர்ந்து, சுதந்திரத்தை அனுபவித்துக்கொண்டிருப்போம். இப்படி புலம்பிக்கொண்டிருக்க  மாட்டோம்.

சொரணை கெட்டதுகளுக்கு எவ்வளவு சொன்னாலும் உறைக்காது, இடம் கொடுத்தால் வெளியேற்றுவது கடினம். கொடுத்தவர்கள் தான் வெளியேறனும். கறையான் பூச்சிகள்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, satan said:

1) சுமந்திரன் என்பவர்; புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்து அரசின் கட்சியாக செயற்படுவோருடன் இணைய வைக்க அரசினால் நியமிக்கப்பட்ட சகுனி.  அதை அவர் சரிவர செய்து த. தே. கூட்டமைப்பின்   உறுப்பினர்களை குறிப்பிட்ட கட்சியின் பக்கம் தள்ளிக்கொண்டே இருக்கிறார். கட்சி நொறுங்கி, அழியும்வரை இவர் கட்சியை விட்டு வெளியேற மாட்டார். மற்றவரை முன்வர விடவும் மாட்டார். ஒருவேளை சம்மந்தர் தலைசாய்ந்தபின் நிறைவேற்றலாம். அதற்குத்தான் தன் கைக்குள் ஒவ்வொருவராய் இழுத்துக்கொண்டு இருக்கிறார். மாவை இவர் சுழிக்குள் அகப்படாமல் இருந்திருந்தால் ஒருவேளை நிலைமை மாறியிருக்கும். ஒரு துளி விஷம் போதும் எல்லாவற்றையும் அழிப்பதற்கு.

2) இவர் திறமையானவராக இருந்திருந்தால்: இவர் அரசியலுக்குள் நுழைந்த காலத்திலிருந்து நமது பிரச்சனைகள் தீர்ந்து, சுதந்திரத்தை அனுபவித்துக்கொண்டிருப்போம். இப்படி புலம்பிக்கொண்டிருக்க  மாட்டோம்.

3) சொரணை கெட்டதுகளுக்கு எவ்வளவு சொன்னாலும் உறைக்காது, இடம் கொடுத்தால் வெளியேற்றுவது கடினம். கொடுத்தவர்கள் தான் வெளியேறனும். கறையான் பூச்சிகள்.

சொறணை கெட்டவர்கள் என்று கூறியது என்னை அல்லவே..😂

1) அது முடியாது ராஜா..😂

2) இன்னும் இந்த அரசியல்வாதிகளை நம்புகிறீர்களா பாஸ்.. ? உருப்பட்டமாதிரித்தான். ☹️

3) tna யைச் சொல்கிறீர்கள. சரிதானே.. 😀

Link to comment
Share on other sites