Jump to content
 • Veeravanakkam
 • Veeravanakkam
 • Veeravanakkam

Recommended Posts

17992108_10155213394136950_5614372792773858909_n.jpg?_nc_cat=109&ccb=1-3&_nc_sid=730e14&_nc_ohc=ry5T82MH7UgAX9GkU51&_nc_ht=scontent.fgba1-1.fna&oh=e3f2a598fff23d439c046e99cf90b2d0&oe=60A2C67018010576_10155213400151950_5880881385831153885_n.jpg?_nc_cat=104&ccb=1-3&_nc_sid=730e14&_nc_ohc=Az0IkSiAy3EAX85cCLa&_nc_ht=scontent.fgba1-1.fna&oh=0bdefb7f4a9ed1b7d91b19473fef58b1&oe=60A17248
 
 
இன்று அன்னை பூபதி பாரதத்தின் அலட்சியப் போக்கைக் கண்டித்து உண்ணவிரதமிருந்து தன் வாழ்வை உகுத்த நினைவு நாள்
மாவீரன் திலிபன் உண்ணா நோன்பிருந்து தன வாழ்வை உகுத்து சில மாதங்களுள் அன்னை பூபதியும் காந்தீய அறவழியில் தன் சாத்வீகப் போரைத்தொடர்ந்து ஒரு பயனும் கிட்டாமல் இறந்தார்.அவர்களிருவருக்காகவும் எழுதப்பட்ட கவிதை கீழே.
(குறிப்பு- இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் தமிழ்ப் பிரதேசங்களில் அரசின் உதவியோடு வேற்றினத்தவர்கள் குடியேற்றப்பட்டதைத் தடுக்குமாறு கூறியே உண்ணவிரதம் பிரதானமாகச் செய்யப்பட்டது).
திலீபனின் உண்ணா விரதம்
தீயிலுடலை எரிக்கவா - கொடுந்
தேளெனைக் கொட்டச் சிரிக்கவா
காயும் வயிற்றில் மரிக்கவா - என்றன்
கண்களைக் குத்திக் கெடுக்கவா - ஈழத்
தாயுன்றன் வேதனை தீர்க்கவே - எதும்
தாங்குவன் நானெனக் கூறியே
பாயும் புலி எம் திலீபனும் - பெரும்
பட்டினிப் போரைத் தொடங்கவே
இந்தியச் சோதரர் இஃதினை
எதிர்பார்த்திருக்காத நிலைமையால் - தங்கள்
முந்தைய வாக்குறுதி தனை - விட்டு
மோசங்கள் செய்யத் தொடங்கினர்
சிந்தி இரத்தத்தினால் செய்த - எங்கள்
தேச விடுதலைப் போரினைத் - தங்கள்
சொந்த நலன்களைப் பேணவே
சொதப்பிடலாமென எண்ணினர்
நாட்கள் கடந்தனவாயினும் - எங்கள்
நன்மைகளுக் கொரு காப்பிலை
ஆட்களைக் கொண்டு வந்தெம் நிலம் - தனில்
ஆயிரமாய்க் குடியேற்றலும்
சாக்குச் சமாதானம் கூறலும்
சரிவரும் யாவுமென்றெத்தலும் - எனப்
போக்கினர் காலம் திலீபனோ - தன்றன்
பொன்னுடல் தேயத் தொடங்கினான்
மாய்வதொன்றே தன் கடன் இனி - என்று
மன்னவன் மண்ணின் விடுதலைத்
தீயை விழுங்கிக் கிடந்தனன் - ஈழ
தேசம் அழுது துடித்தனள்
பாயும் புலி பசும் புல்லினை - தன்றன்
பட்டினி போக்கப் புசிக்குமோ - அட
வாயில் வயிற்றில் விடுதலைப் பசி
வாட்டத் துடித்தது அவனுயிர்
காந்தி பிறந்த பெருநிலம் - புத்தன்
கருணை உரைத்த உயர் நிலம் - பச்
சோந்திகளின் புதரானதால் - எங்கள்
சோகத்தை யாரும் மதித்திலர்
ஏந்தல் திலீபன் இறந்திடில் - எமக்(கு)
என்ன எனத் திமிர் கொண்டுமே
சேர்ந்து இலங்கை அரசுடன் - சதி
செய்தனர் எம்மை ஒடுக்கவே
நீருமருந்த மறுத்துமே - கொடு
நீசர்கள் நெஞ்சிலுறுத்தவே - இந்தப்
பாரினில் பட்டினிப் போர் செய்த - எங்கள்
பாலகன் தன்னுயிர் நீத்தனன்
ஊரெங்கும் வேதனை சூழ்ந்தது - கொடி
யோரின் சொரூபம் தெரிந்தது - நெஞ்சில்
ஈரமில்லாதவரோடினிக் - கதை
ஏதென ஈழம் தெளிந்தனள்
அன்னை பூபதி
இன்னுயிர் ஈந்த திலீபனின் - பின்
எதற்கினி வாழ்வெனக் கென்றுமே
தன்னுயிர் நீத்திடு நோக்குடன் - ஒரு
தாய் எழுந்தாள் அந்த நாளிலே
அன்னை அவள் பெயர் பூபதி - தன்
ஐம்பத்தியாறு வயதிலே
உன்னி விடுதலைக் காகவே - தன்
உணவை மறுத்தனள் சாகவே
பூபதி வாழ்வும் முடிந்தது - ஈழ
பூமியிற் சோகம் கவிந்தது
சேய் பதினாயிரம் சேர்ந்திட - மறச்
சேனை பெருகிச் சிறந்தது
வாபதில் சொல்கிறோம் என்று - நின்றிட்ட
வானர சேனையிற் பாய்ந்தது
தாயவள் காளி விழித்தனள் - இந்தத்
தாரணி ஆடச் சிரித்தனள்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 19/4/2021 at 22:22, karu said:
17992108_10155213394136950_5614372792773858909_n.jpg?_nc_cat=109&ccb=1-3&_nc_sid=730e14&_nc_ohc=ry5T82MH7UgAX9GkU51&_nc_ht=scontent.fgba1-1.fna&oh=e3f2a598fff23d439c046e99cf90b2d0&oe=60A2C67018010576_10155213400151950_5880881385831153885_n.jpg?_nc_cat=104&ccb=1-3&_nc_sid=730e14&_nc_ohc=Az0IkSiAy3EAX85cCLa&_nc_ht=scontent.fgba1-1.fna&oh=0bdefb7f4a9ed1b7d91b19473fef58b1&oe=60A17248
 
 
இன்று அன்னை பூபதி பாரதத்தின் அலட்சியப் போக்கைக் கண்டித்து உண்ணவிரதமிருந்து தன் வாழ்வை உகுத்த நினைவு நாள்
மாவீரன் திலிபன் உண்ணா நோன்பிருந்து தன வாழ்வை உகுத்து சில மாதங்களுள் அன்னை பூபதியும் காந்தீய அறவழியில் தன் சாத்வீகப் போரைத்தொடர்ந்து ஒரு பயனும் கிட்டாமல் இறந்தார்.அவர்களிருவருக்காகவும் எழுதப்பட்ட கவிதை கீழே.
(குறிப்பு- இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் தமிழ்ப் பிரதேசங்களில் அரசின் உதவியோடு வேற்றினத்தவர்கள் குடியேற்றப்பட்டதைத் தடுக்குமாறு கூறியே உண்ணவிரதம் பிரதானமாகச் செய்யப்பட்டது).
திலீபனின் உண்ணா விரதம்
தீயிலுடலை எரிக்கவா - கொடுந்
தேளெனைக் கொட்டச் சிரிக்கவா
காயும் வயிற்றில் மரிக்கவா - என்றன்
கண்களைக் குத்திக் கெடுக்கவா - ஈழத்
தாயுன்றன் வேதனை தீர்க்கவே - எதும்
தாங்குவன் நானெனக் கூறியே
பாயும் புலி எம் திலீபனும் - பெரும்
பட்டினிப் போரைத் தொடங்கவே
இந்தியச் சோதரர் இஃதினை
எதிர்பார்த்திருக்காத நிலைமையால் - தங்கள்
முந்தைய வாக்குறுதி தனை - விட்டு
மோசங்கள் செய்யத் தொடங்கினர்
சிந்தி இரத்தத்தினால் செய்த - எங்கள்
தேச விடுதலைப் போரினைத் - தங்கள்
சொந்த நலன்களைப் பேணவே
சொதப்பிடலாமென எண்ணினர்
நாட்கள் கடந்தனவாயினும் - எங்கள்
நன்மைகளுக் கொரு காப்பிலை
ஆட்களைக் கொண்டு வந்தெம் நிலம் - தனில்
ஆயிரமாய்க் குடியேற்றலும்
சாக்குச் சமாதானம் கூறலும்
சரிவரும் யாவுமென்றெத்தலும் - எனப்
போக்கினர் காலம் திலீபனோ - தன்றன்
பொன்னுடல் தேயத் தொடங்கினான்
மாய்வதொன்றே தன் கடன் இனி - என்று
மன்னவன் மண்ணின் விடுதலைத்
தீயை விழுங்கிக் கிடந்தனன் - ஈழ
தேசம் அழுது துடித்தனள்
பாயும் புலி பசும் புல்லினை - தன்றன்
பட்டினி போக்கப் புசிக்குமோ - அட
வாயில் வயிற்றில் விடுதலைப் பசி
வாட்டத் துடித்தது அவனுயிர்
காந்தி பிறந்த பெருநிலம் - புத்தன்
கருணை உரைத்த உயர் நிலம் - பச்
சோந்திகளின் புதரானதால் - எங்கள்
சோகத்தை யாரும் மதித்திலர்
ஏந்தல் திலீபன் இறந்திடில் - எமக்(கு)
என்ன எனத் திமிர் கொண்டுமே
சேர்ந்து இலங்கை அரசுடன் - சதி
செய்தனர் எம்மை ஒடுக்கவே
நீருமருந்த மறுத்துமே - கொடு
நீசர்கள் நெஞ்சிலுறுத்தவே - இந்தப்
பாரினில் பட்டினிப் போர் செய்த - எங்கள்
பாலகன் தன்னுயிர் நீத்தனன்
ஊரெங்கும் வேதனை சூழ்ந்தது - கொடி
யோரின் சொரூபம் தெரிந்தது - நெஞ்சில்
ஈரமில்லாதவரோடினிக் - கதை
ஏதென ஈழம் தெளிந்தனள்
அன்னை பூபதி
இன்னுயிர் ஈந்த திலீபனின் - பின்
எதற்கினி வாழ்வெனக் கென்றுமே
தன்னுயிர் நீத்திடு நோக்குடன் - ஒரு
தாய் எழுந்தாள் அந்த நாளிலே
அன்னை அவள் பெயர் பூபதி - தன்
ஐம்பத்தியாறு வயதிலே
உன்னி விடுதலைக் காகவே - தன்
உணவை மறுத்தனள் சாகவே
பூபதி வாழ்வும் முடிந்தது - ஈழ
பூமியிற் சோகம் கவிந்தது
சேய் பதினாயிரம் சேர்ந்திட - மறச்
சேனை பெருகிச் சிறந்தது
வாபதில் சொல்கிறோம் என்று - நின்றிட்ட
வானர சேனையிற் பாய்ந்தது
தாயவள் காளி விழித்தனள் - இந்தத்
தாரணி ஆடச் சிரித்தனள்

கவிதை பகிர்விற்கு நன்றிகள் தோழர்..

Link to post
Share on other sites

மிக்க நன்றி தமிழ்த் தேசியன்.

 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Similar Content

  • By goshan_che
   பார்திபன் கனவு
   எங்கள் பார்திபனுக்கும் ஒரு கனவிருந்தது,
   அவன் மனதில் அனல் குடி இருந்தது.
   உறையூரான் கனவு சோழத்தை ஒட்டியது, 
   எங்கள் ஊரெழுவான் கனவு ஈழத்தை பற்றியது. 
   சோழப் பார்தீபன் கனவு வளர்த்தது வம்சத்தை,
   எங்கள் ஈழப் பார்தீபன் நகர்வு,
   சிதைத்தது பாரத வஞ்சத்தை.
   பழுவேட்டையர்கள் உடம்பு பல தழும்புகள் கொண்டதாம்.
   போங்கடா போங்கள், எங்கள் பார்தீபன் உடம்பே தழும்பில்தான் இருந்தது.
   அவனுக்கு பொருத்தப் பட்டது ஆட்டு ஈரலாம்.
   இருக்கட்டும்,
   அவன் இதயம் வேங்கையினது.
   அவன் ஒரு சாரம் கட்டிய பொடியன். 
   ஆனால்,
   பாரதத்துக்கே காந்திய சாரம் புகட்டிய வலியன்.
   மருத்துவனாய் வந்திருக்கவேண்டியவன்,
   இனத்தின் ரணத்திற்கு தானே மருந்தாய் வந்தான். முடிவில் மருத்துவகல்விக்கு உடலை விருந்தாயும் தந்தான்.
   தடை போடலாம் அவன் நிகழ்வுகளுக்கு,
   எம் மனதில் தினம் ஏந்தும் நினைவுகளுக்கு?
   பார்திபன் இன்னும் பசியோடுதான் இருக்கிறான். அவன் கனவும் .....
   —கோஷான்—
    

  • By முதல்வன்
   தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளியான திலீபன் உண்ணாவிரதம் காரணமாக உயிரிழக்கவில்லை என பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்ன தெரிவித்துள்ளார்.
   நோய் காரணமாகவே திலீபன் உயிரிழந்தார் என கமால் குணரட்ன குறிப்பிட்டுள்ளார்.
   ஐந்து அம்ச கோரிக்கையை முன்வைத்து 1987ம் ஆண்டில் திலீபன் 12 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி உயிர் நீத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
   பூசா சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் கைதிகள் தொடர்பில் இன்றைய தினம் கண்டியில் வைத்து கருத்து தெரிவித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
   அவர் மேலும் கூறுகையில்…
   “பூசா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் இந்த நாட்டின் மிகப் பெரிய குற்றவாளிகளாவர். இந்தக் கைதிகளின் கோரிக்கைகள் அநீதியானவை அவற்றை நிறைவேற்ற முடியாது. தங்களது சட்டத்தரணிகள் சார்பிலும் போராடுகின்றனர். சட்டத்தரணிகளையும் சோதனையிடக் கூடாது என கோரியிருந்தனர். அந்த விடயம் அவர்களுக்கு தேவையற்றது.”
   நான் இந்த நாட்டின் பாதுகாப்புச் செயலாளர். நான் பூசா சிறைச்சாலைக்கு சென்றாலும் என்னையும் சோதனையிடுவார்கள், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சென்றாலும் சோதனையிடுவார்கள். இந்தச் சிறைச்சாலை அதி உயர் பாதுகாப்பு கொண்ட சிறைச்சாலையாகும்.”
   “இலங்கை வரலாற்றில் சாகும் வரையில் உண்ணாவிரதப் போராட்டம் இருந்து உயிரிழந்த ஒருவரே இருக்கின்றார் அவர் திலீபன் ஆவார், திலீபன் உண்ணாவிரதப் போராட்டம் காரணமாக உயிரிழக்கவில்லை, திலீபன் ஓர் நோயாளி, நோயுற்றிருந்த திலீபனை பிரபாகரன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுமாறு பணித்தார்.”
   “இது தவிர ஏனையவர்கள் இரண்டு மூன்று நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் இருந்து பின்னர் தங்களது போராட்டத்தை கைவிட்டு விடுவார்கள், ஏதேனும் ஓர் காரணத்திற்காக இவ்வாறு உண்ணாவிரதம் கைவிடப்படுகின்றது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
   “பூசாவில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் கைதிகளுக்கு உணவு காணப்படுகின்றது தேவையென்றால் அவர்கள் உணவு உட்கொள்ள முடியும். சிலர் சாப்பிட மாட்டோம் என்று போராடி வருகின்றனர் இன்னும் சில நாட்களில் அவர்கள் சாப்பிடுவார்கள், அது ஒரு பிரச்சினையல்ல.”
   “குற்றச் செயல்களில் ஈடுபட்டால் அவர்களின் தராதரம் அவர்கள் சீருடை அணிபவர்களா என்பது பற்றியெல்லாம் நாம் கரிசனை கொள்ளப் போவதில்லை, அனைவருக்கும் ஒரே விதமாகவே சட்டம் அமுல்படுத்தப்படும்” என பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்ன தெரிவித்துள்ளார்.
   https://www.tamilwin.com/politics/01/255882?ref=home-latest
  • By வர்ணன்
   திலீபன்.......

   போர் மட்டுமே தெரியும் ........
   புலிகளுக்கு என்றவர்க்கு.......
   நீர் ஆகாரம் கூட இலாது - புரட்சியில்...
   நீந்தவும் தெரியும் என்று சொல்லி........
   தன்னை தானே........
   வேருக்கு உரமாக்கிய செம்பருத்தி!!

   கூச்சல்களும் கூவல்களும் ....
   செத்து செத்து விழுந்தாலும்.....
   எதிரி கை முத்தமிடும் பிழைப்பும்.....
   தொடர் கதையாய் இன்னும் இருந்தாலும்...
   ஒரு சுடர் அணைந்து போச்சுதே......
   இன்னும் இருட்டு.....
   இதயத்தின் ஒரு மூலையில்!!

   உயிர் உருக உருக .......
   தனை எரித்து போனது ஒரு .......
   ஊரெழுவின் வர்த்தி........
   ஊருக்கு வெளிச்சம் வந்ததோ இல்லையோ........
   உன் பேருக்கு - இறப்பு என்றுமேயில்லை!

   தியாகம் என்பார்..........
   அதன் உச்சம் என்பார்.......
   அது எது-?

   ஊர் காத்த - உயிரும் உனக்கு இல்லை........
   உயிர் ஓடி போன உடலும் மண்ணுக்கு இல்லை........
   மொத்தமாய் நீயானாய்........

   உதடு -பஞ்சு பஞ்சாய் வெடிக்கையிலும்......
   உன் நெஞ்சில் எழுந்த முணுமுணுப்பு......
   வென்றே ஆகும் .....நம்புறோம்......
   அதுவரை - எம் நெஞ்சில் நீ உறங்கு .......
   சுமையாய்!!
  • By நவீனன்
   திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுக்கு போட்டியாக கொண்டாட்ட நிகழ்வுகளும்

   குளோபல் தமிழச் செய்தியாளர்
   திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்ற இடங்களுக்கு மிக அருகில் கொண்டாட்ட நிகழ்வுகளும் இன்றைய தினம் யாழில்.ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.
   யாழ்.பல்கலைகழக வளாகத்தினுள் மாணவர்களின் ஏற்பாட்டில் , நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக நடைபெற்றன. அதேநேரம் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்ற இடத்திற்கு மிக அருகில் உள்ள யாழ்.பல்கலைகழக கைலாசபதி கலையரங்கில் சர்வதேச திரைப்பட விழா நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
   பல்கலைகழக வளாகத்தினுள் சிவப்பு மஞ்சள் கொடி கட்டி திலீபனின் நினைவு நாளை மாணவர்கள் அனுஸ்டிக்கும் போது , சர்வதேச திரைப்பட விழாவை முன்னிட்டு விழா குழுவினால் பல்கலைகழக வளாகத்தினுள் அலங்காரங்கள் செய்யப்பட்டு உள்ளான.
   யாழ்.பல்கலைகழகத்தினுள் திலீபனின் திருவுருவபடம் வைத்து உண்ணா நோன்பிருந்து திலீபன் உயிர் நீத்த 26ஆம் திகதி வரையில் அஞ்சலி செலுத்த மாணவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். அதே கால பகுதியில் இன்று முதல் எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் சர்வதேச திரைப்பட விழாவை முன்னிட்டு தினமும் கைலாசபதி கலையரங்கில் திரைப்படங்கள் காட்சி படுத்தப்படவுள்ளன.
   அதேவேளை இன்றைய தினம் நல்லூர் பின் வீதியில் பருத்துத்துறை வீதியில் அமைந்துள்ள திலீபனின் நினைவுத்தூபியில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன.
   அதேநேரம் நினைவுத்தூபிக்கு முன்பாக உள்ள இடத்தில் காப்புறுதி நிறுவனம் ஒன்றின் கொண்டாட்ட நிகழ்வுகள் இடம்பெற்றன.


   http://globaltamilnews.net/archives/41242
  • By கந்தப்பு
   சுயத்தின் எல்லை கடந்த திலீபன்

   சமூக உலகில் சங்கமித்துக்கொள்ளும் தனி மனிதனிடம் மனிதத்துவம் எப்போது நிறைவு பெறுகிறது? மனித சிந்தனையை மிக ஆழமாகத் தூண்டி விடும் வினா இது.

   தத்துவ வித்தகரும், அரசியற் சிந்தனையாளரும், சிறந்த மார்க்சியவாதியுமான ஜோன் போல் சாத்தரின் ஆழமான சிந்தனையூடாக அழகு தமிழிலே அதை நமக்கு விளக்குகின்றார் "தேசத்தின் குரல்' மதியுரைஞர் அன்டன் பாலசிங்கம்.

   மனிதன் தனக்காக வாழாமல், தன் நலனுக்காக வாழாமல், தன் குடும்பம் என்ற குறுகிய வட்டத்துக்குள் வாழாமல், தனது சுயத்திற்கு அப்பால், மற்றவர்களுக்காக, மற்றவர்களின் நலனுக்காக, மானுடத்தின் நல்வாழ்வுக்காகத் தன்னை அர்ப்பணித்து வாழும் மாண்பே மகத்துவம். சுயத்தின் எல்லை கடந்து, தனி மனித நலனுக்கு அப்பால் மற்றவர்களுக்காக வாழ்பவன், மானுடத்தின் உயர்ச்சிக்காகவும் மேம்பாட்டுக்காகவும் உழைப்பவன் உண்மையான மனிதனாகச் சிறக்கிறான். மானுடத்தின் மனிதத்துவம் அவனிடமே நிறைவு பெறுகின்றது. இதுவே இருப்பியம் காட்டி நிற்கும் மனிதாபிமானம்.

   தன் இனத்தின் இருப்புக்காகத் தன் சுயத்தைத் துறந்து, மானிட மாண்பை செயலில் காட்டி, நமக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்த ஒரு தியாகியின் இருபதாவது ஆண்டு நிறைவு நாளில் நினைவு நாளில் அந்தத் தீபச் சுடரின் ஒளியின் ஊடாக மானிடத்தின் மாண்பை மேன்மையை நாம் தரிசிக்க ஒரு வாய்ப்புக் கிட்டியிருக்கின்றது.

   காந்தி தேசத்துக்கே காந்திய நெறியின் அர்த்தத்தைப் போதித்து உணர்த்தியவன் தியாகி திலீபன். தான் கொண்ட இலட்சியத்தில் இரும்பை ஒத்த உறுதியாக நின்று, ஒரு சொட்டுத் தண்ணீர் கூட அருந்தாமல் உண்ணா நோன்பு இருந்து, சுமார் இரண்டு வாரங்கள் அணுவணுவாய்ச் செத்து, ஈழத் தமிழ் அன்னைக்கு வேறு எந்தத் தலைமகனும் இயற்ற முடியாத தற்கொடையாகத் தன்னுயிரை ஈகமாக அர்ப்பணித்து, சரித்திரத்தில் சாகா இடம்பெற்ற ஒரு தியாகியின் இரண்டு தசாப்த காலம் கடந்த நினைவு தினம் இன்று.

   மனித வாழ்வு அவலமானது; அபத்தமானது; துன்பங்கள், துயரங்கள் நிறைந்தது. இதுவே நமது இருப்பின் மெய்மை நிலை. இந்த உண்மை நிலையிலிருந்து யதார்த்தத்திலிருந்து யாரும் தப்பிவிட முடியாது. இந்த வாழ் நிலையை மனிதன் துணிச்சலுடன் எதிர்கொண்டேயாக வேண்டும். வாழ்வில் அர்த்தமில்லை என்று யாரும் கோழையாகி உயிரை மாய்த்து விட முடியாது. நாம் வாழ்ந்தேயாக வேண்டும். அபத்தமான வாழ்விலிருந்து மீளும் அர்த்தமே அதில்தான் உள்ளது என்பது நாம் யாவரும் அறிந்ததே.

   ஆனால், தன் துன்பியலுக்காக மட்டுமல்லாமல், தன் இனத்தின் துன்பியலிலிருந்து அந்த இனத்தை விடுவிப்பதற்காக தன் மக்களின் மீட்சிக்காக தன் வாழ்வையும் உயிரையும் ஆகுதியாக்கி, அர்ப்பணம் செய்யத் துணிபவன் வீரத்தின் உச்சியில் வைத்துப் போற்றப்படுகின்றான். அவன் கோழை அல்லன். கோபுரத்தின் உச்சியில் வைத்துப் போற்றப்படும் கோமகனாகின்றான். இவ்வாறு குன்றின் உச்சியில் மின்னும் தாரகையாகத் திகழ்கிறான் திலீபன்.

   உலக சரித்திரத்தில் இம்சைக்கு எதிராக அஹிம்சை வழியில் போராடி சத்தியத்தின் நிஜத்தை உலகுக்குப் பறைசாற்றுவித்த மாண்பாளர்களின் வரிசையிலே மகாத்மா காந்திக்கு முந்திய இடம் தியாகி திலீபனுக்கு உண்டு. ஆயுதப் போராளி, அஹிம்சைப் போராளியாகி சரித்திரம் படைத்த வரலாறு திலீபனுடையது.

   ஆயுத விடுதலைப் போராட்டத்துக்குள் முகிழ்ந்த திலீபன் என்ற இளைஞன் காந்தீய வழியில் நெறிக்கப்பட்ட அறப் பாதையில் தானே தன்னை வருத்தி, மேற்கொண்ட சத்திய வேள்வியிலே மனவுறுதியுடனும் திடசங்கற்பத்துடனும் தளராது உயர்ந்து நின்று, தன்னையே ஆகுதியாக்கி உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தி, தன் இலட்சிய வேட்கையின்பால் உலகின் கவனத்தைத் திரும்பிப் பார்க்க வைத்தான்.

   அவனது போராட்டக் காலகட்டமும், அதனை ஒட்டிய விளைவுகளும் அந்த நேரத்தில் இரண்டு முக்கிய உண்மைகளை நம் இனத்துக்குப் போதித்தன.

   ஒன்று அதுவரை சுமார் மூன்று தசாப்த காலம் தமிழர் தம் தலைமையை அலங்கரித்து, பதவிகளை சுவீகரித்து, அறநெறிப் போராட்டத்தின் பெயரால் இனத்தை வழி தப்பி நடத்திச் சென்ற தலைவர்களுக்கு இருக்காத அறநெறி உறுதியும், திட சங்கற்பமும், தலைமைத்துவ மகத்துவமும், அந்தத் தலைமைகளிடமிருந்து அப்பொறுப்பை ஆயுத பலத்தின் பின்னணியில் பிடுங்கிக் கொண்ட இளைஞர்கள் மத்தியில் மிகுதியாக இருக்கின்றன என்பதை செயன்முறைச் சாதனையில் உதாரண புருஷனாகச் செய்து காட்டினான் திலீபன்.

   அதாவது, வெறும் ஆயுதப் போராட்டத் துணிச்சல் தந்த வெறி மட்டுமல்ல, அறவழிப் போராட்டத்துக்கான திடசங்கற்பமும் இலட்சியப் பற்றுறுதியும் கொண்டது நமது புதிய இளந்தலைமுறைப் போராட்ட சக்தி என்பதை நம் மக்களுக்குப் பறைசாற்றுவித்தான் திலீபன். அறவழிப் போராட்டத்தில் கூட தமது முன்னைய தலைமைக்கு இல்லாத தகுதியும், உறுதியும் அடுத்த தலைமுறையிடம் நிறையவே உற்பவித்துள்ளன என்பதற்கு உதாரணமானான் அவன்.

   அடுத்தது ஈழத் தமிழர்களைத் துன்பியல் சாகரத்திலிருந்து மீட்கும் உண்மை இரட்சகராக இந்தியா இருக்கும் என்று ஈழத் தமிழர் மனதில் படிந்திருந்த மாயையை புனைகதையை தவறான நம்பிக்கையை துடைத்தெறிந்து, உண்மையை நம் மக்களுக்கு உணர்த்தும் விளக்காகவும் விளங்கினான் திலீபன்.

   இந்திய அதிகார வர்க்கத்தின் உள்நோக்கத்தில் தன்னுடைய வல்லாதிக்கத்தின் பூகோள, அரசியல் நலனே முக்கியமானது, ஈழத் தமிழரின் நீதி, நியாயமான அபிலாஷைகள் அல்ல என்ற உண்மையை திலீபன் உண்ணா நோன்பிருந்த அந்தப் பன்னிரு நாள் காலத்தில்தான் ஈழத் தமிழர் தாயகம் நன்கு உணர்ந்து தெளிந்துகொண்டது.

   ஈழத் தமிழர் விவகாரம் தொடர்பாக அன்றைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி, அச்சமயத்தில் இரண்டு உடன்படிக்கைகளைச் செய்துகொண்டார். ஒன்று எழுத்தில். மற்றது வார்த்தைகளில். முதல் உடன்படிக்கை, இலங்கை இந்திய ஒப்பந்தத்துக்கு முதல்நாள் இரவு, புதுடில்லியில் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் நேரடியாகப் பேசி அவர் செய்து கொண்டது. அது எழுத்தில் வரையப்படாதது. கனவான்கள் இணக்கம்.

   ஆனால் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியின் கனவான்தனம் கனவாகிப் போனதால், அந்த உடன்பாடு காற்றில் பறந்தது. கரைந்தது. தியாகி திலீபனின் உண்ணாநோன்பு மூலம் அந்த உடன்பாடு கனவாகிப்போய், ராஜீவின் கனவான்தனம் காணாமற் போனதை ஈழத் தமிழினம் உணர்ந்தது.

   அடுத்த உடன்படிக்கை இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனாவுடன் அவர் செய்துகொண்டது. அந்த உடன்பாடும் கூட சுமார் 19 ஆண்டுகள் கழித்து, இலங்கையின் தற்போதைய மஹிந்த அரசின் வடக்கு கிழக்குப் பிரிப்புடன் முற்றாகச் செத்துச் செயலிழந்து அடங்கிப் போய் விட்டது என்பதை உலகம் உணர்ந்துகொள்ளும் நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.

   இதுதான் நிஜத்தில் நிகழும் என்பதை, காந்தியின் நாமத்தைத் தனது பெயரில் கொண்ட அந்தத் தலைவருக்கு தனது காந்தீய நெறிப்பட்ட போராட்டத்தின் மூலம் அன்றே உணர்த்த முயன்றான் தியாகி திலீபன்.

   அதைப் புரிந்துகொள்ள அன்று அவர் மறுத்ததால் மறந்ததால் இன்று இந்த நிலைமை. திலீபனின் நீதியான போராட்டத்துக்குப் பின்னால் புதைந்து கிடந்த மகத்துவத்தைப் புரிய மறுத்தமை, பல வரலாற்றுத் துன்பியல் நிகழ்வுகளுக்கு வழி சமைத்து விட்டதே.........!

   -உதயன்
 • Topics

 • Posts

  • விஜய் தணிகாசலம் அவர்களுக்கு நன்றியும் பாராட்டுகளும்..........!   🌹 எறும்பூர கல்லும் தேயும்........!
  • ஈழ அகதிகளும், கொரோனாவும், தமிழக முகாம்களும் – முதல்வரின் கவனத்திற்கு! May 15, 2021 தமிழ்நாட்டில் ஈழ அகதிகள் கொரோனாவிற்கு கொட்டகைகளில் தங்க வைக்கப்படுகின்றனரா ?. ந.லோகதயாளன். தமிழ்நாட்டில் ஈழ அகதிகள் தங்கியுள்ள அகதிகள் முகாமில் இதுவரை 7 முகாம்களில கொரோனா தொற்று பரவியுள்ளபோதும் முகாம்களிலேயே கொட்டில்கள் அமைக்கப்பட்டு தனிமைப்படுத்தல் வழங்கப்படுவதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் நூற்றுக் கணக்காண அகதிகள் முகாமில் ஈழ அகதிகள் 75 ஆயிரம் பேரளவில் தங்கியுள்ளனர். இவ்வாறு ஈழ அகதிகள் தங்கியுள்ள பல முகாம்களில் இருந்து தப்பித்து மீண்டும் தாயகம் திரும்புவது அதிகரிக்கும் நிலையில் தமுழ்நாட்டில் இதுவரை 7 முகாம்களில் உள்ள பலர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுட்டிக்காட்டப்படுகின்றமையும் ஓர் காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. ஈழ அகதிகள் முகாமிலும் கொரோனா பரவியுள்ளது. ———————-_- இதுவரை மண்டபம் முகாம், திருச்சி கொட்டப்பட்டி முகாம், உட்பட 7 முகாம்களில் அதிகமாகவும் மேலும் இரு முகாமில் ஒரு சிலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் கொரோனா தொற்றாளர்கள் வைத்தியசாலைக்கு சென்றாலும் அவர்களது குடும்பம் அந்த நெருங்கிய முகாம்களிலேயே தனியான கொட்டகைகளில் தங்க வைக்கப்படுவதாகவும் இதேநேரம் தற்போது முகாம்களில் தனியாக அமைக்கப்பட்ட தனிமைப்படுத்தல் கொட்டகைகளில் 21 பேர் கொரோனா தொற்றுடன் வாழ்வதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது. இவ்வாறு ஒரே வளாகத்திற்கு உள்ளேயே அருகில் கொட்டகை அமைத்து கொரோனா தொற்றாளர்களை தங்க வைத்திருப்பதே தமக்கு பெரிய உளவியல் தாக்கமாகவும் அச்சமாகவும் உள்ளது. ஈழத்தில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக அனைத்து உடமைகளையும் இழந்து உயிர் தப்பினால் போதும் என்பதற்காக ஆபத்தான பயணம் மூலம் தமிழகம் சென்ற போதும் தற்போது கொடிய நோயில் அகப்படுவோமோ என்ற அச்சமே மீண்டும் தாயகம் திரும்பினால் என்ன என்ற மனக் குழப்பத்திற்குள் தள்ளுகின்றது. முகாம்களில் வாழும் ஈழத் தமிழரகளின் நிலமை. இந்தியாவில் நாம் வாழும் முகாம்களானாலும் வெளியில் தங்கியுள்ளவர்களானாலும் இன்றும் இலங்கையில் எமது உறவுகள் வாழும் சுதந்திரத்தை விடவும் நின்மதியாக வாழ்வதாகவே எண்ணுகின்றோம். இருப்பினும் இங்கும் பல பிரச்சணைகள், நெருக்கடிகள் இருக்கின்றன. இங்கே மின்சாரம், வைத்தியம் இலவசம் அதேநேரம் ஒருவருக்கு நாள் ஒன்றிற்கு 150 ரூபா ( இந்திய நாணயம் ) வாழ்வாதாரத்திற்கு போதுமானது. ஆனால் இந்த தொகையில் இலங்கையில் வாழ முடியாது. இதேநேரம் எமது பிள்ளைகள் இந்தியாவில் கற்றதனால் இந்திய சான்றிதழுடன் இலங்கையில் தொழில் செய்ய முடியாது. இவற்றினாலேயே தாயகம் திரும்ப மனம் இன்றி இருந்தோம். இருப்பினும் தற்போது கொரோனா மீண்டும் தாயகம் நோக்கி இழுக்கின்றது என்கின்றனர். தமிழ்நாட்டில் உள்ள மண்பம் முகாம் மட்டுமல்ல பல முகாம்கள் எமது பகுதி மாட்டுக்கொட்டில் போன்றே இன்றும் உள்ளது. அதாவது 1990ஆம ஆண்டு இருந்த கட்டிடங்கள் அப்படியே இருப்பினும் எமது உயிரை பாதுகாப்பதற்காக வந்து பின்னர் தற்போது 20, 30 ஆண்டுகால வாழ்வியல முறமையாகிவிட்டது என்கின்றனர். திருகோணமலையை சேர்ந்த மற்றொருவரின் ஆதங்கம். —–++++++—— திருகோணமலையை சொந்த இடமாக கொண்ட 31 வயது பெண்மனி தகவல் தருகையில் நான் மன்னாரில் திருமணம் செய்து 12 ஆண்டுகளிற்கு முன்பு தமிழகம் வந்து முகாமில் வாழும் நிலையில் இரு பிள்ளைகளும் முகாமிலேயே பிறந்து இன்று கல்வி கற்கின்றனர். இவ்வாறுவாழும் எமக்கு குடும்பத் தலைவருக்கு மாதம் ஒன்றிற்கு ஆயிரம் ரூபாவும் அடுத்தவருக்கு 750 ரூபாவும சிறுவர்களிற்கு 400 ரூபா என்ற அடிப்படையில் தற்போது மாதாந்தம் 2 ஆயிரத்து 550 ரூபா கிடைக்கும் ஆனால் மாதம் 12 ஆயிரம் ரூபாவில் இருந்து 15 ஆயிரம் ரூபா குடும்பச் செலவிற்கு வேண்டும். ஏனெனில் ஒரு கிலோ மீன் 250 ரூபா விற்பனையாகும்போது 4 பேர் கொண்ட எமக்கு 2 ஆயிரத்து 550 ரூபா ஒரு கிழமைக்கே போதுமானது. இருந்தபோதும் கணவர் வெளியில் கூலி வேலை கிடைத்தால் செல்வதன் காரணமாகவே திருப்தியாக உணவு கிடைக்கின்றது. இந்த அவலம் வேண்டாம் என நாடு திரும்ப பதிவு செய்துள்ளேன். ஆனால் கொரோனா தடையாகவுள்ளது என்றார். எம்முடன் உரையாடிய மூவரும் தமது பெயர் அடையாளம் வெளிவருவதனை விரும்பவில்லை. இந்திய முகாம் அதிகாரிகளின் பதில். ——+-++++—————– இதேநேரம் தமிழக முகாம்களில் இருப்போரை நாடு திரும்ப விரும்பினால் அனுப்ப தயாராகவே உள்ளோம். அதற்காக ஒபர் நிறுவனத்தின் ஊடாக யு.என்.எச்.சி ஆர் ஊடாக விமானத்தில் சகல செலவும் இலவசமாகவே அனுப்பி வைக்கப்படுகின்றனர். தற்போதைய கொரோனாவினால் மட்டுமே விமான சேவை இடம்பெறவில்லை. திருட்டுத் தனமாக கடல்வழியாக படகுகளில் செல்பவர்களில் அதிகமானோர் இந்தியாவில் இருந்து வெளிதாடுகளிற்கு தப்பிச் செல்ல முயன்றவர்கள், திருட்டுத் தனமாக இந்திய கடவுச் சீட்டு பெற முயன்றோர் அல்லது ஏதாவது குற்றம் புரிந்தவர்கள் எனில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்நும்போது வழக்குச் செலவு, சட்டத்தரணி செலவு , இதற்கான போக்கு வரத்து என்பன இலவசமாக வழங்கப்பட மாட்டாது. இதனால் இந்த வழக்குகளிற்கு அதிக செலவு ஏற்படும் நிலமையிலேயே படகுகள் மூலம் இலங்கைக்கு தப்பிச் செல்கின்றனர் என இந்திய முகாம் அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.     https://globaltamilnews.net/2021/160912/
  • நினைவு தூபியை உடைப்பதென்பது அநாகரிகத்தின் உச்சம் -எம்.ஏ. சுமந்திரன்    37 Views முள்ளிவாய்க்கால் நினைவு தூபி உடைக்கப்பட்டதை தமிழ் தேசிய கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், இச் செயலானது வெறுமனே கல்லிலான ஒரு தூபியை மட்டும் உடைக்கவில்லை, இலட்சக்கணக்கான தமிழ் மக்களின் இதயங்களையும் தகர்த்திருக்கிறது. மரணித்தவர்களின் நினைவு தூபியை உடைப்பதென்பது அநாகரிகத்தின் உச்ச கட்டம். இராணுவமும்  காவல்துறையினரும்  அந்த இடத்திற்கு  சென்று  பார்வையிட்ட பின்னர் தான் இது செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் போரில் இறந்தவர்களை நினைவு கூருவதற்கு எவரும் தடை விதிக்க முடியாது. அந்த நினைவுகளை எந்த உத்தரவும் மழுங்கடிக்கவும் முடியாது. நாம் முள்ளிவாய்கால் நினைவேந்தலை செய்வோம் – எவராலும் தடுக்க முடியாதபடி செய்வோம்” என்றார்.     https://www.ilakku.org/?p=49563
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.