Jump to content

உச்சத்தில் கொரோனா: இங்கிலாந்து பிரதமரின் இந்திய வருகை ரத்து!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உச்சத்தில் கொரோனா: இங்கிலாந்து பிரதமரின் இந்திய வருகை ரத்து!

spacer.png

இந்தியாவில் கொரோனா தாக்குதல் தீவிரம் அடைந்திருக்கும் நிலையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது இந்திய பயணத்தை ரத்து செய்துள்ளார்.

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை இந்தியாவில் உச்சகட்டத்தை அடைந்திருக்கிறது. ஒரே நாளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று ஏற்பட்டு வருகிறது.

 

இந்த நிலையில் இங்கிலாந்து நாட்டின் வெளியுறவுத் துறை அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாகி இன்று (ஏப்ரல் 18) வெளியிட்டிருக்கும் அறிவிப்பில்,

“ ஏப்ரல் 25-26 தேதிகளில் ஜான்சன் இந்தியா வர திட்டமிடப்பட்டிருந்தது. இதை அறிவித்த , ’தற்போதுள்ள கொரோனா நிலைமையைக் கருத்தில் கொண்டு, இங்கிலாந்து பிரதமர் அடுத்த வாரம் இந்தியாவுக்கு வரமாட்டார் என்று பரஸ்பர ஒப்பந்தத்தின் மூலம் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியா-இங்கிலாந்து நாடுகளுக்கு இடையிலான உறவுவுகளை வலுப்படுத்தும் கூட்டங்களையும், சந்திப்புகளையும் இரு தரப்பினரும் எதிர்வரும் நாட்களில் மெய்நிகர் முறையில் நடத்தவுள்ளனர்.

இரு தலைவர்களும் இந்தியா-இங்கிலாந்து கூட்டணியை அதன் முழு திறனுக்கும் எடுத்துச் செல்வதில் மிகுந்த முக்கியத்துவ கவனத்தைக் கொண்டுள்ளனர், மேலும் இது தொடர்பாக நெருங்கிய தொடர்பில் இருக்கவும், இந்த ஆண்டின் பிற்பகுதியில் நேருக்கு நேர் சந்திப்பை வைத்துக் கொள்ளவும் திட்டமிட்டுள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம், பிரிட்டிஷ் பிரதமரின் அலுவலகம் ஏப்ரல் மாத இறுதியில் ஜான்சன் இந்தியாவுக்குப் பயணம் செய்வதாக அறிவித்திருந்தது. பிரெக்சிட்டைத் தொடர்ந்து அவரது முதல் முக்கிய பயணமாக இந்தியப் பயணம் திட்டமிட்டப்பட்டிருந்தது.

https://minnambalam.com/politics/2021/04/19/53/covid-second-wave-England-prime-minister-india-visit-cancelled

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

இந்தியாவில் கொரோனா தாக்குதல் தீவிரம் அடைந்திருக்கும் நிலையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது இந்திய பயணத்தை ரத்து செய்துள்ளார்.

கிந்தியாவிலை கொரோனா கொஞ்சநஞ்ச உச்சமில்லை. வானுயர்ந்த உச்சம்.இன்று ஜெர்மன் தொலைகாட்சிகளில் காட்டினார்கள். பயம்.....  பயம் என்னவென்று தெரியாதவர்கள் கொரோனா இந்தியா என தேடுதளங்களில் தேடிப்பாருங்கள். மரண பயம் தொற்றிக்கொள்ளும்.

நான் பல ஒளிப்பதிவுகளையும் படங்களையும் பார்த்து நடுங்கி போய் விட்டேன். சொல்லணா கொடூரங்கள்.

நாளை இந்த நிலை எமக்கும் வரலாம். ஏனெனில் இந்திய கொரோனா வைரஸ் என இப்போதே இங்கு கதைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

Bild

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் இருந்து வர, போக தடை அறிவிப்பு வருகிறது.

மேலும் டெல்லி அரசு, இன்றிரவு 10 மணிமுதல் அடுத்த திங்கள் வரை லோக்கடவுன் மற்றும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பிய நாடுகளின் முன்னுதாரணங்களை செவிமடுக்க தவறி தேர்தல் சினிமா கொண்டாட்டங்கள் என திறந்து விட்டதன் பயனை இனி வரும் காலங்களில் அனுபவிக்க போகின்றார்கள்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Nathamuni said:

இந்தியாவில் இருந்து வர, போக தடை அறிவிப்பு வருகிறது.

மேலும் டெல்லி அரசு, இன்றிரவு 10 மணிமுதல் அடுத்த திங்கள் வரை லோக்கடவுன் மற்றும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரசியலிலும் அரசிலும் கட்டுப்பாடு ஒழுக்கம் இல்லாவிட்டால் வரும் நிகழ்வுகள்.

May be an image of 10 people, beard and people standing

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுடனான விமான சேவைகளை இரத்து செய்தது ஹொங்கொங்!

இந்தியாவுடனான விமான சேவைகளை இரத்து செய்தது ஹொங்கொங்!

இந்தியாவில் கொரோனா பரவல் தீவரமடைந்துள்ள நிலையில், நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் மே மாதம் 3 ஆம் திகதிவரை இந்தியாவுடனான அனைத்து விமான சேவைகைளையும் இரத்து செய்ய ஹொங்கொங் தீர்மானித்துள்ளது.

இது குறித்து ஹொங்கொங் விமான போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா பரவல் அதிகரித்து வருகின்ற நிலையில், இந்தியாவில் இருந்து ஹொங்கொங் செல்லும் அனைத்து விமானங்களுமே மே மாதம் 3 ஆம் திகதிவரை இரத்து செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுடனான விமானச் சேவையும் இரத்து செய்யப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மாதத்தில் மாத்திரம், விஸ்தரா விமானத்தில் ஹொங்கொங் வந்த சுமார் 50 பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2021/1210720

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.