Jump to content

குட்டையைக் குழப்பும் விக்கி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

குட்டையைக் குழப்பும் விக்கி

-புருஜோத்தமன் தங்கமயில்  

முதலமைச்சர் பதவிக்கு தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தகுதியற்றவர் என்று, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் வெளியிட்ட கருத்து, அரசியல் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.  

சித்திரை வருடப் பிறப்புக்கு முதல் நாள், சமூக காணொளி ஊடகமொன்றுக்கு விக்னேஸ்வரன் பேட்டியளித்தார். வழக்கம் போலவே, அந்தப் பேட்டியும் முன்னதாகவே கேள்வி- பதில்கள் தயார்படுத்தப்பட்டு, அதன் பிரதிகளை வைத்துக் கொண்டு ஒளிப்பதிவு செய்யப்பட்டிருந்தது. அதாவது, ஏற்கெனவே தயார்படுத்தப்பட்ட கேள்விகளை நெறியாளர் கேட்டதும், அதற்குப் பதில்களை பிரதித் தாள்களைப் பார்த்து, விக்னேஸ்வரன் வாசிப்பார். அப்படித்தான் அந்தப் பேட்டியும் போய்க் கொண்டிருந்தது. 

ஆனால், வடக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பிலான கேள்விக்கு, விக்னேஸ்வரன் ஏற்கெனவே தயார் செய்யப்பட்ட பதில்களுக்குப் பதிலாக, அந்தத் தருணத்தில் தோன்றிய பதிலை வழங்கியது போன்ற தோற்றம் காணப்பட்டது.  

அந்தப் பதில், “....முதலமைச்சர் பதவிக்கு மாவை சேனாதிராஜா தகுதியற்றவர். அதனால்தான், 2013இல் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் என்னை முன்னிறுத்தினார். வடக்கு மாகாணத்தின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக வேலன் சுவாமியை முன்னிறுத்தலாம். அனைத்துக் கட்சிகளும் இணைந்து கோரிக்கை விடுத்தால், மீண்டும் நான் முதலமைச்சர் வேட்பாளராகுவது குறித்துச் சிந்திப்பேன்...” என்றவாறாக இருந்தது.  

அடிப்படை அரசியல் நாகரிகம், அரசியல் அறம் பற்றிய எந்தவித எண்ணமும் இல்லாத ஒருவராக விக்னேஸ்வரன், தேர்தல் அரசியலுக்கு வந்த காலம் முதல் காண்பித்து வந்திருக்கிறார். 

அத்தோடு, அவர் நேரடி அரசியலுக்கு வந்து சுமார் எட்டு ஆண்டுகள் கடந்து விட்ட போதிலும், அரசியலில் இன்னமும் முன்பள்ளிக் காலத்து பிள்ளைகளின் நடவடிக்கைகளுக்கு ஒப்பான ஓர் அரசியல்வாதியாகவே இருக்கிறார்.   

அரசியல் உரையாடல்களில், ஏற்கெனவே தயார்படுத்தப்பட்ட உரைகள், கேள்வி- பதில்கள் இல்லாத பல சந்தர்ப்பங்களில், தன்னுடைய உண்மையான அரசியல் அறிவின் அளவு எப்படி என்று நிரூபித்து இருக்கின்றார். மாவை குறித்த ‘முதலமைச்சர் பதவிக்கு தகுதியற்றவர்’ என்கிற கூற்றும், அப்படிப்பட்ட ஒன்றுதான்.  

அரசியல்வாதிகளோ, பேச்சாளர்களோ யாராக இருந்தாலும், ஏற்கெனவே தயார்படுத்தப்பட்ட உரைகளை ஆற்றுவது குறித்து, எவ்வித பிரச்சினைகளும் இல்லை. அப்படியான உரைகள், பல நேரங்களில் நேர்த்தியாக அமையும் என்பது திண்ணம். 

ஆனால், ஓர் அரசியல்வாதி அல்லது சமூகத்தின் தலைவனாகத் தன்னை முன்னிறுத்தும் ஒருவர், கேள்விகளுக்கான பதில்களை உடனடியாக வழங்கும் வன்மையோடும் இருக்க வேண்டும். அது, மக்களின் மனங்களைப் பிரதிபலிப்பதனூடும், அரசியல் மாற்றங்களை உள்வாங்கி, சமயோசிதமாகச் சிந்திப்பதனூடும் வருவது. அது, சிலருக்கு இயல்பாக வாய்க்கும். இன்னும் சிலரோ, படிப்பினைகள் மூலம் அதை வளர்த்துக் கொள்வார்கள். 

ஆனால், விக்னேஸ்வரன், தனக்கு இல்லாத ஒன்றை, வளர்த்துக் கொள்ள விரும்பவில்லை. அதுதான், அவரின் முன்பள்ளிக்காலத்து அரசியல் நடவடிக்கைகளுக்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது.   

வடக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக, எண்பது வயதை அண்மிக்கும் மாவை சேனாதிராஜா முன்னிறுத்தப்பட்டால், அது கடுமையான விமர்சனத்துக்குரியது.  ஏற்கெனவே ஒரு தடவை, வடக்கு மாகாண சபையின் ஆட்சியைக் கைப்பற்றி, ஏதும் செய்யாது கோட்டைவிட்ட பெருமை கூட்டமைப்புக்கு இருக்கிறது. 

அப்படியான நிலையில், அரசியல் தூரநோக்கும், நிர்வாக அனுபவமும் உள்ள ஒருவர், குறிப்பாக, வயது மூப்பால் அல்லாடாத ஒருவர், கூட்டமைப்பால் முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட வேண்டும்; அதன்மூலம், செயற்பாட்டுத் திறனுள்ள மாகாண சபையைக் கட்டமைக்க வேண்டும். மாறாக, பதவிகளுக்காக அங்கலாய்க்கும் தரப்புகளால் ஆக்கிரமிக்கப்படும் மாகாண சபையொன்று, இனியும் உருவாகக் கூடாது.  

கடந்த பொதுத் தேர்தலில் மாவை சேனாதிராஜா தோற்றதும், அவரை முதலமைச்சர் கனவுக்குள் பல தரப்புகளும் சேர்ந்து தள்ளின. குறிப்பாக, அவரோடு சேர்ந்து கடந்த தேர்தலில் தோற்றுப்போனவர்களும் அவரை முதலமைச்சர் கதிரையில் ஒப்புக்கு இருந்திவிட்டு, மாகாண சபையைத் தாங்கள் ஆக்கிரமிக்கலாம் என்று காத்திருக்கும் சில குள்ள நரிகளுமே, இத்தகைய உசுப்பேத்தல்களின் பின்னணியில் இருக்கிறார்கள்.  

2013ஆம் ஆண்டு காலத்தில் முதலமைச்சர் வேட்பாளராக, மாவை முன்மொழியப்பட்டிருந்தால் அது வரவேற்கப்பட்டிருக்கும். அதன் மீதான விமர்சனங்கள் பெரியளவில் எழுந்திருக்கவும் வாய்ப்பில்லை. 

ஆனால், தற்போதுள்ள நிலையில், உடல்நிலை, வயது மூப்பு அத்தோடு குடும்ப அரசியல் ஒன்றுக்கான ஆர்வம் உள்ளிட்ட பாதகமான விடயங்கள், அவரை முதலமைச்சர் பதவிக்கு முன்னிறுத்துவதில் முட்டுக்கட்டைகளாக இருக்கின்றன. 

அத்தோடு, கடந்த சில ஆண்டுகளாக அவர், தமிழரசுக் கட்சியின் தலைவராக இருந்த போதிலும், கட்சியைக் கட்டுக்கோப்பாகப் பேணாத நிலையில், அவர் தலைமையில் அமையும் மாகாண சபைக்குள், அதன் அமைச்சர்களும் உறுப்பினர்களும் எப்படி கட்டுப்படுவார்கள் என்ற கேள்வி முக்கியமானது?  

தமிழ்த் தேசிய அரசியலில் இருந்து, வயது மூப்பு குறிப்பாக, நாளாந்த அரசியல் நடவடிக்கைகளை மற்றவர்களின் உதவியின்றிச் செய்ய முடியாத நிலையில் இருக்கின்ற அனைத்து அரசியல்வாதிகளும், தேர்தல் மைய அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொண்டு கட்சிகளின், அமைப்புகளின் போசகர்கள் நிலையை எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு இரா.சம்பந்தன், சி.வி.விக்னேஸ்வரன், மாவை சேனாதிராஜா உள்ளிட்ட யாரும் விதிவிலக்கல்ல. 

மக்கள் நலன் சார் அரசியலில், அடுத்த தலைமுறைத் தலைவர்களை அடையாளம் கண்டு, அவர்களிடம் பொறுப்புகளை ஒப்படைத்தல் என்பது தார்மீகமாகும். ஆனால், அந்தத் தார்மீகத்தை, தந்தை செல்வாவுக்குப் பிறகு எந்த தமிழ்க் கட்சியின் தலைவரும் செய்யவில்லை என்பது வெட்கக் கேடானது. 

இதில், பல தலைவர்களும் அடுத்த கட்டத் தலைவர்கள் உருவாகுவதைத் தடுத்துக் கொண்டிருப்பவர்கள். அதில் சம்பந்தன் ஓரளவுக்குப் பொறுப்புடன் இருந்திருக்கின்றார். அடுத்த தலைமுறைத் தலைவர்களாக ஒரு சிலரை, அவர் அடையாளப்படுத்தி இருக்கிறார்.  

ஆனால், விக்னேஸ்வரனைப் பொறுத்தளவில், தன்னுடைய எழுபது வயதின் பின்னர், அரசியல் கட்சியை ஆரம்பித்த அவர், தனது கட்சிக்குள் இரண்டாம் நிலைத் தலைவர் என்ற ஒருவரை, இதுவரை அடையாளப்படுத்தவே இல்லை. மாறாக, தானே ஏகமும் என்கிற நிலைப்பாட்டில் இருந்து கொண்டிருக்கிறார். 

அப்படியான நிலையில் இருந்து கொண்டு, மற்றவர்களின் தகுதி குறித்துக் கருத்துக்கூற முனைவது, அரசியல் அறமன்று.  

கடந்த பொதுத் தேர்தலில், விக்னேஸ்வரன் வெற்றி பெற்றிருக்கிறார். அவருக்கு ஒரு தொகுதி மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள். அதனை மதிக்க வேண்டியது அனைவரதும் பொறுப்பாகும். 

ஆனால், அந்த மக்களின் எதிர்பார்ப்புகளைப் புரிந்து கொள்ளாமல், தனியாவர்த்தனம் செய்து, குட்டையைக் குழப்பும் வேலையை, விக்னேஸ்வரன் செய்து கொண்டிருக்கும் போது, அவரின் அரசியலுக்கான தகுதி குறித்து, மற்றவர்களும் கருத்துக்கூறவும் விமர்சிக்கவும் விளைவார்கள்.  

தமிழ்த் தேசிய அரசியலைப் பொறுத்தளவில், சிறிய இடைவெளியொன்றை நிரப்பிக் கொண்டிருக்கும் ஒருவர் என்கிற அளவைத் தாண்டி, விக்னேஸ்வரனது அரசியல் ஆளுமை தொடர்பில் பட்டியல் இடுவதற்கு ஏதுமில்லை. 

கடந்த காலத்தில், விக்னேஸ்வரனைச் சுற்றி ஒளிவட்டங்களை வரைந்தவர்களும் ஜனவசியக் கட்டுரைகளை எழுதியவர்களும் கூட, இன்றைக்கு அவரை விமர்சனத்துக்குரிய  அரசியல்வாதியாகவே நோக்குகிறார்கள்.  

தன்னுடைய நீதியரசர் ஓய்வு காலத்தை, கம்பன் கழக மேடைகளில் கௌரவமாகக் கழித்துக் கொண்டிருந்த விக்னேஸ்வனை, வடக்கு அரசியலுக்கு, சம்பந்தனும் சுமந்திரனுமே அழைத்து வந்திருந்தார்கள். 

அரசியலில் அவரது பாதை சீர்செய்யப்படும் வாய்ப்புகள் அமைந்த போது, யாழ். மையவாதக் குழுவொன்று தமிழ் மக்கள் பேரவையை அமைத்து, விக்னேஸ்வரனுக்கு வாழ்வளித்தது. அது அவரை பாராளுமன்ற உறுப்பினராக்கியது. 

ஒவ்வொரு கட்டத்திலும் விக்னேஸ்வரனைத் தாங்கி நின்றவர்கள், அவரைக் காப்பற்றினார்கள்; ஆனால், அவர் யாரையும் காப்பாற்றவில்லை. அதன் வெளிப்பாடே ‘மாவைக்கு தகுதியில்லை’ என்கிற அவரது எண்ணக் கருத்தாகும். 

2013இல் மாவை சேனாதிராஜா, விக்னேஸ்வரனுக்கு வழிவிட்டிருக்காது விட்டால், விக்னேஸ்வரன் இன்னமும் கொழும்பில், ஏதாவது மேடையில் ஒரு பிரசங்கியாக இருந்திருப்பார். சிலவேளை, அவர் அதில் நன்றாகச் செயற்பட்டிருக்கக் கூடும்.  

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/குட்டையைக்-குழப்பும்-விக்கி/91-270169

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மஜில்ஸ் இற்கு விக்கி மாவை மேல் கைவைத்ததும் கடுப்பாகிட்டு போல

1 hour ago, கிருபன் said:

2013இல் மாவை சேனாதிராஜா, விக்னேஸ்வரனுக்கு வழிவிட்டிருக்காது விட்டால், விக்னேஸ்வரன் இன்னமும் கொழும்பில், ஏதாவது மேடையில் ஒரு பிரசங்கியாக இருந்திருப்பார். சிலவேளை, அவர் அதில் நன்றாகச் செயற்பட்டிருக்கக் கூடும்.  

அப்பதானே நீங்க இரத்தத்திலகம், போராட்டம் வெடிக்கும் என்று வாயால வடைசுட்டு சுட்டு தமிழ் மக்களின் தலையின் மேல் மிளகாய் அரைத்துக்கொண்டிருந்திருந்து கோடி கோடியாக அமுக்கியிருக்கலாம் 

Link to comment
Share on other sites

மாவை அவர்கள் தலைமைத்துவத்துக்கு தகுதி அற்றவர் என்பது யாவரும் அறிந்ததே, அதை சொல்லுவதற்கு விக்கினேஸ்வரனுக்கு எவ்வித தகுதியும் இல்லை. தனக்கு கிடைத்த அரிய வாய்ப்புகளை எல்லாம் தவற விட்டு, எவ்வித வினைத்திறனும் இன்றி  இருந்து விட்டு, தற்போது மற்றவர்களை குறைகாணுகின்றார். அவர் இப்போது செய்வதெல்லாம் இந்தியன் நடுவன் அரசாங்கத்தின் கைப்பொம்மையாய் இருந்து, மீண்டும் ஒருமுறை தமிழரை இந்தியன் நலங்களுக்கு பகடை பாவிப்பதுக்கு உதவி செய்கின்றார்.
ஒரு வேளை, மாகாண சபை தேர்தல் நடைபெற்றால் வடக்கின் முதலமைச்சராய் மாவையும், கிழக்கின் முதலமைச்சராய் சாணக்கியன் அவர்களும் வருவார்கள் என்பதே எனது கணிப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, அக்னியஷ்த்ரா said:

மஜில்ஸ் இற்கு விக்கி மாவை மேல் கைவைத்ததும் கடுப்பாகிட்டு போல

அப்பதானே நீங்க இரத்தத்திலகம், போராட்டம் வெடிக்கும் என்று வாயால வடைசுட்டு சுட்டு தமிழ் மக்களின் தலையின் மேல் மிளகாய் அரைத்துக்கொண்டிருந்திருந்து கோடி கோடியாக அமுக்கியிருக்கலாம் 

இப்ப வாயால வடை சுட முகப்புத்தகத்திலும் யூடியுப்பிலும்தான் முடியும். ஆனால் யார் பலத்துக் கூவுகின்றார்களோ, அவர்களுக்கு நிதி உதவி செய்ய ஒரு பகுதி புலம்பெயர் கூட்டம் இருக்கு. 

அதை விட பெரிய பகிடி புலம்பெயர் இரண்டாம் தலைமுறை தாயக அரசியலுக்கு தலைமை வழங்கவேண்டும் என்று ஒரு சிலர் யாழில் எழுதிக்கொண்டு இருப்பதுதான்!😂

இதையும் தாண்டித்தான் தமிழர்கள் போகவேண்டும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரசியலில இது சாதாரணமப்பா.

என்றாவது, பாராளுமன்றில், மாவை முழங்கினார் எண்டு கேட்டிருக்கிறீர்களா?

சும்மா நானும் ரவுடி தான் என்று, எம்பியாக இருந்தவர் மாவை.

அவர், முதல் அமைச்சர் ஆக இல்லை, விதானையாராக இருக்க கூடிய தகுதியே இல்லை என்கிறார் ஒரு யாழ்ப்பாணத்தவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

என்றாவது, பாராளுமன்றில், மாவை முழங்கினார் எண்டு கேட்டிருக்கிறீர்களா?

அவர் பாராளுமன்றத்தில்.... கன்னிப் பேச்சு கூட நிகழ்த்தவில்லையாம் என்று பட்சி சொல்லுது. 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

இப்ப வாயால வடை சுட முகப்புத்தகத்திலும் யூடியுப்பிலும்தான் முடியும். ஆனால் யார் பலத்துக் கூவுகின்றார்களோ, அவர்களுக்கு நிதி உதவி செய்ய ஒரு பகுதி புலம்பெயர் கூட்டம் இருக்கு. 

அதை விட பெரிய பகிடி புலம்பெயர் இரண்டாம் தலைமுறை தாயக அரசியலுக்கு தலைமை வழங்கவேண்டும் என்று ஒரு சிலர் யாழில் எழுதிக்கொண்டு இருப்பதுதான்!😂

இதையும் தாண்டித்தான் தமிழர்கள் போகவேண்டும்!

தாயக அரசியலுக்கு தலைமைதாங்குவதற்கு உங்களுக்கு தகுதி இல்லை என்பது எல்லோருக்குமே தெரியும்.

ஆனால் இலங்கைப் பிரசை ஒருவர் இலங்கை அரசியலில் ஈடுபடமுடியும் என்பது புத்தகப் பூச்சிகளுக்கு  தெரியாததுதான் விந்தை. 

அமெரிக்க குடியுரிமை/நிரந்தர வதிவிட உரிமை இருக்கின்ற/இருக்கப்பெற்ற கொட்டாபய இராசபக்ச இலங்கை சனாதிபதியாகலாம் ஆனால் இன்னொரு இலங்கையைப் பூர்விகத் தமிழன் இலங்கை அரசியலில் ஈடுபடக் கூடாது எனும் முட்டாள்தனமான கருத்தைப் பார்த்து சிரிக்கத்தான் முடியும்.

கிருபன்,

அதீத வாசிப்புப் பழக்கம் இருப்பது உண்மையில் போற்றுதற்குRயதுதான். ஆனால் வாசிக்கும்போது அதிலுள்ள நன்மையானவற்றைக் கிரகிக்கவும் வேண்டுமல்லவா...😀

அதற்கு முயற்சி செய்யுங்கள்..

👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

அதீத வாசிப்புப் பழக்கம் இருப்பது உண்மையில் போற்றுதற்குRயதுதான். ஆனால் வாசிக்கும்போது அதிலுள்ள நன்மையானவற்றைக் கிரகிக்கவும் வேண்டுமல்லவா..

அந்த கிரகிப்பு இருப்பதனால்தான் மொக்கையான “கருத்துக்களை” எளிதாக கண்டுபிடிக்கமுடிகின்றது.

கோட்டபாய அமெரிக்காவின் வதிவிட உரிமையைப் பெற்றவர்தான். ஆனால் அவர் புலம்பெயர் இரண்டாம் தலைமுறை இல்லையே!!  புலம்பெயர் இரண்டாம் தலைமுறை போய் கனடியன், அமெரிக்கன், பிரிட்டிஷ், அவுஸ்திரேலிய ஆங்கிலத்தில் அல்லது பிரெஞ்ச், ஜேர்மனில் வெளுத்துவாங்கினால் தமிழ் மக்கள் தலையில் தூக்கிக் கொண்டாடுவார்கள் என்ற நினைப்பு சரிவராது!!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, கிருபன் said:

அந்த கிரகிப்பு இருப்பதனால்தான் மொக்கையான “கருத்துக்களை” எளிதாக கண்டுபிடிக்கமுடிகின்றது.

கோட்டபாய அமெரிக்காவின் வதிவிட உரிமையைப் பெற்றவர்தான். ஆனால் அவர் புலம்பெயர் இரண்டாம் தலைமுறை இல்லையே!!  புலம்பெயர் இரண்டாம் தலைமுறை போய் கனடியன், அமெரிக்கன், பிரிட்டிஷ், அவுஸ்திரேலிய ஆங்கிலத்தில் அல்லது பிரெஞ்ச், ஜேர்மனில் வெளுத்துவாங்கினால் தமிழ் மக்கள் தலையில் தூக்கிக் கொண்டாடுவார்கள் என்ற நினைப்பு சரிவராது!!

 

அட நீங்கள் கருத்தில் அல்ல  ஒரு எழுத்தில் தொங்க்கிகொண்டு நிற்பவரென்று இப்போதுதான் எனக்குப் புரிகிறது. 

(அமெரிக்கன், பிரிட்டிஷ், அவுஸ்திரேலிய ஆங்கிலத்தில் அல்லது பிரெஞ்ச், ஜேர்மனில் வெளுத்துவாங்கினால்தான் தமிழ் மக்கள் தலையில் தூக்கிக் கொண்டாடுவார்கள் என்ற உண்மை கிருபனுக்குத் தெரியாவிட்டால் அதற்கு நானென்ன செய்ய முடியும். இந்த மாயை தென் இந்தியக் கண்டத்திற்குரிய அடிமை குணாம்சம் என்று எப்போது உணர்ந்துகொள்வீர்கள்  கிருபன். 

Theory,practice இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் இதுதான்.

☹️

நானென்ன உங்களைப்போல வாசிப்புப் பழக்கதோசம் உள்ளவரா இல்லையே. 

அப்படி உங்களைப்போல  வாசிக்கும் பழக்கதோசம் இருந்திருந்தால் போராளி கருணாவுக்கும் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்த முரளீதரனுக்கும் இடையில் உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்ளாது நடுவில் நின்று ததிங்கிணத்தோம் பாடிக்கொண்டிருந்திருப்பேன். 

நல்லகாலம் தப்பித்தேன். 

(பதினைந்து வருடங்களுக்கு முன்னர் ஒரு plumbing  emergency  call ஒன்றுக்காக ஒரு appartment  unit ஒன்றுக்கு போகவேண்டி ஏற்பட்டது. 

Unit ன் உள்ளே காலடி எடுத்து வத்தால் வீடு முழுவதும் புத்தகங்கள் மலை போல அடுக்கிவைக்கப்பட்டிருந்தன.

குடியிருப்பவரோ நடுத்தர வயதினன், வெள்ளை இனத்தினன். மாதக் கணக்கில் சவரம் செய்யப்படாத முகம். மிக மிக எளிய வாழ்க்கை. குளித்து பல நாட்கள் என யூகித்தேன்

ஆனால் அவரின்  முகத்தில் ஒரு நிறைவு தெரிந்தது. தோற்றத்தில் ஒழுங்கின்மை தெரிந்தது.

ஆள் அரவமற்ற Library போல தூசின் மணம் unit எங்குமே நிரம்பி நாசியை துழைத்தது. 

ஓரிரு வார்த்தைகள்மட்டும் பேசினார்.

போகும்போதும் வெளியேறும்போதும் அவர் புத்தம் ஒன்றை வாசித்தபடியிருந்தார். சுவர் எங்குமே விஞ்ஞானம் கணிதத்துடன் தொடர்புடைய posters  இடைவெளி இல்லாமல் ஒட்டப்பட்டிருந்தன. 

கால் வைத்து நடக்க முடியாதபடி எங்குமே புத்தகங்கள். சமயலறையிலும் புத்தகம், கழிவறையிலும் புத்தகம். கட்டிலிலும் புத்தகம். மொட்டை மாடியிலும் புத்தகம். யன்னல் ஓரங்களிலும் புத்தகம். மேசை கதிரை எங்கும் புத்தகம் புத்தகம் புத்தகம். 

அதே போன்று புத்தகங்கள் மீது தூசு நிரம்பவே படிந்திருந்தது.

மழைக்காலக் காட்டில், ஒத்தையடிப் பாதை எங்கும் விரிந்து கிடக்கும் மரங்களின் இடையே நடப்பது போல  ஒவ்வொரு அடியாக, மிகக் கவனமாக தூக்கித் தூக்கி வைத்து உள்ளே செல்ல வேண்டி இருந்தது.

சிறிது தட்டுப்பட்டாலும் புத்தகமலை சரிந்து விழுந்துவிடும் அபாயம். தட்டுப்பட்டால் நிச்சயமாக என்னால் அடுக்கி வைக்க முடியாது. அதற்குப் பல நாட்கள் ஆகலாம். புத்தகங்கள் அடுக்கி வைக்கப்ப்ட்டுள்ள ஒழுங்கும் எனக்குத் தெரியாது.

மிக மிகச் சிரமப்பட்டு வேலையை முடித்தாயிற்று. வரும்போது நன்றி கூறினார் ஆனால் சிரிக்கவில்லை. 

என்னுடைய வேலையை நிறைவாகச் செய்திருந்தாலும் வழமையாக ஏற்படும் திருப்தி அன்று முழுவதும் எனக்கு ஏற்படவில்லை

ஏன் திருப்தியில்லாமலிருக்கிறது என்று அன்று முழுவதும் யோசித்தேன். படுக்கைக்கு செல்லும் போதும் குழப்பமாக இருந்தது.

மெலிதாகக் கண்ணயர்ந்தபோது திடீரென ஒரு கனவு போல appartment unit ல் குடியிருந்தவரின் முகம் வந்து போனது.  

திடுக்கிட்டு எழும்பினேன். படுக்கைக்குச் செல்லும்போது இருந்த குழப்பம் ஏதும் இல்லாமல் மனம் தெளிவாக இருந்தது. )

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Kapithan said:

நல்லகாலம் தப்பித்தேன். 

நீங்கள் தப்பீட்டிங்க! ஆனால் நாங்கள் இன்னமும் இல்லை.😬

அந்த பிளம்பிங் தெரியாத வெள்ளை ஒரு “போக்கான” பேக்கு என்ற “அறிதல்” வந்ததும் தெளிஞ்சிட்டீங்கள்!😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, கிருபன் said:

நீங்கள் தப்பீட்டிங்க! ஆனால் நாங்கள் இன்னமும் இல்லை.😬

அந்த பிளம்பிங் தெரியாத வெள்ளை ஒரு “போக்கான” பேக்கு என்ற “அறிதல்” வந்ததும் தெளிஞ்சிட்டீங்கள்!😜

அந்த வெள்ளையனில உஙளுக்கேன் இத்தனை வெறுப்பு.. 🤥

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

அந்த வெள்ளையனில உஙளுக்கேன் இத்தனை வெறுப்பு.. 🤥

வாசிக்கிற ஆட்கள் என்றால் அவர்களைப் பார்த்து தாழ்வு மனப்பான்மை கொண்டு வெறுப்பும் எரிச்சலும் வருவதுதானே தமிழாக்களுக்கு நோமல்! 😜

நானும் தமிழ்தானே! அதிலும் யாழ்ப்பாணத்தான்!😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கிருபன் said:

வாசிக்கிற ஆட்கள் என்றால் அவர்களைப் பார்த்து தாழ்வு மனப்பான்மை கொண்டு வெறுப்பும் எரிச்சலும் வருவதுதானே தமிழாக்களுக்கு நோமல்! 😜

நானும் தமிழ்தானே! அதிலும் யாழ்ப்பாணத்தான்!😃

ஏண்ணா,

என்னத்தைத்தான் வாசித்தாலும் அதன் பலனை வாழ்க்கையில் காட்டோணுமோ இலியோ..? 

வாசிக்கிறதக் காட்டோணுமோ வாசித்ததை வாழ்ந்து காட்டோணுமோ..

எதுங்கொண்ணா சரிரிரிரி....ரி

😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

அதை விட பெரிய பகிடி புலம்பெயர் இரண்டாம் தலைமுறை தாயக அரசியலுக்கு தலைமை வழங்கவேண்டும் என்று ஒரு சிலர் யாழில் எழுதிக்கொண்டு இருப்பதுதான்!😂

 

ஆசை தான் 😂    ஆனால் நியாயம் அற்ற  தவறான ஆசை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, விளங்க நினைப்பவன் said:

ஆசை தான் 😂    ஆனால் நியாயம் அற்ற  தவறான ஆசை.

விளங்க நினைச்சால் மட்டும் காணாது. விளங்கவும் வேணும் கண்டியளோ. இல்லையென்றால் காலம் முழுவதும் அணில் ஏறவிட்ட நாய் மாதிரி ஆவென்று பார்த்துக்கொண்டிருக்க வேண்டியதுதான்.. 

சரியே.. 🤥

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, கிருபன் said:

குட்டையைக் குழப்பும் விக்கி

உது உவருக்குப் புதுசே!

அதவிட வேலன் சுவாமியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தலாம் என்கிறாரே அதுதான்  lime-light.

மாவை ஒரு சோளக்கட்டு பொம்மையென்பது சரிதான். 

அது சரி வேலன் சாமிக்கு முதல்வராக என்ன தகுதியிருக்காம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, வாலி said:

அது சரி வேலன் சாமிக்கு முதல்வராக என்ன தகுதியிருக்காம்!

இந்தியா சொல்லியிருக்குமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

20 minutes ago, ஈழப்பிரியன் said:

இந்தியா சொல்லியிருக்குமோ?

இந்தியாவுக்கு  மாவை என்ன குறை வைச்சவர்?

spacer.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு. விக்கியை அரசியலுக்குகொண்டுவந்தது( விக்கியின் சொந்த விருப்பமில்லை ) கட்சியை வளர்த்து  எம்பிமார் எண்ணிக்கையைக்கூட்டாலாமென நினைதது.ஆனால் வெளிப்படையாகச்சொல்லவில்லை. விக்கியாரும் அதுவரை நினைத்திருந்தது இந்தக் கூட்டமைப்பு தமிழரின் உருமைக்காகவும். பொருளாதார வளர்ச்சிக்காகவும் உழைக்கிறார்கள்/போராடுகிறார்கள்..என்று. உள்ளே வந்து பார்த்தபிற்பாடு தான் இவர்களின் வெளிவேசமும். மாக நடிப்பும் மிகத்தெளிவாகத் தெரிந்தது. சட்டம் படித்த இந்த கூட்டமைப்பு அந்தச்சட்டறிவை தீர்வைப்பெற்றுக்கொள்ள பயன்படுத்தவில்லை மாறாக தங்களுக்கு ஓட்டு போட்டமக்களை எமாற்றப் பயன்படுத்தினார்கள்.விக்கி சில யோசணைகளை முன் வைத்தார்...(1)=இளைஞர்களை அரசியல்தலைவர்களாக பயிற்றுவித்தால்..மாவை  உடனும் இதை நிரகாரித்து விட்டார்..(2)=கிராமியமட்டத்துக்கு அரசியல் அறிவை வளர்த்து எடுத்தால். (3)=முதலமைச்சர் நிதியம்..இதற்க்கும் கூட்டமைப்பு இணககவில்லை.. மேலும் மாறி..மாறி. வரும். சிங்கள அரசாங்களிடம்..(1)=வேலை வாய்ப்புக்கள தங்களுக்கு ஊடாக வளங்கும்படி வாதடிப்பொற்றுக்கொண்டார்கள்...(ஏன் மக்கள் சுயாதீனமாக. விண்ணப்பித்து திறமை அடிப்படையில் பெற்றுக்கொள்ளக்கூடாது)?(2)=அபிவிருத்திக்கான நிதியையும் காணாது..காணாது..என தங்களுக்கூடாகப்பெறறுககொணடார்கள்..இதனை மாகணசபையுடாக ஏன் செயல்படுத்தக்கூடாது?(3)=முதலமைச்சர் நிதியம் தொடங்க எந்தவித கோரிக்கையும் வைக்கவில்லை/வாதடவில்லை இவர்களின் இந்தச்செயல்பாட்டினால் மாகணசபை வலுவிழந்தது விக்கி எந்த ஒரு விடயத்தினையும் இரகசியமாக பேணியதில்லை அனைத்தையும் மக்களுக்கு பகிங்கரப்படுத்தியுள்ளார்..விக்கியின்  கோபம் சரியானாது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • அமெரிக்க‌னுக்கு இஸ்ரேலுக்கு 3.3 மில்லிய‌ன் அமெரிக்க‌ன் டொல‌ர் அவ‌ங்க‌ட‌  கால் தூசுக்கு ச‌ம‌ம்.................... உக்கிரேனுக்கே உத்த‌ன‌ பில்லிய‌ன் டொல‌ர‌ அமெரிக்க‌ன் அள்ளி அள்ளி கொடுத்த‌து அமெரிக்காவோடு ஒப்பிடும் போது  ஈரான் பணரீதியா கொஞ்சம் கச்டப்பட்ட நாடு.....................................
    • சுவீட்னர் நியாபகத்தை பாதிக்குமாம் - நான் ஏற்கனவே கண்ணாடியை கட்டிலுக்கு கீழே வைத்து விட்டு, பிரிஜ்ஜுக்குள் தேடுற ஆள்🤣. அதனால் இப்போ எல்லாம் பப்பாயா ஜூஸ் வித் அவுட் சுகர்தான்.  சொர்கம் அண்ணா இலங்கை - எங்க போனாலும் கிடைக்கும். இந்த நாட்டில் போய் பப்பாயா ஜூஸ் எண்டு கேட்டா ஒண்டு ஏதோ கெட்ட வார்த்தை மாதிரி பாக்கிறார்கள் அல்லது பப்பாளி தோட்டத்தின் விலை சொல்கிறார்கள். (சில கொச்சிகாய்களை தூவி விட்டுளேன் - உங்களுக்கு அல்ல, விலக்கி விட்டு குடிக்கவும்🤣).
    • தப்பி கிப்பி பிழைத்து வந்தால் அவர்களுக்கு சிறிலங்காவில் கதாநாயக வரவேற்பு வழங்கி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற வைத்தவிடுவார்கள் சிங்கள மக்கள்...அமெரிக்கா ஏகாதிபத்தியத்துக்கு எதிராக போராடிய சிங்கள லே (ரத்தம்)என கோசத்தை முன் வைப்பார்கள்
    • ஈரான் ரோனின் பெருமதி ஆயிரம் டொல‌ர் ர‌ஸ்சியா ஈரானிட‌ம் வாங்கும் போது இந்த‌ விலைக்கு தான் வாங்கினார்க‌ள்.....................ஈரான் ரோன்க‌ளில் ப‌ல‌ வ‌கை ரோன்க‌ள் இருக்கு 1800 கிலோ மீட்ட‌ர் தூர‌ம் போகும் அளவுக்கு கூட‌ ரோன்க‌ள் இருக்கு.....................இந்த‌ ரோன்க‌ளின் வேக‌ம் மிக‌ குறைவு......................நாச‌கார‌ ரோன்க‌ளை ஈரான் இன்னும் பய‌ன் ப‌டுத்த வில்லை...................அதை ப‌ய‌ன் ப‌டுத்தினால் அழிவுக‌ள் வேறு மாதிரி இருந்து இருக்கும் ........................2010க‌ளில் இஸ்ரேல் ஜ‌டோம்மை க‌ண்டு பிடிக்காம‌ இருந்து இருக்க‌னும் பாதி இஸ்ரேல் போன‌ வ‌ருட‌மே அழிந்து இருக்கும்....................ஹ‌மாஸ் ஒரு நாளில் எத்த‌னை ஆயிர‌ம் ராக்கேட்டை இஸ்ரேல் மீது  ஏவினார்க‌ள்............................   இர‌ண்டு நாளுக்கு முத‌ல் ஈரான் ஏவிய  ரோன்க‌ளின் விலை 3ல‌ச்ச‌ம் டொல‌ருக்கு கீழ‌ என்று நினைக்கிறேன்  ஈரான் ரோன்க‌ளை  தாக்கி அழிக்க‌ 3.3மில்லிய‌ன் அமெரிக்க‌ன் டொல‌ர் என்ப‌து அதிக‌ தொகை................நூற்றுக்கு 90வித‌ ரோன‌ அழிச்சிட்டின‌ம் 10 வித‌ம் இஸ்ரேல் நாட்டின் மீது வெடிச்சு இருக்கு அது புதிய‌ கானொளியில் பார்த்தேன் .................த‌ங்க‌ட‌ விமான‌ நிலைய‌த்துக்கு ஒன்றும் ந‌ட‌க்க‌ வில்லை என்று இஸ்ரேல் சொன்ன‌து பொய் இதை நான் இர‌ண்டு நாளுக்கு முத‌ல் எழுத‌ கோஷான் அவ‌ரின் பாணியில் என்னை ந‌க்க‌ல் அடித்தார்............ இப்ப‌ நீங்க‌ள் எழுதின‌து புரிந்து இருக்கும் பணரீதியா யாருக்கு அதிக‌ இழ‌ப்பு என்று......................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.