Jump to content

22.04.1987 அன்று விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட காபர்வியூ படைமுகாம் மீதான தாக்குதல் ஒரு பார்வை.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

22.04.1987 அன்று விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட காபர்வியூ படைமுகாம் மீதான தாக்குதல் ஒரு பார்வை.

spacer.png

22.04.1987 அன்று விடுதலைப்புலிகளால் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட யாழ்மாவட்டம் காங்கேசன்துறை பகுதியில் அமைந்திருந்த காபர்வியூ  தங்கக(விடுதி)படைமுகாம் மீதான தாக்குதல் ஒரு பார்வை.

யாழ்மாவட்டம் காங்கேசன்துறை பகுதியில் இருந்த துறைமுகமானது காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்குத் தேவையான பொருட்களை கடல்வழிமூலம் கொண்டுவருவதற்காக அமைக்கப்பட்டது.முதலாம் ஈழப்போர் ஆரம்பிக்கப்பட்டவுடன் பெரும்பாலும் படையினருக்குத்தேவையான பொருட்களை கொண்டுவருவதற்காகப் பயண்படுத்தப்பட்டதுடன் .துறைமுகப்பகுதிக்கு சீமெந்துத் தொழிற்சாலைக்கு தேவையான பொருட்களை எடுத்துவர மற்றும் சீமெந்துகளை கொழும்புக்கு அனுப்பும்வகையில் பாரவூர்திகளில் செல்லுபவர்களிடம் தங்ககவிடுதிகளில் உள்ள படையினரும் துறைமுகப்பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட காவலரனில் உள்ள படையினரும் பல்வேறு தொந்தரவுகளில் ஈடுபட்டனர்.

இப்படையினர் மீது ஒருதாக்குதல் நடாத்தவேண்டிய நிலைக்கு விடுதலைப்புலிகள் தள்ளப்பட்டனர்.

அதற்கமைவாக அப்போதைய யாழ்மாவட்டத்தளபதி ராதா அவர்களினால் துரிதகதியில் வேவுத்தரவுகள் மேற்கொள்ளப்பட்டன.

அவ்வேவுத்தரவுகளை தலைவர் அவர்களிடம் கொடுத்தார்.தளபதி ராதா அவர்கள். வேவுத்தரவுகளை பார்த்து அதன் சாதக பாதக நிலைகளை தளபதி ராதா அவர்களிடம் கூறியதோடு மட்டுமல்லாமல் தனது மெய்பாதுகாப்பாளர்களில் பெரும்பாலானவர்களை இத்தாக்குதலுக்கு  அனுப்பிவைத்ததுடன் இத்தாக்குதலுக்கான பயிற்சிகளை வடமராட்சியில் நடாத்தும்படி தளபதி ராதா அவர்களிடம் கூறிப்பிட்டார் தலைவர் அவர்கள்.அதற்கமைவாக பயிற்சிகள் வடமராட்சியில் நடைபெற்றன பயிற்சிகளை  தலைவர் அவர்கள் பார்வையிட்டதுடன்

ஆலோசனைகளையும் வழங்கினார்.

பயிற்சிகள் நிறைவுபெற்று தாக்குதலுக்கான திட்டம் தளபதி ராதா அவர்களினால் விளங்கப்படுத்தப்பட்டன.

அதற்கமைவாக இரண்டு பாரவூர்தியில் சென்று திகைப்பூட்டும் தாக்குதலை நடாத்திவிட்டு திரும்பிவருவதே திட்டமாகும் .ஒரு பாரவூர்தியில்  சொர்ணம் (சொா்ணம் அவர்கள் அந்தக்காலப்பகுதியில் தலைவர் அவர்களின் பாதுகாப்புப் பிரிவிற்க்கு இரண்டாவது பொறுப்பாளாரக இருந்தார் இவரே பிரிகேடியர் சொர்ணம் ஆவார் வீரச்சாவு 15.05.2009)அவர்கள் தலைமையில் செல்லும் போராளிகள 

படையினர் தங்கும் தங்ககம் (விடுதி)மீது தாக்குதல் நடாத்துவார்கள் .அதேசமயம் மற்றுமொரு பாரவூர்தியில் கப்டன் ஐயா தலைமையில் செல்லும் போராளிகள் காவலரன்கள் மீது தாக்குதல் நடாத்துவார்கள் .அதற்கமைவாக 22.04.1987 அன்று இரவு 10.00 மணியளவில் ஆரம்பித்த இத்தாக்குதல் குறிப்பிட்ட நிமிடத்திற்க்குள்  காவலரன்கள் முழுமையான கைப்பற்றப்பட்டதுடன் அக்காவலரனில் உள்ள ஆயுதங்களும் கைப்பற்ப்பட்டன .அதே சமயம் கண்காணிப்புகோபுரத்திலிருந்த படையினர் இவர்கள்மீது   தாக்குதல் நடாத்த இதைக் கவனித்த சுபன்(மன்னார் மாவட்டச் சிறப்புத்தளபதி வீரச்சாவு.25.09.1992 )இன்னொரு போராளியிடம் கூற அவரோ படையினரிடமிருந்து கைப்பற்றிய ஆர்.பி.ஐி எடுத்து கண்காணிப்புக்கோபுரத்தின் மீது குறிதவறாமல் தாக்குதல் மேற்கொள்ள கண்காணிப்புக்கோபுரம் தகர்த்தெறியப்பட்டது.அன்று அப்போராளி அக்கண்காணிப்புக்கோபுரத்தின் மீது மேற்கொண்டதாக்குதல் தவறினால் நிலைமை மோசமாகியிருக்கும்.இன்னொரு காவலரனில் போராளிக்கும் படையினருக்கும் கைகலப்பில் படையனரைக் கொன்றான் அப்போராளி இப்படியான பல்வேறு சாகசங்களையும் நிகழத்திய வெற்றிகரத்தாக்குதலில் பன்னிரன்டிற்க்கும் மேற்பட்ட படையினர் கொல்லபபட்டதுடன்  அதி நவீன ஆயதங்களும் கைப்பற்ப்பட்ட இவ்வெற்றிகரத்தாக்குதலில்.ஆறு போராளிகள் வீரச்சாவடைந்தனர்.

இவ் வெற்றிகரகொமாண்டோத்தாக்குதலை

அப்போதைய யாழ்மாவட்டத் தளபதி ராதா அவர்கள் காங்கேசன்துறையிலிருந்து வழிநடாத்தினார்.

இச்சம்பவமானது அக்களமுனையில் களமாடியவரின் உள்ளத்திலிருந்து.

இச்சமரில் வீரச்சாவடைந்தவர்கள் விபரம் வருமாறு.

கப்டன் பவான்( ஐயா).

லெப்ரினன்ட் கிர்மானி.

2ம் லெப்டினன்ட் குணம்.

2ம் லெப்ரினன்ட் குலம்.

வீரவேங்கை தாஸ்.

வீரவேங்கை சுவர்ணன்.

3Di4DSOGF2fj19sUkeF3.jpg

cJ3vmxvGefdhwmBVeejt.jpg

Clpt8ZblIPRH7sCtJwRQ.jpg

hHljY8wP8WzF4W00dKxN.jpg

VJ8OOWjEkRMsMSL59GU9.jpg

https://www.thaarakam.com/news/a8d19f17-1c32-4753-8c38-089c69ea3c29

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தாக்குதல் சிறிது காலத்தில் இலங்கை இராணுவம் ஒபரேசன் லிபரேசனை தொடங்கி வலிகாமம் வடக்கு மக்களை தெல்லிப்பளைக்கு எல்லைக்கு வெளியில் அகதிகளாக அனுப்பி வைக்க வழிகோலியது. தாக்குதலை நடாத்திய புண்ணியவான்கள் தப்பி சென்றுவிட்டார்கள். ஆனால், இராணுவம், கடற்படையின் கடுமையான எறிகணை தாக்குதலில், உலங்கு வானூர்தி தாக்குதலில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள், காயம் அடைந்தார்கள். மக்களுக்கு அன்று இரவு தொடங்கிய அவலம்தான்... காங்கேசன்துறை இன்று சுடுகாடு ஆகியுள்ளது. அழகிய, அமைதியான பூமி இன்று இராணுவத்தின் கைவசம். 

Link to comment
Share on other sites

1 hour ago, நியாயத்தை கதைப்போம் said:

போராட்டமே நடாத்தி இருக்க கூடாது. அடிமைகளாக இருந்திருக்க வேண்டும்.
போராட்டம் அவர்கள் நடாத்தா விட்டால் இப்போ கனடாவில் எப்படி ஓகோ என இருக்க முடியும்?

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, nunavilan said:

போராட்டமே நடாத்தி இருக்க கூடாது. அடிமைகளாக இருந்திருக்க வேண்டும்.
போராட்டம் அவர்கள் நடாத்தா விட்டால் இப்போ கனடாவில் எப்படி ஓகோ என இருக்க முடியும்?

எல்லா விந்தணுவும் பிள்ளைகளை உருவாக்குவதில்லை 
அப்படியாக்கினாலும் எல்லாம்மும் பிள்ளையாகி பிறப்பதும் இல்லை 
அப்படி பிறந்தது எல்லாம் பிள்ளையாக வளர்வதும் இல்லை 
வளர்ந்தது எல்லாம்  வாழ்க்கையை புரிவதும் இல்லை 
 
அதுக்காக  நாம் விந்தணுவையா  நோக வேண்டும்?
அந்த அளவு அடிமட்ட அறிவு உள்ள மனிதர்கள் இருக்கிறார்கள் என்று 
பூமியைத்தான் நோக வேண்டுமா? 

  • Like 1
  • Thanks 1
  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நவீன ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. பல இராணுவத்தினர் கொல்லப்பட்டார்கள். மயிர்கூச்செரியும் தாக்குதல் நடாத்தப்பட்டது. கொப்பேகடுவ துண்டை காணோம், துணியை காணோம் என்று ஓட்டம். சிங்களத்திற்கு பேரிழப்பு. 

பொதுமக்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை, அழிவுகளை, அலசவேண்டிய, நினைவுகூர வேண்டிய தேவை இல்லை. எல்லாரும் பத்திரமாய் காங்கே சன்துறை துறைமுகத்தில் கப்பல் ஏறி கனடாவுக்கு அகதிகளாய் வந்துவிட்டார்கள். ஆஹா ஓஹோ என்று வாழ்கின்றார்கள்.

வேறென்ன வேண்டும்? எமக்கே இறுதி வெற்றி.

வணக்கம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா மண்டையில்  வலப்பக்க மூளை இருக்க வாய்ப்பிருக்கு 
ஆனால் செயல்படும் என்பதுக்கு உத்திரவாதம் இல்லை.

அதுக்கான உதாரணங்கள் உங்களை சுற்றி இருக்கும்போது 
அதுபற்றிய தேடலுக்கு தேவையும் இல்லை 

Link to comment
Share on other sites

15 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

நவீன ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. பல இராணுவத்தினர் கொல்லப்பட்டார்கள். மயிர்கூச்செரியும் தாக்குதல் நடாத்தப்பட்டது. கொப்பேகடுவ துண்டை காணோம், துணியை காணோம் என்று ஓட்டம். சிங்களத்திற்கு பேரிழப்பு. 

பொதுமக்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை, அழிவுகளை, அலசவேண்டிய, நினைவுகூர வேண்டிய தேவை இல்லை. எல்லாரும் பத்திரமாய் காங்கே சன்துறை துறைமுகத்தில் கப்பல் ஏறி கனடாவுக்கு அகதிகளாய் வந்துவிட்டார்கள். ஆஹா ஓஹோ என்று வாழ்கின்றார்கள்.

வேறென்ன வேண்டும்? எமக்கே இறுதி வெற்றி.

வணக்கம்.

கனடாவில்  புலிகளால் பிரச்சனை என்று சொல்லி அகதி கோரி ஆகா ஓகோ என வாழ்கிறோம் என்றூ சொல்ல வெட்கம்  விடுவதில்லை.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1948 இல் இருந்து தமிழரின் தாயகம் சூறையாடப்பட்டுக்கொண்டுதான் வருகிறது. தமிழர் அவர்களின் வாழ்விடங்களிலிருந்து துரத்தப்பட்டுக்கொண்டுதான் வருகிறார்கள். 1955 இலிருந்து தமிழர்கள் கொல்லப்பட்டுக்கொண்டு வருகிறார்கள். அதே போல 2009 இற்குப்பிறகு வடக்கிலும் கிழக்கிலும் தமிழரின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, சிங்கள மயப்படுத்தப்பட்டு வருகின்றது. இக்காலங்களில் ராணுவமும் கொல்லப்படவில்லை, கொப்பேக்கடுவவும் ஓடித்திரியவில்லை, நவீன ஆயுதங்களும் கைப்பற்றப்படவில்லை. ஆனால், தமிழர்கள் துரத்தப்படுகிறார்கள், கொல்லப்படுகிறார்கள், அடிமைகளாக நடத்தப்படுகிறார்கள்.

நியாயத்தைப் புடுங்குபவர்கள் இதுபற்றி என்ன சொல்ல நினைக்கிறார்கள் என்று அறிய ஆசை. 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

நவீன ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. பல இராணுவத்தினர் கொல்லப்பட்டார்கள். மயிர்கூச்செரியும் தாக்குதல் நடாத்தப்பட்டது. கொப்பேகடுவ துண்டை காணோம், துணியை காணோம் என்று ஓட்டம். சிங்களத்திற்கு பேரிழப்பு. 

பொதுமக்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை, அழிவுகளை, அலசவேண்டிய, நினைவுகூர வேண்டிய தேவை இல்லை. எல்லாரும் பத்திரமாய் காங்கே சன்துறை துறைமுகத்தில் கப்பல் ஏறி கனடாவுக்கு அகதிகளாய் வந்துவிட்டார்கள். ஆஹா ஓஹோ என்று வாழ்கின்றார்கள்.

வேறென்ன வேண்டும்? எமக்கே இறுதி வெற்றி.

வணக்கம்.

ஏனுங்கோ..

ஏனுங்கோ வேலைக்குப் போறனீங்களே..

இல்லச் சும்மா கேட்டனான். ஏனெண்டா உங்கட எழுத்தில இயலாமை தெரியுதுங்கோ... அதுதான்....சும்மாமாமா..

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நுணாவிலான் யாழ் இணையம் கருத்துக்கள நிர்வாகத்தில் மட்டும் அல்ல கனடா குடிவரவுத்துறை நிர்வாகத்திலும் உள்ளார் என்று அறியும்போது பெருமையாக உள்ளது. வேலியே பயிரை மேய்ந்தால் யாழ் கருத்துக்களம் உருப்படும்.
 
வாழ்த்துக்கள்!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

நுணாவிலான் யாழ் இணையம் கருத்துக்கள நிர்வாகத்தில் மட்டும் அல்ல கனடா குடிவரவுத்துறை நிர்வாகத்திலும் உள்ளார் என்று அறியும்போது பெருமையாக உள்ளது. வேலியே பயிரை மேய்ந்தால் யாழ் கருத்துக்களம் உருப்படும்.
 
வாழ்த்துக்கள்!

ஜேர்மனியிலும் விடுதலைப்புலிகளால் பிரச்சனை என்று சொல்லி அகதி விண்ணப்பம் கோரியவர்கள் இருக்கின்றார்கள்.

இதனை எழுதும் நான் குடிவரவுதுறையில் இருக்கின்றேன் என சான்றிதழ் தருவீர்களா?

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம், குமாரசாமி ஜேர்மனி குடிவரவுத்துறை நிர்வாகக்தில் உள்ள சமூகஆர்வலர் என மெய்ச்சி பெருமைப்பட்டு கொள்ளலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

இந்த தாக்குதல் சிறிது காலத்தில் இலங்கை இராணுவம் ஒபரேசன் லிபரேசனை தொடங்கி வலிகாமம் வடக்கு மக்களை தெல்லிப்பளைக்கு எல்லைக்கு வெளியில் அகதிகளாக அனுப்பி வைக்க வழிகோலியது. தாக்குதலை நடாத்திய புண்ணியவான்கள் தப்பி சென்றுவிட்டார்கள். ஆனால், இராணுவம், கடற்படையின் கடுமையான எறிகணை தாக்குதலில், உலங்கு வானூர்தி தாக்குதலில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள், காயம் அடைந்தார்கள். மக்களுக்கு அன்று இரவு தொடங்கிய அவலம்தான்... காங்கேசன்துறை இன்று சுடுகாடு ஆகியுள்ளது. அழகிய, அமைதியான பூமி இன்று இராணுவத்தின் கைவசம். 

1987 இல் சிறீரங்கா இராணுவம் தந்தை செல்வா பாடாசாலை வரை முன்னேறி நின்றது.

மேலும் ஒபரேசன் லிபரேசன் வடமராட்சியை நோக்கிய படை நகர்வு

1990 யூன் நடுப்பகுதியிலிருந்தே பலாலி மயிலிட்டி காங்கேசன்துறை என படிப்படியாக (?)  மக்கள் வெளேயேறினர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

ஆமாம், குமாரசாமி ஜேர்மனி குடிவரவுத்துறை நிர்வாகக்தில் உள்ள சமூகஆர்வலர் என மெய்ச்சி பெருமைப்பட்டு கொள்ளலாம்.

மனதிலை இருக்கிற கோவம் எல்லா இடமும் வெளிப்படுது..😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடமராட்சி நகர்வின் ஏக காலத்தில் காங்கேசன்துறை, பலாலியில் தொடங்கி தெல்லிப்பழை பகுதி நோக்கி இராணுவம் முன்னேற தொடங்கியது. ஆனால், வடமராட்சி பிரச்சனை பெரிதாகும் முன்னரே காங்கேசன்துறை இலகுவாக இராணுவத்தின் வசமாகிவிட்டது. பொதுமக்கள் இராணுவத்துக்கு தண்ணி காட்டிவிட்டு உள் பாதைகளால் இரகசிமாக தமது வீடுகள் பார்க்க சென்று வந்தார்கள். இராணுவத்திடம் பிடிபட்டவர்கள், தாக்குதல்களுக்கு உள்ளானவர்களும் உண்டு.

இந்திய இராணுவத்தின் வருகையின் பின்னர் மக்கள் மீண்டும் தமது பகுதிகளுக்கு சென்றார்கள். இந்திய இராணுவம் வெளியேறி போர் தொடங்கியதும் மீண்டும் 1990 பாரிய இடம்பெயர்வு. ஆனால் அது நிரந்தரமானது.

முன்பு அவ்வப்போது காங்கேசன்துறை பலாலி இராணுவ முகாம்களின் போக்குவரத்தை வழிமறித்து கண்ணிவெடி தாக்குதல்கள் நடாத்தப்பட்டன. அதன் விளைவுகளை மக்கள் சமாளித்தார்கள்.

ஆனால், 1987 ஹாபர் வியூ  அடியுடன் காங்கேசன்துறை அவல பூமி ஆகிவிட்டது. கடற்படை, விமானப்படை, தரைப்படை சேர்ந்து ( காங்கேசன்துறை முகாம், பலாலி முகாம் இராணுவம்) அந்த பகுதியை துவம்சம் செய்தது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரஞ்சித் said:

1948 இல் இருந்து தமிழரின் தாயகம் சூறையாடப்பட்டுக்கொண்டுதான் வருகிறது. தமிழர் அவர்களின் வாழ்விடங்களிலிருந்து துரத்தப்பட்டுக்கொண்டுதான் வருகிறார்கள். 1955 இலிருந்து தமிழர்கள் கொல்லப்பட்டுக்கொண்டு வருகிறார்கள். அதே போல 2009 இற்குப்பிறகு வடக்கிலும் கிழக்கிலும் தமிழரின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, சிங்கள மயப்படுத்தப்பட்டு வருகின்றது. இக்காலங்களில் ராணுவமும் கொல்லப்படவில்லை, கொப்பேக்கடுவவும் ஓடித்திரியவில்லை, நவீன ஆயுதங்களும் கைப்பற்றப்படவில்லை. ஆனால், தமிழர்கள் துரத்தப்படுகிறார்கள், கொல்லப்படுகிறார்கள், அடிமைகளாக நடத்தப்படுகிறார்கள்.

நியாயத்தைப் புடுங்குபவர்கள் இதுபற்றி என்ன சொல்ல நினைக்கிறார்கள் என்று அறிய ஆசை. 
 
சட்டி சுட்டதும் கையை விடுவது மனித மூளை முடிவெடுக்க முன்னரே கண் இமைத்ததை போல தானாக நடப்பது.

சூடான சட்டி சுடும் என்பதை இரண்டாம் முறையும் ஞாபகத்தில் வைத்திருக்க 
வலப்பக்க மூளை செயல்பாட்டில் இருக்கவேண்டும். 

 அது பற்றாக்குறையான இடங்களில் பரிதாபப்படுவதை விடுத்து 
வேறு வழி ஏதும் இல்லை 

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.