Jump to content
 • Veeravanakkam
 • Veeravanakkam
 • Veeravanakkam

தமிழக அரசியல் குட்டையில் இறங்கி, சேறாக்கும் அனந்தி எழிலன் 

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

தமிழக அரசியல் குட்டையில் இறங்கி, சேறாக்கும் அனந்தி எழிலன் 

வின்ஸ்டன் சேர்ச்சில் இடம் வந்த ஒருவர், ஐயா ஒரு நிகழ்வில் பேச வரமுடியுமா என்றார்.

எவ்வளவு நேரம் பேசணும் என்றார் சேர்ச்சில். ஐந்து நிமிடம் போதுமானது என்றார் வந்தவர். 

அப்படியா, ஒரு மாதம் ஆகுமே என்றார் சேர்ச்சில்.

வந்தவருக்கு, சேர்ச்சில் குறும்புத்தனம் தெரியும் என்பதால், அப்படியானால் 30 நிமிடத்துக்கு பேசலாமே என்றார். அதுக்கு ஒருவாரம் வேண்டுமே என்றார் சேர்ச்சில்.

வந்தவரும் அசராமல், ஒரு மணித்தியாலம் என்றால், என்றார. 

நான் இப்பவே ரெடி, போகலாமே என்றார் சேர்ச்சில்.

ஒரு மேடைப்பேச்சாளர் அல்லது ஒரு நேர்முகத்தில் பேசுபவர் எப்படி தயாராக வேண்டும் என்று இன்றளவும் உலகளாவிய உதாரணமாக காட்டப்படுகின்றனது. அதாவது, தயாராக இல்லாவிடில், வாயில் வரும் எதனையுமே அலம்பலாம் என்பதனை தான் சேர்ச்சில் சொல்லி இருந்தார்.

எழிலன் என்னும் ஒரு போராளியின் மனைவியாக, தனது கணவரை ஒப்படைத்து தேடும் ஒரு விதவையாக அனுதாபம் பெற்று அரசியல் வந்த, அனந்தி சசிதரன், தன்னை ஒரு ஆளுமையாக வெளிப்படுத்தாத காரணத்தால், கடந்த பாராளுமன்ற தேர்தலில் வெல்ல முடியவில்லை.

தமிழக யூடீயூப் விண்ணாதிகளின் நேர்முக கோரிக்கை வந்ததும், எதுவித தயாராதல் இல்லாமல், அலம்பறை பண்ணி, இன்று அதனை சமாளிக்கிறேன் என்று மேலும், மேலும் அலம்பறை பண்ணி, புலிகளையும் இழுத்து, ஏதோதோ சொல்கிறார்.

சம்பலும் சோறும் சாப்பிட்டு இருந்து விடுவோம், என்று தமிழகத்தில் சம்பல் என்றால் என்ன என்று புரியுமா என்ற தெளிவே இல்லாத ஒரு அரசியல்வாதியாகவே இருக்கிறார் அவர்.

இன்று மூன்றாவது யூடீயூப் வந்துள்ளது.

பார்க்கும் போதே, கேள்விகளுக்கு, இழுத்து... அலம்பும் போதே, அய்யோ என்னத்தை சொல்லி முடிக்கப்போகிறாவோ என்று நமக்கே பதை பதைக்கிறது.

பத்தாததுக்கு சிவாஜிலிங்கம் வேறு தொடங்கி விட்டார்.

தமிழக அரசியலினுள், பக்கசார்பாக எம்ஜிஆர் பக்கம் புலிகள் நின்றதை, கலைஞர் கடைசிவரை ஜீரணிக்கவில்லை. முள்ளிவாய்க்கால் துயரம் வரை நீண்டது.

இப்போதும், பக்க சார்பாக நிலை எடுக்காமல், யாராவது அவர்களிடம்  சொல்லி, இந்த ஒரு இழவும் புரியாத அலம்பறைகளை நிறுத்த சொல்லவிடுங்களேன். புண்ணியமாக போகும்.

புலம்பெயர் முகம் தெரியாதவர்கள் வேறு, நமது மண்ணில் உள்ள அரசியல்வாதிகள் வேறு. அவர்கள் தமது பேச்சில், நடுநிலைமையில் கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதை, புலிகளின், எம்ஜிஆர், கலைஞர் அனுபவமே உணர்த்தி உள்ளது.

இவர்கள் மக்களினால், தேர்தல் அரசியலில் தெரிவாகாமல், விடுபட்டத்துக்கு ஒரு காரணம் உண்டு, அந்த காரணத்தினை, தமிகத்துக்கும் சொல்கிறார்கள் என்பதே கவலைக்குரியது.

Edited by Nathamuni
 • Thanks 2
Link to post
Share on other sites
 • Replies 58
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

அதனால் தான் சிங்களவன் போட்டு ஈழத்தமிழர்களை  கரிக்கட்டையாக்கும்போதும், இந்தியாவே காப்பாற்று என்று கந்தகப்புகையினில் கதறும்போதும் , தமிழ்நாட்டு மக்கள்  மானாட மயிலாட சன்டீவியில் பார்த்துக்கொண்டு சச்ச

எமக்கு சாதமும் சட்னியும் என்று சொன்னால் விளங்குது தானே? அப்படியே சம்பலும் சோறும் என்றால் தமிழகத்து மக்களுக்கு விளங்காவிடின் என்ன அதை அவர்கள் கற்றுக் கொள்ளட்டும். அதற்காக ஏன் அனந்தி அவர்களி

இலங்கையில் இருப்பவர்கள் சீன்மானை கண்டுகொள்வதில்லை. புலம்பெயர் நாடுகளில் தங்களையும் தங்கள் சந்ததியையும் நிலைப்படுத்தியவர்கள்தான் குளிர் அடிக்கும்போதெல்லாம் ஊருக்குப் போகவேண்டும், ஆனால் தமிழீழம் கிடைக்க

 • கருத்துக்கள உறவுகள்

அக்காவுக்கு அர‌சிய‌ல் புரித‌ல் பெரிசா இல்லை

எம்ம‌வ‌ர் வ‌ன்னியில் இருந்த‌ போது ஆன‌ந்தி என்றால் யாருக்கும் தெரியாது

திராவிட‌ சூழ்ச்சி வ‌லைக்குள் விழுந்த‌ மாதிரி தெரியுது 

பேட்டி கொடுக்க‌ முத‌ல் ஒரு க‌ன‌ம் ஆன‌ந்தி அக்கா யோசிக்க‌னும் இத‌னால்  பின் விலைவுக‌ள் ஏதாவ‌து வ‌ருமா என்று 

எழில‌ன் அண்ண‌ கூட‌ அர‌சிய‌ல் பொருப்பில் இருந்த‌வ‌ர் ?

எல்லாள‌ன் தாக்குத‌ல் 2007ம் ஆண்டு ந‌ட‌ந்து கொண்டு இருக்கும் போது தான் த‌லைவ‌ர் எல்லா த‌ள‌ப‌திக‌ளையும் அழைத்து இப்ப‌டி ஒரு தாக்குத‌ல் ந‌ட‌ந்திட்டு இருக்குது என்று த‌ள‌ப‌திக‌ளுக்கு சொன்னார் ,

எல்லாள‌ன் தாக்குத‌ல் த‌லைவ‌ருக்கும் எல்லாள‌ன் தாக்குத‌ல‌ வேவு பார்த்து அத‌ ச‌ரியா வ‌ழி ந‌ட‌த்தின‌ போராளிக‌ளுக்கும் தான் எல்லாள‌ன் தாக்குத‌ல் திட்ட‌ம் தெரியும் ? இப்ப‌டி எம் போராட்ட‌த்தில் ப‌ல‌ விதிமுறைக‌ள் இருக்கு அது வெளியில் வ‌ருவ‌தில்லை

ஆனால் ஆன‌ந்தி அக்கா பேட்டி கொடுக்கும் போது ஆட்டுக்கை மாட்டை க‌ல‌க்கிற‌ மாதிரி உப்பு ச‌ப்பில்லா வார்த்தைக‌ளை அள்ளி கொட்டி தேவை இல்லா ப‌ல‌ விம‌ர்ச‌ன‌த்துக்கு ஆள் ஆகி நிக்கிறா

என்ன‌ பொருத்த‌ வ‌ர‌ இது ஆன‌ந்தி அக்காவுக்கு தேவை இல்லா வேலை 😕

 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 22/4/2021 at 09:59, Nathamuni said:

தமிழக அரசியல் குட்டையில் இறங்கி, சேறாக்கும் அனந்தி எழிலன் 

வின்ஸ்டன் சேர்ச்சில் இடம் வந்த ஒருவர், ஐயா ஒரு நிகழ்வில் பேச வரமுடியுமா என்றார்.

எவ்வளவு நேரம் பேசணும் என்றார் சேர்ச்சில். ஐந்து நிமிடம் போதுமானது என்றார் வந்தவர். 

அப்படியா, ஒரு மாதம் ஆகுமே என்றார் சேர்ச்சில்.

வந்தவருக்கு, சேர்ச்சில் குறும்புத்தனம் தெரியும் என்பதால், அப்படியானால் 30 நிமிடத்துக்கு பேசலாமே என்றார். அதுக்கு ஒருவாரம் வேண்டுமே என்றார் சேர்ச்சில்.

வந்தவரும் அசராமல், ஒரு மணித்தியாலம் என்றால், என்றார. 

நான் இப்பவே ரெடி, போகலாமே என்றார் சேர்ச்சில்.

ஒரு மேடைப்பேச்சாளர் அல்லது ஒரு நேர்முகத்தில் பேசுபவர் எப்படி தயாராக வேண்டும் என்று இன்றளவும் உலகளாவிய உதாரணமாக காட்டப்படுகின்றனது. அதாவது, தயாராக இல்லாவிடில், வாயில் வரும் எதனையுமே அலம்பலாம் என்பதனை தான் சேர்ச்சில் சொல்லி இருந்தார்.

எழிலன் என்னும் ஒரு போராளியின் மனைவியாக, தனது கணவரை ஒப்படைத்து தேடும் ஒரு விதவையாக அனுதாபம் பெற்று அரசியல் வந்த, அனந்தி சசிதரன், தன்னை ஒரு ஆளுமையாக வெளிப்படுத்தாத காரணத்தால், கடந்த பாராளுமன்ற தேர்தலில் வெல்ல முடியவில்லை.

தமிழக யூடீயூப் விண்ணாதிகளின் நேர்முக கோரிக்கை வந்ததும், எதுவித தயாராதல் இல்லாமல், அலம்பறை பண்ணி, இன்று அதனை சமாளிக்கிறேன் என்று மேலும், மேலும் அலம்பறை பண்ணி, புலிகளையும் இழுத்து, ஏதோதோ சொல்கிறார்.

சம்பலும் சோறும் சாப்பிட்டு இருந்து விடுவோம், என்று தமிழகத்தில் சம்பல் என்றால் என்ன என்று புரியுமா என்ற தெளிவே இல்லாத ஒரு அரசியல்வாதியாகவே இருக்கிறார் அவர்.

இன்று மூன்றாவது யூடீயூப் வந்துள்ளது.

பார்க்கும் போதே, கேள்விகளுக்கு, இழுத்து... அலம்பும் போதே, அய்யோ என்னத்தை சொல்லி முடிக்கப்போகிறாவோ என்று நமக்கே பதை பதைக்கிறது.

பத்தாததுக்கு சிவாஜிலிங்கம் வேறு தொடங்கி விட்டார்.

தமிழக அரசியலினுள், பக்கசார்பாக எம்ஜிஆர் பக்கம் புலிகள் நின்றதை, கலைஞர் கடைசிவரை ஜீரணிக்கவில்லை. முள்ளிவாய்க்கால் துயரம் வரை நீண்டது.

இப்போதும், பக்க சார்பாக நிலை எடுக்காமல், யாராவது அவர்களிடம்  சொல்லி, இந்த ஒரு இழவும் புரியாத அலம்பறைகளை நிறுத்த சொல்லவிடுங்களேன். புண்ணியமாக போகும்.

புலம்பெயர் முகம் தெரியாதவர்கள் வேறு, நமது மண்ணில் உள்ள அரசியல்வாதிகள் வேறு. அவர்கள் தமது பேச்சில், நடுநிலைமையில் கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதை, புலிகளின், எம்ஜிஆர், கலைஞர் அனுபவமே உணர்த்தி உள்ளது.

இவர்கள் மக்களினால், தேர்தல் அரசியலில் தெரிவாகாமல், விடுபட்டத்துக்கு ஒரு காரணம் உண்டு, அந்த காரணத்தினை, தமிகத்துக்கும் சொல்கிறார்கள் என்பதே கவலைக்குரியது.

தல,
தனிய நின்று புலம்புவதை விட்டுட்டு, அந்த மூன்று காணொளிகளையும் இங்கே இணையுங்கள். நாங்களும் பார்த்து கருத்து சொல்லலாம்(புலம்பலாம்) அல்லவா?

Edited by zuma
Link to post
Share on other sites

எமக்கு சாதமும் சட்னியும் என்று சொன்னால் விளங்குது தானே?

அப்படியே சம்பலும் சோறும் என்றால் தமிழகத்து மக்களுக்கு
விளங்காவிடின் என்ன அதை அவர்கள் கற்றுக் கொள்ளட்டும்.

அதற்காக ஏன் அனந்தி அவர்களின் பாசையில் கதைக்க வேண்டும்?

தேர்தலில் தோற்றுப் போனால் அரசியல் கதைக்க கூடாதோ?
சீமான் இந்த தேர்தலில் தோற்றுத் தான் போகப் போகிறார்
அப்ப இனி அவர் அரசியல் கதைக்க கூடாதோ
மக்களால் நிராகரிக்கப்பட்டவர் என்று சொல்லுவீர்களோ

சீமானின் மீதான கண்மூடித்தனமான உங்கள் ஆதரவு
அனந்தி போன்றவர்களைக் கூட எதிர்க்க சொல்லுது

உங்கள் இடுப்புபட்டியை இறுக்கிக் கொள்ளுங்கள்
அடுத்த நான்கு வருடங்களிற்குள் இப்படி
நிறைய தாயக மக்களின் பிரதினிதிகள் சீமானை
எதிர்க்க போகின்றார்கள்.

 • Like 3
 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தமிழக அரசியலில் ஈழத் தமிழர் தலையிட வேண்டிய அவசியமே இல்லை. 

தமிழகத்துக்கு நன்மை நடக்கவேண்டும் அதனூடு எமக்கு நல்லது நடக்க வேண்டும் என நாம் விரும்புவதில் தவறொன்றும் இல்லை. ஆனால் எம் தலையெழுத்தையே திருத்த முடியாதவர்கள் எப்படி இன்னொருவனுக்கு வழிகாட்ட முடியும். 

இறுதியில் யானை பார்த்த குருடனின்கதைதான்...😂

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

தமிழக அரசியலில் ஈழத் தமிழர் தலையிட வேண்டிய அவசியமே இல்லை. 

மறுதலையும் உண்மையாகுமா?😂

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Kapithan said:

தமிழக அரசியலில் ஈழத் தமிழர் தலையிட வேண்டிய அவசியமே இல்லை. 

இதைத்தான் விடுதலைப் புலிகள் கடைப்பிடித்தார்கள். ஆனால் இப்போது புலம்பெயர் தமிழரில் ஒரு கூட்டம் அங்குள்ள சீமானின் கட்சிக்கு ஆதரவு கொடுத்து புலம்பெயர் நாடுகளில் வீரத்தமிழர் முன்னணி, நாம் தமிழர் போன்றவற்றில் வேலை செய்கின்றார்கள். நிதியும் சேர்த்துக்கொடுக்கின்றார்கள். அதைச் சொன்னால் தீமூகா சொம்பு என்று முத்திரை குத்தும் வேலையும் செய்கின்றார்கள். 

அனந்தியை மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளில் திட்டும் வீடியோக்களும் சீமானின் தம்பிகள் விடுகின்றார்கள். அவற்றை கட்டுப்படுத்தாமல் உற்சாகப்படுத்தும் தலைவரும், தம்பிகளும்தான் இருக்கின்றார்கள்.

 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, zuma said:

மறுதலையும் உண்மையாகுமா?😂

தமிழகத்திற்கு நன்மை நடக்க வேண்டும் என்பதில் உங்களுக்கும்(எல்லோருக்கும்) எனக்கும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் எப்படி, யாரால் என்பதில்தான் கருத்து வேறுபாடு எல்லோருக்குள்ளும் ஏற்படுகிறது

எது எவ்வாறாகினும்,

(குருடர்களாகிய ஈ(ன)ழத் தமிழர் எப்படி இன்னொரு குருடனுக்கு வழிகாட்டுவது..?🤣)

பனை மரத்திற்கு தேள் கொட்ட கள்ளுக் குடித்தவனுக்கு நெறிகட்டின கதை போல ஆரம்பகால இந்திய, தமிழகத் தலைவர்களின் படங்களை எமது ஈழத்து வீடுகளில் வைத்து அழகுபார்த்த ஆட்களெல்லோ நாங்கள். 

அந்த நோயின் தாக்கம் இன்னமும் தொடர்கிறது. அம்புட்டுதே.. 😂

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, கிருபன் said:

இதைத்தான் விடுதலைப் புலிகள் கடைப்பிடித்தார்கள். ஆனால் இப்போது புலம்பெயர் தமிழரில் ஒரு கூட்டம் அங்குள்ள சீமானின் கட்சிக்கு ஆதரவு கொடுத்து புலம்பெயர் நாடுகளில் வீரத்தமிழர் முன்னணி, நாம் தமிழர் போன்றவற்றில் வேலை செய்கின்றார்கள். நிதியும் சேர்த்துக்கொடுக்கின்றார்கள். அதைச் சொன்னால் தீமூகா சொம்பு என்று முத்திரை குத்தும் வேலையும் செய்கின்றார்கள். 

அனந்தியை மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளில் திட்டும் வீடியோக்களும் சீமானின் தம்பிகள் விடுகின்றார்கள். அவற்றை கட்டுப்படுத்தாமல் உற்சாகப்படுத்தும் தலைவரும், தம்பிகளும்தான் இருக்கின்றார்கள்.

அது ப‌ழ‌னி என்ற‌ த‌றுத‌லை பெரிய‌ப்பா , தடா ச‌ந்திர‌சேக‌ர் அவ‌னின் ஒரு சில‌ காணொளிக‌ளை பார்த்து விட்டு பாராட்டினாரோ தெரியாது

ஆனால் அந்த‌ ப‌ழ‌னி பாவிப்ப‌து ப‌டு தூச‌ன‌ம்

நான் கூட‌ அவ‌ருக்கு த‌னி ம‌ட‌லில் எழுதினேன் நீங்க‌ள் தூச‌ன‌ம் பாவிக்க வேண்டாம் என்று ஆனால் அவ‌ன் தொட‌ர்ந்து குரைத்து கொண்டு தான் இருக்கிறான் ,

ப‌ழ‌னி ப‌ர‌ப்புவ‌து அவ‌தூறுக‌ள் , பொய் பொய் , முன்னால் போராளிக‌ள் வேறு ஒரு நாட்டில் இருந்து சிங்க‌ள‌ தேச‌த்துக்கு க‌ண்ட‌ம் விட்டு க‌ண்ட‌ம் தாக்கும் முறையில் இற‌ங்கிட்டின‌ம் அது ந‌ட‌க்கும் என்று வ‌த‌ந்தியை கில‌ப்பி விடுற‌து தான் ப‌ழ‌னியின் முழு வேலை ,

இல்லாத‌ த‌லைவ‌ரை இருக்கிறார் என்று விப‌ர‌ம் தெரியா இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளை ந‌ம்ப‌ வைக்கிறான் ,

நான் அவ‌னின் காணொளிக‌ள் பெரிசா பார்க்கிறேல‌ அவ‌ள‌வ‌த்துக்கு வெறுத்து போச்சு , ப‌ழ‌னியால் க‌ட்சிக்கு தான் கெட்ட‌ பெய‌ர் 😕

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, கிருபன் said:

இதைத்தான் விடுதலைப் புலிகள் கடைப்பிடித்தார்கள். ஆனால் 

புலிகள் கடைப்பிடித்தார்கள் 

தமிழக அரசியல் தலைவர்கள் கடைப்பிடித்தார்களா??

அதன் வினையை தான் தமிழர்கள் ஒட்டுமொத்தமாக தற்போது அனுபவிக்கிறார்கள்

தமிழகத்தின் சில விடயங்களை தமது பங்களிப்பு மாற்றும் என்று நம்மவர்கள் சிலர் நம்பி அதற்காக உழைத்தால் நமக்கேன் வியர்க்கணும்??? 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விசுகு said:

தமிழகத்தின் சில விடயங்களை தமது பங்களிப்பு மாற்றும் என்று நம்மவர்கள் சிலர் நம்பி அதற்காக உழைத்தால் நமக்கேன் வியர்க்கணும்??? 

அதுவா? பங்களிப்பு RSS இன் வளர்ப்பு பிள்ளைகளுக்கு போகுது என்பதால்தான். நேரடியாக பிஜேபிக்கு ஆதரவு கொடுத்தால் ஸ்டேட்டும், சென்றலும் கைக்குள் வந்துவிடும் என்று தெரியாமால் இடையில் நிற்கும் ஏஜென்ற்றுக்கு ஊத்தவேண்டாம் என்ற கரிசனைதான்😅

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, கிருபன் said:

அதுவா? பங்களிப்பு RSS இன் வளர்ப்பு பிள்ளைகளுக்கு போகுது என்பதால்தான். நேரடியாக பிஜேபிக்கு ஆதரவு கொடுத்தால் ஸ்டேட்டும், சென்றலும் கைக்குள் வந்துவிடும் என்று தெரியாமால் இடையில் நிற்கும் ஏஜென்ற்றுக்கு ஊத்தவேண்டாம் என்ற கரிசனைதான்😅

கருத்துக்கு வாதம் வைக்க வழியற்று தூற்றப்படும்  இது போன்ற சந்தேகம் என்பது பிசாசு போன்றது

அதற்கு மருந்து இதுவரை இல்லை இனியும் இல்லை

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, விசுகு said:

கருத்துக்கு வாதம் வைக்க வழியற்று தூற்றப்படும்  இது போன்ற சந்தேகம் என்பது பிசாசு போன்றது

அதற்கு மருந்து இதுவரை இல்லை இனியும் இல்லை

புலம்பெயர் நாடுகளில் இருந்து பங்களிப்பவர்கள் இந்திய உளவுத்துறையின் கண்ணுக்குள் மண்ணைத் தூவி பிடிபடாமல் செய்கின்றோம் என்று நினைக்கலாம். ஆனால் எல்லாம் அவர்களின் ஆசிர்வாதத்தோடுதான் நடக்கின்றது என்பதை அறியாதவர்களாக இருக்கின்றார்கள். 

யார் அதிகம் தமிழ்த்தேசியம் என்று கூவுகின்றார்களோ, அவர்களுக்கு கண்ணைமூடிக்கொண்டு ஆதரவும், நிதியும் அள்ளி கொடுப்பார்கள் நம்மவர்கள். அதை தொண்டை நரம்பு புடைக்க கூவுபவர்கள் நன்றாகவே தெரிந்துள்ளனர்😁

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, கிருபன் said:

சபாஷ் 

சொன்னாலும் குற்றமடா சொல்லாவிட்டாலும் குற்றமடா  
நேற்று ஒருவனிட்ட கேட்டன் மச்சான் சீமான்ற பேச்சு கேட்ட நீயாடா என அசிங்கமா திட்டுறான் தூசணத்தில  இங்க இலங்கையில் 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

சபாஷ் 

சொன்னாலும் குற்றமடா சொல்லாவிட்டாலும் குற்றமடா  
நேற்று ஒருவனிட்ட கேட்டன் மச்சான் சீமான்ற பேச்சு கேட்ட நீயாடா என அசிங்கமா திட்டுறான் தூசணத்தில  இங்க இலங்கையில் 

இலங்கையில் இருப்பவர்கள் சீன்மானை கண்டுகொள்வதில்லை. புலம்பெயர் நாடுகளில் தங்களையும் தங்கள் சந்ததியையும் நிலைப்படுத்தியவர்கள்தான் குளிர் அடிக்கும்போதெல்லாம் ஊருக்குப் போகவேண்டும், ஆனால் தமிழீழம் கிடைக்காமல் நிரந்தரமாக போகமுடியாதே என்ற அங்கலாய்ப்பில் இருப்பவர்கள்தான் தமிழகத்தில் தமிழ்த்தேசிய ஆட்சி வந்தால் அப்படியே தமிழீழம் கிடைக்கும் என்ற கனவில் உள்ளவர்கள்.

தமிழகத்தில் உண்மையான தமிழ்த்தேசியம் மற்றைய இனங்கள் மீதான வெறுப்பில் கட்டமைக்கப்படாமல் வரவேண்டும். ஆனால் அதை வரவிடாமல் செய்வதே இப்ப சீமானுக்கு கொடுக்கப்பட்ட வேலை. 

 • Like 2
 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

புலம்பெயர் நாடுகளில் இருந்து பங்களிப்பவர்கள் இந்திய உளவுத்துறையின் கண்ணுக்குள் மண்ணைத் தூவி பிடிபடாமல் செய்கின்றோம் என்று நினைக்கலாம். ஆனால் எல்லாம் அவர்களின் ஆசிர்வாதத்தோடுதான் நடக்கின்றது என்பதை அறியாதவர்களாக இருக்கின்றார்கள். 

யார் அதிகம் தமிழ்த்தேசியம் என்று கூவுகின்றார்களோ, அவர்களுக்கு கண்ணைமூடிக்கொண்டு ஆதரவும், நிதியும் அள்ளி கொடுப்பார்கள் நம்மவர்கள். அதை தொண்டை நரம்பு புடைக்க கூவுபவர்கள் நன்றாகவே தெரிந்துள்ளனர்😁

ஆசீர்வாதத்துடன் தொடர்பு உள்ளவர்களுக்கு அது தெரிந்திருக்கும் அல்லது ஆசீர்வாதத்துக்குள் கொண்டு வருமாறு கொடுக்கப்பட்ட வேலையாக இருந்தாலும் இருக்கலாம் என்று நினைக்க என்னால் முடிவதில்லை 

காரணம் எனக்கு ஆதாரமும் செயலும் வேண்டும்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

இந்திய புலனாய்வு, மற்றும்  சீமானை, தூக்கிப்பிடிப்பதால், இலங்கை புலனாய்வு துறையின் வேலை கண்ணுக்கு தெரியாமல் போகும் என்று சிலர் கருதலாம்.  

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

இலங்கையில் இருப்பவர்கள் சீன்மானை கண்டுகொள்வதில்லை. புலம்பெயர் நாடுகளில் தங்களையும் தங்கள் சந்ததியையும் நிலைப்படுத்தியவர்கள்தான் குளிர் அடிக்கும்போதெல்லாம் ஊருக்குப் போகவேண்டும், ஆனால் தமிழீழம் கிடைக்காமல் நிரந்தரமாக போகமுடியாதே என்ற அங்கலாய்ப்பில் இருப்பவர்கள்தான் தமிழகத்தில் தமிழ்த்தேசிய ஆட்சி வந்தால் அப்படியே தமிழீழம் கிடைக்கும் என்ற கனவில் உள்ளவர்கள்.

அதாவது தமிழீழம் புலம்பெயர் வயதானவர்களின் கனவு என்கிறீர்கள்??

எப்படி இருந்த கிருபன் இப்படி??

அடுத்தது குளிர் அடிக்கும் போது ஊருக்கு தான் போகவேண்டும் என்பது உலகை அறியாதவர் கிணற்று தவளைகளின் பார்வை. இதற்கு பதில் எழுதுவதே நேரத்தை வீணடிக்கும் வேலை.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கிருபன் said:

இலங்கையில் இருப்பவர்கள் சீன்மானை கண்டுகொள்வதில்லை. புலம்பெயர் நாடுகளில் தங்களையும் தங்கள் சந்ததியையும் நிலைப்படுத்தியவர்கள்தான் குளிர் அடிக்கும்போதெல்லாம் ஊருக்குப் போகவேண்டும், ஆனால் தமிழீழம் கிடைக்காமல் நிரந்தரமாக போகமுடியாதே என்ற அங்கலாய்ப்பில் இருப்பவர்கள்தான் தமிழகத்தில் தமிழ்த்தேசிய ஆட்சி வந்தால் அப்படியே தமிழீழம் கிடைக்கும் என்ற கனவில் உள்ளவர்கள்.

தமிழகத்தில் உண்மையான தமிழ்த்தேசியம் மற்றைய இனங்கள் மீதான வெறுப்பில் கட்டமைக்கப்படாமல் வரவேண்டும். ஆனால் அதை வரவிடாமல் செய்வதே இப்ப சீமானுக்கு கொடுக்கப்பட்ட வேலை. 

இங்கே இருப்பவர்களை கேட்டால் சீமான் பேசுகிறார் ஏன் எதற்க்காக என தெரியவில்லை என் கிறார்கள் ஆனால் அவர் வென்றால் இந்தியா என்ற கோட்டை தாண்ட மாட்டார்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அனந்தி சசிதரன், முன்னாள்... யாழ். கள உறுப்பினர் என்பது, எத்தனை பேருக்கு தெரியும். 🤔

எனது.... பார்வையில்,  அவர், ஒரு  "விளம்பரப் பிரியர்" என்றே நினைக்கின்றேன். :grin:

மற்றும் படி... அவரின் கருத்துக்களை, தூக்கி...  "குப்பை வாழிக்குள்"  போட வேண்டியவை. 🤣

 • Thanks 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

அடுத்தது குளிர் அடிக்கும் போது ஊருக்கு தான் போகவேண்டும் என்பது உலகை அறியாதவர் கிணற்று தவளைகளின் பார்வை. இதற்கு பதில் எழுதுவதே நேரத்தை வீணடிக்கும் வேலை.

எங்களை மாதிரி கனரி ஐலண்ட், கியூபா, பார்படேஸ், தாய்லாந்து,  அல்லது செளத் ஒஃப் ஸ்பெயின்/இத்தாலி என்று வெயில் குடிக்கப்போகின்றவர்கள் ஏன் குளிரும்போது ஊருக்குப்போகவேண்டும் என்று யோசிக்கப்போகின்றார்கள்! 😂

 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

அனந்தி சசிதரன், முன்னாள்... யாழ். கள உறுப்பினர் என்பது, எத்தனை பேருக்கு தெரியும். 🤔

எனது.... பார்வையில்,  அவர், ஒரு  "விளம்பரப் பிரியர்" என்றே நினைக்கின்றேன். :grin:

மற்றும் படி... அவரின் கருத்துக்களை, தூக்கி...  "குப்பை வாழிக்குள்"  போட வேண்டியவை. 🤣

உண்மையில் இந்த பேட்டி அவரை தேவையற்ற விடயங்களில் வீழ்த்தும் வஞ்சகத்தனமானது பாவப்படத்தான் முடியும்

6 minutes ago, கிருபன் said:

எங்களை மாதிரி கனரி ஐலண்ட், கியூபா, பார்படேஸ், தாய்லாந்து,  அல்லது செளத் ஒஃப் ஸ்பெயின்/இத்தாலி என்று வெயில் குடிக்கப்போகின்றவர்கள் ஏன் குளிரும்போது ஊருக்குப்போகவேண்டும் என்று யோசிக்கப்போகின்றார்கள்! 😂

உங்கள் பொறாமைக்கு அளவே இல்லையா

ஊருக்கு போனாலும் பொருமுகிறீர்கள் 

இத்தாலி போனாலும் பொருமுகிறீர்கள்?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, விசுகு said:

உண்மையில் இந்த பேட்டி அவரை தேவையற்ற விடயங்களில் வீழ்த்தும் வஞ்சகத்தனமானது பாவப்படத்தான் முடியும்

விசுகு... 
உண்மையில்.... நான், அனந்தி சசிதரனை,
காணாமல் போன... போராளிக் கணவனை, மற்றையவர்களைப் போல்... 
தேடிக்  கொண்டிருக்கும்... ஒரு அப்பாவி  பெண்ணாகவே பார்க்கின்றேன்.

ஆனால்... அவர், அரசியல்வாதி மாதிரி கதைப்பது..
"குருவி, தனது  தலையில்... பனங் கொட்டையை"   வைத்த மாதிரி உள்ளது.
 :grin:

 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

விசுகு... 
உண்மையில்.... நான், அனந்தி சசிதரனை,
காணாமல் போன... போராளிக் கணவனை, மற்றையவர்களைப் போல்... 
தேடிக்  கொண்டிருக்கும்... ஒரு அப்பாவி  பெண்ணாகவே பார்க்கின்றேன்.

ஆனால்... அவர், அரசியல்வாதி மாதிரி கதைப்பது..
"குருவி, தனது  தலையில்... பனங் கொட்டையை"   வைத்த மாதிரி உள்ளது.
 :grin:

அவர் அப்பாவி என்பதால் தான் திமுக வின் முகவர் வலையில் சிக்கினார்

 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இங்கே இருப்பவர்களை கேட்டால் சீமான் பேசுகிறார் ஏன் எதற்க்காக என தெரியவில்லை என் கிறார்கள் ஆனால் அவர் வென்றால் இந்தியா என்ற கோட்டை தாண்ட மாட்டார்

சீமான் ஒரு இந்தியப் பிரசை என்பதால் இந்திய அரசியற் சட்ட வரைவிற்குள் நின்றுதான் செயற்பட முடியும். அவரிடமிருந்து அதிகம் நாங்கள் எதிர்பார்க்க முடியாது, எதிர்பார்க்கவும் கூடாது. 

[ஆனால் மத்திய அரசிற்கு மாநில அரசுகள் அழுத்தம் கொடுக்க முடியும். மாநில அரசுகளின் ஒன்றியம்தான் (எழுத்தில்/எண்ணக்கருவில்) மத்திய அரசு. இந்த அடிப்படை அரசியற் புரிதல் இல்லாமல், சீமான் புடுங்குவார் என்பதும் சீமான் ஒன்றையும் புடுங்க முடியாது என்பதும் வெட்டிப் பேச்சு. MGR உதவ முடியும்/கருணாநிதி உதவ முடியும். ஆனால் சீமானால் உதவ முடியாதென்று கூறுவதை கொடுப்பிற்குள் சிரித்துக் கொள்ளத்தான் முடியும். ]

🤥

 • Thanks 1
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.