Jump to content

பிரித்தானியாவில், மிகப்பெரிய நீதித்துறை அநீதி ஒன்றுக்கு நீதி கிடைத்தது. 

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவில், மிகப்பெரிய நீதித்துறை அநீதி ஒன்றுக்கு நீதி கிடைத்தது. 

39 மேற்ப்பட்ட பிரித்தானிய தபால்துறை உப தபால் அதிபர்களை திருடர்கள் என்று பட்டமும் சுமத்தி, சிலரை சிறைக்கும் அனுப்பிய பெரும் வரலாற்று தவறுக்கு இன்று தீர்ப்பு வழக்கப்படுள்ளது.

நீதி தேடும் நெடும் பயணத்தில், சிலர் திருட்டு பட்டத்துடன், மறைந்தும் போனார்கள்.

சிலர், திருட்டு காரணமாக, காப்புறுதிகள் ரத்தானதால், தமது சொந்த வீடுகளை விற்பனை செய்தே வழக்கு பேசினார்கள். பலர் சமூகத்தினால் புறக்கணிக்கப்பட்டார்கள். அவர்கள் திருடர்கள் இல்லை என்று நினைத்த சில மட்டும், வீட்டு துப்பரவு, தோட்டம் துப்பரவு என்று வேலைகளை கொடுத்தார்கள். ஆனாலும் அவர்கள் மேல் ஒரு கண் வைத்துக் கொண்டே வேலை வாங்கினார்கள்.

என்ன நடந்தது?

தபால் துறை 1999ல் புதிய ஜப்பானிய மென்பொருள் நிறுவனமான fijutsu நிறுவிய horizon என்னும் IT சிஸ்டம் ஒன்றினை அறிமுகப்படுத்தியது. 

அது, நடந்த வியாபாரத்தினை கூடுதலாக நடந்ததாக கணக்கு காட்டி, கல்லாவில் இல்லாத பணத்தினை, அந்த வேலை ஆட்களும், கணவன் மனைவியாக வேலை செய்த இடங்களில், யார் உப அதிபராக இருந்தாரோ அவர்கள் அந்த பணத்தினை திருடி விட்டார்கள் என்று முறைப்பாடு செய்து சிறைக்கு அனுப்பியது.

கிழக்கு லண்டன் பகுதியில் ஒரு கோவில் நிர்வாக சபையில் இருந்த , தமிழர் ஒருவர் கூட சிறைக்கு போனார்.

சமுதாயத்தில், திருட்டு நாய்க்கள், என்று கேவலமான பெயர்களும், கிரிமினல் பதிவு காரணமாக வேறு வேலைகளும் எடுக்க முடியாத நரக வாழ்வு வாழ்ந்து வந்தார்கள் அவர்கள்.

சீமா மிஸ்ரா என்னும் பெண், இரண்டாவது குழந்தை பெறும் நிலையில் கூட சிறைக்கு அனுப்பப்பட்டார்.

இவ்வளவுக்கும், அவர்கள், தமக்கும், திருட்டுக்கும் சம்பந்தமே இல்லை என்று சொன்னபோது, அப்படியானால், அந்த பணம் எங்கே என்று கேள்வி கேட்கப் பட்டதே அன்றி, அவர்கள் முறைப்பாடான, புதிய IT சிஸ்டம் பிழையானது என்பதை ஏற்றுக் கொள்ளவே இல்லை.

அது, மிகவும் நம்பகமானது, அதில் பிழை இல்லை என்று, உயர் அதிகாரிகள் சாதித்தனர்.

ஒருவர், இருவர் என்றால் பரவாயில்லை, எப்படி 736 பேர் வரை (சிறிய தொகை உள்பட), புதிய தொழில் நுட்பம் வந்த பின்னர் சிக்கினார்கள் என்ற கேள்வி வந்தபோது, முந்தியும் நடந்து இருக்கிறது. நூதனமாக திருடி இருக்கிறார்கள், இப்போது பிடி பட்டு விட்டார்கள் என்ற ரீதியில் பதில் அளித்து இருந்தார்கள்.

ஆனால், இந்த IT சிஸ்டம் அறிமுகப்படுத்தியது முதல், பல bugs, error போன்ற பிரச்சினைகளினால் திணறியது.

Harjinder Butoy (left) hugs his father outside court

உன்னை நேர்மையாளனாகத்தான் வளர்த்தேன் என்று உலகுக்கு சொல்லத்தான், நான் உயிருடன் இருந்தேனடா என்கிறார்,  தனது மகனை ஆறுதல் படுத்தும் சீக்கிய தந்தை. 2008ல் 3 வருடங்கள் 8 மாதம் சிறை சென்ற, அவரது மகன் ஹாஜீண்டர், தபால் துறை, ஒரு 'தேசிய அவமானம்' என்றார், நீதிமன்றுக்கு வெளியே. எம்மை இப்படி அவமானப்படுத்திய, சம்பந்த பட்டவர்கள் தண்டிக்க பட்டே ஆகவேண்டும் என்றார் அவர், கோபத்துடன். 

Former post office worker Janet Skinner (centre) speaks to the media outside the Royal Courts of Justice, London, after having her conviction overturned by the Court of Appeal

இன்னுமோர் முன்னாள் உப தபால் அதிபர் ஜேனட் ஸ்கின்னர், 2007ம் ஆண்டில், £59,000 பணத்தினை திருடியதாக 9 மாதம் சிறை சென்றவர் -
நீதிமன்றுக்கு வெளியே, உறவினர்கள், நண்பர்களுடன்

மென்பொருள் மீதான நம்பகத்தன்மை குறித்து விசாரணை செய்த வேறு ஒரு நிறுவனம், அந்த மென்பொருள் தான், பிழையான கணக்குகளை காட்டி இருந்தது எனவும், அதனையே, தபால்துறையும், போலீசாரும், அரச வழக்கு தொடரும் துறையும், நீதிமன்றும் சார்ந்து இருந்தது என்றும் லண்டன் மேல் நீதிமன்றில் உறுதிப்படுத்திய பின்னர், தபால் துறை, £50மில்லியன் இடைக்கால இழப்பீடாக கொடுக்க சம்மதித்து இருந்தது.

தமது பெயர்களை, கிரிமினல் database ல் இருந்து நீக்க கோரி மேல்முறையீடு செய்து இருந்தனர் அவர்கள் அனைவரும்.

இன்று லண்டனின் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில், ஒரு வேலை தருபவராக, வேலை செய்பவர்களின் நலன் மீது கரிசனை கொள்ளாமல், ஒரு மென்பொருள் மீதான அபார நம்பிக்கையினால், தபால் துறை பெரும் தவறை செய்துள்ளது என்று தீர்ப்பு அளித்து உள்ளது..

தபால் துறையின் இன்றைய நிறைவேற்று அதிகாரி,நிக் ரீட், அவர்களது வலியினை தான் உணர்வதாகவும், தன்னை மிகவும் வருத்துகிறது, என்றும், கூறினாலும், சம்பந்த பட்ட அதிகாரிகள் தண்டிக்கப்பட்டே ஆகவேண்டும் என்று குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன.

பிரிட்டிஷ் பிரதமர், இந்த தீர்ப்பினை வரவேற்று செய்திக்குறிப்பினை வெளியிட்டு, அவர்களது, நீதிக்கான நீண்ட போராட்டம் வென்று உள்ளது என்று கூறி, பல படிப்பினைகளை இந்த விவகாரம் தந்துள்ளது என்று கூறி உள்ளார்.

இன்னும் பல மில்லியன் பவுண்ட் இழப்பீடுகள் கிடைக்கக்கூடும் ஆனாலும், அவமானத்துக்கும், சிறைவாழ்வுக்கும் அது ஈடாகாது.

இறந்து போய் விட்ட ஒரு சிறைக்கு சென்று வந்த ஒருவரின், விதவை கரென், தான் ஒரு போதுமே, அவர்களை மன்னிக்க போவதில்லை என்று கூறுகின்றார். வருத்தத்துடன் போராடி இறக்கும் போது கூட, குடும்பத்துக்கு பெரும் அவமானத்தை சேர்த்து வைத்து போகின்றேனே என்று தவித்தார் என்கிறார் அவர். 

***

பிரித்தானிய முடிக்குரிய வழக்கு தொடரும்  அமைப்பு, தபால் உயர் அதிகாரிகள், மீது கிரிமினல் வழக்கு தொடுப்பது குறித்து ஆராய்வதாக அறிவித்துள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Nathamuni said:

பிரித்தானியாவில், மிகப்பெரிய நீதித்துறை அநீதி ஒன்றுக்கு நீதி கிடைத்தது. 

39 மேற்ப்பட்ட பிரித்தானிய தபால்துறை உப தபால் அதிபர்களை திருடர்கள் என்று பட்டமும் சுமத்தி, சிலரை சிறைக்கும் அனுப்பிய பெரும் வரலாற்று தவறுக்கு இன்று தீர்ப்பு வழக்கப்படுள்ளது.

நீதி தேடும் நெடும் பயணத்தில், சிலர் திருட்டு பட்டத்துடன், மறைந்தும் போனார்கள்.

சிலர், திருட்டு காரணமாக, காப்புறுதிகள் ரத்தானதால், தமது சொந்த வீடுகளை விற்பனை செய்தே வழக்கு பேசினார்கள். பலர் சமூகத்தினால் புறக்கணிக்கப்பட்டார்கள். அவர்கள் திருடர்கள் இல்லை என்று நினைத்த சில மட்டும், வீட்டு துப்பரவு, தோட்டம் துப்பரவு என்று வேலைகளை கொடுத்தார்கள். ஆனாலும் அவர்கள் மேல் ஒரு கண் வைத்துக் கொண்டே வேலை வாங்கினார்கள்.

என்ன நடந்தது?

தபால் துறை 1999ல் புதிய ஜப்பானிய மென்பொருள் நிறுவனமான fijutsu நிறுவிய horizon என்னும் IT சிஸ்டம் ஒன்றினை அறிமுகப்படுத்தியது. 

அது, நடந்த வியாபாரத்தினை கூடுதலாக நடந்ததாக கணக்கு காட்டி, கல்லாவில் இல்லாத பணத்தினை, அந்த வேலை ஆட்களும், கணவன் மனைவியாக வேலை செய்த இடங்களில், யார் உப அதிபராக இருந்தாரோ அவர்கள் அந்த பணத்தினை திருடி விட்டார்கள் என்று முறைப்பாடு செய்து சிறைக்கு அனுப்பியது.

கிழக்கு லண்டன் பகுதியில் ஒரு கோவில் நிர்வாக சபையில் இருந்த ஒருவர் கூட சிறைக்கு போனார்.

சமுதாயத்தில், திருட்டு நாய்க்கள், என்று கேவலமான பெயர்களும், கிரிமினல் பதிவு காரணமாக வேறு வேலைகளும் எடுக்க முடியாத நரக வாழ்வு வாழ்ந்து வந்தார்கள் அவர்கள்.

சீமா மிஸ்ரா என்னும் பெண், இரண்டாவது குழந்தை பெறும் நிலையில் கூட சிறைக்கு அனுப்பப்பட்டார்.

இவ்வளவுக்கும், அவர்கள், தமக்கும், திருட்டுக்கும் சம்பந்தமே இல்லை என்று சொன்னபோது, அப்படியானால், அந்த பணம் எங்கே என்று கேள்வி கேட்கப் பட்டதே அன்றி, அவர்கள் முறைப்பாடான, புதிய IT சிஸ்டம் பிழையானது என்பதை ஏற்றுக் கொள்ளவே இல்லை.

அது, மிகவும் நம்பகமானது, அதில் பிழை இல்லை என்று, உயர் அதிகாரிகள் சாதித்தனர்.

ஒருவர், இருவர் என்றால் பரவாயில்லை, எப்படி 736 பேர் வரை (சிறிய தொகை உள்பட), புதிய தொழில் நுட்பம் வந்த பின்னர் சிக்கினார்கள் என்ற கேள்வி வந்தபோது, முந்தியும் நடந்து இருக்கிறது. நூதனமாக திருடி இருக்கிறார்கள், இப்போது பிடி பட்டு விட்டார்கள் என்ற ரீதியில் பதில் அளித்து இருந்தார்கள்.

ஆனால், இந்த IT சிஸ்டம் அறிமுகப்படுத்தியது, பல bugs, error போன்ற பிரச்சினைகளினால் திணறியது.

Harjinder Butoy (left) hugs his father outside court

உன்னை நேர்மையாளனாகத்தான் வளர்த்தேன் என்று உலகுக்கு சொல்லத்தான், நான் உயிருடன் இருந்தேனடா என்கிறார்,  தனது மகனை ஆறுதல் படுத்தும் சீக்கிய தந்தை. 2008ல் 3 வருடங்கள் 8 மாதம் சிறை சென்ற, அவரது மகன் ஹாஜீண்டர், தபால் துறை, ஒரு 'தேசிய அவமானம்' என்றார், நீதிமன்றுக்கு வெளியே. எம்மை இப்படி அவமானப்படுத்திய, சம்பந்த பட்டவர்கள் தண்டிக்க பட்டே ஆகவேண்டும் என்றார் அவர், கோபத்துடன். 

Former post office worker Janet Skinner (centre) speaks to the media outside the Royal Courts of Justice, London, after having her conviction overturned by the Court of Appeal

இன்னுமோர் முன்னாள் உப தபால் அதிபர் ஜேனட் ஸ்கின்னர், 2007ம் ஆண்டில், £59,000 பணத்தினை திருடியதாக 9 மாதம் சிறை சென்றவர் -
நீதிமன்றுக்கு வெளியே, உறவினர்கள், நண்பர்களுடன்

மென்பொருள் மீதான நம்பகத்தன்மை குறித்து விசாரணை செய்த வேறு ஒரு நிறுவனம், அந்த மென்பொருள் தான், பிழையான கணக்குகளை காட்டி இருந்தது எனவும், அதனையே, தபால்துறையும், போலீசாரும், அரச வழக்கு தொடரும் துறையும், நீதிமன்றும் சார்ந்து இருந்தது என்றும் லண்டன் மேல் நீதிமன்றில் உறுதிப்படுத்திய பின்னர், தபால் துறை, £50மில்லியன் இடைக்கால இழப்பீடாக கொடுக்க சம்மதித்து இருந்தது.

தமது பெயர்களை, கிரிமினல் database ல் இருந்து நீக்க கோரி மேல்முறையீடு செய்து இருந்தனர் அவர்கள் அனைவரும்.

இன்று லண்டனின் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில், ஒரு வேலை தருபவராக, வேலை செய்பவர்களின் நலன் மீது கரிசனை கொள்ளாமல், ஒரு மென்பொருள் மீதான அபார நம்பிக்கையினால், தபால் துறை பெரும் தவறை செய்துள்ளது.

தபால் துறையின் இன்றைய நிறைவேற்று அதிகாரி,நிக் ரீட், அவர்களது வலியினை தான் உணர்வதாகவும், தன்னை மிகவும் வருத்துகிறது, என்றும், கூறினாலும், சம்பந்த பட்ட அதிகாரிகள் தண்டிக்கப்பட்டே ஆகவேண்டும் என்று குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன.

பிரிட்டிஷ் பிரதமர், இந்த தீர்ப்பினை வரவேற்று செய்திக்குறிப்பினை வெளியிட்டு, அவர்களது, நீதிக்கான நீண்ட போராட்டம் வென்று உள்ளது என்று கூறி, பல படிப்பினைகளை இந்த விவகாரம் தந்துள்ளது என்று கூறி உள்ளார்.

இன்னும் பல மில்லியன் பவுண்ட் இழப்பீடுகள் கிடைக்கக்கூடும் ஆனாலும், அவமானத்துக்கும், சிறைவாழ்வுக்கும் அது ஈடாகாது.

இறந்து போய் விட்ட ஒரு சிறைக்கு சென்று வந்த ஒருவரின், விதவை கரென், தான் ஒரு போதுமே, அவர்களை மன்னிக்க போவதில்லை என்று கூறுகின்றார். வருத்தத்துடன் போராடி இறக்கும் போது கூட, குடும்பத்துக்கு பெரும் அவமானத்தை சேர்த்து வைத்து போகின்றேனே என்று தவித்தார் என்கிறார் அவர். 

நானும் இன்றைய செய்தியில் பார்த்தேன். காலம் தாழ்த்தியேனும் நீதி கிடைத்திருக்கிறது. இதற்கு நீதி பெற இவர்கள் பல வருடங்கள் போராட வேண்டி இருந்தது. இவ்வளவு பேர் சிறை செல்லும் போது, தபால் நிறுவனம் தனது முதுகை ஒருக்கால் தடவி பார்த்திருக்கலாம். இந்த மென்பொருளை 90களில் தயாரித்த நிறுவனம் ICL என்ற பெரிய கணனி நிறுவனத்தை வாங்கி இருந்தார்கள். இதில் ஆச்சரியம் போலீசும் அரசும் மாத்தி யோசிக்க தவறி விட்டார்கள். பலரின் வாழ்க்கை பாழாகி விட்டது.தபால் அதிபர் என்பது ஒரு சமூக மதிப்புள்ள தொழில் என்று சென்ற இவர்கள் சேறடிக்க பட்டார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொம்பியூட்டர் பிழைவிடாது எண்டதும் அறுந்து விழுந்து போச்சுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23/4/2021 at 18:36, குமாரசாமி said:

கொம்பியூட்டர் பிழைவிடாது எண்டதும் அறுந்து விழுந்து போச்சுது.

அப்ப தமிழ்நாட்டிலை மீளவும் அ.தி.மு.க வரும்....அப்பிடித்தானே

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சிறப்பான பதிவுகளைத் தேடி எடுத்துத் தருகிறீர்கள் நன்றி பிரியன்..........!  👍
    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
    • உந்தாள் முந்தியும் ஒருக்கால் கம்பி எண்ணினதெல்லோ? 
    • “அந்த மக்களிடம் அற்ப விலைக்கு வாங்கி, புலம் பெயர் மக்களிடம் அறாவிலைக்கு விற்கும் கந்துவட்டி வகை வியாபாரிகளை” இதனை எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்? உதாரணமாக ஓர் பொருளின் சிறீலங்கா v பிரித்தானிய விலையை கூறுங்கள். எனக்கு தெரிந்தவர்களிடம் அதனை விசாரித்து கூறுகிறேன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.