Jump to content

நான் பார்த்த நல்ல படங்கள்!


Recommended Posts

அண்மையில் Will Smith நடித்த "The Pursuit of Happyness" என்ற ஆங்கில படம் பார்த்தேன். இது ஒரு உண்மைக்கதையை தழுவி எடுக்கப்பட்ட படம். அத்துடன் முதன் முதலாக Will Smith சோகமாக நடித்த படம்

the-pursuit-of-happiness-wi.gif

கிரிஸ் ஒரு சாதாரண விற்பனை பிரதிநிதி, வேலை பார்க்கும் மனைவி, பள்ளிக்கு போகும் ஒரே மகன் மற்றும் வழமையான நடுத்தரவர்க்கத்தின் சுமைகள் என அவன் வாழ்க்கை படகு மெதுவாக நகருகிறது. கையில் இருந்த பணத்தை எல்லாம் கொடுத்து ஒரு தொகை மருத்துவ உபகரணங்களை தன் வீடு முழுவதும் வாங்கிக் குவிக்கிறான், அவற்றை தன்னால் விற்க முடியும் அதனால் தன் வாழ்க்கை பாதை மாறும் என்ற நம்பிக்கையுடன். அது அவனது வாழ்க்கை பாதையை மாற்றியது என்னவோ உண்மைதான். அனால் அது அவன் நினைத்த மாதிரியல்ல!

வாங்கிய பிறகு தான் அவன் தெரிந்து கொள்கிறான் அவை ஒன்றும் அவசியமாக தேவைப்படும் நவீன கருவியல்ல என்பதை. வலுக்கும் குடும்பச்சுமைக்கு தோள் கொடுக்க விரும்பாத மனைவி சுயநலத்துடன் அவனை விட்டுப் பிரியத் தீர்மாணிக்கிறாள். மகனை விட்டுப் பிரிய மறுக்கும் கிரிஸ்சிடம் அவனையும் விட்டுச் செல்கிறாள். (எங்கள் நெடுக்ஸ் குறிப்பிடும் பெண்னைப் போல!)

அறியாச் சிறுவனை கஸ்டம் தெரியாமல் வளர்க்க பாடுபடுகிறான் கிறிஸ். மகனுடனும், வாங்கிய மருத்துவ உபகரணங்களுடனும், ஒருவேளை உணவுக்குக் கூட கையில் காசில்லாமல் நடுத்தெருவுக்கு வரும் கிரிஸ், ஒரு நாள் இரவை களிப்பதற்கு பொது மலசலகூடத்தை தெரிவு செய்கிறான். எதற்கு எடுத்தாலும் கேள்வி கேட்கும் சிறுவனிடம் அதை எப்படி அவன் மனகோணாமல் சொல்லிப் புரிய வைப்பது என்ற இடத்தில் என் மனதை கொள்ளை கொண்டு விடுகிறான். தொடர்ந்து போராடி வெற்றியும் பெறுகிறான்!

Probably இற்கும் Possibly இற்கும் இடையிலான வித்தியாசத்தை சிறுவனுக்கு இப்படி விளக்குகிறான் கிறிஸ்:

Chris: Probably means there's a good chance. Possibly means we might or we might not.

Son: Okay.

Chris: So, what does probably mean?

Son: It means we have a good chance.

Chris: And what does possibly mean?

Son: I know what it means! It means we're not going to the game.

காரணம்? படத்தை பாருங்கள்!

The Pursuit of Happyness தவறாமல் இதனை பார்த்து விட்டு எப்படி இருந்தது என்று சொல்லுங்களேன்!

Link to comment
Share on other sites

இப் படத்தில் இன்னுமொரு சிறப்பம்சம், இதில் Will Smith இன் மகனாக நடிக்கும் Jaden Smith உண்மையிலேயே Will Smith இன் மகன் என்பதாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் இன்னும் பார்க்கவில்லை. ஆனால் வில் ஸ்மித்தின் பேட்டி சில மாதங்களுக்கு முன்னைய ரீடர்ஸ் டைஜஸ்டில் வந்திருந்தது. தனிப்பட்ட ரீதியாகவும் அவர் தன்னம்பிக்கைக்கு முதலிடம் கொடுக்கும் மனிதர் என்று புரிகிறது. இத்திரைப் பட விளம்பரத்தின் போது ஒளிபரப்பான காட்சித் துண்டொன்று என்னை மிகவும் கவர்ந்தது:

அழுக்கான உடைகளுடன் வில் ஸ்மித் வேலை நாடி நேர்முகப் பரீட்சையில் போய் உட்காருகிறார்.

நேர்முகம் காண்பவர்: அழுக்குச் சேர்ட்டுடன் வரும் ஒருவனுக்கு வேலை கொடுத்தால் வெளியே என்ன நினைப்பார்கள் என்னைப் பற்றி?

வில் ஸ்மித்: நீங்கள் வேலை கொடுத்தவன் மிகத்தரமான காற்சட்டை போட்டிருந்தான் என நினைப்பார்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.