Jump to content
 • Veeravanakkam
 • Veeravanakkam
 • Veeravanakkam

பிரித்தானியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க கோரி நடைபயணம் ஆரம்பம்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க கோரி நடைபயணம் ஆரம்பம்

 
12-54.jpg A Tamil Tiger flag flies in front of the Houses of Parliament as Tamil supporters demonstrate on Parliament Square, following news that the leader of Sri Lanka's rebel Tamil Tigers was killed by army troops today, crushing their final resistance.
 23 Views

பிரித்தானியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவதற்கு அழுத்தங்களைப் பிரயோகிக்கும் வகையில் மக்கள் விழிப்பூட்டல் நடைபயணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடைக்கு எதிராக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்திருந்த சட்டப் போராட்டத்தில், தடையினை மறுபரிசீலனை செய்ய உட்துறை அமைச்சுக்கு 90 நாட்கள் கால அவகாசத்தை சிறப்புத் தீர்ப்பாயம் வழங்கியிருந்தது.

இந்தக் காலக்கெடு நெருங்கி வருகின்ற நிலையில் பிரித்தானியா வாழ் தமிழர்கள் தடை நீக்கத்திற்கான தமது விருப்பினை அரசாங்கத்திடம் வெளிப்படுத்தும் வகையில்,‘தடை நீக்கத்திற்கான நடைபயணம் (WALK FOR LIFT THE BAN)’ எனும் முழக்கத்துடன் வேல்ஸ் நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து பிரித்தானிய பிரதமர் அலுவலகம் வரையிலான (Wales to Westminster – W2W) இந்த மக்கள் விழிப்பூட்டல் நடைபயணம் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கபட்டுள்ளது.

 

https://www.ilakku.org/?p=48098

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளின் தடையை நீக்கக் கோரி பிரித்தானியாவில் ஆரம்பமான நடைபயணம்

 

பிரித்தானியாவில் WALK FOR LIFT THE BAN எனும் நடைப்பயணம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நாடுகடந்நத தமிழீழ அரசாங்கம் இந்த நடை பயணத்தை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த நடை பயணம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள ஏற்பாட்டாளர்கள், ‘பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடைக்கு எதிராக தொகுக்கப்பட்ட சட்டப்போராட்டத்தின் தொடர்ச்சியாக உள்துறை அமைச்சுக்கு விசேட தீர்ப்பாயம் மறுபரிசீலனை செய்ய வழங்கியிருந்த 90 நாட்கள் நெருங்கி வருகின்ற நிலையில் பிரித்தானியா வாழ் தமிழர்கள் தங்களின் அபிலாசைக்கான தீர்வை நோக்கி இணையவழி கையெழுத்து போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

இவ்வாறாக பிரித்தானிய மக்களால் அவரவர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பும் மின்மடல்கள் அவர்களை மேலும் பெரும் நெருக்கடிக்குள் உட்படுத்தியிருக்கின்றது. இதனை கருத்திற்கொண்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இதற்கான பரப்புரைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

 

தொகுதிவாரியாக பரப்புரைகளை மேற்கொண்டு வரும் அதே நேரம் தமிழ்மக்கள் ஆதரவு வேண்டியும் விழிப்புணர்விற்க்காகவும், மேலும் அழுத்தம் கொடுப்பதன் மூலம் தீர்வை நோக்கி பயணிக்க முடியம் என்பதை கருத்திற்கொண்டு WALK FOR LIFT THE BAN எனும் நடைப்பயணத்தை ஆரம்பித்துள்ளோம்.

இந்த நடைப்பயணம் 23.04.2021 வெள்ளிக் கிழமை காலை 10மணியளவில் வேல்ஸ் நாடாளுமன்ற தொகுதியல் இருந்து பிரித்தானிய பிரதமர் அலுவலக நுழைவாயில் முன்பாக (no 10 Downing Street) நிறைவடைவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தார்கள்.
IMG_24042021_061516_700_x_400_pixel.jpg?IMG_24042021_061746_700_x_400_pixel.jpg?

IMG_24042021_061735_700_x_400_pixel.jpg?

IMG_24042021_061728_700_x_400_pixel.jpg?

 

https://www.meenagam.com/விடுதலைப்-புலிகளின்-தடைய/

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • விஜய் தணிகாசலம் அவர்களுக்கு நன்றியும் பாராட்டுகளும்..........!   🌹 எறும்பூர கல்லும் தேயும்........!
  • ஈழ அகதிகளும், கொரோனாவும், தமிழக முகாம்களும் – முதல்வரின் கவனத்திற்கு! May 15, 2021 தமிழ்நாட்டில் ஈழ அகதிகள் கொரோனாவிற்கு கொட்டகைகளில் தங்க வைக்கப்படுகின்றனரா ?. ந.லோகதயாளன். தமிழ்நாட்டில் ஈழ அகதிகள் தங்கியுள்ள அகதிகள் முகாமில் இதுவரை 7 முகாம்களில கொரோனா தொற்று பரவியுள்ளபோதும் முகாம்களிலேயே கொட்டில்கள் அமைக்கப்பட்டு தனிமைப்படுத்தல் வழங்கப்படுவதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் நூற்றுக் கணக்காண அகதிகள் முகாமில் ஈழ அகதிகள் 75 ஆயிரம் பேரளவில் தங்கியுள்ளனர். இவ்வாறு ஈழ அகதிகள் தங்கியுள்ள பல முகாம்களில் இருந்து தப்பித்து மீண்டும் தாயகம் திரும்புவது அதிகரிக்கும் நிலையில் தமுழ்நாட்டில் இதுவரை 7 முகாம்களில் உள்ள பலர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுட்டிக்காட்டப்படுகின்றமையும் ஓர் காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. ஈழ அகதிகள் முகாமிலும் கொரோனா பரவியுள்ளது. ———————-_- இதுவரை மண்டபம் முகாம், திருச்சி கொட்டப்பட்டி முகாம், உட்பட 7 முகாம்களில் அதிகமாகவும் மேலும் இரு முகாமில் ஒரு சிலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் கொரோனா தொற்றாளர்கள் வைத்தியசாலைக்கு சென்றாலும் அவர்களது குடும்பம் அந்த நெருங்கிய முகாம்களிலேயே தனியான கொட்டகைகளில் தங்க வைக்கப்படுவதாகவும் இதேநேரம் தற்போது முகாம்களில் தனியாக அமைக்கப்பட்ட தனிமைப்படுத்தல் கொட்டகைகளில் 21 பேர் கொரோனா தொற்றுடன் வாழ்வதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது. இவ்வாறு ஒரே வளாகத்திற்கு உள்ளேயே அருகில் கொட்டகை அமைத்து கொரோனா தொற்றாளர்களை தங்க வைத்திருப்பதே தமக்கு பெரிய உளவியல் தாக்கமாகவும் அச்சமாகவும் உள்ளது. ஈழத்தில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக அனைத்து உடமைகளையும் இழந்து உயிர் தப்பினால் போதும் என்பதற்காக ஆபத்தான பயணம் மூலம் தமிழகம் சென்ற போதும் தற்போது கொடிய நோயில் அகப்படுவோமோ என்ற அச்சமே மீண்டும் தாயகம் திரும்பினால் என்ன என்ற மனக் குழப்பத்திற்குள் தள்ளுகின்றது. முகாம்களில் வாழும் ஈழத் தமிழரகளின் நிலமை. இந்தியாவில் நாம் வாழும் முகாம்களானாலும் வெளியில் தங்கியுள்ளவர்களானாலும் இன்றும் இலங்கையில் எமது உறவுகள் வாழும் சுதந்திரத்தை விடவும் நின்மதியாக வாழ்வதாகவே எண்ணுகின்றோம். இருப்பினும் இங்கும் பல பிரச்சணைகள், நெருக்கடிகள் இருக்கின்றன. இங்கே மின்சாரம், வைத்தியம் இலவசம் அதேநேரம் ஒருவருக்கு நாள் ஒன்றிற்கு 150 ரூபா ( இந்திய நாணயம் ) வாழ்வாதாரத்திற்கு போதுமானது. ஆனால் இந்த தொகையில் இலங்கையில் வாழ முடியாது. இதேநேரம் எமது பிள்ளைகள் இந்தியாவில் கற்றதனால் இந்திய சான்றிதழுடன் இலங்கையில் தொழில் செய்ய முடியாது. இவற்றினாலேயே தாயகம் திரும்ப மனம் இன்றி இருந்தோம். இருப்பினும் தற்போது கொரோனா மீண்டும் தாயகம் நோக்கி இழுக்கின்றது என்கின்றனர். தமிழ்நாட்டில் உள்ள மண்பம் முகாம் மட்டுமல்ல பல முகாம்கள் எமது பகுதி மாட்டுக்கொட்டில் போன்றே இன்றும் உள்ளது. அதாவது 1990ஆம ஆண்டு இருந்த கட்டிடங்கள் அப்படியே இருப்பினும் எமது உயிரை பாதுகாப்பதற்காக வந்து பின்னர் தற்போது 20, 30 ஆண்டுகால வாழ்வியல முறமையாகிவிட்டது என்கின்றனர். திருகோணமலையை சேர்ந்த மற்றொருவரின் ஆதங்கம். —–++++++—— திருகோணமலையை சொந்த இடமாக கொண்ட 31 வயது பெண்மனி தகவல் தருகையில் நான் மன்னாரில் திருமணம் செய்து 12 ஆண்டுகளிற்கு முன்பு தமிழகம் வந்து முகாமில் வாழும் நிலையில் இரு பிள்ளைகளும் முகாமிலேயே பிறந்து இன்று கல்வி கற்கின்றனர். இவ்வாறுவாழும் எமக்கு குடும்பத் தலைவருக்கு மாதம் ஒன்றிற்கு ஆயிரம் ரூபாவும் அடுத்தவருக்கு 750 ரூபாவும சிறுவர்களிற்கு 400 ரூபா என்ற அடிப்படையில் தற்போது மாதாந்தம் 2 ஆயிரத்து 550 ரூபா கிடைக்கும் ஆனால் மாதம் 12 ஆயிரம் ரூபாவில் இருந்து 15 ஆயிரம் ரூபா குடும்பச் செலவிற்கு வேண்டும். ஏனெனில் ஒரு கிலோ மீன் 250 ரூபா விற்பனையாகும்போது 4 பேர் கொண்ட எமக்கு 2 ஆயிரத்து 550 ரூபா ஒரு கிழமைக்கே போதுமானது. இருந்தபோதும் கணவர் வெளியில் கூலி வேலை கிடைத்தால் செல்வதன் காரணமாகவே திருப்தியாக உணவு கிடைக்கின்றது. இந்த அவலம் வேண்டாம் என நாடு திரும்ப பதிவு செய்துள்ளேன். ஆனால் கொரோனா தடையாகவுள்ளது என்றார். எம்முடன் உரையாடிய மூவரும் தமது பெயர் அடையாளம் வெளிவருவதனை விரும்பவில்லை. இந்திய முகாம் அதிகாரிகளின் பதில். ——+-++++—————– இதேநேரம் தமிழக முகாம்களில் இருப்போரை நாடு திரும்ப விரும்பினால் அனுப்ப தயாராகவே உள்ளோம். அதற்காக ஒபர் நிறுவனத்தின் ஊடாக யு.என்.எச்.சி ஆர் ஊடாக விமானத்தில் சகல செலவும் இலவசமாகவே அனுப்பி வைக்கப்படுகின்றனர். தற்போதைய கொரோனாவினால் மட்டுமே விமான சேவை இடம்பெறவில்லை. திருட்டுத் தனமாக கடல்வழியாக படகுகளில் செல்பவர்களில் அதிகமானோர் இந்தியாவில் இருந்து வெளிதாடுகளிற்கு தப்பிச் செல்ல முயன்றவர்கள், திருட்டுத் தனமாக இந்திய கடவுச் சீட்டு பெற முயன்றோர் அல்லது ஏதாவது குற்றம் புரிந்தவர்கள் எனில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்நும்போது வழக்குச் செலவு, சட்டத்தரணி செலவு , இதற்கான போக்கு வரத்து என்பன இலவசமாக வழங்கப்பட மாட்டாது. இதனால் இந்த வழக்குகளிற்கு அதிக செலவு ஏற்படும் நிலமையிலேயே படகுகள் மூலம் இலங்கைக்கு தப்பிச் செல்கின்றனர் என இந்திய முகாம் அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.     https://globaltamilnews.net/2021/160912/
  • நினைவு தூபியை உடைப்பதென்பது அநாகரிகத்தின் உச்சம் -எம்.ஏ. சுமந்திரன்    37 Views முள்ளிவாய்க்கால் நினைவு தூபி உடைக்கப்பட்டதை தமிழ் தேசிய கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், இச் செயலானது வெறுமனே கல்லிலான ஒரு தூபியை மட்டும் உடைக்கவில்லை, இலட்சக்கணக்கான தமிழ் மக்களின் இதயங்களையும் தகர்த்திருக்கிறது. மரணித்தவர்களின் நினைவு தூபியை உடைப்பதென்பது அநாகரிகத்தின் உச்ச கட்டம். இராணுவமும்  காவல்துறையினரும்  அந்த இடத்திற்கு  சென்று  பார்வையிட்ட பின்னர் தான் இது செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் போரில் இறந்தவர்களை நினைவு கூருவதற்கு எவரும் தடை விதிக்க முடியாது. அந்த நினைவுகளை எந்த உத்தரவும் மழுங்கடிக்கவும் முடியாது. நாம் முள்ளிவாய்கால் நினைவேந்தலை செய்வோம் – எவராலும் தடுக்க முடியாதபடி செய்வோம்” என்றார்.     https://www.ilakku.org/?p=49563
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.