Jump to content
 • Veeravanakkam
 • Veeravanakkam
 • Veeravanakkam

எங்கள் ஊர் சூப்பர் உணவுகள்


Recommended Posts

இதற்கான சரியான தமிழ் தெரியவில்லை. சூப்பர் உணவுகள் என்று தேடிப் பார்த்ததில் தமிழில் சரியான தகவல்கள் கிடைக்கவில்லை.

unavu1.jpg

ஐரோப்பாவில் goji, Acai, Cranberry, Chia, Linseed, Quinoa என்று சூப்பர் உணவுகளின் பெரிய பட்டியல் நீள்கிறது. இவை அதிகமாக சீனா, தென்னமெரிக்கா போன்ற தூர நாடுகளிலிருந்து தருவிக்கப்படுகின்றன. அண்மைக் காலமாக வியாபார ரீதியிலும் மிகைப்படுத்தப்பட்ட விளம்பரங்களால் இந்த உணவுகளின் விற்பனை பெருகி வருகிறது.

இது நான் அறிந்த அறிவியல் தரவுகளின் அடிப்படையில் எழுதப்பட்டது. தவறான தகவல்கள் இருந்தால் சுட்டிக் காட்டுங்கள். கவிதையின் பொருள் உணர்ந்து இரசிப்பதுபோல் உண்ணும் உணவில் என்னவெல்லாம் உண்டு என்று புரிந்து மகிழ்வோடு உண்பது மனரீதியாக உடலுக்கு நன்மையே தரும்.

 

சூப்பர் உணவு என்றால் என்ன ?

ஒவ்வொரு பழங்கள் காய்கறிகள் தானியங்கள் கிழங்குகளிலும் பலவிதமான விற்றமின்கள் தாதுப்புகள் புரதங்கள் என உடலுக்குத் தேவையான பல்வேறு மூலக்கூறுகள் உள்ளன. ஆனால் சில உணவுகளில் தனித்தன்மையாக ஏதாவதொரு மூலக்கூறு ஆச்சரியமான முறையில் அதிகமாக இருக்கும். அல்லது பலவிதமான கிடைத்தற்கரிய மூலக்கூறுகளைக் கொண்டிருக்கும், எமக்குச் சில குறிப்பிட்ட மூலக்கூறுகள் தேவையாக இருக்கும்போது அல்லது குறைவாக இருக்கும்போது சூப்பர் உணவுகளை இனம்கண்டு எமக்குத் தேவையான வகையில் அதனை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். சில நோய்களைக் கட்டுப்படுத்தக் கூடிய மூலக்கூறுகளை இயற்கையான இந்த உணவுகள் மூலம் உட்கொண்டால் மருந்துகளின் தேவையையும் குறைக்க முடியும்.

பெரும்பாலும் ஒரு உணவில் உள்ள Antioxidant (இதற்கும் தமிழ் தெரியாது) இன் அளவைப் பொறுத்து அது சூப்பர் உணவாகக் கருதப்படுகிறது.

 

Antioxidant என்றால் என்ன ?

ஊடலில் கோடிக்கணக்கான மூலக்கூறுகளுக்கிடையே தொடர்ச்சியாக இரசாயன செயற்பாடுகள் நடக்கின்றன. இவ்வாறான மாற்றங்களின்போது எதோ காரணங்களுக்காக சில மூலக்கூறுகள் சரியான முறையில் பகுக்கப் படாமல் இலத்திரன் ஒன்று அதிகமாக அல்லது குறைவாக இருக்கும்படியாக விடுவிக்கப்படுகின்றன.

உதாரணமாக, இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் மூலக்கூறு ஒன்று சுவாசப்பை மூலம் உள்வாங்கப்பட்ட ஒட்சிசன் மூலக்கூறோடு சேர்ந்து நீர் மூலக்கூறாகவும் காபனீரொட்சைட்டாகவும் பிரிந்து உடலுக்குத் தேவையான சக்தியை வெளியிடும். ஏதோ காரணங்களுக்காக இந்த இரண்டும் சரியாகப் பகுக்கப்படாமல் ஒரு இலத்திரனை அதிகமாகப் பெற்றுக் கொண்ட மூலக்கூறொன்று வெளியாகிறது. இதை Free radicals என்று சொல்லப்படுகிறது. புகைத்தல் மாசுபட்ட காற்று போன்றவற்றாலும் இவ்வாறான மூலக்கூறுகள் உடலினுள் செல்லலாம்.

இந்த Free radicals மூலக்கூறுகள் கட்டுப்பாடிழந்து மூர்க்கத்தனமாக அருகிலுள்ள கலங்களைத் தாக்கும். இவ்வாறான தாக்குதலுக்குள்ளான தசை தோல் இதயம் போன்றவற்றிலுள்ள கலங்கள் சேதமாவதுடன் மரபணுக்களும் பாதிப்புள்ளாகும். இதுவே உடல் முதுமையடையவும் காரணமாகக் கூறப்படுகின்றது.

எமது உடல் தேவையற்ற இந்த Free radicals களை அழிக்க வேண்டும்.  அதற்காக எமது உடல் வேறு சில மூலக்கூறுகளைத் தேவையான இடங்களுக்கு அனுப்பிவைக்கிறது. இந்த மூலக்குறுகள் Antioxidant என்று அழழைக்கப் படுகின்றது. இவற்றின் பணி Free radicals  மூலக்கூறுகளை ஈர்த்து அழிப்பதாகும்.

Antioxidant மூலக்கூறுகள் தனித்துவமான அமைப்புடையவை அல்ல. Free radicals களை அழிக்கும் திறனுள்ள அனைத்தும் இந்த Antioxidant இனுள் அடங்கும்.

இதோ முக்கியமான சில Antioxidant மூலக்கூறுகள்

 • vitamin C
 • beta-carotene
 • vitamin A
 • selenium
 • vitamin E
 • zinc
 • flavonoids
 • copper

இன்னும் பல.  ஆர்வக் கோளாறில் மேல்குறிப்பிட்டவற்றை அளவுக்கதிகமாக உட்கொள்ளக் கூடாது. சில மூலக்கூறுகள் அளவுக்கதிகமானால் நச்சுத் தன்மையையானவை. வேறுசில புற்றொநோய் போன்றவற்றையும் ஊக்குவிக்கும்.

 

சூப்பர் உணவுகள் எவை ?

Antioxidant உணவுகளை மட்டுமல்லாது வேறு பல உடலுக்கு ஆரோக்கியமான உணவுகளும் இதனுள் அடங்கும். இவற்றை வெகு தூரத்தில் தேடாமல் எங்கள் ஊரிலும் சாராரணமாகக் கிடைக்கும் உணவுகளிலும் காணலாம். அவற்றை அறிவியல் ரீதியாக இனம்காண்பதே இத் திரியின் நோக்கம்.

பித்தத்தைப் போக்கும், சூட்டைக் குறைக்கும் புற்றுநோயைத் தீர்க்கும் என்பது போன்ற ஆதாரமில்லாத கருத்துக்களைத் தவிர்த்து உங்களுக்குத் தெரிந்த அறிவியல் ரீதியான தரவுகளை மட்டும் தாருங்கள்.

இவ்வாறான தரவுகளை நீங்கள் தேடிப் போகும்போதுதான் ஒரு உணவிலுள்ள உண்மையான ஆற்றலை அறிந்து கொள்ள முடியும். உணவுக் கூறுகளின் தரவுகள் தெரியாமல் அது குறிப்பிட்ட நோய்களைத் தீர்க்கும் என்ற காரணத்தினால் அதனை உட்கொள்ளும்போது அதே உணவிலுள்ள வேறு கூறுகள் வேறு உபாதைகளைத் தரலாம்.

பல தமிழ் இணையத் தளங்களிலும் காணொலிகளிலும் பல போலியான தகவல்கள் பரந்து காணப்படுகின்றன. மருந்தே உணவு என்ற உன்னதமான கருத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் பணம் சம்பாதிப்பதற்காகப் பரப்பப்படும் போலித் தகவல்கள் அகற்றப்பட வேண்டுமானால் உணவு பற்றிய அறிவியல் தகவல்களை நாம் நாட வேண்டும்.

இவை பற்றிய மேலதிகத் தெரிந்தவர்கள் தமது கருத்துக்களைப் பரிமாறலாம்.

ஒருசிலவற்றை ஆரம்பித்து வைக்கிறேன்.

***

 

நெல்லிக்காய்

unavu2.jpg

பலரும் தேசிக்காய் அல்லது தோடம்பழத்தில்தான் விற்றமின் சீ அதிகமாக உள்ளது என்று நம்புகின்றனர். மாற்றீடாக வேறு பல உணவுகள் உள்ளன. உதாரணமாக கறிமிளகாயில் தோடம்பழத்தை விட அதிகமாக உள்ளது. ஆனால் சமைக்கும்போது விற்றமின் சீ ஏறத்தாள 60% அழிந்துவிடும்.

100 கிராம் தோடம்பழத்தில் ஏறத்தாள 55 மில்லி கிராம் விற்றமின் உள்ளது.

100 கிராம் நெல்லிக்காயில் 700 மில்லி கிராமுக்கு மேல் உள்ளது.

ஓரு நாளைக்கு ஒருவருக்கு 110 மில்லிகிராம் தேவைப்படும். ஏனைய உணவுகளிலிருந்தும் விற்றமின் சீ கிடைப்பதால் பாதி நெல்லிக்காய் ஒரு நாளைக்குப் போதுமானது.

அதிகமான விற்றமின் சீ உடலுக்கு ஆபத்தில்லை. விற்றமின் சீ உடலில் சேமித்து வைக்கப்படுவதில்லையாதலால் மிதமிஞ்சியது சிறுநீர் மூலம் வெளியேற்றப்படும்.

2016 இல் இந்தியாவில் உலர்த்திய நெல்லிக்காய் தூளை மிகச் சிறிய அளவில் கோழிகளுக்குக் கொடுத்து ஆராச்சி செய்யப்பட்டது. இதனை உண்ட கோழிகள் சாராதண கோழிகளை விட ஆரோக்கியமானவையாக வளர்ந்தன. அதனைத் தொடர்ந்து அண்மையில் சீனாவில் கோழிகளிலும் பின்னர் எலிகளிலும் பரிசோதனைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன. (https://fr.wikipedia.org/wiki/Amla)

 

மஞ்சள்

unavu3.jpg

இது எங்களுக்குக் கிடைத்த ஒரு விலைமதிப்பற்ற உணவு.

இந்தியாவில் புற்றுநோயைத் தோற்றுவிக்கும் பல காரணிகள் காணப்பட்ட போதிலும் அங்கு ஒப்பீட்டளவில் புற்றுநோய் குறைவாகவே காணப்படுகின்றது. ஒருவேளை இதற்கான காரணிகளில் மஞ்சள் பாவனையும் காரணமாகக் இருக்கலாம்.

மஞ்சள் குறிப்பாக 2 வகைகளில் செயலாற்றுகிறது.

 1. கட்டி, புற்றுநோய்க் கலங்கள் உருவாவதற்கு அவசியமானதாகக் கருதப்படும் ஒருவித புரதத்தின் தொகுப்பைத் தடுத்து புற்றுநோய்க் கலங்கள் உடலில் இருந்து விடுபட உதவும் நொதிகளின் உற்பத்தியை ஊக்குவிக்கிறது  இதன்மூலம் புற்றுநோய்க் கலங்கள் நலிவடைந்து இறக்க நேரிடும். மஞ்சள் புற்றுநோயைக் குணப்படுத்தாவிடினும் அது புற்றுநோய்க் கலங்கள் பரவாமல் கட்டுப்படுத்துகிறது.
 2. பக்கவிளைவுகள் இல்லாமல் சிலவிதமான உட்காயங்களை ஆற்றுகிறது.

உலகம் முழுவதும் பரவலாக நடைபெற்ற ஆயிரக்கணக்கான ஆராச்சிகளில் மஞ்சளின் பயன்பாடு சிறந்த பெறுபேறுகளைத் தந்தாலும் மஞ்சள் பாவித்து ஒரு குறிப்பிட்ட நோயைக் குணமாக்கியதாக நிறுவப்படவில்லை.

மஞ்சளை உடல் இலகுவாக உள்வாங்காது என்பதால் மிளகுடன் சேர்த்து அளவோடு உண்ணலாம். அதிகமாக உட்கொண்டால் தகாத உபாதைகள் வரலாம்.

ஈரல் தொடர்பான நோயுள்ளவர்கள், சத்திரசிகிச்சைக்கு உள்ளாக வேண்டியவர்கள், இரத்தத்தை இலகுவாக்கும் மருந்துகள் பாவிப்பவர்கள் கட்டாயம் மஞ்சளைத் தவிர்க்க வேண்டும். பொதுவாக கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இதனைத் தவிர்க்கும்படி சொல்லப்படுகிறது.

மஞ்சள் கிருமிகளை அழிக்கும் என்ற தவறான கருத்து உலாவுகிறது. அப்படி அழிக்குமாக இருந்தால் மஞ்சளை உண்பவர்களின் வயிற்றில் சமிபாட்டுக்கு உதவும் பக்ரீரியாக்கள் அழிக்கப்பட்டு சமிபாடு குழப்பமடைந்து உடலுக்குச் சரியான ஊட்டச் சத்துக்கள் கிடைக்காமல் பலவிதமான நோய்க்கு உள்ளாக நேரிடும். சமீபத்தில் கொரோனா வைரஸ் தொடர்பாக பலவிதமான ஆராச்சிகள் உலகெங்கிலும் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் ஒன்றுகூட மஞ்சளால் கிருமிகளை அழிக்க முடியுமென நிரூபிக்கப் பட்டதாகத் தெரியவில்லை.

 • Like 6
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, இணையவன் said:

இது நான் அறிந்த அறிவியல் தரவுகளின் அடிப்படையில் எழுதப்பட்டது. தவறான தகவல்கள் இருந்தால் சுட்டிக் காட்டுங்கள். கவிதையின் பொருள் உணர்ந்து இரசிப்பதுபோல் உண்ணும் உணவில் என்னவெல்லாம் உண்டு என்று புரிந்து மகிழ்வோடு உண்பது மனரீதியாக உடலுக்கு நன்மையே தரும்.

இணையவன்.... உணவுப் பொருட்களை தேடிப்  பிடித்து, 
அதன் பயன்களை அறியத் தந்தமைக்கும்,
பொருத்தமான... உவமானத்துடன் விளக்கியமைக்கும் நன்றி.  

Link to post
Share on other sites
 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • முள்ளிவாய்க்கால் நினைவை... வீடுகளில் இருந்து நினைவுகூருங்கள் – மாவை அழைப்பு இதுவரை அடைந்த அவலங்கள், துயரங்களை நெஞ்சிற் கொண்டு இலட்சிய தாகத்தை இதயத்தில் நிறைத்து முள்ளிவாய்க்கால் நினைவை வீடுகளில் இருந்து நினைவு கூறுமாறு இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அழைப்பு விடுத்துள்ளார். வாழும் இடங்களிலும் குடியிருக்கும் குடில்களிலுங் கூட நினைவு கூர்ந்து மாலை 6.00 மணிக்கு மணி ஒலியெழுப்பிச் சுடரேற்றி விளக்கேற்றி திடசங்கற்பத்துடன் முள்ளிவாய்க்கால் நினைவலைகளை பாரெல்லாம் பரப்புவோம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவர், இராணுவம் சூழ்ந்திருக்க முள்ளிவாய்க்கால் நினைவிக்கல் அகற்றப்பட்டமை தொடர்பாக இலங்கை அரசு பொறுப்புக் கூறியேயாக வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் தமிழ்பேசும் மக்கள் தேசத்தினதும் மக்களினதும் விடுதலைக்காக, தங்களைத் தாங்களே ஆளுவதற்காக இறைமை கொண்ட மக்கள் கடந்த எழுபதாண்டுகளுக்கும் மேலாகப் போராடி வருகின்றனர். இந்நிலையில் தங்கள் உயிர்களைப் பறிகொடுத்த மக்கள் தங்கள் உறவுகளை நினைவு கூரவும், அஞ்சலி செய்யவும், ஆத்மசாந்திக்கான ஈமக்கடன்களில் ஈடுபடவும் உள்ள உரிமை பண்பாடு நாகரிகம் இங்கையில் மறுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார். தமிழர் தேசமும் மக்களும் அழிக்கப்பட்ட வரலாறுகளையெல்லாம் தாங்கி நிற்கும் முள்ளிவாய்க்கால் நினைவையும் அழிக்க இன்றைய அரசு இராணுவ ஆளுகைக்கூடாகச் செயல்பட்டு நிற்பதாகவும் மாவை சேனாதிராஜா குற்றம் சாட்டினார். இத்தகைய வரலாற்றைப் பிரதிபலிக்கும் முள்ளிவாய்க்கால் அத்திபாரத்திலிருந்துதான் தமிழ்த் தேசமக்களின் எழுச்சி எதிர்கால சந்ததியின் விடுதலை வரலாற்றைப் படைக்கப் போகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2021/1215949
  • பயணத்தடை அமுலில் இருக்கும் போது... யாழில் பிறந்தநாள் கொண்டாட்டம் – 15 பேர் தனிமைப் படுத்தலில்! நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுலில் இருக்கும் போது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 15 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வடமராட்சி கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பிறந்தநாள் கொண்டாட்டம் இடம்பெறுவதாக கிடைத்த தகவலை அடுத்து நெல்லியடி பொலிஸாருடன் சுகாதார பிரிவினர் குறித்த பகுதிக்கு சென்றபோது கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் அங்கிருந்து தப்பி சென்றிருந்தனர். இந்நிலையில் பிறந்தநாள் கொண்டாடியவரின், தொலைபேசியில் காணப்பட்ட படங்களின் அடிப்படையில் அதில் உள்ள 15 பேரும் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். https://athavannews.com/2021/1215958
  • நிவாரணப் பொதிகள் வழங்க அரசாங்கம் தீர்மானம் ! கொரோனா தடுப்பிற்காக முடக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதிளை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பிரதேச செயலகங்களினால் தெரிவு செய்யப்பட்டுள்ள மக்களுக்கு 5,000 ரூபாய் பெறுமதியான 20 அத்தியாவசியப் பொருட்கள் உள்ளடங்கலாக இந்நிவாரண பொதி வழங்கப்படவுள்ளதுன. இந்நிவாரணப் பொதி நாளை மறுதினம் திங்கட்கிழமை முதல் மக்களுக்கு வழங்கப்படவுள்ள அதேவேளை அவற்றினை மூன்று தினங்களுக்குள் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையினை அனைத்து மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம சேவை அதிகாரிகள் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மூலம் முன்னெடுக்கப்படும் என்றும் வர்த்தக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. https://athavannews.com/2021/1215926
  • கந்தையா... அண்ணை,  உங்களுக்கு, தமிழ் அவ்வளவு தெரியாவிட்டால், நீங்கள், ஏன்... உந்த ஆராய்ச்சியில் இறங்கினீங்கள்.  பிற்குறிப்பு: சும்மா... பகிடிக்கு 😜, சனிக்கிழமை நமக்கும் பொழுது போகவேணுமெல்லோ... 🤣
  • இந்தியாவில், கொரோனா பரவ... மதம், அரசியல் சாரந்த கூட்டங்களே காரணம் – WHO இந்தியாவில் மதம் மற்றும் அரசியல் சார்ந்த கூட்டங்களினாலேயே கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்த ஆய்வுகளை மேற்கொண்ட குறித்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மாதிரிகளில் 0.1 சதவீத மாதிரிகள் மட்டுமே மரபணு உருமாற்ற பரிசோதனை செய்யப்பட்டு இருக்கிறது. மதம், அரசியல் சார்ந்த கூட்டங்களால் இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவியிருப்பது தெரியவந்துள்ளது.  இந்தியாவில் கடந்த ஏப்ரல் இறுதியில் பி.1.617.1 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் பரவுவது கண்டுப்பிடிக்கப்பட்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 21 சதவீதமானோர் இந்த வகை வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதேபோல பி.1.167.2 என்ற வைரஸும் பரவி வருகிறது. இந்த வைரஸால் 7 சதவீதமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தின் ஒட்டுமொத்த கொரோனா வைரஸ் பாதிப்பில் இந்தியாவில் மட்டுமே 95 சதவீத பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்த பிராந்தியத்தின் உயிரிழப்பில் இந்தியாவில் மட்டும் 93 சதவீதம் பதிவாகியுள்ளது. சர்வதேச கொரோனா வைரஸ் தொற்றில் இந்தியாவில் 50 சதவீத தொற்றும் சர்வதேச உயிரிழப்பில் இந்தியாவில் 30 சதவீத உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1215749
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.