Jump to content

விலங்குகளைவிட மனிதர்கள் மேம்பட்டவர்கள் அல்ல!- ரோமுலஸ் விட்டேகர் நேர்காணல்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

விலங்குகளைவிட மனிதர்கள் மேம்பட்டவர்கள் அல்ல!- ரோமுலஸ் விட்டேகர் நேர்காணல்

romulus-whitaker  
 

சென்னையின் பெருமிதங்களில் ஒருவர் ரோமுலஸ் விட்டேகர். பிறப்பால் அமெரிக்கர்; மனதால் தமிழர். தனது நான்கு வயதிலேயே பாம்புகள் மீது ஈடுபாடு கொண்ட ரோமுலஸ், சென்னை கிண்டியில் உள்ள பாம்புப் பண்ணை, கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள முதலைப் பண்ணை, ராஜநாகங்களை ஆராயும் ஆகும்பே மழைக்காடுகள் ஆராய்ச்சி மையம், இருளர் கூட்டுறவு அமைப்பு போன்ற முக்கியமான அமைப்புகளை உருவாக்கியவர். 77 வயதில் சென்னைக்கு வெளியே செங்கல்பட்டில் ஒரு சிறிய வனம் சூழ்ந்த வீட்டில் இருளர் குடியிருப்பு மக்களுக்கு நெருக்கமாக வாழ்ந்துவருகிறார். இவரது மனைவி ஜானகி லெனின், கானுயிர்கள் பற்றி சுவாரஸ்யமான கட்டுரைகளையும் புத்தகங்களையும் எழுதியவர்.

மனிதர்கள் ஆதிகாலம் தொட்டு அச்சத்துடனேயே பார்க்கும் பாம்புகளுடனான நட்பு உங்களுக்குக் குழந்தைப் பருவத்திலேயே தொடங்கிவிட்டது. அதற்கான பின்னணி என்ன?

 
 
 

அதிர்ஷ்டவசமாக எனக்குக் கிடைத்த அம்மா டோரிஸ் நோர்டன் சட்டோபாத்யாய, எனது ஆர்வத்தை ஊக்குவித்தார். பெரும்பாலான அம்மாக்கள் அப்படிக் கிடையாது. நியூயார்க்கில் நாங்கள் வசித்தபோது, விஷமில்லா அமெரிக்க கார்டன் வகை பாம்பை வீட்டுக்குக் கொண்டுவந்தேன். ‘வாவ், எவ்வளவு அழகு’ என்று எனது அம்மா அதை வரவேற்றார். பாம்புகள் பற்றி நான் வாசித்த முதல் புத்தகத்தை வாங்குவதற்கு ஊக்குவித்தவரும் அவர்தான். பெற்றோர்களின் எதிர்வினை குழந்தைகளுக்கு எப்போதும் முக்கியமாக உள்ளது.

சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் நீங்கள் கானுயிர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடத் தொடங்குகிறீர்கள். அப்போதிருந்த அணுகுமுறை, பார்வைகள் இப்போது மாறியிருக்கிறதா?

1970-களின் தொடக்கத்தில் கானுயிர் பாதுகாப்பானது பெரிய அளவில் இந்தியாவில் தொடங்கியது. தொடக்க கால அரசுசாரா நிறுவனங்களான வேர்ல்டு வைல்ட்லைஃப் பண்ட், பாம்பே நேச்சுரல் ஹிஸ்டரி சொசைட்டி ஆகியவற்றுடன் சேர்ந்து பணியாற்றிய காலம் அது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பணிகளைத் தொடங்கியபோது இருந்த மக்களின் அணுகுமுறை பெரியளவில் மாறியுள்ளது. ஆனால், இந்தியாவில் கானுயிர்களும் அவற்றின் வாழ்விடங்களும் வளமாக இருப்பதற்குச் செய்ய வேண்டிய பணிகள் இன்னும் நிறைய உள்ளன.

பசுமை வளம் குன்றாத நிலங்களும் நீர்நிலைகளும் பாம்புகளின், முதலைகளின் வாழ்க்கைக்குத் தேவையாக உள்ளன. இந்த அடிப்படையில்தான் ஆகும்பேயில் மழைக்காடுகள் ஆய்வு மையத்தை சீதா நதியைப் பாதுகாப்பதற்காக ஆரம்பித்தீர்கள். அந்தப் பணிகளைப் பற்றிச் சொல்லுங்கள்?

ஷிமோகா மாவட்டத்திலுள்ள ஆகும்பேயின் மழைக்காடுகளில் தோன்றும் நதி சீதா. அந்த மழைக்காட்டில்தான் எங்கள் ஆய்வு மையத்தையும் தொடங்கினோம். நீண்ட நாட்களாகவே மழைக்காடுகளில் ஆராய்ச்சி நிலையங்களை உருவாக்கும் யோசனை இருந்துவந்தாலும் அதற்கான பொருளாதார ஆதரவுக்கு என்ன செய்வது என்று தெரியாத நிலையில் கனவாகவே இருந்துவந்தது. எனது அம்மா மறைந்த நிலையில் அவர் எனக்காக விட்டுச்சென்ற சேமிப்பில் ஆகும்பேயில் நிலத்தை வாங்கினேன். அம்மாவின் இறப்புக்கு முன்னரே நாங்கள் சேர்ந்து அதைப் பற்றிப் பேசியிருக்கிறோம். ஆகும்பேயில்தான் ராஜநாகத்தை முதன்முறையாகப் பார்த்தேன். இந்தச் சூழ்நிலையில், விட்லி அவார்டு கிடைத்தது. அந்தப் பணத்தையும் சேர்த்து 2005-ல் ஆராய்ச்சி நிலையத்தைத் தொடங்கினேன். சீதா நதியையும் அந்தப் பகுதியில் உள்ள ஊர்வனவற்றையும் பாதுகாப்பதோடு மக்களின் அலட்சியத்தால் காட்டின் வளம் குன்றுவதை அவர்களுக்கு உணர்த்தும் விழிப்புணர்வுக் கல்வியையும் அவர்களுக்குக் கொடுக்கும் இடம் அது. ராஜநாகம் எதிர்ப்பட்டால் அதைக் கொன்றுகொண்டிருந்த மக்கள், இப்போது அதைச் செய்வதில்லை. காட்டின் குன்றாத வளத்தைப் பாதுகாக்கும் உயிர்ச்சங்கிலியில் ஒரு கண்ணியாக ராஜநாகத்தை அவர்கள் பார்க்கின்றனர்.

மெட்ராஸ் பாம்புப் பண்ணை, முதலைப் பண்ணை எனப் பல்வேறு நிறுவனங்களைத் தொடங்கியவர் நீங்கள். அதற்கு அரசுகள், நிறுவனங்களின் ஆதரவைப் பெறுவதும் அங்கே செயல்படும் அதிகாரத்துவ சவால்களைத் தாண்டுவதும் அன்றாடப் பணியாக இருந்திருக்கும், இல்லையா?

மெட்ராஸ் பாம்புப் பண்ணை, மெட்ராஸ் முதலைப் பண்ணை, இருளர் கூட்டுறவு அமைப்பு ஆகியவற்றின் தொடக்க நாட்களில் அரசு அலுவலகக் கட்டிடங்கள் பலவற்றில் உட்கார்ந்து எனது பகல்கள் எத்தனையையோ செலவிட்டிருக்கிறேன். இதுபோன்ற அலுவலகங்களில் எனது பணியில் ஆர்வம் கொண்ட ஒரு அதிகாரியை அடையாளம் கண்டுவிட்டால் போதும்; அவரை அழுத்தமாகப் பற்றிக்கொண்டுவிடுவேன். அப்படித்தான் புதுமையான திட்டங்கள் நடைமுறைக்கு வருகின்றன. கானுயிர் பாதுகாப்பு நிறுவனங்களை அமைப்பதற்குப் பெருநிறுவனங்கள் பலவும் உதவியுள்ளன. ரோலக்ஸ் நிறுவனம், விட்லி பண்ட் ஃபார் நேச்சர், நேஷனல் ஜியாகிரஃபிக் சொசைட்டி போன்றவை எங்களுக்குப் பெருந்தன்மையாக உதவிவருகிறவர்களில் சிலர்.

இந்தியாவிலும் தமிழகத்திலும் உங்கள் வாழ்நாளின் பெரும் பகுதியைச் செலவழித்தவர் நீங்கள். ஒரு அமெரிக்கராக இங்கே ஏதாவது தடங்கல்களைச் சந்தித்திருக்கிறீர்களா?

மொழித் தடை தவிர வேறெந்தத் தடைகளும் இருக்கவில்லை. மக்கள் அற்புதமானவர்கள். ஆதிவாசிகளிலிருந்து நகரவாசிகள் வரை எத்தனையோ தரப்பட்ட மக்களில் நிறைய நண்பர்களைப் பெற்றிருக்கிறேன்.

வியட்நாம் போரில் ராணுவ சேவை செய்தவர் நீங்கள். ராணுவ சேவையாற்றிவிட்டுத்தானே இந்தியாவுக்கு மீண்டும் திரும்புகிறீர்கள்?

வியட்நாம் மீது அமெரிக்கா நடத்திய போருக்கு நான் ஆதரவளிக்கவில்லை. ஆனால், ராணுவ சேவையில் ஈடுபட மறுத்திருந்தால் எனக்கு மூன்றாண்டு சிறைத்தண்டனை கிடைத்திருக்கும். மூன்றாண்டு சிறைத் தண்டனையா இரண்டாண்டு ராணுவப் பணியா என்ற நிலை வந்தபோது ராணுவ சேவையைத் தேர்ந்தெடுத்தேன். நேரடியாகப் போர்க்களத்துக்குச் செல்லாமல், மருத்துவத் தொழில்நுட்ப சேவையில் ஈடுபடுத்திக்கொண்டேன்.

உயிருக்கு ஆபத்து ஏற்படும் அளவுக்கு நீங்கள் பாம்புகளால் தாக்கப்பட்டிருக்கிறீர்கள் இல்லையா?

பாம்புகள் தாக்குவதில்லை. அபாயகரமான மனிதனால் கையாளப்படும்போதோ மோதப்படும் சூழ்நிலையிலோ அவை தங்களைத் தற்காத்துக்கொள்கின்றன. என்னுடைய ஒழுங்கின்மை, முட்டாள்தனத்தாலேயே நிறைய முறை கடிவாங்கியுள்ளேன். அதில் ஒரே ஒரு கடிதான் மிகவும் ஆபத்தானது.

உயிர்களிலேயே ஊர்வன உயிர்கள் மீதுதான் அதிக அச்சமும் அருவருப்பும் நிலவுகின்றன. அதை அகற்ற நீங்கள் கூறும் எளிய வழிமுறைகள் எவை?

பெரும்பாலான காட்டுயிர்களுக்கு மனிதர்கள் மீது இயல்பான மரியாதை உள்ளது. மனிதர்கள் மிகவும் அபாயகரமானவர்கள் என்றும் அவற்றுக்குத் தெரியும். நாம் கூடுதல் விழிப்பும் கவனமும் கொண்டவர்களாக இருந்தால், ஆரோக்கியமான தொலைவிலிருந்து ரசிக்க முடியும். அவை எத்தனை சுவாரஸ்யமானவை என்றும் நம்மால் அறிய முடியும்.

கானுயிர் ஆர்வலர் மற்றும் ஆய்வாளராக ஆவதற்கு ஆசை உள்ளவர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன?

வனப்பகுதிகளில் கானுயிர்கள் பாதுகாப்பு சார்ந்த பணிகளில் ஈடுபடுவதைப் போன்று நாம் வாழும் கிரகத்தைப் பாதுகாப்பதற்கான நல்ல, திருப்திகரமான, சுவாரஸ்யமான பணி வேறு எதுவும் இல்லை என்பதுதான் எனது முக்கியமான அறிவுரை.

காடும் கானுயிர் பாதுகாப்புப் பணியும் உங்களுக்கு அளித்திருக்கும் ஞானம் என்ன?

விலங்குகளைவிட மனிதர்கள் எந்த வகையிலும் மேம்பட்டவர்கள் அல்ல என்பதைத் தொடர்ந்து கற்றுவருகிறேன். மனிதனின் மூளை கொஞ்சம் வேகமாகத் தனது நலனுக்காக வளர்ந்திருக்கிறது. நம்மைவிடத் தாழ்ந்ததாகக் கருதும் உயிரினங்களின் அற்புதமான சில நடத்தைகளைத் தெரிந்துகொள்ளாமல் எனது ஒரு நாள்கூடக் கழிவதில்லை. நகரத்தில் கிடைக்கும் எந்த சந்தோஷத்தையும்விட, காட்டில் இருக்கும்போது கிடைக்கும் அமைதியும் நிறைவும் அதிகம்.

உங்கள் பணியில் உங்களை ஈர்த்த ஆளுமைகள், நண்பர்கள்?

நடேசன், சொக்கலிங்கம், ராஜாமணி, காளி ஆகிய இருளர் பழங்குடி நண்பர்கள் எனக்கு பாம்புகள் பற்றியும் இதர உயிர்கள் பற்றியும் நிறைய கற்றுத்தந்திருக்கின்றனர். அமெரிக்காவில் மியாமி பாம்புகள் காட்சியகத்தில் என்னுடன் பணியாற்றிய பில் ஹாஸ்ட் என் மீது தாக்கம் செலுத்தியவர்.

இருளர் பழங்குடி மக்கள் மரபு வழியில் பெற்ற கல்வி அடுத்த தலைமுறையினருக்குச் சென்று சேர்க்கும் வகையில் ஏதாவது காரியங்கள் நடந்திருக்கின்றனவா?

இருளர் பழங்குடி மக்கள் பாம்புகளை அறிந்தவர்கள். அவற்றின் பழக்கங்களை ஆழமாகப் புரிந்தவர்கள். 1970 வரை அவர்கள் பாம்புத் தோலுக்காகப் பாம்புகளை வேட்டையாடினார்கள். ஆனால், வன உயிர் பாதுகாப்புச் சட்டத்தால் வேட்டைக்குத் தடை வந்தது. பாம்புக்கடிக்கான விஷமுறிவு மருந்து தயாரிப்புக்காக அவர்கள் இப்போது பாம்புகளைப் பிடித்து விஷத்தைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். அதன் மூலம் லட்சக்கணக்கான மக்களின் உயிர் காப்பாற்றப்படுகிறது. உலகின் தலை சிறந்த பாம்பு பிடிப்பவர்கள் இருளர்கள்தான் என்று எப்போதும் கருதுகிறேன்.

 

https://www.hindutamil.in/news/opinion/columns/663060-romulus-whitaker-6.html

 • Like 1
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • பழனி கோயில் கருவறையில் அமைச்சர் சேகர்பாபு நுழைந்தாரா? பிராயச்சித்த கும்பாபிஷேகம் கோரும் பாஜக வானதி 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,P.K.SEKAR BABU/TWITTER   படக்குறிப்பு, பழனி கோயில் குடமுழுக்கு விழாவில் பி.கே.சேகர்பாபு பழனி கோயில் குடமுழுக்குக்கு முந்தைய நாள், ஏற்பாடுகளை கவனிக்க கோயிலுக்கு சென்ற அமைச்சர் பி.கே.சேகர்பாபு, அதிகாரிகளுடன் கருவறைக்குள் நுழைந்தார் என்றும் இதனால், மீண்டும் பிராயச்சித்த கும்பாபிஷேகம் நடத்தவேண்டும் என்றும் கோரியுள்ளார் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன். "அமைச்சர், அதிகாரிகள், ஆளும் கட்சி பிரமுகர்களின் ஆகம மீறலால் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்த தலைமை அர்ச்சகர், பிராயசித்த கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்" என்றும் தெரிவித்துள்ளார் வானதி. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்று, தமிழ்நாட்டின் மிக முக்கிய ஆன்மிகத் தலங்களில் ஒன்று. தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகத்தில் உள்ள இந்தக் கோயிலில் ஜனவரி 27 ஆம் தேதி குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) நடந்து முடிந்துள்ளது. அதில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கலந்து கொண்டார்.   தஞ்சை பெரிய கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்துவது சாத்தியமா? தமிழ் ஏன் உலகச் செம்மொழிகளில் ஒன்று? அதன் சிறப்பும் தொன்மையும் என்ன? #தமிழர்_பெருமை மனு நீதி என்றால் என்ன? அது என்ன சொல்கிறது, ஏன் வந்தது? அதற்கு முந்தைய நாள் ஏற்பாடுகளை கண்காணிப்பதற்காக அமைச்சர் சேகர் பாபு அறநிலையத் துறை அதிகாரிகளுடன் கோயிலுக்குச் சென்றார். அப்போது, அமைச்சர், அவருடன் வந்த அதிகாரிகள் உள்ளிட்டோர் கோயில் கருவறைக்குள் சென்றதாக கூறி சில வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவியுள்ளன. இதையடுத்து, கோயிலில் ஆகம விதி மீறப்பட்டுள்ளது. இதனால் பிராயசித்த கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என அர்ச்சகர் என கூறப்படும் ஒருவர் பேசும் ஆடியோ செய்தி ஒன்றும் பரவியுள்ளது. இந்த நிலையில் அமைச்சர், அதிகாரிகள் கோயில் கருவறையில் நுழைந்ததாக குற்றம்சாட்டியுள்ள வானதி, பிராயச்சித்த கும்பாபிஷேகம் நடத்தவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். பட மூலாதாரம்,P.K.SEKAR BABU/TWITTER   படக்குறிப்பு, டிவிட்டர் இணைப்பு: https://twitter.com/PKSekarbabu/status/1618923573036597252 இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் கருவறைக்குள் அத்துமீறி நுழைந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், அதிகாரிகள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். தலைமை அர்ச்சகரின் வேண்டுகோளை ஏற்று பிராயசித்த கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். எந்தவொரு திருக்கோயிலிலும் மகா கும்பாபிஷேகம் நடந்தால், 48 நாட்கள் மண்டலாபிஷேகம் நடக்க வேண்டும் என்பது ஆகமம். ஆனால் மகா கும்பாபிஷேகம் நடந்து ஒரு வாரத்திற்குள் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வரும் தைப்பூசம் வருகிறது. மகா கும்பாபிஷேகத்திற்கு முதல் நாள், இந்து சமய அறநிலையளத்துறை அமைச்சர் திரு. பி.கே.சேகர்பாபு அவர்களும், துறை அதிகாரிகளும், ஆளும் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் சிலரும் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி கோயில் கருவறைக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளது அதிர்ச்சியும், தாங்க முடியாத மன வேதனையையும் அளிக்கிறது. இது அப்பட்டமான ஆகம மீறல். அது மட்டுமல்ல, இந்துக்களின் மத உணர்வுகளை காயப்படுத்தும் செயல். எனவே, இதற்காக, அமைச்சர் முருக பக்தர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இனி இதுபோன்ற ஆகம மீறல்கள் நடக்காது என்பதை உறுதிப்படுத்த வேண்டும்," என்று கூறியுள்ளார் வானதி. 'சித்தர்களால் உருவாக்கப்பட்ட கோயில்' "கருவறைக்குள் யாரும் நுழையவில்லை. கருவறைக்கு முன்னதாக இருக்கும் அர்த்த மண்டபத்திற்கு சென்றுதான் சுவாமி தரிசனம் செய்தார்கள்" என்று உண்மையை மறைக்க, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முயற்சிப்பது கடும் கண்டனத்துக்கிறது. இது வெந்தப் புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாகும். Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவை அனுமதிக்கலாமா? இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும். ஏற்பு மற்றும் தொடரவும் Twitter பதிவின் முடிவு, 1 இந்து சமய அறநிலையத் துறை சட்டங்களின்படியே, மதச்சார்பற்ற தமிழக அரசோ, அந்த மதச்சார்பற்ற அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளோ, திருக்கோயிலின் வழிபாடு, ஆகமம், கும்பாபிஷேகம் போன்ற விவகாரங்களில் தலையிடக்கூடாது. அதனை, சம்பந்தப்பட்ட திருக்கோயில் அறங்காவலர்கள் குழுவும், அர்ச்சகர்களும்தான் முடிவு செய்ய வேண்டும். பழனி முருகன் கோயில் என்பது சித்தர்களால் உருவாக்கப்பட்ட கோயில். எனவே, அங்கு பாரம்பரியமாக சித்தர் வழி வந்த குடும்பத்தினருக்கு வழங்கப்படும் மரியாதைகள் வழங்கப்பட வேண்டும்" என்றும் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார் வானதி. விஷம செய்தி வெளியிடுவது வானதியின் வாடிக்கை: சேகர் பாபு செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 7, 2023) கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் மற்றும் பேரூர் ஆதீனத்தில் நடந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அமைச்சர் சேகர் பாபு, பிறகு செய்தியாளர்களிடம்பேசும்போது வானதியின் அறிக்கைக்கு பதில் அளித்தார். பட மூலாதாரம்,PK SEKAR BABU/TWITTER   படக்குறிப்பு, பழனி குடமுழுக்கு "ஊடகங்களில் வர வேண்டும் என்பதற்காக விஷமத்தனமான செய்திகளை வெளியிடுவது தான் அவரது (வானதியின்) வாடிக்கையாக உள்ளது. தமிழ்நாட்டை தாண்டி இந்தியாவை தாண்டி உலகம் முழுவதும் உள்ளவர்கள் பழனி கோவில் குடமுழுக்கு சிறப்பாக நடத்தப்பட்டதை பாராட்டி வருகிறார்கள். அதில் கரும்புள்ளி ஏற்படுத்த வேண்டும் என அர்த்தமற்ற செய்தியை அவர் வெளியிட்டது மிகவும் வருத்தமளிக்கிறது. கும்பாபிஷேகம் முடிந்து 10 நாட்கள் கழித்து தற்போது தைப்பூசமும் முடிந்த பிறகு இவ்வாறு பிரச்சாரம் செய்வது மிகவும் வருத்தம் அளிக்கிறது. காலம் காலமாக கோயிலை வைத்து ஒரு சிலர் வருமானம் பார்த்து வந்தது ஒழிக்கப்பட்டு, தற்போது அனைவரும் சமம் என்கிற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் கோவிலை வைத்து வருமானம் பார்க்க முடியாதவர்கள் இது போன்ற பிரசாரங்களை மேற்கொள்கிறார்கள். அன்றைய நிகழ்வில் பங்கேற்றவர்கள் அனைவருமே சிறப்பாக நடைபெற்றது என மகிழ்ச்சியுடன் தெரிவித்து சென்றார்கள்," என்றார். நிர்வாக அதிகாரி கூறியது என்ன? பழனி கோயில் நிர்வாகத்தின் மீதான குற்றச்சாட்டுகளை அக்கோயில் செயல் அதிகாரி நடராஜன் மறுக்கிறார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "கோயிலின் நிர்வாகத்தை பொருத்தவரை பழனியிம் மட்டுமில்லை வேறு எங்குமே வழிபாடு, திருவிழா போன்ற விவகாரங்களில் அதிகாரிகள் தலையிடுவதில்லை. உள்துறை, வெளித்துறை என அர்ச்சகர்கள் அடங்கிய இரண்டு குழுக்கள் உள்ளன. பட மூலாதாரம்,GETTY IMAGES   படக்குறிப்பு, பழனி கோயில் வழிபாடு, பராமரிப்பு மற்றும் அதை சார்ந்த அனைத்து விஷயங்களும் உள்துறையைச் சேர்ந்தவர்களால் தான் முடிவெடுத்து நிர்வகிக்கப்படுகின்றன. எந்த முடிவும் எழுத்துப்பூர்வமாக ஆவணப்படுத்தப்படுகின்றன. உள்துறையைச் சேர்ந்தவர்கள் என்ன முடிவெடுக்கிறார்களோ அது தான் செயல்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு நடைமுறை உள்ளது. கும்பாபிஷேகம், தைப்பூசம் என அனைத்தும் முறையாகதான் நடத்தப்பட்டுள்ளன. ஆகம விதிப்படிதான் அனைத்து நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. நீதிமன்ற உத்தரவோ ஆகம விதியோ எங்கும் மீறப்படவில்லை. அர்ச்சகர்கள் தரப்பில் இது தொடர்பாக குற்றச்சாட்டோ கோரிக்கைகளோ எதுவும் வைக்கப்படவில்லை," என்றார். https://www.bbc.com/tamil/global-64564611
  • இவர் முன்பு இருந்த கட்சி என்ன கட்சி என்றுஞ் சொல்வது. இருந்த கட்சியை விட்டு மகிந்தா கூப்பிட்டவுடன் ஓடிப்போய் காலடியில் விழுந்தவர், அபிவிருத்தியே போதும் என்றவர். இப்போ இப்படி கூறுகிறார்.  நாளைக்கு எப்படிகூறுவாரோ? சீ ....சீ ..... இந்தப்பழம் புளிக்குமென்கிறாரோ, கட்சிகளிர்த்தான் பிழையென்கிறாரோ?
  • கோட்டாவிடம்; மூன்று மணிநேரம் பொலிஸார் விசாரணை By RAJEEBAN 08 FEB, 2023 | 03:41 PM முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை திங்கட்கிழமை பொலிஸார் விசாரணைக்குட்படுத்தியுள்ளனர். கடந்த வருடம் ஜூலை மாதம் 9 ம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையை சூழ்ந்ததை தொடர்ந்து கோட்டாபய ராஜபக்ச அங்கிருந்து தப்பிவெளியேறிய பின்னர் அங்கு பெருந்தொகை பணம் மீட்கப்பட்டமை தொடர்பிலேயே பொலிஸார் அவரை விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அவரிடம் மூன்றுமணிநேரம் வாக்குமூலம் பெறப்பட்டது என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/147729 ஜனாதிபதி மாளிகையில் மீட்கப்பட்ட பணத்திற்கு உரிமை கோரினார் கோட்டா By RAJEEBAN 08 FEB, 2023 | 03:12 PM கடந்த வருடம் ஜூலை மாதம் ஒன்பது திகதி ஜனாதிபதி மாளிகையில் மீட்கப்பட்ட 17.85 மில்லியனிற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச  உரிமைகோரியுள்ளார். தனது சட்டத்தரணி மூலம் அந்த பணத்திற்கு அவர் உரிமை கோரியுள்ளார். எனினும் பொலிஸ் விசாரணைகள் முடிவடையும் இதனை ஏற்க முடியாது என கொழும்பு கோட்டை நீதவான் திலினகமகே நிராகரித்துள்ளார். https://www.virakesari.lk/article/147722
  • அவருக்கு பல சந்தர்ப்பங்கள், அதிகாரங்கள் கிடைத்திருந்தன. அவற்றையெல்லாம் தமிழரின் முழுமையான ஆதரவோடேயே பெற்றார், இருந்தும் அவர்களை வஞ்சிப்பதிலேயே அவற்றை செலவழித்தார். இப்போ முழுமையான அதிகாரமில்லை, செய்வேன் என்கிறார். காலம் சொல்ல வைக்குதா? அல்லது கிடைத்த அதிகாரத்தை நிரந்தரமாக்குவதற்கு வேஷம் போடுகிறாரா? வெறுங்கை முழமிடுமா என்றும் யோசிக்க வேண்டும்.
  • கீழடியில் மட்கும் பொருள்களால் கட்டுமானம்: இந்திய தொல்லியல் துறையின் அமர்நாத் ராமகிருஷ்ணா அறிக்கை சொல்வது என்ன? #Exclusive முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ARCHAEOLOGICAL SURVEY OF INDIA   மதுரைக்கு அருகில் உள்ள கீழடியில் இந்தியத் தொல்லியல் துறை மேற்கொண்ட முதல் இரண்டு அகழாய்வுகள் தொடர்பான ஆய்வறிக்கையை அமர்நாத் ராமகிருஷ்ணன் சமர்ப்பித்துள்ளார். கீழடி குறித்து இந்த ஆய்வறிக்கை சொல்வதென்ன? பிபிசி வழங்கும் பிரத்யேகத் தகவல்கள். மதுரையில் இருந்து 13 கி.மீ. தூரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள கீழடி என்ற தொல்லியல் தளத்தை 2014ஆம் ஆண்டுவாக்கில் இந்தியத் தொல்லியல் துறையின் கண்காணிப்பாளராக இருந்த அமர்நாத் ராமகிருஷ்ணா கண்டறிந்தார். இதற்குப் பிறகு இந்த இடத்தில் 2014-15, 2015-16 ஆகிய இரண்டு ஆண்டுகளில் அவரது தலைமையில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்குப் பிறகு ஒரு முறை இந்தியத் தொல்லியல் துறையும் அதற்குப் பின்பு மாநிலத் தொல்லியல் துறையும் அங்கு அகழாய்வுகளை நடத்தின. இந்தியத் தொல்லியல் துறை நடத்திய முதல் இரண்டு அகழாய்வுகளின் ஆய்வறிக்கை தற்போது அமர்நாத் ராமகிருஷ்ணாவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கை, கீழடி தொல்லியல் தளத்தின் காலகட்டம், அங்கு நிலவிய கலாச்சாரம், அங்கு வாழ்ந்த மக்கள் விவசாயம் செய்த பயிர்கள், அவர்கள் வளர்த்த விலங்குகள், அந்த இடம் எப்படி ஒரு நகர நாகரீகத்தை நோக்கி நகர்ந்திருக்கக்கூடும் என்பதுபோன்ற கேள்விகளுக்கு ஆரம்பகட்ட விடைகளை அளிப்பதாக இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.   கீழடியில் ஊற்றெடுக்கும் தமிழர் வரலாறு - இதுவரை கிடைத்தவை என்ன? சிவகளை அகழாய்வு: '3,000 ஆண்டுகளுக்கு முன் தாமிரபரணி நாகரிகம் இருந்ததா?' தமிழர் கடல் நகரம் பூம்புகார் 15 ஆயிரம் ஆண்டுகள் பழமையானதா- - BBC News தமிழ் கீழடியில் மூன்று காலகட்டம் கீழடியில் இந்தியத் தொல்லியல் துறை மேற்கொண்ட இரண்டு அகழாய்வுகளிலும் கிடைத்த பொருட்களை வைத்துப் பார்க்கும்போது, இங்கே மூன்று பண்பாட்டு காலகட்டம் நிலவியிருக்க வேண்டும் எனக் கருதப்படுகிறது. பட மூலாதாரம்,ARCHAEOLOGICAL SURVEY OF INDIA இதில் முதலாவது காலகட்டம் கி.மு. எட்டாம் நூற்றாண்டிலிருந்து கி.மு. ஐந்தாம் நூற்றாண்டுவரை நிலவியிருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில்தான் மக்கள் இங்கே வாழத் துவங்கியிருக்க வேண்டும். இதற்கான தரவுகள் 2 மீட்டர் ஆழத்தில் உள்ள மண் அடுக்கில் கிடைத்திருக்கின்றன. இந்த காலகட்டத்தில், கீழடியில் எளிதில் மட்கிப் போகக்கூடிய (செங்கல் அல்லாத, மரம் போன்ற) பொருட்களால் கட்டுமானங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. இரும்புப் பொருட்கள், கறுப்பு - சிவப்பு மட்பாண்டங்கள், கிறுக்கல்களைக் கொண்ட பானை ஓடுகளும் இந்த காலகட்டத்தைச் சேர்ந்த மண் அடுக்கில் கிடைத்திருக்கின்றன. இடைக்கற்காலத்தைச் சேர்ந்த நிறைய கற்கருவிகள் கிடைத்திருக்கின்றன. புதிய கற்காலத்தைச் சேர்ந்த தீட்டப்பட்ட கற்கருவிகளும் கிடைத்திருக்கின்றன. இருந்தபோதும் கீழடி இடைக்கற்காலத்தையோ, புதிய கற்காலத்தையோ சேர்ந்த இடமாகக் கொள்ள முடியாது. இந்தக் கற்கருவிகள் கிடைப்பதை வைத்துப் பார்க்கும்போது, கீழடி வளரத் தொடங்கியபோது முந்தைய காலத்தின் பண்பாட்டுத் தொடர்ச்சி இருந்திருக்கலாம் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆகவே கீழடி இரும்புக் காலத்தில் வளரத் தொடங்கியிருக்கலாம் என்ற முடிவுக்கு வர முடியும் என்றாலும்கூட, தொடர்ந்து இந்தத் திசையில் ஆய்வுகளை நடத்த வேண்டும் என்கிறார் அமர்நாத் ராமகிருஷ்ணன்.   படக்குறிப்பு, அமர்நாத் ராமகிருஷ்ணன் கீழடியின் இரண்டாவது காலகட்டம் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து கி.மு. முதலாம் நூற்றாண்டின் முடிவுவரை இருந்திருக்கலாம். இதுதான் கீழடி, ஒரு முதிர்ந்த வாழிடப் பகுதியாக இருந்த காலகட்டம். இந்த காலகட்டத்தில்தான், கீழடியில் பெரும் வளர்ச்சி இருந்திருக்கிறது. பெரிய மற்றும் சிறிய அளவிலான செங்கல் கட்டுமானங்கள் இந்த காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இங்கே கிடைத்த செங்கலால் ஆன மேடைகள், சிக்கலான செங்கல் கட்டுமானங்கள், இரட்டைச் சுவர்களைக் கொண்ட உலைகள் ஆகியவை இந்த காலகட்டத்தைச் சேர்ந்தவை. பட மூலாதாரம்,ARCHAEOLOGICAL SURVEY OF INDIA தானியங்களை சேகரித்துவைக்கக்கூடிய, அலங்கரிக்கப்பட்ட ஜாடிகள், சுடு மண் குழாய்கள், சுடு மண் உறை கிணறுகளும் இந்த காலகட்டத்தைச் சேர்ந்த அடுக்கில் கிடைத்திருக்கின்றன. உயர்ந்த ரகமுள்ள கறுப்பு - சிவப்பு கலங்கள், சிவப்பு நிறம் பூசப்பட்ட பொருட்கள், வெள்ளை நிறம் பூசப்பட்ட கலங்கள், தமிழ் பிராமி எழுத்துகளைக் கொண்ட பானை ஓடுகள், கிறுக்கல்களைக் கொண்ட பானை ஓடுகள் ஆகியவை இந்த காலகட்டத்தைச் சேர்ந்த மண் அடுக்கில் கிடைத்திருக்கின்றன. இவை எல்லாவற்றையும் சேர்த்துவைத்துப் பார்க்கும்போது, இந்த காலகட்டத்தில் கீழடி நகரப் பண்புகளைக் கொண்ட மிக முக்கியமான இடமாக இருந்திருக்க வேண்டும். இந்தக் கோணத்தில் பார்க்கும்போது, கீழடி மதுரைக்கு அருகில் இருப்பதும், வரலாற்றுக் கால துறைமுகமான ஆலங்குளம் செல்லும் வழியில் இருப்பதும் மிகுந்த முக்கியத்துவம் பெறுவதாகக் குறிப்பிடுகிறார் அமர்நாத் ராமகிருஷ்ணன். பட மூலாதாரம்,K. AMARNATH RAMAKRISHNA இங்கு கிடைத்த பானை ஓடுகளில் இருக்கும் பிராகிருத பெயர்கள், கீழடிக்கும் இலங்கைக்கும் இடையில் வணிகத் தொடர்பு இருந்ததைச் சுட்டிக்காட்டுகின்றன. மதிப்புமிக்க கற்களால் ஆன மணிகள், தந்தத்தால் ஆன பொருட்கள், தாமிரப் பொருட்கள், முத்து போன்றவை இங்கு கிடைத்திருப்பதை வைத்துப்பார்க்கும்போது, இந்திய நிலப்பரப்பின் பிற பகுதிகளுடனும் உலகின் பிற பகுதிகளுடனும் கீழடிக்கு இருந்த தொடர்பு தெரியவருகிறது. ஆனால், மிக முக்கியமாகக் கவனிக்கத்தக்கது இங்கு கிடைத்த கட்டடத் தொகுதிகள்தான். தமிழ்நாட்டில் நடந்த அகழாய்வுகளில் வரலாற்று துவக்க காலத்தைச் சேர்ந்த கட்டடத் தொகுதிகள் மிக அரிதாகவே கிடைத்திருக்கின்றன. அரிக்கமேடு, காவிரிப்பட்டனம், கொற்கை போன்ற ஒரு சில இடங்களைத் தவிர, வேறு எங்கு இந்த காலகட்டத்தைச் சேர்ந்த கட்டடத் தொகுதிகள் கிடைத்ததில்லை. இந்தப் பின்னணியில்தான் கீழடியில் கிடைத்த கட்டடத் தொகுதிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. பட மூலாதாரம்,ARCHAEOLOGICAL SURVEY OF INDIA இந்த இரண்டு அகழாய்வுகளிலும் கிடைத்த கட்டடத் தொகுதிகள், மிகப் பெரிய கட்டடத் தொகுதிகளின் ஒரு பகுதியாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதனை ஓட்டி மேலதிக ஆய்வுகள் இந்தியத் தொல்லியல் துறையால் செய்யப்படாத நிலையில், இந்த கட்டடத் தொகுதிகள் எவ்வளவு பெரியவை, விரிவானவை என்பதை அறிய முடியவில்லை. இங்கு தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொள்வதன் மூலம் கீழடியின் கலாச்சார வளர்ச்சியை மட்டுமல்லாமல், வைகைச் சமவெளி மற்றும் தமிழ்நாட்டின் வரலாற்று துவக்க காலம் எப்படியிருந்தது என்பதைப் புரிந்துகொள்ளலாம் என்கிறார் அமர்நாத் ராமகிருஷ்ணன். கீழடியின் மூன்றாவது காலகட்டம் கி.மு. ஒன்றாம் நூற்றாண்டின் முடிவிலிருந்து கி.பி. மூன்றாம் நூற்றாண்டையும் தாண்டிச் செல்கிறது. இந்த இரு அகழாய்விலும் இங்கு கிடைத்த காசுகள், அதற்கு முன்பாக இங்கு கிடைத்த ராஜராஜன் காலத்து காசுகள் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது, இந்த மூன்றாவது காலகட்டம் பத்தாம் நூற்றாண்டுவரை நீண்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. 10ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு, இங்கு மக்கள் வாழ்வது குறைய ஆரம்பித்தது. பிறகு இந்த இடம் கைவிடப்பட்டது. ஆகவே, கீழடியின் காலகட்டம் என்பது கி.மு. எட்டாம் நூற்றாண்டில் துவங்கி கி.பி. பத்தாம் நூற்றாண்டுவரை நீண்டிருக்கிறது என்பதை இந்த ஆய்வறிக்கை உறுதிசெய்திருக்கிறது. பட மூலாதாரம்,ARCHAEOLOGICAL SURVEY OF INDIA கீழடியில் வாழ்ந்த மக்கள் என்ன உணவை உண்டார்கள், எந்த விலங்குகளை வளர்த்தார்கள், இங்கு கிடைத்த எழுத்துகள் என்ன சொல்கின்றன என்பதை இந்தக் கட்டுரையின் அடுத்த பாகத்தில் காணலாம். (தொடரும்) https://www.bbc.com/tamil/india-64565240
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.