Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

வடமாகாணத்தின் அடுத்த முதலமைச்சர் யார்?


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

வடமாகாணத்தின் அடுத்த முதலமைச்சர் யார்?

 என்.கே. அஷோக்பரன் 

தற்போதைய நிலையில், இலங்கையில் எந்தவொரு மாகாண சபையும் இயங்கும் நிலையில் இல்லை. 2019 ஒக்டோபர் எட்டாம் திகதி, ஊவா மாகாண சபையின் பதவிக்காலம் முடிவுக்கு வந்ததோடு, இலங்கையின் ஒன்பது மாகாண சபைகளும் இயங்கா நிலையை அடைந்தன.  

 2019ஆம் ஆண்டு காலப்பகுதியில், மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று சில தரப்புகள், குறிப்பாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தரப்பு, கோரிக்கை வைத்திருந்தாலும், 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர், அந்தக் குரலும் அடங்கிவிட்டது.  

 2020இல்  ‘கொவிட்-19’ பெருந்தொற்றுப் பரவல், நாட்டை முடங்கு நிலைக்குக் கொண்டு வந்த பின்னர், மாகாண சபைத் தேர்தல்கள் பற்றி, எந்த அரசியல் கட்சியும் பெரிதாக அக்கறை காட்டவில்லை. 

இந்த நிலையில், மாகாண சபைகள் இல்லாதொழிக்கப்பட வேண்டுமென்ற குரல், ஆளுந்தரப்பின் பெருந்தேசியவாதிகளால் அவ்வப்போது முன்வைக்கப்பட்டது. 

இருந்தபோதிலும், இந்தியாவை மீறி மாகாண சபைகளை இல்லாதொழிக்கும் எண்ணம், இந்த அரசாங்கத்துக்கு இருப்பதாகத் தென்படவில்லை. 

இந்த வருடம், மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படலாம் என்ற ஊகங்கள், பரவலாக பேசப்பட்டு வருகின்றன. 

எனினும், மீண்டும் உருவெடுத்துவரும் கொவிட்-19 பெருந்தொற்றின் மூன்றாம் அலை, மாகாண சபைத் தேர்தல்களை இன்னும் தாமதப்படுத்தும் என்றே தோன்றுகிறது.  

மாகாண சபைத் தேர்தல்களின் நிலை, இப்படியாக ‘இழுபறி’யாக இருக்கும் கட்டத்தில் கூட, வட மாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் யார் என்ற கருத்து ‘அடிபிடிகள்’, அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வருவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. 

இந்தப் பரபரப்பு அத்தியாயத்தின் தற்போதைய பகுதியை, வட மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும், இந்நாள் பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தொடங்கி வைத்திருக்கிறார்.   

“எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில், பொது முதலமைச்சர் வேட்பாளராக, வேலன் சுவாமிகளைக் களமிறக்கலாம்” என, தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், அண்மையில் தெரிவித்திருந்தார். இந்தக் கருத்து, வாதப் பிரதிவாதங்களை அவரது கட்சிக்குள்ளும், வௌியிலும் ஏற்படுத்தி இருக்கிறது. 

‘யார் இந்த வேலன் சுவாமிகள்’? என்ற கேள்வி, பலருக்குள்ளும் எழலாம். சுருக்கமாகச் சொன்னால், அவர் ஒரு சந்நியாசி; அண்மையில் நடத்தப்பட்ட ‘பொத்துவில் முதல் பொலிகண்டி வரை’யான போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தவர். இதைத்தாண்டி, அவரது அரசியல் செயற்பாடு என்று எதுவுமில்லை. 

இத்தகையவரை, நீதியரசர் விக்னேஸ்வரன் ஏன் பரிந்துரைத்தார் என்ற கேள்வி ஒருபுறமிருக்க, நீதியரசர் விக்னேஸ்வரனின் இந்தப் பரிந்துரையை, வேலன் சுவாமிகள் நிராகரித்திருக்கிறார். 

இது பற்றி ஊடகங்களுக்குக் கருத்து வௌியிட்டிருந்த வேலன் சுவாமிகள், “பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டம், மாபெரும் வெற்றியைப் பெற்றதன் பின்னர், ‘பொத்துவில் முதல் பொலிகண்டி வரை மக்கள் பேரழுச்சி இயக்கம்’ ஆரம்பிக்கப்பட்டது. இதன் கொள்கைகளில் ஒன்றான, உறுப்பினர்கள் எவரும் கட்சி அரசியலிலோ தேர்தல் அரசியலிலோ ஈடுபடுவதில்லை என்பது, என்னையும் சாரும். அரசியல், சமூக மட்டங்களை இணைத்துக்கொண்டு,  உரிமைகளுக்கான போராட்டங்களை ஒழுங்குபடுத்துவதிலேயே, நமது பணியை முன்னெடுப்போம்” என்று, வேலன் சுவாமிகள் தெரிவித்திருந்தார். நல்லது!  

முதலாவது வடக்கு மாகாண சபையின் ‘தோல்வி’ பற்றி, பலரும் கட்டுக்கட்டாக பதிவுசெய்துவிட்டார்கள். முதலாவது வடக்கு மாகாண சபையின் தோல்வியிலிருந்து, தமிழ் மக்கள் ஏதாவது பாடத்தைக் கற்றுக்கொள்ள விரும்பினால், அதில் முதன்மையாக அமைய வேண்டியது, கொள்கை உருவாக்க அரசியலுக்கும், அரசியல் நிர்வாகத்துக்கும் இடையிலான வேறுபாட்டை, தமிழ் மக்கள் உணர்ந்து கொள்ளுதலாகும். 

அரசியல் கொள்கைகளை முன்வைத்தல், கொள்கைகள் அடிப்படையிலான வாதப்பிரதிவாதங்களில் ஈடுபடுதல், கொள்கை முடிவுகளை எடுத்தல், கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட திட்டமிடல்களை முன்வைத்தல், கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட சட்டவாக்கத்தில் ஈடுபடுதல் என்பனவெல்லாம், கொள்கை வகுப்பு அரசியல் பாற்பட்டது. 

அந்தக் கொள்கை உருவாகத்ததை அமுல்படுத்துதல், அதை நிர்வகித்தல், கொள்கை வகுப்பு அடைய எத்தனிக்கும் அடைவுகளை அடைந்துகொள்ளுதல் ஆகியன, நிர்வாக அரசியலின் பாற்பட்டது. 

முதலாவது வடக்கு மாகாண சபையில் கொள்கை வகுப்பு ஓரளவுக்கேனும், தீவிர தமிழ்த் தேசிய அடிப்படைகளில் இடம்பெற்றது. ஆனால், நிர்வாகத்தில்தான் அது கோட்டைவிட்டது. 

ஆகவே, நிர்வாகத்தின் தோல்விதான், உண்மையில் முதலாவது வடமாகாண சபையின் தோல்வி.  

மாகாண சபையின் நிர்வாகம் என்பது, முதலமைச்சர் தலைமையிலான ஐவரைக் கொண்டமைந்த அமைச்சரவையினதும் ஆளுநரினதும் பாற்பட்டது. இங்கு ஆளுநர் என்பவர், ஜனாதிபதியின் முகவராக, ஜனாதிபதியால் நியமிக்கப்படுபவர் ஆவார். 

“ஆளுநர் எங்களை வேலை செய்ய விடுகிறார் இல்லை” என்ற ஒற்றை மந்திரத்தை, திரும்பத் திரும்ப உச்சரித்துவிட்டு, எந்தவொரு காரியத்தையும் சாதிக்காது இருப்பதற்குப் பெயர், நிர்வாகமும் அல்ல; அரசிலும்  அல்ல. 

ஆனால், வடக்கு மாகாணத்துக்கென்று ஒரு மாகாண சபை உருவானது, அதுதான் முதல் முறை. அன்று அமைச்சரவையில் இருந்தவர்கள், அரசியலுக்கே புதியவர்கள். ஆகவே, அவர்கள் அரசியல் நிர்வாகத்தில் தோல்வியடைந்தமை ஆச்சரியத்துக்கு உரியதொன்றல்ல. 

மிகச் சிறந்த அனுபவம்மிக்க கொள்கை வகுப்பு அரசியல்வாதிகள் கூட, அரசியல் நிர்வாகத்தில் தோல்வி கண்ட பல அனுபவங்களை, உள்ளூர் அரசியலிலும் உலக அரசியலிலும் காணலாம். ஆகவேதான், தமிழ் மக்களும் தமிழ் அரசியல் கட்சிகளும் ‘கொள்கை வகுப்பு அரசியல்’க்கும் ‘நிர்வாக அரசியல்’க்கும் இடையிலான வேறுபாட்டைப் புரிந்துகொள்வதும், அதன் அடிப்படையில் தமது அரசியல் முடிவுகளை எடுப்பதும் அவசியமாகிறது.   

‘முதலமைச்சர்’ என்பது, அடிப்படையில் அரசியல் நிர்வாகப் பதவி. ஆகவே, கொள்கை வகுப்பு என்பதைத் தாண்டி, அரசியல் நிர்வாக (அரச நிர்வாகம் அல்ல) ஆற்றல் உடைய தலைமைத்துவப் பண்பு மிக்கவர்களே, அந்த இடத்துக்கு மிகத் தகுதியானவர்கள். 

இந்த இடத்தில், இன்னொன்றைக் குறிப்பிடுதல் அவசியமாகிறது. அரசியல் நிர்வாகம் என்பது, ஒரு தனித்திறன். அது ஒருவரின் கல்வித் தகைமையிலோ, தொழில் அனுபவத்தையோ சார்ந்ததொன்றல்ல என்பதற்கு, உலகம் முழுவதும் பல உதாரணங்கள் இருக்கின்றன. 

பாலர் வகுப்புக் கல்வியை மட்டுமே பெற்றுக்கொண்ட அரசியல் தலைவர்கள் கூட, ஆகச் சிறந்த அரசியல் நிர்வாகிகளாகப் பரிணமித்திருக்கிறார்கள். அதேவேளை, பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களாக இருந்தவர்கள், அரசியல் நிர்வாகத்தைக் கொண்டு நடத்த முடியாது திணறியிருக்கிறார்கள். 

ஏனெனில், அரசியல் நிர்வாகம் என்பது, வெறுமனே மக்களைக் கவரப் பேசுவதும், கட்சியினரைச் சமாளிப்பதும், அறிக்கைகள் வௌியிடுவதும் அல்ல!

 மாறாகப் பொது நிர்வாகம், அரச சேவையாளர்கள், ஆளுநர், மத்திய அரசு உள்ளிட்ட பல்வேறு தரப்புகளையும் முறையாகக் கையாண்டு, தமது காரியங்களைச் சாதித்துக்கொள்ள வேண்டிய அதியுயர் பொறுப்புகளும் அழுத்தங்களும் நிறைந்ததொரு பதவியாகும்.   

ஹூப்ரு வேதாகமத்தில் ஒரு வாசகமுண்டு. ‘சரியான நிலைமைகளுக்காக நீங்கள் காத்திருந்தால், நீங்கள் ஒருபோதும் எதையும் செய்ய மாட்டீர்கள்’ என்கிறது அந்த வாசகம். 

ஆகவே, எமக்கேற்றாற் போல நிலைமைகள் அமைந்திருந்தால், நாம் நினைத்ததை நடத்தியிருப்போம் என்று சொல்பவர்கள், சிறந்த நிர்வாகிகள் அல்ல. மாறாக, இருக்கும் நிலைமைகளைச் சமாளித்து, எப்படியேனும் தமது காரியத்தை, அடிப்படைக் கொள்கைகளில் பிசிறுகள் இன்றிச் சாதித்துக்கொள்பவர்களே மிகச் சிறந்த நிர்வாகிகள். 

அத்தகைய நிர்வாகத்திறன் மிக்கவர்களை அடையாளங்கண்டு, தமிழ்க் கட்சிகள் தமது முதலமைச்சர், அமைச்சர் வேட்பாளர்களாக நிறுத்தும்போது, அவர்களுக்கு வட மாகாணத் தமிழ் மக்கள், தமது அங்கிகாரத்தைத் தேர்தலில் வழங்குவார்கள். 

அப்போது, அடுத்த வடக்கு மாகாண சபை, வட மாகாண மக்களுக்கு நிறைய விடயங்களைச் சாதித்துத் தரக்கூடியதொன்றாக அமையும்.   

மாறாக, பழுத்த அரசியல்வாதி, சமூகத்தில் மதிப்பு நிறைந்த ஆளுமை, கட்சித் தலைவர், முக்கியஸ்தர், அவர்களது வாரிசுகள், சொந்த பந்தங்கள், பிரபல வணிகர், முதலாளி, பிரதேசத்தில் சாதி, மத ரீதியில் முக்கியத்துவமானவர் உள்ளிட்ட அடிப்படைகளில், தமது முதலமைச்சர், அமைச்சர் வேட்பாளர்களைத் தமிழ்க் கட்சிகள் மீண்டும் தெரிவுசெய்யுமானால், முதலாவது வடமாகாண சபை போன்றே, அடுத்த வடக்கு மாகாண சபையும் அமைந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.  

இந்த இடத்தில், தமிழ்க் கட்சிகளும் தமிழ் மக்களும் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டிய குறள், ‘இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து அதனை அவன்கண் விடல்’ என்பதாகும்.    

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடமாகாணத்தின்-அடுத்த-முதலமைச்சர்-யார்/91-270373

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kapithan said:

அங்கஜன்ண்.......😜

இதை நான் சாடையாய் கண்டிக்கிறன். நீங்கள் இன்னொரு பெயரையும் சொல்ல வேணும். 😂

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இதை நான் சாடையாய் கண்டிக்கிறன். நீங்கள் இன்னொரு பெயரையும் சொல்ல வேணும். 😂

டக்கிளஸ் தேவானந்தா..

இப்ப சரியா... 😂

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kapithan said:

டக்கிளஸ் தேவானந்தா..

இப்ப சரியா... 😂

டக்ளஸ் அண்ணன் மத்தி/உச்சத்திலை நிக்கிறவர்.வருவாரோ? 😁

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

டக்ளஸ் அண்ணன் மத்தி/உச்சத்திலை நிக்கிறவர்.வருவாரோ? 😁

அவற்ற ஆயுட்கால ஆசையே தன்னை டமில்ஸ்களின் தலைவராக ஒருமுறையேனும் தன்னை நிரூபிப்பதுதானே..😂

 • Haha 1
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Similar Content

  • By கிருபன்
   ‘கறுப்பு ஜூலை’: மறக்கக்கூடாத வரலாறு
   என்.கே. அஷோக்பரன்
   போலந்து நாட்டின், க்ரக்கவ் நகருக்குப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு 2018ஆம் ஆண்டு  கிடைந்திருந்தது. போலந்தின் க்ரக்கவ் நகரிலிருந்து ஏறத்தாழ ஒன்றரை மணிநேர பயண தூரத்தில் இருக்கிறது நாஸிகளின் ‘ஒஷ்விட்ஸ்’ சித்திரவதை முகாம். பல்லாயிரம் யூதர்களை, நாஸிகள் அடைத்துவைத்த பல சித்திரவதை முகாம்களில் ஒஷ்விட்ஸூம் ஒன்று.
   சித்திரவதை முகாம், யூதர்கள் விஷவாயு செலுத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட விஷவாயு அறைகளைக் கொண்டதும், சுவரோடு நிற்கவைத்து சுட்டுக்கொல்லப்படும் கொலைச் சுவரைக் கொண்டதுமான கொலைக்களம் அது. இன்று, அந்த முகாம் ஒஷ்விட்ஸ் ஞாபகார்த்த முகாமாக, வரலாற்றின் கொடுமையான பக்கங்களை, அடுத்து வரும் சந்ததிகள் அறிந்துகொள்வதற்காக, பேணிப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. 
   யூதர்களின் வெட்டப்பட்ட தலைமுடிகள், அவர்கள் கொண்டு வந்த பயணப் பெட்டிகள், அவர்களது உணவுத் தட்டுகள், தண்ணீர்க் கோப்பைகள்,  காலணிகள் என்பவை மாபெரும் மண்டப அளவிலான கண்ணாடிப் பெட்டிக்குள் பல்லாயிரக்கணக்கில் குவிக்கப்பட்டு, காட்சிப்படுத்தப்பட்டு உள்ளமை எந்த உறுதியான இதயத்தையும் அதிர்ச்சியடைய வைக்கக்கூடியவை. 
   அங்கு, அடைத்து வைக்கப்பட்டவர்கள் தங்கவைக்கப்பட்டிருந்த முகாம் அறைகள், உடனடித் தீர்ப்பு வழங்கப்படும் அறை, அதற்கடுத்து, சுட்டுக்கொல்லப்பட முன்பு உடைமாற்றித் தம்மைக் கழுவிக்கொள்வதற்கான அறை, அடுத்து காத்திருப்பு அறை, அதற்கு அப்பால் கொலைச் சுவர் என அந்த முகாமினூடாக நடக்கும் போதே, கால்கள் நடுங்கும்! 
   ஒரு கட்டடத்தின் அடிப்பகுதியில் சில அறைகள்; அவைதான் விஷவாயு அறைகள் என அங்கிருந்த வழிகாட்டி சொன்னபோது, முதுகுத்தண்டினூடாக மின்சாரம் பாய்ந்ததைப் போன்ற உணர்வு ஏற்பட்டது. அந்த முகாமினூடாக நடந்தபோது, ஏதோ பெரும் அவல ஓலச்சத்தங்கள் ஒலித்துக் கொண்டிருப்பதாகவே காதுகள் உணர்ந்தன. கண்டவை தந்த அதிர்ச்சியால் வந்த மனப்பிரம்மையாக அது இருக்கலாம். 
   முதலாவது முகாமைப் பார்த்துவிட்டு வௌியே வந்தபோது, இரண்டாவது முகாமுக்குச் செல்லும் மனப்பலம் இருக்கவில்லை. இந்தச் சித்திரவதை முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டவர்கள், கொல்லப்பட்டவர்களின் (குழந்தைகள் உட்பட) புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. உலகின் பல்வேறு பாகங்களில் இருந்தும் வந்திருந்தவர்களில் சிலர், தமது மூதாதையர்களின் படங்களை அடையாளம்கண்டு, கண்ணீர் மல்கினார்கள். அது மனதை நொறுக்கும் காட்சியாக இருந்தது. 
   அன்றைய தினம், மனம் உறக்கம் கொள்ளவில்லை; சிந்தனைகள் எங்கெங்கோ சென்றன. இன்று ஞாபகச் சின்னமாக மாறியிருக்கும் ‘ஒஷ்விட்ஸ் முகாம்’, எனக்குள் ஏற்படுத்திய பாதிப்பு, வார்த்தைகளுக்குள் அடங்காது. நாஸிகளின் கொடுமைகள் பற்றி, பல ஆயிரம் பங்கங்களில் எழுதிய எழுத்தின் மூலம் உணரப்பட முடியாததை, அந்த ஞாபகச்சின்னம் உணர்த்தியது என்றால் அது மிகையல்ல. அந்த உணர்வு, நாஸிகளின் கொடுமைகள் பற்றிய உணர்வு மட்டுமல்ல; அது அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் எல்லா மனிதர்களின் மீதுமான உணர்வு;  உலகில் இதுபோன்ற கொடுமைகள், இனி அரங்கேறவே கூடாது என்ற உணர்வு; அதனை உணர்வதற்கு யூதனாக இருக்க வேண்டியதில்லை; மனிதனாக இருந்தால் போதும். நிற்க!
   இன்று ஞாபகார்த்த இடமாக மாற்றப்பட்டுள்ள ஒஷ்விட்ஸ் சித்திரவதை முகாமின் ஒரு  கட்டடத்துக்குள் நுழையும் போது, ‘வாழ்வுக்கான காரணம்’ (The Life of Reason) எனும் நூலின் ஆசிரியர் ஜோர்ஜ் சன்ரயானா, தனது நூலில் எழுதியிருந்த, ‘வரலாற்றிலிருந்து படிப்பினைகளைப் பெற்றுக் கொள்ளாதவர்கள், வரலாற்றை மீள அரங்கேற்றுவதற்குச் சபிக்கப்பட்டவர்கள் ஆகிறார்கள்’ என்ற வாசகம், அதன் வாசலில் எழுதப்பட்டிருந்தது. 
   எத்தனை உண்மையான, பலம் மிக்க வசனம் அது. அன்று ஜேர்மனியை ஆண்ட, முதலாவது உலக யுத்தத்தில் தோல்வியடைந்த ஜேர்மனியை, சில தசாப்தங்களில் மீண்டும் உலகத்தோடு போரிடும் வல்லரசாக மாற்றிய நாஸிகளின் கொடுமைகளைப் பற்றி, இன்று ஜேர்மனியில் கற்பிக்கிறார்கள்; நாஸிகள் நாயகர்கள் அல்ல என்பதைக் கற்பிக்கிறார்கள்; அவர்கள் கட்டவிழ்த்துவிட்ட படுகொலைகளைப் பற்றி, சித்திரவதைகளைப் பற்றிக் கற்பிக்கிறார்கள். இதன் நோக்கம், இனி இதுபோல் ஒரு கொடுமை நிகழ்ந்துவிடக்கூடாது என்பதுதான்.
   யூதர்கள், உரோமானியர், நாடோடிகள் ஆகியோரை நாஸிகள் வெறுத்தார்கள். தூய ஜேர்மானிய இனத்தை, இந்த ‘அந்நியர்’கள் அசுத்தப்படுத்துவதாக பரப்புரை செய்தார்கள். அந்த வெறுப்பின் காரணமாக, அவர்களை சித்திரவதை முகாம்களுக்கு அனுப்பி, பட்டினிபோட்டு, கடும் வேலைகளைச் செய்யவைத்து, சித்திரவதைகளைச் செய்து, அவர்களைத் தமது மருத்துவ ஆராய்ச்சிக்கு ஒரு விலங்கைப் போல பயன்படுத்தி, சுட்டுக்கொன்று, விஷவாயு செலுத்திக் கொன்று என, நாஸிகள் மீது அரங்கேற்றப்பட்ட கொடுமை கொஞ்ச நஞ்சமல்ல. இந்தக் கொடுமைகளுக்கு எல்லாம் ஆணிவேர் வெறுப்பு. 

   1983இல், இலங்கையில் அரங்கேறிய ‘கறுப்பு ஜூலை’ இன அழிப்பின் அடிப்படையும் வெறுப்புத்தான். உதாரணமாக, 1983 மே 19 ஆம் திகதி, ‘தி ஐலண்ட்’ பத்திரிகையில் பிரசுரமான, டி சில்வா என்ற ஒரு வாசகர் எழுதிய கடிதமானது, பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதற்கான வழிகளை முன்வைத்தது. அவர் முன்வைத்த வழிமுறையின் சுருக்கமானது: ‘வடக்கு, கிழக்கில் அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட வேண்டும். பொலிஸ், இராணுவம் ஆகிய படைகள் மேலதிகமாக அனுப்பப்பட்டு, பயங்கரவாதிகள் வேட்டையாடப்பட வேண்டும். அவர்களைக் கண்டவுடன் சுட வேண்டும். பாரம்பரிய தமிழர் தாயகம் என்று சொல்லப்படும் பிரதேசங்களில், சிங்களவர்கள் குடியேற்றப்பட வேண்டும். எந்தச் சந்தர்ப்பத்திலும் ‘ஈழம்’ என்ற ஒன்று வழங்கப்படாது என்ற பிரகடனத்தை வெளியிட வேண்டும். வடக்கு, கிழக்கில் பாதுகாப்புப் படைகளை வைத்திருப்பதற்கான மேலதிக செலவானது, அங்கு வதிவோரின் மீது விசேட வரியொன்றை விதிப்பதனூடாக ஈடுசெய்யப்படலாம். பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் பாதிக்கப்படுவோருக்கு எந்த நட்டஈடும் வழங்கக் கூடாது’ என்றவாறாகக் காணப்பட்டது.
   1983ஆம் ஆண்டு, கறுப்பு ஜூலைக் கலவரத்தின் பின்னணியில், இதுபோன்ற கடும் தமிழின வெறுப்பு மனநிலை இருந்தது. இது ஒரே நாளில் வந்ததல்ல; கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டமைக்கப்பட்டது. இதில் இலங்கை அரசியலின் பங்கு முக்கியமானது. 
   1956ஆம் ஆண்டு முதல், தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வெறுப்பும் வன்முறைகளும் இதற்குச் சாட்சி. இதில் அரச இயந்திரத்தின் பங்கும் குறிப்பிடத்தக்கது.

    
   1983ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் திகதி, லண்டன் ‘டெய்லி ரெலிகிராப்’ பத்திரிகைக்கு இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன ஒரு குறுஞ்செவ்வியை அளித்திருந்தார். அதில், “யாழ்ப்பாண மக்களின் (தமிழ் மக்களின்) அபிப்பிராயத்தைப் பற்றி, இப்போது நான் கவலைப்படவில்லை; நாம், அவர்களைப் பற்றி யோசிக்க முடியாது. அவர்களுடைய உயிர்களைப் பற்றியோ, அவர்கள் எம்மைப் பற்றிக் கொண்டிருக்கும் அபிப்பிராயம் பற்றியோ யோசிக்க முடியாது; வடக்கின் மீது எவ்வளவுக்கு எவ்வளவு அழுத்தம் பிரயோகிக்கப்படுகிறதோ, அவ்வளவுக்கு இங்குள்ள சிங்கள மக்கள் சந்தோஷப்படுவார்கள்” என்று, அப்பட்டமான இனவெறி அரசியலை, வௌிப்படையாக உலகுக்கு அவர் சொல்லியிருந்தார்.
   ஆனால், இந்த வரலாறுகள் இலங்கையில் கற்பிக்கப்படுவதில்லை. இன்று கூட, தமிழ் மக்களுக்கு அடைக்கலமும் பாதுகாப்பும் வழங்கிய சிங்கள மக்கள் பற்றிய கருத்தியலை ‘கறுப்பு ஜூலை’ பற்றிப் பேசும் போது பலரும் முன்வைக்கிறார்கள். 
   தம்முடைய உயிரைப் பணயம் வைத்து, பல தமிழ்க் குடும்பங்களைப் பாதுகாத்த சிங்கள மக்கள் பலபேர் இருக்கின்றார்கள். அது உண்மை! ஆனால், ‘கறுப்பு ஜூலை’ என்பது அவர்களைப் பற்றியது அல்ல. தமிழ் மக்களின் உயிர்களைப் பாதுகாத்த அந்த நல்ல உள்ளங்கள் அங்கிகரிக்கப்பட வேண்டியவையே! ஆனால், ‘கறுப்பு ஜூலை’ அவர்களைப் பற்றியது அல்ல. 
   ‘கறுப்பு ஜூலை’யின் கருத்தியலை, அவ்வாறு மாற்ற முனைவது பெரும் வரலாற்றுத் துரோகமாகும். ‘கறுப்பு ஜூலை’ என்பது, இந்த நாட்டில் வேர் கொண்டுள்ள இனவெறியைப் பற்றியது. ஆதிக்க மனநிலை கொண்ட பேரினவாதம், சிறுபான்மை இனத்தை இன அழிப்புச் செய்ததன் வரலாறு.
    இதில் பெருஞ்சோகம் என்னவென்றால், இதைப் பற்றி முறையான நீதி விசாரணை  இடம்பெற்று, குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. இதன் பின்னணியில் இருந்தவர்கள் பொறுப்புக்கூற வைக்கப்படவில்லை. இது பற்றி, நாம் பேசுவது கூட இல்லை. குறைந்த பட்சம், ஞாபகார்த்த நிகழ்வுகளை அரசு நடத்துவதும் இல்லை. ஒரு ஞாபகார்த்த சின்னம் கூட இல்லை. ஜேர்மனியோடு இதனை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம்!
   தமது பிழைகள், தாம் இழைத்த கொடுமைகளை மறைத்துவிட்டு, வரலாற்றுக்கு வௌ்ளைச் சாயம் அடிப்பதால் எந்த நன்மையும் விளையப்போவதில்லை. வரலாற்றின் தவறுகளை ஏற்றுக்கொண்டு, அதற்குப் பிரயாச்சித்தம் தேடுவதுடன், இனி இதுபோன்ற நிலை வரக்கூடாது என்பதற்காக அந்த வரலாற்றுத்தவறைப் பற்றி, அடுத்த சந்ததிக்குக் கற்பிப்பதுதான் இந்த நாட்டுக்கும் அதன் எதிர்காலத்துக்கும் நாம் செய்யக்கூடிய பெருந்தொண்டு ஆகும்.
   மறக்கமுடியாத வரலாறு இது. மனிதத்துக்கு எதிரான இந்தப் பெரும் குற்றத்துக்கு எவரேனும் பொறுப்பேற்றுக்கொண்டால்தான், மன்னிப்பது பற்றி பாதிக்கப்பட்டவர்கள் சிந்திக்கக் கூட முடியும். யாரும் பொறுப்பேற்றுக்கொள்ளாத குற்றத்துக்கு யாரை மன்னிப்பது?
   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கறுப்பு-ஜூலை-மறக்கக்கூடாத-வரலாறு/91-277447
    
    
    
  • By கிருபன்
   அடக்குமுறைச் சிந்தனைகள்
   என்.கே. அஷோக்பரன்
   இலங்கையர்களின் ‘ட்விட்டர்’ சமூக வலைத்தளப் பகுதியில், இலங்கையின் பிரபல ஊடக நிறுவனமொன்றின் பணிப்பாளரான, அரசியல் பின்புலத்திலிருந்து வந்த பெண்மணி ஒருவர், அண்மையில்  கடும் விமர்சனங்களை எதிர்கொண்டார். அவர், முன்னொருபொழுது வழங்கியிருந்த பேட்டியொன்றும் பெண் தலைமைத்துவ விருது வழங்கல் நிகழ்வொன்றில் ஆற்றியிருந்த உரையொன்றும், மீண்டும் ‘ட்விட்டர்’ தளத்தில் பகிரப்பட்டதே, அவர் விமர்சனங்களைச் சந்திக்கக் காரணமாயிற்று. 
   அந்த விருது வழங்கும் விழாவில், அவர் ஆற்றிய உரையில் குறிப்பிட்டிருந்த விடயங்கள், இங்கு கவனமீர்ப்பதாக அமைகிறது. அந்த உரையின் இரத்தினச் சுருக்கம், தன்னிடம் அதிகாரம் வந்தால், தான் ஊடகங்களையும், சமூக ஊடகங்களையும் போர்க்கால அறையொன்றை அமைத்து, தணிக்கை செய்வேன் எனும் தொனியில் அமைந்திருந்தது. அவருக்கெதிரான விமர்சனங்கள் முன் வைக்கப்படுவதற்கு இந்தக் கருத்து முக்கிய காரணமாகியது. 
   சில விமர்சகர்கள், இந்தப் பெண்மணியை ஹிட்லரின் பிரசாரப் பீரங்கியான கோயபெல்ஸூடன் ஒப்பிடவும் செய்தார்கள். அதன் பொருத்தப்பாடுகள் எவ்வாறு இருப்பினும், இந்த ஒப்பீட்டுக்கான காரணம், ‘தணிக்கை’ எனும் இரும்புக்கரத்தைக் கொண்டு, அடக்குமுறையைப் பயன்படுத்தி ஊடகங்களைத் தமது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, பேச்சுரிமை, கருத்து வௌிப்பாட்டுச் சுதந்திரம் ஆகியவற்றை மீறிச்செயற்பட்டு, அதனூடாகத் தமது கருத்துகளை மட்டும் பிரசாரம் செய்தல் போன்ற எண்ணங்களை, குறித்த பெண்மணி வௌிப்படுத்தியதாக இருக்கலாம். 
   சுதந்திரத்துக்கான மனிதனின் வேட்கை என்பது, குறைத்து மதிப்பிடக்கூடிய ஒன்றல்ல. 1320இன் ஸ்கொட்லாந்தின் சுதந்திர பிரகடனமான ‘ஆப்ரோத்’ அறிவிப்பில், “நாம் போராடுவது புகழுக்காகவோ, செல்வத்துக்காகவோ, மதிப்புக்காகவோ அல்ல. நாம் எந்த நல்ல மனிதனும் விட்டுக்கொடுக்காத, அதற்கான தன் உயிரையும் விடத்துணியும் சுதந்திரத்துக்காக மட்டுமே போராடுகிறோம்” என்று வௌிப்பட்டிருந்த வார்தைகள் சுதந்திரத்துக்கான மனிதனின் வேட்கையை எடுத்துக்காட்டும் சிறந்த உதாரணங்களுள் ஒன்றாகும். உரிமைகளும் சுதந்திரமும் அடக்கப்படும் போது, அதை பெற்றுக்கொள்ள மனிதன் தன் உயிரையும் பணயம் வைக்கத்தயங்கியதில்லை என்பதற்கு உலக வரலாறே சாட்சி. அதனால்தான், உலக வரலாற்றில் வல்லாட்சிகள் நீடித்து நிலைத்ததில்லை. 
   “மனிதனின் இருப்பை உறுதிப்படுத்துவதே, அவனது சிந்தனைதான் என்பது மேற்குலகின் தத்துவ அடிப்படைகளில் ஒன்று” என்பார் பிரெஞ்சுத் தத்துவவியலாளரான ரெனே டெய்காட். ஆகவே, சிந்தனை என்பது மனிதனின் இருப்பின் அடிப்படைகளில் ஒன்று! அதனால்தான், சிந்தனைக்கான சுதந்திரம் என்பது, மனித இருப்பின் அடிப்படை. சிந்தனையின் தொடர்ச்சிதான், அதன் வௌிப்பாடு. ஆகவே தான், மனித உரிமைகளின் அடிப்படையானதாக பேச்சுரிமை அதாவது, சிந்தனைகளின் வௌிப்பாட்டுரிமை அமைகிறது.
   பிரெஞ்சுப் புரட்சியைத் தொடர்ந்து, வௌியான மனிதன் மற்றும் குடிமக்களின் உரிமைகள் பிரகடனத்தில், பேச்சுரிமையின் முக்கியத்துவம், “கருத்துகள் மற்றும் அபிப்பிராயங்களின் கட்டற்ற தொடர்பாடல் என்பது மனிதனின் உரிமைகளில் கட்டற்ற பொக்கிஷமாகும்”என்ற வார்த்தைகளின் ஊடாக அங்கிகரிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அது பேச்சுரிமைக்கான சட்டரீதியிலான மட்டுப்பாடுகள் உருவாக்கப்பட முடியும் என்பதையும் குறிப்பிட்டிருந்தது. 
   ஆனால், இதன் பின்னர் அடுத்த சில வருடங்களில் பிறந்த அமெரிக்க அரசியலமைப்புக்கான முதலாவது திருத்தம் பேச்சுரிமை, ஊடக உரிமை, ஒன்றுகூடலுக்கான உரிமை ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் சட்டமியற்றமுடியாத மட்டுப்பாட்டை அமெரிக்க கொங்கிரஸுக்கு ஏற்படுத்தும் அளவுக்குப் பேச்சுரிமையின் முக்கியத்துவத்தை அங்கிகரித்திருந்தது. எவரும் தாம் விரும்பிய சிந்தனைகளைக் கொண்டிருக்கவும் அதனைப் பேசவும் அச்சிடவும் பிரசாரம் செய்வதற்குமான உரிமை அங்கிகரிக்கப்பட்டமை, மனித வரலாற்றின் பெரும் திருப்புமுனை. 
   அமெரிக்காவைப் போன்ற பரந்த பேச்சுரிமைக்கான அங்கிகாரம் பல்வேறு நாடுகளுக்கும் உவப்பானதாக அமையவில்லை. காரணம், பல்வேறு நாடுகளுக்கும் வேறு முக்கிய நிகழ்ச்சி நிரல்கள் இருந்தன. அதில் முக்கியமானது மதம். மதச்சார்புடைய நாடுகள், தமது மதங்களைப் பாதுகாக்கத் தலைப்பட்டன. அதற்காக பேச்சுரிமையை மட்டுப்படுத்த வேண்டியதாயிற்று. மேலும் முடியாட்சி, சர்வாதிகார ஆட்சி, கம்யூனிஸ வல்லாட்சி உடைய நாடுகள், தம்முடைய அதிகாரத்தைப் பாதுகாக்க, பேச்சுரிமையை மட்டுப்படுத்தின. இந்த நிலைமை இன்றும் தொடர்கிறது. 
   சீனாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியை விமர்சிப்பது, கடும் விளைவுகளைக் கொண்டதாக அமையும். ஆட்சியாளர்களை மீறி, எந்தவொரு தகவலும் கூட மக்களைச் சென்றடைய முடியாத நிலை அங்கு நிலவுகிறது. சிங்கப்பூரில் கூட, பேச்சு சுதந்திரம் என்பது பெரும் மட்டுப்பாடுகளைக் கொண்டதாகவே இருக்கிறது. இதன் விளைவுதான் சிங்கப்பூரை சுதந்திரகாலம் முதல் ஒரே கட்சி ஆண்டு வருகிறது. 
   இந்தப் பின்புலத்தில்தான் இலங்கையில், குறிப்பாக அதிகார பரப்பில் உள்ளவர்களிடம் உருவாகியுள்ள தணிக்கை மீதான பற்று, இலங்கையர்களின் பேச்சுரிமையையும் வௌிப்பாட்டு உரிமையையும் கட்டுப்படுத்துவதில் கொண்டுள்ள ஈர்ப்பு, தகவலறியும் மக்களின் உரிமை ஆகியவற்றைத் தமது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதற்கான துடிப்பு என்பனவற்றை நாம் கவனிக்க வேண்டியதாக இருக்கிறது. 
   சீனாவிடமிருந்தும் சிங்கப்பூரிடமிருந்தும் உற்பத்தியை அதிகரிக்கும் முறைகள், உட்கட்மைப்பு அபிவிருத்தி உபாயங்கள் போன்றவற்றைக் கற்றுக்கொள்ளாது, அவற்றின் அடக்குமுறை வழிவகைகளை மட்டும் பின்பற்ற விளைவதன் நோக்கம், ஆட்சியாளர்கள் தம் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளல், அதிகாரத்தைப் பலப்படுத்தல் என்பதாகவே அமைகிறது. 
   சமூக ஊடகங்களுக்கு முற்பட்ட காலத்தில், அரச ஊடகம் அரசாங்கத்தின் கைப்பிள்ளையாக இருந்த நிலையில், தனியார் ஊடகங்களை சாம, தான, பேத, தண்டங்களினூடாகத் தமக்குச் சாதகமாக மாற்றிக்கொள்வதன் மூலம், மக்களின் தகவலறியும் உரிமையை பெருமளவுக்குக் கட்டுப்படுத்தும் கைங்கரியத்தை ஆட்சியாளர்கள் முன்னெடுத்தார்கள். 
    ஆட்சியாளர்களுக்கு எதிராக கருத்துகளைத் வௌிப்படுத்திய தனியார் ஊடகங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுதல், ஊடகவியலாளர்கள் காணாமல் போதல், கொல்லப்படுதல் என்பவை எல்லாம் நாம் காணாததல்ல. ஆனால், சமூக ஊடகங்களின் வருகை, வல்லாட்சியாளர்களுக்கும் அவர்களின் அடிவருடிகளுக்கும் பெரும் சவாலாக மாறியிருக்கிறது.
   தன்னைப் பெரும் மரியாதைக்குரிய நபராகக் காட்டிக்கொள்ள விளையும் ஆட்சியாளர் ஒருவர், மிக முக்கியமானதாகக் கருதி வௌியிட்ட ‘பேஸ்புக்’ கருத்துக்கு ‘ஹஹா’ போட்டுச் சிரிக்கும் நபர்களை, அவர்களால் கட்டுப்படுத்த முடியாதது, அவர்களின் ஈகோவை பெருமளவு பாதிப்பதுடன், இரத்தக் கொதிப்பை அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லைத்தான். 
   இதேபோலத்தான், பெரும் அரசியல் பின்புலத்திலிருந்து வந்து, நாட்டின் செல்வாக்கு மிக்க ஊடகமொன்றை நடத்திக்கொண்டிருக்கும் ஒருவர், அவர் கூறிய அரைகுறைத்தனமான கருத்துக்காகப் பொதுவௌியில் சாதாரண குடிமக்களால் விமர்சிக்கப்படும் போது, அது அவரின் ஈகோவை மிகக் காயப்படுத்துவதாக அமைகிறது. பெரிய நிலைகளில் இருந்தாலும், தாழ்வுச்சிக்கல் நிறைந்த மனங்களால் நியாயமான விமர்சனங்களைக் கூட ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. ஆகவேதான், தணிக்கை, போர்க்கால அறை அமைத்து கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த முயலுதல் ஆகிய வல்லாதிக்க சிந்தனைகளை அவர்கள் வௌிப்படுத்துகிறார்கள். 
   “ஜனநாயகம் என்பது சிக்கலானதுதான். ஜனநாயகத்துக்கு எதிரான மிகச் சிறந்த வாதம் சராசரி வாக்காளருடனான ஐந்து நிமிட உரையாடலாகும்” என்றார் சேர் வின்ஸ்டன் சேர்ச்சில். ஆனால், அவரேதான், “ஜனநாயகம் மிகச் சிறந்தது என்று யாரும் பாசாங்கு செய்யவில்லை. அவ்வப்போது முயற்சிக்கப்பட்ட மற்ற அனைத்து ஆட்சி வடிவங்களிலும் ஜனநாயகம் மோசமான தன்மை குறைந்தது” என்றும் தெரிவித்தார். 
   சுருக்கமாகச் சொன்னால், இதுவரை மனிதன் முயற்சித்த எல்லா ஆட்சி வடிவங்களிலும், ஜனநாயகமே ஒப்பீட்டளிவில் சிறந்ததாக இருக்கிறது. அதற்குக் காரணம், அது தனி மனித உரிமைகளையும் சுதந்திரங்ளையும் மதிக்கிறது. வல்லாட்சியைத் தடுப்பதை அடிப்படை நோக்கமாகக் கொண்டமைகிறது. 
   வெறும் தேர்தல்கள் மட்டும்தான் ஜனநாயகம் என்பது பொய். தனி மனித சுதந்திரங்களும் உரிமைகளும் இல்லாத நாடு, வெற்றுத் தேர்தல் நாடகத்தை அரங்கேற்றுவதால் ஜனநாயக நாடாகிவிடாது. ஆனால், இந்த தனி மனித உரிமைகளும் சுதந்திரங்களும் வல்லாட்சி நோக்கும், அதனை அடைந்துகொள்வதற்கான அடக்குமுறைச் சிந்தனைகளும் கொண்ட ஆட்சியாளர்களுக்கும் அவர்களது அடிவருடிகளுக்கும் உவப்பானதாக இருப்பதில்லை. 
   ஆகவேதான் தனிமனித உரிமைகளை அடக்கியாள அவர்கள் முனைகிறார்கள். தமது உரிமைகளையும் சுதந்திரத்தையும் இத்தகைய ஆட்சியாளர்களிடமிருந்தும், அவர்களது அடிவருடிகளிடமிருந்தும் மக்கள் கண்ணுங்கருத்துமாகப் பாதுகாப்பது அவசியம். சுதந்திரங்களும் உரிமைகளும் ஒருமுறை பறிபோய்விட்டால், அதனை மீட்பதற்கு மனிதகுலம் பெரும் போராட்டத்தை சந்திக்க வேண்டியதாக இருக்கும். அதற்கு உலக வரலாறே சாட்சி.
    
    
   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அடக்குமுறைச்-சிந்தனைகள்/91-276992
  • By கிருபன்
   குடும்ப ஆட்சியும் இலங்கையும்
   என்.கே.அஷோக்பரன்
   சமகால அரசியலில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை என்று அண்மையில் நாமல் ராஜபக்‌ஷ சொல்லியிருந்த கருத்து பெரும் நகைமுரணான வரவேற்பைப் பெற்றிருந்தது. கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதி, அவரின் அண்ணன் மஹிந்த ராஜபக்‌ஷ பிரதமர் மற்றும் முக்கிய பொருளாதாரம் சார்ந்த அமைச்சுக்களையும் தன்னகத்தே கொண்டிருக்கிறார்,
   பாராளுமன்றத் தேர்தலில் போட்டியாடாத, தேசியப்பட்டியலில் கூட பெயர் இடம்பெறாத, ஆனால் இன்று பாராளுமன்றம் ஏகியுள்ள தம்பி பெசில் ராஜபக்‌ஷ  நிதி அமைச்சர், அண்ணன் சமல் ராஜபக்‌ஷ அமைச்சரவை அமைச்சர், அவரின் மகன் சஷீந்திர ராஜபக்‌ஷ இராஜாங்க அமைச்சர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மகன் நாமல் ராஜபக்‌ஷ அமைச்சரவை அமைச்சர், ராஜபக்‌ஷர்களின் சகோதரியான காந்தனி ராஜபக்‌ஷ ரணவக்கவின் மகன் நிபுன ரணவக்க மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர். மஹிந்தராஜபக்‌ஷவின் இன்னொரு மகனான யோஷித ராஜபக்‌ஷ பிரதமரின் அலுவலர்களின் முதல்வர்.
   2015 முன்னர் இருந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்தில் ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்த நிஷாந்த விக்ரமசிங்ஹ, மஹிந்த ராஜபக்‌ஷவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்‌ஷவின் சகோதரர். அதே ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவராக இருந்த சமீந்திரராஜபக்‌ஷ, சமல் ராஜபக்‌ஷவின் இன்னொரு மகன். 2006 காலப்பகுதியில் ரஷ்யாவுக்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்டவரும், கொவிட்-19 பெருந்தொற்றுக்கு மத்தியில் உக்ரேன் சுற்றுலாப்பயணிகளை இலங்கைக்கு அழைத்து வந்தவருமான உதயங்க வீரதுங்க மஹிந்த ராஜபக்‌ஷவின் தாயின் சகோதரியின் மகன்.
   முன்னர் அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்ட ஜாலிய விக்ரமசூரிய மஹிந்த ராஜபக்‌ஷவின் தந்தையின் சகோதரர் டீ.எம்.ராஜபக்‌ஷவின் மகளின் மகன். மத்தளை விமானநிலையம் கட்டப்பட்ட காலத்தில் சிவில் விமானசேவை அதிகாரசபையின் தலைவராக இருந்த பிரசன்ன விக்ரமசூரிய, ஜாலிய விக்ரமசூரியவின் தம்பியாவார். நாமல் ராஜபக்‌ஷவின் கருத்து நகைமுரணான வரவேற்பைப் பெற்றமைக்கு இந்தப் பின்புலம்தான் காரணம்.
   குடும்ப ஆட்சி என்று தமிழில் நாம் சுட்டுவதை ஆங்கிலத்தில் நெபொடிஸம் (Nepotism) என்பார்கள். இது nepotismo என்ற இத்தாலிய வார்த்தையிலிருந்து வந்தது. இந்த வார்த்தையின் வேர் nepos என்ற இலத்தீன் வார்த்தை. இலத்தீனில் nepos என்றால் nephew மருமகன் என்று அர்த்தம். 17ஆம் நூற்றாண்டிற்கு முன்னர், பாப்பரசர்களின் தமது அதிகாரத்தை தமக்கடுத்து, தமது மருமகன்களுக்கு வழங்கிய வழக்கத்தைக் குறித்து இந்தச் சொல் உருவாகியிருக்கலாம் என்கிறார்கள் சில ஆய்வாளர்கள். ஆனால் இந்தச் சொல்லின் பயன்பாடு, ஜனநாயக வௌியில்தான் முக்கியத்துவம் மிக்கதாக அமைகிறது.
   ஃபிரஞ்ச் புரட்சிக்கு முன்னர், அறுதிப்பலங்கொண்ட முடியாட்சியாக இருந்த பதின்நான்காம் லூயியின் ஆட்சியின் போது, தனது அறுதிப்பலத்தைக் குறிக்க பதின்நான்காம் லூயி சொன்னதான சொல்லப்படும் கூற்றுதான் “லீ டட் சீ முஆ” (l’etat, c'est moi), அதாவது “அரசு, அது நானே” (நானே அரசு). கவனிக்க, அரசன் நானே என்று லூயி சொல்லவில்லை, அரசே நான்தான் என்பதுதான் அவரது கூற்று. இத்தகைய அறுதிப்பலங்கொண்ட முடியாட்சியை வீழ்த்தித்தான் பிற்காலத்தில் நவீன ஜனநாயகம் பிறக்கிறது.
   ஃபிரஞ்ச் புரட்சியின் சிந்தாந்தகர்த்தாக்களில் ஒருவரான மொன்டஸ்க்யு “அதிகாரப் பிரிவுக் கோட்பாட்டை” முன்வைத்தது அறுதிப்பலங்கொண்ட தனிநபரின், அல்லது குழுக்களின் ஆட்சி உருவாகிவிடக்கூடாத என்பதனால்தான். ஓர் அரசின் மூன்று பாகங்களான சட்டவாக்கம், சட்டநிர்வாகம், நீதி ஆகியன ஒரு நபரின் அல்லது ஒரு குழுவின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடாது என்பதுதான் மொன்டெஸ்க்யூவின் கருத்தின் அடிப்படை. “அரசு, அது நானே” என்ற நிலை ஜனநாயகத்துக்கு  உவப்பானதல்ல என்பதுதான் அதிகாரப் பகிர்வுக் கோட்பாட்டின் தாற்பரியம். ஆகவேதான் குடும்ப ஆட்சி ஜனநாயக விரோதமானதாகக் கருதப்படுகிறது.
   இந்த இடத்தில்தான் சிக்கலானதொரு மாற்றுக்கருத்து இடையீடு செய்கிறது. இங்கு கோட்டாபய, மஹிந்த, சமல், சஷீந்திர, நாமல் ஆகிய ராஜபக்‌ஷர்களும், நிபுன ரணவக்கவும் தேர்தலில் கோட்டியிட்டு மக்களால் தெரிவுசெய்யப்பட்டவர்கள்.  ஆகவே, இதனை ஜனநாயக விரோதம் என்று எப்படிச்சொல்லலாம் என்ற கேள்வியில் சில நியாயங்கள் தென்படலாம்.
   பெசிலின் நியமனம் வௌித்தோற்றத்திற்கு ஜனநாயக விரோதமானது என்பதில் மாற்றக்கருத்துக்கள் இருக்கமுடியாது. ஆனால், பெசில் தேர்தலில் போட்டியிட்டிருந்தால் அவர் வெற்றி பெற்றிருப்பார் என்பதில் பெரும் ஐயம் எழ முடியாது. இதற்குக் காரணம் எமது நாட்டின் அரசியல் கலாசாரம். எமது நாடு என்பதை விட, தெற்காசியாவின் அரசியல் கலாசாரம் என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும்.
   ஜனநாயகம் என்பது எமது நாடுகளில் போராடிப் பெறப்பட்ட ஒன்றல்ல. ஃபிரன்ஞ்ச் புரட்சியைப் போன்ற பெரும் புரட்சிகள் இங்கு மக்களால் நடத்தப்பட்டு முடியாட்சி வீழ்த்தப்படவில்லை. பிரித்தானிய கொலனித்துவத்துவக் காலகட்டத்தில் ஜனநாயகத்தின் சில அம்சங்கள் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டன. ஜனநாயக, தாராளவாத சிந்தனைகள் வலுப்பெறத்தொடங்கிய காலகட்டத்தில் பிரித்தானிய மற்றும் ஐரோப்பிய கல்வியைப் பெற்றுக்கொண்ட உயர்குழாம் அங்கு பிரபலமாகிக்கொண்டிருந்த ஜனநாயக, தாராளவாத சிந்தனைகளை இங்கு கொண்டுவந்தார்கள்.
   ஆகவே, ஒருவகையில் சிந்தித்தால் இங்கு ஜனநாயகம் என்பது உயர்குழாமின் செயற்றிறட்டமாகவே இருந்தது. இதனால் ஜனநாயகக் கட்டமைப்புக்கள் தோற்றுவிக்கப்பட்டாலும், ஜனநாயக சிந்தனைகள் இங்கு பெருமளவிற்கு வேரூன்றவோ, வளம்பெறவோ இல்லை. நிலபிரபுத்துவக் கால சிந்தனைகளின் செல்வாக்கு தொடரவே செய்தது. அதனால்தான் ஆரம்பகாலம் முதல், இன்று வரை பிரித்தானிய கொலனித்துவ காலத்தில் பிரித்தானிய ஆட்சியாளர்களின் ஆதரவால் செல்வாக்குப் பெற்ற குடும்பங்களாக மாறியவையே, இன்றும் அரசியலிலும் செல்வாக்கோடு தொடர்வதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.
   இதனைக் குறிப்பிடுவதால் ஜனநாயகத்தால் மற்றவர்களுக்கு வாய்ப்பே கிடைக்கவில்லை என்று அர்த்தமல்ல. ஆனால் அதிகாரத்தின் ஸ்தலம் பெருமளவிற்கு மாறவில்லை. அவ்வப்போது ஏற்படும் குறுகிய மாற்றங்கள் கூட, புதிய “நிலபிரபுக்களை” உருவாக்குகிறதேயன்றி, இங்கு ஜனநாயக அரசியல் கலாசாரம் உறுதியடையவில்லை. 1936ல் தெற்கிலிருந்த கிராமமொன்றில் நிலவுடைமையாளர்களாக இருந்த ராஜபக்‌ஷர்களின் குடும்பத்திலிருந்து டீ.எம்.ராஜபக்‌ஷ அரச சபைக்கு தெரிவு செய்யப்படுவதோடு ராஜபக்‌ஷர்களின் அரசியல் பிரவேசம் தொடங்கியது.
   1945ல் டொன் மத்யூ ராஜபக்‌ஷவின் மரணத்தைத் தொடர்ந்து இடம்பெற்ற இடைத் தேர்தலில் அவரின் சகோதரரும், மஹிந்த ராஜபக்‌ஷவின் தந்தையாருமான டொன் அல்வின் ராஜபக்‌ஷ தேர்தலில் வெற்றி பெறுகிறார். அதன் பின்னர் அரசியலில் அவர்களின் ஆதிக்கம் மக்களின் வாக்குகளோடு அதிகரித்ததேயன்றி குறையவில்லை. ஆகவே இந்த குடும்ப ஆட்சிக்கு அவர்கள் மட்டும் காரணமல்ல. அவர்களுக்கு வாக்களிக்கும் மக்கள்தான் பிரதான காரணம்.
   இந்தியாவில் தேர்தலில் போட்டியிட நேரு பரம்பரையில் வந்தவன் என்பதைத்தவிர ராகுல் காந்திக்கு வேறு எந்த தகுதியும் தேவையில்லை. அதுபோலத்தான் இங்கும் பண்டாரநாயக்க, ராஜபக்‌ஷ, சேனநாயக்க, விக்ரமசிங்ஹ, விஜேவர்த்தன போன்ற குடும்பங்களைச் சார்ந்தவர்களின் நிலையும். இதற்கு அவர்கள் காரணம் என்று சொல்வது சோம்பேறிகளின் சாட்டாகத்தான் இருக்க முடியும்.
   தேர்தலில் வெல்லவும், அதிகாரத்தைக் கைப்பற்றவும் ஒரு வாய்ப்பு இருக்கும் போது அதனை அவர்கள் பயன்படுத்தக்கூடாது என்று எதிர்பார்ப்பதில் நியாயமில்லை. இங்கு மக்களின் சிந்தனையும், மனநிலையும், அரசியல் கலாசாரமும்தான் மாறவேண்டும். ஒருவர் நல்லவர் வல்லவர் என்பதற்காக அவரது தம்பிக்கும், மனைவிக்கும், மகனுக்கும், பேரனுக்கும் வாக்களிக்கும் மக்கள் கூட்டம் குடும்ப ஆட்சியைப் பற்றி விமர்சிக்கும் தகுதியை இழந்துவிடுகிறது.
   அதேவேளை ஒருவர் அரசியலில் இருந்தார் என்பதனால், அவரது மகனோ, பேரனோ, தம்பியோ, மனைவியோ அரசியலுக்கு வரவே கூடாது என்பதும் அபத்தமாகும். இந்த நிலையில் ஒரு சாதகமான சமநிலையை சாதிப்பதற்கு வலுவான ஜனநாயக விழுமியங்களும், ஜனநாயகக் கட்டமைப்புக்களும், ஜனநாயக அரசியல் கலாசாரமும் கட்டியெழுப்பப்பட வேண்டும். அத்தகையதொரு கட்டமைப்பும், கலாசாரமும் இல்லாது போனால், இன்றுள்ள நிலபிரபுத்தன மனநிலையின் தொடர்ச்சியை நாம் மாற்றியமைக்க முடியாது.
   மாறாக காலங்காலமாக குடும்ப ஆட்சி பற்றி பிதற்றிக்கொண்டிருக்கும் கையறு நிலையில் நாம் சிக்கிக்கொண்டு விடுவோம். ஒரு வகையில், இந்த கலாசார மாற்றம் ஏற்படுதவற்கு இந்த குடும்ப ஆட்சியின் வல்லாதிக்கம் உதவலாம். இந்த வல்லாதிக்கம் அதிகரிக்க அதிகரிக்க, ஆட்சி தோல்வியடையும். அப்போதுதாவது மக்கள் இத்தகைய ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்தெழுவார்களேயானால், இங்கும் ஜனநாயனத்தின் தாற்பரியமும், தேவையும் மக்களால் நேரடியாக உணரப்படும். அது மட்டும்தான், இந்த நிலையை மாற்றியமைப்பதற்கான விதையாக அமையும்.
    
   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/குடும்ப-ஆட்சியும்-இலங்கையும்/91-276107
    
    
  • By கிருபன்
   பெரும் சாபக்கேடுகள் - என்.கே. அஷோக்பரன்
   ‘சிங்கப்பூரின் சிற்பி’ லீ க்வான் யூவின் நேர்காணல்கள் அடங்கிய நூலொன்று 1998இல் வௌியானது. அதில், லீ க்வான் யூ, இலங்கை பற்றிப் பேசியிருக்கும் விடயமும் பதிவாகியிருக்கிறது. 
   ‘எங்கள் செயல்களின் விளைவுகளுடன் நாம் வாழ வேண்டியிருக்கிறது. எங்கள் சொந்த மக்களுக்கு நாங்கள் பொறுப்பு. அவர்களுக்காகச் சரியான முடிவுகளை எடுக்கிறோம். நீங்கள் பழைய பிலிப்பைன்ஸைப் பாருங்கள். பழைய இலங்கையைப் பாருங்கள். பழைய கிழக்கு பாகிஸ்தான் மற்றும் பலவற்றைப் பாருங்கள். நான் இந்த நாடுகளுக்கும் இடங்களுக்கும் சென்றிருக்கிறேன். 1956 ஆம் ஆண்டில், நான் முதன்முறையாக கொழும்புக்குச் சென்றபோது, அது சிங்கப்பூரை விடச் சிறந்த நகரமாக இருந்தது. ஏனெனில், சிங்கப்பூர் மூன்றரை ஆண்டுகள் ஜப்பானிய ஆக்கிரமிப்பில் இருந்தது. கொழும்பு மவுண்ட்பட்டனில், தென்கிழக்கு ஆசியா கட்டளையின் மையம் அல்லது தலைமையகமாக இருந்தது. அவர்களிடம் ஸ்டெர்லிங் (அந்நியச் செலாவணி) கையிருப்பு இருந்தது. அவர்களிடம் இரண்டு பல்கலைக்கழகங்கள் இருந்தன. போருக்கு முன்பு, படித்த திறமைகளின் அடர்த்தியான அடுக்கு இருந்தது. எனவே, அமெரிக்க தாராளவாதிகள் அல்லது பிரிட்டிஷ் தாராளவாதிகள் சொன்னதன் படி, அது செழித்திருக்க வேண்டும். ஆனால், அது நடக்கவில்லை. ஒரு நபருக்கு ஒரு வாக்கு என்பது, சிறுபான்மை தமிழர்கள் மீது, சிங்களப் பெரும்பான்மையின ஆதிக்கத்துக்கு வழிவகுத்தது. அது தீவிரமாகவும் சுறுசுறுப்பாகவும் உழைத்த புத்திசாலித்தனமான தமிழர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது போலானது. மேலும் ஆங்கிலம் வெளியேற்றப்பட்டது. அவர்கள் ஆங்கிலத்திலேதான் கல்வி கற்றனர். சிங்களம் உட்கொண்டுவரப்பட்டது. அவர்களுக்கு இரண்டு பல்கலைக்கழகங்களில் ஒதுக்கீடு முறையில் இடம் கிடைத்தது. இப்போது அவர்கள் வெறித்தனமான புலிகளாக மாறிவிட்டனர். மேலும், நாடு மீண்டும் ஒருபோதும் ஒன்றிணைக்கப்படாத நிலை ஏற்பட்டுவிட்டது. யாராவது அவர்களிடம் சொல்லியிருக்க வேண்டும் - அமைப்பை மாற்றவும், தளர்த்தவும் அல்லது முறித்துக் கொள்ளவும். அவர்கள் பலவீனமான அல்லது தவறான தலைவர்களைக் கொண்டிருந்ததால் அவர்கள் தோல்வியடைந்தனர்’ என்று லீ க்வான் யூ இலங்கை பற்றிச் சொன்னதைக் அந்தப் புத்தகத்தில் பதிவுசெய்திருக்கிறார்கள். 
   லீ க்வான் யூ சொன்னவற்றில் நான்கு விடயங்கள் இன்றும் பொருத்தப்பாடு உள்ளனவாகவே இருக்கின்றன. 
   முதலாவது, இலங்கையின் இனவாத, அல்லது இன-மைய அரசியல், இலங்கையின் ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கும் முன்னெற்றத்துக்கும் பெரும் முட்டுக்கட்டையாக இருக்கின்றது என்பதுடன் மூளைசாலிகளின் வௌியேற்றத்துக்கும் வழிவகுத்தது. இலங்கையின் வளர்ச்சிக்கும் மேன்மைக்கும் உதவியிருக்கக்கூடிய இந்த மூளைகள், வளர்ந்த நாடுகளை வளர்ப்பதற்குப் பயன்பட்டுக்கொண்டிருக்கின்றன. 
   இரண்டாவது, இலங்கையின் அந்நியச் செலாவணி கையிருப்பு பற்றியது. சர்வதேசத்தில் கேள்வி நிறைந்த பொருட்களின் உற்பத்தியால் ஏற்பட்ட ஏற்றுமதிகளின் விளைவால், அந்நியச் செலாவணி கையிருப்பைக் கொண்ட நாடாக இலங்கை இருந்தது. இன்று அந்நியச் செலாவணி கையிருப்புத் தீர்ந்து போய், வங்குரோத்தாகும் நிலையில் இலங்கை நின்று கொண்டிருக்கிறது. 
   மூன்றாவது, அன்றே, பெரும் பல்கலைக்கழகத்தைக் கொண்டு அறிவுச் சமூகமாக வளர்ந்துகொண்டிருந்தது இலங்கை. இன்று, உலகத் தரவரிசையில் முதல் ஆயிரத்துக்குள் கூட இலங்கையின் ஒரு பல்கலைக்கழகமும் இல்லை என்ற நிலையில்தான் இலங்கையின் உயர்கல்வித் தரம் இருக்கிறது. 
   நான்காவது, இலங்கையின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் அடிப்படைக் காரணமாக அமைந்தது, பலவீனமானதும் தவறான தலைமைகளைக் கொண்டிருந்ததுமாகும். 
   இயற்கை வளம் நிறைந்த பூமி; கடல் வளம், கனிம வளம், மண் வளம், மலை வளம், நீர் வளம், மழை வளம், இயற்கைக் காடுகள், அருமையான சுவாத்தியம் என இயற்கை ஆசீர்வதித்த தீவு இலங்கை என்று சொன்னால் அது மிகையல்ல. 
   ஆனால், ‘சுதந்திரம் அடைந்து’ 73 ஆண்டுகள் கடந்து, இன்று நாடு வங்குரோத்தாகும் நிலையில் நிற்கிறதென்றால் அதற்கு யார் பொறுப்பு என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது. ஒட்டுமொத்தமாகச் சொல்வதானால் இந்தத் தீவின் இந்த நிலைக்கு, இந்தத் தீவில் வாழும் மக்கள் அனைவருமே ஏதோ ஒரு வகையில் பொறுப்பாளிகள் ஆகிறார்கள். 
   ஆனால், இந்தத் தீவின் பெரும் சாபக்கேடு, இந்தத் தீவுக்கு அமைந்த தலைமைகள். அவர்களைத் தலைமைகள் என்று விளிப்பதுகூட தலைமைத்துவத்தைக் கேவலப்படுத்துவதாகவேதான் அமையும். 
   ஒரு வேளை, இந்நாட்டின் தலைமைகள் இனவாத அல்லது இன-மைய அரசியலை முன்னெடுக்காது, நாட்டைச் சமூக, பொருளாதார ரீதியில் முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகளை, சுதந்திரகாலம் முதல் மேற்கொண்டிருந்தால், இன்று இலங்கையின் நிலை வேறானதாக இருந்திருக்கும். 
   ஆனால், தாம் அதிகாரத்துக்கு வந்துவிட வேண்டும்; அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக, இனவாத அரசியல் எனும் குறுக்கு வழியைத் தேர்ந்தெடுத்து, இன்று முழுநாட்டையும் தோல்வியடையும் அரசாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். 
   இலங்கை அரசியலின் பெரும் சாபக்கேடு எஸ்.டபிள்யு.ஆர்.டீ. பண்டாரநாயக்கவுடன் ஆரம்பிக்கிறது. தான் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற சுயநலத்தில், பெரும்பான்மை இனத்தேசியவாத அரசியலுக்கு, அரசியலரங்கின் முன்வரிசையில் ஆசனமிட்டுக்கொடுத்த பண்டாரநாயக்க, இந்நாட்டின் தலைவிதியை மாற்றியெழுதினார். இவர்கள் செய்த அரசியலின் விளைவு, அவரின் இரண்டாம் தலைமுறை கூட, இந்நாட்டில் வாழாது, வளர்ந்த நாட்டுக்குக் குடிபெயர்ந்து வாழ்கிறது. 
   தங்கள் வாரிசுகளுக்கு வௌிநாட்டு வாழ்க்கை எனும் மாற்றுத்திட்டத்தை வைத்துக்கொண்டு, இந்நாட்டை தமது சுயநல அரசியலுக்கும், அதிகார வேட்கைக்குமாக சீரழித்துவிடும் அரசியல் தலைமைகள்தான் இந்நாட்டின் சாபக்கேடு. உன் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் கூட வாழாத, வாழ விரும்பாத நாட்டுக்கு, நீ தலைவன் என்பது எவ்வளவு பெரிய வெட்கக்கேடு!
   என்றோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், யாரோ சில மன்னர்கள் இந்தத் தீவை இப்படி ஆண்டார்கள் என்ற பழங்கதைகளையும் பிரசாரங்களையும் வைத்துக்கொண்டு, 21ஆம் நூற்றாண்டில் இந்தத் தீவின் அரசியலை முன்னெடுப்பதெல்லாம் அபத்தத்தின் அபத்தம்.
   மனித குலம் முன்னோக்கிச் செல்வதைப் பற்றி சிந்திக்கையில், இந்தத் தீவின் தலைமைகள் பின்னோக்கிச் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். தமது சுயநல அரசியலுக்காகவும் அதிகார வேட்கைக்காகவும் அப்பாவி மக்களிடம் மற்றையவர்கள் என்ற அடையாளப்படுத்தப்படுவோர் மீதான வெறுப்பையும் துவேசத்தையும் காழ்ப்புணர்வையும் பாதுகாப்பின்மை உணர்வையும் விதைத்து, தமக்கான வாக்குகளை அறுவடை செய்கிறார்கள். 
   ஆனால், இவையெல்லாம் இந்த நாட்டையும், சமூகத்தையும், அரசியலையும் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளிருந்து அழுகச் செய்துகொண்டிருக்கிறன என்பதை மக்கள் உணர்வதாகவும் தெரியவில்லை. இந்த அரசியல் தலைமைகள், இவற்றை அறிந்திருந்தும், இவை பற்றிக் கவலைப்படுவதாகவும் தெரியவில்லை.
   தன்னுடைய மக்களிடையே அச்சம், சந்தேகம், வெறுப்பு, துவேசம் ஆகியவற்றை வளர்த்துவிடும் தலைமைகள் ஆளும் நாடு, ஒருபோதும் வளாச்சிப் பாதையில் செல்லாது. எத்தகைய வளம் மிக்க நாடாயினும், இதுபோன்ற அரசியல், அந்நாட்ச்டை சீரழித்து, சின்னாபின்னமாக்கிவிடும். இந்த வளம் மிக்க தீவுக்கும் இதுதான் நடந்துகொண்டிருக்கிறது. 
   வங்குரோத்து நிலையின் எல்லைக்கோட்டில் திணறிக்கொண்டிருக்கும் நிலையில் கூட, இந்தத் தீவின் மக்கள் இங்கு நடந்துகொண்டிருக்கும் அரசியலின் அபத்தத்தைப் புரிந்துகொள்ளவில்லை என்றால், இந்தத் தீவுக்கு ஒருபோதும் விமோசனம் என்பது கிடையாது. 
   வங்குரோத்து நிலைக்கு ஒரு நாட்டைக் கொண்டு வந்த பின்னர், பழங்கதைகளும் போலி இனப் பெருமைகளும் யாருக்கு என்ன நன்மையைத் தரப்போகிறது? 
   ஒரு கணமேனும், இந்நாட்டை ஆண்ட ஒரு தலைமையேனும் ஆக்கபூர்வமாகச் சிந்தித்திருந்தால், மக்களிடையேயான வெறுப்பையும் துவேசத்தையும் கசப்பையும் காழ்ப்புணர்வையும் இன-மத அடைப்படைகளில் வளர்த்துவிடும் அரசியல் எல்லாருக்கும் ஆபத்தானது; அது எல்லாருக்கும் அழிவையும், நாசத்தையுமே ஏற்படுத்தும் என்ற் யதார்த்தத்தை உணர்ந்திருந்தால், தமது சுயநலத்தைத்தாண்டி அந்த யதார்த்தத்தை சுவீகரித்திருந்தால் இந்நாட்டுக்கு ஒரு புதிய வசந்தத்தின் தொடக்கமாக அது அமைந்திருந்திருக்கும். 
   ஆனால் இந்நாட்டின் சாபக்கேடு, இதுநாள் வரை அப்படி யோசிக்கும், செயற்படும் தலைமைகள் இந்தத் தீவுக்கு அமையவில்லை. மாறாக நான் “இந்த இனத்தவன்”, “இந்த மதத்தவன்” என்று வெற்றுப் பெருமை பேசும் தலைமைகள்தான் இங்கு அரசியல் செய்துகொண்டிருக்கிறார்கள். 
   இவர்கள் இந்த நாட்டின் ஆன்மாவை சீரழித்துக்கொண்டிருக்கிறார்கள். இதுதான் இந்நாட்டின் பெரும் பெரும் சாபக்கேடு. இந்நாட்டு மக்கள் இதனைப் புரிந்துகொள்ளும் வரையில், இதற்கு சாப விமோசனம் கிட்டாது.
   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/பெரும்-சாபக்கேடுகள்/91-275816
  • By கிருபன்
   உண்மையும் உணர்வுமுனைப்பும் அரசியலும்: உண்மைகளாகும் பொய்கள்
   என்.கே. அஷோக்பரன்
   இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட, உலகப் புகழ்பெற்ற  ஆங்கில எழுத்தாளரான மைக்கல் ஒண்டாச்சி, தன்னுடைய நூலொன்றில், ‘இலங்கையில் சிறப்பாகச் சொல்லப்பட்ட பொய் ஒன்று, ஆயிரம் உண்மைத் தரவுகளுக்குச் சமன்’  என்று குறிப்பிடுகிறார். இதை யார் புரிந்துகொண்டார்களோ இல்லையோ, இலங்கைத் தீவின் அரசியல்வாதிகள், நன்கு புரிந்துகொண்டிருக்கிறார்கள்.
   இன்றைய காலகட்டத்தை, ‘உண்மையைக் கடந்த, உணர்வுமுனைப்புக் காலகட்டம்’ (Post truth era) எனச் சிலர் விளிக்கிறார்கள். உணர்வுகள், தனிப்பட்ட கருத்துகளுக்கு, உண்மைகளை விட முக்கியத்துவம் கொடுக்கப்படுவதை இது சுட்டி நிற்கிறது. 
   சமூக ஊடகப் பயன்பாடு, இந்த உண்மையைக் கடந்த உணர்வுமுனைப்புக்குப் பெருந்துணை செய்கிறது.  எந்தவொரு தகவலும், அதன் உண்மைத்தன்மை பற்றிய அலசல்கள் எதுவுமின்றி, சமூக ஊடகவௌியில் பதிவிடப்படுவதும், அதன் உண்மைத்தன்மை பற்றிய எதுவித கேள்விகளுமின்றி, அது தனிநபர் உணர்வுகளின்படி, ஏதோ ஒரு வகையில் உண்மை என நம்பப்படும் அடிப்படையில் மட்டும் பலராலும் பகிரப்படுவது, சமூக ஊடகங்களின் நியதியாக மாறியுள்ளது. 
   தனிமனித உணர்வுகள், உண்மையைப் பற்றி அக்கறை கொள்ளாத ஒரு வினோத காலகட்டத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
   “அரசியலில் பொய் என்பது, புதிய விடயமல்ல! அன்று அளித்த வாக்குறுதி என்பது, அன்றைய காலகட்டத்தின் தேவை; அந்த வாக்குறுதி, இன்று மீறப்பட்டமை, இன்றைய காலகட்டத்தின் தேவை” என்கிறார் நிக்கலோ மாக்கியவலி. அதிகார அரசியலின், அழுக்கான முகத்தின் ஒரு பகுதி இது. 
   அரசியல், ஜனநாயக மயப்படுத்தப்பட்டதில் இருந்து, அரசியலில் பொய்யின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. தமது அதிகாரத்தை, பிறப்பால் அல்லது செல்வத்தால் மட்டும் தக்க வைத்துக்கொள்ள முடியாத நிலையில்,  வாக்குகளுக்காக மக்களைக் கவர வேண்டிய தேவை இருக்கிறது. ஆகவே, எப்பிரயத்தனப் பட்டேனும், எக்காரியத்தைச் செய்தேனும் மக்களின் வாக்குகளை வேட்டையாடிவிட வேண்டிய தேவையின் விளைவாக, வாக்காளர்களைத் திறமையாகக் கையாள வேண்டிய நிர்ப்பந்தத்தை, அரசியல்வாதிகள் எதிர்கொள்கிறார்கள். 
   “இயற்கையாகவே மனிதன், ஓர் அரசியல் விலங்கு” என்று அரிஸ்டோட்டில் கூறுகின்றார். ஆனால், மனிதன் அடிப்படையில் உணர்வுவயப்பட்ட விலங்கும் கூட! தனது சிந்தைனையாற்றல், பகுத்தறிவின் விளைவாக உணர்வுவயப்படுதலை, மனிதனால் கட்டுப்படுத்த முடிந்தாலும், இயற்கையான வடிவமைப்பை முற்றாகக் கட்டுப்படுத்தி விட முடியாது. ஆகவே, மனிதனைக் கட்டுப்படுத்தக்கூடிய பெரும் ஆயுதமாக, மனித உணர்வுகள் இருக்கின்றன. இதை, மிகத்தௌிவாகப் புரிந்தவர்கள் அரசியல்வாதிகள். ஆகவே, மனிதனின் இந்த உணர்வுகளைக் கொண்டு, உண்மைகளைக் கூட மறைக்கும் செப்படி வித்தை, அரசியல்வாதிகளுக்குக் கைவந்த கலை. 
   அடல்ப் ஹிட்லர், ‘க்ரோஸ லூக’ (ஜேர்மன் மொழி, ‘பெரும் பொய்’)  எனும் பிரசார உத்தி பற்றித் தன்னுடைய ‘மெய்ன் கம்ப்ஃப்’  (எனது போராட்டம்) நூலில் குறிப்பிட்டிருக்கிறார். இதன் சுருக்கம், ஒரு பொய்யைப் பெரிய அளவில் மீண்டும் மீண்டும் பிரசாரம் செய்யும் போது, அது உண்மை என நம்பப்படும் என்பதாகும். இதை, ஹிட்லரின் வலக்கரமாக இருந்த, ‘நாஸிக்களின் பிரசார பீரங்கி’ என்று கருதப்பட்ட ஜோசப் கோபெல்ஸ், யூதர்கள் மீதான வெறுப்பை விதைக்கும் பிரசாரத்துக்குப் பயன்படுத்தியிருந்தார். 
   யூதர்களைப் பற்றிய பல பொய்கள், கட்டவிழ்த்து விடப்பட்டன. அவை, மீண்டும் மீண்டும் அரசியல் மேடைகளில், பிரசுரங்களில் சொல்லப்பட்டபோது, அதன் உண்மைத் தன்மை பற்றிய சந்தேகங்களைக் கடந்து, வெகுஜனங்களிடையே அது உண்மை என ஏற்றுக்கொள்ளப்படும் நிலை உருவானது. அதுவும், அவை உணர்வு ரீதியில் மக்கள் மீது தாக்கம் செலுத்தும் பொய்யாக இருக்கும் போது, அவை மறுகேள்வியின்றி மக்களை ஆட்கொண்டுவிடுகின்றன. 
   ஆனால், நாஸிக்களின் காலத்தில் இந்தப் ‘பெரிய பொய்’யைச் சாத்தியமாக்க, நாடு முழுவதும் அரசியல் கூட்டங்கள் பெரியளவில் நடத்தப்பட வேண்டிய அவசியமும், இதுதொடர்பான பிரசுரங்கள் வௌியிடப்படுவதும், அது மக்களைச் சென்றடையச் செய்ய வேண்டியதுமான தேவை இருந்தது. ஆனால், இன்றைய சூழல் இதனை இலகுவாக்கி இருக்கிறது. இணைய வசதியுள்ள ஒருவர், தான் இருக்குமிடத்தில் இருந்துகொண்டே, இத்தகைய பிரசாரத்தைச் சாதிக்கக்கூடிய வல்லமையை சமூக ஊடகங்கள் ஏற்படுத்தி இருக்கின்றன. அதன் விளைவாக, மக்களின் உணர்வுகளைப் பாதிக்கும் பொய்கள், பாதி உண்மைகள் என்பன பெரும் பிரசாரமாக, மக்கள் முன்னிலையில் முன்வைக்கப்படுகையில், அவை மறுகேள்வியின்றி அந்த மக்களை ஆட்கொண்டு விடுகின்றன.
   உதாரணத்துக்கு, அபிவிருத்தியடைந்த நாடொன்று பொருளாதார நெருக்கடியைச் சந்திக்கும் காலகட்டத்தில், அந்த நாட்டின் பூர்வீகக் குடிகளாகத் தம்மைக் கருதிக்கொள்ளும் பலரும் வேலைகளை இழக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அதேவேளை, வளர்முக நாடுகளைச் சேர்ந்த பலர் அந்நாட்டில் குடியேறி, வேலைசெய்து வருகிறார்கள். சாதாரணமாக இவர்கள் செய்யும் வேலைகள், அந்நாட்டின் பூர்வீகக் குடிகளாகத் தம்மைக் கருதிக்கொள்வோர் செய்ய விரும்பாத வேலைகள். அதனால்தான், இந்த வேலைகளுக்கான கேள்வி அதிகரித்து, அதனை நிரப்ப, வளர்முக நாடுகளைச் சேர்ந்தவர்கள் அங்கு வரும் வாய்ப்பு எற்பட்டது. 
   இந்த இடத்தில், பூர்வீகக் குடிகளின் வாக்குகளைப் பெற்றுக்கொள்ள விளையும் அரசியல்வாதிகள், “எங்களது நாட்டவர்களுக்கு, வேலையில்லை; எங்கள் நாட்டின் வேலைவாய்ப்புகளை அந்நியர்களும் வந்தேறு குடிகளும் தட்டிப்பறித்துக் கொள்கிறார்கள்” என்ற பிரசாரத்தை முன்னெடுக்கிறார்கள். இதில், இவர்கள் சொல்லும் இரண்டு கருத்துகளும் முற்று முழுதான பொய் அல்ல! பூர்வீகக் குடிகளாகக் கருதிக்கொள்பவர்கள் வேலை இழந்திருக்கிறார்கள்; அதேவேளை, பல வேலைகளை வௌிநாடுகளிலிருந்து வந்தோர் செய்கிறார்கள். இந்த இரண்டும் உண்மை. 
   ஆனால், இந்த இரண்டுக்கும் நேரடித் தொடர்பு உள்ளது போல, இந்த அரசியல்வாதிகள் அதைச் சித்திரிக்கிறார்கள்.  இங்கு, பொருளாதார நெருக்கடியின் காரணமாகத்தான் வேலையிழப்பு ஏற்பட்டது. ஆனால், வேலை இழப்பால் அவதிப்பட்டுக் கொண்டிக்கும், தமது நாட்டில் குடியேறியவர்கள் மீது ஐயமும் அசூயையும் கொண்டிருக்கும் மக்களிடம், இந்தக் கருத்து உணர்வுரீதியிலான ஏற்புடைமையை ஏற்படுத்திவிடுகிறது. அதைத் தாண்டி, இதன் உண்மைத் தன்மையைப் பகுத்தறிபவர்கள் மிகக் குறைவே! 
   இத்தகைய பிரசாரம், தினம் தினம் அம்மக்கள் பார்க்கும் சமூக ஊடகங்களில், அரசியல்வாதிகளால் மட்டுமன்றி, இந்த எண்ணத்தால் கவர்ந்திழுக்கப்பட்ட சாதாரணர்களாலும் பகிரப்படும் போது, இந்தப் பொய், அது பொய்யானாலும் கூட, உணர்வு முனைப்பால் வெகுஜனங்களிடம் அங்கிகாரத்தைப் பெற்றுக்கொள்கிறது.
   இலங்கை அரசியலும், இந்த உண்மையைக் கடந்த உணர்வுமுனைப்புக்கு விதிவிலக்கல்ல! தமிழர்கள் மீதான வெறுப்பு என்பது, இங்கு அரசியல் பிரசாரமாகவே உருவெடுத்தது. இன்றைய இலங்கையின் இனப்பிரச்சினை என்பது, அரசியலும் அதன்வழியான பொய்ப் பிரசாரங்களும் உருவாக்கிய ஒன்று! 
   சிங்கள-பௌத்த தேசியவாதம் மட்டுமல்ல, தமிழ்த் தேசியவாதம் கூட, இதற்கு விதிவிலக்கல்ல. ஓர் உதாரணம் சொல்வதென்றால், அல்பிரட் துரையப்பாவை பலரும் ‘துரோகி’ என்கிறார்கள். காரணம், உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் நடந்த கொடும் வன்முறைத் தாக்குதலுக்கு, அவர்தான் காரணம் என்கிறார்கள். 
   உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் நடந்த தாக்குதலுக்கு, சிறிமாவோ அரசாங்கம் தான் பொறுப்பு என்பதில் துளியும் சந்தேகமில்லை. ஆனால், அதன் பின்னணியில் அல்பிரட் துரையப்பாதான் இருந்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இதைப்பற்றி மிக விரிவாக, ‘தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன’ என்ற தொடரில் எழுதியிருந்தேன். 
   வைரிகளான தமிழரசுக் கட்சியும் தமிழ் காங்கிரஸூம், கூட்டணியாக ஒன்றிணைந்திருந்த வேளையில், யாழ்ப்பாணத்தில் இந்தக் கூட்டணிக்குப்  பலமான அரசியல் போட்டியாக இருந்தவர் அல்பிரட் துரையப்பா. தமிழாராய்ச்சி மாநாட்டு வன்முறைகளைத் தொடர்ந்து, ‘அல்பிரட் துரையப்பா துரோகி’ என்ற பிரசாரம், கூட்டணிக்காரர்களால்த்தான் முன்னெடுக்கப்பட்டது. அதன் உண்மைத் தன்மை பற்றிய எந்தக் கேள்வியுமின்றி, அதுவே உண்மையென நம்பவைக்கப்பட்டது. இன்று மீண்டும் மீண்டும் அதுவே சொல்லப்பட்டு, அதுவே உண்மையெனக் கருதப்படும் நிலையில் நாம் நிற்கிறோம். 
   வெகுஜனங்கள் ஒரு கணம், தமது உணர்வுவயப்பட்ட நிலையைத்தாண்டி பகுத்தறிவுக்கு இடம் கொடுத்து, ஏன், எதற்கு என்ற கேள்விகளையாவது கேட்டால், இந்தப் பிரசாரங்களின் போலி முகமூடி கழன்றுவிடும். ஆனால், பொய்களை உண்மையாக்கிய பிரசாரங்கள், பெரியளவில் நீண்டகாலத்தில் முன்னெடுக்கப்பட்டதன் விளைவாக, அந்தப் பொய்களே உண்மைகளாக நம்பப்பட்டன; அந்தப் பொய்களே வரலாறுமாயின. அதன் விளைவாக, அந்தப் பொய்களே, இன்று பலரின் அடையாளங்களாகவும் ஆகிவிட்டன. 
   ஆனால்,  பொய்களை உண்மையாக்கும் இந்த உற்பத்தித் தொழிற்சாலைகள், இன்று சமூக ஊடகங்களின் உதவியால், இன்னும் வினைத்திறனுடன் தமது உற்பத்திகளை முன்னெடுக்கின்றன. “எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்மெய்ப்பொருள் காண்பது அறிவு”  என்கிறான் வள்ளுவன். அறிவுள்ள சமுதாயமென்றால், பிரசாரங்களுக்கு எடுபடாமல், மெய்ப்பொருள் காண்பதற்கு முயலவேண்டும்.
    
    
   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/உண்மையும்-உணர்வுமுனைப்பும்-அரசியலும்-உண்மைகளாகும்-பொய்கள்/91-275270
    
 • Topics

 • Posts

  • கொரோனா பதட்டம், சம்பந்தப்பட்ட இருவரின் யோசிக்கும் தன்மையை பாதித்து விட்டது. சரியான திட்டமிடல் இல்லாமல் செய்யும் வேலை எதுவும் இப்படித்தான் முடியும். வேலை ஆரம்பிப்பதற்கு முன் ஒவ்வொருவரின் வேலை பொறுப்பு பற்றி கலந்துரையாடி, ஒவ்வொருவரும் தமக்குரிய வழிநடத்தல் முறையை பின்பற்றியிருந்தால் இப்படியான அனாவசிய தவறுகளை தடுக்கலாம்.
  • இது தான் முதலாளித்துவ நாடுகளுக்கும் சோசலிச நாடுகளுக்குமான வித்தியாசம் அண்ணா.
  • விசுகு நீங்கள் மிகவும் அதிஸ்டசாலி. இங்கு நல்ல பல்கலையில் எந்தப் படிப்பு என்றாலும் பணமுள்ளவர்கள் என்றால் குறைந்தது ஒரு லட்சம் பள்ளிக்கு மட்டும்.(ஒரு வருடத்துக்கு)வசதி குறைவானவர்கள் என்றால் 70-80 ஆயிரம். வீடு வாங்குவதற்கு குறைந்த வட்டியும் படிப்பதற்கு இரண்டு மடங்காகவும் அறவிடுகிறார்கள்.படிப்பு முடிந்து 6 மாதமாகினால் வேலை செய்தால் என்ன விட்டால் என்ன வட்டியுடன் கட்ட தொடங்க வேண்டும்.இல்லாவிட்டால் இரண்டு பேர் எற்கனவே உங்களுக்கு உத்தரவாதமாக கையெழுத்து போட்டிருப்பார்கள் அவர்களுக்கு கடிதம் போகும்.    இத்தனைக்கும் நல்ல கிரடிற் இருந்தால்த் தான் இத்தனையும் நடக்கும்.இல்லாவிட்டால் வட்டி வீதம் கூடும்.    இதனாலேயே கறுப்பினத்தவர் பலர் மேல்படிப்பை படிக்க முடியாமல் உள்ளனர்.
  • ஜெர்மனியில் ஒரு சில புள்ளிகளால் இலவச மருத்துக்கல்வியைப் பெற முடியாமல்....  காத்திருக்கவும் விரும்பாமல்.... அதைத்தான் கற்பேன்... என்று விடாப்பிடியாக நின்ற ஒருவருக்கான.....  மருத்துவத்தை படிப்பதற்கான ஒரு வருடக்  கட்டணம் 12.௦௦௦ யூரோ 7 வருடங்கள்  84.௦௦௦ யூரோ ( 6 வருடம் தான் பொதுவானது ) வாழ்க்கைச் செலவு, வாடகை  ஒரு மாதம் 1000 யூரோ ஏழு வருடங்கள்  84  மாதம் 84.௦௦௦ யூரோ அதில் அரச உதவித் தொகை 42.௦௦௦ யூரோ( அதுவும் அவர்  திருப்பித் தரவேண்டும் அரசுக்கு ) சொச்சம் போனால் மிகுதி 112.௦௦௦ யூரோ இத்தனை காசைக் கட்டிப் படித்த மருத்துவத் துறையைக் கை விட்டால்  ( அப்படி நடக்கக்கூடாது என்று இப்போதும் நினைப்பேன் ) கட்டியவர்கள்  மனம் என்ன பாடுபடும். இது  நாடுகளுக்கும் பொருந்தும் .
  • இந்த திரியில் எழுப்பபட்ட இன்னொரு விடயம் பிரித்தானிய பல்கலைகழகங்கள் தனியார் நிறுவனங்களே - என்பது. பக்கிங்ஹாம், ரீஜெண்ட், யூனிவர்சிட்டி ஒப் லோ, இன்னும் ஐந்து ஆறு யூனிகள்தான் முழுக்க முழுக்க தனியார் யூனிகள் (இவற்றில் மருத்துவம் கற்பிப்பதில்லை என உறுதியாக நம்புகிறேன் - ஆராயவில்லை).  மிகுதி எல்லாம் சுயாட்சி கட்டமைப்புகள். தனியார் பகுதியின் (private sector) சில பண்புகளை கொண்டும் (பலதை கொள்ளாமலும்). அரசாங்க பகுதியின் (public sector) பல பண்புகளை கொண்டும் (சிலதை கொள்ளாமலும்) இயங்குவன. கீழே ஒரு துணைவேந்தரின் பதிவு. https://www.theguardian.com/education/2006/jun/20/highereducation.comment
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.