Jump to content

பாரிஸில் கழுத்து வெட்டிக் கொல்லப்பட்டவர் இலங்கைப் பெண் என அடையாளம் – கொலையில் தொடர்புடையவர் கைது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பாரிஸில் கழுத்து வெட்டிக் கொல்லப்பட்டவர் இலங்கைப் பெண் என அடையாளம் – கொலையில் தொடர்புடையவர் கைது

April 27, 2021

paris-4.jpg (படம் :நன்றி பரிஷியன் செய்திச் சேவை)

பாரிஸ் பிராந்தியத்தின் அர்னோவீல் (Arnouville, in Val-d’Oise) பகுதியில் கடந்தமார்ச் 31 ஆம் திகதி கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்த ஆசிய வம்சாவளிப் பெண் இலங்கையைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

முதலில் இவர் இந்திய – பாகிஸ்தான் பின்னணியைக் கொண்டவராக இருக்கக் கூடும் என்று காவல்துறையினா் தெரிவித்திருந்தனர்.எனினும் அவர் பாரிஸ் புறநகரான சார்ஸல் (Sarcelles) பகுதியைச் சேர்ந்த 40 வயதான இலங்கைப் பெண் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

ஆனால் அவர் இலங்கைத் தமிழரா என்பதை உடனடியாக உறுதி செய்யமுடியவில்லை. அவரது பெயர் விவரங்களும் வெளியிடப்படவில்லை.கொலை நடந்த நாளில் குறித்த பெண்ணுடன் காணப்பட்டவர் எனக் கூறப்படுகின்ற இலங்கையரான ஆண் ஒருவரை விசாரணையாளர்கள் கைது செய்ததைஅடுத்தே பெண்ணின் சடலம் சிலவாரங்களின் பின்னர் அடையாளம் காணப்பட்டுள்ளது என்று பாரிஸ் ஊடகங்கள் தெரி வித்துள்ளன.

கொலையுண்ட பெண் சார்ஸல் பகுதியில் கத்தோலிக்க சமூக நல அமைப்பு ஒன்றினால் நிர்வகிக்கப்படுகின்ற வதிவிடத்தில் வசித்து வந்த காரணத்தால் அவர் காணமற்போன விடயம் உடனடியாக எவருக்கும் தெரிய வரவில்லை என்று கூறப்படுகிறது.

பாரிஸில் உள்ள வசிப்பிடத்தில் நடத்தப்பட்ட தேடுதலை அடுத்தே கொலையுடன்தொடர்புடைய 42 வயதுடைய நபர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். அவரது தொலை பேசி மூலமாகக் கிடைத்த முக்கிய தகவல்கள் பெண்ணின் கொலையில் தொடர்பு இருப்பதைக் கண்டறிய உதவி உள்ளன.

தடுப்புக் காவலில் விசாரணை செய்த சமயத்தில் அவர் கொலையை ஒப்புக் கொண்டார் என்றும் கூறப்படுகிறது.பாரிஸ் Versailles குற்றத் தடுப்புப் பிரிவினர் இக் கொலை தொடர்பான வழக்குவிசாரணைகளை நடத்தி வந்தனர்
 

https://globaltamilnews.net/2021/160034/

 

Link to comment
Share on other sites

ஒருவர் கொல்லப்பட்டால் கொலைக்குக் காரணமானவரை ஒரு மாதத்தில் கண்டுபிடித்து நிரூபிக்கும்  திறன்கொண்ட உலகம், ஒன்றரை இலட்சம் பேருக்குமேல் கொல்லப்பட்டால்... வருடங்கள் பல சென்றாலும் கொலைக்குக் காரணமானவரைக் கண்டுபித்து நீரூபிக்கத் திணறுகிறதே.!! 🤔 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

ஒருவர் கொல்லப்பட்டால் கொலைக்குக் காரணமானவரை ஒரு மாதத்தில் கண்டுபிடித்து நிரூபிக்கும்  திறன்கொண்ட உலகம், ஒன்றரை இலட்சம் பேருக்குமேல் கொல்லப்பட்டால்... வருடங்கள் பல சென்றாலும் கொலைக்குக் காரணமானவரைக் கண்டுபித்து நீரூபிக்கத் திணறுகிறதே.!! 🤔 

தூங்குபவனை எழுப்பலாம், தூங்குபவன் போல் நடிப்பவனை எழுப்ப முடியாது.  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1987 முதல் 1990 வரையான இந்திய ஆக்கிரமிப்புப்படை தமிழர் தாயகத்தில் செய்த அட்டூழியங்களை வெற்றியாக ஒருவரால் பார்க்கமுடிகிறதென்றால், அந்த அட்டூழியங்களில் பங்குகொண்ட ஒருவராலேயே அது முடியும் என்பது வெளிச்சமாகிறது.  புலிநீக்கம் செய்துவிட்டு இந்திய கூலிகளின் மீளுருவாக்கம் செய்யலாம் என்கிறீர்களா? எதை மறைத்தாலும், மண்டையில் உள்ள கொண்டையை மறைக்க முடியாது போய்விட்டதே??!! 
    • ....... என்று வந்தால் நகக்கீறல்களை பரிசாக பார்க்கணும் அண்ணை.  அவை கேடயங்கள். நீங்கள் அறியாதததா? 🤩
    • பத்மநாபாவின் கூலிப்படையான ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பே வடக்குக் கிழக்கில் இந்திய ஆக்கிரமிப்புப் படையுடன் இணைந்து தமிழர்களுக்கெதிரான அட்டூழியங்களில் ஈடுபட்டு வந்தது. தனது பொம்மையான வரதராஜப் பெருமாளையும், சுரேஷ் பிரேமச்சந்திரனையும் கொண்டு அவர் தமிழர் தாயகத்தில் செய்தது அக்கிரமங்களேயன்றி வேறில்லை. இந்திய ரோவின் பூரணப் பாதுகாப்பில் இருந்துகொண்டு, தான் எந்த மக்களுக்காகப் போராடக் கிளம்பினாரோ அதே மக்களை அடிமைகளாக, அந்நியப் படையொன்றின் உதவியுடன்  ஆண்டபோது , தமிழ் மக்களின் விடுதலை வீரன் எனும் தகமையினை இழந்து பலநாளாயிற்று. கொல்லப்பட்டபோது அவர் அந்நிய ஆக்கிரமிப்பு அரசொன்றின் கைக்கூலிதான்.  ரஜீவினல் தமிழர் அடைந்த நலன் என்று எதுவும் இல்லை. அவர் செய்த ஒப்பந்தம் இந்தியாவின் நலன்களுக்கானது மட்டுமே. அவரைக் கொன்றதால் புலிகள் அடைந்ததும் ஒன்றுமில்லை. கொல்லப்பட்டிருக்கத் தேவையில்லை.  புலிநீக்க அரசியல் தேவையா இல்லையா என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும், அந்நிய சக்திகளின் கைக்கூலிகள் அதுகுறித்துப் பேசத் தேவையில்லை.  இதனைச் சொல்வதன் மூலம் ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் அராஜக ஆட்சியை நியாயப்படுத்துவதோடு, இந்திய நலன்காக்க உருவாக்கப்பட்ட ஒப்பந்தத்தையும் இவர் நியாயப்படுத்துகிறார். ஆக, இவர் வருவதும் பதம்நாபா, வரதர் முகாமிலிருந்துதான் என்பதை உறுதிப்படுத்துகிறது. 
    • அமிர்தலிங்கமும் அவரது ஆதரவாளர்களும் சர்வகட்சி மாநாட்டிற்கு முன்னரே தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டு விட்டனர். 1985 திம்புப் பேச்சுக்களில் அவர்கள் தம்மை மீளவும் அரங்கிற்குக் கொண்டுவரப்பார்த்தனர். ஆனால், அன்றுகூட இலங்கையினதும், இந்தியாவினதும் கைப்பிள்ளைகளாக மாறி, இலங்கையரசு கொடுக்க விரும்பிய மாவட்ட சபைகளை மனமுவந்து ஏற்றுக்கொண்டு தமிழரின் நிலையினைப் பலவீனப்படுத்தினர். 1987 இல் இந்தியாவில் இருந்துகொண்டே இந்திய ஆக்கிரமிப்புப் படையின் செயல்களை நியாயப்படுத்தினர். அவரது கொலையினை ஆதரிக்கவில்லை. ஆனால், தனது கொலை நடைபெறுவதைத் தடுக்கும் எந்தக் காரியத்திலும் அவரும் ஈடுபட்டிருக்கவில்லை. 
    • ரபா மீது இஸ்ரேல் விரைவில் படை நடவடிக்கைக்கு திட்டம் பொது மக்களை வெளியேற்ற கூடாரங்கள் அமைப்பு maheshApril 25, 2024 காசாவில் பலஸ்தீனர்களின் கடைசி அடைக்கலமாக இருக்கும் ரபா மீது இஸ்ரேல் இராணுவம் ‘மிக விரைவில்’ படை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளவிருப்பதாக இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருப்பதோடு அங்குள்ள பலஸ்தீனர்களை வெளியேற்றுவதற்கான திட்டத்தையும் அது முன்னெடுத்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. எதிர்வரும் வாரங்களில் ரபாவில் இருந்து வெளியேற்றப்படும் பலஸ்தீன பொதுமக்களுக்காக ஆயிரக்கணக்கான கூடாரங்களை இஸ்ரேல் வாங்கி இருப்பதாக இஸ்ரேலிய வட்டாரங்களை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த அரை ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துவரும் போர் காரணமாக எகிப்து எல்லையை ஒட்டி இருக்கும் ரபாவில் தஞ்சமடைந்துள்ள பலஸ்தீனர்கள் எண்ணிக்கை தற்போது ஒரு மில்லியனைத் தாண்டியுள்ளது. இங்கு எஞ்சியுள்ள ஹமாஸ் படைப் பிரிவுகளுக்கு எதிராக படை நடவடிக்கை ஒன்றை முன்னெடுப்பது தொடர்பில் இஸ்ரேல் தொடர்ந்து கூறி வருகிறது. எனினும் அவ்வாறான படை நடவடிக்கை பெரும் அழிவை ஏற்படுத்தும் என்று இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியான அமெரிக்கா உட்பட உலக நாடுகள் கவலை வெளியிட்டு வருகின்றன. இங்குள்ள அகதிகள் எகிப்தின் சினாய் பகுதிக்குள் ஊடுருவுவதற்கு அனுமதிப்பதில்லை என்று எகிப்து குறிப்பிட்டிருக்கும் நிலையில் இந்த மக்கள் எங்கு செல்வார்கள் என்ற கவலையும் அதிகரித்துள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து அமெரிக்காவுடன் பல வாரங்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின், ரபாவில் இருந்து வெளியேற்றப்படும் பலஸ்தீனர்களுக்காக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சு 40,000 கூடாரங்களை வாங்கியுள்ளது. இதில் ஒவ்வொன்றிலும் 10 தொடக்கம் 12 பேர் வரை தங்க முடியுமாக உள்ளது என்று இஸ்ரேலிய அரச தரப்பு தெரிவித்துள்ளது. ரபாவில் இருந்து சுமார் 5 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கான் யூனிஸ் நகரில் வெள்ளை நிறத்திலான சதுர வடிவ கூடாரங்கள் வரிசையில் அமைக்கப்பட்டிருக்கும் வீடியோ ஒன்று இணையதளத்தில் பரவியுள்ளது. இந்த கூடாரம் அமைக்கப்பட்ட நிலம் ஏப்ரல் 7 ஆம் திகதியன்று வெற்றி நிலமாகக் காணப்படுவது செய்மதி நிறுவனமான மக்சார் எடுத்த படங்கள் காட்டுகின்றன. இது தொடர்பில் கருத்துக் கூற இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு மறுத்ததாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் போர் கால அமைச்சரவை எதிர்வரும் இரண்டு வாரங்களில் கூடி பொதுமக்களை வெளியேற்றுவதற்கான ஒப்புதல் அளிக்க திட்டமிட்டிருப்பதாக இஸ்ரேலிய அரச வட்டாரத்தை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது. ரபா படை நடவடிக்கையின் முதல் கட்டமாக பொதுமக்களை வெளியேற்றுவதற்கு ஒரு மாதம் எடுத்துக் கொள்ளும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பில் நெதன்யாகு அலுவலகம் உடன் எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்நிலையில் அமெரிக்காவுடனான பிரச்சினைக்கு மத்தியில் பல வாரங்கள் பிற்போடப்பட்ட ரபா நடவடிக்கை ‘மிக விரைவில்’ இடம்பெறும் என்று இஸ்ரேலிய அரச தரப்பை மேற்கோள் காட்டி இஸ்ரேலில் அதிகம் விற்பனையாகும் ஹயோம் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இஸ்ரேலின் ஏனைய செய்திப் பத்திரிகைகளும் இதனையொத்த செய்தியை வெளியிட்டுள்ளன. ரபா மீதான படை நடவடிக்கை ஒன்றுக்கான சமிக்ஞையை இஸ்ரேல் இராணுவம் அண்மைக் காலத்தில் வெளியிட்டு வருகிறது. ‘வடக்கில் ஹமாஸ் கடுமையாக தாக்கப்பட்டது. காசா பகுதியின் மத்தியிலும் அது தீவிரமாக தாக்கப்பட்டது. ரபாவிலும் கூட விரைவில் கடுமையாக தாக்கப்படும்’ என்று காசாவில் செயற்படும் 162 ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் ஜெனரல் இட்சிக் கோஹன், இஸ்ரேலின் அரச தொலைக்காட்சி ஒன்றுக்கு கடந்த செவ்வாயன்று குறிப்பிட்டிருந்தார். ரபா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களும் அண்மைக் காலத்தில் அதிகரித்துள்ளன. தெற்கு ரபா நகரில் வீடு ஒன்றை இலக்கு வைத்து இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதலில் மூன்று குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்பட்டு மேலும் நால்வர் காயமடைந்ததாக அல் ஜசீரா செய்தி நிறுவனம் குறிப்பிட்டது. ஏற்கனவே இடம்பெயர்ந்து ரபாவை அடைந்திருக்கும் பலஸ்தீனர்கள் மற்றொரு வெளியேற்றம் கடுமையானதான அமையும் என்று அஞ்சுகின்றனர். பாடசாலை ஒன்றில் தனது குடும்பத்துடன் தற்காலிக முகாமில் இருக்கும் 30 வயதான அயா என்பவர், பெரும் ஆபத்து பற்றி அஞ்சுவதாக தெரிவித்துள்ளார். துறைமுகப் பகுதியான அல் மவாசியில் இருந்து அண்மையில் இந்த முகாமுக்கு வந்த சில குடும்பங்கள் வசிக்கும் கூடாரங்களுக்கு அருகில் ஷெல் குண்டுகள் விழுந்ததை அடுத்து அவை தீப்பற்றிக் கொண்டதாக தெரிவித்துள்ளார். ‘ரபாவில் இருந்து வெளியேறுவது தொடர்பில் நாம் முடிவு ஒன்றை எடுக்க வேண்டி உள்ளது. ஏனென்றால் ஆக்கிரமிப்பு திடீரென்று இடம்பெறக் கூடும் என்பதோடு நாம் தப்பிப்பதற்கு நேரம் இருக்காது என்று நானும் எனது தாயும் அஞ்சுகிறோம்’ என்று அந்தப் பெண் குறிப்பிட்டார். ‘நாம் எங்கு போவது?’ என்றும் அவர் கேள்வி எழுப்பினார். காசாவில் 201 ஆவது நாளாகவும் நேற்றும் இஸ்ரேலின் தாக்குதல்கள் தீவிரம் அடைந்திருந்தன. அங்கு கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்தை தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்கள் 200 ஆவது நாளை எட்டிய நிலையில் ஹமாஸ் ஆயுதப் பிரிவு பேச்சாளர் அபூ உபைதா கடந்த செவ்வாயன்று (23) வெளியிட்ட உரை ஒன்றில், ‘இந்த போரில் இஸ்ரேல் அவமானத்தையும் தோல்வியையும் மாத்திரமே சந்தித்துள்ளது’ என்றார். இதேவேளை இஸ்ரேலிய படை வாபஸ் பெற்ற கான் யூனிஸ் நகரின் நாசர் மருத்துவமனை வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய புதைகுழி ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை தற்போது 300ஐ தாண்டியுள்ளது. இந்த புதைகுழி தொடர்பில் அமெரிக்கா கவனத்தை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் விபரத்தை தரும்படி இஸ்ரேல் அரசை அமெரிக்க அதிகாரிகள் கேட்டுள்ளனர். காசா போர் வெடித்தது தொடக்கம் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையிலும் பதற்றம் தீவிரம் அடைந்திருப்பதோடு வடக்கு ஹெப்ரூனில் நேற்றுக் காலை இஸ்ரேலிய படையினால் 20 வயது யுவதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டதை அடுத்தே இந்தப் பெண் சுடப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது. தலையில் சுடப்பட்ட அந்தப் பெண்ணின் உடலை தமது பிடியில் வைத்திருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.   https://www.thinakaran.lk/2024/04/25/world/56718/ரபா-மீது-இஸ்ரேல்-விரைவில/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.