Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

"தோற்றிடேல், மீறித் 

தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!"

-நன்னிச் சோழன்

 

  • எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…!

 

விடுதலைப்புலிகளின் வான்புலிகளிடம் இருந்த மொத்த வான்பொல்லங்களின் (airstrip) எண்ணிக்கை 9.

அவற்றின் அமைவிடங்கள் ஆவன,

 

1) பனிக்கன்குளம் வான்பொல்லம்

Panikkankulam airstrip, Sky Tigers, Tamileelam Air Force, Tamileelam.jpg

'வான்பொல்லத்தைக் காட்டும் வரைபடம்'

 

A9 சாலையின் மேற்குப் புறத்தில் அமைக்கப்பட்டிருந்தது.

  • கீல் கல்வீதிப்பாவு(Tarmacadam) நீளம்: 500m
  • கீல் கல்வீதிப்பாவு அகலம்: 50m

இந்த வான்பொல்லமானது நாற்சதுர வடிவிலான மணலாலான 5-6 அடி உயர மண்ணரணால் சூழப்பட்டிருந்தது. அந்த மண்ணரணின் வெளிப்புறத்தில் நீரற்ற அகழி இருந்தது. இதற்கான நுழைவுவாயில் எங்கிருந்தது என்பதை என்னால் அறியமுடியவில்லை. இதன் முதன்மை கீல் கல்வீதிபாவானது 'கூட்டல் (+)' வடிவிலிருந்தது. ஆனால் குறுக்காக செல்லும் ஓடுபாதை மிகவும் நீளம் குறைந்ததாக இருந்தது. தேவைப்படுபோது ஓடுபாதையின் மேல் உருமறைப்பிற்காக - வண்டுகளின் கண்ணில் மண்ணைத்தூவ - மணல் பரப்பப்படும். 

 

Panikkankulam.jpg

'மணலாலான 5- 6 அடி உயரமுள்ள மண்ணரணை அம்புக்குறி சுட்டுகிறது'

 

dvsd.jpg

'எதிரெதிர் திசையில் அமைந்திருந்த குறுக்காப் போகும் கீல் கல்வீதிப்பாவு. இது மிகவும் சிறியதாக உள்ளதைக் காண்க'

 

பனிக்கன்குளம் வான்பொல்லம்.png

'ஓடுபாதை மணலால் உருமறைக்கப்பட்டுள்ளதை கவனிக்குக'

 

 

2) நிவில் பகுதி வான்பொல்லம்

Untitled.jpg

'வான்பொல்லத்தைக் காட்டும் வரைபடம் | நான் கணினி வரைகலையில் கொஞ்சம் மோசமான ஆள்!'

 

B-69 பூநகரி பரந்தன் சாலையில் உள்ள நிவில் பகுதியில் அமைக்கப்பட்டிருந்தது.

  • கீல் கல்வீதிப்பாவு நீளம்: 200m

இந்த வான்பொல்லமானது நாற்சதுர வடிவிலான வெள்ளை மணலாலான மண்ணரணால் சூழப்பட்டிருந்தது. அந்த மண்ணரணின் வெளிப்புறத்தில் நீருள்ள அகழி இருந்தது. இதற்கான நுழைவுவாயில் எங்கிருந்தது என்பதை என்னால் அறியமுடியவில்லை. இதன் முதன்மை கீல் கல்வீதிபாவானது கூட்டல் வடிவில்லில்லாமல் நெடியவாக இருந்தது. தேவைப்படுபோது ஓடுபாதையின் மேல் உருமறைப்பிற்காக - வண்டுகளின் கண்ணில் மண்ணைத்தூவ - மணல் பரப்பப்படும்.

 

Nivil airstrip, Tamileelam Air Force, Sky Tigers.jpg

'வெள்ளை மணலாலான மண்ணரண்

நிவில் பகுதி வான்பொல்லம்..png

நிவில் பகுதி வான்பொல்லம்.w.png

ஓடுபாதை கீல் கல்வீதிப்பாவு

 

 

3)அம்பகாமம் தென்கிழக்கு வான்பொல்லம்

இரணைமடுக் குளத்திற்கு தென்கிழக்கில் அம்பகாமத்தில் அமைக்கப்பட்டிருந்தது.

  • கீல் கல்வீதிப்பாவு நீளம்: வடக்கில் இருந்து கிழக்காக 350m
  • கீல் கல்வீதிப்பாவு அகலம்: 25m

அம்பகாமம் தென்கிழக்கு வான்பொல்லம்.png

 

4) கேப்பாப்புலவு வான்பொல்லம்

முள்ளியவளை நகரத்தின் மத்தியில் இருந்து 6.5 km மற்றும் முல்லைத்தீவு களப்பில் இருந்து தெற்காக 5 km தூரத்தில் அமைக்கப்பட்டிருந்தது.

மொத்த நீளம்: 2.5km

  • கீல் கல்வீதிப்பாவு நீளம்: 1.5km
  • கீல் கல்வீதிப்பாவு அகலம்: 100m

இவ்வான்பொல்லத்தில் வானூர்திகள் பாதுகாப்பாக நிறுத்தப்படுவதற்கு 2 பறவாடி(Hangar) அமைக்கப்பட்டிருந்தன.

கேப்பாப்புலவு வான்பொல்லம்.png

  • பறவாடி:

கேப்பாப்புலவு வான்பொல்லம்2.png

கேப்பாப்புலவு வான்பொல்லம்23.png

  • பறவாடி உட்புறம்:

கேப்பாப்புலவு வான்பொல்லம்34.png

 

பறவாடியின் உறுப்புகளை விளக்கும் விளக்கப்படம்:

கேப்பாப்புலவு வான்பொல்லம்4.png

படிமப்புரவு: dossier on ltte weapons. pdf

 

main-qimg-b9ba1010769be229af2d50d1e0b7eba4.png

main-qimg-8146cd3e7f196ee3759ac8636b3ab928.png

main-qimg-e9528d333d4ba53f1f47127d33c72ba4.png

 

5)அம்பகாமம் கிழக்கு வான்பொல்லம்

இரணைமடுக் குளத்திற்கு கிழக்கில் அம்பகாமத்தில் அமைக்கப்பட்டிருந்தது

  • மொத்த நீளம்: 1.2km
  • கீல் கல்வீதிப்பாவு நீளம்: 1.2km
  • கீல் கல்வீதிப்பாவு அகலம்: 50m
  • கட்டப்பட்டது: 2002-2003 ஆம் ஆண்டு. ஆனால் தொடர் சிங்கள வான்படையின் குண்டுவீச்சால் இது புதுபிக்கப்பட்டுக்கொண்டே வரப்பட்டது. இது சிங்களவரை ஏமாற்றுவதற்காக கட்டப்பட்டதாகும்.

ltte iranaimadu airstrip.jpg

"செய்மதிப் படம் | 2003-2004"

 

6) அம்பகாமம் வடகிழக்கு வான்பொல்லம்

இரணைமடுக் குளத்தின் வடகிழக்கில் அம்பகாமத்தில் அமைக்கப்பட்டிருந்தது.

  • கீல் கல்வீதிப்பாவு நீளம்: 300m

அம்பகாமம் வடகிழக்கு வான்பொல்லம்.png

அம்பகாமம் வடகிழக்கு வான்பொல்லம்2.png

அம்பகாமம் வடகிழக்கு வான்பொல்லம்4.png

 

7)பிரபந்தனாறு வான்பொல்லம்

  • மொத்த நீளம்: 2km
  • கீல் கல்வீதிப்பாவு நீளம்: 350m
  • கீல் கல்வீதிப்பாவு அகலம்: 50m

கீல் கல்வீதிப்பாவு மொத்தம் 16 பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்தது.

பிரபந்தனாறு வான்பொல்லம்.png

 

நிலவரையில் (in maps) மேலே உள்ள வான்பொல்லங்கள் எண்வரிசையில் ….

main-qimg-2ee3466806993424a65073bdc83f8f72.png

 

 


  • பிற்சேர்க்கை (08/12/2020):

புலன கிட்டிப்பு(credit): புஸ்பகுமார் சற்குணநாதன் (Pushpakumar Satkunanathan)

மேலும் இரண்டு வான் பொல்லங்கள்(air strips) புலிகளின் வான்புலிகளிடம் இருந்ததாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.. இவை எதையும் சிறீலங்கா இராணுவம் கைப்பற்றும் வரை கண்டு குண்டு வீசவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். அவையாவன..

8 )புத்துவெட்டுவான் கிழக்கு வான்பொல்லம் 

இது வான்பயிற்சிக் கூடமாக இருந்தது.

  • கீல் கலவீதிப்பாவு நீளம்: 800 m
  • கீல் கல்வீதிப்பாவு அகலம்: 50 m

9)மன்னகண்டல் மேற்கு வான்பொல்லம்

இது புதுக்குடியிருப்பு முத்தையன்கட்டு வீதியில் மன்னகண்டல் மேற்குப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்தது.

  • கீல் கல்வீதிப்பாவு நீளம்: 650 m
  • கீல் கல்வீதிப்பாவு அகலம்: 35 m

 


இவற்றில் வான்புலிகளின் தளமாக இயங்கியது இரண்டுதான். மீதி அனைத்தும் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு சில வான் பயிற்சிகளை மேற்கொள்ளவும் எதிரிகளை ஏமாற்றவும் வடிவமைக்கப்பட்டவை. இதில் சிறப்பு என்னவென்றால் இறுதிவரை இலங்கை படைத்துறை உண்மையான வான்பொல்லத்தை அடையாளம் கண்டு தாக்குதல்தல் நடத்தவே இல்லை! அத்தனை சிறப்பாக உருமறைக்கப்பட்டிருந்தன.

புலன கிட்டிப்பு(credit): புஸ்பகுமார் சற்குணநாதன் (Pushpakumar Satkunanathan), விடுதலைப் போராட்ட வீரர்

 


"வானூர்திகள்... ஓட்டி வந்த
வீரர்களை...ப் பார்த்துப் பார்த்து...
விசிலடித்து... ஆடுகிறோம்...
மாலைகளை...க் கழுத்தில் போட்டு"

--குத்தாட்டம் போடுடா பாடலிலிருந்து.

---------------------------------------------

உசாத்துணை:

படிமப்புரவு(Image courtesy)

நிகழ்படம்(video)

ஆக்கம் & வெளியீடு

நன்னிச் சோழன்

Edited by நன்னிச் சோழன்
  • Like 3
  • Thanks 6
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
12 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

நன்றி.. அருமையான ஆவணககாப்பு...

நன்றி ஓணாண்டியாரே... 

Vadivelu: Chimbudevan's Pulikesi 2 on hold | Tamil Movie News - Times of  India

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.