Jump to content

மனித குல வரலாற்றில் மிகப் பெரிய துரோகி யார் ?

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மனித குல வரலாற்றில் மிகப் பெரிய துரோகி யார் ?

BY SAVUKKU · 17/11/2009

1.jpg?quality=85&strip=all

ப்ரூட்டஸ்: ஜுலியஸ் சீசரின் ரோமானிய சாம்ராஜ்யத்தில், அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த, சீசரின் நெருங்கிய உறவினர் ப்ரூட்டஸ் செய்த துரோகம், வரலாற்றில் மிகவும் புகழ் பெற்றது. அகில சக்திகளையும் ஒருங்கே கொண்டிருந்த சீசரை, ப்ரூட்ஸ் அவரது மனைவி தடுத்தும் கேட்காமல் கொன்றார்.

2.jpg?quality=85&strip=all

வாங் ஜிங் வேய்: 1921ம் ஆண்டு பிறந்த சீனரான இவர், நெருக்கடியான நேரத்தில், தன் தாய் நாட்டுக்கு எதிராக ஜப்பானியர்களோடு அணி சேர்ந்ததற்காக இவரும் மிகப் பெரிய துரோகி என்று வரலாற்றில் இடம் பெறுகிறார்.

3.jpg?quality=85&strip=all

ரோசன்பர்க் தம்பதியர்: அமெரிக்கா மற்றும் சோவியத் நாட்டுக்கிடையே பனிப்போர் நடந்து கொண்டிருந்த வேளையில், அணு மற்றும் பல்வேறு அமெரிக்க ரகசியங்களை சோவியத் நாட்டுக்கு விற்றதாக குற்றம் சாட்டப் பட்டனர். பிறகு இவர்கள் இருவரின் உளவு வேலைகள் கண்டு பிடிக்கப் பட்டு 1953ம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப் பட்டனர்.

4.jpg?quality=85&strip=all

பெனடிக்ட் அர்நால்ட்:16ம் நூற்றாண்டில் அமெரிக்க தளபதியாக இருந்த இவர் அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் இடையே நடந்த போரில், அமெரிக்க ராணுவ தளபதியாக இருந்தாலும், அமெரிக்க கோட்டையை, பிரிட்டனுக்கு விட்டுக் கொடுத்து அமெரிக்காவுக்கு துரோகம் இழைக்க முயற்சி செய்தார். பின்னர் கடல் வழியே தப்பித்து கனடா நாட்டில் 1801ல் இறந்தார். ராணுவ வீரராக இருந்து தாய் நாட்டுக்கு இழைத்த துரோகத்துக்காக இவர் வரலாற்றில் இடம் பெறுகிறார்.

5.jpg?quality=85&strip=all

ஆல்ட்ரிக் ஏம்ஸ்: அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏ வில் முக்கிய பொறுப்பில் இருந்த இவர், 1985ம் ஆண்டு வாஷிங்டன் நகரில் உள்ள சோவியத் தூதரகத்தில் நுழைந்து, அமெரிக்க ரகசியங்களை பணத்துக்காக விற்றார். இவர் விற்ற ரகசியங்களால் ஏறக்குறைய 100 அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளை முடிவுக்கு வந்தன. இவ்வாறு விற்ற ரகசியங்களுக்காக 4.6 மில்லியன் டாலர்கள் லஞ்சமாக பெற்றார். அமெரிக்கா சந்தித்த மிகப் பெரிய உளவு தோல்வி இது. இதை நடத்தி வைத்ததற்காக ஏம்ஸ் வரலாற்றில் இடம் பெறுகிறார்.

6.jpg?quality=85&strip=all

விட்குன் க்விஸ்லிங்: நார்வே நாட்டைச் சேர்ந்த இவர், 1933ம் ஆண்டு தேசிய ஒற்றுமை கட்சி என்ற ஒரு கட்சியை தொடங்கினார். ஹிட்லரின் விசுவாசியாக இருந்த இவர், ஹிட்லர் படையெடுத்து வரும் முன்பே, நார்வே நாட்டின் ராணுவ யுத்திகள் அத்தனையும், ஹிட்லருக்கு தெரிவித்து விட்டார். இதனால் படையெடுப்பு நடக்கையில் எளிதாக நார்வேயை வென்ற நாஜிக்கள், வென்றதும், க்விஸ்லிங்கை நார்வே நாட்டின் அதிபராக நியமித்தனர். இரண்டாம் உலகப் போர் முடிவடைந்ததும், 1945ம் ஆண்டு, இவருக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டது. நார்வே நாட்டை காட்டிக் கொடுத்ததற்காகவும், நார்வே நாட்டு மக்களால் மிகவும் வெறுக்கப் பட்டதற்காகவும், இவர் மிகப் பெரிய துரோகி என்று வரலாற்றில் இடம் பெறுகிறார்.

8.jpg?quality=85&strip=all

யூதாஸ்:ஏசுவின் 12 சீடர்களில் ஒருவரான யூதாஸ் 30 வெள்ளிக் காசுகளுக்காக ஏசுவை காட்டிக் கொடுத்தார். அதிகாரிகள் வருகையில் “நான் ஏசுவை முத்தமிடுகிறேன் அதை வைத்து ஏசுவை கைது செய்து கொள்ளுங்கள்“ என்று கூறி காட்டிக் கொடுத்ததால், ஏசு கைது செய்யப் பட்டு சிலுவையில் அறையப் படுகிறார். இதனால், வரலாற்றின் புகழ் பெற்ற “துரோகி“ ஆகிறார்.

இவர்களையெல்லாம் விட மிகப் பெரிய துரோகி யாராவது உண்டா ? உண்டு நண்பர்களே. உண்டு.

அந்தத் துரோகிதான் “கருணாநிதி“.

27cm7.jpg?quality=85&strip=all

இவர்களெல்லோரையும் விட மிகப் பெரிய துரோகியாக கருணாநிதி பட்டம் பெற என்ன காரணம் ?

ஈழப் போரை கருணாநிதி தடுத்து நிறுத்தவில்லை என்று, தமிழகம் முழுக்க ஓலங்கள் கேட்டபோதெல்லாம், கருணாநிதி ஆதரவாளர்கள் இவர் என்ன செய்ய முடியும் ? எல்லாம் மத்திய அரசின் கையில் தானே உள்ளது, இவர்தான் போராட்டம் நடத்துகிறாரே என்று கூறுவர். ஆனால், தற்போது உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை விட, கடந்த அரசில், கருணாநிதிக்கு இருந்த செல்வாக்கு அளவில்லாதது. கருணாநிதி சொன்னால் நடக்காதது எதுவுமே இல்லை.

m-karunanidhi-sonia-gandhi-rahul-gandhi-

கருணாநிதி கடிதம் எழுதினால், உடனே பிரணாப் முகர்ஜி கோபாலபுரத்தில் வந்து மண்டியிடுவார். ஆனாலும், கருணாநிதி, நாடகம் மட்டுமே நடத்துகிறார், உண்மையில் தமிழர்கள் மீது எவ்வித அக்கறையும் இல்லை என்பதை சோனியா நன்றாகவே உணர்ந்திருந்தார். அதனால்தான், இறுதிப் போரில் அத்தனை தமிழர்கள் மீது குண்டுகள் வீசப்பட்டுக் கொண்டிருக்கும் போதும் கூட கருணாநிதி பல “கண்ணீர்” நாடகங்களை நடத்திக் கொண்டிருந்தாரே தவிர, உருப்படியாக எதுவும் செய்யவில்லை.

4.jpg?quality=85&strip=all

கருணாநிதி நினைத்திருந்தால், யுத்தம் நின்றிருக்கும் என்பது குழந்தைக்குக் கூட தெரியும். ஆனால், கருணாநிதி நினைவில், ஈழத் தமிழர்கள் இல்லை. தன் குடும்பத்தினர் மட்டுமே இருந்தனர்.

மூன்று மணிநேரம் உண்ணாநோன்பு நோற்று ‘இராசபக்சே போர் நிறுத்தத்தை அறிவித்துவிட்டார்’ என்று சொல்லி உண்ணா நோன்பை முடித்து சாதனை படைத்தவர் கருணாநிதி ஒருவர்தான். அவரிடம் ‘இன்று காலையில் கூட விடுதலைப் புலிகள் மீது கன ரக ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடைபெற்றதாக செய்திகள் வந்திருக்கிறதே?’ என்று செய்தியாளர்கள் கேட்ட போது ‘மழை விட்டும் தூவானம் விடவில்லை’ என்று பதில் இறுத்தது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்!

தமிழீழ மக்களுக்காகக் குரல் கொடுத்த தமிழ் உணர்வாளர்கள் இயக்குநர் சீமான், கொளத்தூர் மணி, தஞ்சை மணியரசன், நாஞ்சில் சம்பத், கோவை இராமகிருஷ்ணன் போன்றோரை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தது கருணாநிதியின் அதிகார வெறியல்லவா?

இனமா? பதவியா? என வந்தபோது பதவிதான் முக்கியம் என முதல்வர் கருணாநிதி முடிவெடுத்தார்

dmk6.jpg?quality=85&strip=all

தமிழ்நாட்டுக்கு அகதிகளாக ஓடிவந்த ஈழத் தமிழர்களை செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லி சிறப்பு முகாம்கள் எனப்படும் வதை முகாம்களில் ஆண்டுக்கணக்காக அடைத்து வைத்து அழகுபார்க்கும் ஒரே முதல்வர் கருணாநிதிதான்

8_2.jpg?quality=85&strip=all

இலங்கையில் நடந்த இறுதிக் கட்டப் போரில் முன்னணியில் நின்று போரை நடத்திய தளபதி பொன்சேகா தனது பதவியை ராஜினாமா செய்கையில் இராணுவம், சதி முயற்சிகளில் ஈடுபடுவதாக சந்தேகித்து 2009 அக்டோபர் 15ஆம் திகதி இந்திய அரசாங்கத்தை எச்சரிக்கையாக இருக்குமாறும் அந்நாட்டு இராணுவத்தை மிகவும் அவதானமாக செயற்படுமாறும் அறிவிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.
இந்த விஷயம் இன்று வரை இந்திய அரசாங்கத்தால் மறுக்கப் படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. இப்படி ஈழப் போரில் இந்தியாவின் / சோனியாவின் பங்கு வெளிப்படையாக தெரிந்த நிலையில்தான் பிரணாப் முகர்ஜி இலங்கை சென்று ராஜபஷேவை சந்தித்து, தமிழகம் திரும்பி, சென்னை வந்தும் கருணாநிதியை சந்திக்காமல் திரும்பியுள்ளார்.

rajapakse_pranab.jpg?quality=85&strip=al

இந்தச் சூழ்நிலையில், கருணாநிதி, சென்னையில் நடந்த ஒரு விழாவில் என்ன பேசியுள்ளார் தெரியுமா ?

”திமுக – காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்து மேலும் பல ஆண்டுகள் நீடிக்கும். காங்கிரஸ் திமுக கூட்டணி தொடர வேண்டும் என்றும் இந்த கூட்டணி நிலைத்தால்தான் இந்தியாவும், தமிழகமும் வளமாக இருக்க முடியும்.

காங்கிரசுக்கும் திமுகவுக்கும் இடையே எந்த அளவிற்கு ஒற்றுமை உள்ளது என்பது குறித்து விரிவாக பேசுவதற்கு கால நேரம் போதாது.

காங்கிரஸ் திமுக கூட்டணி தொடர்ந்தால் தான் தமிழகத்திற்கு மேலும் நல்ல பல திட்டங்களை விரைவாக செயல்படுத்த முடியும் என்பது நாடு அறிந்த உண்மை.
சென்னையில் காங்கிரஸ் கட்சி சார்பில் கடற்கரையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் முன்னாள் பிரதமர் அன்னை இந்திரா காந்தி, என்னைப் பற்றியும், திமுக பற்றியும் எந்த அளவிற்கு புகழ்ந்து பேசினார் என்று இங்கே சிலர் எடுத்துக் கூறினார்கள். அந்த ஒற்றுமை இவ்விரு கட்சிகளிடையே மேலும் பல ஆண்டுகள் தொடர்ந்து நீடிக்கும் என்றார். ” என்று பேசியுள்ளார்.

இத்தனையும் செய்து விட்டு, “மொழிக்காக” மட்டும், தமிழ் மொழி மாநாடு நடத்தும் கருணாநிதியை என்ன சொல்லி அழைப்பீர்கள்.

துரோகி அல்லவா ? அதனால்தான் சொல்கிறேன். வரலாற்றில் மிகப் பெரிய துரோகி.. .. ..

karunanidhi_20081124.jpg?quality=85&stri

முத்துவேல் கருணாநிதி

https://www.savukkuonline.com/7158/

Link to comment
Share on other sites

  • Replies 78
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பெருமாள் said:

இவர்களையெல்லாம் விட மிகப் பெரிய துரோகி யாராவது உண்டா ? உண்டு நண்பர்களே. உண்டு.

அந்தத் துரோகிதான் “கருணாநிதி“.

மனித குலத்தின் துரோகி யார் எனக் கேட்டுவிட்டு ஈழத்தமிழரின் துரோகி கருணாநிதியெனக் கட்டுரையாளர் முடித்துவைக்கின்றார்.
ஈழத்து தமிழினத்தின் துரோகிகள் அயல் நாட்டில் இல்லை ஈழத்து  தமிழினத்திலேயே இருக்கின்றார்கள்
இராமநாதன் முதல் தொடர்கின்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம ஊர் கருணாவ வச்சுகிட்டு நேக்கா பக்கத்து நாட்டு கருணாவ கோத்துவுடுது பாரு... போய் உங்க முதுகில இருக்கிற ஊத்தய முதல்ல பாருங்கடா... பைத்தியக்காரனுங்க..

Link to comment
Share on other sites

2009 இல் இக்கட்டுரையை எழுதிய சவுக்கு சங்கர் இப்பொழுது திமுகவின் முக்கிய பங்காளி, நாதக ராஜிவ் காந்தியை திமுக இல் இணைததில் முக்கிய பங்கு ஆற்றியவர். 

கருணாநிதியோ அல்லது  திமுகவோ ஒரு போதும் புலிகளுக்குகோ அல்லது ஈழ தமிழருக்கோ  நன்பனாய் இருந்ததில்லை, அவர்கள் எப்படி துரோகிகள் ஆனார்கள?. இதை நமக்கு நாமே சொல்லிக்கொண்டு சுய பச்சபாதம் அடையலாம், வேறு ஒன்றும் நடைபெறபோவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, zuma said:

பிரச்சினை என்னவென்றால், தமிழினத்தின் தலைவர் என்று தன்னைத்தானே கூறிக்கொண்டவர், ஈழத்தமிழனுக்காக தான் இருக்கிறேன் என்று தனது அரசியல் காலத்தின் பெரும்பகுதிவரை காட்டிக்கொண்டிருந்தவர், தம்மைக் காக்கக்கூடியவர் என்று ஈழத்தமிழர்களை நம்பவைத்திருந்தவர்.

அப்படியானவர் இறுதியில் சோனியாவோடு சேர்ந்து எம்மை அழிக்கத் துணைபோனார் என்றால் துரோகம் இல்லையா? 

போரில் கொல்லப்பட்டது புலிகள் மட்டுமில்லையே? இன்னும் ஒன்றரை லட்சம் அப்பாவிகளும் அல்லவா கொல்லப்பட்டார்கள்? புலிகளுக்கு எதிரானவர் கருணாநிதியென்றால், மக்கள் கொல்லப்படுவதையாவது தடுத்திருக்கலாமே? தமிழினத்தின் தலைவராக இருந்துகொண்டு இனவழிப்பை வெறுமனே வேடிக்கை பார்த்தது துரோகம் இல்லையா? 

Link to comment
Share on other sites

3 minutes ago, ரஞ்சித் said:

தற்பொழுது ஸ்ரீலங்கா அரசாங்கம் சீனாவுடன் குடிக்குலாவுவதை இந்தியாவே, அமெரிக்காவே தடுக்க முடியாது என்பது போல்,  2019 முள்ளிவாய்க்கால் அழிவை கருணாநிதி என்ன சோனியா காந்தி என்ன, கடவுளே நினைத்திருந்தாலும் தடுத்து இருக்க முடியாது. கற்பனை உலகில் இருந்து நிஜ உலகுக்கு வாருங்கள் ஐயா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, zuma said:

2009 இல் இக்கட்டுரையை எழுதிய சவுக்கு சங்கர் இப்பொழுது திமுகவின் முக்கிய பங்காளி, நாதக ராஜிவ் காந்தியை திமுக இல் இணைததில் முக்கிய பங்கு ஆற்றியவர். 

கருணாநிதியோ அல்லது  திமுகவோ ஒரு போதும் புலிகளுக்குகோ அல்லது ஈழ தமிழருக்கோ  நன்பனாய் இருந்ததில்லை, அவர்கள் எப்படி துரோகிகள் ஆனார்கள?. இதை நமக்கு நாமே சொல்லிக்கொண்டு சுய பச்சபாதம் அடையலாம், வேறு ஒன்றும் நடைபெறபோவதில்லை.

சவுக்கு சங்கர் எழுதியது சரியா பிழையா சொல்லுங்கப்பூ...

கருநாநிதி/திராவிடம் என்றவுடன் வாலைச் சுறுட்டிக்கொண்டு ஓடுவருவது.. 🤦🏼‍♂️
யார் கட்டுரை எழுதினாலும் திட்டுவது ஈழத் தமிழரை.. 🤦🏼‍♂️

உங்களைப் போன்றவர்களைவிட பரிஸ் தமிழர்களின் ஆர்ப்பாட்டத்தில் துணிந்து தன் இனத்திற்காக வாதாடிய சிங்களப் பெண் மேலானவள் எனத் தோன்றுகிறது.. 🤦🏼‍♂️

2 minutes ago, zuma said:

தற்பொழுது ஸ்ரீலங்கா அரசாங்கம் சீனாவுடன் குடிக்குலாவுவதை இந்தியாவே, அமெரிக்காவே தடுக்க முடியாது என்பது போல்,  2019 முள்ளிவாய்க்கால் அழிவை கருணாநிதி என்ன சோனியா காந்தி என்ன, கடவுளே நினைத்திருந்தாலும் தடுத்து இருக்க முடியாது. கற்பனை உலகில் இருந்து நிஜ உலகுக்கு வாருங்கள் ஐயா.

எப்போதிலிருந்து மூக்குச் சாத்திரம் பார்க்கத் தொடங்கினீர்கள்.. 

சொல்லவேயில்ல.. 🤦🏼‍♂️

Link to comment
Share on other sites

2 minutes ago, Kapithan said:

சவுக்கு சங்கர் எழுதியது சரியா பிழையா சொல்லுங்கப்பூ...

கருநாநிதி/திராவிடம் என்றவுடன் வாலைச் சுறுட்டிக்கொண்டு ஓடுவருவது.. 🤦🏼‍♂️
யார் கட்டுரை எழுதினாலும் திட்டுவது ஈழத் தமிழரை.. 🤦🏼‍♂️

உங்களைப் போன்றவர்களைவிட பரிஸ் தமிழர்களின் ஆர்ப்பாட்டத்தில் துணிந்து தன் இனத்திற்காக வாதாடிய சிங்களப் பெண் மேலானவள் எனத் தோன்றுகிறது.. 🤦🏼‍♂️

உண்மை கசப்பானது ஐயா.யதார்த்தவாதி பொதுசன விரோதி 😀

நிற்க, யாழ் களத்தில் எங்குகெங்கு, யார் யார் கருத்து எழுத வேண்டும் என யாரிடமாவது அனுமதி பெறவேண்டுமா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் போரையே நாம் நடத்தினோம். மன்மோகன் சிங்கும், சோனியாவும் இல்லையென்றால் இப்போரை எம்மால் வென்றிருக்க  முடியாது - 2009 இல்  இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷெ ஹிந்துஸ்த்தான் பத்திரிக்கைக்கு வழங்கிய செவ்வி. இது நிஜத்தில், நிஜ உலகில் நடந்தது.

சோனியாவினாலோ கருணாநிதியாலோ நினைத்தாலும் போரை நிறுத்தியிருக்க முடியாது - இது சுமாவின் கற்பனை. நடக்காதது, கனவுலகிலிருந்து நிஜ உலகிற்கு வர மறுப்பது.

By crushing Tamil Tigers, I fought India's war: Rajapaksa

Sri Lankan President Mahinda Rajapaksa says that he fought India's war by crushing the Tamil Tigers. He also added that his war is part of the South Asian campaign against terrorism. Sutirtho Patranobis reports.
Sri Lankan President Mahinda Rajapaksa has said that he has fought India’s war by militarily ending the Liberation Tigers of Tamil Eelam (LTTE).

"I think my war is part of the South Asian campaign against terrorism. In fact, by eliminating the LTTE militarily, I have fought India's war," Rajapaksa said.

Rajapaksa thanked the Indian government for its support in the war against the Tamil rebels. He made particular reference to Prime Minister Manmohan Singh and Congress president Sonia Gandhi.

"My victory coincided with her (Sonia's) electoral victory. I have written to her congratulating her on winning the elections. India's moral support during the war was most important," Rajapaksawas quoted by The Week magazine as having said.

Rajapaksa said, "nothing is more important for me than what India thinks."

The President said he was congratulated by many politicians in Tamil Nadu after the war was reported to be over. "Look at the fate of LTTE supporters in Tamil Nadu in the elections. All those who supported the Tigers have been routed. The people of Tamil Nadu have given these terror supporters a fitting reply," he said.

On the path after the war, he said the government would devise a 'homegrown' political solution to resolve the decades-old ethnic problem in the country.

"The India-Lanka accord led to the 13th amendment to the Sri Lankan constitution. In that way the home-grown approach covers the position of India, too. This time, a political solution will be devised after taking every shade of Sri Lankan opinion into consideration," he said, adding that "since peace is in the interest of Sri Lanka, we have to sit down and decide on its content ourselves."

Rajapaksa said he wants to have friends all over South Asia. 'I find it all right to have good ties with Pakistan also,' he said when pointed out that he has engaged antagonistic parties like the Israelis and the Palestinians and India and Pakistan.

https://www.hindustantimes.com/india/by-crushing-tamil-tigers-i-fought-india-s-war-rajapaksa/story-ULicQz6xiFrICAgshQ3AOI.html

ஆங்கிலம் படிப்பது சிரமம் என்றால் மொழிபெயர்த்துத் தருகிறேன்.

Link to comment
Share on other sites

4 minutes ago, ரஞ்சித் said:

ஆமாம் ஐயா, மஹிந்த சொல்வதெல்லாம் தேவ வாக்கு. இந்தியன் பத்திரிகைக்கு பேட்டி கொடுக்கும் போது பாக்கிஸ்தான் உதவினார்கள் என்ற சொல்லுவார்?. 

பேட்டியின் பிற்பகுதியில் சொன்ன மாதிரி, இந்தியாவையும் இணைத்து   உள்ளூரில் தயாரித்த (Home grown political solution) தீர்வைக் தமிழருக்கு கொடுத்து, தற்பொழுது தமிழர் சிறப்பாக இலங்கையில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள் 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு மகிந்த சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது, சிவஷங்கர் மேனன் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது, ஆனால் நீங்கள் கற்பனையில் நினைத்துவைத்திருப்பதை நாங்கள் எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். சரியான கிணற்றுத்தவளை !!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, வாத்தியார் said:

மனித குலத்தின் துரோகி யார் எனக் கேட்டுவிட்டு ஈழத்தமிழரின் துரோகி கருணாநிதியெனக் கட்டுரையாளர் முடித்துவைக்கின்றார்.

மனித குலமே தோன்றியது தமிழரிடம் இருந்துதானே. அதிலும் அதி தெற்கே இருக்கும் ஈழத்தமிழர்தான் ஆதி தமிழர்கள். எனவே கட்டுரையாளர்  லொஜிக்க்காக நிறுவியபடி  கருணாநிதிதான் பெரிய துரோகியாக இருக்கமுடியும்.😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, zuma said:

2009 இல் இக்கட்டுரையை எழுதிய சவுக்கு சங்கர் இப்பொழுது திமுகவின் முக்கிய பங்காளி, நாதக ராஜிவ் காந்தியை திமுக இல் இணைததில் முக்கிய பங்கு ஆற்றியவர். 

அடுத்த 5 - 6 வருஷத்திற்கு தீம்காவை வறுத்து எடுக்கவேண்டும் என்பதுதானே கொடுக்கப்பட்ட பணி. தம்பிகள் உசாராக பாய்ஞ்சு பாய்ஞ்சு செய்வார்கள்.😂

அப்பன் செய்த பாவம் எல்லாம் பிள்ளைகள் மேல் வந்து சேரும் என்ற சனாதன நம்பிக்கையின்படி கருணாநிதியின் வாரிசு ஸ்டாலின், ராஜீவ் காந்தியின் வாரிசு ராகுல் போன்றவர்களுக்கு சாபம் போட்டுக்கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கு கொரோனா வந்தால்கூட சந்தோஷத்தில் கொண்டாடுவார்கள். கேட்டால் ஈழத்தமிழரை அழித்தவர் வம்சத்தில் துன்பம் வந்தால் கொண்டாடவேண்டும்தானே என்று விளக்கமும் வரும்😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரஞ்சித் said:

போரில் கொல்லப்பட்டது புலிகள் மட்டுமில்லையே? இன்னும் ஒன்றரை லட்சம் அப்பாவிகளும் அல்லவா கொல்லப்பட்டார்கள்?

மகிந்த இனப்படுகொலை செய்ய இந்தியா, இணைத்தலைமை நாடுகள், ஐ.நா. எல்லாம் வழிப்படம் போட்டுக்கொடுத்தார்கள். சீனா, பாகிஸ்தான் எல்லாம் ஆயுதம் கொடுத்தார்கள். ஆனால் இவர்களை எல்லாம் கேள்விகேட்கவும், துரோகிகள் என்று திட்டவும் பலமில்லை என்பதால் அவர்களிடமே நியாயம் கேட்டு அழுவோம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவும், அமெரிக்காவும், சர்வதேசமும் வந்து ஈழத்தமிழரைக் காப்பாற்றும் என்று தமிழர்கள் நம்பியிருக்கவில்லையே?  இறுதியாக அமெரிக்கக் கடற்படைக் கப்பல் தலைவரைக் காப்பாற்றப்போகுது என்று சொன்னதுகூட கட்டுக்கதைதான்.

ஆனால், தி மு க வும், கருனாநிதியும் இறுதிநேரத்தில் ஏதாவது செய்வார்கள், இனக்கொலையினை தடுத்து நிறுத்துவார்கள் என்று நம்பித்தானே இருந்தோம்? ஆனால், செய்யவில்லையே? இது நம்பிக்கைத் துரோகம் இல்லையா? தமிழனத்தின் தலைவருக்கு அவரின் இனம் ஒன்று இனக்கொலைக்குள் அகப்பட்டுச் சாவது ஒரு பிரச்சினையாகத் தெரியவில்லையா?

ஈழத்தமிழினம் செய்த்துக்கொண்டிருக்க, தில்லியில் தன் மகனுக்கும் மகளுக்கும் பதவிவேண்டித் தவம் கிடந்ததும், புராணத்தில் தமிழரின் வீதியொன்றில் சாவுப்பறை கேட்கும்போது, இன்னொரு வீதியில் மங்கள் வாத்தியம் ஒலிக்கும் என்றதும், மூன்று மணிநேரம் மனைவிமார் புடைசூழ உண்ணாவிரத நாடகமாடி யுத்த நிறுத்த ஏற்படுத்தப்பட்டுவிட்டது என்று பொய்கூறி மாட்டுப்பட்டபின்னர் மழைவிட்டாலும் தூவானம் விடாமல் பெய்வதில்லையா என்று கிண்டலடித்ததும், தமிழகத்தின் மக்களின், மாணவர்களின் எழுச்சியை பொலீஸ் அடக்குமுறை கொண்டு அடக்கி, பாடசாலைகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை விட்டதும், சிவஷங்கர் மேனனிடம் புலிகளின் தலைமை உயிருடன் இருந்தால் தான் செய்யும் திருகுதாலங்களுக்காகத் தண்டிக்கப்படுவோம், ஆகவே எப்பாடுபட்டாவது அழித்துவிடுங்கள் என்று கேட்டதும், போரை நிறுத்தி, ஈழத்தமிழ் இனத்தைக் காக்கும்படி தனது உயிரை ஈந்த தமிழக உறவின் தியாகத்தினைக் கொச்சைப்படுத்தி காதல்த் தோல்வியால் செத்தான் என்றதும், இசைப்பிரியாவின் கோரமான கொலையினைப் பார்த்தபின்னர் இது எப்போது எடுத்த படமோ தெரியவில்லை, புலிகளே இதனைச் செய்திருக்கலாம் என்று சொன்னதும் சர்வதேசமோ, சீனாவோ அமெரிக்காவோ இல்லையே? எல்லாமே கருனாநிதிதானே? அப்படியானால் அவர் தமிழனம் சந்தித்த முக்கிய துரோகிகளில் ஒருவராக மாட்டாரா? 

Link to comment
Share on other sites

ரஞ்சித் 1991 ராஜீவ் கொலையின் பின்னர் விடுதலைப்புலிகள் மீதும் அவர்களை ஆதரிப்பவர்கள் மீதும் தடா, பொடா போன்ற மிக கடுமையான சட்டங்கள் ஏவி விடப்பட்ட சூழ்நிலையில், இந்ததிய அரசியலமைப்பில் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களை கொண்ட ஒரு மாநில் முதலைச்சரால்  ஈழம் என்ற விடயத்தில்  எதையும் செய்ய முடியாது என்பது அரசியலில் பால பாடம். அதுவும் 2009 ல் தமிழக ஆட்சி காங்கிரஸ் தயவலேயே சிறுபான்மை அரசாக இருந்தது. இந்த பாலபாடத்தை புரியாமல் கருணாநிதி காப்பாறுவார் என்ன று நம்பி உலக அரசியலில் சக்திவாய்ந்த ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளின் அறிவுறுத்தல்களை புலிகள் உதாசீனம் செய்தனர் என்றும்   புலிகளை கண்மூடித்தனமாக ஆதரிக்கும் நீங்களே கூறுவது புலிகளை அவமதிப்பதாகாதா? 

Link to comment
Share on other sites

6 hours ago, ரஞ்சித் said:

பிரச்சினை என்னவென்றால், தமிழினத்தின் தலைவர் என்று தன்னைத்தானே கூறிக்கொண்டவர், ஈழத்தமிழனுக்காக தான் இருக்கிறேன் என்று தனது அரசியல் காலத்தின் பெரும்பகுதிவரை காட்டிக்கொண்டிருந்தவர், தம்மைக் காக்கக்கூடியவர் என்று ஈழத்தமிழர்களை நம்பவைத்திருந்தவர்.

அப்படியானவர் இறுதியில் சோனியாவோடு சேர்ந்து எம்மை அழிக்கத் துணைபோனார் என்றால் துரோகம் இல்லையா? 

போரில் கொல்லப்பட்டது புலிகள் மட்டுமில்லையே? இன்னும் ஒன்றரை லட்சம் அப்பாவிகளும் அல்லவா கொல்லப்பட்டார்கள்? புலிகளுக்கு எதிரானவர் கருணாநிதியென்றால், மக்கள் கொல்லப்படுவதையாவது தடுத்திருக்கலாமே? தமிழினத்தின் தலைவராக இருந்துகொண்டு இனவழிப்பை வெறுமனே வேடிக்கை பார்த்தது துரோகம் இல்லையா? 

ஒன்றரை  லட்சம் மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற பொறுப்புணர்வு அன்றைய நிலையில் யுத்தம், சமாதானம் தொடர்பாக முக்கிய முடிவுகளை எடுத்த புலிகளின் அரசியல் தலைமைக்கே இல்லாதபோது பக்கத்து நாட்டு மாநில முதலமைச்ருக்கு அந்த பொறுப்பு வேண்டும்  என்று எதிர்பார்க முடியுமா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மற்றையவர்களை மடையர்களாக்கும் உங்களின் கைங்கரியத்தைக் கைவிடுங்கள் முதலில். "கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கும்" நான் !!! அதேபோல உங்களை நான் "எதற்கெடுத்தாலும் காலைத்தூக்கும் புலியெதிர்ப்புக் காய்ச்சல் கொண்டவர்" என்றால் எப்படியிருக்கும்? உண்மையும் அதுதானே? 

சிவஷங்கர் மேனன் எழுதிய தெரிவுகள் எனும் நூலைப் படித்துப் பாருங்கள், அதில் கருனாநிதியின் பங்கு கூறப்பட்டிருக்கிறது. கருனாநிதியின் சம்மதத்துடனேயே இந்தியா யுத்தத்தில் தீவிரமாக இறங்கும் முடிவினை எடுத்ததாக அவர் சொல்லியிருக்கிறார்.

புலிகளை அழித்தாவது பெருமளவு மக்களைக் கொல்லவேண்டும் என்று போரினை நடத்திய சிங்களப் பேரினவாதத்தின் முன்னால், மக்களைப் புலிகளால் காப்பாற்றியிருக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. மக்களைக் காப்பாற்றக் கூடாதென்பதற்காகவே, புலிகளைப் பலவீனப்படுத்தி அழித்தார்கள். அது உங்களைப்போல புலிவாந்தியை மீண்டும் மீண்டு பருகி மகிழ்பவர்களுக்குப் புரியாது.

புலிகளே தமிழர்களின் பிரச்சினையென்று நினைத்துக்கொண்டு வாழும் உங்கள் போன்றவர்களுக்கு, இன்று புலிகள் இல்லாத நிலையில் ஏன் தமிழர்கள் இன்னமும் அடக்கியொடுக்கப்பட்டு வருகிறார்கள் என்கிற கேள்வி ஒருபோதுமே வரப்போவதில்லை. உயிருள்ள மிருகத்தில் இரத்தத்திற்காக ஒட்டியிருக்கும் உண்ணிகள், அம்மிருகம் இறந்தவுடன் அவையும் வீழ்ந்துவிடும் அல்லது வேறு ஒரு மிருகத்தின்மேல் தாவிவிடுமாம். அதேபோல புலிகள் இருக்கும்வரை நீங்கள் செய்த வசவுகள் இன்னமும் முடியவில்லை,  இன்று அவர்கள் இல்லாதபோதும் அதே  வசவுகள் தொடர்கின்றன. 

Link to comment
Share on other sites

32 minutes ago, ரஞ்சித் said:

மற்றையவர்களை மடையர்களாக்கும் உங்களின் கைங்கரியத்தைக் கைவிடுங்கள் முதலில். "கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கும்" நான் !!! அதேபோல உங்களை நான் "எதற்கெடுத்தாலும் காலைத்தூக்கும் புலியெதிர்ப்புக் காய்ச்சல் கொண்டவர்" என்றால் எப்படியிருக்கும்? உண்மையும் அதுதானே? 

சிவஷங்கர் மேனன் எழுதிய தெரிவுகள் எனும் நூலைப் படித்துப் பாருங்கள், அதில் கருனாநிதியின் பங்கு கூறப்பட்டிருக்கிறது. கருனாநிதியின் சம்மதத்துடனேயே இந்தியா யுத்தத்தில் தீவிரமாக இறங்கும் முடிவினை எடுத்ததாக அவர் சொல்லியிருக்கிறார்.

அடுத்தவர் சொன்ன கதைகளை விடுத்து உங்கள் சொந்த அறிவில் சிந்தத்து பாருங்கள். 2006 ஜெனிவா பேச்சுவார்ததை முடிந்த கையோடு இணைத்தலைமை நாடுகள் புலிகளுக்கு கொடுத்த பாரிய அழுத்தத்தை நினைத்து பாருங்கள். ஐரோப்பிய யூனியன் புலிகளை  பயங்கரவாத பட்டியலில் இணைத்த சம்பவத்தை பாருங்கள். இவற்றை எல்லாம் மீறி அந்த நாடுகளை புலிகள் உதாசீனம் செய்தது கருணாதிதியை நம்பி என்று கூற வருகின்றீர்களா?  உலகின் அத்தனை வல்லரசு நாடுகளை எதிர்த்து  புலிகள் சண்டை செய்தார்கள் என்றெல்லாம் வெற்று  வீரம் பேசப்பட்டதே. அந்த நாடுகளை மீறி கருணாநிதி உதவுவார் என்று நம்பும் அளவுக்கு தமிழர்கள் பைத்தியக்காரர்கள் இல்லை. 
புலிகள் இருக்கும் போதோ அல்லது இன்றோ நான் என்றுமே புலிகளை வசவு செய்யவில்லை. அவர்களின் அரசியல் தவறுகளை பற்றி மட்டும் தான் பேசுகிறேன். 

புலிகள்  இல்லாத இன்றைய சூழ்நிலையில் இனவாதிகளால் தமிழர்கள் அடக்கப்படுவதற்கு முக்கிய காரணம் புலிகள் போராட்டத்தை தோல்வியில் முடித்து தமிழருக்கு அவமானத்தை தேடித்தந்ததே. ராஜ தந்திரத்துடன் நடந்திருந்தால் நினைத்தது கிடைத்திருக்காவிட்டாலும் படுதோல்வியையும் இனவாதிகளின் எக்காளத்தையும் தடுத்திருக்கலாம். அடுத்த தலைமுறை கெளரவமாக போராட்டத்தை நடத்த அடித்தளம் இட்டிருக்கலாம். பாரிய மக்கள் அழிவை தடுத்திருக்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்களுக்கு யார்தான் எதிரி  , துரோகி என அடிக்கடி எனக்குள் நான் கேள்வி கேட்பதுண்டு அப்போது விரலை தூக்கி யார் மீதும் காட்ட முடியாதும் உள்ளது .
விரலை நீட்டினால் விரல் காட்டுதல் நீண்டுகொண்டே இருக்கும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஈழத்தமிழர்களுக்கு யார்தான் எதிரி  , துரோகி என அடிக்கடி எனக்குள் நான் கேள்வி கேட்பதுண்டு அப்போது விரலை தூக்கி யார் மீதும் காட்ட முடியாதும் உள்ளது .
விரலை நீட்டினால் விரல் காட்டுதல் நீண்டுகொண்டே இருக்கும் 

இது தான் தமிழினத்தின் சாபம்

போராட உதவ ஆர்ப்பாட்டம் செய்ய அநியாயத்தை கேள்வி கேட்க எவரும் வரமாட்டார்கள்

ஆனால் பிழை பிடிக்க, குற்றம் சொல்ல, காட்டிக்கொடுக்க வந்து கொண்டே இருப்பார்கள் 😡

Link to comment
Share on other sites

8 hours ago, zuma said:

தற்பொழுது ஸ்ரீலங்கா அரசாங்கம் சீனாவுடன் குடிக்குலாவுவதை இந்தியாவே, அமெரிக்காவே தடுக்க முடியாது என்பது போல்,  2019 முள்ளிவாய்க்கால் அழிவை கருணாநிதி என்ன சோனியா காந்தி என்ன, கடவுளே நினைத்திருந்தாலும் தடுத்து இருக்க முடியாது. கற்பனை உலகில் இருந்து நிஜ உலகுக்கு வாருங்கள் ஐயா.

சில பி.....தினிகளுக்கு எவ்வளவு சந்தோஷம்     (து இதல்லாம் ஒரு பிழைப்பு )

Link to comment
Share on other sites

2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஈழத்தமிழர்களுக்கு யார்தான் எதிரி  , துரோகி என அடிக்கடி எனக்குள் நான் கேள்வி கேட்பதுண்டு அப்போது விரலை தூக்கி யார் மீதும் காட்ட முடியாதும் உள்ளது .
விரலை நீட்டினால் விரல் காட்டுதல் நீண்டுகொண்டே இருக்கும் 

yarl.com  வரை (சிலர் )அவர்களும் அவர்கள் பங்குக்கு ஏதோ முடிந்தவரை செய்கிறார்கள் தானே 

Link to comment
Share on other sites

1 hour ago, விசுகு said:

இது தான் தமிழினத்தின் சாபம்

போராட உதவ ஆர்ப்பாட்டம் செய்ய அநியாயத்தை கேள்வி கேட்க எவரும் வரமாட்டார்கள்

ஆனால் பிழை பிடிக்க, குற்றம் சொல்ல, காட்டிக்கொடுக்க வந்து கொண்டே இருப்பார்கள் 😡

ஆயுதப் போரட்டம் நடைபெற்ற காலம் முழுவதும் அனைத்து தமிழ் மக்களும் போராட்ட நடவடிக்கைகள் தொடர்பான தமது அதிப்தி முரண்படுகளை எல்லாம்  மீறி  போராட்டதிற்கு தமது அதிகபட்ச பங்களிப்பை செய்தனர். மக்களின் பங்களிப்பின்றி போரட்டம் நடத்தி இருக்க முடியாது.  இதில் மக்களில் ஒரு தவறும் இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, tulpen said:

ஆயுதப் போரட்டம் நடைபெற்ற காலம் முழுவதும் அனைத்து தமிழ் மக்களும் போராட்ட நடவடிக்கைகள் தொடர்பான தமது அதிப்தி முரண்படுகளை எல்லாம்  மீறி  போராட்டதிற்கு தமது அதிகபட்ச பங்களிப்பை செய்தனர். மக்களின் பங்களிப்பின்றி போரட்டம் நடத்தி இருக்க முடியாது.  இதில் மக்களில் ஒரு தவறும் இல்லை. 

ம்ம்

மக்களுக்கு எதிராக நாம் எழுத மாட்டோம் என்பதனால் கண்டது கேட்டவற்றை அவிட்டு விட வேண்டாம்.

எத்தனை வீத தமிழ் மக்கள் பங்களிப்பு செய்தனர் என்பதற்கு நானே சாட்சி. அதே களத்தில் நின்றவன். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.