Jump to content
 • Veeravanakkam
 • Veeravanakkam
 • Veeravanakkam

ஊடகவியலாளர் மாமனிதர் சிவராமின் 16ஆவது ஆண்டு நினைவுநாள் இன்று!


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

ஊடகவியலாளர் மாமனிதர் சிவராமின் 16ஆவது ஆண்டு நினைவுநாள் இன்று!

AdminApril 29, 2021
sivaram-memorial-0021.jpg?resize=640%2C3

இலங்கையின் மிக முக்கியமான ஊடகவியலாளர்களில் ஒருவரான மாமனிதர் சிவராம் படுகொலை செய்யப்பட்டு 16 ஆண்டுகள் கடந்துவிட்டன. பிரபல ஊடகவியலாளரான சிவராம் 2005ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் நாள், பாதுகாப்பு மிகுந்த இலங்கைத் தலைநகர் கொழும்பில், நாடாளுமன்றத்திற்கு அருகில் வைத்து கடத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 1959ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 11ஆம் நாள் தென்தமிழீழத்தின் மட்டக்களப்பில் பிறந்த சிவராம், தராகி என்ற பெயரில் கொழும்பு ஆங்கிலப் பத்திரிகையில் அரசியல், போரியல், பாதுகாப்பு சார்ந்த விடயங்களில் கட்டுரைகளை எழுதிய நிலையில், அவரது கட்டுரைகள் உள் நாட்டில் மாத்திரமின்றி உலகளவிலும் பரவலாக வாசிக்கப்பட்டன. பத்தி எழுத்தாளராக, அரசியல் ஆய்வாளராக, படைத்துறை ஆய்வாளராக பல்வேறு பரிமாணங்களை கொண்ட சிவராம் ஆரம்பத்தில் 1980களில் விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டதுடன், 1990களின் இறுதிப்பகுதியில் இருந்து விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளில் ஈர்க்கப்பட்டவராகி, விடுதலைப் புலிகளின் படைத்துறை வெற்றிகள் ஈழப் போராட்டத்திற்கு வழங்கும் என்று தனது எழுத்துக்களில் எழுதினார். 

sivaram0105052.jpg?resize=640%2C480

தமிழ்த் தேசியம் சார்ந்து ஆங்கிலப் பத்திரிகைகளில் எழுதிவந்த சிவராம் பல்வேறு நெருக்கடிகளையும் எதிர்ப்புக்களையும் கடந்தே எழுதிவந்ததுடன், அரசாங்கத்தினாலும், அரசாங்க சார்புக் குழுக்களாலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளராக, அனுதாபியாக, செயற்பாட்டாளராக பார்க்கப்பட்டு கடுமையான நெருக்குதல்களை சந்தித்து, இறுதியில் படைப் புலனாய்வாளர்கள் மற்றும் அரசசார்பு கூட்டு செயற்பாட்டாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அவர் வழங்கிய பங்குகளுக்காக அவருக்கு தமிழீழ விடுதலைப் புலிகளால் “மாமனிதர்” என்ற  விருது வழங்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இலங்கையில் நிலவும் கொடூரமான ஊடக – கருத்துச் சுதந்திர மறுப்பு சூழலை காட்டும் சிவாரமின் படுகொலை இடம்பெற்று இன்று 15 ஆண்டுகள் கடந்தபோதிலும், இதுவரையில் நிமலராஜன் முதல் சிவராம் உட்பட அவரின் பின்பும் சுட்டுக் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் கொலைகளுக்கு பொறுப்பான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

http://www.errimalai.com/?p=39592

 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சிவராம் இல்லாமல் தமிழர் அரசியல், தரகு அரசியல் ஆனது”- காணாமல் போனோர் கருத்து

 
IMG-20210428-WA0055-1-696x320.jpg
 36 Views

சிவராம் இல்லாமல் தமிழ்த் தேசிய அரசியல் தரகு அரசியலாகிவிட்டதாக வவுனியாவில் தொடர்போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

2005ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட மூத்த ஊடகவியலாளரும், ஆய்வாளருமான மாமனிதர் தர்மரெட்ணம் சிவராமின் 16ஆவது ஆண்டு நினைவு நாள் வவுனியாவில் நினைவு கூரப்பட்டது.

IMG-20210428-WA0054.jpg

வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் குறித்த நினைவு நாள்  நினைவு கூரப்பட்டது.  இதன்போது அவரது திருவுருவ படத்திற்கு ஒளிதீபம் ஏற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

அத்துடன் ஊடகவியலாளர் சிவராமின் படுகொலையானது, “ஜனநாயகத்துக்கும், ஊடக சுதந்திரத்துக்கும் ஓர் இருண்டநாள். தமிழர் பூகோள அரசியலை அன்றே கணித்து உருவாக்கிய தராகி சிவராம் இல்லாமல் தமிழ்த்தேசிய அரசியல் சில்லறை தரகு அரசியல் ஆகிவிட்டது” என  காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

 

https://www.ilakku.org/?p=48531

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சிவராமின் வெற்றிடம், எவராலும் இன்னும் நிரப்பப்படவில்லை-பா.அரியநேத்திரன்

 
IMG-20210429-WA0073-1-696x249.jpg
 34 Views

வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மூத்த ஊடகவியலாளரும், பிரபல சமூக சேவையாளரும், இலக்கியவாதியுமான தராகி என்று அழைக்கப்பட்ட டி.சிவராமின் 16ஆவது ஆண்டு நினைவு  நாள் மட்டக்களப்பில்  நினைவு கூரப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில்  இன்று இந் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிரேஸ்ட ஊடகவியலாளரும்,மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பா.அரியநேத்திரன் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கில் யுத்தகாலத்தில் இரண்டு நிருவாக கட்டமைப்புக்கள் இருந்தன.  வடக்கு மற்றும் கிழக்கில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி,அரசாங்கத்தின் கட்டுப் பாட்டு பகுதி என இரண்டு பகுதிகள் காணப்பட்டது.

அப்போது தமிழர் தேசமெங்கும், தமிழ்மக்களுக்கு எதிராகவும் பல்வேறு இன்னல்கள் இடம்பெற்றது. இவ்வாறான உண்மையான சம்பவங்களை துணிச்சலுடன், உண்மையாக எழுதி தமிழ்மக்களின் ஏகோபித்த பிரச்சனைகளை உலகறியச் செய்தவர்.

IMG-20210429-WA0052.jpg

இவர் தமிழ்மொழியில் மாத்திரமன்றி ஆங்கில மொழிகளில் பல்வேறு உள்நாட்டு,வெளிநாட்டு பத்திரிகைகளில் தமிழ்மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை துப்புத்துலக்கி எழுதிவந்துள்ளார்.

இவ்வாறு தமிழ் சமூகத்தின்மீது திணிக்கப்பட்ட சம்பவங்களை தொடர்ச்சியாக எழுதி கிழக்கு மாகாணத்திலும், வடக்கு கிழக்கில் புகழ்பூத்த ஊடகவியலாளராகவும் செயற்பட்டதுடன் மட்டக்களப்பில் பல ஊடகவியலாளர்களை உருவாக்கிய பெருமையும் இவருக்கு இருக்கின்றது.

நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் சரியாக 2005ஆம் ஆண்டு சித்திரை மாதம் 28 ஆம் திகதி கொழும்பில் உள்ள தனியார் உணவு விடுதியில் கடத்தப்பட்டு மறுநாளான இன்றையதினம் 29 திகதி காலை படுகொலை செய்யப்பட்டநிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு சிவராம் உட்பட இந்தநாட்டில் 45 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். இன்று சிவராம் படுகொலை செய்யப்பட்டு 16ஆவது ஆண்டில் அவருக்கு அஞ்சலி செலுத்துகின்றோம். இதுவரையும் இந்தநாட்டில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு எதிரான விசாரணையோ அல்லது நீதியோ கிடைக்காமல் அஞ்சலி செலுத்துகின்றோம்.

இந்த நாட்டில் வாழ்கின்ற தமிழர்களின் பிரச்சனை நாட்டுக்கு மட்டுமல்ல உலகிற்கே தெரிந்தவிடயமாகும்.  இவ்வாறு உலகறியச் செய்த புகழ்பூத்த ஊடகவியலாளர் சிவராமின் இடத்திற்கு இதுவரையும் எந்தவொரு ஊடகவியலாளரும் உருவாகவில்லை, உருவாக்கப்படவில்லை என்பது கவலையளிக்கின்றது. தற்போதும் சிவராமின் வெற்றிடம் ஊடகவியளர்களால் நிரப்பப்படவில்லை” என்றார்.

 

https://www.ilakku.org/?p=48527

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • எனக்கு தமிழ் அவ்வளவு தெரியாது...ஆனாலும் இரண்டும் சரியென நினைக்கிறேன்  ..மேலும்.  கொடுக்குமிடங்களில் ..மார...வரலாம்.     பெறும்....இடங்களில்.   மாற...வரலாம்.  என.  நினைக்கிறேன்.  
  • செவ்வாய் கிரகத்தை... ஆய்வு செய்வதற்காக, அனுப்பிய விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது: சீனா சீனா, செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பிய தியான்வென்-1 ரோவர் விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கி உள்ளது. செவ்வாய்கிரகத்தின் மேல், கீழ் பகுதிகளின் புவியியல் அமைப்பு குறித்து இந்த விண்கலம் ஆய்வு செய்ய உள்ளது. செவ்வாய்கிரகம் தொடர்பான படங்களை எடுக்கவும் கேமராக்கள் இதில் பொருத்தப்பட்டிருக்கின்றன. மேலும் இந்த தியான்வென்-1 ரோவர் விண்கலத்தில் இணைக்கப்பட்டிருக்கும் ஐந்து கருவிகள், செவ்வாய் கிரகத்தின் பாறை தன்மைகள், நீர் ஆகியவை தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கின்றன. ஏற்கனவே சீனா விண்வெளிக்கு வீரர்களை அனுப்பியுள்ளது. அதே போல நிலவை ஆய்வு செய்வதற்கும் விண்கலங்களை அனுப்பி அதில் வெற்றி கண்டுள்ளது. இந்நிலையில் தற்போது சீன விண்கலம் ஒன்று செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியிருப்பது குறிப்பிடத்தக்க சாதனையாக கருதப்படுகிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் 240 கிலோ எடை கொண்ட 6 சக்கரங்களைக் கொண்ட ரோவர் கருவியுடன் அனுப்பப்பட்ட இந்த விண்கலம், கடந்த கடந்த பெப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1215932
  • இஸ்ரேல்- ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் மோதல்: காஸாவில் 132 பாலஸ்தீனர்களும் இஸ்ரேலில் 8பேரும் உயிரிழப்பு! இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் இடையே நடக்கும் மோதலில், காஸாவில் 132 பாலஸ்தீனர்களும் இஸ்ரேலில் எட்டு பேரும் உயிரிழந்துள்ளனர். அத்துடன் மேற்குக் கரையில் நடந்த வன்முறையில் 11பேர் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காசாவில் ஒரு சுரங்கப்பாதை வலையமைப்பில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஹமாஸ் இஸ்ரேலை நோக்கி டஸன் கணக்கான nhக்கெட்டுகளை வீசியுள்ளது மோதல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், காசா முனை மீது தாக்குதல் நடத்த விமானப்படையுடன் சேர்த்து தரைப்படையையும் இஸ்ரேல் களமிறக்கியுள்ளது. இதனால் உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது. காசா முனையில் வசித்து வந்த பாலஸ்தீனர்கள் பலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்லத் தொடங்கியுள்ளனர். தற்போது மேற்குக் கரையில் மோதல்கள் பரவியுள்ளன ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஷா மத வழிபாட்டு தளத்தில் வழிபாடு செய்வதற்கு பாலஸ்தீனியர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ள இஸ்ரேல், ஜெருசலேமில் உள்ள ஷைக் ஜாரா மாவட்டத்தில் யூதர்கள் தங்களுக்கு சொந்தமானது என்று கூறும் நிலத்தில் வசித்து வந்த பாலஸ்தீன குடும்பங்களை வெளியேற்றவும் நடவடிக்கை எடுத்தது. இதனால் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக நிலவி வந்த மோதல், கடந்த சில நாட்களாக உச்சத்தை தொட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஷா மதவழிபாட்டு தளம் அமைந்துள்ள பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை பெருமளவில் குவிந்த பாலஸ்தீனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை தடுக்க இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் முயற்சித்தனர். அப்போது, இஸ்ரேல் படையினருக்கும், பாலஸ்தீனியர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியதில் பாலஸ்தீனர்கள் பலர் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து பாலஸ்தீனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஹமாஸ் இயக்கத்தினர் வான்வழித் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி அளிக்கும் வகையில் இஸ்ரேல் இராணுவம் காசா பகுதியில் தாக்குதல் நடத்தி வருகின்றது. https://athavannews.com/2021/1215937
  • சிங்கள புத்த இராணுவம்.. அவர்கள் தமிழர்கள், என்ற ஒரு காரணத்துக்காக... கொல்லப் பட்ட  "நர வேடடைகளில்" இதுவும் ஒன்று. இப்படி நூற்றுக்  கணக்கான  சந்தர்ப்பங்களில்,  பல தமிழர்கள்... பல  இடங்களில்   கொல்லப் பட்ட  போதும்... அதற்கு, நீதி கிடைக்காமல் இருப்பது, எமது துரதிஷ்டம்.  😢
  • தமிழகம்: இன்று முதல் புது கட்டுப்பாடுகள்: முழு விவரம்! மின்னம்பலம் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தமிழகத்தில் இன்று முதல் கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ளது தமிழக அரசு. கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பாக சட்டப்பேரவை அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் நேற்று முன்தினம் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இதில் ஊரடங்கைக் கடுமையாக்க வேண்டும் என்று விவாதிக்கப்பட்டிருக்கிறது.   இந்நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், “15.05.2021 காலை 4 மணி முதல் 24.05.2021 காலை 4 மணி வரை ஏற்கெனவே அமலில் உள்ள கட்டுப்பாடுகளுடன் பின்வரும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. புதிய கட்டுப்பாடுகள் தனியாகச் செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி, மீன் விற்பனை செய்யும் கடைகள் ஆகியவை மட்டும் குளிர்சாதன வசதி இன்றி நண்பகல் 12 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்தக் கடைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை மட்டும் இயங்க அனுமதிக்கப்படும். இவற்றில், ஒரே சமயத்தில் 50 சதவிகிதம் வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். மின் வணிக நிறுவனங்கள் மூலம் மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விநியோகம் செய்ய காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை மட்டும் அனுமதிக்கப்படும். மேற்கூறிய மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி, மீன் கடைகள் தவிர, இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்படுகிறது.   பெட்ரோல் டீசல் பங்க்குகள் ஆகியவை எப்போதும் போலச் செயல்படும். ஆங்கில மற்றும் நாட்டு மருந்துக் கடைகள் திறக்க வழக்கம்போல் அனுமதிக்கப்படும் பொது மக்கள் தங்களுக்குத் தேவையான மளிகை, பலசரக்கு, காய்கறிகளை தங்களது வீட்டின் அருகில் உள்ள கடைகளில் வாங்குமாறும், மேற்சொன்ன பொருட்கள் வாங்க அதிக தூரம் பயணிப்பதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள். அவ்வாறு செல்ல முற்படுபவர்கள் தடுக்கப்படுவார்கள். காய்கறி, பூ, பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் நண்பகல் 12 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது, காய்கறி, பூ, பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் செயல்பட அனுமதி இல்லை. தேநீர்க் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது தேநீர்க் கடைகள் இயங்க அனுமதி இல்லை. மின் வணிக நிறுவனங்கள் மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி முடிய செயல்பட அனுமதிக்கப்படும். * இ-பதிவு முறை வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து தமிழகத்திற்கு வருவோருக்கு இ-பதிவு முறை கட்டாயமாக்கப்படும்.   அத்தியாவசியப் பணிகளான திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, மருத்துவ சிகிச்சை மற்றும் முதியோர்களுக்கான தேவை போன்றவற்றிற்கு மாவட்டங்களுக்குள்ளும் மற்றும் மாவட்டங்களுக்கிடையேயும் பயணம் மேற்கொள்ள இ- பதிவு முறை கட்டாயமாக்கப்படும். இ-பதிவு முறை 17.05.2021 காலை 6 மணி முதல் நடைமுறைக்கு வரும். ஏற்கெனவே அறிவித்தவாறு மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இரவு 10 மணி முதல் காலை 4 மணி முடிய இரவு நேர ஊரடங்கு தொடர்ந்து அமல்படுத்தப்படும். முழு ஊரடங்கு ஞாயிற்றுக் கிழமைகளில் (16.05.2021 மற்றும் 23.05.2021) அமல்படுத்தப்படும். மீன் மற்றும் இறைச்சிக் கடைகளில் பொதுமக்கள் அதிகம் கூடுவதால், இந்தக் கடைகளைப் பல்வேறு இடங்களுக்குப் பரவலாக மாற்றம் செய்ய பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நேற்று (13.05.2021) நடைபெற்ற அனைத்து சட்டப்பேரவைக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் விவாதித்தவாறு, காவல் துறையினர், தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்திட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த, பொதுமக்களின் நலன் கருதி தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதையும் கூட்டம் கூடுவதையும் தவிர்க்க வேண்டும். நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை / சிகிச்சை பெறவேண்டும். பொதுமக்கள் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://minnambalam.com/politics/2021/05/15/17/new-lackdown-rules-mk-stalin    
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.