கலைஞன்

யாழ் இணையத்தில் பெண்களின் நிலமை...

யாழ் இணையத்தில் பெண்களின் நிலமை!  

65 members have voted

 1. 1. யாழ் இணையத்தில் பெண்களிற்கு சம உரிமை இருக்கின்றதா?

  • ஆம்!
   37
  • இல்லை!
   25
  • தெரியவில்லை!
   3

Recommended Posts

என்ன நடக்குது இங்க? எனக்கென்றால் புரியலை.

தலைப்பு எனக்கு பிடிக்கலை.பரிதாப நிலையில பெண்கள் இல்லை என்று நான் நினைக்கிறன்.

ஒரு கருத்து மட்டும் சொல்லலாம் என்று நினைக்கிறன். தாயக பறவைகள் பத்தி எழுதின கருத்துக்கள் நானும் பார்த்தேன். அதுக்காகதான் யாழ் இல பெண்கள் பரிதாப நிலையில இருக்காங்க என்று சொல்லுறீங்களா? அது ஒருவரோட தனிப்பட்ட கருத்து என்று நான் நினைக்கிறேன். மற்றும் படி நக்கல் அடிக்கிறது, இதெல்லாம் சகஜமா நடக்கிறதுதானே.

கலைஞன் அண்ணா இட்ட தலைப்பே இன்று பரிதாப நிலைக்கு வந்து விட்டது.

Share this post

Link to post
Share on other sites

தாயக்கபறவை மாத சஞ்சிகை பற்றிய பகுதிக்குள் நிகழ்ந்த கருத்தாடல்கள் எனக்கு தெரியாதுங்கோ. நான் பொதுவாக சொல்லுறீங்க என்றுதான் இத்தலைப்பின் கீழ் வந்தேன். ஆனால் முந்தி நாரதர் சும்மா பெண்களை சீண்டியவர் தான். அதுவும் ஒரு டீஜே கவிதையைக் கொண்டு வந்து போட்டு. அதில் நானும் பாதிக்கப்பட்டவள் தான். ஏன் சமீபத்தில் தூயா தொடக்கிய தலைப்பான யாழழ குழப்பாதீங்க என்ற பகுதிக்குள்ளும் நியாயத்ததக் கததக்க போய் கோபக்காரி என்ற பட்டம் வாங்கியவளும் நான் தான். ஆனால் தற்போது சாதாரணமாக யாரும் யாரையும் அதாவது பெண்களை கீழ்த்தரமாக நடத்தவில்லை. அப்படி நடத்துகின்றனர் எனில் அதை சுட்டிக்காட்டுங்க. சுட்டிக்காட்டினால் கீழ்த்தரமாக நடத்தியவர்கள் திருந்த இடமுண்டு.

யாழில் ஆண்கள் பெண்கள் தத்தம் கருத்துக்களால் மோதுங்கள் வாதாடுங்கள். இதில் யாருக்கு சம உரிமை கொடுக்கணும். யார் கொடுக்கிறார்கள்? எங்கை கொடுக்கிறார்கள்? எல்லோரும் உங்க உங்க கணணியில் இருந்து தானே எழுதுறீங்க? எல்லோருக்கும் உரிமை இருக்குது தானே யாழில் எழுதுங்கோ. யார் எழுத வேணாம் என்று சொன்னார்கள்.? உங்கள் உங்கள் உரிமையை யாருக்கும் விட்டுக்கொடுக்காதீங்க.

நெடுக் சொன்னது போல கருத்து என வந்தால் உறவுகள் தேவையில்லை, உங்களுக்கேற்ற வகையில் அது பார்வையாளர்களை எவ்வகையில் சென்றடையும் என சிந்தித்து எழுதுங்கோ.

எழுதலாம் என்றதுக்காக எதையும் எழுதலாமா?

ஏன் பெண்களை நக்கல் பன்னி சீண்டுவதிம் முன்னிலை இருப்பவரும் இந்த நெடுக்காலபோனவாரே அதில் அவருக்கு ஒரு ஆனந்தம் அதை விட எப்படியும் பெண்கள் தனது கருத்துக்கு பதில் எழுத வருவார்கள் என்று நப்பாசை..............

Share this post

Link to post
Share on other sites

தாயக்கப்பறவைகள் களத்தைப்பற்றிய ஆக்கம் யாழில் பிரசுரமாகி இருந்த படியால்த்தான் அதனைப்பற்றிய விமர்சனம் என்னால் முன்வைக்கப்பட்டது,

எல்லோருக்குமே தெரியும். நியாயமாக வைக்கும் விமர்சனம் வேறு. வேணுமென்றே வைக்கும் விமர்சனம் வேறு.

எழுதியவருக்கே புரியும். வேறு உறவுகளுக்கும் புரியும். ஆனாலும் அதை மழுங்கடிக்க வேண்டும் என்று கதைத்தால் அதை நான் சொன்னால்..நான் புலம்புவது போல் தான் இருக்கும்.

அன்று நான் முன்வைத்த அந்த கருத்துக்கு எதிர்கருத்து முன்வைக்காமல் பதுங்கியவர்கள், இப்பொழுது எதற்காக தூக்கி பிடிக்கிறார்கள் என்று புரியவில்லை.

அப்போது வீண் விவாதம் வேண்டாம் என்று விலகியதே அன்றி வேறில்லை. இப்போது சந்தர்ப்பத்தில் சொன்னோம். பிழையை சொன்னால் அதை திருத்திக்கொள்ளவோ குறைந்த பட்சம் ஏற்றுக்கொள்ளவோ முடியாதவர்களை என்ன செய்வது?

அதைவிட்டுவிட்டு தாயகப்பறவையை கொண்டுபோட்டார், சூப் வைச்சு குடிச்சுட்டார், எண்டு நொண்டி சாக்கு சொல்லி அனுதாபம் தேட முயற்சி செய்யாதீர்கள்.

இங்கு யாரும் அனுதாபம் தேடவில்லை. உண்மையில் இந்த தலைப்பு பரிதாபநிலை என்பதே நன்றாக இல்லை என நான் சொல்லி இருந்தேன் மாப்புவிற்கு.

இங்க யாரும் பரிதாப நிலைக்கும் வரவில்லை. அனுதாபமும் தேடவில்லை. அவளோவுக்கு அவசியமும் இல்லை.

பிழையை சுட்டிக்காட்டினால் ஏற்றுக்கொள்ளாதவர்கள் இப்படித்தான் கதைக்க செய்வார்கள்.

நான் இதைபற்றி எழுதிய காரணம்!

விமர்சனம் எழுதினோம்! உரிமை இருக்கு. என் கருத்தை வைத்தேன் அது இதென்று இப்போ வீண் விவாதம் செய்பவர்கள். இதையும் வாசியுங்கள்.

தாயகபறவைகள் பகுதியில் மட்டும் தான் கருத்து வைத்தோம் என்றார்கள். வானவில்லால் தொடங்கப்பட்ட மட்டுறுத்தினர் பற்றிய தலைப்பில் தாயகபறவைகளுக்கு போங்கள் அங்கு ஆடலாம் என்று விசமதனத்தை சீ விமர்சனத்தை அங்கு காவவில்லையா?

அது விமர்சனமா இல்லை வம்புக்கு எழுதியதா என்று நீங்கள் வாசிக்க உங்களில் யாருக்குமே புரியலயா?

http://www.yarl.com/forum3/index.php?showt...25491&st=20

நிதர்சனம் தலைப்பில் ஆக்கங்களை பற்றியே கதைக்கப்பட்டது.

ஆனா இத் தலைப்பில் தாயகபற்வைகள் இணையத்தில் இருப்பவர்கள் பற்றீயும் இருக்கு.

ஆக்கங்களை விமர்சிக்கலாம்

ஆக்களை விமர்சிக்க முடியாது!

...................

நான் என்றைக்கும் குழப்பவாதியாக இருந்ததுமில்லை.

ஆனா என் கருத்து சொல்வதில் தயங்கபோவதுமில்லை.

சரி..விசமத்துக்கு செய்துவிட்டு அதை மழுங்கடித்து கதைப்பவர்கள் முன் நின்று வாதாடுவதில் என்ன பயன்?

வணக்கம்!

Edited by பிரியசகி

Share this post

Link to post
Share on other sites

யாழ்களம் ஒரு குடும்பம் என்பதை அடிக்கடி தவறாமல் நிருபிக்கின்றன, இந்ந ஊடலும் கூடலும்!

நானும் ஆம் என்றே வாக்களித்தேன். பெண்கள் ஒன்றும் ஊனமானவர்கள் கிடையாது. தனது உரிமைக்காக போரிடாத எந்ந உயிரினமும் அது ஆணாகட்டும் அல்லது பெண்ணாகட்டும், அதன் இருப்பு கேள்விக் குறியே! அந்த இருப்பிற்கான போராட்டத்தில் மெலியனவற்றை வலியன அடக்குவதே உலக யதார்த்தம். அப்படி அடக்குபவர்களிடமும் பெண்கள் ஆண்கள் என்ற வேறுபாடு கிடையாது. பெண் மேலதிகாரிகளிடம், குழுத்தலைவர்களிடம் நன்றாக பட்டவர்களுக்கு அது புரியும். முதலைக்கு தண்ணிரில பலம், யானைக்கு தரையில பலம். அவரவர் தங்கள் பலமறிந்து களமிறங்கினால் ஒரு துன்பமில்லை.

அன்புடன்,

Share this post

Link to post
Share on other sites

இப்பொழுதுதான் தலைப்புக்கும் கருத்துக்கும் பொருந்திரதாப்போல போய்க்கிட்டுக்கு கருத்துக்கள், ஆனால் தலைப்பில் சிறுமாற்றம் செய்தால் நல்லா இருக்கும்,அதாவது பெண்களின் எண்ட சொல்லுக்குபதிலா ஆண்கள் எண்டு மாத்தினால் நல்லா இருக்கும்... B)

எல்லோருக்குமே தெரியும். நியாயமாக வைக்கும் விமர்சனம் வேறு. வேணுமென்றே வைக்கும் விமர்சனம் வேறு.

எழுதியவருக்கே புரியும். வேறு உறவுகளுக்கும் புரியும். ஆனாலும் அதை மழுங்கடிக்க வேண்டும் என்று கதைத்தால் அதை நான் சொன்னால்..நான் புலம்புவது போல் தான் இருக்கும்.

அடடா 4000ம் கருத்துக்களுக்கு கிட்ட எழுதி இருக்கேன், இதுவரைக்கும் நியாயமான விமர்சனத்துக்கும், வேனுமெண்டு வைக்கும் விமர்சனத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் போய்விட்டதே?? அதெப்படி எழுதுறதெண்டு பெரியாவக தான் சொல்லித்தரனும்.:lol:

அப்போது வீண் விவாதம் வேண்டாம் என்று விலகியதே அன்றி வேறில்லை.

அதெப்படி அப்போது வீண் விவாதமாக தென்பட்ட விடயம் இப்பொழுது தேவையான விவாதமாக தென்பட்டது? அப்போதையே கதைச்சு நியாயமான விமர்சனத்தை முன்வைச்சிருந்தால் அடியேனுக்கு விளங்கி இருக்குமே? :D தாங்களுக்கும் பீபி ஏறி இருக்காதே.

பிழையை சுட்டிக்காட்டினால் ஏற்றுக்கொள்ளாதவர்கள் இப்படித்தான் கதைக்க செய்வார்கள்.

தங்களுக்கு பிழை எண்டு பட்டதை தாங்கள் சுட்டிக்காட்டலாம், நேக்கு பிழை எண்டு பட்ட கருத்து மட்டும் தங்களுக்கு விசமனத்தனமான கருத்து மாதிரி இருக்குதா குட் பொலிஸி? கீப் இட் அப். :(

தாயகபறவைகள் பகுதியில் மட்டும் தான் கருத்து வைத்தோம் என்றார்கள். வானவில்லால் தொடங்கப்பட்ட மட்டுறுத்தினர் பற்றிய தலைப்பில் தாயகபறவைகளுக்கு போங்கள் அங்கு ஆடலாம் என்று விசமதனத்தை சீ விமர்சனத்தை அங்கு காவவில்லையா?

அடடா, அண்மைக்காலமாக நான் எது சொன்னாலும் உப>>>> தொடக்கம் சாதரண கருத்தாளர்கள் வரை தப்பா எடுத்துக்கிறார்களே, எதுக்கெண்டு புரியவில்லையே அடியேனுக்கு. நான் என்ன சொல்ல வந்தன் என்பதை கோவப்படாமல், வாசிச்சிருந்தால் புரிந்து இருக்கும், அதாவது யாழில் தற்பொழுது தணிக்கைகள் அதிகரித்து வருகிறது, அதாவது பண்பா கதைக்கனும், அதாவது நீர்,உம்மை என்ற வார்த்தைகளை பிரயோகிக்ககூடாது, அது இதெண்டு பலவற்றை அமுல்படுத்தி உள்ளார்கள் (அமுல் படுத்தியது ஏதோ உண்மைதான், ஆனால் அப்ப அப்ப தங்களுக்கு வேண்டாதவர்களின் கருத்துக்களை கடாசுகிறார்கள்,சும்மா இல்லை மொத்த கருத்தாக காடாசுகிறார்கள்), இப்படியான கட்டுப்பாட்டுக்குள் இருந்து கருத்து முன்வைப்பதை விட இப்படியொரு களம் இருக்கு அங்க போனால் ஆடலாம், பாடலாம் என்று சொன்னது அங்கே முழு சுதந்திரம் கொடிகட்டி பறக்கின்றது, என்பதையே, அதனை வேறு விதமாக விபரித்தேன், (புரிந்து இருக்காவிடில் தனிமடலில் விளக்கம் கேட்டிருக்கலாம் :rolleyes: ) அதை போய் தப்பு கிப்பு எண்டு சொல்லி ரொம்ப மனவருத்தமா இருக்கு.:D

அது விமர்சனமா இல்லை வம்புக்கு எழுதியதா என்று நீங்கள் வாசிக்க உங்களில் யாருக்குமே புரியலயா?

யாழில் எடுத்தது எல்லாத்துக்கும் தனி தலைப்பு தொடங்கும் வீரர்கள், இதற்கு மட்டும் ஏன் தொடங்கவில்லை என்பதை தாங்கள் புரிந்துகொள்ளவில்லையே என்பதை நினைத்தால் இந்த கருத்தின் தலைப்பை இட்டவருக்கு ஒருமோதிரம் போடலாம் என்று என்னத்தோன்றுகின்றது.:(

நிதர்சனம் தலைப்பில் ஆக்கங்களை பற்றியே கதைக்கப்பட்டது.

ஆனா இத் தலைப்பில் தாயகபற்வைகள் இணையத்தில் இருப்பவர்கள் பற்றீயும் இருக்கு.

ஆக்கங்களை விமர்சிக்கலாம்

ஆக்களை விமர்சிக்க முடியாது!

வாஸ்த்தவம் தான், ஆனால் நான் முன்வைச்ச கருத்து முதன் முதலில் தாயகப்பறவைகள் என்ற தலைப்பில் மட்டுமே, அங்கே வைக்கப்பட்ட கருத்துக்கள் அத்தனையையும் ஒட்டுமொத்தமாக கடாசிய நிர்வாகம் தான், அதை கள உறவுகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற நோக்கிலேயே மற்றய பிரிவுகளில் கூறவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டேன், இதன் பொறுப்பை வலைஞன் ஏற்கவேண்டும்.

...................

நான் என்றைக்கும் குழப்பவாதியாக இருந்ததுமில்லை.

ஆனா என் கருத்து சொல்வதில் தயங்கபோவதுமில்லை.

இப்படித்தானே பல பெண்கள் இங்கே இருக்கிறார்கள், இதை அறியாமல் அப்பாவி கலைஞன் உங்களுக்காக வாதாடுவதை பார்த்தால் அவர் படைப்பாளி என்றே தோன்றுகின்றது.

வணக்கம்!

நன்றி. :rolleyes: நான் அவன் இல்லை...... :(

காப்புரிமை: கள உறவான பிரியசகி அக்கா எழுதியதை, உல்டா செய்து அவருக்கு பதில் அளிக்கும் விதத்தில் கருத்து எழுதி உள்ளேன். (சா எத்தனை சட்டம், எத்தனை திட்டம், எப்படித்தான் கருத்து எழுதுறதோ. ஆடிப்பாடி கருத்தெழுதியது அந்தக்காலம், அடங்கி ஒடுங்கி கருத்தெழுதவேண்டிய நிலமை இந்தக்காலம்.:(

Edited by Danklas

Share this post

Link to post
Share on other sites

தாயக்கபறவை மாத சஞ்சிகை பற்றிய பகுதிக்குள் நிகழ்ந்த கருத்தாடல்கள் எனக்கு தெரியாதுங்கோ. நான் பொதுவாக சொல்லுறீங்க என்றுதான் இத்தலைப்பின் கீழ் வந்தேன். ஆனால் முந்தி நாரதர் சும்மா பெண்களை சீண்டியவர் தான். அதுவும் ஒரு டீஜே கவிதையைக் கொண்டு வந்து போட்டு. அதில் நானும் பாதிக்கப்பட்டவள் தான்.

வணக்கம் வெண்ணிலா,

எனது பெயர் எழுதப்படிருப்பதால் விளக்கம் அழிக்க விரும்புகிறேன்.

நாரதர் படி எடுத்துப் போட்ட டிசேயின் கவிதை ,பெண்களை போகப் பொருளாகப் பார்க்கும் ஆண்களின் முகமூடியை கிழிப்பதாகவே இருந்தது.அதை முதலில் போட்டவர் குளக்காட்டான்.அதில் டிசே பாவித்த சொற்கள் உங்களுக்கு கஸ்ட்டமாக இருப்பதாகவே நீங்களும் இன்னொரு அம்மணியும், பெயர் ஞாபகம் இல்லை பெரிய வாக்கு வாதப்பட்டனியள்.எனக்கு நாபகம் இருக்கும் வரையில் அதில் 'முலை' என்ற வார்த்தைப் பிரயோகமே உங்களுக்குக் கஸ்ட்டமாக இருந்ததாக சொல்லி இருந்ததாக நாபகம்.

தமிழில் தீவிரமாக எழுதும் குட்டி ரேவதி என்னும் பிரபல பெண் கவிஞர் 'முலை' என்று ஒரு கவிதைத் தொகுப்பையே வெளியிட்டிருகிறார்.அன்றைய கம்பர் முதல் இன்று வரையும் ஆன்/பெண் கவிஞர்கள் பலர் கையாண்ட வார்த்தைப்பிரயோகம் அது.வார்த்தைகள் அல்ல இங்கு பிரச்சினை அவை கையாளப்படும் முறமையும் கருதுக்களுமே பிரச்சினை.அகவே நாரதர் பெண்களைச் சீண்டியவர் எங்கிற உங்கள் கருத்து முற்றிலும் தவறானது, நீங்கள் தான் என்னைத் த்னைப்பட்ட காரணுங்களுக்காகச் சீண்டியவர் என்பதை இங்கே எனது பதிலாக முன்வைக்கிறேன்.அதற்கான உங்களுக்கான தனிப்பட்ட காரணங்கள் என்ன என்பதை அப்போது இருந்த உறுப்பினர்கள் எல்லோரும் அறிவார்கள்.இவை பற்றி நான் இங்கு திரும்ப எழுத வேண்டிய அவசியம் இல்லை.

களத்தில் இருந்து எவரையும் எவரும் துரத்த முடியாது.அப்படி யாரவது துரத்தப்படுகிறார்கள் என்றால் அவர்களை நிருவாகம் தான் தடை செய்ய முடியும்.அப்படி யாராவது தடை செய்யப்படிருந்தால் அதன் அர்த்தம் அவர்கள் கள விதிமுறைகளை மீறினார்கள் என்பதே.மேலும் இந்தத் தலைப்பில் தேவயற்று பலரும் தங்கள் தங்கள் தனிப்பட்ட கதைகளை எழுதுவதைத் தவிர்க்கவும்.ஒரு சத்ததிற்க்கும் பிரயோசனம் இல்லாத விடயங்களை இப்படி நேரம் மினக்கெட்டு பதில் எழுத வேண்டி இருக்கிறது.

கலைஞன் இப்படி பொதுப் படையாக கருதுக்களை எழுதுவதைத் தவிர்க்கவும்.இதனால் பலரும் தங்கள் தங்கள் சொந்தக் கதைகளை எழுதி எலோரது நேரத்தையும் வீணக்குவது தான் மிச்சம்.

டிசேயின் கவிதை மீண்டும் இங்கே,

http://djthamilan.blogspot.com/2005/09/blo...7846371933.html

அது சம்பந்தமாக யாழில் நடந்த கருதாடல்கள் இங்கே..

http://www.yarl.com/forum/index.php?showtopic=6700

நீங்களே படித்து முடிவுக்கு வாருங்கள்.... :(

http://tamil.sify.com/kalachuvadu/kalachuv...php?id=13296785

Edited by இணையவன்

Share this post

Link to post
Share on other sites

அடடே.... நாரதர் வந்துட்டார்... இனியென்ன களமே கலகமயம்தான் போங்கோ.... !

2005 தொடங்கின கதையா இது? கலைஞன் ஆழமறியால் காலைவிட்டிட்டார் போல!

:-)

Edited by சாணக்கியன்

Share this post

Link to post
Share on other sites

நாரதர் வந்துட்டார் இனி களைகட்டப்போகுது

Share this post

Link to post
Share on other sites

//களத்தை விட்டு யாரையும் யாரும் விரட்ட முடியாது. கருத்துக்களை துணிவாக நியாயத்தோட எதிர்கொள்பவர்கள் ஓடமாட்டார்கள்..! ஓட வேண்டிய அவசியமும் இல்ல. இதில் ஆண் பெண் என்ற வேறுபாட்டுக்கும் இடமில்லை..!//

//அவ்வாறன்றி கருத்தாளர்களை கருத்துக்களின் பெயரால் துரத்தி அடித்தல்.. விரட்ட எத்தனித்தல்.. புறக்கணிக்க அறை கூவுதல்.. நிச்சயம் களத்துக்கு மட்டுமல்ல.. தமிழர்களுக்கும் அவர்களின் ஒற்றுமை பலத்தை பேண உதவாது..!//

நண்பர் நெடுக்கலா போவானின் மேற்குறிய இரண்டு கருதுத்துகளும் பெரும் முரணாக இருக்கின்றன.

கிழே சொல்லுகிறார் கருத்தாளரை துரத்துதல், விரட்டல் என்று மேலே சொல்கிறார் எவரும் எவரையும் விரட்ட முடியாது என்று.அவர் மேல சொன்ன கருத்துடன் நான் உடன் படுகிறேன்.எவரும் எவரையும் விரட்ட முடியாது.அவர்களே தாங்களாகவோ அன்றி தங்களுக்குச் சுயமாக முடிவெடுக்க திரணி இல்லாத இடத்து சன நாயக முறைப்படி ஒரு வாக்கெடுப்பு நடாத்தியோ வெளியேறலாம்.அல்லாது விடின் களத்தை வேண்டுமென்றே குழப்பும் நோக்கில் கள விதிமுரைகளுக்கு எதிராக ஒவ்வாத ஆக்கங்களை இணைத்ததனால் நிர்வாகிகளினால் வெளியேற்றப்படலாம்.இவற்றை நண்பர் நெடுக்காலபோவான் புதிய உறுப்பினர் எங்கிற விததில் அறிந்திருக்க நியாம் இல்லைத் தான் ,ஆனால் எனது அனுபவத்தில் இவை இங்கே நடந்த சம்பவங்கள்.

இவற்றை இங்கே மீண்டும் எழுத வேண்டிய தேவை வருவது எதனால் என்பதையும் யாழ்க்கள நிர்வாகிகள் புரிந்துகொள்ள வேண்டும்.கருத்துக்களை கருதுக்களாகப் பார்க்காமல் இப்படி எல்லாக் கருதுக்களுக்குள்ளும் திருப்புக்களை கொண்டு வருவது யாழ்க்களத்தில் நீண்டகாலமாக நடக்கும் ஒரு விளையாட்டு.இதில் மினக்கெடுவது காலத்தை வீணக்கும் செயல் என்று பேசாமல் இருந்தாலும், இப்படியான சீண்டல்களை செருகுவது தொடர்ந்த வண்ணம் தான் இருக்கின்றன.அது எந்தத் தலைப்பாக இருந்தாலும்.

கறுப்பி,சாணக்கியன் நலமா?

இன்று நேரம் இருந்தது ,எனது பெயர் கண்ணில் பட்டது.பெரியார் செத்து பல வருடங்கள் ஆனாப் பிறகும் எந்தத் தலைப்புக்குள்ளும் அவர் பெயரை இழுப்பது போல், நாரதர் பேசாம இருந்தாலும் எந்தத் தலைப்பிக்கிற்குள்ளும் அவரை இழுப்பதே சிலருக்கு நிரந்தரத் தொழிலாக இருக்கிறது. :(

Share this post

Link to post
Share on other sites

யாழில சனநாயக வாந்தியெடுப்புகள்............. மன்னிக்கோணும்................ வாக்கெடுப்புகள் கூடிப்போச்சு....... :P

புதுசா தொடங்க சில தலைப்புகள் பரிந்துரை:

1. யாழ் களத்தில் குழந்தைகள் புறக்கணிக்கப்படுகிறார்கள் - ஆம், இல்லை, தெரியாது

2. யாழ் களத்தில் முதியவர்களுக்கு மரியாதை கொடுக்கப்படவில்லை - ஆம், இல்லை, தெரியாது

3. யாழ் களத்தில் உபநிர்வாகி பதவி விலக வேண்டும் - ஆம், ஆம், ஆம்

4. யாழ் களத்தில் காதலர்களுக்கான தனிப்பகுதி வேண்டும் - ஆம், இல்லை, தெரியாது

5. யாழ் களத்தில் புகைப்பிடிக்க அனுமதி வேண்டும் - ஆம், இல்லை, தெரியாது

வேற ஞாபகம் வந்தால் ஐடியாக்கள் தாறன் நான்...................

நாரதரண்ணா எப்பிடி இருக்கிறீங்க??????????? புதுசா வந்தவைக்கு அனுபவத்தில கண்ட சில விசயங்கள சொல்லியிருக்கிறீங்க அந்தமாதிரி........ :(

காய் பூனைக் குட்டி எப்படி இருக்கிறியள்? வீட்டில எல்லோரும் நலமா?

பட்டிமன்றத்தில கண்டதுக்கு இப்படி இடைக்கிடை வில்லங்கமான தலைப்புக்களில தான் உங்களைக் காணுறன்.பிறகு பூனைக் குட்டிக்கு படைக்கும் திறன் என்ன இருக்கு அவரை யாழ்க்களத்தில இருந்து வெளியேற்ற வேண்டும் எண்டு ஒரு வாக்கெடுப்பு வச்சாலும் வைக்கலாம் ;-).

//3. யாழ் களத்தில் உபநிர்வாகி பதவி விலக வேண்டும் - ஆம், ஆம், ஆம்// :rolleyes::rolleyes::lol:

கிட்லரை வெளியேற்றுவோம். ஆம் ஆம் ஆம் :D:D:(:(

Share this post

Link to post
Share on other sites

எது எப்படியோ சனம் தெளிவாதான் இருக்கினம்.இங்க யாரோ சொன்ன மாதிரி இந்தத்தலைப்போட யார் யார்

மனஸ்த்தாபப்படப்போகினோமோ. :(

Share this post

Link to post
Share on other sites

//களத்தை விட்டு யாரையும் யாரும் விரட்ட முடியாது. கருத்துக்களை துணிவாக நியாயத்தோட எதிர்கொள்பவர்கள் ஓடமாட்டார்கள்..! ஓட வேண்டிய அவசியமும் இல்ல. இதில் ஆண் பெண் என்ற வேறுபாட்டுக்கும் இடமில்லை..!//

//அவ்வாறன்றி கருத்தாளர்களை கருத்துக்களின் பெயரால் துரத்தி அடித்தல்.. விரட்ட எத்தனித்தல்.. புறக்கணிக்க அறை கூவுதல்.. நிச்சயம் களத்துக்கு மட்டுமல்ல.. தமிழர்களுக்கும் அவர்களின் ஒற்றுமை பலத்தை பேண உதவாது..!//

நண்பர் நெடுக்கலா போவானின் மேற்குறிய இரண்டு கருதுத்துகளும் பெரும் முரணாக இருக்கின்றன.

கிழே சொல்லுகிறார் கருத்தாளரை துரத்துதல், விரட்டல் என்று மேலே சொல்கிறார் எவரும் எவரையும் விரட்ட முடியாது என்று.அவர் மேல சொன்ன கருத்துடன் நான் உடன் படுகிறேன்.எவரும் எவரையும் விரட்ட முடியாது.அவர்களே தாங்களாகவோ அன்றி தங்களுக்குச் சுயமாக முடிவெடுக்க திரணி இல்லாத இடத்து சன நாயக முறைப்படி ஒரு வாக்கெடுப்பு நடாத்தியோ வெளியேறலாம்.அல்லாது விடின் களத்தை வேண்டுமென்றே குழப்பும் நோக்கில் கள விதிமுரைகளுக்கு எதிராக ஒவ்வாத ஆக்கங்களை இணைத்ததனால் நிர்வாகிகளினால் வெளியேற்றப்படலாம்.இவற்றை நண்பர் நெடுக்காலபோவான் புதிய உறுப்பினர் எங்கிற விததில் அறிந்திருக்க நியாம் இல்லைத் தான் ,ஆனால் எனது அனுபவத்தில் இவை இங்கே நடந்த சம்பவங்கள்.

இவற்றை இங்கே மீண்டும் எழுத வேண்டிய தேவை வருவது எதனால் என்பதையும் யாழ்க்கள நிர்வாகிகள் புரிந்துகொள்ள வேண்டும்.கருத்துக்களை கருதுக்களாகப் பார்க்காமல் இப்படி எல்லாக் கருதுக்களுக்குள்ளும் திருப்புக்களை கொண்டு வருவது யாழ்க்களத்தில் நீண்டகாலமாக நடக்கும் ஒரு விளையாட்டு.இதில் மினக்கெடுவது காலத்தை வீணக்கும் செயல் என்று பேசாமல் இருந்தாலும், இப்படியான சீண்டல்களை செருகுவது தொடர்ந்த வண்ணம் தான் இருக்கின்றன.அது எந்தத் தலைப்பாக இருந்தாலும்.

கறுப்பி,சாணக்கியன் நலமா?

இன்று நேரம் இருந்தது ,எனது பெயர் கண்ணில் பட்டது.பெரியார் செத்து பல வருடங்கள் ஆனாப் பிறகும் எந்தத் தலைப்புக்குள்ளும் அவர் பெயரை இழுப்பது போல், நாரதர் பேசாம இருந்தாலும் எந்தத் தலைப்பிக்கிற்குள்ளும் அவரை இழுப்பதே சிலருக்கு நிரந்தரத் தொழிலாக இருக்கிறது. :rolleyes:

நெடுக்காலபோவன் ஆகிய நாம் குறிப்பிட்டதன் படி விரட்டி அடிப்போம்.. புறக்கணிப்போம் போன்ற அறை கூவல்கள் களத்தில் ஒற்றுமையை வளர்க்க உதவாது என்பதை சொல்லி நாம் சொல்ல வந்த விடயத்தை தெளிவாகச் சொல்லி உள்ளது.

அதற்கு சான்றாக யாரையும் விரட்ட முடியாது.. அவர்களா விரும்பி தங்களின் சுய விருப்பு வெறுப்பின் பெயரில் போனால் அன்றி.. என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது..! இதில் எந்த முரண்பாட்டுக்கும் இடமிருப்பதாக நாம் காணவில்லை..! விடயம் போதிய தெளிவைப் பெற இந்த மேலதிக விளக்கம் உதவும் என்று நம்புகின்றோம்..!

களத்தில் இருந்து வெளியேற்றும் நோக்கில் கள உறவுகளுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையிலான பொய்களை திரிபுகளை சந்தேகங்களை விதைப்பது தனிநபர் தாக்குதல் நடத்துவது இங்கு தற்போது கள விதியால் முற்றாக முடக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் எந்தக் கள உறவும் தாங்களாக் கூட இங்கிருந்து வெளியேறனும் என்று முடிவெடுக்க நிர்பந்திக்கும் வகையிலான கருத்துப் பகிர்வுகளுக்கு இடமில்லாமல் செய்யப்பட்டுள்ளமை யாழில் வரவேற்க வேண்டிய விடயம். ஏலவே ஒரு நண்பர் இங்கிருந்து அவரின் அரசியல் கருத்துக்காக கங்கணம் கட்டி வெளியேற நிற்பந்திக்க வைக்கப்பட்டார். அவர் வெளியேற விரும்பாத சந்தர்ப்பதிலும் அவர் நிர்ப்பந்திக்கப்பட்டார் அவருக்கு எதிராக நடத்தப்பட்ட விசமத்தனமான கருத்தாடல்களால்..!

அந்த நிலை இன்றில்லை..! அதற்கு சில கள உறுப்பினர்களின் போராடும் மனப்பான்மை தான் காரணம். விரட்டி அடிக்கும் நோக்கில் செயற்பட்ட சிலரின் செயற்பாடுகளை சாதுரியமாக எதிர்கொண்டு குழப்பிப் போயிருந்த கள நிர்வாகம்.. உண்மைகள் உணர வகை செய்யப்பட்டதன் மூலம் இன்று விசமத்தனமாக கருத்தாடல்கள் மூலம் கள உறவுகளை துரத்தி அடிக்க முடியும் என்ற கற்பனை அழித்து ஒழிக்கப்பட்டிருக்கிறது. அப்படியான கற்பனைகளுக்கு சாத்தியமில்லை என்பதும் கள நிர்வாகத்தால் அதன் கள விதி முறை இறுக்க அமுலாக்கம் மூலம் சாத்தியமாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலை தொடரும் பட்சத்தில்.. விசமத்தனமான கருத்துக்களுக்காக ஒதுங்கி இருக்கும் உறவுகளும் மீள களம் வரும் ஆரோக்கிய நிலை உள்ள நிலையில் இந்தத் தலைப்பு மீண்டும்.. புறக்கணி.. திராணி இருந்தால்..முடிவெடு போன்ற விசமத்தனமான கருத்துக்களை விதைக்கப் பாவிக்கப்படுவதை கள நிர்வாகம் கவனிக்கத் தவறிக் கொண்டிருக்கிறது..! இவை ஒதுங்கி இருக்கும் கள உறவுகளின் (ஆண்கள், பெண்கள்) மீள் வரவை தாமதப்படுத்தும் ஒரு நடவடிக்கையோ என்று எண்ணத் தோன்றுகிறது..!

களத்தை விட்டு பிரச்சனைகளைத் தவிர்க்க ஒதுங்கி இருப்பது.. களத்தை விட்டு துரத்தி அடிக்கப்பட்டதாகவொ புறக்கணிக்கப்பட்டதாகவோ கருதப்பட முடியாதது. அவர்கள் வீண் பிரச்சனைகளைத் தவிர்க்க ஒதுங்கி இருக்கிறார்கள் என்பதே நியாயமானது. அவர்கள் நினைத்தால் எப்போதும் களமிறங்க முடியும். காரணம்.. யாழ் கள நிர்வாகம் ஒரு சிலரைத் தவிர எவரையும் கட்டாயப்படுத்தி வெளியேற்றவில்லை. வழிகாட்டியாகவே இருந்துள்ளது பலருக்கும்..! :(

Edited by nedukkalapoovan

Share this post

Link to post
Share on other sites

உலகிலே பெண்களின் நிலை பரிதாபமாகத்தான் உள்ளது. அதையேதான் யாழ் களமும் பிரதிபலிக்கின்றது.. :( எனவே இத்தகைய வாக்கெடுப்புக்கள் தேவையில்லை என்பது எனது தனிப்பட்ட கருத்து. B)

Share this post

Link to post
Share on other sites

என்னது நான் யாழ்களம் வரும் நேரம் எல்லாம் ஏதாவது சண்டை நடக்கிறதே :(

பெண்களுக்கு பிரச்சனை என்று ஆண் ஒருவரால் தலைப்பு தொடங்க பட்டு இருக்கு அதில பெண்கள் வந்து ஆனந்தமாக கொட்டி திர்த்துவிட்டு போகிறார்கள் . ............ எங்கையோ இடிக்குதே :P

Share this post

Link to post
Share on other sites

தாயக்கப்பறவைகள் களத்தைப்பற்றிய ஆக்கம் யாழில் பிரசுரமாகி இருந்த படியால்த்தான் அதனைப்பற்றிய விமர்சனம் என்னால் முன்வைக்கப்பட்டது, நிதர்சன்ம்.கொம் பற்றிய செய்திகள் இங்கே பிரசுரிக்கப்பட்ட பொழுது அதற்கு எதிராக எத்தனை பேர் விமர்சனம் செய்தார்கள்? அதற்கு நிர்வாகம் என்ன செய்தது? அதற்க்கு ஒரு நீதி இதற்கு ஒரு நீதியா?

அப்ப...???? :(:rolleyes::rolleyes:

"நிதர்சனம்" = "தாயாகப்பறவைகள்" எண்டு சொல்லுறீங்கள்.....! சம்பந்தப்பட்டவர்கள் தாயவு கூர்ந்து கவனிக்குமாற்று வேண்டி நிற்கிறேன்...!

( எங்கை நாரதர் அண்ணா...???? உங்களது வேலையை நான்செய்து கொண்டு இருக்கிறேன். உனடனடியாக வந்து தங்களின் வேலையை பொறுப்பு எடுக்கவும்)

Share this post

Link to post
Share on other sites

அப்ப...???? :(:rolleyes::rolleyes:

"நிதர்சனம்" = "தாயாகப்பறவைகள்" எண்டு சொல்லுறீங்கள்.....! சம்பந்தப்பட்டவர்கள் தாயவு கூர்ந்து கவனிக்குமாற்று வேண்டி நிற்கிறேன்...!

( எங்கை நாரதர் அண்ணா...???? உங்களது வேலையை நான்செய்து கொண்டு இருக்கிறேன். உனடனடியாக வந்து தங்களின் வேலையை பொறுப்பு எடுக்கவும்)

நீங்கள் தவறாக புரிந்து கொண்டு இருக்கிறிங்கள் தயா

அவர் சொன்னது நிதர்சனத்தை பற்ரு முன்பு ஒரு மூறை விமர்சனம் என்ற பெயரில் எவளவு கேவலமாக் எழுதலாமே அவளவுக்கு எழுதினார்கள் அப்போது மட்டும் நிர்வாக எங்கை விதி முறைகளை தவற விட்டது

தாயகபறவைகள் என்றவுடன் இதை தான் அவர் எழுதி உள்ளார் (?) இப்படிதான் நான் புரிந்து கொண்டேன் .................

Share this post

Link to post
Share on other sites

உலகிலே பெண்களின் நிலை பரிதாபமாகத்தான் உள்ளது. அதையேதான் யாழ் களமும் பிரதிபலிக்கின்றது.. :( எனவே இத்தகைய வாக்கெடுப்புக்கள் தேவையில்லை என்பது எனது தனிப்பட்ட கருத்து. B)

பற்பசை விளம்பரத்துக்கே பெண் அரைநிர்வாணமாக நிண்டு பல்லு துலக்கினால்த்தான் பற்பசை விற்பனையாகும் என்னும் உலகம் இது......!

பெண்கள் உரிமையை கேட்பது தவறு....! கேட்டு பெருவதில்லை விடுதலை என்பார்கள்... ஆனால் இங்கு பெண்கள் தங்களின் உரிமையை கேட்பதாக கொள்ள வேண்டியதில்லை...! தங்களின் பிரச்சினைக்களை சொல்வதுக்காக இந்த இடத்தை பயன் படுத்துகிறார்கள்.... புரிந்து கொள்ள முயற்சிப்பது எங்களின் கடமை....!

32 பேர் ஆம் எண்று போட்டு(நான் உட்பட) இருக்கிறார்கள்... ஆனால் 19பேர் "இல்லை" எண்று போட்டிருப்பது, இப்போ சிற்றுபான்மை எண்றாலும், அந்த 19 பேர் மனம் வருந்தி இருக்கிறார்கள் என்பதைத்தான் காட்டுகிறது.....!

Share this post

Link to post
Share on other sites

நீங்கள் தவறாக புரிந்து கொண்டு இருக்கிறிங்கள் தயா

அவர் சொன்னது நிதர்சனத்தை பற்ரு முன்பு ஒரு மூறை விமர்சனம் என்ற பெயரில் எவளவு கேவலமாக் எழுதலாமே அவளவுக்கு எழுதினார்கள் அப்போது மட்டும் நிர்வாக எங்கை விதி முறைகளை தவற விட்டது

தாயகபறவைகள் என்றவுடன் இதை தான் அவர் எழுதி உள்ளார் (?) இப்படிதான் நான் புரிந்து கொண்டேன் .................

சரி... சரி.... யாரையாவது சண்டை மூட்டி விடுவம் எண்டா விடுறீங்களே இல்லப்பா....! :angry: :angry: :angry:

Share this post

Link to post
Share on other sites

ம்.. சில பழைய உறுப்பினர்கள் ஆறிப்போன ரணங்களை (வாசிக்கும் மற்றவங்கள் ஏதோ 'வலசு'கள் என்ற எண்ணத்தில்) கிளற ஆரம்பித்திருக்கிறார்கள். தயவுசெய்து இது கருத்துக்களம் என்பதை ஞாபகம் வைத்திருங்கள். அடிபிடி மடமல்ல.

Share this post

Link to post
Share on other sites

யாழில சனநாயக வாந்தியெடுப்புகள்............. மன்னிக்கோணும்................ வாக்கெடுப்புகள் கூடிப்போச்சு....... :P

புதுசா தொடங்க சில தலைப்புகள் பரிந்துரை:

1. யாழ் களத்தில் குழந்தைகள் புறக்கணிக்கப்படுகிறார்கள் - ஆம், இல்லை, தெரியாது

2. யாழ் களத்தில் முதியவர்களுக்கு மரியாதை கொடுக்கப்படவில்லை - ஆம், இல்லை, தெரியாது

3. யாழ் களத்தில் உபநிர்வாகி பதவி விலக வேண்டும் - ஆம், ஆம், ஆம்

4. யாழ் களத்தில் காதலர்களுக்கான தனிப்பகுதி வேண்டும் - ஆம், இல்லை, தெரியாது

5. யாழ் களத்தில் புகைப்பிடிக்க அனுமதி வேண்டும் - ஆம், இல்லை, தெரியாது

வேற ஞாபகம் வந்தால் ஐடியாக்கள் தாறன் நான்...................

நாரதரண்ணா எப்பிடி இருக்கிறீங்க??????????? புதுசா வந்தவைக்கு அனுபவத்தில கண்ட சில விசயங்கள சொல்லியிருக்கிறீங்க அந்தமாதிரி........ :rolleyes:

அண்ணா வாங்கோ வாங்கோ இப்ப தான் எனக்கு சந்தோசம் எங்கே இருந்து வாறனீங்களோ தெறியாது ஆனா கரக்டா அந்த டைமுக்கு வந்துடுவீங்க.................உங்க ஸ்டைலும் தனி தான்........................ :P

யாழ் களத்தி குழந்தைகள் புறகணிக்கபடுகிறார்கள் என்று யார் சொன்னது அவைக்கு என்று ஒரு தனிகளமே மோகண் அண்ணா செய்து கொடுதிருகிறார்.............நீங்க அந்த பக்கம் போகவில்லை பாருங்கோ அங்கேயும் ஒருக்கா விசிட் பண்ணிணா நல்லா தான் இருக்கும்............. :rolleyes:

அண்ணா கீழே ஒரு டயலக் போடுவீங்க யாருக்கு ஆதரவு என்று இன்றைக்கு ஒன்றையும் காணவில்லை என்றாலும் வந்ததிற்கு சந்தோசம் பாருங்கோ மிக விரைவில் நான் ஒரு நல்ல டொப்பிக்கா உங்களுக்கு தொடங்கிறேன் அங்கே உங்களை சந்திகிறேன்................. :(

வரட்டா

ஒரு டயலக் பார்வையாளர்களுக்கு சொல்லிவிட்டு போறேன் பாருங்கோ...................இப்படி ஒரு பிரச்சினை நடக்கும் போது நம்ம அண்ணா அறிவு சிங்க................வைத்திய கலாநிதி...........ஆய்வாளர்............மற்ற

Share this post

Link to post
Share on other sites

யாழ் இணையத்தில் பெண்களின் பரிதாப நிலமை.....?

முதலில் இந்த தலைப்பை பார்க்க ஏதோ யாழில் பெண்கள் கொடுமைபடுத்தபடுவது போலவும், அடிமை படுத்தபடுவது போலவும் அல்லது ஏதோ ஒருவகையில் பாதிக்கப்படுவது போல ஒரு எண்ணத்தை பொதுவான பார்வைக்கு தரும்.

களத்தில் கருத்தாடலின் போது மறைமுகமாக பெண்களை தாக்குதல், சில செய்திகளில்/ தலைப்புகளில் கருத்தாடும் பெண்களின் வாதாத்தை முறியடிப்பதற்காக அவர்களே அப்படியான செயல்களில் ஈடுபட்டார்கள் என்ற பாணியில் மறைமுக அர்த்தம் தொனிக்க எழுத்துதல் என்பன பல காலமாக நடைபெற்று தான் வருகிறது. அப்படி எழுதுபவர்களை நீங்கள் சொல்லியோ நான் சொல்லியோ திருத்தமுடியும் எனும் நம்பிக்கை இல்லை.

ஆனால் அது மட்டுமே பெண்கள் அவல நிலையில் இருக்கிறார்கள் என சொல்ல போதுமானதல்ல.

பலரும் நட்புறவாகவே கருத்தாடலில் ஈடுபடுவதாகவே நான் நினைக்கிறேன்.

இது தலைப்புக்கு சம்பந்தமில்லாத ஆனால் மேலே பலரும் கிண்டி கிளறும் விடயங்கள் பற்றியது

இந்த தலைப்பில் பழைய விடயங்களை கிண்டி ஏன் அவை மேலே வருகிறன என புரியவில்லை? :(

நாரதர் அந்த கவிதையை நான் இணைத்ததாக சொல்கிறீர்கள்? :rolleyes: இணைத்தது நீங்களல்லவா?

(அதற்காக அந்த கவிதையின் பேசு பொருளில் நான் கொண்டிருக்கும் உடன்பாட்டை கேள்விக்குள்ளாக்க தேவையில்லை)

அந்த விடயமும் கவிதையும் மீள வரவேண்டிய அவசியம்? :rolleyes: வெண்ணில சொன்னதுக்கு என்பீர்கள். ஆனால் அந்த தலைப்பு முழுமையும் பார்த்தும் வெண்ணிலாவும், நீங்களும் பிரச்சனை பட்டதை காணவில்லையே? :lol:

அவர் எந்த விடயத்தை சொன்னார் என்பது எனக்கு தெரியாது. ஆனால் பழைய தனிப்பட்ட பிரச்சனைகளை தூசு தட்டி எடுத்து மேலும் மேலும் பிரச்சனைகளை வளர்க்காமல் இருப்பது நல்லது என்றே நினைக்கிறேன்.

கலைஞன் எது கேட்டாரோ அதை பற்றிய அவரவர் கருத்துக்களை வைப்பதும், அது ஆமா இல்லையா என்பது பற்றி அவரவர் கருத்துகளை வைப்பத்தும் விவாதிப்பதுவுமே பொருத்தமாக இருக்கும்.

Edited by KULAKADDAN

Share this post

Link to post
Share on other sites

வேறுதிரிகளில் ஒரு சிறு வாக்குவாதம் ஏற்பட்டாலே திண்டுக்கல் பூட்டு போட்டு பூட்டும் நிர்வாகம் எங்கே? இதை மட்டும் விட்டு வைத்திருப்பது எதற்காகா?

Share this post

Link to post
Share on other sites

வேறுதிரிகளில் ஒரு சிறு வாக்குவாதம் ஏற்பட்டாலே திண்டுக்கல் பூட்டு போட்டு பூட்டும் நிர்வாகம் எங்கே? இதை மட்டும் விட்டு வைத்திருப்பது எதற்காகா?

ஆமா..இது மகிந்த சகோதரத்தை விட மோசமா இருக்கு... :unsure:

எனினும் நிர்வாகத்தினரது சகிப்புத்தன்மை பாராட்டப்பட வேண்டியது..மிகவிரைவில் நல்லதோர் முடிவை எதிர்பார்க்கலாம்

Share this post

Link to post
Share on other sites

நாரதர் கலகம் நன்மையில் முடியுதோ இல்லையோ, முடிய நாள் கணக்காகும் என்று தான் தோன்றுது.

:unsure::D

டிசேயின் கவிதை பற்றிய விமர்சனம் தான் நிறையப் பிரச்சனைகளை விதைத்தது. சிலருக்கிடையில் தொடர்ச்சியான பகையாக அது உருவெடுத்ததற்கும் காரணமாக அமைந்தது. எனவே இதை மீண்டும் ஞாபகப்படுத்தத் தேவையில்லை என நினைக்கின்றேன்.

வெண்ணிலாவிற்கு அதை ஞாபகப்படுத்தினால் போதுமே, ஏன் அதை திரும்ப இணைக்க வேண்டும்?

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.