Jump to content
 • Veeravanakkam
 • Veeravanakkam
 • Veeravanakkam

சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! இந்தச் சித்தர்கள் யார்?


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ச் சித்தர்களைப் பற்றிக் கேள்விப்படாதவர்கள் இருக்க மாட்டார்கள். சித்தர்கள் பற்றிக் கேள்விப்படாதவர்கள் கூட சித்தர் பாடல்கள் இரண்டொன்றைச் செவி மடுத்திருப்பார்கள்.

நாதர்முடி மேல் இருக்கும் நாகப் பாம்பே!
நச்சுப்பையை வைத்திருக்கும் நல்ல பாம்பே!
பாதலத்தில் குடிபுகும் நல்ல பாம்பே!
பாடிப்பாடி நின்று ஆடு பாம்பே!


திரைப்படத்திலும் வந்து சக்கை போட்ட பாடல் இது. இதை இயற்றியவர் பாம்பாட்டிச் சித்தர்.

பதினெண் சித்தர்கள் என்பது மரபு. ஆனால் அவர்கள் யார் யார் என்பதில் கருத்து ஒற்றுமை இல்லை. அதனால் பதினெட்டுக்கும் மேற்பட்ட சித்தர்கள் பெயர்கள் காணப்படுகின்றன.

ஒரு பழம்பாடல் பதிணென் சித்தர்களது பெயர்களை வரிசைப்படுத்துகிறது.

நந்தி, அகத்தியர், திருமூலர், புண்ணாக்கீரர்
நற்றவத்துப் புலத்தியர் பூனைக் கண்ணனார்
இடைக்காடர், போகர், புலிக்கையீசர்,
கருவூரார், கொங்கணர், காலாஞ்சி
எழுகண்ணர். அகப்பேய், பாம்பாட்டி
தேரையர், குதம்பையர், சட்டைநாதர்


இந்தச் சித்தர்கள் யார்? அவர்களது வரலாறு என்ன? இவை பெரிதும் மூடு மந்திரமாகவே இருக்கின்றன.

இவர்களைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புக்கள் அதிகம் இல்லை. மாறாக அவர்களைப் பற்றிய செவிவழி கதைகளே மிஞ்சி நிற்கின்றன. இவர்களது காலம் 10 ஆம் நூற்றாண்டுக்கும் 18 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலமாகக் கருதப்படுகிறது. திருமூலர் காலம் 10 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம்.

சித்தர்களால் பாடப்பெற்ற பெரிய ஞானக் கோவை என வழங்கும் சித்தர் பாடல்களின் தொகுப்பு நூல் ஒன்றும் சில மருத்தவ நூல்களும் மட்டுமே இன்று கிடைக்கின்றன. பல பாடல்களும் நூல்களும் மறைந்து விட்டன. இருந்தும் இன்னும் அச்சில் வராத ஏட்டுச் சுவடிகள் ஆயிரக் கணக்கில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

சித்து அல்லது சித்தி என்றால் ஆற்றல், வெற்றி, கைகூடல் என்று ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் உண்டு. ஒருவர் அசாதாரண செயலைச் செய்தால் அவர் சித்து விளையாட்டு செய்கிறார் என்பது பொருள். ஒருவர் தேர்வில் சித்தி எய்திவிட்டார் என்றால் அவர் தேர்வில் வெற்றி பெற்றுவிட்டார் என்று பொருள். போன காரியம் சித்தி என்றால் போன வேலை கைகூடிவிட்டது என்று பொருள்.

எனவே சித்தர்கள் என்றால் பேராற்றல் படைத்தவர்கள் என்று பொருள். பொதுவாக அட்டமா சித்திகள் (எண்வகை ஆற்றல்) கைவந்தவர்களே சித்தர்கள் எனப்படுகிறார்கள்.
மகாகவி பாரதியார் கூட தன்னை ஒரு சித்தர் என்று சொன்னார்.

எனக்கு முன்னே
சித்தர் பலர் இருந்தாரப்பா!
யானும் வந்தேன் ஒருசித்தன்
இந்த நாட்டில்


என்கிறார். மேலும் தாம் இயற்றிய புதிய ஆத்தி சூடியில் சித்தர் பாணியில்-

அச்சம் தவிர்
ஏறுபோல் நட
தெய்வம் நீ என்றுணர்
நினைப்பது முடியும்


என அடித்துச் சொல்கிறார்.

தமிழ்ச் சித்தர்கள் மருத்துவம், புவியியல், மந்திரம், தந்திரம், ஞானம், யோகம், இரசவாதம் பற்றி பாடல்கள் பாடியுள்ளார்கள். ஆனால் சமுதாயத்தைப் பற்றி யாரும் தனி நூல் இயற்றவில்லை. ஆயினும் அனைத்துச் சித்தர் பாடல்களில் சமுதாய சீர்திருத்த மறுமலர்ச்சிக் கருத்துக்கள் மிகுந்திருப்பதைக் காணலாம்.

தமிழ்ச் சித்தர்களது சித்த மருத்துவம் புகழ்பெற்றது. சித்த மருத்துவத்தில் செடி, கொடி, கனி, கிழங்கு, வேர், பட்டை போன்றவற்றில் இருந்து மட்டும் அல்லாது தங்கம், உப்பு, பாதரசம் (mercury) போன்ற உலோகங்களில் இருந்தும் நவ பாஷாணங்களில் இருந்தும் மருந்து தயாரிகப்படுகிறது.

தமிழ்ச் சித்தர்கள் பக்தி மார்க்கத்தைப் பின்பற்றாது குண்டலினி யோக மார்க்கத்தைப் பின்பற்றினார்கள். உயிர் மட்டுமல்ல. உடலும் நித்தியமானது என்பது இவர்கள் கோட்பாடு. .

சாதி மத பேதத்தை கடுமையாகக் கண்டித்தார்கள். மனித குலம் ஒன்று. தேவனும் ஒன்றே என்றார்கள்.

சைவ சித்தாந்தத்தில் உள்ள சரியை கிரியை இரண்டையும் கண்டித்தார்கள். உருவ வழிபாட்டைச் சாடினார்கள். சுரண்டலையே குறியாகக் கொண்ட பிராமணீய சடங்குகளைக் கடுமையாக எதிர்த்தார்கள்.

+++++

++

+

 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சித்தர்களில் திருமூலர் முதன்மை இடம் வகிக்கிறார். அவர் பாடிய திருமந்திரம் 3,027 பாடல்களைக் கொண்டது. இதுவே சைவ சித்தாந்தத்தின் அடிப்படையை விளக்குகிறது. 'ஒன்றே குலம் ஒருவனே தேவனும் நன்றே நினைமின் நமனில்லை நாணாமே' என்ற இவரது கூற்று பேரறிஞர் அண்ணாவுக்கும் அவர் தம்பிமார்க்கும் சம்மதமே.

அண்ணா வேலைக்காரி திரைப்படத்தில் சாதியைச் சாடுவதற்கு திருமூலரின் "ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற முழக்கத்தைக் கையில் எடுத்தார்.

தேரையர் என்ற சித்தர் எழுதிய "நோய்யணுகா விதி" சிறந்த மருத்துவ நூல் என்பர்.

இன்னொரு புகழ்பெற்ற சித்தர் அகத்தியர். அகத்தியம் என்ற இலக்கண நூல் செய்த அகத்தியர் வேறு இவர் வேறு. அகத்தியர் என்ற பெயரில் பலர் இருந்திருக்கிறார்கள்.

"தேடுகின்ற புராணமெல்லாம் பொய்யே என்றேன்
ஆடுகின்ற தீர்த்தமெல்லாம் அசுத்த மென்றேன்"


என்பார் அகத்தியர்.

'மூர்க்கருடன் பழகாதே பொய் சொல்லாதே
பின்னே நீ திரியாதே பிணங்கிடாதே'


என்பது நக்கீரர் கூற்று.

தமிழ்ச் சமுதாயத்தில் இன்றும் பெரு நோயாக உள்ள சாதியை சித்தர்கள் கடுமையாக சாடியிருக்கிறார்கள். மேல் சாதி கீழ் சாதி, சாதிக்குள் சாதி இவற்றை அன்றே பொய் எனத் துணிந்து சாடிய நெறி சித்தர்களது என்பது குறிப்பிடத்தக்கது.

'சாதி குலமில்லை, சற்குருவறிந்தால்'
'சாதிப் பிரிவினிலே தீயை மூட்டுவோம்'
'சாதிபேதம் என்பதொன்று சற்றுமில்லை இல்லையே'


எனப் பலர் சித்தர்கள் சாதிக் கொடுமையை எதிர்த்து குரல் கொடுத்துள்ளார்கள். சாதிப் பிரிவை மிகுதிப்படுத்தி வளர்க்கும் சடங்கு, ஆசார, சாத்திரக் குப்பைகளால் தீமையேயன்றி அணுவளவும் நன்னை இல்லை என்றார்கள்.

'கலையுரைத்த கற்பனையை நிலையெனக் கொண்டாடும்
கண்மூடிப் பழக்கமெல்லாம் மண் மூடிப் போக'


என அருட்பெருஞ் சோதி தனிப் பெருங் கருணை என்ற சமரச சன்மார்க்கத்தைக் காட்டிய இராமலிங்க அடிகள் கூறுகிறார்.

இன்னொரு புகழ்பெற்ற சித்தர் சிவவாக்கியர். ஆனால் இவரது பெயர் பதிணென் சித்தர்களின் பட்டியலில் இடம்பெறவில்லை.. இருந்தும் சித்தர்களில் இவர் ஒரு அதிதீவிரப் போக்குடைய சித்தர் ஆவார். ஒரு சில சித்தர் பாடல்கள் பதிப்புக்களில் இவரது பெயர் முதல் இடம் பெற்றுள்ளது.

மொத்த சித்தர்களின் எண்ணிக்கை 50 க்கு மேல் இருக்கிறது!

சிவவாக்கியர் சாதி, சமயம், கோயில், குளம், மந்திரம் தந்திரம், ஆசாரம் சடங்கு போன்ற குருட்டு நம்பிக்கைகளை மிகவும் கடுமையாகத் தாக்கிய புரட்சியாளர். ஒவ்வொரு பாடல்களிலும் மூட நம்பிக்கைகளுக்கு எதிரான அவரது சீற்றம், வெறுப்பு துலாம்பரமாகத் தெரிகிறது.

இதனால் அரண்டு போன சைவ ஆதீனங்கள் நாட்டிலுள்ள சிவவாக்கியர் பாடல்கள் அடங்கிய ஏட்டுச் சுவடிகளை தேடி எடுத்துக் கொளுத்தினார்கள்.

சித்தர்களின் பாடல்கள் ஓசை நயம் மிக்கவை. பழகு தமிழில் பாடப்பட்டவை. இருந்தும் மறைபொருள் பொருள் கொண்டவை. பாடல்களைப் படிக்கும் போது நேரடியாக ஒரு பொருளும் மறைமுகமாக இன்னொரு பொருளும் இருக்கக் காணலாம்.

'நட்ட கல்லை சுற்றி வந்து நாலு புட்பம் சாத்தியே
சுற்றி வந்து மொணெமொணென்று சொல்லும் மந்திரம் ஏதடா?
நட்ட கல்லும் பேசுமோ? நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச் சுவை அறியுமோ?'


சிவவாக்கியர் பாடிய இந்தப் பாடல் நாடறிந்த பாடல்.

சுட்ட சட்டியும் அதில் வேகுகின்ற கறியைக் கிளறுகின்ற கரண்டியும் அந்தக் கறிச்சுவையை அறியாதது போல, பரம்பொருள் நம் உள்ளத்தே இருக்க அதை அறியாமல் கற்சிலைக்கு நான்கு வகை மலர்கள் சாற்றுவதும் அதைச் சுற்றி வந்து முணு முணுக்கும் மந்திரம் எங்குள்ளது?

நட்ட கல் பேசுமோ? பேசாது!

இவ்வாறு உருவ வழிபாட்டை மறுத்து சிவவாக்கியர் நாத்திகவாதம் பேசுகிறார். இவ்வாறு 534 பாடல்களில் சிவவாக்கியர் உருவ வழிபாட்டையும் சடங்குகளையும் அஞ்சாது சாடி சமூக சீர்திருத்தக் கருத்துக்களை விதைத்துள்ளார்.

சிவவாக்கியர் பற்றிய வாழ்க்கைக் குறிப்பு ஒன்றும் கிடைத்திலது. அவரது இயற்பெயர், ஊர், பெற்றோர் பெயர் தெரியவில்லை. சிவவாக்கியம் என்ற இவரது நூலின் காப்புச் செய்யுளில் குறிப்பிடப்பட்டுள்ள பெயரிலேயே இவர் சிவவாக்கியர் எனக் குறிப்பிடப்படுகிறார்.

சிவவாக்கியர் தாயுமானவரால் குறிப்பிடப்படும் பெருமை பெற்றவர்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சாதியும் தீண்டாமையும் இந்து மதத்தை பீடித்துள்ள நோய்கள்!

இன்று உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் மதம் இஸ்லாம். இது கேட்பதற்கு கசப்பாக இருக்கும். ஆனால் அதுதான் உண்மை. இதற்கு அந்த மதத்தின் எளிமை. எல்லாம் வல்ல, எல்லாம் தெரிந்த, எங்கும் நிறைந்த, உருவம் அற்ற ஒரு கடவுளை வணங்குவது காரணமாக இருக்கலாம்.

இஸ்லாம் மதத்தின் வேத நூல் குரான் மட்டுமே. அரபு மொழியில் எழுதப்பட்ட குரானில் 114 அத்தியாயங்கள், 6,666 வசனங்கள், 1,709 பக்கங்கள், 336,233 சொற்கள் காணப்படுகின்றன. குரானை கபிரியல் என்ற தேவ தூதன் 23 ஆண்டு (கி.பி. 610-கி.பி.632) காலப் பகுதியில் முகமது நபிக்கு அருளியதாகச் சொல்லப்படுகிறது.

கிறித்தவ மதத்தின் வேத நூல்களின் எண்ணிக்கை 66. அத்தியாயங்கள் 1,709. வசனங்கள் 31,173. பக்கங்கள் 1,709, சொற்கள் 774,746 காணப்படுகின்றன. 66 புத்தகங்களும் (27 பழைய ஏற்பாடு) 3 மொழிகளில் கிட்டத்தட்ட 1,500 ஆண்டு காலம் எழுதப்பட்டது. பழைய ஏற்பாட்டை ஹீப்புரூ மொழியில் எழுதிய முதல் மனிதர் மோசஸ். அதை எழுதி முடிக்க 1,000 ஆண்டுகள் எடுத்தது. அதில் சில அத்தியாயங்கள் அறாமிக் (யுசயஅiஉ) மொழியில் எழுதப்பட்டது. பழைய ஏற்பாடு கி.மு. 300 ஆண்டளவில் கிரேக்க மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது. புதிய ஏற்பாடு கி.பி. 50-கி.பி. 100 இடைப்பட்ட காலப் பகுதியில் கிரேக்க மொழியில் எழுதப்பட்டது.

சைவசமயத்தின் அடிப்படை நூல்கள் வேதங்களும் சிவாகமங்களும் ஆகும். 'வேத நன்கினும் பெய்ப் பொருளாவது" என்ற சம்பந்தர் தேவராரத்தில் குறிப்பிட்ட இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என்ற நால் வேதங்களையும் வியாசர் தொகுத்ததாகக் கூறப்படுகிறது.

ஒவ்வொரு வேதமும் நான்கு பகுதிகளைக் கொண்டவை. அவை மந்திரங்கள், பிரமாணங்கள், ஆரண்யங்கள், உபநிடதங்கள் எனப்படும்.

இருக்கு வேதத்தில் 1,028 பாசுரங்கள் உள்ளன. இதில் இந்திரனுக்கு 250, அக்னிக்கு 200, சோமனுக்கு 120, வருணனுக்கு 12 பாசுரங்கள் பாடப் பெற்றுள்ளன.

இந்தப் பாசுரங்கள் வெள்ளை நிறத்தவரான ஆரியர்கள் தங்கள் கருப்பு நிற எதிரிகளான தஸ்யூக்களை அழிக்குமாறும் அப்படி அழித்த கடவுளர்க்கு சோமபானம் படைத்து நன்றி பாராட்டுவன ஆகும்.

ஓ! உலகம் போற்றும் இந்திரனே!சுஷ்ரூவனை எதிர்த்த இருபது கறுப்பு அரசர்களையும் அவர்களது அறுபதினாயிரத்துத் தொண்ணூற்றியொன்பது படைகளையும் நீ உன் தேர் சக்கரத்துக்கு இரையாக்கி நசுககிக் கொன்று ஆரியர்களுக்கு உதவிபுரிந்தாய்.

(இருக்கு வேதம் மண்டலம் மந்திரம் 53, ஸ்லோகம் 9 அதர்வணவேதம் காண்டம் ஓஓ மந்திரம் 21, சுலோகம் 9)

சோமன் என்பது உருவகம். சோமச் செடியில் இருந்து பிழிந்து எடுக்கப்படும் கள்ளைக் குறிப்பது. அதை ஆரியர்கள் தாங்களும் குடித்து கடவுளர்க்கும் படைத்தார்கள்.

மேலே குறிப்பிட்ட நான்கு வேதக் கடவுளர்க்கும் வழிபாடு இப்போது இல்லை என்பது கவனிக்கத்தக்கது.

வேதாங்கங்கள் ஆறு

1) சிக்கை - வேதங்களை உச்சரிக்கும் முறை.
2) கற்பம் - வேதக் கருமங்களை அனுட்டிப்பதைக் கூறும்.
3) வியாகரணம் - வேதங்களின் எழுத்துச் சொற்களின் இலக்கணங்களைக் கூறுவது.
4) நிருத்தம் - வேதங்களில் உள்ள சொற்களின் பொருளை அறிவிப்பது.
5) சந்தோவிசிதி - வேதங்களின் காயத்திரி, அதன் சந்தங்கள், எழுத்தின் அளவு என்பவற்றைக் கூறுவது.
6) சோதிடம் - வேத மந்திரங்களைச் சொல்வதற்கு காலங்களைக் குறிப்பது.


வேதத்தின் உபாகமங்கள் நான்கு

1) பதினெண் புராணம் - சிவன், விட்ணு, பிரமன், சூரியன், அக்கினி இவர்களின் ஆற்றல் பற்றி படிப்பறிவு குறைந்தவர்களுக்கு விளங்க வைப்பது
2) நியாயம் - வேதப் பொருளை நிட்சயிப்பதற்கு உதவுவது.
3) மீமாஞ்சை வேதப் பொருளின் தார்ப்பரியத்தை அறிய உதவுவது.
4) ஸ்மிருதி - நால் வருணம், ஆச்சிரமங்களுக்குரிய தர்மங்களைக் கூறுவது.
உப வேதங்கள் நான்கு

1) ஆயுர் வேதம் - வைத்திய நூல்
2) தனுர் வேதம் - படைக்கலப் பயிற்சி பற்றிய நூல். தனுர் என்றால் வில் என்று பொருள்.
3) காந்தருவ வேதம் - கடவுளுக்கும் மனிதருக்கும் உரிய இசையை அறிவிப்பது.
4) அருத்த வேதம் - - இம்மை மறுமைக்கு உரிய பொருள் சம்பாதித்தல் தொடர்பான சாத்திரங்களைக் கூறுவது.


மறை பொருட் கோட்பாடுகளை அறிவுறுத்தும் உப நிடதங்களின் எண்ணிக்கை 108. அதில் 12 சிறப்பானவை. இந்த உப நிடதங்களே வேதாந்தம் என அழைக்கப்படுகின்றன.

சிவாகமங்கள் 28. இவை சிவபெருமானின் ஐந்து திருமுகங்களில் இருந்து தோன்றியவை என்று நம்பப்படுகிறது. அவை நான்கு பாதங்களைக் கொண்டவை.

1) ஞானபாதம் - முப்பொருள் உண்மை
2) யோகபாதம் - அட்டாங்க சிவயோகம்
3) கிரியாபாதம் - மந்திரங்களின் உத்தாரம், சந்தியாவந்தனம், பூசை, செபம், அர்ச்சனை, ஆசாரிய, அபிசேகம்
4) சரியாபாதம் - சமயாசாரங்களை உபதேசிக்கிறது


சிவனை வேதத்தோடு இணைத்தும் வழிபாட்டினை ஆகமத்துடன் சேர்த்தும் சொல்வது சைவத்தின் பொதுப் போக்காகும். இதன் காரணமாகவே சைவத்துக்கு வேதம் பொது, ஆகமம் சிறப்பு என்று சொல்லப்படுகிறது.

 

++++++

++++

++

+

.............

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சிவாகமங்களின் வழி நூல்கள் 207. சிவாகமங்களின் சார்பு நூல்கள் 8. பன்னிரு திருமுறைகள் வேதத்தின் வழி அல்லது சார்பு நூல்களாகும். 11 ஆம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ள 'திருமுகப்பாசுரம்' சிவனால் அருளப்பட்டது என்பர். எஞ்சியவை சிவஞானம் கைவரப்பெற்ற ஞானிகளால் பாடப்பட்டவை. வேதாகமே தமிழ் வேதமாகக் கருதப்படுகிறது.

இவற்றைவிட வேதங்கள், சிவாகமங்கள், புராணங்கள், திருமுறைகள் வழிவந்த 14 சித்தாந்த சாத்திரங்களும் உண்டு.

இவற்றை திருவியலூர் உய்யவந்த தேவர் (திருவுந்தியார்) திருக்கடவூர் உய்யவந்த தேவர் (திருக்களிற்றுப் பாடியார்) மெய்கண்ட தேவர் (சிவஞானபோதம்)

அருணந்தி சிவாச்சாரியார் (சிவஞான சித்தியார், இருபாலிருபது)திருவதிகை மனவாசகம் கடந்தார் (உண்மை விளக்கம்)

மறைஞான சம்பந்தர் (சதமணித்திரட்டு)

உமாபதி சிவாச்சாரியார் (சிவப்பிரகாசம் முதல் சங்கற்ப நிராகரணம் ஈறாக 8 சாத்திரங்கள்).

இவர்கள் 13-14 வது நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர்கள்.

பதினான்கு சித்தாந்த சாத்திரங்களின் மூலமும் உரையும் கொண்ட நூல் மட்டும் 1206 பக்கங்கள் கொண்டவை.

குரானை முயன்றால் நெட்டுருச் செய்து கொள்ளலாம். பைபிளை படிக்க மாதங்கள் எடுக்கலாம். ஆனால் இந்து வேதாகமங்களைப் படிக்க வாழ்நாள் போதாது!

கோயில் அர்ச்சகர்கள் உட்பட வேதாகமங்களைப் படித்த சைவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

பதி (இறைவன்) பசு (உயிர்) பாசம் (ஆணவம், மாயை, கன்மம்)

ஆதி சங்கரரின் (கி.பி. 788-820) அத்துவைதம் (உயிர்களும் உலகமும் பிரமத்தின் தோற்றமே என்ற மாயாவாதம். இரண்டன்மை)

சங்கரரின் அத்துவைதத்தை மறுக்கும் இராமனுசரின் (கி.பி. 1017-1137) விசிட்டாத்துவைதம் (சித்து அசித்து இரண்டும் ஈசுவரனும் ஒன்றே)

மத்துவரின் (கி.பி. 1199-1278) துவைதம் (சீவான்மாவும் பரமான்மாவும் வேறு வேறு) இந்தக் கோட்பாடுகளை படித்து பொருள் உணர்ந்து கொண்டவர்கள் அரிது.

இதனால் சைவ சமயத்தவர்கள் அர்ச்சனை அபிசேகம் போன்ற சரியை கிரிகையோடு நின்று விடுகிறார்கள்.

இஸ்லாம், கிறித்தவம், இந்து சமயங்களுக்கு இடையில் ஒரு ஒற்றுமை உள்ளது. அது அவர்களது மத நூல்கள் அந்தந்த மதக் கடவுள் வாக்கு என்பது. வேதங்களும் ஆகமங்களும் தாமே தோன்றியவை. மனிதர்களால் இயற்றப்படாமல் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டவை என்று சைவ சித்தாந்தம் கூறுகிறது.

தேய்ந்து வருகிற சமயங்களில் இந்து சமயம் முன்னணியில் நிற்கிறது. இதற்குக் காரணம் அந்த மதத்தில் காணப்படும் வர்ண பேதமும் சாதி அமைப்பும் வடமொழி -பிராமணிய மேலாண்மையும் ஆகும்.

கடந்த ஐப்பசி 16ஆம் நாள் பெரம்பலூர் துறைமங்கலம் அருகே திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையின் கிழக்கு பகுதியில் நடந்த புத்த மாநாட்டில் நூற்றுக் கணக்கான தலித் இந்துக்கள் மொட்டை அடித்து புத்த மதத்தில் இணைந்தனர்.

பெரம்பலூர் மாவட்ட அம்பேத்கர் இளைஞர் முன்னணி தமிழ்நாடு அமைப்பினரும், பன்னாட்டு பவுத்த இளைஞர் இயக்கம் ஆகியன இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தியது.

இதற்கான விழாவுக்கு அண்ணல் அம்பேத்கர் இளைஞர் முன்னணி மாநில தலைவர் கே.கந்தசாமி தலைமை தாங்கினார். டாக்டர் வேணு அண்ணாமலை முன்னிலை வகித்தார். கே.பி.தம்மசென் வரவேற்றார்.

'இந்த மத மாற்ற நிகழ்ச்சி ஒரு ஆரம்பம் தான். தாழ்த்தப்பட்ட இனத்தவருக்கு இன்னும் சமூக நீதி கிடைக்கவில்லை. தீண்டாமை இன்னும் ஒழியவில்லை. கிராமங்களில் இன்னும் இரட்டை தம்ளர் முறை உள்ளது. இந்த ஏற்றத்தாழ்வுகளை போக்கத்தான் தாழ்த்தப்பட்டோர் புத்த மதத்தில் சேருகின்றனர். இந்தியாவில் தோன்றிய புத்த மதத்தை புதுப்பிக்கிறோம். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் புத்த மடங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது' என்று' தலைவர் கந்தசாமி கூறினார்.

பவுத்த தேரர் பாதிதம்மா மற்றும் பவுத்த தேரர்கள் புத்தர் சிலைக்கு அபிசேகம் செய்தனர். அடுத்து அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து பாலிமொழியில் மந்திரம் ஓதினர். பின்னர் புத்த மதத்தில் சேர விரும்பிய அனைவரும் பவுத்த தேரர் போதிதம்மா தலைமையில் 22 உறுதிமொழிகளைச் செய்து தீட்சை பெற்றுக் கொண்டனர்.

டாக்டர் பி.ஆர். அம்பேத்கார் நாக்பூரில் 1956 ஐப்பசி 15 இல் தனது 800,000 ஆதரவாளர்களோடு இந்து மதத்தை கைவிட்டு புத்தமதத்தில் சேர்ந்து கொண்டார். இந்து மதத்தில் புரையோடிப் போய்விட்ட சாதி, தீண்டாமை, மூடநம்பிக்கைகள் மற்றும் சடங்குகள் இவற்றில் இருந்து விடுபடவே இந்த மதமாற்றம் இடம் பெற்றதாக அப்போது அம்பேத்கார் கூறினார்.

இந்த மதமாற்றம் பற்றி சைவ ஆதீனங்கள் கவலைப்படுவதில்லை. காஞ்சி காமகோடி பீடம் துக்கப்படுவதில்லை. சைவ-இந்து அமைப்புக்கள் வருத்தப்படுவதில்லை. இந்து பரிசத் அலட்டிக் கொள்வதில்லை.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இந்து மதத்தில் நால் வர்ணம் அதன் ஆணி வேர்! சாதிகள் சல்லி வேர்கள்!

டாக்டர் அம்பேத்கார் 1981 ஆம் ஆண்டு ஐப்பசி 15 இல் தனது 800,000 ஆதரவாளர்களோடு இந்து மதத்தை உதறிவிட்டு புத்த மதத்தை தழுவினார்.

'நான் இந்துவாக சாக மாட்டேன்!;' என்று கூறி அப்பேத்கார் மதம் மாறிய நாள் ஒவ்வொரு ஆண்டும் அதே நாக்பூரில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.


இந்த விழாவில் வெளிநாடு மற்றும் நாட்டின் பல பகுதிகளில் இருந்து இலட்சக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர். இந்த ஆண்டு நடைபெற்ற விழாவில் 65,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்து தலித் மக்கள் புத்த மதத்தை தழுவினார்கள்.

இந்த சிறப்பு நிகழ்ச்சியில் யப்பானில் பிறந்து இந்தியாவில் வதியும் புத்த சன்னியாசி பாந்தி நாகார்சுன் சுராய்சசாய் புத்த மதத்தை தழுவியவர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கினார்.

புத்தமதத்தை தழுவுகிறவர்கள் 22 உறுதி மொழிகளை எடுத்துக் கொள்கிறார்கள்.

பிரமன், விஷ்ணு, சிவன் போன்றோரை கடவுள் என்று கருதவோ வழிபடவோ மாட்டேன்.

கவுரி, கணபதி போன்றோரை கடவுள் என்று கருதவோ வழிபடவோ மாட்டேன்.

இராமன், கிருஷ்ணன் இருவரையும் கடவுள் அவதாரம் எடுக்கிறார் என்பதை நான் நம்ப மாட்டேன்.

பகவான் புத்தர் மகாவிஷ்ணுவின் அவதாரம் என்பதை நம்பமாட்டேன். அப்படி பரப்புரை செய்வது குறும்புத்தனமும் பொய்யானதும் ஆகும்.

நான் ஒரு போதும் சிரார்த்தம் செய்ய மாட்டேன்.

பவுத்த கோட்பாடுகளுக்கு எதிராக ஒரு போதும் நடக்க மாட்டேன்.

பிராமணர்களால் நடத்தப்படும் கிரிகைகள் எதனையும் ஏற்க மாட்டேன்.

அனைவரும் சமம் என்ற கொள்கையை நான் நம்புகிறேன்.

சமத்துவத்தை ஏற்படுத்தப் பாடுபடுவேன்.

புத்த பகவானின் அட்டாங்க மார்க்கத்தைப் பின்பற்றுவேன்.

தருமத்தின் தசசீலங்களை பின்பற்றுவேன்.

எல்லா உயிர்கள் மீதும் கருணை காட்டுவேன். அவற்றை முடிந்த மட்டும் காப்பாற்றுவேன்.

பொய் சொல்லமாட்டேன்.

திருட மாட்டேன்.

காமத்தில் உழல மாட்டேன்;. பால் உணர்வில் அத்துமீற மாட்டேன்.

போதை தரும் குடியையோ மதுவையோ நான் அருந்தமாட்டேன்.


முடிந்த மட்டும் எனது வாழ்க்கையை பவுத்த கொள்கை. கருணை இவற்றை அடிப்படையாகக் கொண்ட உபதேசங்களுக்கு இணங்க அமைத்துக் கொள்வேன்.

பார்ப்பனர் தவிர்த்த பிற மனிதர்களை கீழான பிறவிகள் என்று கருதுவதும் சமத்துவமற்ற நிலையில் நம்பிக்கை உடையதும் மனிதர்களின் விடுதலைக்குக் கேடாக இருப்பதுமான இந்து மதத்தை நான் கைவிட்டுவிட்டு புத்த மார்க்கத்தைக் கைக்கொள்கிறேன்.

பவுத்த தருமமே சிறந்த மதம் என்பதை நான் முற்றாக நம்புகிறேன்.

நான் இன்று மறுபிறவி எடுத்துள்ளேன் என்பதை நம்புகிறேன்.

நான் இன்று முதல் பவுத்த தருமம் உபதேசிப்பதுபோல் ஒழுகுவேன்.

பவுத்தம் ஒரு மார்க்கமே தவிர மதமல்ல. அது பிற்காலத்தில் மதமாக்கப்பட்டது.

பகுத்தறிவுவாதியான புத்தர் தெய்வம் ஆக்கப்பட்டார். அவரது முன்னைய பிறப்புக்களைப் பற்றி நம்பமுடியாத கற்பனைக் கதைகளை அவரது சீடர்கள் எழுதி வைத்தார்கள்.

பவுத்தம் சமுதாய சமத்துவக் கருத்துக்களைப் பரப்புகிறது. நிற அடிப்படையில் சொல்லப்பட்ட வேற்றுமையைத் தகர்க்கிறது. அதன் உட்பிரிவான சாதி வரம்புகளை மறுக்கிறது. பிறப்பால் ஒருவன் பிராமணன் ஆகமுடியாது. ஒழுக்கத்தால் மட்டுமே ஒருவன் பிராமணனாக முடியும் என பவுத்தம் சொல்கிறது.

+++++++++++++

+++++++++++

+

 

 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

டாக்டர் பி.ஆர். அம்பேத்கார் நாக்பூரில் 1956 ஐப்பசி 15 இல் தனது 800,000 ஆதரவாளர்களோடு இந்து மதத்தை கைவிட்டு புத்தமதத்தில் சேர்ந்து கொண்டார். இந்து மதத்தில் புரையோடிப் போய்விட்ட சாதி, தீண்டாமை, மூடநம்பிக்கைகள் மற்றும் சடங்குகள் இவற்றில் இருந்து விடுபடவே இந்த மதமாற்றம் இடம் பெற்றதாக அப்போது அம்பேத்கார் கூறினார்.

இந்த மதமாற்றம் பற்றி சைவ ஆதீனங்கள் கவலைப்படுவதில்லை. காஞ்சி காமகோடி பீடம் துக்கப்படுவதில்லை. சைவ-இந்து அமைப்புக்கள் வருத்தப்படுவதில்லை. இந்து பரிசத் அலட்டிக் கொள்வதில்லை.

இந்து மதத்தில் நால் வர்ணம் அதன் ஆணி வேர்! சாதிகள் சல்லி வேர்கள்!

டாக்டர் அம்பேத்கார் 1981 ஆம் ஆண்டு ஐப்பசி 15 இல் தனது 800,000 ஆதரவாளர்களோடு இந்து மதத்தை உதறிவிட்டு புத்த மதத்தை தழுவினார்.

'நான் இந்துவாக சாக மாட்டேன்!;' என்று கூறி அப்பேத்கார் மதம் மாறிய நாள் ஒவ்வொரு ஆண்டும் அதே நாக்பூரில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.


இந்த விழாவில் வெளிநாடு மற்றும் நாட்டின் பல பகுதிகளில் இருந்து இலட்சக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர். இந்த ஆண்டு நடைபெற்ற விழாவில் 65,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்து தலித் மக்கள் புத்த மதத்தை தழுவினார்கள்.

இந்த சிறப்பு நிகழ்ச்சியில் யப்பானில் பிறந்து இந்தியாவில் வதியும் புத்த சன்னியாசி பாந்தி நாகார்சுன் சுராய்சசாய் புத்த மதத்தை தழுவியவர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கினார்.

புத்தமதத்தை தழுவுகிறவர்கள் 22 உறுதி மொழிகளை எடுத்துக் கொள்கிறார்கள்.

பிரமன், விஷ்ணு, சிவன் போன்றோரை கடவுள் என்று கருதவோ வழிபடவோ மாட்டேன்.

கவுரி, கணபதி போன்றோரை கடவுள் என்று கருதவோ வழிபடவோ மாட்டேன்.

இராமன், கிருஷ்ணன் இருவரையும் கடவுள் அவதாரம் எடுக்கிறார் என்பதை நான் நம்ப மாட்டேன்.

பகவான் புத்தர் மகாவிஷ்ணுவின் அவதாரம் என்பதை நம்பமாட்டேன். அப்படி பரப்புரை செய்வது குறும்புத்தனமும் பொய்யானதும் ஆகும்.

நான் ஒரு போதும் சிரார்த்தம் செய்ய மாட்டேன்.

பவுத்த கோட்பாடுகளுக்கு எதிராக ஒரு போதும் நடக்க மாட்டேன்.

பிராமணர்களால் நடத்தப்படும் கிரிகைகள் எதனையும் ஏற்க மாட்டேன்.

அனைவரும் சமம் என்ற கொள்கையை நான் நம்புகிறேன்.

சமத்துவத்தை ஏற்படுத்தப் பாடுபடுவேன்.

புத்த பகவானின் அட்டாங்க மார்க்கத்தைப் பின்பற்றுவேன்.

தருமத்தின் தசசீலங்களை பின்பற்றுவேன்.

எல்லா உயிர்கள் மீதும் கருணை காட்டுவேன். அவற்றை முடிந்த மட்டும் காப்பாற்றுவேன்.

பொய் சொல்லமாட்டேன்.

திருட மாட்டேன்.

காமத்தில் உழல மாட்டேன்;. பால் உணர்வில் அத்துமீற மாட்டேன்.

போதை தரும் குடியையோ மதுவையோ நான் அருந்தமாட்டேன்.


முடிந்த மட்டும் எனது வாழ்க்கையை பவுத்த கொள்கை. கருணை இவற்றை அடிப்படையாகக் கொண்ட உபதேசங்களுக்கு இணங்க அமைத்துக் கொள்வேன்.

பார்ப்பனர் தவிர்த்த பிற மனிதர்களை கீழான பிறவிகள் என்று கருதுவதும் சமத்துவமற்ற நிலையில் நம்பிக்கை உடையதும் மனிதர்களின் விடுதலைக்குக் கேடாக இருப்பதுமான இந்து மதத்தை நான் கைவிட்டுவிட்டு புத்த மார்க்கத்தைக் கைக்கொள்கிறேன்.

பவுத்த தருமமே சிறந்த மதம் என்பதை நான் முற்றாக நம்புகிறேன்.

நான் இன்று மறுபிறவி எடுத்துள்ளேன் என்பதை நம்புகிறேன்.

நான் இன்று முதல் பவுத்த தருமம் உபதேசிப்பதுபோல் ஒழுகுவேன்.

பவுத்தம் ஒரு மார்க்கமே தவிர மதமல்ல. அது பிற்காலத்தில் மதமாக்கப்பட்டது.

பகுத்தறிவுவாதியான புத்தர் தெய்வம் ஆக்கப்பட்டார். அவரது முன்னைய பிறப்புக்களைப் பற்றி நம்பமுடியாத கற்பனைக் கதைகளை அவரது சீடர்கள் எழுதி வைத்தார்கள்.

பவுத்தம் சமுதாய சமத்துவக் கருத்துக்களைப் பரப்புகிறது. நிற அடிப்படையில் சொல்லப்பட்ட வேற்றுமையைத் தகர்க்கிறது. அதன் உட்பிரிவான சாதி வரம்புகளை மறுக்கிறது. பிறப்பால் ஒருவன் பிராமணன் ஆகமுடியாது. ஒழுக்கத்தால் மட்டுமே ஒருவன் பிராமணனாக முடியும் என பவுத்தம் சொல்கிறது.

+++++++++++++++++

++++++++++++++

+++++++++++++

++++++++

+

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பவுத்தம் ஆண் பெண் இடையே பால் அடிப்படையிலான வேறுபாட்டை அகற்றியது.

ஆண்களைப் போலவே பெண்கள் பவுத்த சங்கத்தில் துறவிகளாகச் சேர்க்கப் பட்டார்கள்.

பவுத்தம் மனிதனது வினைக்கு அவனே காரணம் என்று சொல்கிறது. நல்லது செய்தால் நல்வினைப் பயன் கிடைக்கும் என்றும் தீயது செய்தால் தீவினைப் பயன் சேரும் என்று சொல்கிறது. புத்தர் ஞானம் பெற்றபி;ன்னர் நான்கு வாய்மைகளை போதித்தார்.

முலாவது வாய்மை - பிறத்தல் துன்பம். பிணி துன்பம். தளர்ச்சி துன்பம். மரணம் துன்பம். வேண்டாவற்றோடு பிணிக்கப்பட்டிருப்பதும், வேண்டுவனவற்றிலிருநது பிரிக்கப்பட்டிருப்பதும் துன்பம். விழைவு கூடாமை துன்பம். சுருங்கக் கூறின் உருவம், நுகர்ச்சி, குறிப்பு, பாவனை உள்ளவறிவாகிய விஞ்ஞானம் என்ற ஐந்தும் துன்பம் தருவன. ஆதலால் பிக்குகளே துன்பம் உளது.

இரண்டாவது வாய்மை - இந்தத் துன்பங்களுக்குக் காரணம் பிறப்பீனும் வித்தாகிய அவா அல்லது வேட்கை. சிற்றின்பம் விரும்பும் வேட்கை. உயிர்வாழ விரும்பும் வேட்கை. திருஷ்டி என்ற அழிவுத்தன்மையை வேண்டும் வேட்கை. இந்த மூன்றுவித வேட்கையும் துக்கத்துக்கு காரணம். எனவே துக்க காரணம் உளது.

மூன்றாவது வாய்மை - தன்னிடத்தில் உண்டான ஆசையை அகற்றினால் துக்க நிவாரணம் உளது.

நான்காவது வாய்மை - இந்த துக்க நிவாரணத்துக்கு வழியுண்டு. அதுவே அட்டாங்க துக்க நிவாரண மார்க்கம். அவையாவன நற்காட்சி, நல்லூற்றம், நல்வாய்மை, நற்செய்கை, நல்வாழ்க்கை, நன்முயற்சி, நற்கடைப்பிடி, நல்லுளதோர் தலைப்பாடு. (இது பற்றி மேலும் அறிய விரும்புபவர்கள் சாத்தனார் எழுதிய மணிமேகலை காப்பியத்தைப் படிக்கவும்)

எல்லாம் வல்ல படைப்புக் கடவுள் ஒருவர் உண்டு என்று பவுத்தம் நம்புவதில்லை. உலகைக் கடவுள் படைத்தார் எனக் கூறுவது கடவுளை யார் படைத்தார் என ஒருவரைக் கேட்க வைக்கும்.

அண்டத்தைப் படைத்தவர் கடவுள் என்பதை புத்தர் ஒப்புக் கொண்டாரா என்பது கேள்வி. 'இல்லை' என்பதே பதில். அவர் ஒப்புக் கொள்ளவில்லை. படைப்பு கடவுளின்றியே உலகம் இருக்கிறது என்பது புத்தரின் வாக்கு. பவுத்தம் சிந்தித்தலை, கேள்வி கேட்பதை மற்றும் பகுத்தறிவை ஊக்குவிக்கிறது.

'என்னால் நிருவாணத்துக்குரிய வழியைத்தான் காட்ட முடியும். அந்தப் பாதையில் நடப்பது உங்கள் பொறுப்பு' என்றார் புத்தர்.

அரண்மனையில் பிறந்து பட்டாடை உடுத்தி, பொன்னாபரணம் அணிந்து, பால், பழம் பருகி, அறுசுவை விருந்துண்டு, பன்னீரில் கொப்பளித்து, மஞ்சத்தில் படுத்துறங்கி, ஆசை மனையாளோடும், அன்புக் குழந்தையோடும் ஆடிப்பாடி அரச வாழ்க்கை வாழ்ந்த சித்தார்த்தன் அவற்றைத் துறந்து, மஞ்சள் அங்கி அணிந்து, பிச்சா பாத்திரம் ஏந்தி, வீதிதோறும் நடந்து, வீடுதோறும் பிச்சை எடுத்து வாழ்ந்தார்.

பவுத்தம் போல் அல்லாது இந்து மதத்தில் சாதி புரையோடிப் போய்க் கிடக்கிறது. அது அந்த மதத்தை அரித்துக் கொண்டிருக்கிற புற்று நோய்.

தொட்டால் தீட்டு, நிழல் பட்டால் தீட்டு, பார்த்தால் தீட்டு இப்படி எல்லாமே தீட்டுத்தான்.

இந்தியாவில் 101 கோடி மக்கள் வாழ்கிறார்கள். இவர்களில் 85 விழுக்காடு இந்துக்கள். அதில் சுமார் 20 விழுக்காடு தலித் மக்கள்.

எனவே இப்போது நடைபெறும் மதமாற்றம் மழைத் தூவானம் போல் தெரியலாம். ஆனால் அது பெரு மழையாகப் பெய்யலாம்..

ஏற்கனவே மும் மூர்த்திகள், முப்பத்து முக்கோடி தேவர்கள், இந்திரன், சந்திரன், வருணன், அக்னி, பிரகஸ்பதி, கின்னரர், கிம்புருடர் என வாழ்ந்த பரந்த கண்டம் சுமார் 700 ஆண்டுகள் இஸ்லாமிய ஆட்சிக்கு உட்பட்டுக் கிடந்ததால் அது மூன்று துண்டாக வெட்டப்பட்டு விட்டது.

இதில் இரண்டு துண்டுகளில் இஸ்லாமிய குடியரசுகள். எஞ்சிய இந்தியாவில் 85 விழுக்காடு மட்டும் இந்துக்கள்.

++++++++++++++++++

+++++++++++++

++++++++++

+++

+

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இந்த மதமாற்றம் பாதி கட்டயாத்தின் பேரில் நடந்திருக்கலாம். மீதி பணம், சலுகை, பதவிபோன்றவற்றுக்கு ஆசைப்பட்டு மாறி இருக்கலாம். சாதி அடக்குமுறையில் இருந்து தப்பவும் மத மாற்றம் நடந்திருக்கலாம்.

சாதி இந்து மதத்தின் உள்கட்டுமானத்தில் இடம்பெற்றுள்ளது. வேதங்களும், ஸ்மிருதிகளும் வர்ண பேதம் கற்பிக்க பின்னர் அது சாதிகளாகப் பெருகின.

இந்து மதத்தில் நால் வர்ணம் அதன் ஆணி வேர். சாதிகள் சல்லி வேர்கள்.

இந்தியாவில் 6,400 சாதிகள் இருக்கின்றன என உச்ச நீதிமன்றம் கூறியது. மண்டல் அறிக்கை 3000 கும் அதிகமான சாதிப்பட்டியலை வெளியிட்ட போது 'இந்து' நாளேடு வியப்போடு அதே சமயம் அவநம்பிக்கையோடு எழுதியது.

உலகில் 'இந்து அரசு' என அரசியலமைப்பில் எழுதி வைத்திருக்கும் ஒரே நாடு நேபாளம். அரசனாகத் தம்மை ஆக்கிக்கொள்ள ஆசைப்பட்ட பிரித்வி நாராயண் ஷா என்பவன் நான்கு வருணங்களுடன் 36 சாதிகளையும் கொண்ட இந்து மத அமைப்பை நேபாளத்தில் உண்டாக்கி அரச பரம்பரையை விஷ்ணுவின் ஆட்சி என்று ஆக்கிக் கொண்டான்.

ஆனால், இந்து மதத்தில் சிவன் முழுமுதல் கடவுள். அவரது வாகனம் எருது. இதனால் நேப்பாளத்தில் காளை மாட்டை கம்பால் அடிக்கக் கூடாது. அப்படி அடுத்தால் குற்றம். ஏரில் ப+ட்டி உழக் கூடாது. அப்படி உழுதால் குற்றம். வண்டியில் ப+ட்டி ஓட்டக் கூடாது. அப்படி பூட்டி ஓட்டினால் குற்றம். காளை மாட்டை கொல்லக் கூடாது. அப்படிக் கொன்றால் அது மரண தண்டனைக்குரிய குற்றம்.

இப்படி ஏன் சட்டம் இயற்றப்பட்டுள்ளது? வேறொன்றும் இல்லை. நேப்பாள மன்னர் மனு ஸ்மிருதி விதிகளின் படி அரசாள்கிறார்.

சரி நேப்பாள மன்னர்தான் இப்படி? நாங்கள் மேடை தோறும் போற்றி பெருமைப்படும் சேர, சோழ, பாண்டியர் ஆட்சியில் என்ன நடந்தது?

மூவேந்தர்கள் எண்ணாயிரம், திருபுவனம், ஆயகுடி, முக்சூடல் போன்ற ஊர்களில் காசி, வங்காளம் (முதலாம் இராசேந்திரன்) போன்ற தேசங்களில் இருந்து பிராமணர்களை கூட்டம் கூட்டமாகக் கொண்டு வந்து அவர்களுக்கு இறையிலி மான்யங்கள், அக்கிரகாரங்கள், சதுர்வேதி மங்கலங்கள் என்ற புதிய குடியிருப்புகளில் குடியேற்றினார்கள்.

பிராமணர்கள் வேதம் படிக்க வேத பாடசாலைகளை நிறுவி அவற்றுக்கு நிவந்தம் எழுதி வைத்தார்கள்.

இதனை திருமூலர் கண்டிக்கிறார். அந்தணர் குடியிருப்புக்கள் ஆயிரம் அமைத்து அவற்றை அந்தணர்க்குக் கொடுப்பதாலும் கோபுரத்துடன் கூடிய கோயில்களை ஆயிரக் கணக்கில் கட்டி முடிப்பதாலும் பயன் இல்லை. அவை ஒரு ஞானிக்கு ஒரு பகலுணவு அளிப்பதற்கு நிச்சயம் நிகராகா என்கிறார்.

அகரம் ஆயிரம் அந்தணர்க் கீயிலென்
சிகரம் ஆயிரஞ் செய்து முடிக்கிலென்
பகரு ஞானி பகலூண் பலதத்துக்கு
நிகரிலை என்பது நிச்சயந் தானே!;


திருநாள் பெருநாள்களிலும் வெற்றி விழாக்களிலும் வெளியூர் செல்லும் போதும் மூவேந்தரும் பிராமணர்க்குத் துலைநிறை (துலாபாரம்) பொன் (இரணிய கருப்பம்) ஆவாயிரம் (கோசகஸ்ரம்) முதலிய தானங்களைச் செய்து வந்தனர். (தேவநேயப்பாவாணர் எழுதிய தமிழர் மதம் - பக்கம் 93)முதலாம் இராச இராசனின் இராசகுரு ஈசானச் கு குருதேவர், விக்கிரம சோழனுக்கு சுவாமி தேவர், சூன்றாம் குலோத சிவாச்சாரியார். முதலாம் இராசேந்திரனின் ராசகுரு சர்வசிவ பண்டிதர். இராசாதி இராசனுக்;துங்கனுக்கு சோமேசுவரர் இராசகுருவாக இருந்தனர்.

மொத்தத்தில் மூவேந்தர்கள் அந்தணர் தாள் பணிந்து ஆண்டனர்.

மனு, மிடாக்சாரி, ஹேமாத்ரி, ஜுமுக வாதனர் எழுதிய தயாபாக (தர்மரத்னா என்ற நீதி நூலின் ஒரு பகுதி) ஆகிய நான்கு சாத்திரங்களின்மேல் சோழர்களுடைய நீதி நிருவாகத்தின் அடித்தளம் அமைக்கப்பட்டது.

அர்த்தசாத்திரம் அரசியல் நூல் என்ற அளவில் ஸ்மிருதிகளின் நீதியினின்று ஒரு சிறிது மாறுபட்டுக் காணப்பட்டது.

இவ்வாறாக அரசியல் தத்துவத்திற்கு அர்த்தசாத்திரமும், நீதித்தத்துவத்திற்கு மேற்சொன்ன நான்கு சாத்திரங்களும் சோழர் காலத்து அந்தணர்களால் ஊர் நீதிமன்றங்களிலும் அரச நீதி வழங்கு மன்றங்களிலும் எடுத்து ஓதப்பட்டு விளக்கவுரை சொல்லப்பட்டன. (திரு.மா பாலசுப்பிரமணியன் எழுதிய 'சோழர்களின் அரசியல், கலாச்சார வரலாறு' பாகம் 2. பக்கம் 95)

பிற்கால சேர, சோழ, பாண்டிய அரசர்களால் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டது.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று பொய்யாமொழிப் புலவர் வள்ளுவர் செய் திருக்குறள் இரட்டடிப்புச் செய்யப்பட்டது! திருக்குறள் பற்றிய குறிப்பு எதனையும் எந்தக் கல்வெட்டிலும், செப்பேட்டிலும் காணோம்!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சோழ பாண்டிய பேரரசுகள் மறைந்த மர்மம் என்ன?

தேவாரம் பாடிய ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் குறிப்பிட்ட தலங்களை பிற்காலச் சோழர்கள் (விஜயாலயன் (கி.பி. 846-881) முதல் மூன்றாம் குலோத்துங்கன் (கி.பி.1180-1218) வரை) கற்றளிகளாக மாற்றிக் கட்டினர்.

மேலும் புதிதாகவும் காவிரிக் கரையின் வளமிக்க பகுதிகளில் சிவாலயங்கள் பலவற்றைக் கட்டினர்.

உருவ வழிபாடும் இவர்கள் காலத்திலேயே அதிகரித்தன. சிவனுக்கு மட்டும் முப்பதற்கும் அதிகமான வடிவங்கள் வடிக்கப்பட்டன.

சோழர் கட்டிய கோயில்களில் முதலாம் இராச இராசன் (கி.பி.985-1012) கட்டிய தஞ்சைப் பெருவுடையார் கோயில் மிகவும் புகழ் படைத்தது.

அவனது மகன் முதலாம் இராசேந்திரன் எண்ணிறந்த கோயில்களைக் கட்டியும் புதுப்பித்தும் திருப்பணி செய்தான். அதில் கங்கை கொண்ட கோழீச்சுரர் கோயில் ஒன்றாகும். அதற்கு 2,150 கூலம் நெல்லும், 65 கழஞ்சி பொன்னும் நிவந்தமாக கொடுத்தான்.

முதலாம் இராசேந்திரனின் இராசகுருவாக இருந்த சர்வசிவ பண்டிதருக்கும் அவர் மாணாக்கர்களுக்கும் ஆண்டுக்கு ஒருமுறை ஏராளமான நெல் அளித்தான்.

இந்த சர்வசிவ பண்டிதரே தஞ்சைப் பெரிய கோயிலில் பூசை செய்தவர். அவருடைய சீடர்கள், சீடர்களின் சீடர்கள், ஆரியதேசம், மத்தியதேசம், கௌடதேசம் ஆகிய இடங்களில் வாழ்ந்தவர்களுக்கும் முதலாம் இராசேந்திரன் கொடை அளித்தான். (டாக்டர் மங்களமுருகேசன் எழுதிய "சோழர் வரலாறு" பக்கம் 234)

தமிழகத்தில் சோழநாட்டில் உள்ளது போல் சேர சோழ பாண்டிய நாடுகளில் கோயில்கள் இருக்கவில்லை. சோழநாட்டில் மட்டும் சுமார் 3,000 சிவாலயங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பான்மை பிற்காலச் சோழர் காலத்தில் கட்டப்பட்டவையாகும்.

பேரோடும் புகழோடும் ஆட்சி செய்த சோழர் பரம்பரை மூன்றாம் இராசேந்திர சோழன் ( கி.பி.1246-1279) காலத்தில் வீழ்ச்சியுற்றது.

நூற்றுக் கணக்கான கோயில்களைப் புதிப்பித்தும், புதிதாகக் கட்டியும், ஆயிரக்கணக்கான பிராமணர்களை வட நாட்டில் இருந்து இறக்குமதி செய்து அவர்களுக்கு நிவந்தமாக ஆயிரக்கணக்கான அக்கிரகாரங்கள், சதுர்வேதிமங்கலங்கள் போன்ற குடியிருப்புக்களை இறையிலி நிலங்களாகக் கொடுத்தும், மூவர் பாடிய தேவாரங்களைத் திருமுறை ஆகவும் ஆழ்வார்களின் பாடல்களை நாலாயிரதிவ்வியப் பிரபந்தம் ஆகவும் தொகுத்தும், ஆறுகால பூசைகள், வேள்விகள், திருவிழாக்கள் போன்ற புண்ணிய பணிகள் செய்தும் பிற்கால சோழ வம்சம் 434 ஆண்டுகளே நீடித்தது.

கங்கை கொண்ட, கடாரம் வென்ற, திக்கெட்டும் வெற்றி கொண்டு கடல்கடந்தும் பேராட்சி செய்த சோழப் பேரரசு பொலிவிழந்து, புகழிழந்து, அரசியல் சூழ்ச்சிக்கு பலியாகி வீழ்ச்சியுற்றது. அதன் வீழ்ச்சிக்கு வரலாற்று ஆசிரியர்கள் சுட்டிக் காட்டும் காரணிகள் பின்வருமாது.

1) செல்வாக்குப் படைத்த குறுநில மன்னர்கள் தன்னிச்சையாக நடந்து கொண்டது.

2) சமயப் பூசல்கள். விசிட்டாத்துவைதம் பரப்பியவரும் தாழ்த்தப்பட்ட மக்களை கோயிலுக்குள் அழைத்துச் சென்று சமயத்துறையில் மாபெரும் புரட்சி செய்த வைணவப் பெரியார் இராமனுசர் நாடுகடத்தப்பட்டார். தில்லை கோவிந்தராசர் சிலை கடலில் தூக்கி எறியப்பட்டது.

3) இராசத்துரோகம் மற்றும் சிவத்துரோகம். கோயில் சிலைகளையும் பொருளையும் அர்ச்சகர்களே களவாடினார்கள்.

4) வர்ணதரும அடிப்படையிலான சாதிப்பாகுபாடு மேலும் ஆழ வேரூன்றியது. பார்ப்பனர்கள் செல்வாக்கு சமூகத்தில் கொடி கட்டிப் பறந்தது. அரசர் வணிகர் இருசாராரும் பார்ப்பனர்களைப் போற்றிக் கொண்டாடினர். வுpரதம், வேள்வி, மறுபிறப்பு, சொர்க்கம், புண்ணியம் போன்ற சமய சிந்தனைகள் வேரூன்றிவிட்ட பிறகு அந்தக் கருத்துக்கு சொந்தக்காரர்கள் செல்வாக்குப் பெற்றது வியப்பல்ல. மறுபுறம் பார்ப்பனர் அல்லாத சாதியாரிடம் வலங்கை இடங்கைப் பிரிவுகள் இருந்தன. வலங்கை இடங்கை பிரிவுகள் ஒவ்வொன்றிலும் 98 குலங்கள் இருந்தன. வர்ண தர்மத்துக்கு இறைச தந்தையின் தொழிலை பிள்ளை செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டது.

5) கோயில்கள் கட்டி அவற்றைப் பராமரித்ததில் அரச கருவூலம் வெறுமையானது.

6) பாண்டியர் படையெடுப்பு

மூன்றாம் இராசேந்திர சோழனை போரில் தோற்கடித்த இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் ( கி.பி.1238-1251) இரண்டாம் பாண்டியப் பேரரசை வலிமைப் படுத்தினான்.

அவனைத்தொடர்ந்து சடையவர்மன் வீரபாண்டியன் (கி.பி.1253-1274), மாறவர்மன் குலசேகர பாண்டியன் (கி.பி.1268-1310) அரியணை ஏறினர்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

குலசேகரனுக்கு சுந்தரபாண்டியன் வீரபாண்டியன் என இரண்டு மகன்கள் இருந்தார்கள். சுந்தரபாண்டியன் பட்டத்தரசியின் மகன். வீரபாண்டியன் மற்றொரு அரசியின் மகன்.

குலசேகரன் சுந்தரபாண்டியனின் திறமையை மெச்சி குலசேகரன் அவனுக்கு இளவரசர் பட்டம் கட்டினான். அதனால் ஆத்திரம் அடைந்த வீரபாண்டியன் மன்னனை கொலை செய்துவிட்டு ஆட்சியைக் கைப்பற்றினான்.

சுந்தரபாண்டியன் மதுரையை விட்டு ஓடினான். இது நடந்தது கி.பி. 1310 ஆம் ஆண்டாகும்.

அஞ்சி ஓடிய சுந்தரபாண்டியன் தில்லிக்குச் சென்று அலாவுதீன் கில்ஜியின் படை உதவியை நாடினான். கில்ஜி தனது படைத்தளபதி மாலிக்கபூர் தலைமையில் படை அனுப்பினான்.

மாலிக்கபூர் வழியில் காணப்பட்ட இந்துக் கோயில்களை எல்லாம் கொள்ளையடித்தான். அவனது படையை எதிர்கொள்ள அஞ்சிய வீரபாண்டியன் மதுரையை விட்டு ஓடி காட்டுக்குள் மறைந்து கொண்டான். கண்ணனூரில் தங்கி இருந்த மாலிக்கபூர்படையில் அங்கு வாழ்ந்த 20,000 முஸ்லிம்கள் படையில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

சிதம்பரம் (பிரம்மஸ்த்பூரி) இந்துக் கோயிலில் பெரும் செல்வம் இருப்பதைக் கேள்விப்பட்ட மாலிக்கபூர் அதைத் தாக்கி பொருட்களைக் கொள்ளையடித்தான். கோயிலைப் பாதுகாத்த வீரர்கள் மற்றும் கோயிலில் பணிபுரிந்த பிராமணர்கள் கொல்லப்பட்டார்கள். பொன்னாலான பல இலிங்கங்களும் வேத நாராணயன் சிலையும் கைப்பற்றப்பட்டன. கோயில் இடிக்கப்பட்டு தரைமட்டம் ஆக்கப்பட்டது.

அடுத்து திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) கோயில் மீது படையெடுத்து அங்கு இருந்த பெருமாளின் படிமத்தையும் மற்றும் விலையுயர்ந்த படிமங்களையும் கைப்பற்றி அவற்றை தில்லிக்கு அனுப்பி வைத்தான். கோயில் இடித்து தரைமட்டமாகக்கப்பட்டது.

மாலிக்கபூரின் படையெடுப்பின் போது 512 யானைகள், 20,000 குதிரைகள், 800 மணங்கு பொன், முத்துக்கள் கொள்ளையடித்துச் செல்லப்பட்டன.

மாலிக்கபூர் வீரபாண்டியனைத் தோற்கடித்து சுந்தரபாண்டியனை ஆட்சியில் அமர்த்தினான். ஆனால் அவன் மாலிக்கபூருக்கு அஞ்சி தனது சித்தப்பாவான விக்கிரமபாண்டியன் உதவியோடு மாலிக்கபூரைத் தாக்கி புறமுதுகு காணச் செய்தான்.

மீண்டும் சுந்தரபாண்டியன் வீரபாண்டியன் இருவருக்கும் இடையில் அரியணைப் போட்டி ஏற்பட்டது. 1323 இல் உலூக்கான் படையெடுப்பில் பாண்டிய நாடு சுல்தானியர் வசமானது.

சோழப் பேரரசின் வீழ்ச்சிக்குரிய அதே காரணிகளே பாண்டிய அரசின் வீழ்ச்சிக்கும் காரணிகளாக அமைந்தன. சோழர் காலத்தில் காணப்பட்ட வலங்கை இடங்கைப் பிரிவுகளும், 98 கிளைப் பிரிவுகளும் காணப்பட்டன.

தமிழினம் வர்ணதர்மம் விதைத்த சாதி நோயினால் தாறுமாறாக பிளவுண்டு ஒற்றுமையின்றி கிடந்த காரணத்தால் அதனை எதிரிகள் எளிதில் அடிமைப்படித்தினர்.

பின்னர் தமிழகத்தை ஆண்ட விசயநகர கிருஷ்ணதேவராயன் தன் 'அமுக்த மாலதிய" என்ற நூலில் அரசாங்கத்திலுள்ள சிவில், இராணுவப் பதவிகளைப் பார்ப்பனர்களுக்கே வழங்கவேண்டு என்று எழுதியுள்ளான். (சோழர்களின் அரசியல் கலாச்சார வரலாறு-பாகம் 2 பக்கம் 60) இவன் 15 ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்தவன்.

பின்னர் 1799 இல் சுதேசி மக்களுக்கான சட்டங்களைத் தொகுத்த கவர்னர் ஜெனரல் சர் வில்லிய ஜோன்ஸ் என்பான் மனு சாத்திர முதலியவற்றின் அடிப்படையில் தொகுத்ததுதான் ர்iனெர டுயற. அவன்தான் சட்டத்திற்கும் மதத்திற்கும் முதல்முறையாக இந்து என்ற பெயரை வைத்தவன்.

இரண்டு கிழமைகளுக்கு முன்னர் தசரதா விழா கொண்டாடப்பட்டது. பாளையங்கோட்டையில் நடந்த தசரதா திருவிழாவில் எல்லா அம்மன்களும் சப்பரத்தில் திருவீதி உலா வந்தனர். இதில் என்ன புதுமை? வழக்கமாக நடப்பதுதானே? என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது. கொஞ்சம் பொறுங்கள்!

இவை சாதாரணன அம்மன்கள் அல்ல. சாதி அம்மன்கள்! யாதவர் உச்சினி மாகாளி, யாதவர் தூத்துவாரி, விஸ்வகர்மா அம்மன், தேவர் உலகம்மன், பிள்ளைமார் முத்தாரம்மன், உலகம்மன் என்று எழுதி வைக்கப்பட்டிருந்தது!

இதன் பொருள் என்ன? அந்தந்த சாதி அம்மன்கள் அந்தந்த சாதி மக்களுக்குத்தான் அருள்பாலிப்பார் என்பதுதானே?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இந்த 21 ஆம் நூற்றாண்டில் இப்படியான காட்டு மிராண்டிகள் இருக்கிறார்கள் என்றால் முதலாம் இராச இராசன், முதலாம் இராசேந்திரன் காலத்தில் எந்தவிதமான காட்டு மிராண்டிகள் இருந்திருப்பார்கள்? 'சாதிகள் இல்லையடி பாப்பா' என்று பாடிய பாரதியார் காலத்தில் எத்தனை காட்டுமிராண்டிகள் இருந்திருப்பர்? தமிழ்ச் சித்தர்கள் காலத்தில் எத்தனை மூடர்கள் இருந்திருப்பார்கள்?

காந்தியாரும் சாதியை ஒழிப்பதற்குப் பதில் தாழ்ந்த சாதியினருக்கு ஒரு புதுப் பெயர் சூட்டினார். அரிசனர் என்பதுதான் அந்தப் பெயர். அரி என்றால் படைப்புக் கடவுளான திருமால்.

அரிசனர்கள் ஆலயங்களில் நுளைய எடுத்த முயற்சி ஓரளவு வெற்றி கண்டது.

ஆனால் சாதி இந்துக்களின் மனக்கதவுகளைத் திறக்கும் முயற்சி தோல்வி கண்டது.

சிருங்கேரி சங்கராச்சியாரை தரிசிக்க விஜய நகர மன்னன் வந்தான். அப்பொழுது குளிர் காய்ச்சலில் நடுங்கிக் கொண்டு இருந்தார் சங்கரர்.

மரப்பலகையில் மன்னன் அமர்ந்தான். தனக்காகப் போடப்பட்டு இருந்த மனைப் பலகையை எடுத்துப் பக்கத்தில் வைத்துக் கொண்டார். சங்கரர் சிறிது நேரத்தில் அந்தப் பலகை நடுங்க ஆரம்பித்ததாம்.

மன்னன் விழிப்புடன் அதனை நோக்கினான். விளக்கமும் கேட்டான். அதற்கு சங்கரர் என்ன சொன்னார்?

'எனக்கு வந்த குளிர் காய்ச்சலை உம்மைச் சந்திப்பதற்காக அந்தப் பலகைக்குச் சிறிது நேரம் மாற்றினேன். அதனால்தான் அந்தப் பலகை நடுங்குகிறது' என்றாராம்..

'பலகைக்கு அதனை மாற்றாமல் நிரந்தரமாக உங்களுக்கு ஏற்பட்ட அந்த உபாதையை முற்றிலுமாக விலக்கி வைக்க முடியாதா?' என்று அரசன் கேட்டான்.

'கூடாது. கர்மப் பலனை யாராக இருந்தாலும் அனுபவித்தே ஆக வேண்டும்' என்று பதில் சொன்னாராம் சங்கரர். (ஆதாரம்"விஜயபாரதம்" 8.10.2004)

கர்ம பலனை மாற்றக் கூடாது என்றால் சிறிது நேரமோ, அதிக நேரமோ அந்தப் பலனை பலகைக்கு மாற்றியது எப்படிச் சரியாகும்"?

இவர் செய்த கர்மத்திற்கு அந்தப் பலகை என்ன 'பாவம்" செய்தது? அது ஏன் காய்ச்சலை அனுபவிக்க வேண்டும்"?

கர்ம பலனை நிலைநிறுத்த வேண்டும் அந்த நம்பிக்கையை மக்களிட திணிக்க வேண்டும் என்கிற உள் நோக்கம்தான் இதற்குள் திணிக்கப்பட்டுள்ளது.

கீழ்சாதி - கர்ம பலனின் விளைவு!
தீண்டாமை - கர்மபலனின் தீண்டல்!


இவற்றை நிலைநாட்ட வேண்டும் என்பதுதான் இதற்குள் பதுங்கி இருக்கும் சூழ்ச்சி. அதிலும் சங்கர மடங்களை நிறுவிய ஆதி சங்கரர் பிராமணிய மேலாண்மையின் அடிநாதமான நால் வர்ணதர்மத்தை பூலோகத்தில் நிலை நாட்டவே கலியுகத்தில் அவதாரம் எடுத்தவராம்.

'சில நேரங்களில் மட்டும் கிருஷ்ண பகவான் ஞானோபதேசம் செய்தால் போதுமானதாக இருக்கிறது. மற்ற சமயங்களில் அவர் ஆயர்பாடியில் லீலை செய்தார், துவாரகையில் ராச்சியபாரம் செய்தார், பஞ்ச பாண்டவர்களுக்காகத் தூது போனார். கலிகாலத்தில் இப்படிச் செய்தால் போதாது. அதிக இருட்டு இருப்பதால் நிறைய விளக்கு வேண்டும். ஒரு வாழ்நாள் முழுவதும் ஞானோபதேசம் ஒன்றுக்காகவே அவதாரம் செய்ய வேண்டும்' என்று பரமேசுவரன் எண்ணினார்.

சகல வித்தைகளுக்கும் நாயகனான அந்த சதாசிவனே ஆதிசங்கரர் ஆக அவதரித்தாராம். (காஞ்சி சந்திரசேகர சரஸ்வதி சங்கராச்சியார் எழுதிய 'தெய்வத்தின் குரல்'). வருணதர்மத்துக்கு மெருகூட்டிய கலியுக அவதாரத்தை, கண்கண்ட தெய்வத்தை அடுத்த வாரம் அண்மைக் காட்சியில் பார்ப்போம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வர்ண தர்மத்தை மீள் நிலைநாட்டிய ஆதி சங்கரர்

சாட் சாத் அந்த சதாசிவனே ஆதிசங்கரராக அவதரித்தார் என்றும் சங்கரர் சிவ அவதாரமே என்பதற்கு யசுர் வேதத்திலேயே ஆதாரம் இருக்கிறது என்றும் அவர் 2,500 ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்தார் என்றும் காஞ்சி சங்கராச்சியார் சொல்கிறார்.

சிவன் அவதாரம் எடுத்தாரா? இது புதுக் கதையாக இருக்கிறதே? காத்தல் கடவுளான திருமால்தானே அவதாரம் எடுப்பதில் பெயர் போனவர்? அவதாரம் அவரது துறையாயிற்றே என்று நீங்கள் கேட்கக் கூடும்.

சிவன் அவதாரம் எடுத்ததற்கான காரணத்தை காஞ்சி சந்திரசேகர சரஸ்வதி சங்கராச்சியார் சொல்லியிருக்கிறார். அதை ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன்.

'சில நேரங்களில் மட்டும் கிருஷ்ண பகவான் ஞானோபதேசம் செய்தால் போதுமானதாக இருக்கிறது.. கலிகாலத்தில் இப்படிச் செய்தால் போதாது. பழைய யுகங்களில் அசுரர்கள் என்ற தனியான இனத்தவர்கள் இருந்து தேவர்களை வருத்துவார்கள். அவர்களைக் கொல்ல விட்ணு ஆயுதபாணிகாக வருவார்.

ஆனால் கலியுகத்தில் அசுரர்கள் தனியாக இல்லை. எல்லா மனிதர்களது மனதிலும் அசுரன் புகுந்து விட்டான். இதனால் யாரை அழிப்பது யாரை விட்டுவிடுவது? எனவே விட்ணு அவதாரம் இப்போது வேண்டாம் எனறு பரமேசுவரன் கருதி ஒரு பிராமணக் குடும்பத்தில் அவதரித்தார்.

அதாவது அதிக இருட்டு இருப்பதால் நிறைய விளக்கு வேண்டும். ஒரு வாழ்நாள் முழுவதும் ஞானோபதேசம் ஒன்றுக்காகவே அவதாரம் செய்ய வேண்டும் என்று பரமேசுவரன் எண்ணினார். உடனே ஆதி சங்கரராக அவதரித்தார்' என்று சங்கராச்சியார் சொல்கிறார்.

இப்வாறு சிவன் அவதாரம் எடுத்தார் என்பதை சைவ சித்தாந்திகள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். போயும் போயும் பிரமனாலும் விட்டுணுவாலும் அடியும் முடியும் காண முடியாத சிவபெருமான் இந்த மனிதர்கள் (நரகர்கள்) வாழும் உலகத்தில் பிறந்தார் என்பது அவருக்கு இழுக்கு என்று அவர்கள் நினைக்கிறார்கள். ( தெய்வத்தின் குரல்)

இப்போது புராணப் புளுகை விட்டுவிட்டு உண்மைக்கு வருவோம். அந்த உண்மை என்னவென்றால் சங்கரர் கேரளாவில் (அன்றைய சேர நாடு) காலடி என்னும் சிற்றூரில் கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் (கி.பி. 788-820) ஒரு நம்பூதிரி பிராமண குடும்பத்தில் பிறந்தவர்.

சிறு வயதிலேயே வேதங்களையும் உபநிடதங்களையும் படித்துத் தேறிய சங்கரர் வியாசர் அருளிய பிரம்மசூத்திரம், வேத ரிஷிகள் அருளிய பத்து உபநிடதங்கள், கண்ணன் அர்ச்சுனனுக்கு உபதேசித்த கீதை ஆகிய மூன்று நூல்களுக்கும் உரை இயற்றினார். இவைகள் 'பாஷ்யம்' எனப்படும். இந்நூலின் மூலக் கருத்துக்களையே மையமாகக் கொண்டு அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் சங்கரர் அநேக வேதாந்த நூல்களை இயற்றியுள்ளார். அவைகள் 'பிரகரண கிரந்தங்கள்' எனப்படும்.

இவை தவிர குழந்தைகளுக்கு இதே கருத்தும், பக்தியும் கொண்ட 'கணேச பஞ்ச ரத்னம்'போன்ற தோத்திரங்களையும் இயற்றியுள்ளார்.

சங்கரருக்கு வேத உபநிடதங்களுக்கு உரை எழுத வேண்டிய அவசியம் இருந்தது. வேத உபநிடதங்கள் அனைத்தையும் ஒருவர் படித்து பொருள் அறிந்து கொள்வது மிக அரிதான செயல். அதைவிட அரிது அவற்றை மற்றவர்களுக்கு எடுத்து விளக்குவது.

பாதராயணர் என்பவர் வேத உபநிட கருத்துக்களை நீக்கி அதனை வேதாந்த சூத்திரம் (பிரம்ம சூத்திரம்) ஆக வெளியிட்டார். ஆனால் அது சுருக்கமாக சூத்திர வடிவில் இருந்ததால் தெளிவுக்குப் பதில் குழப்பத்தையும் வேற்றுமையையும் விளைவித்தது.

வேத உபநிடங்களில் காணப்படும் தெளிவின்மையையும் முரண்பாட்டையும் நீக்கப் பலர் முயன்றனர். அவர்களில் முதன்மையானவர் சங்கரர். பிரம்ம சூத்திரத்துக்கு சங்கரர் எழுதிய பாடியமே வேதாந்த மதத்திற்கு பிரமாண நூலாகும்.

பிரமமும் உயிரும் (ஆன்மா அல்லது ஜீவன்) உலகமும் ஒன்றா அல்லது வேறு வேறா என்று நடந்த விவாதத்தில் பிரமமே மூலப் பொருள் என்றும் உயிர்களும் உலகமும் அந்த பிரமத்தின் தோற்றமே என்றும் நம் கண் முன்னே காணப்படும் உலகம் ஒரு மாயத் தோற்றம் (மாயாவாதம்) என்பதும் சங்கரரின் வாதமாகும். இதுவே அத்துவைதம் என்ற தத்துவமாகும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சங்கரர் தாம் எழுதிய நூல்கள் அனைத்திலுமே பிராமணர்கள் மிகவும் மேம்பட்டவர்கள் எனற முடிவான கருத்தை முன் வைக்கிறார்.

சங்கரர் கருத்துப்படியும் வேதம் மற்றும் ஸ்ம்ருதிகள் சமுதாயத்தை பிராமணன், சத்திரியன், வைசிகன், சூத்திரன் என நான்கு வர்ணங்களாக பிரிக்கிறது.

இவர்கள் முறையே பிரமனது தலை, தோள், தொடை, கால் இவற்றில் இருந்து படைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இதில் சூத்திரன் (தமிழர்கள் எல்லோருமே சூத்திரர்கள்) மற்ற மூவருக்கும் தொண்டு செய்வதே அவனது சுய தர்மமாகும்.

சூத்திரன் தத்துவஞானம் பெறுவதற்கு உரியவன் அல்லன்.

சூத்திரனுக்கு உபநயனம் கிடையாது.

சூத்திரன் சுடுகாட்டுக்குச் சமம். அவன் இருக்கும் இடத்தில் வேதம் ஓதக் கூடாது.

வேதத்தை சூத்திரன் ஒளிந்திருந்து கேட்டால் அவன் காதில் இரும்பைக் காய்ச்சி ஊத்த வேண்டும்.

சூத்திரனுக்கு ஞானத்தை உப தேசிக்கக் கூடாது. வேதம் படிப்பது, வேள்வி செய்வது, தானம் வாங்குவது பிராமணர்களுக்கு மட்டுமே உண்டு. (பிரம்மசூத்திரம் 13 -34).


மனு சொன்னது போல் உழைப்பைத் தவிர சூத்திரன் எதைச் செய்தாலும் அவனுக்குப் பயனில்லை.

மேற்கண்ட பிரம்ம சூத்திர விளக்கம் உழைக்கும் மக்களைப்பற்றி சங்கரர் எவ்வளவு இழிவான, மனித நேயமற்ற, பிற்போக்கான கருத்துக்களை கொண்டிருந்தார் என்பதை அறிய உதவுகிறது.

உழைக்காத மேல் வர்ணத்தவரான பிராமணர்கள் உழைக்கும் வர்ணத்தவரான சூத்திரர்களது உழைப்பை சுரண்டுவதற்காகவே இந்த வேத ஸ்மிருதிகள் எழுதப்பட்டுள்ளன.

'அடிமைகள், மேற்தட்டு மக்களுக்கு அளித்த இன்பத்தையும் பெருமகிழ்ச்சியையும் ஒளிவு மறைவு இல்லாமல் ரிக்வேதம் கூறுகிறது. கடவுள் அருளியதென்றும் மிகப் புனிதமானதென்றும் இந்துக்காளால் கருதம் வேத இலக்கியங்களில் இந்தப் பாடல்கள் உள்ளன. (எஸ்.ஏ. டாங்கே எழுதிய 'பண்டைக்கால இந்தியா' பக்கம் 170-171)

இந்த இலட்சணத்தில் 'வேதநெறி தழைத்தோங்க மிகு சைவத்துறை விளங்க' என்றும் 'நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க' என்றும் ஏன் சேக்கிழார் நால்வேதத்தை புகழ்ந்த பாடினார் என்பது விளங்கவில்லை. அவர் சூத்திரர் என்பதால் வேதத்தைப் படிக்க அவருக்கு வாய்ப்பே இருந்திருக்காதே!

டாக்டர் அப்பேத்கார் சாதி வேற்றுமைகளையும் தீண்டாமையையும் மனு நீதியாகக் கொண்டார் என்பதற்காக மனுஸ்மிருதியை நாடெங்கும் தீயிட்டுக் கொளுத்தினார்.

'ஆதி சங்கரர் வேதம் முழுமயையும் ஒப்புக் கொண்டார். வேதம் கூறும் சகல தெய்வங்களையும், வேதம் விதிக்கும் சகல கர்மாக்களையும் ஒப்புக்கொண்டார். அவற்றின் லஷி;யமாக வேத சிராஸன உபநிஷத்தின் முக்கிய தாத்பரியமான ஜீவனும் பிரமமும் ஒன்றே என்ற அத்துவைதத்தை ஸ்தாபித்தார். ஸ்ரீகிருஷ்ணனுக்குப் பிறகு வைதிக தர்மத்தை நிலைநாட்டிய ஸ்ரீ ஆதி சங்கரரும் ஜெகத்குரு என்ற விருதைப் பெற்றார். ' என்கிறார் காஞ்சி சந்திரசேகர சரஸ்வதி சங்கராச்சாரியார். (ஒரு தெய்வத்தின் குரல்)

ஆதி சங்கரர் அத்வைதம் பேசினாலும் நடைமுறை வாழ்க்கையில் சாதியையும் தீண்டாமையையும் கடைப்பிடித்தார் என்பதற்கு அவரின் வாழ்க்கையில் நடந்ததாகக் கூறப்படும் ஒரு நிகழ்ச்சி சான்றாக இருக்கிறது.

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • முள்ளிவாய்க்கால் நினைவை... வீடுகளில் இருந்து நினைவுகூருங்கள் – மாவை அழைப்பு இதுவரை அடைந்த அவலங்கள், துயரங்களை நெஞ்சிற் கொண்டு இலட்சிய தாகத்தை இதயத்தில் நிறைத்து முள்ளிவாய்க்கால் நினைவை வீடுகளில் இருந்து நினைவு கூறுமாறு இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அழைப்பு விடுத்துள்ளார். வாழும் இடங்களிலும் குடியிருக்கும் குடில்களிலுங் கூட நினைவு கூர்ந்து மாலை 6.00 மணிக்கு மணி ஒலியெழுப்பிச் சுடரேற்றி விளக்கேற்றி திடசங்கற்பத்துடன் முள்ளிவாய்க்கால் நினைவலைகளை பாரெல்லாம் பரப்புவோம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவர், இராணுவம் சூழ்ந்திருக்க முள்ளிவாய்க்கால் நினைவிக்கல் அகற்றப்பட்டமை தொடர்பாக இலங்கை அரசு பொறுப்புக் கூறியேயாக வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் தமிழ்பேசும் மக்கள் தேசத்தினதும் மக்களினதும் விடுதலைக்காக, தங்களைத் தாங்களே ஆளுவதற்காக இறைமை கொண்ட மக்கள் கடந்த எழுபதாண்டுகளுக்கும் மேலாகப் போராடி வருகின்றனர். இந்நிலையில் தங்கள் உயிர்களைப் பறிகொடுத்த மக்கள் தங்கள் உறவுகளை நினைவு கூரவும், அஞ்சலி செய்யவும், ஆத்மசாந்திக்கான ஈமக்கடன்களில் ஈடுபடவும் உள்ள உரிமை பண்பாடு நாகரிகம் இங்கையில் மறுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார். தமிழர் தேசமும் மக்களும் அழிக்கப்பட்ட வரலாறுகளையெல்லாம் தாங்கி நிற்கும் முள்ளிவாய்க்கால் நினைவையும் அழிக்க இன்றைய அரசு இராணுவ ஆளுகைக்கூடாகச் செயல்பட்டு நிற்பதாகவும் மாவை சேனாதிராஜா குற்றம் சாட்டினார். இத்தகைய வரலாற்றைப் பிரதிபலிக்கும் முள்ளிவாய்க்கால் அத்திபாரத்திலிருந்துதான் தமிழ்த் தேசமக்களின் எழுச்சி எதிர்கால சந்ததியின் விடுதலை வரலாற்றைப் படைக்கப் போகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2021/1215949
  • பயணத்தடை அமுலில் இருக்கும் போது... யாழில் பிறந்தநாள் கொண்டாட்டம் – 15 பேர் தனிமைப் படுத்தலில்! நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுலில் இருக்கும் போது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 15 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வடமராட்சி கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பிறந்தநாள் கொண்டாட்டம் இடம்பெறுவதாக கிடைத்த தகவலை அடுத்து நெல்லியடி பொலிஸாருடன் சுகாதார பிரிவினர் குறித்த பகுதிக்கு சென்றபோது கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் அங்கிருந்து தப்பி சென்றிருந்தனர். இந்நிலையில் பிறந்தநாள் கொண்டாடியவரின், தொலைபேசியில் காணப்பட்ட படங்களின் அடிப்படையில் அதில் உள்ள 15 பேரும் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். https://athavannews.com/2021/1215958
  • நிவாரணப் பொதிகள் வழங்க அரசாங்கம் தீர்மானம் ! கொரோனா தடுப்பிற்காக முடக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதிளை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பிரதேச செயலகங்களினால் தெரிவு செய்யப்பட்டுள்ள மக்களுக்கு 5,000 ரூபாய் பெறுமதியான 20 அத்தியாவசியப் பொருட்கள் உள்ளடங்கலாக இந்நிவாரண பொதி வழங்கப்படவுள்ளதுன. இந்நிவாரணப் பொதி நாளை மறுதினம் திங்கட்கிழமை முதல் மக்களுக்கு வழங்கப்படவுள்ள அதேவேளை அவற்றினை மூன்று தினங்களுக்குள் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையினை அனைத்து மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம சேவை அதிகாரிகள் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மூலம் முன்னெடுக்கப்படும் என்றும் வர்த்தக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. https://athavannews.com/2021/1215926
  • கந்தையா... அண்ணை,  உங்களுக்கு, தமிழ் அவ்வளவு தெரியாவிட்டால், நீங்கள், ஏன்... உந்த ஆராய்ச்சியில் இறங்கினீங்கள்.  பிற்குறிப்பு: சும்மா... பகிடிக்கு 😜, சனிக்கிழமை நமக்கும் பொழுது போகவேணுமெல்லோ... 🤣
  • இந்தியாவில், கொரோனா பரவ... மதம், அரசியல் சாரந்த கூட்டங்களே காரணம் – WHO இந்தியாவில் மதம் மற்றும் அரசியல் சார்ந்த கூட்டங்களினாலேயே கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்த ஆய்வுகளை மேற்கொண்ட குறித்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மாதிரிகளில் 0.1 சதவீத மாதிரிகள் மட்டுமே மரபணு உருமாற்ற பரிசோதனை செய்யப்பட்டு இருக்கிறது. மதம், அரசியல் சார்ந்த கூட்டங்களால் இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவியிருப்பது தெரியவந்துள்ளது.  இந்தியாவில் கடந்த ஏப்ரல் இறுதியில் பி.1.617.1 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் பரவுவது கண்டுப்பிடிக்கப்பட்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 21 சதவீதமானோர் இந்த வகை வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதேபோல பி.1.167.2 என்ற வைரஸும் பரவி வருகிறது. இந்த வைரஸால் 7 சதவீதமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தின் ஒட்டுமொத்த கொரோனா வைரஸ் பாதிப்பில் இந்தியாவில் மட்டுமே 95 சதவீத பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்த பிராந்தியத்தின் உயிரிழப்பில் இந்தியாவில் மட்டும் 93 சதவீதம் பதிவாகியுள்ளது. சர்வதேச கொரோனா வைரஸ் தொற்றில் இந்தியாவில் 50 சதவீத தொற்றும் சர்வதேச உயிரிழப்பில் இந்தியாவில் 30 சதவீத உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1215749
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.