Jump to content
 • Veeravanakkam
 • Veeravanakkam
 • Veeravanakkam

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
 • எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை.. இவை தமிழினத்தின் வரலற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்….!

main-qimg-62956af4e030994f8eb4ad5689b1f577

எல்லா(hello),

வணக்கம் மக்களே!

உங்கள் எல்லோரையும் மற்றொரு ஆய்வுக்கட்டுரையில் சந்திப்பதில் மகிழ்சியடைகிறேன். இன்று நாம் பார்க்கப்போவது தமிழீழ நிழலரசின்(de-facto state of Tamilleelam) கடற்படையிடமிருந்த கப்பல்களையும் அதில் பணியாற்றிய ஆழ்-கடலோடிகளைப் பற்றியுமே!

தமிழீழ நிழலரசிற்கான அனைத்து வழங்கல்களும் கடல்வழியாகவே நடந்தேறின. இவற்றை விடுதலைப் புலிகளின் கப்பல் பிரிவு செம்மையாக நிறைவேற்றியது. இக்கப்பல் பிரிவை உள்ளடக்கிய படையணி 'சிறப்புப் படையணி' என அழைக்கப்பட்டது. ஆனால் நான்காம் ஈழப்போரின் தொடக்க காலத்தில் இருந்து நடைபெற்றுவந்த ஒருசில காட்டிக்கொடுப்புகளால் (குமரன் பத்மநாதன் என்ற தமிழின துரோகியால்) இக்கப்பல் பிரிவின் நான்கைந்து கப்பல் தவிர ஏனைய அனைத்தும் பன்னாட்டு கடலில் வைத்து சிங்களக் கடற்படையால் ஒக்கமே(completely) அழிக்கப்பட்டது.

புலிகளின் இக்கடற்கலங்கள் பல்வேறு நாட்டுக் கொடிகளுடன் கடலில் வலம்வந்தன. அவற்றில் கூடுதலாக பனாமா, கொண்டுராசு(Honduras), இலிபியா என்பவை குறிப்பிடத்தக்கன. புலிகளின் இக்கப்பல்கள் தம்சேவைக் காலத்தில் 95 வீதமான நேரம் வணிகச் சரக்குகளை மட்டுமே உலகெங்கும் போக்குவரவித்திருந்தன. மீதி 5% நேரம் மட்டுமே தமிழீழத்திற்குத் தேவையான பொருட்களைக் காவி வந்தன.

சரி, இனி இந்தக் கப்பல் பிரிவின் செயல்பாட்டுகளைப் பற்றிக் கொஞ்சம் சுருக்கமாகப் பார்த்துவிடுவோம்.

இக்கப்பல்கள் நிழலரசின் மிதக்கும் வறைக்கூடங்களாக(Floating warehouse) பணியாற்றுவதற்காக ஈழத்தீவின் கடற்கரைக்கு அப்பால் பன்னாட்டு நீரில் நங்கூரமிட்டிருந்தன. அவற்றிலிருந்து தமிழீழத்திற்கு பொருட்களை இறக்கிக் கொணர கடற்புலிகளின் ஆழ்கடல் பிரிவானது வழங்கல் படகுகளைப் பயன்படுத்தியது. இவ்வாறு பொருட்களைக் கொணரும்போது சிங்களப் படை கண்டுவிட்டால் கடலில் பாரிய கடற்சமர் மூண்டுவிடும்.

இறக்கப்படும் பாரிய அளவிலான வழங்கட்பொருட்கள் போக்குவரவிற்காக(transportion) பிரிக்கப்பட்டு தமிழீழத்தில் உள்ள கடற்புலிகளின் தளங்களில் மீண்டும் ஒன்றாக்கப்படும். ஜெனிவா ஒப்பந்த காலத்திலிருந்து இது போன்ற ஆழ்கடல் வழங்கல் நடவடிக்கைகளிற்கு கடற்புலிகளின் கட்டளையாளர்களில்(Commander) ஒருவரான இள பேரரையன்(Lt.Col.) சலீம்/கலாத்தன் என்பவர் தலைமை தாங்கினார். இவர் 4 மார்ச், 2009 அன்று கடற்புலிகளின் தளமிருந்த சாலை பகுதியில், சிங்களப்படைகளின் பதுங்கித் தாக்குதலின்போது காயமடைந்து பண்டுவம் பெற்றுவரும் வேளையில் 10 மார்ச் 2009 அன்று வீரச்சாவினைத் தழுவிக்கொண்டார்.

main-qimg-27c15e23f2831edd8abc1c6abd0069c5

'இள பேரரையன்(லெப்.கேணல்) சலீம்/கலாத்தன் '

இனி புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட அல்லது அழிக்கப்பட்ட கப்பல்களின் பெயர்க் குறிப்புகளைக் காண்போம். இங்கு நான் எழுக்டும் செய்திகள் சிங்கள புலனாய்வாளர் ரொகான் குணரத்ன வின் சிங்களச் சார்பாக வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரை மற்றும் சிங்கள அரசின் humanitration analysis என்னும் அறிக்கை ஆகியவற்றில் இருந்து கிடைத்த செய்திகளையும் இணையத்தளங்களில் விரவிக்கிடந்த செய்திகளையும் தொகுத்து இங்கே வெளியிடுகிறேன்.

அதற்கு முன்னர், உங்களுக்கு ஒன்றினை அறிவுறுத்திக் கொள்ள விளைகிறேன். கீழே நான் கொஞ்ச கலைச்சொற்களைத் தருகிறேன். நீங்கள் அவற்றை படித்துவிட்டு மேற்செல்லுங்கள். ஏனேனில் அவை வரிக்கு வரி வரும் முக்கிய சொற்களாகும்.

கலைச்சொற்கள்:

 • இள பேரரையன் - லெப்.கேணல்
 • மேந்தலை - ship captain
 • மீகாமன் - helmsman
 • சேனைமீகாமன் - literary meaning 'military helmsman'
 • தாங்கி- Tanker
 • பைவலைநௌ- Trawler

சரி, வாருங்கள் இனி கட்டுரைக்குள் தாவுவோம்!


புலிகளிடம் இருந்த கப்பல்களின் நிலைமை:

 • பிடிபட்டவை- 5
 • பிடிக்க முயன்ற போது தன்னழிப்பானவை - 5 [4 கப்பல்கள்(2 MT & 2 MV) + ஒரு பைவலைநௌ(trawler)]
 • அழிக்கப்பட்டவை - 10 (ஒரு பெரிய வேகப்படகு, ஒரு நடுத்தர படையேற்பாட்டுக் கலம்(medium sized logistics vessel), மற்றும் 8 கப்பல்கள்)
 • எஞ்சியவை - 1+ (யாருக்குமே தெரியாது). ஆனால் சிங்கள அரசு புலிகளிடம் 8 கப்பல்கள் எஞ்சியுள்ளதாக போர் முடிந்தபின் அறிவித்திருந்தது.

 1. எம்.வி.சோழன்:

1984 ஆம் ஆண்டு புலிகளின் முதலாவது கப்பல் வாங்கப்பட்டது. அதன் பெயர் எம்.வி.சோழன் என்பதாகும். இதன் பழைய பெயர் சுன்-இஃகிங் என்பதாகும். இது 1985 இல் இருந்து தனது பணியைத் தொடங்கியது. இதில் எந்தக் காலத்திலும் ஆய்தங்களோ, தடை செய்யப்பட்ட பொருட்களோ ஏற்றப்பட்டது கிடையாது. இதற்கு பின்னாளில் என்ன நடந்தது என்பது பற்றிய செய்திகள் இல்லை.

main-qimg-9feee73d724506909aa62632aaeef18b

main-qimg-f9a49cc3d2d66a68b9a24844a73c6a3e

இது பற்றி மேலும் வாசிக்க: https://www.facebook.com/OruTamilMalumi/photos/2415087945231692

main-qimg-2cfbed2329ad474650e7f793f5a5bb62

'தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு முதற்கப்பலை வாங்கித் தந்த பிறைசூடி ஐயா / மேந்தலை டேவிட் '


அடுத்து, பிடிபட்ட கப்பல்களைப் பற்றிப் பார்ப்போம்:

1. எம்.வி.கடல்புறா

 • பிடிபட்ட திகதி: 3 ஒக்டோபர் 1987
 • பிடிபட்ட பரப்பு: இந்திய மாகடல்
 • பிடித்தோர்: சிங்களக் கடற்படை
 • வீரச்சாவடைந்த ஆழ்கடலோடிகள்: 12 பேர்

புலிகளின் புத்தம் புதிய கப்பலான இது இந்திய-இலங்கை-புலிகள் அமைதி ஒப்பந்த காலத்தின் போது சிங்களப் படைகளின் டோரா P467 என்ற எண்கொண்ட கலத்தால் பிடிக்கப்பட்டது. இதில் செலவாகிய குமரப்பா-புலேந்திரன் உட்பட்ட பதினைந்து புலிகள் இந்தியப் படைகளால் தடுத்து வைக்கப்பட்டனர். பின்னர் இந்திய-இலங்கை படைகள் அவர்களை வைத்து நயவஞ்சத்திற்கு முனைய தமிழீழ மரபிற்கேற்ப குப்பி கடித்து பன்னிருவர் வீரச்சாவினைத் தழுவிக்கொண்டனர். (பலாலியில் இந்திய நயவஞ்சகத்தால் குப்பி கடித்து உயிரை விட்ட போதும் சயனைட் தன்னைக்கொல்ல முதல் குப்பிகடித்த அதேவாயால் இரண்டு சிங்கள வீரர்களையும் கடித்து அவர்களின் மீதும் நஞ்சை பாய்ச்சி கொன்றவர் புலேந்தி அம்மான். பின் இறந்த அவரின் உடம்பில் பன்னிரு கத்திக்குத்து வீழ்ந்தது. குத்தியவர் இந்தியரா இல்லை சிங்களவரா என்று தெரியவில்லை.)

 • கலவர்:

main-qimg-06c96c61e4bb8c74ec97f5b2d5f4fb9c

2. எம்.வி.சன் பேட்டு(Sun Bird)

 • வேறுபெயர்கள்: இலியானா(Iliyaana), விரான்சிசு(Francis), ஐகுலைட்டு(Ichulite)
 • பிடிபட்ட திகதி: 13 திசம்பர் 1990
 • பிடிபட்ட பரப்பு: பினாங்கு மாநிலம்
 • பிடித்தோர்: மலேசிய சுங்கப்பிரிவு

இக்கப்பலானது மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் வைத்து மலேசிய சுங்கப் பிரிவினரால் தடுப்பிற்கு உள்ளாக்கப்பட்டது. அக்கப்பலைச் சோதித்த மலேசிய சிறப்புக் கிளையினர்(Malasian Special Branch) அதில்,

 • 2600 x வேட்டிற்கான வெற்றுக் கணைகள்(rounds of blank ammunition)
 • 03 x பெரிய வேகப் படகுகள்
 • 21 x இயோன்சன் & இயமஃகா வெளியிணைப்புப் பொறிகள்(OBM)
 • 324 x பெறுகித்துரவுகள்-தள நிலையங்கள் (transreceivers- base station)
 • 440 x நடைபேசி(walkie-talky) (கைக்கொள் கணம்(hand held set))
 • 6000 x மின்கலங்கள்(batteries)
 • நீர்மூழ்கிகளுக்கான உதிரிப் பாகங்கள் & மற்றும் பல ஆய்தங்கள்

இருந்ததாக தெரிவித்திருந்தனர். இது மலேசியாவில் கைப்பற்றப்பட்டுவிட்டதால், அக்காலத்தில் தொடங்கப்பட்டிருந்த கடற்புலிகளின் நீர்மூழ்கி கட்டுமானம் தொய்வடைந்தது.

3. எம்.வி. செக்கெசிறி(Checesri)

 • வேறுபெயர்: சோழகேரி(Cholakeri)
 • பிடிபட்ட திகதி: 28 நவம்பர் 1992
 • பிடிபட்ட பரப்பு: தாய் கரையில் இருந்து வெகு தொலைவில்
 • பிடித்தோர்: மலேசிய சுங்கப்பிரிவு

4. எம்.வி. வி லிங் (We ling)

 • பிடிக்கப்பட்ட திகதி: டிசம்பெர் 2009
 • பிடிபட்ட பரப்பு: மலேசியாவில் பிடிபடட்தாக கூறப்படுகிறது
 • பிடித்தோர்: சிறீலங்காக் கடற்படை

இக்கப்பலை 'துரோகி கே.பி.(K.P.) என்று அழைக்கப்படும் குமரன் பத்மனாதனிடம் இருந்து கைப்பற்றிய சிங்கள அரசாங்கமானது அதனை ஏ522 என்னும் பெயரில் தனது கடற்படையிடம் பயன்படுத்த அனுமதி வழங்கியது. 90 மீட்டர் நீளமும் 33 மீட்டர் உயரமும் கொண்ட இந்தக் கப்பலில் 5000 மெற்றிக் தொன் எடை யுள்ள பொருட்கள் கொண்டுசெல்ல முடியும். கொஞ்சக் காலம் அதனை இலங்கை கடற்படையினர் பயன்படுத்தி வந்தனர். ஆனால், அது பழுதடையவே அதனை பயன்படுத்துவது கைவிடப்பட்டது. பின்னாளில் அது பயனுறுத்த முடியா அளவிற்கு பழுதடைய மார்ச் 26, 2018 அன்று கடலினுள் தாட்டப்பட்டது (தண்ணீர் நிரப்பி மூழ்கடிக்கப்பட்டது).

இக்கலம் பற்றி மேலும் அறிய: https://www.wrecksite.eu/wreck.aspx?282324

இது தொடற்பான மேலும் பல படங்கள் பார்க்க: Navy sinks dilapidated LTTE ship

 • கலப் படம்:

main-qimg-214855a8b75f62257f9a96b85ae9bcc9

5. எம்.வி. பிறின்சசு கிறிசுரினா (Princess Christina)

 • பிடிபட்ட திகதி: டிசம்பெர் 2009. கொழும்புவிற்கு டிசம்பர் மாதத்தின் மூன்றாம் வாரம் கொண்டுவரப்பட்டது.
 • பிடிபட்ட பரப்பு: பன்னாட்டுக் கடலில் வைத்து
 • பிடித்தோர்: சிறீலங்காக் கடற்படை

இது சிங்கப்பூர் பதிவு கொண்ட கடற்கலமாகும்.

main-qimg-318ef1eb58a2a6147f9811455fc73082


அடுத்து, பிடிக்கமுயன்ற ஆனால் தன்னழிப்பான கப்பல்களைப் பற்றிக் காண்போம்.

1. எம்.வி. தொங்னொவா(Tongnova)

 • பிடிக்கமுயன்ற திகதி: 1 நவம்பர் 1991
 • பிடிக்கமுயன்ற பரப்பு: வங்காள விரிகுடா
 • பிடிக்க முற்பட்டோர்: இந்தியக் கடற்படை
 • வீரச்சாவடைந்த கடலோடிகள்: 1(மீகாமன் & கலத்தின் சொந்தக்காரர்)

main-qimg-82254a61932757ad7f0c887a3feabdbc

இதுவொரு பைவலைநௌ(Trawler) ஆகும். இந்தியக் கடற்படையால் பிடிக்க முற்பட்ட போது அதிலிருந்த முக்கிய பொருட்களையும் அதிலிருந்த வீரர்களையும் ஏனைய கலங்களிற்கு மாற்றி விட்டு அக்கலத்தின் மீகாமனும் அக்கலத்தின் சொந்தக்காரருமான வல்வெட்டித்துறையினைச் சேர்ந்த ஒருவர் அக்கலத்தினோடு சேர்த்து தன்னையும் தீமூட்டி அழித்துக்கொண்டார். இதில் குறிப்பிடத்தக்க விடையம் என்னவென்றால் அந்த மீகாமன், சேனைமீகாமன் அல்லர்; பொதுமக மீகாமனே! அவரின் தீரத்தைப் பாராட்டி விடுதலைப் புலிகள் அவரிற்கு மேயர் தரம் அளித்து பெருமிதத்திருந்தனர்.

2.எம்.வி. அகத் (Yahath/Ahat)

 • பிடிக்கமுயன்ற திகதி: 19 சனவரி 93
 • பிடிக்கமுயன்ற பரப்பு: வங்காள விரிகுடா
 • பிடிக்க முற்பட்டோர்: இந்தியக் கடற்படை
 • வீரச்சாவடைந்த ஆழ்கடலோடிகள்: 10 பேர்

இக்கப்பலானது இந்தியக் கடற்படையால் பிடிக்க முற்பட்ட போது அதிலிருந்த தளவாய்(Col.) கிட்டு உட்பட்ட பத்து புலிகள் கைக்குண்டை வெடிக்க வைத்து தம்மையும் கப்பலையும் அழித்து வீரச்சாவினைத் தழுவிக்கொண்டனர்.

 • கலவர்:

main-qimg-e01e3258715ae378e14e1b6a08660fdd

main-qimg-a76f64af37cda86ec3e0e04c4ab3a157

'எம்.வி. அகத் கப்பலின் மேந்தலை(Cpt.) வைரமுத்து ஜெயச்சந்திரா '

சம்பவத்தின் போது கப்பலின் மேந்தலையை கடலில் குதிக்குமாறு போராளிகள் கேட்டுக்கொண்டதால் அவர் கடலில் குதித்த நிலையில் இந்தியக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருக்கின்றார். பின்னர் இந்திய சிறைச்சாலைகளில் சிறைவாசம் அனுபவித்த அவர் தமிழீழம் திரும்பி வல்வெட்டித்துறையில் வசித்து வந்த நிலையிலே 2021-2-28 அன்று காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மூத்த தளபதி பயணித்த கப்பல் கப்டன் காலமானார்!

main-qimg-d4af3e1b98ddf8d2d1c73d86fea9cac2

'படிமப்புரவு: கிட்டு என்னும் சதாசிவம் கிருஸ்ணுகுமார்'

3),4) & 5) - கீழே தனியாகக் கொடுத்துள்ளேன்.


இனி அழிக்கப்பட்ட கடற்கலங்களைப் பற்றிக் காண்போம்.

1. எம்.வி. கொரிசோன் (Horizon)

 • வேறுபெயர்: கொமெக்சு இயூ-3 (Comex Joux-3)
 • அழிக்கப்பட்ட திகதி: 13 பெப்ரவரி 1996
 • அழிக்கப்பட்ட பரப்பு: முல்லைதீவுக்கு உயர சரியாக 26 கடல்மைலில் வைத்து
 • அழித்தோர்: இந்திய - இலங்கைக் கடற்படைகளுடனான முற்றுகைச் சமரின் போது சிங்கள வான்படையால் மூழ்கடிக்கப்பட்டது.
 • வீரச்சாவடைந்த ஆழ்கடலோடிகள்: 2 கடற்கரும்புலிகள் + 1 கடற்புலி
 • கலவர்:

main-qimg-8041b82d38e2bafb6a882cfa5215e1e6

இவர்களுடன் கப்பலில் இருந்த சிற்றரையன்(மேஜர்) இலங்கேஸ்வரன் உட்பட மேலும் இரண்டு கடற்புலிகள் அற்றைய நாளில் வீரச்சாவடைந்தனர்.

main-qimg-6b1d35aa8dd798cdf29ab037a09dd55b

இத்தாக்குதல் பற்றி மேலும் வாசிக்க: இலங்கை இந்தியத்தின் அத்துமீறலும் கடற்புலிகளின் சதுரியமும்…!! - Eela Malar

2. எம்.வி. இஃவெராட்செசுகொம் (Fratzescom)

 • வேறுபெயர்: இசுரில்லசு இலிமாசல் (Stillus Limmasul)
 • அழிக்கப்பட்ட திகதி: 2 நவம்பர் 1997
 • அழிக்கப்பட்ட பரப்பு: முல்லைத்தீவிற்கு வெளியே
 • அழித்தோர்: சிங்கள வான்படை& கடற்படை
 • வீரச்சாவடைந்த ஆழ்கடலோடிகள்: அறியில்லை

கணைகள்(ammunition) & ஆய்த தளவாடங்களை மாற்றிக்கொண்டிருக்கும் போது அழிக்கப்பட்டது.

3. எம்.வி. மாரியம்மா(Mariama)

 • அழிக்கப்பட்ட திகதி: 11 மார்ச் 1998
 • அழிக்கப்பட்ட பரப்பு: அந்தமான் தீவுகளிற்கு வெளியே
 • அழித்தோர்: இந்தியக் கடற்படை
 • வீரச்சாவடைந்த ஆழ்கடலோடிகள்: அறியில்லை

4.எம்.ரி.கொய்மர்(Koimar)

 • வேறுபெயர்: கொய்(Koie)
 • அழிக்கப்பட்ட திகதி: 14 மார்ச் 2003
 • அழிக்கப்பட்ட பரப்பு: சிறீலங்காவின் கிழக்கு கரையோரத்திலிருந்து 240 கடல்மைல்களுக்கு அப்பால் பன்னாட்டு நீரில் வைத்து
 • அழித்தோர்: சிங்களக் கடற்படை
 • மேந்தலை: கடற்கரும்புலி இள பேரரையன் சிலம்பரசன் எ ரஞ்சன்
 • வீரச்சாவடைந்த ஆழ்கடலோடிகள்: 10 பேர்

இது ஜெனிவா ஒப்பந்த காலத்தில் நடந்தேறிய விதிமீறல். ஒரு நாட்டின் கடல் எல்லை 12 மைல்கள். கூடுதலாக அது 200 கடல் மைல்கள் வரை தன்னலப்படுத்திக் கொள்ளலாம். அதற்கு மேல் தொடக்கூடாது. ஆனால் சிங்களக் கடற்படையானது தமிழ் மக்களிற்கான டீசலை ஏற்றி வந்த புலிகளின் எண்ணைத் தாங்கியினை(Oil tanker) இந்த பன்னாட்டு கடலில் வைத்து மூழ்கடித்தது. கப்பல் மூழ்கிய இடத்தை பின்னாளில் ஆய்வு செய்த பன்னாட்டு போர்நிறுத்த கண்காணிகள் அது வெறும் வணிகக் கப்பல் என்றும் அதற்குள் ஆய்தங்கள் ஏதும் இல்லையெனவும் அறிக்கையிட்டன.

 • கலப் படம்:

main-qimg-329fa190a8a14318965bbc8a720f4dce

main-qimg-93a545c0cc122d30bba6f3f7abbd0183

main-qimg-35c02df987e3f70c4f18ed0525b6c1ea

'கப்பலின் உட்புறம்'

 • கலவர்:

main-qimg-01ac18e92ea24f1e2f2dc6abf10a2173

5.எம்.ரி.சொசின்(Shoshin)

 • வேறுபெயர்: செய்சின்(seysin)
 • அழிக்கப்பட்ட திகதி: 14 ஜூன் 2003
 • அழிக்கப்பட்ட பரப்பு: திருகோணமலைக் கரையோரத்திலிருந்து 266 கடல்மைல்களுக்கு அப்பால் பன்னாட்டு நீரில் வைத்து
 • அழித்தோர்: சிங்களக் கடற்படை
 • மேந்தலை: சிற்றரையன்(மேஜர்) நிர்மலன்
 • வீரச்சாவடைந்த ஆழ்கடலோடிகள்: 11+1(நாட்டுப்பற்றாளர்) என மொத்தம் 12 பேர்

இதுவும் ஜெனிவா ஒப்பந்த காலத்தில் நடந்தேறிய விதிமீறல் செயல்.

இக்கடற் சம்பவம் பற்றிய குறிப்புகள்: கடற் காவியங்கள் - irruppu

 • கலப் படம்:

main-qimg-236d1fc6f02e8982f81edb40e4cd157a

main-qimg-cf2ea20fc10d417a1690da8f80eabb0e

 • கலவர்:

main-qimg-52bdc52a707cc49b15c26b3e320bd826

main-qimg-2796599a906202db519acd5d4c36fb66

'இவ்விளக்கப்படமானது 2006- 2007 வரை கடற்கலங்கள் எங்கெல்லாம் மூழ்கடிக்கப்பட்ட என்பதைக் கட்டுகிறது | படிமப்புரவு:Google'

6. மருது

 • அழிக்கப்பட்ட திகதி: 17 செப்ரெம்பெர் 2006
 • அழிக்கப்பட்ட பரப்பு: கல்முனைக்கு வெளியே 120 கடல் மைல் தொலைவில் வைத்து
 • அழித்தோர்: சிறீலங்காக் கடற்படை
 • மேந்தலை: இள பேரரையன் வெற்றியரசன்/ ஸ்ரிஃவன்
 • வீரச்சாவடைந்த ஆழ்கடலோடிகள்: 8 பேர்
 • கலவர்:

main-qimg-cb9b7b2800067d269296c34ec7bb1805

இது இந்தோனேசியாவில் கட்டப்பட்ட ஒரு பெரிய வேகப் படகாகும். இக்கடற் சம்பவம் பற்றிய குறிப்புகள்: கடற்புலி லெப். கேணல் ஸ்ரிபன்

 • கலப் படம்:

main-qimg-62a466c84e1337961551e84112b2a149

 • மருதுவின் இறுதித் தருணங்கள்

 

7.எம்.ரி.கியோசி(Kioshi)

 • வேறுபெயர்: எம்.ரி.கியோய்(kiyoe)
 • அழிக்கப்பட்ட திகதி: 28 பெப்ரவரி 2007
 • அழிக்கப்பட்ட பரப்பு: தெய்வேந்திரமுனையிலிருந்து 365 கடல் மைல் தொலைவில் பன்னாட்டு நீரில் வைத்து
 • அழிக்க முற்பட்டோர்: சிறீலங்காக் கடற்படை
 • அழிக்கப்பட்டது: விடுதலைப்புலிகளின் மரபிற்கு ஏற்றவகையில் சரணாகதி அடையாமல் கப்பலுடன் தம்மைத் தாமே தீயிட்டு, கப்பலையும் மூழ்கடித்து வீரச்சாவைத் தழுவினர்.
 • மேந்தலை: இள பேரரையன் இளமுருகன்
 • வீரச்சாவடைந்த ஆழ்கடலோடிகள்: 15
 • கலவர்:

main-qimg-05ba3cf9d760e0e46b354f2174938898

 • கலப் படம்:

main-qimg-956d90b6df07204097c5fd7b45d94f02

 • கியோசியின் இறுதி தருணங்கள்

main-qimg-24f4a184cb5a869f49a0bb5aad0e8580

 

8. எம்.ரி. செயோய்(Seyo)

 • வேறுபெயர்: எம்.ரி. இயோசி(Eyoshi)
 • அழிக்கப்பட்ட திகதி: 18 மார்ச் 2007
 • அழிக்கப்பட்ட பரப்பு: அறுகம்குடாவிற்கு தென்கிழக்கில் 825 கடல் மைல் தொலைவில் பன்னாட்டு நீரில் வைத்து
 • அழிக்க முற்பட்டோர்: சிறீலங்காக் கடற்படை
 • அழிக்கப்பட்டது: சமையல் எரிவாயு கலன் கொண்டு கப்பலை தீயிட்டு தாமும் அழிந்து கப்பலையும் அழித்தனர்
 • மேந்தலை: இள பேரரையன் இசைக்கோன்
 • வீரச்சாவடைந்த ஆழ்கடலோடிகள்: 9
 • கலவர்:

main-qimg-9cc993e197473af47dd62aaf7df969b4

இத்தாக்குதல் பற்றி மேலும் வாசிக்க: எம்.ரி.செயோய் கப்பலில் உலகெங்கும் கடலோடி ஈழ நிலமொன்றே நினைவாகி விழிமூடிய மாவீரர்கள்

 • கலப் படம்: இது ஒரு புத்தாம் புதிய தாங்கி(Tanker) ஆகும்.

main-qimg-44147c625f0aa93c7c0eeb7b2cb5074d

 • இயோசியின் இறுதித் தருணங்கள்

main-qimg-b8267d264f70a158df5f019731cb2907

9. எம்.வி.செய்சின்(Seishin)

 • வேறுபெயர்: எம்.வி.மன்(Mann)
 • அழிக்கப்பட்ட திகதி: 10 செப்டெம்பர் 2007
 • அழிக்கப்பட்ட பரப்பு: தெய்வேந்திரமுனைக்கு தென்கிழக்கே 1400 கடல் மைல் தொலைவில் பன்னாட்டு நீரில் வைத்து
 • அழித்தோர்: சிறீலங்காக் கடற்படை
 • மேந்தலை: இள பேரரையன் சோபிதன்
 • வீரச்சாவடைந்த ஆழ்கடலோடிகள்: -
 • கலப் படம்:

main-qimg-e9c79a32d0a425e42747fb78633415fe

 • செய்சினின் இறுதித் தருணங்கள்

main-qimg-821f7dc01e733da0c4eb309ffa00bf05

main-qimg-a8e644ab3f822064f104e40a6067fb5e

10. எம்.ரி.மன்யோசி(Manyoshi)

 • அழிக்கப்பட்ட திகதி: 10 செப்டெம்பர் 2007
 • அழிக்கப்பட்ட பரப்பு: தெய்வேந்திரமுனைக்கு தென்கிழக்கே 1400 கடல் மைல் தொலைவில் பன்னாட்டு நீரில் வைத்து
 • அழித்தோர்: சிறீலங்காக் கடற்படை
 • மேந்தலை: இள பேரரையன் செம்பா எ செண்பகச் செல்வன்
 • வீரச்சாவடைந்த ஆழ்கடலோடிகள்: -

இது ஒரு எண்ணெய் தாங்கி(Oil Tanker) ஆகும்

 • கலப் படம் & இறுதித் தருணங்கள்:

main-qimg-e76f58efda24084d356e247001f4ceb9

main-qimg-5034430c15b65421d341ec4cc8698d85

11.எம்.ரி.கொசியா(Koshia)

 • வேறுபெயர்கள்: எம்.வி.கொய்சின்(Goishin) அ எம்.வி.இயொய்சின்(Joishin) அ எம்.வி.இயெய்சின்(Jeishin)
 • அழிக்கப்பட்ட திகதி: 11 செப்டெம்பர் 2007
 • அழிக்கப்பட்ட பரப்பு: தெய்வேந்திரமுனைக்கு தென்கிழக்கே 1400 கடல் மைல் தொலைவில் பன்னாட்டு நீரில் வைத்து.
 • அழித்தோர்: சிறீலங்காக் கடற்படை
 • மேந்தலை: இள பேரரையன் எழில்வேந்தன்
 • வீரச்சாவடைந்த ஆழ்கடலோடிகள்: 7+
 • கலப் படம்:

main-qimg-e3188eb9d7b0ea2fe8c048487518635e

 • செய்சின், மன்யோசி, கொசியா ஆகியவற்றின் இறுதித் தருணங்கள்:

 

மேற்கண்ட மூன்று கப்பல்களிலுமாகச் சேர்த்து ஒரு கள மருத்துவர், ஒரு கடற்கரும்புலி உட்பட 21 கடற்புலிகளும் ஒரு நாட்டுப்பற்றாளருமாக மொத்தம் 22 ஆழ்கடலோடிகள் கப்பலினுள் இருந்த ஆய்தங்கள் மூலம் இறுதிவரை சிங்களத்தை எதிர்த்துக் களமாடி வீரச்சாவினைத் தழுவிக்கொண்டனர்.

வீரச்சாவடைந்த ஆழ்கடலோடிகள்:

main-qimg-d5a464b0637570e457faef43649da793

இத்தாக்குதல் பற்றி மேலும் வாசிக்க: உலகெங்கும் கடலோடி ஈழ நிலமொன்றே நினைவாகி விழிமூடிய மாவீரர்கள் - தேசக்காற்று

12. எம்.வி.மற்சுசிமா(Matsushima)

 • நீளம்: 70மீ
 • இடப்பெயர்ச்சி - 3000 தொன்
 • அழிக்கப்பட்ட திகதி: 7 ஒக்டோபர் 2007
 • அழிக்கப்பட்ட பரப்பு: தெய்வேந்திரமுனைக்கு கிழக்கே பன்னாட்டு 1620கடல் மைல் தொலைவில் பன்னாட்டு நீரில் வைத்து.
 • அழிக்க முற்பட்டோர்: சிறீலங்காக் கடற்படை
 • அழிக்கப்பட்டது: விடுதலைப்புலிகளின் மரபிற்கு ஏற்றவகையில் சரணாகதி அடையாமல் கப்பலுடன் தம்மைத் தாமே தீயிட்டு, கப்பலையும் மூழ்கடித்து வீரச்சாவைத் தழுவினர்.
 • மேந்தலை: இள பேரரையன்(லெப் கேணல்) கபிலன்
 • வீரச்சாவடைந்த கடலோடிகள்: 4+
 • கலவர்:

-கடற்புலி கொச்சரையன்(கப்டன்) முரசறைவாணன்

main-qimg-b55819b01722112242d52b978207c14e

இதில் தான் விடுதலைப் புலிகளிற்குச் சொந்தமான இலகு வானூர்திகள் கொண்டுவரப்பட்டிருந்ததாக சிறீலங்காக் கடற்படை முன்னாள் சேர்ப்பன்(Admiral) 'சயந்த கொலம்பக' தெரிவித்துள்ளார். அந்த வானூர்திகளின் எண்ணிக்கை மொத்தம் மூன்று என்று சிங்கள புலனாய்வாளர் 'ரொகான் குணரத்ன' தனது ஆய்வுக் கட்டுரையில் பதிவிட்டுள்ளார். மேலும் இதற்குள்,

 • ஒரு நிலக் கலத்தூரம் -Land cruiser
 • ஒரு சன்னத்தகை நிலக் கலத்தூரம் - Bulletproof Land cruiser
 • ஏவரிகள் - Torpedos
 • ஏவரி செலுத்திகள் - Torpedo launcher
 • பாய்விறக்க ஏந்தனங்கள் - Diving equipments
 • நீர்முழுகி பிலிறுந்தக் கரணங்கள் - Diver propulsion devices
 • கணைகள் - ammmunitions
 • எறிகணைகள் - shells
 • படகுப் பொறிகள் - boat engine

ஆகியன இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆதாரம்: Global Responses to Maritime Violence: Cooperation and Collective Action. pg-220

 • கலப் படம்:

main-qimg-87d3b7261de2014900b7d9cd2e345be0

 • மற்சுசுமிசாவின் இறுதி தருணங்கள்:

 

13.பெயர் அறியில்லை

 • அழிக்கப்பட்ட திகதி: 20 திசம்பர் 2008
 • அழிக்கப்பட்ட பரப்பு: முல்லைத்தீவிற்கு வடகிழக்கே 70 கடல்மைலில் தமிழீழ கடற்பரப்பில் வைத்து.
 • அழித்தோர்: சிறீலங்காக் கடற்படை
 • மேந்தலை: அறியில்லை
 • வீரச்சாவடைந்த ஆழ்கடலோடிகள்: அறியில்லை

இது ஒரு நடுத்தர படையேற்பாட்டுக்(logistics) கடற்கலமாகும். இதில் என்ன கொணரப்பட்டது என்பது பற்றிய செய்திகள் இல்லை.

 • இக்கலத்தின் இறுதித் தருணங்கள்:

main-qimg-2dd5767ed36f24eb78c15c33467cb59a

 


இனி எஞ்சிய கப்பல்களைப் பற்றிப் பார்ப்போம்:

 1. எம்.வி.ஈசுவரி(Easwari) (போர் முடியும் வரை) → எம்.வி. ஓசீன் லேடி(Ocean Lady) (போர் முடிந்த பின்) . இது பிறகு போரால் பாதிக்கப்பட்ட மக்களை வெளிநாடுகளிற்கு ஏற்றிச் சென்றது.
 • மேந்தலை: கமல் எ கமல்ராஜ் கந்தசாமி

main-qimg-f07f8a9500f1c8a403a21feba84965ec

main-qimg-7ab307bbaf6eea661b9b84ea1983fb58

2. யு.வி. புளூ இஃகவாக்கு(Blue Hawak)

 • வேறுபெயர்: யு.வி. இராகுய்(Rakuy)

இது 96 இருக்கைகள் கொண்ட ஓர் வலசை(ferry) ஆகும். ஆனால் சரக்குகள் போக்குவரத்திற்கும் பயன்படுத்தப்பட்டது.

3. எம்.வி சோவமாறு (Showamaru)

4. எம்.வி. சின்வா(Shinwa)

5. எம்.வி. கோள்டன் பேட்டு (Golden Bird)

 • வேறுபெயர்கள்: பாரிசு(Baris), செயின்ற் அந்தோணி(St.Anthony), சோஃவியா(Sophia), பர்ஃகான்(Barhan), சுவனே(Swene)

இதை விட இன்னும் பல கப்பல்கள் புலிகளிடம் இருந்தன. அவை யாவும் எங்குபோனது யாருக்கும் தெரியாது. ஆனால் போர் முடிந்த பின் வெளிநாடுகளில் புலிகளின் 8 கப்பல்கள் இருப்பதாகவும் அவற்றை சிறீலங்காவிற்குக் கொண்ட வர வேண்டும் என்றும் சிங்கள அரசு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


 1. எம்.வி. சன் சீ(Sun sea)
 • வேறுபெயர்: இஃகரின் பிஞ் 19 (Harin pinch 19)

இது 492 அகதிகளை எற்றிக் கொண்டு தனது கடைசி உருவோட்டமாக(sail) கனடா சென்றது. அங்கு கனேடிய அரசால் இது தடுத்து வைக்கப்பட்டுள்ளது. இதன் பாந்தர்களில்(passengers) பெரும்பாலானோர் புலி உறுப்பினர்கள் என்றும் இக்கப்பல் புலிகளிற்குச் சொந்தமானதாகவும் சிங்கள அரசால் (சிங்கள புலனாய்வாளர் குணரத்னே) கூறப்பட்டாலும் அதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லையென தமிழர் தரப்பால் நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது.

main-qimg-864bb20f48ba6264ad9424055406fc69


உசாத்துணை:

படிமப்புரவு

நிகழ்படம்

தொகுப்பு & வெளியீடு

நன்னிச் சோழன்

 • Like 4
 • Sad 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு பலத்துடனும், திறமையுடனும் இருந்தவர்களின்...
படங்களைப்  பார்க்க... சோகத்துடன், பெரு மூச்சு மட்டும் தான் வருகின்றது.
அவ்வளவு... திறமையும், முயற்சியும்... வீணாகி விட்டதே.   😢

 • Sad 1
Link to post
Share on other sites
 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்
 • தன்னழிப்பான ஒரு பெரிய  வள்ளம்:-

 

 1. பெரிய வள்ளம்:-
 • பிடிக்கமுயன்ற திகதி: 02.09.1990
 • பிடிக்கமுயன்ற பரப்பு: பருத்துத்துறைக் கடலிலிருந்து 8 மைல் உயரத்தில்
 • பிடிக்க முற்பட்டோர்: சிங்களக் கடற்படை
 • வீரச்சாவடைந்த கடலோடி: மேந்தலை கொச்சரையர்(கப்டன்) மோகன் மேத்திரி
 • இவ்வள்ளத்தின் வேகம்: 8 மைல் / மணி

இதுவொரு பெரிய வள்ளம் ஆகும். இது தமிழீழத்தின் வல்வெட்டித்துறையில் கட்டப்பட்டு தமிழ்நாடு-தமிழீழ கடல் வழங்கல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டது ஆகும். சம்பவத்தன்று வழக்கம்போல தமிழ்நாட்டில் இருந்து வழங்கல் பொருட்களை ஏற்றிவந்த வேளை கடற்படையின் டோறா கடற்கலம் அவர்களை கண்டுகொண்டது; அதை அவர்களும் அறிந்தனர். அதனால் வள்ளத்திலிருந்த வீரர்களை அருகில் பாதுகாப்பிற்காக வந்துகொண்டிருந்த கடற்புறாவின் இயந்திரப் படகு ஒன்றிற்கு மாற்றிவிட்டு, வள்ளத்தை எரிப்பதையே திட்டமாக கொண்டிருந்தனர், கடற்புறாவினர். ஆனால் மோகன் மேத்திரியாரோ வீரர்களை ஏற்றிவிட்டு தானேற மறுத்துவிட்டார். அதனால் கடற்புறாவின் அந்த இயந்திரப் படகானது ஏனையவர்களோடு கரை திரும்பியது.

பிறகு, அக்கலத்தின் சொந்தக்காரரும் மேந்தலையுமான வல்வெட்டித்துறையினைச் சேர்ந்த ஓடாவியார்கள் வழிவந்த கொச்சரையர் மோகன் மேத்திரி என்பவர், கொணர்ந்த பொருட்களோ, தன்னுடலோ எதிரியிடம் சிக்கக் கூடாது என்று முடிவெடுத்தார். வள்ளத்தில் தான் கொண்டுவந்த பெற்றோலினை எடுத்து வள்ளத்திற்கும் தனக்குமாக ஊற்றி, மின்னலென வந்த டோறா நெருங்கியதும் வள்ளத்தோடு தீக்குளித்தார், விடுதலைப்புலிகளின் மரபிற்கேற்ப! அதனால் எழுந்த தீப்பிழம்பினை கரையில் இருந்தே அவதானிக்கக் கூடியதாக இருந்தது. மோகன் மேத்திரி அவர்கள் செந்தணல் ஆனபோது அவரின் வயது ஒரு 22/23 இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 

main-qimg-e77b61f6ee8afb5c2dc7bef7b81aa683

main-qimg-be2981630bcca4fce72d6bd2001d1f0c

main-qimg-45730a90511f781110c5edc3d9209435

'மேந்தலை கொச்சரையர்(கப்டன்) மோகன் மேத்திரி'

Edited by நன்னிச் சோழன்
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Similar Content

  • By Mayuran

   அழகழகா வாழைமரம்
   அடுத்தடுத்து குலை சாய்சிருக்கு
   விதம் விதமாய் உருவம் கொண்டு
   விரும்பும் சுவையில் பழுத்திருக்கு
   மாப் பிடிப்பாய் கப்பல்
   மனம் பிடித்த இதரை
   தேன் இனிக்கும் கதலி - தின்னத்
   தெகிட்டாத செவ்வாழை
   வெட்டிப் பொரித்துண்ண
   விருந்து சிறக்கும் மொந்தனதால்
   இத்தனை இனம் இருக்கு எம் தேசத்தில்
   அத்தனையும் தொலைத்தோம்
   அகதிகளாய் அடுத்தவன் நாடு புகுந்து
   அன்னியமண் வாசம் நுகர்வதனால்...

   #ஈழத்துப்பித்தன்
   22.05.2016
   http://inuvaijurmayuran.blogspot.ch/2016/05/blog-post_23.html
 • Topics

 • Posts

  • வக்கிர எண்ணம் கொண்ட ஆண்களின் சம்பாத்தியத்தில் வாழும் பெண்களின் நிலை எப்பவுமே துயரமானதுதான் என்பதை தெளிவாக சொல்கிறது இக் கதை.....!   😎 பகிர்வுக்கு நன்றி கிருபன்.......!
  • நெஞ்சை உறைய வைத்த சிறிலங்கா கடற்படையினர் நடத்திய குமுதினிப் படுகொலை! குமுதினி படகுப் படுகொலைகள் என்பது 1985 ஆம் ஆண்டு மே 15 ஆம் நாள் நெடுந்தீவிற்கும் புங்குடுதீவிற்கும் இடையில் சேவையாற்றிய குமுதினிப் படகில் பயணம் செய்தவர்கள் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்டு இன்றோடு  36 வருடங்கள் ஆகும். நெடுந்தீவின் மாவலித்துறையில் இருந்து நயினாதீவின் குறிகாட்டுவான் துறைமுகத்திற்கு குமுதினிப் படகில் சென்ற பயணிகள் இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். குழந்தைகள், பெண்கள் உட்பட மொத்தம் 33 பேர் குத்தியும் வெட்டியும் கொல்லப்பட்டனர். முப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் காப்பாற்றப்பட்டனர். நேரில் கண்டவர்களின் சாட்சியத்தின் படி, இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படும் ஆறு நபர்கள் படகில் ஏறினர். படகில் பயணம் செய்தவர்களை முன்னே வரும்படி அழைத்து ஒவ்வோருவரையும் தமது பெயர், வயது, முகவரி, எங்கு செல்கிறார்கள் போன்ற விவரங்களை உரத்துக் கூறும்படி பணிக்கப்பட்டார்கள். பின்னர் அவர்களை வாள்களாலும் கத்திகளாலும் வெட்டிக் கொன்றனர். சாட்சியங்கள் பன்னாட்டு மன்னிப்பு அவையினால் பதியப்பட்டன. பொது வேலைகள் திணைக்களத்திடம் இருந்து தற்போதைய வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கீழிருந்த குமுதினி 1960களில் இலங்கை அரசால் நெடுந்தீவுக்கு போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை நெடுந்தீவு மக்களை வெளியுலகத்தொடர்பில் வைத்திருக்க உதவிய படகு இதுவாகும். இயந்திர அறை முன்பகுதி பின்பகுதி என மூன்று பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளது. குமுதினி படகு 1985 மே 15 காலை 7:15 மணிக்கு நெடுந்தீவு மாவலித் துறைமுகத்தில் இருந்து 64 பயணிகளுடன் புறப்பட்டது. நயினாதீவு நோக்கிச் சென்று கொண்டிருக்கும் போது புறப்பட்ட அரைமணி நேரத்தின் பின் நடுக்கடலில் கண்ணாடி இழைப் படகில் வந்த இலங்கைக் கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டது.       ஆறு பேர் முக்கோண கூர்க்கத்தியும் கண்டங்கோடலிகள் இரும்புக்கம்பிகள் சகிதம் குமுதினியில் ஏறினர். பின்புறமிருந்த பயணிகளை இயந்திர அறையின் முன்பக்கம் செல்லுமாறு மிரட்டினர். அவர்கள் அனைவரும் சென்றுவிட்டனர். பின்புறம் இருபுற இருக்கைகளுக்கு நடுவே பலகைகளினால் இயந்திரத்தில் இருந்து பின்புறம் செல்லும் ஆடு தண்டுப்பகுதியை அவர்கள் அகற்றினர். இருக்கை மட்டத்தில் இருந்து கிட்டத்தட்ட சுமார் 4 அடி ஆழமானதாக அது இருந்தது. இதன்பின் பணியாளர்கள் உட்பட ஒவ்வொருவராக உள்ளே அழைக்கப்பட்டனர். அரைகுறைத் தமிழில் அவர்கள் கதைத்தனர். குமுதினியின் இருபக்க வாசல்களிலும் உள்ளும் வெளியும் கடற்படையினர் இருந்தனர். ஒவ்வொருவராக கடற்படையினர் அழைத்து கத்தியால் குத்தியும் கண்டங்கோடலியால் வெட்டியும் இரும்புக்கம்பியால் தாக்கியும் கொன்று அந்த ஆடு தண்டுப்பகுதியில் போட்டனர். இப்படி கொல்லப்படுபவர்கள் எழுப்பும் அவல ஒலி முன்புறம் இருப்பவர்களுக்கு கேட்கக்கூடாது என்பதற்காக அவர்கள் பெயரையும் ஊரையும் உரக்கச் சொல்லுமாறு பணிக்கப்பட்டனர். அவலக் குரல் எழுப்ப முடியாது இறந்தவர்கள் போல் இருந்தவர்களும் உண்டு. கடுமையாகத் கடற்படை தாக்க குரல் எழுப்பியவர்கள் அதிகளவில் தாக்கப்பட்டு இறந்து விட்டார்கள் என கடற்படையினரால் கருதப்பட்டும் போடப்பட்டனர். பயணிகளில் ஒருவர் கடலில் குதிக்கவே அவருடன் சேர்ந்து வேறு சிலரும் கடலில் குதிக்கத் தொடங்கினர். இதனைக் கண்ட ஆயுத நபர்கள் அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். நேரில் கண்ட ஒருவர் இவ்வாறு கூறுகிறார்.: “எனது தலையில் அடித்தார்கள். நான் விழுந்து விட்டேன். நான் இழுத்துச் செல்லப்படுவதை உணர்ந்தேன். கோடரி போன்ற ஆயுதத்தால் எனது தலையை அடித்தார்கள். வயிற்றிலும் கால்களிலும் அடித்தார்கள். பின்னர் ஒரு பள்ளத்தில் வீழ்ந்தேன். நான் இறந்து விட்டதாக நடித்து அப்பாடியே கிடந்தேன். எனக்கு மேல் மேலும் உடல்கள் விழுந்தன. குழந்தைகள், பெண்களின் அவலக்குரலைக் கேட்கக்கூடியதாக இருந்தது.” சுபாஜினி விசுவலிங்கம் என்ற 7 மாதக் குழந்தை முதல் 70 வயது தெய்வானை உட்பட இப்படுகொலை நிகழ்வில் இறந்தோர் எண்ணிக்கை 36 முதல் 48 வரை எனத் தெரிவிக்கப்படுகிறது. ஆனாலும் பன்னாட்டு மன்னிப்பு அவை இறந்தோர் எண்ணிக்கை 23 எனத் தெரிவிக்கிறது.71 பேர் உயிருடன் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.   பன்னாட்டு மன்னிப்பு அவையினர் இந்நிகழ்வில் பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் விரிவான அறிக்கை ஒன்றை இலங்கை அரசுக்குச் சமர்ப்பித்து குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கெதிராக முறைப்படி சட்ட நடவடிக்கை எடுக்கும் படி வற்புறுத்தியது. இப்படுகொலைகள் நயினாதீவு கடற்படைத்தளத்தைச் சேர்ந்தோரால் மேற்கொள்ளப்பட்டதென குற்றஞ்சாட்டப்பட்ட வேளையில் “ “இக்குற்றத்தை யார் புரிந்தார்கள் என அறிவதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை,” ” இலங்கை அரசின் தேசியப் பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி கூறினார். தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகம் நவம்பர் 22, 2006 விடுத்த அறிக்கையில் படகில் 72 பேர் இருந்ததாகவும் 36 பேர் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறது. உயிர் தப்பியவர்கள் பலரின் வாக்குமூலங்களை அது வெளியிட்டிருக்கிறது. நெடுந்தீவு மக்களின் வாழ்வில் குமுதினிப்படுகொலை மறக்க முடியாதது. ஆண்டுதோறும் இந்தப் படுகொலையை நினைவுகூறும் நிகழ்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ் இனப்படுகொலை வரலாற்றில் மறக்க முடியாத வடுவாக நிலைத்துள்ள குமுதினிப்படுகொலையை நெடுந்தீவு மக்கள் மாத்திரமின்றி உலகமெங்கும் உள்ள தமிழ் மக்களும் நினைவுகூறுகின்றனர். கடலம்மா கடலம்மா… நீயே சொல் குமுதினி ஏன் பிந்தி வந்தாள்? எம்மவரின் அவலங்களைச் சடலங்களாய்ச் சுமந்துகொண்டு ‘குமுதினி’ குருதி வடிய வந்தாள். கடலம்மா கண்டாயோ கார்த்திகேசு என்னவானான்? எந்தக் கரையில் உடலூதிக் கிடந்தானோ? ஓ…! சோழகக் காற்றே நீ, வழம்மாறி வீசியிருந்தால்… ‘குமுதினி’ வரமாட்டாள் என்று நெடுந்தீவுக்குச் சொல்லியிருப்பாய். பாவம் மரணங்களின் செய்தி கூடக் கிட்டாத தொலைதீவில் ஏக்கங்களையும் துக்கங்களையும் கடலலைகளிடம் சொல்லிவிட்டுக் காத்திருக்கும் மக்கள்… கடலம்மா நீ மலடி ஏனந்தத் தீவுகளை அனாதரவாய்த் தனியே விட்டாய்? கடலம்மா… உன் நீள் பரப்பில் அனாதரவாய் மரணித்த எம்மவரை புதிய கல்லறைகளை எழுப்பி ‘அனாதைக் கல்லறைகள்’ என நினைவூட்டு. ஆனால், இனிவருங் கல்லறைகள் வெறும் இழப்புக்களின் நினைவல்ல, எமது இலட்சியங்களின் நினைவாகட்டும்! -நிலாந்தன்   "துவம்சம்" அல்லது நினைவறா நாள். ( 15-05-1985 )   குமுதினி ……… இந்தப் பெயரை, உச்சரிக்கும் உதடுகள்- இன்றும் கூட துக்கத்தால் ஒரு கணம் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்கின்றன!! காகம் கத்தித் துயிலெழும் – என் இனிய தீவினை …….. பட்டணத்தோடு இணைத்த பாலம் அவள்! அவள் மடிமீது ஏறிய பின்புதான், எங்களின் பனாட்டும், பாயும்……. ஓலையும், ஒடியலும் ……… பண நோட்டுக்களாக மாறின !! பிரபஞ்ச உருண்டைக்குள் தான், எத்தனை பிரமிப்புகள் -அத்தனையும் அந்தப் பாவைமீது காலை வைத்த – பின்புதான் நாம் கண்டுணர முடிந்தது !!! ஆயிரம் பேதம் சொல்லி, பனம்கிழங்குக் கூறுகளாய்…….. கிழிபட்டுக் கிடந்த என் மக்களை “மனிதமே, நேயமென்று” தன் மடிமீது சுமந்து …… பரஸ்பரம் புரிந்துண்ர்வுள்ளவர்களாக்கிய புண்ணியவதி அவள் ! பலனை எதிர்பாராமல், கடமையை மட்டும் செய்த கீதை படிக்காத கோதை ! என் கையில் சுமந்த புத்தகங்கள் ….. காலில் நசிபடும் செருப்பு …….. தீபாவளிப் புத்தாடை ….. பொங்கலாய்ப் பொங்கும் புதுப்பானை ……. அப்புவையும்,ஆச்சியையும், கிடத்திவைத்த சவப்பெட்டிகள் ……. எல்லாமே …… எல்லாமே ………. அவள் சுமந்தவை ! கட்டுமரங்களுக்கும் கைவலி-வள்ளங்களுக்கும் கல்தாக் கொடுத்துவிட்டுக் கடும் வேகக் கப்பலாய் – என் துறைமுகத்தில் மிதந்த அழகுராணி ! புள்ளிமானாய் துள்ளிக் குதித்து – அவள் ஏழாற்றுப் பிரிவைக் கடக்கிறபோது ……. மலைபோல் உயரும் அலைகளும் – அவளிடம் கைகட்டிப் பணிந்து, மௌன நுரையாய் சிதறுண்டு போகும் !! அதிகாலையின் பனிச்சிதறலோடு …… அன்றும் அவள் – தன் அரும்புத்திரர்களோடு புறப்பட்டுப் போனாள் !! பிரளயம் என்பதை அறியா – அவளையே பிரளயமாக்கின ஆயுதக் கூலிகள் !! வெடித்து வீசியெறிந்த பட்டாசுத் துண்டுகளாய் ………. காலறுபட்டு ……..கையறுபட்டு …….. துடிக்கத் துடிக்க ……… அவ்ள் மடியில் உயிர் போன, என்னுயிர்த் தங்கைகளின் அழகான கனவுகள் பற்றி ……. இன்னமும் ……. அவர்கள் …….. வாழ விரும்பிய வாழ்க்கையைப் பற்றி ……. பலமாதமாய், பவித்திரமாய், உருவாகி கணப்பொழுதில் கருவுடனேயே …….. சிதையில் எரிந்த என் நண்பனின், மனைவி பற்றி …….. பதைக்கப்,பதைக்க கொலையுண்டு கிடந்த பச்சை மழலை பற்றி ….. மரணிக்கும் போதும், எதிரியிடம் மண்டியிடாது உயிர் விட்ட என்னூர்- வீர அன்னைகள் பற்றி …… என்னினிய உணர்வில் தமிழைக் கலந்து, தன்னுயிரைக் கூலிப்படைக்கு காவு கொடுத்திட்ட தமிழாசிரியன் பற்றி ……. எவரைப்பற்றி ……. எவரைப்பற்றி …….. நான் புலம்பி அழ ????? வெல்லை, பெருந்துறை ……. குடவிலி, குவிந்தா ……. எத்திசை நோக்கினும் எங்கும் அழுகுரல் !! கீழ்த்திசையிருந்து …….. பெருந்துறையீறாய்……… ஈக்களும் கூட இரையற்றிருந்த நாள். என்னூர்க் கொண்டைச் சேவலும், காக்கையும், கூட மார்பில் அடித்த மரண நாளது !! வீகாமனும்,வெடியரசனும், ஆண்ட திருத்தீவு விம்மல்களால் நிறைந்த நாளது ! பூதத்தைக் கொண்டு பொழிந்த – கிணறுகளில் நன்னமுத நன்னீர் குடித்த – மனிதர்களின் கண்ணீர் பெருகிக் கரையுடைந்த நாளது . இந்து மாக்கன்னியின், பொட்டெனப் போற்றிடும் ……. நெடுந்தீவகத்தின் உயிர்களின் பெறுமதி – கேவலம் காட்டிலே வெட்டிய கால்நடை போன்றதா ?? ஈழதேசத்து மூளையாய்த் திகழும் – அழகிய தமிழின் இலக்கணத்தீவு …….. அந்நியன் கண்ணில், துச்சமாய் ஆனதோ ???   கூவியெழும் அலைகளின் கூக்குரல் – இக் காற்றில் தவழ்ந்து காதில் உறைக்கிறது. மரணத்தை வென்ற மாமறவர் நீங்கள் !! மண்ணின் மடிவெடித்து மறுபடியும் பிற்ப்பீர்கள். ஆழ்கடலிருந்து ….. அலைகடலின் மடியிருந்து …… வெட்டத் தளைக்கும் மரங்களாய் …..-நீங்கள் விட்ட இடமிருந்து விழுதுகளை எறிவீர்கள் !!! "மா.சித்திவினாயகம்" ("மாவிலி" மலரிலிருந்து ) குமுதினிப் படுகொலை - நீதி மறுக்கப்பட்ட ஒரு துயரத்தின் கதை: குமுதினிப் படுகொலையானதுமனித உரிமை அமைப்புக்களின் சான்றுகளில் இருந்து மறைக்கப்பட்டு, நீதி மறுக்கப்பட்டதாக, அல்லது நீதி வழங்கப்படாததாக இருபது தசாப்தங்களுக்கு மேலாகிவிட்டது. இத்தனை ஆண்டுகள் கழிந்தபின்னரும் குமுதினிப் படுகொலையில் உயிர் தப்பிய படகுப்பணியாளரையும் மற்றும் உயிர் தப்பிய பயணிகளையும் சிறிலங்கா கடற்படைதேடி வருகிறது. ஊர்காவற்துறை, இறங்குதுறை சிறிலங்கா கடற்படை முகாமாக தொடர்ந்து இருந்து வருகிறது. இதன் அருகேதான் குமுதினி தரையேற்றப்பட்டு திருத்தப் பணிக்கு உட்படுத்தப்பட்டு வந்தது. அங்கு குமுதினியின் சில பணியாளர்கள் தங்கியிருந்தனர். இவர்களிடம் சென்ற சிறிலங்கா கடற்படையினர் 1985ஆம் ஆண்டு குமுதினி படுகொலையில் தப்பிய பயணிகள் எங்கே இருக்கிறார்கள் என விசாரிக்கின்றனர். அதேபோல் குறிகட்டுவான் இறங்குதுறையிலும், நயினாதீவு சிறிலங்காக்கடற்படை இறங்குதுறையிலும் தப்பிய படகுப்பணியாளரைப்பற்றியும்,தப்பிய பயணிகள் பற்றியும் தொடர்ந்தும் சிறிலங்கா படையினர் விசாரித்தே வருகின்றனர். இது ஏன்?. 1985ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் நாள் காலை ஏழு மணிக்கு நெடுந்தீவு மாவிலி துறைமுகத்திலிருந்து 64 பயணிகளுடன் புறப்பட்டபோது, பொதுவேலைகள் திணைக்களத்திடம் இருந்து இப்போதைய வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கீழுள்ள குமுதினிப்படகு அரை மணி நேர பயணத்தின் பின் சிறிலங்காக கடற்படையால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டது. இரு சிறிய பிளாஸ்ரிக் படகில் வந்த சிறிலங்கா கடற்படையினர் குமுதினிப் படகை நிறுத்தச்சொல்லி அதை நிறுத்தியபின்னர் 6 கடற்படையினர் முக்கோணக் கூர்க்கத்திகள், கண்டங் கோடாரிகள், இரும்புக்கம்பிகள் சகிதம் குமுதினிப்படகில் ஏறினர். படகின் பின்புறம் இருந்த பயணிகளை படகின் முன்பக்கம் செல்லுமாறும் மிரட்டினர் அவர்கள் அனைவரும் சென்றுவிட்டனர். படகின் பின்புறம் இரு புற இருக்கைகளுக்கு நடுவே இயந்திரத்திலிருந்து பின்புறம் புறப்புளருக்குச் செல்லும் ஆடுதண்டுப்பகுதி மூடப்பட்டிருந்த பலகைகளை படையினர் களற்றி (இருக்கைகளிலிருந்து 4 அடி ஆழம் உள்ளதாக இது இருந்தது) அதன் பின் படகுப் பயணிகள் ஒவ்வொருவராக உள்ளே அழைக்கப்பட்டனர். குமுதினி இருபக்க வாசல்களிலும் உள்ளும், வெளியும் கடற்படையினர் இருந்தனர். ஒவ்வொருவராக வந்த பயணிகளை அழைத்து கத்தியால் குத்தியும், கண்டம் கோடரிகளால் வெட்டியும், இரும்புக் கம்பிகளால் தாக்கியும் அந்த படகின் நடுப்பள்ளத்தில் போடப்பட்டனர். கொல்லப்பட்டவர் போக குற்றுயிராய்ப்போனவர்கள் குரல் எழுப்ப முடியாது செத்தவர்கள்போல் கிடந்தனர். இச்சம்பவத்தில்,தாக்குதல் நடக்குதென குரல் கொடுக்க முனைந்தவர்கள் அதிகாரிகளால் தாக்கப்பட்டு இறந்தார்கள். உள்ளே பள்ளமாக இருந்த பகுதியில் மக்கள் போடப்பட்டதால் முன்புறமிருந்து செல்லும் பயணிகளுக்கு ஒவ்வொருவராக முன்பு சென்றவர்களுக்கு என்ன நடந்தது என்பது தெரியாதிருந்தது. இதனையறிந்தஒருவர் கடலில் குதித்துக் கொண்டார். அதன் பின் படகில் இருந்த சிலரும் கடலில் குதிக்கத் தொடங்கினர். இதனைக் கண்ட படையினர் துப்பாக்கிகளால் அவர்களைச் சுட்டுக் கொன்றனர். ஏழுமாதக் குழந்தை முதல் வயோதிபர்கள் வரை ஈவிரக்கமற்றமுறையில் படுகொலை செய்யப்பட்டனர். இச்சம்பவத்தில் இறந்தவர் போல கிடந்த சிலர் உயிர்தப்பிக் கொண்டார்கள். இப்படுகொலையின் பின் காயம் அடைந்தவர்கள் புங்குடுதீவு வைத்தியசாலைக்கும், யாழ்.போதனா வைத்தியசாலைக்கும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் கொல்லப்பட்ட விடயத்தை மருத்துவமனையால் சிறிலங்கா காவல்துறையிடம் முறையிட்டும் எதுவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. பதிலாக சில நாட்களில் தப்பியவர்களை மருத்துவமனைக்கு வந்த சிறிலங்கா கடற்படையினர் தேடத்தொடங்கினர். நோயாளிகள் உடனடியாக மருத்துவமனையிலிருந்து விடுதிகளுக்கு இடம் மாற்றப்பட்டு மறைக்கப்பட்டனர். உயிர் தப்பிய படகுப் பயணிகளை படையினர் புங்குடுதீவு மருத்துவமனையில் தேடிச்சென்ற போது சிலர் மறைக்கப்பட்டு தலை மறைவாகியே சிசிச்சை பெற்றனர். சிலரைத் தவிர ஏனையோர் வெளிநாடுகளுக்குத்தப்பிச் சென்றுவிட்டனர். அரசப் படைகள் படகுப்பயணிகள் தப்பி விடக்கூடாது என்பதற்காக அவர்களைத்தேடித்திரிந்தனர். இன்றும் தேடிக்கொண்டே இருக்கின்றனர். எதுவிதவிசாரணைகளும் மேற்கொள்ளப்படாது இக் கடற்படுகொலை மறுக்கப்பட்டு மறைக்கப்பட்டுள்ளது.     ஆனால் சாட்சிகளை தேடியழிக்கச் சிறிலங்காக்கடற்படையினர் தீவிர அக்கறைகாட்டி வருகின்றனர். விசாரணைகளற்று மறைக்கப்பட்ட குமுதினி கடற்படுகொலை வெளிச்சத்துக்கு கொண்டு வரப்படவேண்டும். சிங்கள தேசக் காடையர்களால் நிகழ்த்தி மறைக்கப்பட்ட கொடூரங்கள் அம்பலப்படுத்தப்பட வேண்டும்.உலக நாடுகளின் மனச்சாட்சிகளை தட்டி உலுப்ப வேண்டும். இதற்கு இதில் உயிர் தப்பி மனித உரிமைச் சபைக்குச் சாட்சியமளித்து இன்று அச்சம் காரணமாக தலைமறைவாகியுள்ள சாந்தலிங்கம், குமாரசாமி, கணேசபிள்ளை போன்ற பலரும் உண்மைகளை உலகுக்கு இனியாவது வெளிப்படுத்த வேண்டும். https://www.thaarakam.com/news/da77702d-e7e3-4a39-9f09-2ad710a30986  
  • வெறித்தனமான துடுப்பாட்ட சண்டை காட்சிகள்.☺️.😊  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.