Jump to content

தலைவர் உபசரிப்பில் டுபாய்பிட்டு -சந்திரவதனா அனுபவப் பகிர்வு

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தலைவருடன் சில மணிப் பொழுதுகள்…

தலைவர் உபசரிப்பில் டுபாய்பிட்டு

நேற்று முன்தினம் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்களைச் சந்தித்ததிலிருந்து எனக்குள் இனம் புரியாததொரு சந்தோசம், இது நடக்குமா என்றதொரு சந்தேகம், பரபரப்பு, படபடப்பு! தூக்கத்தைக் கூடத் தொலைத்திருந்தேன்.

கொழும்பிலே தெருக்களிலே பார்த்த பிச்சைக்காரர்களின் வாசனையோ, அங்கவீனர்களின் கையேந்தல்களோ இன்றி பாதிக்கப் பட்ட ஒவ்வொருவரையும் தன் கரங்களில் ஏந்தி அவரவர்க்கேற்ப இல்லங்கள் அமைத்து அவர்களை நேசத்துடன் பராமரித்துக் கொண்டிருந்த நேர்த்தியான வன்னியையும், போரிலே புண்பட்டுப் போயிருக்கும் வீதிகளும், பாழ்பட்டுப் போயிருக்கும் வீடுகளும் ஒருபுறம் இருக்க, பண்பட்ட மனிதம் அங்கு ஓங்கி வளர்ந்திருப்பதையும் பார்த்த பின், இதையெல்லாம் இத்தனை கவனத்தோடு கண்காணிக்கும் அந்த தூய சிந்தனை கொண்ட நிர்வாகத் திறன்மிக்க அண்ணனைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை என்னுள் எழுந்தது.

´அண்ணன்` அவர்கள் அப்படித்தான் சொல்கிறார்கள். நாங்கள் வெளிநாடுகளி இருந்து கொண்டு மேதகு என்றும், மதிப்புக்குரிய என்றும், தலைவர் என்றும் எட்ட வைத்துப் பார்த்த அந்தத் தூய தாயகனை அவர்கள் கிட்ட நின்று அப்படித்தான் சொல்கிறார்கள்.

வாய்க்கு வாய் அண்ணை என்றும் அண்ணன் என்றும் அவர்கள் அப்படி உரிமையோடும் பாசத்தோடும் பேசும் போதெல்லாம், ஏற்கெனவே எனக்குள் முளைவிட்டிருந்த அந்த ஆசை துளிர்த்து, தளிர்த்து, சடைத்து பெருவிருட்சமாக விஸ்வரூபமெடுக்கத் தொடங்கியது. !நானும் அண்ணனைப் பார்க்க வேண்டும். வன்னியைத் தன் கண்களுக்குள் வைத்து இத்தனை நேர்த்தியாக நிர்வகிக்கும் அந்த அண்ணனை ஒரு தரம் சந்திக்க வேண்டும். வன்னி மக்களின் மனதில் இத்தனை பிரியத்துக்குரியவராக இடம் பிடித்திருக்கும் அவரோடு ஒரு தரம் மனம் திறந்து பேச வேண்டும்.` எனக்குள்ளிருந்த ஆசை அவாவாக மாறத் தொடங்கியது.

என் தாய் வயிற்றில் பிறந்து, விடுதலை வேட்கையில் எம் மண்ணுக்காகத் தம் இன்னுயிரை ஈந்த என் தம்பிகளில் ஒருவனான மயூரன் கூட ஒரு காலத்தில் அவரோடு அவர் அருகில் இருந்தவன். அவன் பற்றியும் எனக்குக் கிடைக்காத சில விடயங்களை அவரோடு அளவளாவ வேண்டும். அந்த ஆசை கூட என் மனதின் ஆழத்தில் வேரூன்றி இருந்தது.

என் ஆசைக்கு அணை போட முடியாத கட்டத்தில் யாருக்கும் தெரியாமல் அண்ணனுக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பி வைத்தேன்.

நேற்று முன் தினம் மாலை நான்கு மணியளவில் வெயிலில் மூழ்கியிருந்த கிளிநொச்சி வெண்புறா நிறுவனத்தில் நிழலும் தண்மையும் தேடி வரவேற்பறையின் ஓர் மூலையில் நான் அமர்ந்திருந்த போதுதான் தமிழ்ச்செல்வன் ஆளனுப்பியிருந்தார். எம்மைச்சந்திக்க விரும்புவதாகவும் ஏழு மணிக்கு வாகனம் அனுப்புவதாகவும் சொல்லி விட்டிருந்தார்.

ஏழு மணிக்குச் சில நிமிடங்கள் முன்னரே வாகனம் வந்தது. போனோம். நட்பு நிறைந்த பார்வைகள் எம்மை வரவேற்க அரசியல்துறை அலுவலகம் தனக்கே உரிய பாணியில் உள்ளேயும் வெளியேயும் அழகாகக் காட்சி அளித்தது.

அதே சிரிப்பு..! எப்போதும் நாம் பத்திரிகைகளிலும், ஒளி நாடாக்களிலும் பார்த்த அதே சிரிப்புடன் தமிழ்ச்செல்வன் எம்மை வரவேற்றார். அக்கா..! அக்கா..! என்று உரிமையோடு அழைத்து அன்போடு பேசினார். களத்தில் காவியமான எனது தம்பிமாரைப் பற்றிக் கதைத்தார். முன்னர் பருத்தித்துறையில் புத்தக வெளியீடு செய்த தங்கை பற்றி விசாரித்தார். கதைகள் பல திசைகளிலும் விரிந்திருந்தன.

அவருடனான இரவு உணவு நளபாகம்தான். இறால், இறைச்சி, மரக்கறி… என்று சுவையாக இருந்தது. அங்கிருந்த உறவுகள் அதை நட்போடு பரிமாறிய விதம் மிகவும் இதமாக இருந்தது. அந்த இனிய உபசரிப்பில் மனசும் வயிறும் நிறைந்திருக்க நாம் விடை பெற எழுந்து கொண்டோம்.

அப்போதுதான் தமிழ்ச்செல்வன் என்னைத் தனியாகக் கூப்பிட்டு அந்த இனிய செய்தியைச் சொன்னார். “வியாழக்கிழமை (அண்ணன்) உங்களைச் சந்திக்க விரும்புறார்” என்றார். எனக்கு ஒரு தரம் மனம் சிலிர்த்தது.

அண்ணையைச் சந்திப்பது பற்றி தமிழ்ச்செல்வன் சொன்ன அந்தக் கணத்திலிருந்து நான் பதட்டமாகி விட்டேன்.

வெளியில் வந்து அவருடன் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்த போதோ, சமையல் செய்தவர்களிடமும், உணவு பரிமாறியவர்களிடமும் நன்றி கூறி விடைபெற்ற போதோ நான் ஒன்றிலும் முழுமையான கவனத்தைச் செலுத்த முடியாமல் பதட்டமாகவே இருந்தேன்.

உண்மைதானா..? மதிப்புக்குரிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களை நான் சந்திக்கப் போகிறேனா..? சந்தோசம்..! சந்தேகம்..! பதட்டம்..! பரபரப்பு..! எல்லாம் என்னுள். இன்று காலை தமிழச்செல்வன் அவர்கள் வெண்புறா வரை வந்து “மாலை நாலுமணிக்கு வாகனம் வரும்” என்று சொன்ன போதும், எனது படபடப்புகள் குறைய வில்லை.

நான்கு மணிக்கு வருவதாகச் சொன்ன வாகனம் சற்றுத் தாமதமாகத்தான் வந்தது. போரின் அனர்த்தங்களால் குழி விழுந்து போயிருந்த வீதியில் வாகனம் ஏறி இறங்கிச் சென்ற போது நாங்கள் குலுங்கினோம். கூட வந்தவரின் சற்றலைற் தொலைபேசி சிணுங்கினாலே ´எங்கே.. இன்று எம்மால் அண்ணையைச் சந்திக்க முடியாது` என்று தகவல் சொல்லி விடுவார்களோ என்று மனசு பயப்பட்டது.

அண்ணனைச் சந்திக்கும் வரை எதையும் நம்ப மனசு மறுத்தது. வாகனம் எம்மை ஒரு இடத்தில் இறக்கிய போது அங்குதான் அண்ணன் நிற்பார் என நினைத்தேன். பின் அரை மணி நேரமாகக் காத்திருந்த போது அண்ணன் அங்கு வருவார் என்ற நினைப்பில் காத்திருந்தேன்.

ஆனால் வந்தது இன்னுமொரு வாகனம். போராளிகளின் மருத்துவரான, ரேகா ஓட்டி வந்தார். முதற் சந்திப்பிலேயே காலாகாலத்துக்கும் பரிச்சயமான ஒரு உறவு போல அக்கா.. அக்கா.. என்று உரிமையோடு இனிமையாகப் பேசினார்.

சில நிமிடங்களில் வாகனம் மரங்கள் குடை விரித்திருந்த ஒரு இடத்துக்குள் நுழைந்தது. முற்றத்தில் கதிரை போட்டுத் தமிழ்ச்செல்வன் அமர்ந்திருந்தார். அதே சிரிப்புடன் எம்மை வரவேற்றார். உள்ளே வீடா, அலுவலகமா தெரிய வில்லை. மின் விளக்கில் பல முகங்கள் தெரிந்தன.

சில நிமிட உரையாடல்களின் பின் இன்னொரு வாகனம் வந்தது. கேற்றடியில் சற்று இருள் சூழ்ந்திருந்தது. ஆனாலும் இறங்கியவர்களில் தலைவர் பிரபாகரன் அவர்களும் இருக்கிறார் என்பதை அவர் நடையிலேயே கண்டு கொண்டேன். இப்போதுதான் மனசு முழுதாக நம்பிக்கை கொண்டது.

சந்திப்புக்கான பிரத்தியேகமான, தனியாக இருந்த ஒரு கட்டிடத்துள் அவர்கள் நுழைய நாங்களும் அழைக்கப் பட்டோம்.

மதிப்புக்குரிய தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களை நேரே கண்டதும் எப்போதும் என் வாயில் சரளமாக வரும் வணக்கம் கூட வரமறுத்தது. நா பேச மறந்து பின்னிக் கொண்டு பின் நின்றது. நம்ப முடியாதிருந்தது. சிரிப்பை மட்டும் உதிர்த்தேன்.

எல்லோரும் உள்ளே நுழைந்ததும் இருக்கைகளில் அமர்ந்து கொண்டோம். அங்கும் தமிழ்ச்செல்வன் அவர்களுடனான சந்திப்பின் போது போலவே அழகாகவும் பண்பாகவும் உபசரித்தார்கள். சில நிமிடங்களில் தயக்கமும் தவிப்பும் தளர்ந்து இயல்பு நிலைக்கு வந்தேன். அண்ணன் பிரபாகரன் மிகவும் இயல்பாகப் பேசினார். உரிமையோடு எம்மோடு அருகிருந்து பேசினார். நான் சிரிக்கும் போது “மயூரனின் சிரிப்புப் போலவே இருக்கிறது” என்றார். “இதே சுருள் தலைமயிர்தான் மயூரனுக்கும்” என்றார்.

பூநகிரித் தவளைப் பாய்ச்சலில் உடலம் கூடக் கிடைக்காமற் சிதறிப் போன மயூரனின் குறும்புகள் பற்றி நிறையச் சொன்னார். தகடை மாற்றிக் கட்டிக் கொண்டு திரியும் அவனது விளையாட்டுத் தனங்களைப் பற்றிச் சொன்னார். மொறிஸ் பற்றிச் சொன்னார். “ஆனால் மொறிஸை கடைசியில் சந்திக்க முடியாமற் போய் விட்டது.” என்றார். மொறிஸ் ஒரு கிழமையில் அவரிடம் வருவதாக இருந்தானாம். அதற்கிடையில் பருத்தித்துறையில் விதையாகி விட்டான். மயூரன்ரை அந்த எழுதுற அக்கான்ரை கடிதங்களை எனக்கு நல்லாப் பிடிக்கும். எல்லாரும் விட்டிட்டு வா எண்டுதான் கடிதங்கள் போடுவினம். ஆனால் அவ மட்டும் அப்பிடி எழுத மாட்டா. நம்பிக்கையும் உறுதியும் கூறி எழுதுவா” என்றார். அவர் குறிப்பிட்டது சந்திரா ரவீந்திரனை. புலம் பெயர்ந்து விட்ட எனது தங்கையைக் கூட அவர் இத்தனை ஞாபகம் வைத்திருப்பது எனக்குள் மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் தந்தது. மறைந்த கவிஞர் தீட்சண்யன் பொட்டம்மானின் மகன் பார்த்திபனுக்கு ஆங்கில வகுப்புகள் எடுத்தது பற்றிச் சொன்னார்.

பலதரப்பட்ட உரையாடல்களின் மத்தியில் “சாப்பிடுவோம் வாங்கோ” என அவர் அழைத்த போது ஆச்சரியப் பட்டுத்தான் போனேன். அரைமணி நேரம்தான் எமக்காக ஒதுக்குவார் என நினைத்தேன். ஏற்கெனவே கூடிய நேரம் கதைத்து விட்டோம். விருந்து வேறையா..! மனசு புளகாங்கிதமடைந்தது.

சாப்பாடு அந்த மாதிரி இருந்தது. டுபாய் பிட்டு மிகவும் மென்மையாகச் சுவையாக இருந்தது. சாப்பிடும் போது நிறையக் கதைத்தோம். மனம் விட்டுச் சிரித்தோம். பெண்ணியத்திலிருந்த அரசியல் வரை அலசினோம்.

பெண்ணியம் பேசும் போதுதான் அண்ணன் பிரபாகரன் வன்னியில் வாழ்ந்தாலும் எத்தகையதொரு முற்போக்குச் சிந்தனையுடன் இருக்கிறார் என்பதும் செயற்படுகிறார் என்பதும் தெரிந்தது. அவர் பெண்களுக்கான எல்லா உரிமைகளையும் கொடுக்கிறார். பெண்கள் தாழ்ந்து போவதில் எந்தவிதமான இஷ்டமும் அவருக்கு இல்லை.

அங்கெல்லாம் அனேகமாக ஆண்கள்தான் சமைக்கிறார்கள். பெண்கள் சமையலில் முடங்கிப் போய்விடக் கூடாதென்பதில் அவர் மிகுந்த கவனம் கொண்டிருந்தார். பெண்களால் சமையல் தவிர்ந்த வேறு ஆக்க பூர்வமான பல வேலைகளைச் செய்ய முடியும் என்பதில் அவர் நிறைந்த நம்பிக்கை கொண்டிருந்தார்.

சில பெண்கள் சொல்லச் சொல்லக் கேளாமல் சாப்பாட்டைக் குறைத்து விட்டு களத்தில் விரைவில் களைத்துப் போய் விடுகிறார்கள் என்று அக்கறையோடு கவலைப்பட்டார். நீச்சல் தெரிந்த பெண்நீச்சல்ஆசிரியர் இல்லாத ஆரம்ப கால கட்டத்தில் பெண்களுக்கு நீச்சல் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்பதை நடைமுறைப் படுத்த முயன்ற போது எழுந்த கஷ்டங்களை விளக்கினார்.

“சில போராளிகள் ´ஆங்கிலத்தைப் படியுங்கோ படியுங்கோ` என்று சொன்னாலும் அக்கறைப் படுகிறார்கள் இல்லை” என்று வருந்தினார்.

அவரோடு பேசும் போது ஆரோக்கியமான எதிர்காலத் தமிழ்சமூகத்தின் மீதான அவரது அக்கறை புரிந்தது.

பேச்சுத் திசைமாறித் திசைமாறி எனது கணவரின் நகைச்சுவைப் பேச்சுக்களினால் எழுந்த சிரிப்பலைகளோடு மீண்டும் சாப்பாட்டில் வந்து நின்றது. டுபாய் பிட்டும், கோழிக்கறியும் உண்மையில் சுவையாக இருந்தது. அண்ணனிடம் சொன்னேன். “#டுபாய்புட்டு நல்லாயிருக்கு. எனக்கு நல்லாப் பிடிச்சிருக்கு” என்று. அதை எப்படிச் சமைப்பதெனவும் கேட்டேன். “சமைக்கிறவையளைக் கூப்பிட்டுத்தான் சொல்லோணும்” என்றார்.

இப்படியே ஒரு விடயமென்றில்லாமல் குடும்பம், அரசியல், போராட்டம்… என்று பல் வேறுபட்ட கதைகளுடன் சில மணித்தியாலங்கள் களிப்போடு கழிந்தன. சேர்ந்து புகைப் படங்கள் எடுத்துக் கொண்டோம்.

விடைபெறும் போது என்னால் நம்பவே முடியவில்லை. நான் அண்ணையைத்தான் சந்தித்திருக்கிறேன் என்பதை. அதற்கு மேல் என்னால் தலைவர் என்று சொல்ல முடியவில்லை. அவருடனான பொழுதுகள் அவ்வளவு நெருக்கமாக இருந்தன.

“எனது வேண்டுக்கோளுக்கமைய என்னை இவ்வளவு விரைவாகச் சந்தித்து மகிழ்ச்சிப் படுத்தியதற்கும் உங்கள் இனிய உபசரிப்புக்கும் மிகவும் நன்றி” என்று அண்ணையிடம் சொன்னேன்.

உடனே அண்ணன் “இல்லை, இல்லை, இதற்கு நீங்கள் நன்றி சொல்ல வேண்டாம். நான்தான் உங்களைக் கூப்பிட்டுச் சந்திச்சிருக்கோணும். உங்கடை குடும்பத்திலை மூன்று பேரை நாட்டுக்காகக் குடுத்திருக்கிறீங்கள். நான்தான் உங்களைக் கூப்பிட்டுச் சந்திச்சிருக்கோணும்” என்றார்.

அவரது அந்தப் பெருமிதமற்ற பேச்சில் உண்மையிலேயே நான் நெகிழ்ந்து போனேன். அந்த நெகிழ்ச்சியோடே, எனது பயணத்துக்கு அர்த்தம் சொன்ன அந்த இனிமையான பொழுதுகளை மனதுக்குள் நிறைத்த படி புறப்பட்டோம். வெண்புறா வந்த பின்னும் இனிய நினைவுகள் என்னுள் நிறைந்திருந்தன.

அடுத்தநாள், எனக்கு அந்த டுபாய்பிட்டை அவித்துக் காட்ட என நிமலனையும், புகழோவியனையும் அண்ணை அனுப்பியிருந்தார். எனக்கு நம்பவே இயலாமல் இருந்தது. எனக்கு அந்த டுபாய்பிட்டுப் பிடித்திருக்கிறது. அதை எப்படிச் சமைப்பது என்று ஒரு வார்த்தை கேட்டதற்காக அவர் இத்தனை அன்பாக நடந்து கொள்வார் என்று நான் துளியும் எதிர் பார்க்கவில்லை.

அண்ணை என்னோடும், என்னுடைய குடும்பத்தோடும் மட்டும் அப்படிப் பழகவில்லை. நாட்டுக்காக உயிரைக் கொடுத்த அத்தனை உறவுகளின் குடும்பங்களுக்கும் அவர் மதிப்புக் கொடுத்து, அவர்களை எந்தளவு தூரம் தனக்குள் பூஜித்து வைத்திருக்கிறார் என்பதை அவரோடு பழகிய அந்த சிலமணி நேரங்களில் புரிந்து கொண்டேன்.

அவருடன் பேசிக் கொண்டிருக்கும் போதுதான் அவர் வெறுமனே ஒரு இராணுவத் தளபதியல்ல என்பதை உணர்ந்து கொண்டேன். அவரோடு கதைக்கின்ற ஒவ்வொரு கணத்திலும் அவர் ஒவ்வொரு போராளிக்கும் எப்படியெப்படி தனது இதயத்துள் இடம் வைத்திருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டேன். எல்லோரும் நினைப்பார்கள் ´ஆயுதந் தூக்கிப் போராடுபவர்கள் தானே` என்று. அவர்களுக்குள்ளும் ஈரம் இருப்பது அவரோடு நேரே பேசும் போதுதான் தெரிந்தது. போராளிகளின் மீது அவர் கொண்டிருந்த பாசமும் நெருக்கமும் என்னை வியக்க வைத்தன.

மாவீரர்கள் எல்லோரையும் அவர் மனதில் நிறுத்தி வைத்திருப்பதை, எந்த மாவீரன் பற்றிப் பேசினாலும் அந்த மாவீரனைத் தன் நினைவில் கொண்டு வந்து அந்த மாவீரன் பற்றி அவன் இப்படி அவன் அப்படி என்று அவர் சொன்ன போது அறிந்து நான் வியந்து போனேன். தலைவர் என்பதன் அர்த்தத்தை அங்குதான் புரிந்து கொண்டேன்.

வன்னியின் நேர்த்தி மட்டுமா..! எது விடயத்திலும் அவர் காட்டும் ஒழுங்கு. தானே அந்த ஒழுங்கைக் கடைப் பிடிக்கும் கண்ணியமான அழகு. உண்மையான அர்த்தமுள்ள கட்டுப்பாடுகள். என்னுள் எல்லாமே ஆழ்ந்த அதிசயமான வியப்பைத்தான் ஏற்படுத்தின.

எல்லோரும் நினைப்பது போல போராட்டம் மட்டுந்தான் அவரது குறியல்ல. ஒரு சுதந்திர தமிழீழத்தையும் அங்கு ஒரு சுதந்திர சமுதாயத்தையும் உருவாக்குவதிலேயே அவர் கவனமும் செயற்பாடும் இருக்கிறது. பெண்களுக்கு அவர் கொடுக்கும் மதிப்பு. போராட்டக் களங்களுக்குள் எந்த தவறுகளும் ஏற்பட்டு களம் களங்கப் பட்டு விடாதபடி அவர் ஏற்படுத்தி வைத்திருக்கும் நடைமுறைகள்… சொல்லி முடியாத பிரமிப்பு என்னுள்.

அண்ணையுடனான அந்தப் பொழுதுகள் எதையுமே என்னால் மறக்க முடியவில்லை. இப்போது கூட அண்ணையைச் சந்தித்த அந்தப் பொழுதுகளும் அண்ணை எம்மோடு பழகியவிதமும் மிகவும் இனிமையாக பசுமையாக என்னுள்ளே பதிந்திருக்கின்றன.

சந்திரவதனா
ஜெர்மனி

https://orupaper.com/thalaivarudan589743_47953258/

------------------------

ஆனால் எங்க அனந்தி அக்காவுக்கு சம்பலும் சோறும் தானே கொடுத்ததாமே.. என்று யாருக்கோ சமீபத்தில் பேட்டி கொடுத்திருந்தாய்களே.

Link to comment
Share on other sites

  • Replies 95
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

இத்தனை இருந்தும் மேதகு இறுதி வெற்றியை அடைய முடியாமல் ஆகியதற்கு காரணம் அவரை சுற்றி இருந்த செயல்பாடு அற்ற அனந்தி, அவரின் கணவர், சிவாஜி போன்ற சிலர் (சில தளபதிகளும்? ) என்பதே என் கருத்து.

இதே போல் சீமானையும் வீழ்த்த நாம் விடப்போவதில்லை.

வங்க கடலின் இருபுறமும் எழுந்த சரிசமனான ஆளுமைகள் மேதகுவும் அண்ணனும். ஒருவரின் களம் படை சார்ந்து மற்றையவரின் களம் அரசியல்.

பிரபாகரனிசம் அடைய தவறிய இலக்கை, சீமானிசம் அடைந்தே ஆகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழகன் said:

1) இத்தனை இருந்தும் மேதகு இறுதி வெற்றியை அடைய முடியாமல் ஆகியதற்கு காரணம் அவரை சுற்றி இருந்த செயல்பாடு அற்ற அனந்தி, அவரின் கணவர், சிவாஜி போன்ற சிலர் (சில தளபதிகளும்? ) என்பதே என் கருத்து.

இதே போல் சீமானையும் வீழ்த்த நாம் விடப்போவதில்லை.

2) வங்க கடலின் இருபுறமும் எழுந்த சரிசமனான ஆளுமைகள் மேதகுவும் அண்ணனும். ஒருவரின் களம் படை சார்ந்து மற்றையவரின் களம் அரசியல்.

3) பிரபாகரனிசம் அடைய தவறிய இலக்கை, சீமானிசம் அடைந்தே ஆகும்.

1) உங்கள் கருத்தை கூறுவதில் ஒரு தவறும் இல்லை. ஆனால் உங்கள் கருத்தை ஊடகங்களில் வரும் உறுதிப்படுத்தப்படாத கருத்துக்களின் அடிப்படையில் எழுவதாக நம்புகிறேன்

2) தமிழீழமும் தமிழகமும் வேறு வேறு களங்கள் என்பது சரியானதே. ஆனால் மேதகுவுடன் நா த க யின் திரு சீமானை ஒப்பிடுவது பொருத்தமற்றது என்கிறேன். சீமான் தன்னை நிரூபிப்பதற்கு இன்னும் அதிக காலம் தேவை என்பது என் கருத்து.

3) பிரபாகரனின் இலக்கு தமிழர்களுக்கென்று தனி நாடு. சீமானின் இலக்கு ..?

சீமான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் தனது அரசியல் கட்சியை வழிநடத்துபவர். எனவே இந்த ஒப்பீடு எந்த அடிப்படையில் வருகிறது என்பது புரியவில்லை.

ஆனாலும்

தனித்தமிழ்நாடு அமைந்தால் அதிகம் மகிழ்வடையப்போவது தமிழகத்தவரல்ல ஈழத் தமிழரே 👍🏽

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழகன் said:

இத்தனை இருந்தும் மேதகு இறுதி வெற்றியை அடைய முடியாமல் ஆகியதற்கு காரணம் அவரை சுற்றி இருந்த செயல்பாடு அற்ற அனந்தி, அவரின் கணவர், சிவாஜி போன்ற சிலர் (சில தளபதிகளும்? ) என்பதே என் கருத்து.

இதே போல் சீமானையும் வீழ்த்த நாம் விடப்போவதில்லை.

வங்க கடலின் இருபுறமும் எழுந்த சரிசமனான ஆளுமைகள் மேதகுவும் அண்ணனும். ஒருவரின் களம் படை சார்ந்து மற்றையவரின் களம் அரசியல்.

பிரபாகரனிசம் அடைய தவறிய இலக்கை, சீமானிசம் அடைந்தே ஆகும்.

என்னது அனந்தியும் சிவாஜியும் தலைவரை சுற்றி இருந்தார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

1) உங்கள் கருத்தை கூறுவதில் ஒரு தவறும் இல்லை. ஆனால் உங்கள் கருத்தை ஊடகங்களில் வரும் உறுதிப்படுத்தப்படாத கருத்துக்களின் அடிப்படையில் எழுவதாக நம்புகிறேன்

2) தமிழீழமும் தமிழகமும் வேறு வேறு களங்கள் என்பது சரியானதே. ஆனால் மேதகுவுடன் நா த க யின் திரு சீமானை ஒப்பிடுவது பொருத்தமற்றது என்கிறேன். சீமான் தன்னை நிரூபிப்பதற்கு இன்னும் அதிக காலம் தேவை என்பது என் கருத்து.

3) பிரபாகரனின் இலக்கு தமிழர்களுக்கென்று தனி நாடு. சீமானின் இலக்கு ..?

சீமான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் தனது அரசியல் கட்சியை வழிநடத்துபவர். எனவே இந்த ஒப்பீடு எந்த அடிப்படையில் வருகிறது என்பது புரியவில்லை.

ஆனாலும்

தனித்தமிழ்நாடு அமைந்தால் அதிகம் மகிழ்வடையப்போவது தமிழகத்தவரல்ல ஈழத் தமிழரே 👍🏽

அ. எனக்கு உண்மையாகவே ஈழம் பற்றி அதிகம் தெரியாது. அதிகம் எழுதவும் தெரியாது, பழக்கமில்லை. ஆனால் வரும் செய்திகள் மேதகு சூழ இருந்த பலரால் வீழ்ந்தார் என்பதாகவே சொல்கிறது.

அனந்தி வெறும் கஞ்சி குடித்தார்கள் புலிகள் என பொய்யுரைத்ததை இந்த கட்டுரை காட்டுகிறது. அண்ணன் சொன்னது போல் தடல்புடல் விருந்துதான் கொடுக்கப்பட்டுள்ளது.

பிட்டு அவிக்க கற்று கொடுக்க மறுநாள் ஆள் அனுப்பியதற்கும், அண்ணன் உண்ட உணவை குறிப்பெடுத்தும் ஒத்த நிகழ்வுகளே.

ஆ. சீமானிசம் வேறு பிரபாகரனிசம் வேறு. நாம் இந்திய ஒன்றியத்துக்கு உட்பட்டே எமது தமிழ் தேசிய அரசியலை முன் எடுப்பதாக இயக்கமாக இருந்த காலங்களிலேயே சொல்லப்பட்டுள்ளது.

மேதகு கோரியது ஈழத்தில் தனிநாடு. தமிழ்நாட்டில் எமது ஆட்சி அமையும் போது அதற்காக சகல உச்ச அளுத்தங்களையும் மைய அரசுக்கு கொடுப்போம்.  இதுதான் எமது கொள்கை நிலைப்பாடு.

இ. இருவரையும் ஒப்பிடுவது ஒவ்வொருவரின் தனி கருத்து. என் கருத்து யாதெனில் மேதகு இராணுவத்துறையில் செய்த சாதனைகளுக்கு சற்றும் குறையாத சாதனையை அண்ணன் ஏலவே அரசியல் களத்தில் செய்துவிட்டார். 

2 minutes ago, MEERA said:

என்னது அனந்தியும் சிவாஜியும் தலைவரை சுற்றி இருந்தார்களா?

அப்படியாகத்தானே அம்மணியின் பேச்சு இருக்கிறது அவர் கொடுத்த பேட்டியில்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழகன் said:

அப்படியாகத்தானே அம்மணியின் பேச்சு இருக்கிறது அவர் கொடுத்த பேட்டியில்.

சீமானை நோக்கி அவர் எறிந்த கல் தான் உங்களுக்கு தெரிகிறது.

2009 வரை ஈழப்போராட்டத்தில் ஆனந்தி, மாவட்ட அரசியல் பொறுப்பாளர் ஒருவரின் மனைவி அவ்வளவு தான்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, MEERA said:

சீமானை நோக்கி அவர் எறிந்த கல் தான் உங்களுக்கு தெரிகிறது.

2009 வரை ஈழப்போராட்டத்தில் ஆனந்தி, மாவட்ட அரசியல் பொறுப்பாளர் ஒருவரின் மனைவி அவ்வளவு தான்..

அவர் அண்ணனை நோக்கி கல் எறியாது போகின், எமக்கும் அவர் பற்றி ஒரு பொருட்டும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தமிழகன் said:

அவர் அண்ணனை நோக்கி கல் எறியாது போகின், எமக்கும் அவர் பற்றி ஒரு பொருட்டும் இல்லை.

அது தான் கூறுகிறேன், சீமானை நோக்கி கல் எறிந்த படியால் அவரை தலைவருக்கு அருகாமையில்  தயவு செய்து கொண்டு செல்ல வேண்டாம்.

Link to comment
Share on other sites

10 minutes ago, தமிழகன் said:

அனந்தி வெறும் கஞ்சி குடித்தார்கள் புலிகள் என பொய்யுரைத்ததை இந்த கட்டுரை காட்டுகிறது. அண்ணன் சொன்னது போல் தடல்புடல் விருந்துதான் கொடுக்கப்பட்டுள்ளது.

பிட்டு அவிக்க கற்று கொடுக்க மறுநாள் ஆள் அனுப்பியதற்கும், அண்ணன் உண்ட உணவை குறிப்பெடுத்தும் ஒத்த நிகழ்வுகளே.

ஆ. சீமானிசம் வேறு பிரபாகரனிசம் வேறு. நாம் இந்திய ஒன்றியத்துக்கு உட்பட்டே எமது தமிழ் தேசிய அரசியலை முன் எடுப்பதாக இயக்கமாக இருந்த காலங்களிலேயே சொல்லப்பட்டுள்ளது.

பிரபாகரனிசமும் சீமானிசியமும் வெவ்வேறானவேயே.  விமர்சனங்களுக்கு அப்பால் பிரபாகரனிசம் என்றுமே இனவெறியை முன்நிறுத்தி தனது போராட்டங்களை நடத்தவில்லை.  சீமானிசம் என்றால் அது நாஸிசம் தான். இனவெறி தான் அதன் முக்கிய இலக்கு.   ஹிட்லரைப்போல் அவரது  இனவெறி  வாய்வீச்சு அரசியல் (populism)  கைதட்டும் விசிலடிக்கும் ஒரு கூட்டத்தை உருவாக்கினாலும் அதன்  அடிப்படையில் ஒரு குறிப்பட்டளவு வாக்குகளை பெற்றாலும்  1930 களில் ஜெர்மனிய மக்கள் இழைத்த தவறை தமிழ் நாட்டு மக்கள் இழைக்க மாட்டார்கள் என்பது ஒரு பார்வையாளனாக எனது நம்பிக்கை.  மற்றப்படி தமிழ் நாட்டு அரசியலை தமிழ் நாட்டு மக்கள் தான் முடிவு செய்வார்கள். அதில் வேறு எவரும் தலையீடு செய்ய முடியாது என்பதை ஏற்று கொள்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, tulpen said:

எனது நிலத்தை நான் ஆழ வேண்டும். ஆயிரம் ஆண்டுகளாய் நீங்கள் சுரண்டி தின்றது போதும் என்பது இனவெறியாகின் - உங்கள் வசையை நானும் நான் சார்ந்த கட்சியும் மகிழ்வாக ஏற்போம்.

எமது பெரிய எதிரிகள் தெலுங்கு வந்தேறிகள். மேதகு அவர்களை எதிரியாக பார்க்க வேண்டிய தேவை அவரது ஈழச் சூழலில் இல்லை. அதனால்தான் வைகோ, கொளத்தூர் மணி, வீரமணி என்று தெலுங்கர்களை அவர் நட்பாக ஏற்றார். ஆனால் இறுதியில் அவர்கள் தாம் யார் என்பதை காட்டினார்களா இல்லையா? 

ஆனால் எமக்கு இவர்களை எதிர்க்கும் தேவை இருக்கிறது. பார்பானிய ஆர் எஸ் எஸ் சைவிட ஆபத்தான இவர்களை அகற்றுவதுதான் எமது தலையான பணி.

இது இனவெறி அல்ல. தற்காப்பு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழகன் said:

மேதகு கோரியது ஈழத்தில் தனிநாடு. தமிழ்நாட்டில் எமது ஆட்சி அமையும் போது அதற்காக சகல உச்ச அளுத்தங்களையும் மைய அரசுக்கு கொடுப்போம்.  இதுதான் எமது கொள்கை நிலைப்பாடு.

அப்படி அளுத்தம் கொடுப்பதால் தமிழ்ஈழம் கிடைக்குமா? தமிழ்நாட்டு மாநில அரசின் ஆதரவை வைத்து இலங்கையில் ஒரு சிறிய கிராமசபை கூட அமைக்கமுடியாது ..நாங்கள் எதிர்பார்ப்பது இந்தியா மத்தியரசின் ஆதரவுடன் கூடிய தமிழ்நாட்டின் ஆதரவு இலங்கையில் சம்பந்தனும் இலங்கையரசுக்கும்.  உலகநாடுகளின் அரசுகளுக்கும் அளுத்தம்கொடுத்தபடிதான் இருக்கிறார் ஒரு சிறு முன்னேற்றமுமில்லை  முக்கிய்கேளவி நீங்கள் இந்தியானா ?😎

1 hour ago, tulpen said:

விமர்சனங்களுக்கு அப்பால் பிரபாகரனிசம் என்றுமே இனவெறியை முன்நிறுத்தி தனது போராட்டங்களை நடத்தவில்லை. 

மிகச் சரியான கருத்து  உண்மையும் கூட.  😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழகன் said:

இ. இருவரையும் ஒப்பிடுவது ஒவ்வொருவரின் தனி கருத்து. என் கருத்து யாதெனில் மேதகு இராணுவத்துறையில் செய்த சாதனைகளுக்கு சற்றும் குறையாத சாதனையை அண்ணன் ஏலவே அரசியல் களத்தில் செய்துவிட்டார். 

30 ஆண்டுகள் ஆயதப்போராட்டம் நடத்தி இலங்கையரசை உலகநாடுகளுக்கு எல்லாம் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியவருடன் தமிழ்நாட்டில் ஒரு நாள் கூட முதலமைச்சர் ..சட்டமன்ற உறுப்பினர்...பதவியில்லாதவரை எப்படி ஒப்பிடமுடியும் ?

இதுவரை  சீமான்  அரசியல் களத்தில் என்ன செய்துவிட்டார்?

Link to comment
Share on other sites

8 minutes ago, Kandiah57 said:

அப்படி அளுத்தம் கொடுப்பதால் தமிழ்ஈழம் கிடைக்குமா? தமிழ்நாட்டு மாநில அரசின் ஆதரவை வைத்து இலங்கையில் ஒரு சிறிய கிராமசபை கூட அமைக்கமுடியாது ..

அப்படிக் கூற முடியாது. தமிழ்நாட்டு மானிலம் தி.மு.க ஆட்சிக்கு உட்பட்டிருந்த போது... தமிழீழம் பற்றி முடிவெடுக்கும் உரிமையையும் மத்திய அரசு தி.மு.க தலைவருக்குக் கொடுத்திருந்ததையும் மறுக்க முடியாது. அச்சமயம் ஒரு தெலுங்கன் தலைவனாக இருந்ததால் எல்லாம் தொலைந்தது. ஒரு தமிழன் இருந்திருந்தால் இன்று நிலமை வேறாக இருந்திருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Paanch said:

22 minutes ago, Kandiah57 said:

நாங்கள் எதிர்பார்ப்பது இந்தியா மத்தியரசின் ஆதரவுடன் கூடிய தமிழ்நாட்டின் ஆதரவு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, nedukkalapoovan said:

ஆனால் எங்க அனந்தி அக்காவுக்கு சம்பலும் சோறும் தானே கொடுத்ததாமே.. என்று யாருக்கோ சமீபத்தில் பேட்டி கொடுத்திருந்தாய்களே.

குருவிக்கு பழைய கறள் இன்னும் ஏற்பைக் குடுக்குது😂

சமாதான காலத்தில் புலம்பெயர் தமிழர் எல்லாம் வன்னிக்குப் போன காலத்தில் தலைவர் சிலரைச் சந்தித்து இருந்தார். அப்போது உணவுத் தட்டுப்பாடு வன்னியில் இருக்கவில்லை.

பின்னர் சண்டை நடக்கும்போது, உணவுத் தட்டுப்பாடு இருந்தபோது போராளிகளுக்கே சரியான சாப்பாடு போகவில்லை. அப்போது சம்பலும் சோறும் கூட அமிர்தமான உணவுதான். ஆனால் சண்டை நடக்கும்போது அண்ணன் சீமானுக்கு தடல்புடலாக ஆமைக்கறி, கறி இட்லி எல்லாம் கொடுத்து அசத்தி இருந்தனர்😂 விருந்தோம்பல் எங்கள் பாரம்பரியமாச்சே.. எதிர்கால மேதகுவை கவனிக்காமல் விட்டிருப்பார்களா என்ன!

அதுசரி அனந்தி அக்கா எப்போது தலைவர் தனக்கு சம்பலும் சோறும் தலைவர் தந்தார் என்று சொன்னார்? சரியாக வீடியோவைப் பாருங்கள்.

9 hours ago, தமிழகன் said:

வங்க கடலின் இருபுறமும் எழுந்த சரிசமனான ஆளுமைகள் மேதகுவும் அண்ணனும். ஒருவரின் களம் படை சார்ந்து மற்றையவரின் களம் அரசியல்.

தலைவர் வராது வந்த மாமணி.

தமிழக ஸிம்மான் ஒரு மாயமான். நடிக்கப் பழகியதால் தலைவரை வைத்து, தமிழகத்தில் தமிழ்த்தேசியம் என்று தெலுங்கு வடுகர்களை வெளியேற்றும் இனவாத அரசியல் செய்கின்றார். அது இனவெறுப்பை ஆதரிக்கும் உங்களுக்கு சரியாக இருக்கலாம். ஆனால் தமிழகம் ஸிம்மானின் அரசியலை ஆதரிப்பதை விட பிஜேபியின் இந்துத்துவ அரசியலை ஆதரிப்பது மேல்.

Link to comment
Share on other sites

2 minutes ago, Kandiah57 said:

நாங்கள் எதிர்பார்ப்பது இந்தியா மத்தியரசின் ஆதரவுடன் கூடிய தமிழ்நாட்டின் ஆதரவு

'இலவு காத்த கிளி'. பாலர் பாடபுத்தகத்திலும் உள்ளது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

2009 வரை ஈழப்போராட்டத்தில் ஆனந்தி, மாவட்ட அரசியல் பொறுப்பாளர் ஒருவரின் மனைவி அவ்வளவு தான்..

அனந்தி அக்கா ஒரு முக்கிய போராளியின் மனைவி. கணவர் எழிலனை சரணடையக்கொடுத்து, காணாமல்போன அவரை இன்னமும் தேடும் ஒருவர். அவரைப் போல பலர் தங்கள் உறவுகளைத் தேடுகின்றார்கள். நீதிக்காகப் போராடுகின்றார்கள். ஆனால் புலம்பெயர்ந்து சொகுசாக இருக்கும் நாம் இதையெல்லாம் மறந்து, இன்னொரு ஷோ பார்க்க தமிழகத்தில் ஸிம்மான் பின்னால் போகவிழைகின்றோம்!

1 hour ago, தமிழகன் said:

எனது நிலத்தை நான் ஆழ வேண்டும். ஆயிரம் ஆண்டுகளாய் நீங்கள் சுரண்டி தின்றது போதும் என்பது இனவெறியாகின் - உங்கள் வசையை நானும் நான் சார்ந்த கட்சியும் மகிழ்வாக ஏற்போம்.

எமது பெரிய எதிரிகள் தெலுங்கு வந்தேறிகள். மேதகு அவர்களை எதிரியாக பார்க்க வேண்டிய தேவை அவரது ஈழச் சூழலில் இல்லை. அதனால்தான் வைகோ, கொளத்தூர் மணி, வீரமணி என்று தெலுங்கர்களை அவர் நட்பாக ஏற்றார். ஆனால் இறுதியில் அவர்கள் தாம் யார் என்பதை காட்டினார்களா இல்லையா? 

ஆனால் எமக்கு இவர்களை எதிர்க்கும் தேவை இருக்கிறது. பார்பானிய ஆர் எஸ் எஸ் சைவிட ஆபத்தான இவர்களை அகற்றுவதுதான் எமது தலையான பணி.

இது இனவெறி அல்ல. தற்காப்பு. 

இந்த இனவெறிக் கருத்தை யாழ் களத்தில் உள்ள ஸிம்மான் தம்பிகள் மெளனமாக ஆமோதிப்பார்கள். ஆனால் ஸிம்மானின் இனவெறி அரசியலை எதிர்க்கும் நம்மைப் போன்றவர்கள் சொன்னால் ஸிம்மான் அப்படிச் சொல்லவில்லையே.. அவர் இனவெறியாளர் இல்லையே என்று ஓடிவருவார்கள்.. ஆதாரம் கேட்பார்கள். ஸிம்மானிஸத்தை ஆதரிக்கும் தமிழகனின் கருத்தைத்தான் ஸிம்மானின் தம்பிகளும் உளப்பூர்வமாக நம்புகின்றார்கள்.. ஆனால் பொதுவெளியில் நல்லவர்களாகவும், மனிதாபிகளாகவும் காட்டிக்கொள்வார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Paanch said:

'இலவு காத்த கிளி'. பாலர் பாடபுத்தகத்திலும் உள்ளது.  

இதை மாற்றியமக்கவேணடும்  அப்போதான் நாங்கள் வெற்றி பெற முடியும் 😎😎😜😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, கிருபன் said:

குருவிக்கு பழைய கறள் இன்னும் ஏற்பைக் குடுக்குது

குருவிக்கு மட்டும் அல்ல ஆனந்தி அக்கா கடைசியாக சிவாஜிலிங்கத்துடன் தீருவிலில் நின்றுகொண்டு மாற்று இயக்கத்துக்கும்  நினைவு சின்னம் வைக்க வேணும் கொடி  பிடித்துக்கொண்டு நிண்டவ அன்று முதல்    அவவின் விம்பம் உடைந்து விட்டது . பிழையை சரி செய்வா என்று எதிர்பார்த்தேன் கெடுகுடி சொல் கேளாது என்பது உண்மையாகியுள்ளது .

நம்மை பொறுத்தவரை அந்த 30 வருட காலப்பகுதியில் இலங்கை அரசுக்கு எதிராக  புலி போராடியது மற்றைய இயக்கங்கள் புலியை  அழிக்க  போராடியதுடன்  புலிக்கு உதவிய தமிழக மற்றும் வடகிழக்கு தமிழ் மக்களையும்  அழித்தார்கள் போராட்டம் தொடங்கிய காலம் முதல் மாற்றுக்கருத்துக்களை விதைத்தார்கள் சொல்லெனா  பிரச்சனைகளை உண்மையில் போராடிய புலிகளுக்கு கொடுத்தார்கள் 2009 மவுனித்தபின்பும் இப்பவும் தொடர்கிறார்கள் யாழிலும் உண்டு தாங்கள்  தமிழர் என்று உணர்ந்து இருந்தால் இவ்வளவு பிரச்சனையும் வந்திருக்காது .

Link to comment
Share on other sites

26 minutes ago, Paanch said:

'இலவு காத்த கிளி'. பாலர் பாடபுத்தகத்திலும் உள்ளது.  

18 minutes ago, Kandiah57 said:

இதை மாற்றியமக்கவேணடும்  அப்போதான் நாங்கள் வெற்றி பெற முடியும் 😎😎😜😜

கிளியை மாற்றப் போகிறீர்களா அல்லது இலவம்பழத்தை மாற்றப் போகிறீர்களா?  எப்படி மாற்றினாலும், கிளி இலவம்பழத்துக்கு காத்திருந்து ஏமாறும் இயற்கையை மாற்றமுடியாதல்லவா?

உங்களின் ஏமாற்றத்தையும் மாற்றமுடியாது - சர்வதேச புவிசார் அரசியலும் இயற்கையானது.

39 minutes ago, கிருபன் said:

சமாதான காலத்தில் புலம்பெயர் தமிழர் எல்லாம் வன்னிக்குப் போன காலத்தில் தலைவர் சிலரைச் சந்தித்து இருந்தார்.

சொல்லுறன் எண்டு குறை நினைக்காதேயுங்கோ - சந்தித்தவர் அவரின் மாற்றீட்டு விம்பமாக செயற்பட்டவர். இறந்தவரும் அவரே என்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

அப்படி அளுத்தம் கொடுப்பதால் தமிழ்ஈழம் கிடைக்குமா? தமிழ்நாட்டு மாநில அரசின் ஆதரவை வைத்து இலங்கையில் ஒரு சிறிய கிராமசபை கூட அமைக்கமுடியாது ..நாங்கள் எதிர்பார்ப்பது இந்தியா மத்தியரசின் ஆதரவுடன் கூடிய தமிழ்நாட்டின் ஆதரவு இலங்கையில் சம்பந்தனும் இலங்கையரசுக்கும்.  உலகநாடுகளின் அரசுகளுக்கும் அளுத்தம்கொடுத்தபடிதான் இருக்கிறார் ஒரு சிறு முன்னேற்றமுமில்லை  முக்கிய்கேளவி நீங்கள் இந்தியானா ?😎

மிகச் சரியான கருத்து  உண்மையும் கூட.  😜

அளுத்தம் கொடுக்கும் வகையில் கொடுத்தால் எதுவும் சாத்தியமாகும். சாத்தியமாக்கும் வல்லமை படைத்தவர் அண்ணன் சீமான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, கிருபன் said:

அனந்தி அக்கா ஒரு முக்கிய போராளியின் மனைவி. கணவர் எழிலனை சரணடையக்கொடுத்து, காணாமல்போன அவரை இன்னமும் தேடும் ஒருவர். அவரைப் போல பலர் தங்கள் உறவுகளைத் தேடுகின்றார்கள். நீதிக்காகப் போராடுகின்றார்கள். ஆனால் புலம்பெயர்ந்து சொகுசாக இருக்கும் நாம் இதையெல்லாம் மறந்து, இன்னொரு ஷோ பார்க்க தமிழகத்தில் ஸிம்மான் பின்னால் போகவிழைகின்றோம்!

ஜீ நான் என்ன எழுதியிருக்கிறேன் என்று தொடர்ந்து வாசிப்பீர்கள் என நம்புகிறேன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, Kandiah57 said:

30 ஆண்டுகள் ஆயதப்போராட்டம் நடத்தி இலங்கையரசை உலகநாடுகளுக்கு எல்லாம் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியவருடன் தமிழ்நாட்டில் ஒரு நாள் கூட முதலமைச்சர் ..சட்டமன்ற உறுப்பினர்...பதவியில்லாதவரை எப்படி ஒப்பிடமுடியும் ?

இதுவரை  சீமான்  அரசியல் களத்தில் என்ன செய்துவிட்டார்?

மேதகுவை பயங்கரவாதி என பட்டியலிட்டு பெயர் சொல்லவே நடுங்கிய நாட்களில், அவரை பட்டி தொட்டி எங்கும் எடுத்து சென்று, என் போன்ற ஆயிரகணக்கானவர்களை தன் வசபடுத்தி, 10 ஆண்டுகளில் 10 சதவீத மக்களை தட்டி எழுப்பி தமிழ் தேசியம் பக்கம் நிறுத்தியது உலக மகா சாதனை. 

இது மேதகுவின் சாதனைகளுக்கு ஒன்றும் சளைத்ததல்ல.

ஆம் நான் இந்தியன். அண்ணன் சீமானும் நாம் தமிழர் தம்பிகள் எல்லோரும் இந்தியரே.

நாம் வேண்டி நிற்பது தெலுங்கு குடிகள், பார்பனிய கும்பல்கள் ஆதிக்கம் அற்று எமது நிலத்தை, இந்திய ஒன்றியத்துள், கன்னடிகா, மராத்திகள், பெங்காலிகள் போல் ஆளும் உரிமையை. அது கைகூடும் போது இந்திய தமிழ் இனத்தின் மீது படிந்த இருள் அகலும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, தமிழகன் said:

அளுத்தம் கொடுக்கும் வகையில் கொடுத்தால் எதுவும் சாத்தியமாகும். சாத்தியமாக்கும் வல்லமை படைத்தவர் அண்ணன் சீமான்.

முதலில் ஒன்றைத் தெளிவாகப்புரிந்து கொள்ளுங்கள். சீமானை  நாங்கள் எதிர்கவில்லை  மாறாக வரவேற்கிறோம் சீமான் நன்றாக தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  அந்தயுரிமை அவருக்குண்டு  நாங்கள்எதிர்பபது தமிழீழப்போராட்டத்தை தமிழ்நாட்டு அரசியலுடன் போட்டு குழப்புவதை. இந்தக்குழப்பம் இரண்டுகப்பலில் கால் வைப்பது போன்றது நம்பும்படியான விடயங்களை சொல்ல வேண்டும். இந்தியாவுக்குள்ள  தண்ணீரை  இநதியாவுக்கை  (தமிழ்கொநாடு)கொண்டு வாருங்கள்  இதுவே  முடியாத நீங்கள் எப்படி இலங்கைத்தமிழர் பிரச்சனையை தீர்க்க உதவமுடியும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, தமிழகன் said:

மேதகுவை பயங்கரவாதி என பட்டியலிட்டு பெயர் சொல்லவே நடுங்கிய நாட்களில், அவரை பட்டி தொட்டி எங்கும் எடுத்து சென்று, என் போன்ற ஆயிரகணக்கானவர்களை தன் வசபடுத்தி, 10 ஆண்டுகளில் 10 சதவீத மக்களை தட்டி எழுப்பி தமிழ் தேசியம் பக்கம் நிறுத்தியது உலக மகா சாதனை. 

இது மேதகுவின் சாதனைகளுக்கு ஒன்றும் சளைத்ததல்ல.

ஆம் நான் இந்தியன். அண்ணன் சீமானும் நாம் தமிழர் தம்பிகள் எல்லோரும் இந்தியரே.

நாம் வேண்டி நிற்பது தெலுங்கு குடிகள், பார்பனிய கும்பல்கள் ஆதிக்கம் அற்று எமது நிலத்தை, இந்திய ஒன்றியத்துள், கன்னடிகா, மராத்திகள், பெங்காலிகள் போல் ஆளும் உரிமையை. அது கைகூடும் போது இந்திய தமிழ் இனத்தின் மீது படிந்த இருள் அகலும்.

இலங்கைத் தமிழர் பிரச்சனையை தமிழ்நாட்டின் ஆதரவு இல்லாமால்  மத்தியரசினால்  தீர்த்து வைக்கமுடியும்  ஆனால் மத்தியரசின் ஆதரவு இல்லாமால் தமிழ்நாட்டினால் தீர்தது வைக்க முடியாது. (100%தமிழக மக்கள் சேர்த்தாலும்)ஒர் இந்தியன்  இந்தியாவில் எங்கும் வாழ முடியும். அவன் வந்துதேறுகுடியில்லை. ஆகவே தமிழ்நாட்டில் தொலுங்கர் வாழ முடியும். அரசியல்.....வேலைசெய்ய. ...முடியும் 

1 hour ago, கற்பகதரு said:

கிளியை மாற்றப் போகிறீர்களா அல்லது இலவம்பழத்தை மாற்றப் போகிறீர்களா?  எப்படி மாற்றினாலும், கிளி இலவம்பழத்துக்கு காத்திருந்து ஏமாறும் இயற்கையை மாற்றமுடியாதல்லவா

2 hours ago, Kandiah57 said:

நாங்கள் எதிர்பார்ப்பது இந்தியா மத்தியரசின் ஆதரவுடன் கூடிய தமிழ்நாட்டின் ஆதரவு

கிளியையும்....இலவம்பழத்தையும்....மாற்றமுடியாது.  ஆனால். இந்தியா மத்தியரசையும். தமிழ்நாட்டுயரசையும்...இலங்கைத்தமிழர் பிரச்சனையில்  ஒத்தகருததுடையவரகளாய் மாற்ற முடியும் (ஆதரவு)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.