Jump to content

பிணி தந்த பாடல்கள்.........பசிக்கு உணவளித்தவர்களைப் பாடியது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

திருப்தியுடன் உண்ட சுகத்தில், கவிஞர்கள் எழுதிய பாடல்களைப் போலவே, பசிப்
பிணியாலும் இதர உடற்பிணியாலும் வருந்திய கவிஞர்களாலும் அருமையான பாடல்கள்
பாடப் பட்டுள்ளன.

அவ்வையார் பாடாத பொருள் இல்லை. பசிக்கு உணவளித்தவர்களைப் பாடியது போலவே,
பசிப்பிணியை உணர்த்தும், வயிற்றையும் நொந்து அதனுடன் பேசுவதாக ஒரு பாடல்
பாடி இருக்கிறார். "ஏ வயிறே! உன்னோடு வாழ்வது
அரிதான செயலாகிவிட்டது. ஒரு நாளைக்கு உணவில்லாமல் இருக்கக் கூடாதா என்றால்
கேட்க மறுக்கிறாய். எங்காவது விருந்துக்குப் போனால் இரண்டு நாட்களூக்கு
போதுமான அளவு உண்டுவிடு என்றாலூம் கேட்பதில்லை. என் வலி உனக்குத்
தெரியவில்லயே!" என்று பாடுகிறார்.

ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளைக்கு ஏலென்றால் ஏலாய் - ஒருநாளும்
என் நோவறியாய் இடும்பைகூர் என் வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது.


(இடும்பை - துன்பம்; வறுமை)

அவ்வையார் வயிற்றோடு பேசியது போல மதுரகவிராயர் என்ற புலவர் தன் வறுமையுடன் பேசுகிறார். வறுமை நோயால் மிகவும் வாடிய அவர் அக்காலத்தில்
இரப்போர்க்கு இல்லை என்னாது வாரி வழங்கிய காளத்தியப்பர் என்ற வள்ளலைப்
பார்த்துப் பாடல் பாடிப் பரிசில் பெறலாம் என்று கருதி வள்ளலின் ஊரான
திருநின்றை
யூர் நோக்கிச் செல்கிறார். இடைவழியில் இருட்டி விட்டது. எனவே அருகில்
இருந்த ஒரு மண்டபத்தில் இரவைக் கழிக்க எண்ணிப் படுத்தார். படுத்தபடியே
சிந்திக்கிறார்.
நாளை தன் வறுமை தன்னை விட்டு நீங்கிவிடும் என்ற நம்பிக்கை உண்டாகிறது.
பின் தன்னை வாட்டும் வறுமையிடம் பேசுகிறார்:

"ஏ வறுமையே! என்னை விட்டு நீங்காத என் நிழல்போல என்னைப் பின்பற்றி இவ்வளவு
நாளும் நீ திரிந்து வருந்தினாய். நாளைக்கு நான் திருநின்றையூர் சென்று
வள்ளல் காளத்தியப்பரைக் காணப்போகிறேன். தமிழ்ப் பாடல்களைப் பாடப் போகி
றேன். அவ் வள்ளல் அவற்றைக் கேட்டதும் பொன்னும் பொருளும் வாரி வழங்குவார்.
உன்னை ஓட்டி விடுவார். பாவம்! நாளைக்கு நீ எங்கேயோ நான் எங்கேயோ?
போகட்டும், இன்றைக்குச் சற்று என்னுடன் இருந்து விட்டுப் போ!"

நீளத் திரிந்துழன்றாய் நீங்கா நிழல்போல
நாளைக்(கு) இருப்பையோ நல்குரவே - காளத்தி
நின்றைக்கே சென்றக்கால் நீ எங்கே நான் எங்கே
இன்றைக்கே சற்றே இரு.


(உழன்றாய் - வருந்தினாய்; நல்குரவு - வறுமை; காளத்தி - வள்ளல் காளத்தியப்பர்; நின்றை - திருநின்றைவூர்.)

உள்ளப்பிணி மட்டுமல்ல உடற்பிணிகளும் பாடல் பெற்றிருக்கின்றன.

சமணத் தலைவர் தருமசேனராக நாவுக்கரசர் வாழ்ந்தபோது அவரைத் தடுத்தாட் கொள்ள சிவபெருமான் அவருக்குக் கடுமையான சூலை நோயைக் கொடுத்துச்
சோதிக்கிறார். சமண வைத்தியர்கள் தாம் அறிந்த வழியிலெல்லாம் அந்நோய்
தீர்க்க முயன்றும் தீர்க்கப்படாத நிலையில் அவரது தமக்கையான திலகவதியாரின்
அறிவுரைப் படி திருவதிகைக் கெடில வீராட்டானம் சென்று அங்கு உறையும்
வீரட்டானேஸ்வரரிடம் பாடி முறையிடுகிறார்.அற்புதமான அப்பாடல்களில் தன்னை
வருத்தும் சூலை நோயின் கடுமையைச் சொல்லி இறைஞ்சுகிறார்:

கூற்று ஆயினவாறு விலக்கலீர்;
கொடுமை பல செய்தன அறியேன்;
ஏற்றாய், அடிக்கே இரவும் பகலும்
பிரியாது வணங்குவன், எப்பொழுதும்;
தோற்றாது என் வயிற்றில் அகம்படியே
குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன்; அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே.

 

++++++

++++

++

+

.....................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும், சூலை நோயின் கடுமை குறித்து,

'சுடுகின்றது சூலை' எனவும், 'வலிக்கின்றது சூலை' எனவும்,
'என் வயிற்றின் அகம்படியே கலக்கி மலக்கிட்டுக் கவர்ந்து தின்ன அலுத்திட்டேன்'
எனவும்,'வேர்த்தும் புரண்டும் விழுந்தும் ...என் வேதனை' என்றும் பாடுகிறார்.

நம் காலத்துக் கவிஞரான கவிமணியை சிரங்கு நோய் வருத்துகிறது. என்ன மருந்து
எடுத்துக் கொண்டும் சிரங்கு ஆறுவதாய் இல்லை. வேதனையான அவ்வனுபவத்தை
நகைச்சுவையுடன் பாடுகிறார்.

சிரங்கை தாஜா செய்ய 'சிரங்கப்பராயர்' என்று உயர்வு நவிற்சியில்
விளிக்கிறார். சிரங்கப்பராயர் தனக்குத் தந்த சீதனம் பற்றிப்
பட்டியலிடுகிறார்:

முத்து பவழம் முழுவயிரம் மாணிக்கம்
பத்தியொளி வீசும் பதக்கமெல்லாம் - சித்தன்
சிரங்கப்பராயன் சிறியேன் எனக்குத்
தரங்கண்டு தந்த தனம்.

சிரங்கு நீங்க மேற்கொண்ட மருந்துகளால் பயன் இல்லாததைச் சொல்லி முருகப் பெருமானிடம் வேண்டுகிறார்:

செந்தில்குமரா திருமால் மருகா என்
சிந்தை குடிகொண்ட தேசிகா - நொந்த இம்
மெய்யிற் சிரங்கை விடியுமட்டுஞ் சொரிய
கையிரண்டும் போதாது காண்.

வாரம் முடங்காமல் வைப்பெண்ணெய் தேய்த்திட்டேன்
சார மருந்தெல்லாம் சாப்பிட்டேன் - வீரம்
குறைந்திடக் காணேன் குமரா சிரங்கு
மறைந்திடத் தா நீ வரம்.

முருகனிடம் முறையிட்டும் பயனில்லை. எனவே 'சாட்சிக்காரன் காலில் விழுவ
திலும் சண்டைக்காரன் காலில் விழுவதே மேல்' என்று சிரங்கப்பராயரிடமே சரணடை கிறார்:

உண்ட மருந்தாலும் உடல் முழுவதும் பூசிக்
கொண்ட மருந்தாலும் குணமிலையே - மண்டு
சிரங்கப்பராயா சினம் மாறிக் கொஞ்சம்
இரங்கப்பா ஏழை எனக்கு.

'இடுக்கண் வருங்கால் நகுக' என்று சொன்னார் அல்லவா வள்ளுவர்? அதன்படி கவிஞரிடம் வேதனையிலும் வெண்பா கொஞ்சி விளையாடுகிறது.

இவரது அற்புதமான வெண்பாவில் உளம் பறிகொடுத்ததால் தான் ரசிகமணி, தன் ஒரே
மகனின் இழப்பையும் மறந்து அவர் அனுப்பிய இரங்கப்பாவைப் பாராட்டுகிறார்.

ரசிகமணி டி.கே.சி அவர்களின் ஒரேமகனும் சிறந்த கவிஞருமான செல்லையா என்று
செல்லமாய் அழைக்கப்பட்ட தீபன் என்கிற தீத்தாரப்பன்- இளம் வயதில் அகால
மரணம் அடைந்தபோது, கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை அவர்கள், மனம் உருக
கீழ்க்கண்டவாறு ஒரு இரங்கற்பாவினை அனுப்பி வைத்தார்.

எப்பாலும் போற்றும் இசைத்தமிழ்ச் செல்வா என்
அப்பா அழகிய செல்லையா நான் - இப்பாரில்
சிந்தை குளிரச் சிரித்தொளிரும் உன் முகத்தை
எந்தநாள் காண்பேன் இனி.

'அப்பா' என்ற அருமைச் சொல்லைப் படித்ததும் அழுது புலம்ப வேண்டாமா தந்தை?
ஆனால் ரசிகமணி எந்நிலையிலும் நல்ல கவிதையை ரசிப்பவர் அல்லவா? அதனால் அவர்
தன் இழப்பை மறந்து "இப்படி ஒரு பாடல் கிடைக்குமானால் எத்தனை பிள்ளை
களையும் இழக்கலாமே" என்றாராம்.

Link to comment
Share on other sites

பாடசாலைக்காலத்தில் படித்த ஒரு இலக்கியப்பாடல் நினைவுக்கு வருகிறது.பசிப்பிணியால் வாடிய சத்திமுத்தப்புலவரின் பாடல்.

இனிய கருத்துச்சுவையும்,உவமைகளும் நிரம்பியது.கவிபாடிப் பொருள்பெற்றுச் செல்ல வந்த கவிஞர் காலதாமதமாவதால் தன்நிலையை தனது இல்லாளுக்குத் தெரிவிப்பதாக இப்பாடல் அமைகிறது.

“நாராய் நாராய் செங்கால் நாராய்

பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன

பவளக் கூர்வாய் செங்கால் நாராய்

நீயுநின் பெடையும் தென்றிசைக் குமரியாடி

வடதிசைக்கேகுவீராயின்

எம்மூர்ச் சத்திமுத்த வாவியுள் தங்கி

நனைசுவர்க் கூரைக் கனைகுரற் பல்லி

பாடு பார்த்திருக்குமென் மனைவியைக் கண்டு

"எங்கோன் மாறன்வழுதி கூடலில்

ஆடையின்றி வாடையின் மெலிந்து

கையது கொண்டு மெய்யது பொத்திக்

காலது கொண்டு மேலது தழீஇப்

பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்

ஏழையாளனைக் கண்டனம் எனுமே

என்கிறது அப்பாடல்.

வரி

பொருள்

நாராய் நாராய் செங்கால் நாராய்

நாரையே நாரையே சிவந்த கால்களை உடைய நாரையே

பழம்படு பனையின் கிழங்குபிளந்தன்ன

பழங்கள் நிறைந்த பனைமரத்து கிழங்கை பிளந்தது போன்ற

பவளக் கூர்வாய் செங்கால்நாராய்

பவளம் போல் சிவந்த கூர்மையான அலகை கொண்டசெங்கால் நாரையே

நீயும் நின் பேடையும் தென்திசைக் குமரியாடி

நீயும் உன் பெட்டையும் தென் திசையில் உள்ள கன்யாகுமரியில்நீராடிய பின்

வட திசைக்கு ஏகுவீராயின்

வட திசைக்கு திரும்புவீரானால்

எம்மூர் சத்திமுத்த வாவியுள் தங்கி

எங்கள் ஊரில் உள்ள சத்திமுத்த குளத்தில் தங்கி

நனைசுவர் கூரை கனைகுரல்பல்லி

நனைந்த சுவர்களையும் கூரையையும் கனைக்கும் பல்லிகளும்கொண்ட

பாடு பாத்திருக்கும் என்மனைவியை கண்டு

வீட்டில் என்னை எதிர்பார்த்திருக்கும் என் மனைவியிடம்

எங்கோன் மாறன் வழுதிக்கூடலில்

எங்கள் அரசன் மாறன் வழுதி ஆளும் மதுரையில்

ஆடையின்றி வாடையில்மெலிந்து

குளிர்காலத்தில் சரியான ஆடையில்லாமல் உடல்மெலிந்துபோய்

கையது கொண்டு மெய்யதுபொத்தி

போர்வை இல்லாததால் கையைக் கொண்டு உடம்பை பொத்தி

காலது கொண்டு மேலது தழீஇப்

காலைக் கொண்டு என் உடலை தழுவி

பேழையில் இருக்கும் பாம்பெனஉயிர்க்கும்

பெட்டிக்குள் பிடித்து வைத்திருக்கும் பாம்பை போல உயிரைபிடித்து வைத்திருக்கும்

ஏழையாளனை கண்டனம் எனமே

உன் ஏழைக் கணவனை கண்டோம் என்று சொல்லுங்கள்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.