Jump to content

தமிழக சட்டமன்ற தேர்தல் 2021 - முடிவுகள்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழகன் said:

ஆனால் பெரும்பாலான உறவுகள் தீம்காவை எதிரிகளாக கொண்டுள்ளார்கள் என்பதும் அண்ணணை மேதகுவின் மறு அவதாரமாகவே கொண்டுள்ளார்கள் என்பதும் இங்கே எழுதும் பல உறவுகளின் உணர்வை அவதானித்ததில் தெரிகிறது.

மேதகுவிற்கு  மறு அவதாரம் உலகில் எங்கும் இதுவரையில்லை....இனிமேலும்  வரப்போவதுமில்லை...மேதகு தான் மேதகு  மற்றவர்கள். மேதகுவாகமுடியாது..எங்களுக்கு உதவவில்லை என்பதற்காக  தமிழ்நாட்டுமக்களை எதிரியாகப்பார்க்கும் மனநிலை ஈழத்தமிழரிடமில்லை.....உதவவில்லை என்று சொல்வதை வைத்து அவர்களை நாங்கள் எதிரியாகக்கருதுவதாய் எண்ணவேண்டாம் ...

Link to comment
Share on other sites

  • Replies 152
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Nathamuni said:

கமல் வெற்றி பறிக்கப்பட்டிருக்கலாம்.

கமல் என்ற ஒருவரின் இடத்தைப் பறிப்பதை   விட அ  தி மு க வின் பல இடங்களை பறித்திருக்கலாம்
தி மு கவின் சில இடங்களைப் பறித்திருக்கலாம்
அப்படிப் பறித்திருந்தால் பா ஜ க விசுவரூபம் எடுத்திருக்கலாம்  
எது சுலபம் எனப்பார்க்க வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:
தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தின் ஆட்சி அமைவதனால் இலங்கைத் தமிழரின் இன விடுதலைக்கும் பேராதரவு கிடைக்குமென நம்பிக்கை கொண்டுள்ளோம்.
 
- மாவை சேனாதிராஜா.-
 
யாருக்கு தளபதி??? 😊

சும்மா இருங்கோ சிறித்தம்பி!  லண்டனிலை  கிழவனுக்கும் இளவரசர் பட்டம் மாதிரி தமிழ்நாட்டிலை ஒருத்தருக்கு தளபதி  பட்டம். இந்த பட்டத்துக்கு அடுத்த வாரிசு  ரெடி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, வாத்தியார் said:

கமல் என்ற ஒருவரின் இடத்தைப் பறிப்பதை   விட அ  தி மு க வின் பல இடங்களை பறித்திருக்கலாம்
தி மு கவின் சில இடங்களைப் பறித்திருக்கலாம்
அப்படிப் பறித்திருந்தால் பா ஜ க விசுவரூபம் எடுத்திருக்கலாம்  
எது சுலபம் எனப்பார்க்க வேண்டும்

அப்படி இல்லை, வாத்தியார்,

அதிமுக தான் பிஜேபியின் அடிப்படை உறுப்பினர் பலம், அதன் மேலதான், திமுக கூட்டணியில் இருந்து கிளப்ப போகிறார்கள்.

பிஜேபியின் நிகழ்ச்சி நிரலுக்கு ஒத்து வராத ஆட்களை அரசியலுக்கு வெளியே நிறுத்தி விடப்பட்டிருக்கலாம்.

பலர் நினைப்பதுபோல, வாக்கு இயந்திரம், பாதுகாப்பில் இருக்கும் போது, வாக்குகளை மாத்துவது முடியாத காரியம்.

எண்ணப்படுவதுக்காக மீண்டும், இயக்க நிலைக்கு வரும்போது, இலகுவாக கும்பலோடு, கும்பலாக நின்று, கையில் உள்ள போன் மூலமாக  அண்மையில் இருந்து மாத்தி விடுவார்கள். மாத்த முடியும்.

கடைசி வரை உயர்வில் இருந்த, கமல் வெற்றியை இழந்த விதம் சந்தேகமானது. அதேபோல கடம்பூர் ராஜு தினகரனை வீழ்த்தியதும், மதுரையில் விஞ்ஞானி வெற்றியும் சந்தேகமானது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாக்குக்கு பணம் கொடுத்து வெற்றி பெற்ற வெற்றியாளர்களை  கொண்டாடும் ஈழத்தமிழர்களை நினைக்க மிகவும் பரிதாபமாக உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

வாக்குக்கு பணம் கொடுத்து வெற்றி பெற்ற வெற்றியாளர்களை  கொண்டாடும் ஈழத்தமிழர்களை நினைக்க மிகவும் பரிதாபமாக உள்ளது.

செலவழித்த பணத்தினை எடுக்க ஓவர் தடவை வேலைகள் செய்ய வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, குமாரசாமி said:

1 நபர் மற்றும் , ’வென்றால் மகிழ்ச்சி தோற்றால் பயிற்சி தொடரும் எங்கள் முயற்சி இது எளிய மக்களின் அரசியல் புரட்சி.! A 5 2021 மனம்தக்க நூ தமிர் புரட்சி எப்போதும் வெல்லும்..! அதை நாளை மலரும் நாம் தமிழர் அரசு சொல்லும்.’ எனச்சொல்லும் உரை இன் படமாக இருக்கக்கூடும்

தமிழ்நாட்டில். 40%தெலுங்கர் வீட்டிலே தெலுங்கு பேசியும் வீட்டுக்கு வெளியில் தமிழில் படித்தும்...கதைத்தும் வாழ்கிறார்கள்  ...பெரும்பாலான தமிழர்கள் ஆங்கிலத்தில் படித்தும்...பேசியும் வாழ்கிறார்கள்  மேற்படி 40%தெலுங்கரையும்  தமிழர்களென்று  எற்று நாம்தமிழர் அரசியல் செய்யுமாயின். வெற்றி வாய்ப்புண்டு  இல்லையேல் நாமதமிழருக்கு  எதிர்காலமில்லை ..தமிழ்நாட்டல் ஆட்சியும் அமைக்கமாட்டார்கள் 

அடிபடவரவேண்டாம்..அமைதியாக. கருத்துக்களை வைக்கவும்  நன்றி வணக்கம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

செலவழித்த பணத்தினை எடுக்க ஓவர் தடவை வேலைகள் செய்ய வேண்டும்.

சீமானுக்கு ஆதரவு கொடுத்தவர்களை திட்டுபவர்கள் எதற்காக திமுக வை ஆதரிக்கின்றார்கள்?

Link to comment
Share on other sites

2 hours ago, தமிழகன் said:

அடுத்த 5 வருடம் அண்ணனுக்கு கடினமாக இருக்கும். அதற்காக அண்ணன் பிஜேபி பக்கம் தந்திரோபாயமாக சார வேண்டியும் வரலாம்.

ஐயா,
தங்களுடைய வெளிப்படை தன்மை எனக்கு பிடித்திருக்கின்றது. நாதக என்பது பிஜேபி இன் B டீம் என்பதனை நாம் திருப்பி திருப்பி சொன்னதை நீங்கள் அக் கட்சியின் உள்ளக உறுப்பினராக உறுதி செய்து உள்ளீர்கள்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kandiah57 said:

தமிழ்நாட்டில். 40%தெலுங்கர் வீட்டிலே தெலுங்கு பேசியும் வீட்டுக்கு வெளியில் தமிழில் படித்தும்...கதைத்தும் வாழ்கிறார்கள்  ...பெரும்பாலான தமிழர்கள் ஆங்கிலத்தில் படித்தும்...பேசியும் வாழ்கிறார்கள்  மேற்படி 40%தெலுங்கரையும்  தமிழர்களென்று  எற்று நாம்தமிழர் அரசியல் செய்யுமாயின். வெற்றி வாய்ப்புண்டு  இல்லையேல் நாமதமிழருக்கு  எதிர்காலமில்லை ..தமிழ்நாட்டல் ஆட்சியும் அமைக்கமாட்டார்கள் 

அடிபடவரவேண்டாம்..அமைதியாக. கருத்துக்களை வைக்கவும்  நன்றி வணக்கம்..

40%தெலுங்கர்??

only 6% but 42 MLAs in last Assembly including speaker

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Nathamuni said:

எண்ணப்படுவதுக்காக மீண்டும், இயக்க நிலைக்கு வரும்போது, இலகுவாக கும்பலோடு, கும்பலாக நின்று, கையில் உள்ள போன் மூலமாக  அண்மையில் இருந்து மாத்தி விடுவார்கள். மாத்த முடியும்.

நீங்கள் கூறுவது போல் நடப்பதற்குச் சந்தர்ப்பங்கள் உள்ளன தான்
அப்படியென்றால் மொத்த வாக்குச் சாவடிகளிலும் செய்திருக்கலாமே?
ஏன் அப்படி நடக்கவில்லை ? காரணம் என்ன ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kandiah57 said:

தமிழ்நாட்டில். 40%தெலுங்கர் வீட்டிலே தெலுங்கு பேசியும் வீட்டுக்கு வெளியில் தமிழில் படித்தும்...கதைத்தும் வாழ்கிறார்கள்  ...பெரும்பாலான தமிழர்கள் ஆங்கிலத்தில் படித்தும்...பேசியும் வாழ்கிறார்கள்  மேற்படி 40%தெலுங்கரையும்  தமிழர்களென்று  எற்று நாம்தமிழர் அரசியல் செய்யுமாயின். வெற்றி வாய்ப்புண்டு  இல்லையேல் நாமதமிழருக்கு  எதிர்காலமில்லை ..தமிழ்நாட்டல் ஆட்சியும் அமைக்கமாட்டார்கள் 

அடிபடவரவேண்டாம்..அமைதியாக. கருத்துக்களை வைக்கவும்  நன்றி வணக்கம்..

2 minutes ago, Nathamuni said:

40%தெலுங்கர்??

only 6% but 42 MLAs in last Assembly including speaker

இல்ல நாதமுனி! கந்தையர் ஏதோ சொல்ல வாறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, zuma said:

ஐயா,
தங்களுடைய வெளிப்படை தன்மை எனக்கு பிடித்திருக்கின்றது. நாதக என்பது பிஜேபி இன் B டீம் என்பதனை நாம் திருப்பி திருப்பி சொன்னதை நீங்கள் அக் கட்சியின் உள்ளக உறுப்பினராக உறுதி செய்து உள்ளீர்கள்.
 
ஹெல்லோ அண்ணை,

எப்படி சங்கதிகள்? குளு குளு என்று இருக்குமே....🤔

கெதியா வெக்கை தெரியும்... 😁

2 minutes ago, வாத்தியார் said:

நீங்கள் கூறுவது போல் நடப்பதற்குச் சந்தர்ப்பங்கள் உள்ளன தான்
அப்படியென்றால் மொத்த வாக்குச் சாவடிகளிலும் செய்திருக்கலாமே?
ஏன் அப்படி நடக்கவில்லை ? காரணம் என்ன ?

அப்படி நடந்தால், மெசினில் சுத்தி விட்டார்கள் என்ற உண்மை தெரிந்து விடும்.

தமக்கு சார்பாக இருக்க கூடியவர்கள் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டு, அலுப்பு தரக்கூடியவர்கள் வெற்றி மறுதலிக்கப்பட்டு இருக்கலாம் அல்லவா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

அப்படி நடந்தால், மெசினில் சுத்தி விட்டார்கள் என்ற உண்மை தெரிந்து விடும்.

தமக்கு சார்பாக இருக்க கூடியவர்கள் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டு, அலுப்பு தரக்கூடியவர்கள் வெற்றி மறுதலிக்கப்பட்டு

மக்கள் மாறிவிட்டார்கள்.. எல்லோருமே தாமரையைத் தான் விரும்புகின்றார்கள்..
இந்தியாவிலேயே தாமரை தான் முன்னணி... என்று கதை விட முடியாதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

இல்ல நாதமுனி! கந்தையர் ஏதோ சொல்ல வாறார்.

கந்தையர், விசயத்தை டபெக்கெண்டு சொல்லி போட்டு, சண்டையும் பிடிக்க வேண்டாம் எண்டு சொல்லிப்போட்டு, ஈசிசேர் இல விழுந்து படுத்திருப்பார்.

முதலில் 40% தெலுங்கர்கள் இல்லை என்று சொல்ல வந்தேன்.

பிரித்தானியாவில், கணக்கெடுப்பு நடாத்திய போது, யூதர்கள், 0.1 வீதத்துக்கு குறைவு என்று சொல்லப்பட்டது. பார்த்தால், அவர்கள் ஆங்கிலேய பெயர்களை வைத்துக்கொண்டு, தம்மை ஆங்கிலேயர்களாக இனம் காட்டி இருக்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது.

இலங்கையில், போர்த்துக்கேயர் காலத்தில், மலையாளிகள் பெருமளவில் குடி வந்தார்கள், அவர்களில் பலர் இன்று சிங்களவர்கள், தமிழர்கள். எப்படி தம்மை மலையாளிகள் என்று சொல்ல முடியாதவாறு மொழியே தெரியாதோ, அதேபோலத்தான் தெலுங்கர்களும். 

தெலுங்கு உரிமை என்று சொல்லி கிளம்பிய இரண்டொருவர், அதில் குட்டையினை கிளப்பி, அரசியல் செய்யலாம் என்று கிளம்பியவர்கள். முடியவில்லை. இவர்கள் தான் இந்த 40% கதை விட்டவர்கள்.   

3 minutes ago, வாத்தியார் said:

மக்கள் மாறிவிட்டார்கள்.. எல்லோருமே தாமரையைத் தான் விரும்புகின்றார்கள்..
இந்தியாவிலேயே தாமரை தான் முன்னணி... என்று கதை விட முடியாதா?

அதுக்குரிய வேலைகள் நடக்கின்றன. விரைவில் புரிவோம்.

Link to comment
Share on other sites

21 minutes ago, Nathamuni said:

ஹெல்லோ அண்ணை,

எப்படி சங்கதிகள்? குளு குளு என்று இருக்குமே....🤔

கெதியா வெக்கை தெரியும்... 😁

தம்பிகளுக்கு தமிழகத்தில் மரண அடி கிடைத்துள்ளது, அடுத்த முறை தமது எஜமான் சங்கிகளுடன்  இணைத்து தேர்தலை சந்திப்பார்கள் என எதிர்பார்ப்போம்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, zuma said:

தம்பிகளுக்கு தமிழகத்தில் மரண அடி கிடைத்துள்ளது, அடுத்த முறை தமது எஜமான் சங்கிகளுடன்  இணைத்து தேர்தலை சந்திப்பார்கள் என எதிர்பார்ப்போம்.
 
அப்படியா பார்க்கிறீர்கள்... சரி, சரி...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, Nathamuni said:

பிரித்தானியாவில், கணக்கெடுப்பு நடாத்திய போது, யூதர்கள், 0.1 வீதத்துக்கு குறைவு என்று சொல்லப்பட்டது. பார்த்தால், அவர்கள் ஆங்கிலேய பெயர்களை வைத்துக்கொண்டு, தம்மை ஆங்கிலேயர்களாக இனம் காட்டி இருக்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது.

இதே வழியை இன்று சீனர்களும் கடைப்பிடிக்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, Nathamuni said:

கந்தையர், விசயத்தை டபெக்கெண்டு சொல்லி போட்டு, சண்டையும் பிடிக்க வேண்டாம் எண்டு சொல்லிப்போட்டு, ஈசிசேர் இல விழுந்து படுத்திருப்பார்.

முதலில் 40% தெலுங்கர்கள் இல்லை என்று சொல்ல வந்தேன்.

பிரித்தானியாவில், கணக்கெடுப்பு நடாத்திய போது, யூதர்கள், 0.1 வீதத்துக்கு குறைவு என்று சொல்லப்பட்டது. பார்த்தால், அவர்கள் ஆங்கிலேய பெயர்களை வைத்துக்கொண்டு, தம்மை ஆங்கிலேயர்களாக இனம் காட்டி இருக்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது.

இலங்கையில், போர்த்துக்கேயர் காலத்தில், மலையாளிகள் பெருமளவில் குடி வந்தார்கள், அவர்களில் பலர் இன்று சிங்களவர்கள், தமிழர்கள். எப்படி தம்மை மலையாளிகள் என்று சொல்ல முடியாதவாறு மொழியே தெரியாதோ, அதேபோலத்தான் தெலுங்கர்களும். 

தெலுங்கு உரிமை என்று சொல்லி கிளம்பிய இரண்டொருவர், அதில் குட்டையினை கிளப்பி, அரசியல் செய்யலாம் என்று கிளம்பியவர்கள். முடியவில்லை. இவர்கள் தான் இந்த 40% கதை விட்டவர்கள்.   

அதுக்குரிய வேலைகள் நடக்கின்றன. விரைவில் புரிவோம்.

உங்களுக்கு தெரிந்த தெலுங்கரகள் கருணநிதி...வை.கோ...வியகாந்த்...கொளத்தூர்மணி...ஆகும். தெரியாமால் நிறைய இருக்கிறார்கள் ..இந்துயாப்பெணமணியால் எழுதப்படும் துளசி தளத்தில் வாசித்தேன். 40% தெலுங்கு வாம்சவழியினர் வீட்டில்தெலுங்கும்...வெளியில் தமிழும்பேசி வாழ்வதாய்...எனக்கு உண்மை. பொய் தெரியாது...இன்று  கருணநிதியின் 4ஆம் தலைமுறையையும் தெலுங்கர் என்கிறீர்கள். இது எப்படிச் சரியாகும்  ?அவர்கள்  தமிழ் பேசி ..படித்து வாழ்கிறார்கள். எப்படி தெலுங்கராக முடியும்...ஆங்கிலம் பேசி..படித்து. வாழும்  தமிழர் ..தமிழாரா?அல்லது ஆங்கிலேயாரா?நாம்  தமிழர் கட்சி. தமிழ்பேசும் அனைவரையும். தமிழரென எற்கவேண்டும்  அப்போ அரசியலில் வெல்லமுடியும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Kandiah57 said:

வை கோபாலசாமி வீட்டில் தெலுங்குதான் பேச்சுமொழி. இதனை எங்களுக்குக் கூறியவர் அவரது குடும்ப உறுப்பினர். 

🤥

1 hour ago, குமாரசாமி said:

சீமானுக்கு ஆதரவு கொடுத்தவர்களை திட்டுபவர்கள் எதற்காக திமுக வை ஆதரிக்கின்றார்கள்?

இதுக்குப் பதில் இல்லீங்கோ..

😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் 5% வாக்குகளையே பெற்றிருப்பதாக சொல்லபடுகிறது. அப்படி பார்த்தால் இந்த தேர்தல் கொஞ்சம் சறுக்கல்தான். அண்ணன் களஞ்சியம் என்ன கூறினாலும்  கட்சி உறுப்பினர்கள், தம்பிகள் சோர்ந்தேதான் காணப்படுகிறனர்.

இந்த தேர்தலுக்கு முந்தைய கலந்தாய்வு கூட்டத்தில் கூட பல மாவட்ட பொறுப்பில் உள்ளவர்கள் அதிமுகவுடன் கூட்டணி போகலாம் என்றார்கள். அண்ணன் கூட தன்னை சந்திக்க மோடி அழைத்த விடயத்தையும் தொட்டு பேசியதாக தெரிகிறது. ஆனால் இந்த தேர்தலுக்கு பின் அதிமுக இருக்காது அப்போ அவர்களை எம் கூட்டணியில் சேர்ப்போம் என கூறியுள்ளார். ஆனால் முடிவுகள் எதிர்பார்த்த வகையில் இல்லை. 

அண்ணனின் அரசியல் நெகிழ்வுதன்மையை பாவிக்க வேண்டிய தருணம் இது. அண்ணன் மீதுள்ள வழக்குகள் இதர விடயங்களை கருதும் போது - அடுத்த ஐந்து வருடம் தீம்காவை எதிர்ப்பது மிகசிக்கலாகவே இருக்கும்.

அண்ணன் பிஜேபி ஆதரவு நிலை எடுத்தாலும் நம் ஆதரவு தொடரவேண்டும்.

ஏனென்றால் எங்கள் இனத்தின் முதல் எதிரி தீம்காதான்.

14 minutes ago, Kapithan said:

வை கோபாலசாமி வீட்டில் தெலுங்குதான் பேச்சுமொழி. இதனை எங்களுக்குக் கூறியவர் அவரது குடும்ப உறுப்பினர். 

🤥

இதுக்குப் பதில் இல்லீங்கோ..

😂

விசயகாந்த் வீட்டில் கூட.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Kapithan said:

வை கோபாலசாமி வீட்டில் தெலுங்குதான் பேச்சுமொழி. இதனை எங்களுக்குக் கூறியவர் அவரது குடும்ப உறுப்பினர். 

🤥

கோபாலசாமியின் உறவினர் இங்கு ஒரு யூனியில் வேலை செய்கின்றார். என் நண்பரும் கூட. கோயம்புத்தூரில் வசிக்கின்றார்கள். தமிழில் பட்டங்கள் பல.
ஆனால் வீட்டில் பேசுமொழி தெலுங்கு.

இவர்தான் எனக்கு 15 வருடங்களுக்கு முதலே ரஜனி அரசியலுக்கு வரமாட்டார் என சத்தியம் செய்தவர்.😁

Link to comment
Share on other sites

2 hours ago, zuma said:

தம்பிகளுக்கு தமிழகத்தில் மரண அடி கிடைத்துள்ளது, அடுத்த முறை தமது எஜமான் சங்கிகளுடன்  இணைத்து தேர்தலை சந்திப்பார்கள் என எதிர்பார்ப்போம்.
 
3 ஆவதாக வந்துள்ளது. அதுவும் தனித்து போட்டியிட்டு. கமல் வெல்கிறார், தினகரன் வெல்கிறார். கட்சி சின்னம் இல்லாமல் போகும் என்று பினாத்தியது போல் இருந்தது. இப்போ  இப்படி பல்டி அடிக்கிறீர்கள்.

Link to comment
Share on other sites

2 hours ago, Kandiah57 said:

தமிழ்நாட்டில். 40%தெலுங்கர் வீட்டிலே தெலுங்கு பேசியும் வீட்டுக்கு வெளியில் தமிழில் படித்தும்...கதைத்தும் வாழ்கிறார்கள்  ...பெரும்பாலான தமிழர்கள் ஆங்கிலத்தில் படித்தும்...பேசியும் வாழ்கிறார்கள்  மேற்படி 40%தெலுங்கரையும்  தமிழர்களென்று  எற்று நாம்தமிழர் அரசியல் செய்யுமாயின். வெற்றி வாய்ப்புண்டு  இல்லையேல் நாமதமிழருக்கு  எதிர்காலமில்லை ..தமிழ்நாட்டல் ஆட்சியும் அமைக்கமாட்டார்கள் 

அடிபடவரவேண்டாம்..அமைதியாக. கருத்துக்களை வைக்கவும்  நன்றி வணக்கம்..

2001 கணக்கெடுப்பின் படி 5.65% தெலுங்கு பேசும் மக்கள் தமிழ் நாட்டில் உள்ளார்கள். 40% மாக அதிகரிப்பது சாத்தியமில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.