Jump to content
  • Veeravanakkam
  • Veeravanakkam
  • Veeravanakkam

நினைவு கூர்தலுக்கான வெளி-2021 ? நிலாந்தன்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

நினைவு கூர்தலுக்கான வெளி-2021 ? நிலாந்தன்!

May 1, 2021

Space-1.jpg

கடந்த வாரம் கத்தோலிக்க திருச்சபையின் யாழ் மறை மாவட்ட குருமுதல்வர் ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார். தமிழ்மக்கள் இறந்தவர்களை நினைவு கூர்வதற்கு அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என்பதே அது. கத்தோலிக்க திருச்சபையின் உயர்நிலைக் குருவானவர் ஒருவர் அவ்வாறு தெரிவித்திருப்பது முக்கியமானது. அதுவும் மே பதினெட்டை நினைவு கூர்வதற்கு சில கிழமைகளுக்கு முன் அவர் அதைக் கூறியிருந்தார். ஈஸ்டர் குண்டுவெடிப்பை
நினைவு கூர்ந்த ஒரு காலகட்டத்தில் அவர் அதைக் கூறியிருந்தார். எனவே அது கூறப்பட்ட காலம் கூறியது யார் என்பவற்றை தொகுத்துப் பார்த்தால் அக்கூற்றுக்கு முக்கியத்துவம் உண்டு.

ஏனெனில் கடந்த ஆண்டும் நினைவு கூர்தலை எப்படி மக்கள் மயப்படுத்தலாம் என்று சிந்தித்தபொழுது மத நிறுவனங்கள் போதிய அளவுக்கு ஒத்துழைக்கவில்லை. அதை வேறுவிதமாகச் சொன்னால் மத நிறுவனங்களையும் அரசியல் கட்சிகளையும் பொருத்தமான
விதங்களில் கடந்த ஆண்டு ஒருங்கிணைக்க முடியவில்லை என்றும் சொல்லலாம்.

அவ்வாறு ஒருங்கிணைக்கப்படாத ஒரு பின்னணியில்தான் கடந்த ஆண்டு நினைவு கூர்தலை மக்கள் மயப்படுத்த முடியவில்லை. இந்த ஆண்டும் தாயகத்தில் பெருந்தொற்று நோய் தீவிரமாகப் பரவிவரும் ஒரு பின்னணியில்,மக்கள் மயப்படாத ஒரு நினைவு கூர்தலுக்கான
வாய்ப்புக்கள் அதிகமாக தெரிவதால் இக்கட்டுரை அது தொடர்பில் முன்கூட்டியே உரையாடலைத் தொடங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு எழுதப்படுகிறது.

முதலாவதாக நினைவு கூர்தலை மக்கள் மயப்படுத்தவேண்டும். இரண்டாவதாக அதை அனைத்துலக மயப்படுத்தவேண்டும். ஏனென்றால் அது எவ்வளளவுக்கு எவ்வளவு மக்கள் மயப்படுகிறதோ அவ்ளவுக்கு அவ்வளவு அது  கூட்டுத்துக்கத்தை கூட்டு அரசியல் ஆக்க சக்தியாக மாற்றும். அந்த அரசியல் ஆக்க சக்திதான் தமிழ் மக்கள் தமது நீதியை பெறுவதற்கான ஒரு போராட்டத்தின் பிரதான உந்து விசையாக அமையும்.அதேபோல அது எவ்வளவுக்கு எவ்வளவு
அனைத்துலக மயப்படுகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு தமிழ் மக்களுக்கான நீதியை பெறத் தேவையான  அனைத்துலக அபிப்பிராயங்களை அது கனியவைக்கும். எனவே மே18ஐ ஆகக்
கூடியபட்சம் மக்கள் மயப்படுத்த வேண்டும். ஆகக்கூடியபட்சம் அனைத்துலக மயப்படுத்த வேண்டும்.

அவ்வாறு மக்கள் பயன்படுத்துவது என்றால் அதை இப்போதிருக்கும் நிலைமையில் அதாவது covid-19 பெருந் சுற்றுச்சூழலில் அதிலும் குறிப்பாக சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்துக்கு தலைமை தாங்கும் ஒரு அரசாங்கமானது ஏனைய தேசிய இனங்களின் அடிப்படை உரிமைகளை மறுக்கும் ஒரு காலகட்டத்தில் அரசாங்கத்தால் தடை செய்யப்பட முடியாத ஒரு நினைவு கூர்தலாக அதை மாற்ற வேண்டும். அவ்வாறு மாற்றுவது என்றால் அதை ஆகக்கூடிய பட்சம் மக்கள் மயப்படுத்தவேண்டும்.ஏனென்றால் இப்போதிருக்கும் பெரும் தொற்றுச் சூழலில் மக்கள் பெருந்திரளாக கூடுவது கடினம். தனிமைபடுத்தற் சட்டத்தின்படி அது சட்ட
விரோதமானதாகவும் இருக்கும்

இந்நிலையில் மக்களை அதிகம் ஓரிடத்தில் திரட்டாமல் எப்படி ஒரு நினைவு கூர்தலை மக்கள் மயப்படுத்தலாம்?அல்லது அதை எப்படி பெரும்பாலான தமிழ் வீடுகளுக்குள் கொண்டு போகலாம்? என்று சிந்திக்க வேண்டும்.அவ்வாறு சிந்தித்து நினைவு கூர்தலை மக்கள்
மயப்படுத்தும் போதுதான் அது தடை செய்யப்பட முடியாத ஒரு நினைவு கூர்தலாக மாறும்.

குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் ஒரு சில வீடுகளின் வெளி மதில்களில் மட்டும் சுட்டிகளை எரித்தால் அந்த வீடுகளை அரசாங்கம் இலகுவாக அடையாளம் காணும். அதனால் அந்த வீட்டுக்காரர்களுக்கு ஆபத்து உண்டாகலாம். மாறாக எல்லா வீடுகளிலும் சுட்டிகள் எரிந்தால் யாரைப் பிடிப்பது? யாரை விசாரிப்பது? இதுதான் மக்கள் மயப்பட்ட போராட்டங்களின் மகத்துவம். எல்லா வீடுகளிலும் வெளி மதில்களில் சுட்டிகள் ஏற்றப்பட்டால் எல்லாரையும் தூக்கி கொண்டு போய் அடைக்க முடியாது. தனித்தனியாகச் செய்யும்போதே பயம் இருக்கும் சமூகமாகச் செய்தால் பயமிருக்காது.பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரணியைப் போல.எனவே தடை செய்யப்பட முடியாத ஒரு நினைவு கூர்தல் எனப்படுவது அது எந்தளவுக்கு மக்கள் மயப்படுகிறது என்பதில்தான் தங்கியிருக்கிறது.

இவ்வாறு நினைவு கூர்தலை மக்கள் மயப்படுத்தும்போது இப்போதிருக்கும் நிலைமைகளின்படி அதாவது முதலாவதாக பெருந்தொற்றுச் சூழல் இரண்டாவதாக சிங்கள- பௌத்த உணர்வுகளுக்கு தலைமை தாங்கும் ஓர் அரசாங்கம் மூன்றாவதாக ஒரு பொருத்தமான மக்கள் மயப்பட்ட பொதுக்கட்டமைப்பு இல்லாத வெற்றிடம் இவற்றின் பின்னணியில் அவ்வாறு நினைவு கூர்தலை மக்கள் மையப்படுத்துவது என்று சொன்னால் அதற்கு ஏற்கனவே
நிறுவனமயப்பட்டிருக்கும் அரசியல் கட்சிகளையும் மத நிறுவனங்களையும் ஒருங்கிணைக்க வேண்டிய தேவை உண்டு.கடந்த ஆண்டும் இவ்வாறு சிந்திக்க பட்டது.எனினும் அது வெற்றி பெறவில்லை.

குறிப்பாக யாழ் சர்வமதப் பேரவையால் ஒரு முயற்சி முன்னெடுக்கப்பட்டது.குறிப்பிட்ட நாளில் ஒரே நேரத்தில் எல்லா இடங்களிலும் ஆலயங்களில் மணிகளை ஒலிக்கச் செய்வது என்று
கேட்கப்பட்டது. பெரும்பாலான மத நிறுவனங்கள் அதற்கு சம்மதித்தன.இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்ட கத்தோலிக்க குருமுதல்வர் அது தொடர்பில் ஒரு ஆலோசனையை
முன்வைத்தார்.அதாவது பெரும்பாலான கிறிஸ்தவ தேவாலயங்களில் மாலை ஆறு மணிக்கு அடிக்கப்படும் திருந்தாதி மணியை சற்றுப் பிந்தி அடிக்கலாமா? என்று.ஆனால் எல்லா மத
நிறுவனங்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டபடி குறிப்பிட்ட நேரத்தில் பெரும்பாலான ஆலயங்களில் மணிகள் ஒலிக்கப்படவில்லை.மிகச் சில ஆலயங்களில்தான் சுட்டி விளக்குகள் ஏற்றப்பட்டன.

ஏன் இப்படி நடந்தது? ஏனெனில் மத நிறுவனங்களை பொருத்தமான விதங்களில் ஒருங்கிணைக்க ஒரு கட்டமைப்பு அப்போது இருக்கவில்லை. இப்பொழுதும் இல்லைதான். இவ்வாறான ஒரு பின்னணியில் மேற்படி குரு முதல்வரின் கோரிக்கையை ஒரு தொடக்கமாக எடுத்துக் கொண்டு தமிழ்த் தரப்பு எவ்வாறு மத நிறுவனங்களை ஒருங்கிணைக்கலாம் என்று சிந்திக்கலாம்.

இதுவிடயத்தில் ஆறு மணிக்குப்பின் அதாவது ஊர் ஓரளவுக்கு அடங்க தொடங்கும் பொழுது மணிகளை ஒலிப்பதும் சுடர்களை ஏற்றுவதும் பொருத்தமாக இருக்கும். ஆறு மணிக்கு ஊர் அடங்காது. அப்பொழுது வேலை முடிந்து வீடு திரும்பும் வாகனங்களின் இரைச்சல் அதிகமாக இருக்கும். அப்படிப்பட்டதொரு நேரத்தில் மணிகளை ஒலித்தால் அவை துலக்கமாக கேட்காது. அதேபோல செக்கல் பொழுதில் சுடரை ஏற்றினாலும் அது துலக்கமாக ஒளிராது.எனவே இருளத்

தொடங்கியபின் அதாவது ஏறக்குறைய ஏழு மணி அளவில் வீதிகளில் வாகனங்களின் போக்குவரத்து குறைந்து விடும். அன்றாட வாழ்வின் பகல் நேர இரைச்சல்களும் அடங்கிவிடும். ஊர் ஓரளவுக்கு அடங்கத்தொடங்கும்.அந்தவேளையில் மணிகளை ஒலித்தால் இரவின் அமைதியில்  அவை சன்னமாகக் கேட்கும்.அந்த இருளில் சுடர்களை ஏற்றினால் அது துலக்கமாகத தெரியும்.எனவே இதுதொடர்பில் அப்படி ஒரு நேரத்தை தெரிவு செய்து சுடர்களை
ஏற்றலாம்;மணிகளை ஒலிக்க கேட்கலாம்.அவ்வாறு எல்லா ஆலயங்களிலும் மணிகள் ஒலிக்க விடப்பட்டால் அது தமிழ் கூட்டு உளவியலை ஒரு பண்பாட்டுத் தளத்தில் பொது உணர்ச்சிப்புள்ளியில் இணைக்கும். இது முதலாவது.

இரண்டாவது இவ்வாறு ஒரு பொது உளவியலை கட்டியெழுப்பும் விடயத்தில் ஏற்கனவே நிறுவன மயப்பட்டிருக்கும் அரசியல் கட்சிகளின் ஒருங்கிணைப்பை பெறலாம்.அரசியல் கட்சிகள்
தமது கிராமமட்டக் கிளை அமைப்புகள் ஊடாக அதை எப்படி மக்கள் மயப்படுத்தலாம் என்று முயற்சிக்கலாம். கிராமங்களில் மணிகளை ஒலிக்கச் செய்வதிலும் அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பைப் பெறலாம்.குறிப்பாக அரசியல் கட்சிகளின் தலைவர்களும் மக்கள் பிரதிநிதிகளும் துணிந்து முன்வந்து தங்கள் அலுவலகங்களிலும் வீடுகளிலும் வெளிப்படையாக துணிச்சலாக முன்னுதாரணமாக சுடர்களை ஏற்ற வேண்டும்.

அப்பொழுதுதான் அது ஒரு துணிச்சலான முன்னுதாரணமாக இருக்கும். அத்துணிச்சலான முன்னுதாரணத்தை பின்பற்றி மக்களும் தங்கள் வீடுகளில் சுடர்களை ஏற்றத் துணிவார்கள்.

மிகக் குறிப்பாக நினைவு கூர்தலின் விளைவுகளை தமக்கு வாக்குகளாக மடைமாற்றம் செய்ய முயலும் அரசியல்வாதிகளுக்கு இதில் கூடுதல் பொறுப்பு உண்டு. தலைவர்கள் ரிஸ்க் எடுத்தால்தான் மக்களும் ரிஸ்க் எடுப்பார்கள். எனவே தமிழ்த்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பை இதில் முழுஅளவிற்கு கேட்கவேண்டும்.

நினைவுகூர்தலை மக்கள் மயப்படுத்த அவர்களுடைய
ஒத்துழைப்பு இன்றியமையாதது. தமிழரசியலில் இப்போதுள்ள நிலைமைகளின்படி எந்த ஒரு அரசியற் செயற்பாட்டையும் மக்கள் மயப்படுத்துவதென்றால் கட்சிகளின் ஒத்துழைப்பு அவசியம்.
பல்கலைக்கழகங்கள் இப்பொழுது முழுஅளவுக்கு இயங்குவதில்லை. எனவே இதுவிடயத்தில் மாணவர்களின் ஒத்துழைப்பைப் பெறுவதில் அடிப்படையான பௌதீக வரையறைகள் உண்டு.அது கடந்த ஆண்டும் உணரப்பட்டது. கூட்டிக்கழித்துப் பார்த்தால் இப்போது இருக்கும் சூழலில் நினைவு கூர்தலை மக்கள் மயபடுத்துவதற்கு அரசியல் கட்சிகளும் மத நிறுவனங்களும்தான் ஆகக் கூடிய பட்சம் உதவமுடியும். அவ்வாறு நினைவுகூர்தலை  மக்கள் மயப்படுத்தும் போது அங்கே கூட்டுத்துக்கத்தை ஆகக் கூடியபட்சம் கூட்டு ஆவேசமாக மாற்றலாம். நினைவு கூர்தல் எனப்படுவது துக்கத்தை அழுது கடக்கும் ஒரு நிகழ்வு மட்டும் அல்ல.

மாறாக அது ஓர் உணர்ச்சிப் புள்ளியில் தமிழ் மக்களை ஒரு தேசமாக திரட்டுகிறது.தமிழ் மக்களை ஒரு தேசமாக திரட்டுவது என்பது ஒரு மையமான இடத்தில் ஆயிரக்கணக்கானவர்களை ஒன்று திரட்டுவது மட்டுமல்ல. அதற்குமப்பால், நினைவு கூர்தலை பெரும்பாலான தமிழ் வீடுகளை நோக்கி எப்படி விரிவுபடுத்தலாம்;மக்கள் மயப்படுத்தலாம் என்று சிந்திப்பதே.

கார்த்திகை விளக்கீட்டை தமிழ் மக்கள் எப்படி அனுஷ்டிக்கிறார்களோ அதுபோல சித்ரா பவுர்ணமி,ஆடி அமாவாசை போன்ற விரத நாட்களை எப்படி அனுஷ்டிக்கிறார்களோ அதுபோல கத்தோலிக்கர்கள் தமது அனைத்து மரித்தோருக்குமான நாளை எப்படி அனுஷ்டிக்கிறார்களோ அதுபோல நினைவு கூர்தலையும் ஆகக் கூடிய பட்சம் தமிழ்வீடுகளை நோக்கி மக்கள் மயப்படுத்த

வேண்டும். ஒரு சடங்காக அல்ல. ஒரு வாழ்க்கை முறையாக.தமிழ்த் தேசிய அரசியலில் பிரிக்கப்படாத ஒரு பகுதியாக அதை மாற்றவேண்டும். எவ்வளவுக்கு எவ்வளவு அது மக்கள்
மயப்படுகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு அது மக்களால் தன்னியல்பாக, தன்னார்வமாக, எந்த நிர்ப்பந்தமும் இன்றி பயிலப்படுகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு அது ஒரு மக்கள்மயப்பட்ட நினைவு கூர்ததலாக அமையும்.அவ்வாறு மக்கள் மயப்பட்ட ஒரு நினைவு கூர்தல்தான் கூட்டுத் துக்கத்தை கூட்டு அரசியல் ஆக்கசக்தியாக மாற்றும். அந்த அரசியல் ஆக்க சக்திதான் தமிழ் மக்களுக்கான நீதியைப் பெறுவதற்கான போராட்டத்தின் பிரதான உந்து விசையாக அமையும்.

 

https://globaltamilnews.net/2021/160260/

 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

    • By கிருபன்
      இனப்படுகொலையா? இல்லையா? நிலாந்தன்!
      May 9, 2021
        கடந்த வியாழக்கிழமை ஆறாந்திகதி கனடாவின் ஒன்ராறியோ நாடாளுமன்றம் ஈழத்தமிழ் இனப்படுகொலை அறிவூட்டல் வாரத்தைப் பிரகடனப்படுத்தியிருக்கிறது. அதாவது நடந்தது இனப்படுகொலை என்று கூறுகிறது.
      கடந்த மாதம் 24ஆம் திகதி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆர்மீனிய இனப்படுகொலை குறித்து ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தார். 1915ஆம்ஆண்டு ஏப்ரல்24இலிருந்து தொடக்கி சுமார் பதினைந்து இலட்சம் ஆர்மீனியர்கள் துருக்கிய ஒட்டோமன் பேரரசால் கொல்லப்பட்டார்கள், அல்லது பலவந்தமாக நாடுகடத்தப்பட்டார்கள். சுமார் ஒரு நூற்றாண்டின் பின் அமெரிக்கா அதை ஓர் இனப்படுகொலை என்று இப்பொழுது அறிவித்திருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் ஜேர்மனி அவ்வாறு அறிவித்திருந்தது. இதுவரையிலும் மொத்தம் 29நாடுகள் அதை இனப்படுகொலை என்று ஏற்றுக்கொண்டுள்ளன.
      கடந்த நூற்றாண்டின் முதலாவது இனப்படுகொலை ஆர்மீனிய இனப்படுகொலை. இந்த நூற்றாண்டின் முதலாவது இனப்படுகொலை ஈழத்தமிழ் இனப்படுகொலை என்று அழைக்கப்படுகிறது. ஆனால் அமெரிக்காவின் முன்னாள் அதிபரும் ஜோ பைடனுக்கு கொள்கை ரீதியாக நெருக்கமானவர் என்றும் கருதப்படும் ஒபாமா அண்மையில் தான் வெளியிட்ட நூலில் ஈழத்தில் இடம்பெற்றது இனப்படுகொலை என்று அழைக்கவில்லை.மாறாக அதை மனித சங்காரம் என்று அழைத்திருக்கிறார்.

      அது இனப்படுகொலைதான் என்று தமிழக சட்டசபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. வடமாகாணசபையும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறது. பெருந்தமிழ்ப்பரப்பில் உள்ள ஆகப்பெரிய சட்டசபையான தமிழக சட்டசபையின் தீர்மானம் அது. எட்டுகோடி மக்களின் ஆணையைப் பெற்ற ஒரு சட்டசபையால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்துக்கும் மக்கள்ஆணை உண்டு. அதைப் போன்றே வடமாகாணசபையும் ஏகமனதாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. இதுதவிர கனடாவில் உள்ள பிரம்டன் உள்ளூராட்சி சபையிலும் இவ்வாறான தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
      இவையாவும் தமிழ்த்தரப்புகளால் முன்கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள். இவை தவிர இந்திராகாந்தி 1983ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தில் இலங்கைத் தீவில் நடப்பது இனப்படுகொலை என்று கூறினார். 83கறுப்பு ஜூலைக்குப் பின் ஒகஸ்ற் மாதம் 16ஆம் திகதி இந்திய நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய உரையில்…”இலங்கைத்தீவில் என்ன நடக்கிறது என்றால் அது இனப்படுகொலை தவிர வேறு எதுவுமில்லை “ என்று இந்திரா காந்தி கூறினார்.
      இதுதவிர, உலகில் உள்ள வேறு எந்த ஒரு நாட்டின் உத்தியோகபூர்வ குறிப்பிலும் நடந்தது இனப்படுகொலை என்று குறிப்பிடப் படவில்லை. இதுவரை நிறைவேற்றபட்ட எந்த ஒரு ஐநா தீர்மானத்திலும் இனப்படுகொலை என்ற வார்த்தை இல்லை. கடந்த 12 ஆண்டுகளில் ஐநா இதுவரையிலும் எட்டு தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறது. இந்த எல்லா தீர்மானங்களிலும் போர்க் குற்றங்கள் மனிதகுலத்துக்கு எதிரான குற்றச்செயல்கள் போன்றவைதான் கூறப்பட்டுள்ளன. அதுபோலவே ஐநா மனித உரிமைகள் ஆணையர்களின் கடுமையான அறிக்கைகளிலும் இனப்படுகொலை என்ற வார்த்தை கிடையாது.
      போர்க்குற்றங்கள் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் போன்றவைகளை உண்டு. ஐநாவின் சிறப்பு தூதுவர்களின் அறிக்கைகளிலும் அப்படித்தான். அதாவது இலங்கைதீவில் நடந்தது இனப்படுகொலை என்பதனை தனது எந்தவோர் உத்தியோகபூர்வ அறிக்கையிலும் ஐநா ஏற்றுக் கொள்ளவில்லை. இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஐநா அதிகாரிகள் அதை இனப்படுகொலை என்று நிரூபிப்பதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்று தெரிவித்திருக்கிறார்கள். அதைத்தான் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரனும் கூறுகிறார்.
      கடந்த ஜனவரி மாதம் மூன்று தமிழ் கட்சிகளும் இணைந்து ஜெனிவாவுக்கு ஒரு கூட்டு கடிதத்தை அனுப்பின. அக்கடிதத்தை உருவாக்கும் சந்திப்புகளின்போது கிளிநொச்சியில் நடந்த கடைசிச்சந்திப்பில் சுமந்திரன் நடந்தது இனப்படுகொலை என்பதை ஏற்றுக் கொள்வதாகச் சொன்னார். ஆனால் ஐநா தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின் அவர் அது இனப்படுகொலை என்பதை நிரூபிப்பதற்கு ஆதாரங்கள் தேவை என்று கூறுகிறார்.
      இந்த இடத்தில் சில முக்கியமான கேள்விகளை கேட்க வேண்டும். முதலாவது கேள்வி ஐநா போன்ற உலகப் பொதுமன்றங்கள் அதை இனப்படுகொலை என்று ஏன் அழைக்க தயங்குகின்றன?
      இரண்டாவது கேள்வி தமிழ்மக்கள் அதற்கு வேண்டிய ஆதாரங்களை திரட்டி கொடுத்தாலும் ஐநா இனப்படுகொலை என்று அழைக்குமா? அதாவது ஐநாவின் நீதி ஒரு தூய நீதியா அல்லது அரசுகளின் நீதியா? மூன்றாவது கேள்வி அவ்வாறான ஆதாரங்கள் திரட்டுவதற்கு தமிழ் மக்கள் மத்தியில் உள்ள கட்சிகளும் செயற்பாட்டாளர்களும் எவ்வாறான கட்டமைப்புகளை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்?இதுவிடயத்தில் கடந்த 12ஆண்டுகளில் அவர்கள் என்னென்ன நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதனை வெளிப்படையாக கூற முடியுமா?
      இக்கேள்விகளுக்கான விடைகளை சற்று ஆழமாகத் தேடுவோம். ஐநா அதனை ஏன் இனப்படுகொலை என்று அழைக்கவில்லை? அதை மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் போர்க்குற்றங்கள் என்ற வகைக்குள் அடக்க காரணம் என்ன காரணம்? காரணம் மிகவும் எளிமையானது. அதை இனப்படுகொலை என்று சொன்னால் அது இலங்கை அரசுக்கு எதிரானதாகும். அது இலங்கை அரசின் கொள்கையாக இருந்தது என்பதை ஏற்றுக் கொண்டால் அதன் விளைவாக அரசை தண்டிக்க வேண்டியிருக்கும். ஏனெனில் இனப்படுகொலை எனப்படுவது ஒரு இனம் இன்னொரு இனத்துக்கு எதிராக புரிவது. அவ்வாறு ஒரு இனம் அதிலும் குறிப்பாக அரசுடைய பெரிய இனம் தனது அரசவளங்களையும் கட்டமைப்புகளையும் இன்னொரு சிறிய இனத்துக்கு எதிராக திட்டமிட்டு பயன்படுத்தியது என்பதனை நிரூபிக்க வேண்டியிருக்கும். அவ்வாறு நிரூபிக்கப்பட்டால் அதற்காக அந்த அரசை தண்டிப்பதே பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கும் நீதியாக இருக்கும். அதைத்தான் தமிழ் மக்கள் பரிகாரநீதி என்று அழைக்கிறார்கள். அதாவது இனப்படுகொலைக்கு எதிரான நீதியே இனப்பிரச்சினைக்குரிய பரிகாரமும் ஆகும் என்ற அடிப்படையில் அவ்வாறு கூறப்படுகிறது.
      ஆனால் ஐநா ஈழத்தமிழர்களுக்கு பரிகார நீதியை வழங்க தயாரில்லை. அதாவது இலங்கை அரசை விசாரித்து உரிய நீதியை வழங்கத் தயாரில்லை. இவ்வாறு ஈழத்தமிழர்களுக்கு பரிகாரநீதியை வழங்கத் தயாரற்ற அல்லது இலங்கையில் யுத்தத்தில் வென்றவர்களை விசாரிக்கத் தயாரற்ற உலகம் ஈழத்தமிழர்களுக்கு வழங்கியதுதான் நிலைமாறுகாலநீதி ஆகும். நிலைமாறுகால நீதி என்பது இந்த உலகம் தமிழ்மக்களுக்கு வழங்கக்கூடிய நீதியில் இருக்கக்கூடிய வரையறைகளை உணர்த்துவது. இன்னொரு விதத்தில் அது ஐநாவின் இயலாமையை உணர்த்துகிறது. இதை இன்னும் ஆழமாக பார்க்கலாம்.
      நிலைமாறுகாலநீதி எனப்படுவது யுத்தத்தில் ஈடுபட்ட இரண்டு தரப்புகளையும் குற்றவாளிகளாக காண்கிறது. இரண்டு தரப்பும் இழைத்த குற்றங்கள் என்றுதான் ஐநாவின் எல்லா அறிக்கைகளிலும் தீர்மானங்களிலும் காணப்படுகின்றன. போர்க்குற்றங்கள் தொடர்பில் இரண்டு தரப்பையும் விசாரிக்க வேண்டும் என்று ஐநா தீர்மானங்கள் கேட்கின்றன. ஆனால் இனப்படுகொலை என்று கூறினால் அதில் குறிப்பாக இலங்கை அரசாங்கத்தை விசாரித்து அதற்கு உரிய நீதியை வழங்க வேண்டியிருக்கும். ஐநா அதை தவிர்க்கிறது. ஏனென்றால் ஐநாவும் உட்பட உலகசமூகம் இலங்கைத்தீவில் வெற்றி பெற்றவர்களை விசாரிப்பதற்கு தயாரில்லை.
      இலங்கைத்தீவில் மட்டுமல்ல உலகம் பூராகவும் இதுதான் பெரும் போக்கு ஆகும். நிலைமாறுகால நீதியின் வரலாற்றை எடுத்துப் பார்த்தால் இரண்டாம் உலகமகா யுத்தத்தின் பின் நூறெம்பேர்க் தீர்ப்பாயத்தில் இருந்து தொடங்கி தற்பொழுது நடைபெற்றுவரும் கம்போடியாவின் சிறப்பு தீர்ப்பாயங்கள் போன்றவை வரையிலும் ஐநா வென்றவர்களை விசாரிக்க இயலாத ஒரு கட்டமைப்பாகவே காணப்படுகிறது. இலங்கைத்தீவை பொறுத்தவரையிலும் கடந்த 12 ஆண்டுகளாக ஒன்றில் வென்றவர்கள் ஆட்சியில் இருக்கிறார்கள். அல்லது வெற்றியை பாதுகாக்கும் ரணில் மைத்திரி போன்றவர்கள் ஆட்சிக்கு வருகிறார்கள். எனவே யுத்த வெற்றியைக் கொண்டாடுவது பாதுகாப்பது என்பது இலங்கைத்தீவின் மாறாத அரசுக் கொள்கையாக இருக்கிறது. யுத்த வெற்றியை பாதுகாத்துக் கொண்டு யுத்த குற்றங்களை எப்படி விசாரிப்பது? இனப்படுகொலையை எப்படி விசாரிப்பது?
      இதுதான் பிரச்சினை. எனவே உலக சமூகம் குறிப்பாக ஐநா வெற்றி பெற்றவர்களை விசாரிக்கத் தயாராக இல்லாத காரணத்தால் ஈழத்தமிழர்களுக்கு வழங்க முன்வந்த ஒரு தீர்வுதான் நிலைமாறுகால நீதி. அந்த நிலைமாறுகால நீதியை நோக்கித்தான் ஐநாவின் அனைத்து தீர்மானங்களும் ஐநா மனித உரிமைகள் ஆணையர்கள் மற்றும் சிறப்பு தூதுவர்களின் அறிக்கைகளும் வெளிவந்திருக்கின்றன. இது முதலாவது விடயம்.
      இரண்டாவது விடயம் ஈழத்தமிழர்கள் அதற்குரிய ஆதாரங்களை தொகுத்து கொடுத்தால் ஐநா அதை இனப்படுகொலை என்று ஏற்றுக் கொள்ளுமா? என்பது. இல்லை. ஏனென்றால் ஐநாவின் நீதி என்பது ஓர் அரசியல் நீதிதான். அது தூயநீதி அல்ல. நிலைமாறுகால நீதியோ அல்லது பரிகார நீதியோ எதுவானாலும் அவை அரசியல் நீதிகள்தான். அரசியல் நீதி என்றால் அவை அரசுகளால் வழங்கப்படும் நீதிகள் என்று அர்த்தம். அரசுகள் அதற்கொரு அரசியல் தீர்மானத்தை எடுக்கவேண்டும். அரசுகள் எப்பொழுதும் அரசுகளை பாதுகாக்கும். அரசுக்கும் அரசுக்கும் இடையிலான கட்டமைப்புசார் ராணுவ பொருளாதார நலன்களின் அடிப்படையில் நீதி வழங்கப்படும். அதனால்தான் அரசுகளின் நீதி என்பது தூய நீதியாக இருப்பதில்லை. அது ஓர் அரசியல் நீதி. இலங்கை தீவை பொறுத்தவரையிலும் அரசுகளின் நீதி என்பது நிலைமாறுகால நீதிதான். இது விடயத்தில் ஈழத்தமிழர்கள் எவ்வளவு ஆதாரங்களை திரட்டிக் கொடுத்தாலும் ஐநா அது இனப்படுகொலைதான் என்று ஓர் அரசியல் தீர்மானத்தை எடுக்கவேண்டும்.
      சீனாவின் பட்டுப் பாதை திட்டத்துக்கும் அமெரிக்காவின் இந்தோ பசுபிக் திட்டத்துக்கும் இடையில் ஏற்படக்கூடிய மோதல்களின் விளைவாக ஒரு கட்டத்தில் சீனச் சார்பு இலங்கை அரசாங்கத்தை தண்டிப்பது என்று மேற்கு நாடுகளும் இந்தியாவும் முடிவெடுத்தால் சில சமயம் நடந்தது இனப்படுகொலையே என்றுகூறி அடுத்த கட்டத்துக்குப் போகக்கூடும். இல்லையென்றால் எவ்வளவு ஆதாரங்களை திரட்டினாலும் ஐநா அதை இனப்படுகொலை என்று உடனடிக்கு ஏற்றுக்கொள்ளாது. சிலவேளைகளில் சுயாதீன தீர்ப்பாயங்கள் அதை ஏற்றுக் கொள்ளக்கூடும். இது இரண்டாவது.
      மூன்றாவது இதுவிடயத்தில் கடந்த 12 ஆண்டுகளாக தமிழ் கட்சிகள் என்ன செய்திருக்கின்றன என்பது. இதுவரை ஐநா வெளியிட்ட சில ஆவணங்களைத் தயாரிப்பதற்கு சில தமிழ் கட்சிகளின் தலைவர்களும் செயற்பாட்டாளர்களும் ரகசியமாக உழைத்திருக்கிறார்கள். நேரடியாக சாட்சியங்களை வழங்கியிருக்கிறார்கள். அந்த அளவிற்கு அவர்களின் பங்களிப்பு இருந்திருக்கிறது. அதற்கும் அப்பால் சாட்சிகளையும் சான்றுகளையும் தரவுகளையும் தொகுக்கும் விதத்தில் வெளிப்படையான கட்டமைப்பை எதுவும் எந்தக் கட்சியிடமும் கிடையாது.
      உலகளாவிய அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகள் எதனையும் தமிழ் கட்சிகள் ஏன் அணுகவில்லை என்ற கேள்வியும் முக்கியம். இதுதொடர்பில் Human rights Data Analysis Group-(HRDAG) என்று அழைக்கப்படும் மனித உரிமைகள் தகவல் ஆய்வு அமைப்பு என்ற ஓர் அமைப்பை தமிழ் கட்சிகள் அணுகியிருக்கலாம்.. மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு சட்டமன்றம் அக்கோரிக்கையை முன்வைக்கலாம் அந்த அமைப்பு 1996ஆம் ஆண்டு ஜேவிபியின் இரண்டாவது கிளர்ச்சிக்குப்பின் இலங்கைத்தீவில் மனித உரிமைகள் இல்லம் என்ற ஓர் மனித உரிமைகள் அமைப்போடு இணைந்து சிறிதுகாலம் செயற்பட்டிருக்கிறது. நிலைமாறுகாலநீதி தொடர்பான கருத்தரங்குகளின் போது இது தொடர்பில் தெரிவிக்கபட்ட கருத்துக்களால் கவரப்பட்டு கிளிநொச்சி பிரதேச சபையும் பளை பிரதேச சபையும் அவ்வாறு மனித உரிமைகள் தகவல் ஆய்வு அமைப்பை அழைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றின. ஆனால் அவை இரண்டும் அதிகார பலம் குறைந்த சிறிய உள்ளூராட்சி சபைகளே.
      தமிழ் கட்சிகளில் முதன்மை பொறுப்புகளில் இருக்கும் பலர் சட்டத்துறையைச் சேர்ந்தவர்கள். ஆனால் இது விடயத்தில் அவர்கள் புதிய கட்டமைப்புகளை உருவாக்க தவறிவிட்டார்கள். அரசியல் கைதிகளின் விடுதலைக்காக ஒரு பொதுக்கட்டமைப்பை உருவாக்கத் தயாரற்ற தமிழ் அரசியல்வாதிகளிடம் அப்படி எதிர்பார்ப்பதும் தவறுதான்.
      இவ்வாறான ஒரு தோல்விகரமான பின்னணியில் கடந்த ஜனவரி மாதம் வவுனியாவில் மூன்று கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் பணிகளின்போது ஒரு கட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் சொன்னார்…… அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு விவகாரத்தை எடுத்துச்செல்லும் வழிமுறைகளை பகிரங்கப்படுத்த முடியாது என்று. சில விடயங்களை வெளிப்படையாகச் சொல்லிச் செய்வது புத்திசாலித்தனமானது அல்ல என்று. உண்மை. தகவல் திரட்டும் வழிமுறைகளை இலங்கை அரசாங்கம் நாட்டுக்கு எதிரானதாகவே பார்க்கும். அதை பயங்கரவாத தடைச்சட்டம் கொண்டு நசுக்கப்பார்க்கும். இது விளங்கிக் கொள்ளக் கூடியதே.
      ஆனால் எவ்வளவு தகவல்களை திரட்டினாலும் அரசுகளின் நீதியை தீர்மானிக்கப் போவது தகவல்கள் மட்டும் அல்ல. நலன்சார் உறவுகளின் அடிப்படையிலான பேரங்கள்தான். அவ்வாறு அரசுகளை நோக்கி லொபி செய்யவேண்டிய கட்டமைப்புகளை ஏன் இதுவரையிலும் எந்த ஒரு கட்சியும் உருவாக்கியிருக்கவில்லை ?

      இப்பொழுது கடைசியாக வந்த ஐநா தீர்மானம் தகவல்களை திரட்டும் ஒரு பொறிமுறைக்கான பரிந்துரையை முன்வைக்கின்றது. வரும் செப்டம்பர் மாதத்தில் இருந்து அப்பொறிமுறை இயங்கத் தொடங்கும். தனக்கு எதிரான தகவல்களை திரட்டும் ஒரு பொறிமுறையை இலங்கை அரசாங்கம் நாட்டுக்குள் அனுமதிக்குமா? அப்படி அனுமதிக்காவிட்டால் ரகசியமான வழிவகைகள் ஊடாக உயர்தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தகவல்களை திரட்ட வேண்டியிருக்கும்.
      இதற்கு முன் 2015ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையும் அவ்வாறு நாட்டுக்கு வெளியில் இருந்து திரட்டப்பட்ட ஒன்றுதான். எனவே இப்பொறிமுறையானது அதிகபட்சம் புலம்பெயர்ந்த தமிழ் தரப்பில்தான் தங்கியிருக்கும். இதை முன்னுணர்ந்துதான் இலங்கை அரசாங்கம் புலம்பெயர்ந்த தமிழ் தரப்பில் உள்ள அமைப்புகள் சிலவற்றையும் தனி நபர்களையும் தடை செய்திருக்கிறது.
      இப்பொறிமுறை இயங்கத் தொடங்கும் பொழுது அதில் உங்களுடைய பங்களிப்பு எப்படி இருக்கும் என்று யு டிவியின் ஊடகவியலாளர் சுமந்திரனை கேட்டபோது சுமந்திரன் வவுனியாவில் வைத்து கஜேந்திரகுமார் சொன்ன அதே பதிலைத்தான் கூறியிருக்கிறார். அவ்வாறான நடவடிக்கைகளை பகிரங்கமாக கூற முடியாது என்று. இனப்படுகொலை என்பதனை நிரூபிப்பதற்கு ஆதாரங்கள் போதாது என்று கூறும் அவரே அந்த ஆதாரங்களை திரட்டும் நடவடிக்கைகளை பகிரங்கமாக கூற முடியாது என்றும் கூறுகிறார்.
      இனப்படுகொலை என்று நிரூபிப்பதற்கு ஆதாரங்கள் போதாது என்பது ஐநாவின் நிலைப்பாடு. ஆனால் சுமந்திரன் ஐநாவின் பிரதிநிதி அல்ல. தமிழ் மக்களின் பிரதிநிதி. தமிழ் மக்களின் ஆணையைப் பெற்ற அவருடைய கட்சிக்கு ஒரு பொறுப்பு உண்டு. கடந்த 12 ஆண்டுகளாக குறிப்பாக கடந்த ஆறு ஆண்டு காலப்பகுதிக்குள் நிலைமாறுகால நீதியின் பங்காளியாக இருந்தபோது சான்றுகளையும் சாட்சியங்களையும் திரட்டுவதற்காக கூட்டமைப்பு என்னென்ன முயற்சிகளை முன்னெடுத்தது என்பதனை அவருடைய கட்சி பகிரங்கப்படுத்துமா? அது ஒரு ரகசிய நடவடிக்கை அதை பகிரங்கப்படுத்த முடியாது என்று கூறுவதன் மூலம் தாங்கள் ஏன் இதுவரையிலும் இனப்படுகொலை என்று நிறுவத் தேவையான சான்றுகளை திரட்டவில்லை என்ற கேள்விக்கான பதிலை கூறுவதிலிருந்து அக்கட்சி தப்ப முயற்சிக்கின்றதா? அதேசமயம் பொறுப்புக்கூறலை மனித உரிமைகள் பேரவைக்கு வெளியே கொண்டுபோக வேண்டும் விசாரணைகளை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திடம் பாரப்படுத்த வேண்டும் என்று கேட்கும் கஜேந்திரகுமாரைப் போன்ற கட்சித்தலைவர்களுக்கு இது விடயத்தில் கடந்த ஜனவரி மாதம் 15ஆம் திகதி ஜெனிவாவுக்கு எழுதிய கடிதத்தின் தொடர்ச்சியாக தாங்கள் விசுவாசமாக உழைத்து வருகிறார்கள் என்பதனை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு உண்டு.
       
      https://globaltamilnews.net/2021/160631/
    • By கிருபன்
      வத்திராயனில் ட்ராகன் - நிலாந்தன்

       
      இந்தவாரம் சீனப் பாதுகாப்பு மந்திரி இலங்கைக்கு விஜயம் செய்த அதே காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் வடமராட்சியில் வத்திராயனில் ஒரு சிறுவர் பூங்காக்கட்டடம் சீனத்துக் கட்டடக் கலைச்சாயலோடு கட்டித் திறக்கப்படுகிறது. கட்டிடத்தின் உச்சியில் சீனத்து டிராகன் சிலை ஒன்றும் வைக்கப்பட்டிருக்கிறது. கட்டடத்தில் சீன எழுத்துக்களும்  வரையப்பட்டிருக்கின்றன.இவை அனைத்தையும் செய்தவர் ஒரு புலம்பெயர்ந்த தமிழர். ஊருக்கு நல்லது செய்ய விரும்பிய அவர் அந்த கட்டடம் கட்டுவதற்கான நிதி உதவிகளை வழங்கியிருக்கிறார். அவரே கட்டிடத்துக்கான வரைபடத்தையும் தீர்மானித்திருக்கிறார்.அது அவருடைய ரசனைத் தெரிவு. அதில் அரசியல் எதுவும் கிடையாது என்று சொல்லப்படுகிறது.அவருக்கோ அதைக் கட்டிய மேசனுக்கோ அல்லது சீன எழுத்துக்களை வரைந்த வண்ணம் பூசுபவருக்கோ தாம் என்ன செய்கிறோம் என்பதன் அரசியல் மற்றும் கலாச்சார பரிமாணங்கள் எவையும் தெரிந்திருக்கவில்லை. அதனால்தான் சீன எழுத்துக்களின் மத்தியில்  சமஸ்கிருதத்தில் ஓம் எழுதப்பட்டிருக்கிறது.
      வத்திராயனில் கட்டப்பட்டிருக்கும் சீனத்து ட்ராகன் ஒரு புலம்பெயர்ந்த தமிழரின் கற்பனை. ஆனால் இந்தவாரம் கொழும்புக்கு விஜயம் செய்த சீனப் பாதுகாப்பு மந்திரியின் விடயம் அவ்வாறு ஒரு கற்பனை அல்ல. அதனாற்றான் அவர் நாட்டுக்கு விஜயம் செய்த அதே காலப்பகுதியில் ஐரோப்பிய யூனியன் நாடுகளைச் சேர்ந்த இலங்கைக்கான தூதுவர்கள் எதிர்க் கட்சிப் பிரதிநிதிகளை சந்தித்திருக்கிறார்கள். இதன் மூலம் சீனாவுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் ஐரோப்பிய யூனியன் ஒரு செய்தியை தெரிவிக்க விரும்புகிறது என்பது வெளிப்படையானது. அரசாங்கம் சீனாவை அதிகமாக நெருங்கிச் சென்றால் மேற்கு நாடுகள் எதிர்க்கட்சிகளை முன்னிலைப்படுத்தி மீண்டும் ஓர் அரசியல் விளையாட்டை விளையாடக்கூடும் என்ற ஊகங்களை இச்சந்திப்பு உணர்த்துகின்றதா?

       
      எப்படியும் இருக்கலாம்.ஆனால் அரசாங்கம் இச்சந்திப்பு காரணமாக தனது சீனச் சாய்வைக் கைவிடும் என்று நம்பத் தேவையில்லை.ராஜபக்சக்கள் பிராந்திய மற்றும் உலகளாவிய யதார்த்தங்களை புறக்கணித்துவிட்டு ஓர் அணியின் பக்கம் போகிறார்கள் என்று தயான் ஜயதிலக்க போன்ற விமர்சகர்கள் எச்சரித்து வருகிறார்கள். ஆனால் தயான் ஜெயதிலக கூறுவதை இந்த அரசாங்கம் விளங்கிக் கொள்ளாமல் இல்லை.இந்த அரசாங்கம் தான் என்ன செய்கிறேன் என்பதை நன்கு விளங்கித்தான் செய்கிறது. சில அரசியல் விமர்சகர்கள் நம்புவது போல அரசாங்கம் விளைவுகளை விளங்கிக் கொள்ளாமல் ஓர் ஆபத்தான விளையாட்டில் இறங்கி விட்டது என்பது உண்மை அல்ல. எல்லாவற்றையும் தெரிந்து கொண்டுதான் அரசாங்கம் இந்த ஆட்டத்தில் இறங்கியிருக்கிறது. அதை இன்னும் ஆழமாக சொன்னால் இதை விட்டால் அரசாங்கத்துக்கு வேறு தெரிவுகள் இல்லை. ஏனெனில் ராஜபக்சக்கள் தங்கள் சொந்த வெற்றிகளின் கைதிகள்.
      முதலாவது யுத்த வெற்றி.இரண்டாவது தேர்தல் வெற்றிகள். யுத்தத்திற்கு பின்னரான எல்லாத் தேர்தல்களிலும் அவர்கள் சிங்களபௌத்த பெருந்தேசிய உணர்வுகளைத்தான் தூண்டி வளர்த்தார்கள். தனிச்சிங்கள வாக்குகளால் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பெற்றதாக காட்டிக் கொள்ளும் ஓர் அரசாங்கம் இது. எனவே அந்த தேர்தல் வெற்றிகளின் இருந்து அவர்களால் பின்வாங்க முடியாது. சிங்களபௌத்த மக்களின் காவலனாக இந்த அரசாங்கம் தன்னை காட்டிக் கொள்கிறது. அந்த மக்களின் உணர்வுகளை திருப்திப்படுத்தும் ஓர் ஆட்சியைத்தான் நடத்த முடியும். இப்படிப்பார்த்தால் ராஜபக்சக்கள் அவர்களுடைய சொந்த வெற்றிகளின் கைதிகள் எனலாம்.
      அவர்களுடைய பலம் எதுவோ அதுதான் அவர்களுடைய பலவீனமும்.அவர்களுடைய பலங்கள் இரண்டு. முதலாவது யுத்ததத்தை வென்றது.இரண்டாவது அந்த யுத்தவெற்றியை பல தலைமுறைகளுக்கு உரிமை கோரக்கூடிய ஒரு பலமான குடும்பத்தை கொண்டிருப்பது. மு. திருநாவுக்கரசுவின் வார்த்தைகளில் சொன்னால் உலகில் அதிகம் தலைவர்களைக் கொண்டிருக்கும் குடும்பங்களில் ஒன்று அது. அக்குடும்பம் யுத்த வெற்றியை ஒரு குடும்பத்தின் சொத்தாக்கி அதையே தனது எதிர்கால அரசியலுக்கான முதலீடாகவும் மாற்றி வைத்திருக்கிறது. எனவே ராஜபக்சக்கள் முதலாவதாக அவர்களுடைய யுத்த வெற்றியின் கைதிகள். இரண்டாவதாக யுத்த வெற்றியை அவர்கள் ஒவ்வொரு தேர்தலின்போதும் அப்டேட் பண்ணி தேர்தல்களில் வென்று வருகிறார்கள். எனவே அந்த தேர்தல் வெற்றிகளின் கைதிகள்.
      இந்தப்பின்னணியில் வைத்துத்தான் ரிசாத் பதியுதீனின் கைதை விளங்கிக்கொள்ள வேண்டும். கடந்தகிழமை முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடி ஆடை அணிவதைத் தடைசெய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருப்பதையும் அவ்வாறே விளங்கிக்கொள்ள வேண்டும்.

       
      எனவே இந்த அரசாங்கம் தனது வெளியுறவுக் கொள்கையின் விளைவுகளை விளங்கிக் கொள்ளாமல் களத்தில் இறங்கியுள்ளது என்று கருதுவது இந்த அரசாங்கத்தின் தன்மையை குறிப்பாக ராஜபக்ச ஆட்சியின் அடிப்படைகளை விளங்கிக் கொள்ளாத ஒரு விமர்சனம்தான். அதைப்போலவே ராஜபக்ச சகோதரர்களுக்கு இடையே முரண்பாடுகள் வரலாம் என்று நம்புவதும் கற்பனை அதிகம் உடைய ஓர் ஊகம்தான். அதைப்போலவே தாமரை மொட்டு கட்சியின் பங்காளிகளான விமல் வீரவன்ச,உதய கம்மன்பில,ஆனந்த முருத்தெட்டுவ தேரர் போன்றோர் அரசாங்கத்துடன் முரண்படுவதை வைத்து அக்கட்சி உடைந்து போய்விடும் என்று நம்புவதும் காலத்தால் முந்திய ஒரு எதிர்பார்ப்புதான். இவை மட்டுமல்ல மகிந்த ராஜபக்சவின் காலத்தில் 2015இல் நடந்தது போல ஒரு ஆட்சி மாற்றத்தை இனிமேலும் இலகுவாக நடத்தி முடிக்கலாம் என்று எதிர்பார்ப்பதும் விருப்பங்களின் அடிப்படையிலான காலத்தால் முந்திய ஒரு  கணிப்புத்தான்.
      ஆழமான பொருளில் சொன்னால் ராஜபக்சக்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இப்படி ஒரு தடத்தில்தான் அவர்களுடைய வெளியுறவுக்கொள்கை அமைய முடியும். ஏனென்றால் யுத்த வெற்றிதான் அவர்களுடைய ஒரே முதலீடு. யுத்த வெற்றிக்கு தலைமை தாங்கும் ஓர் அரசாங்கம் போர்க்குற்ற விசாரணைகளுக்கு ஒத்துழைக்க முடியாது. போர்க்குற்ற விசாரணைகளுக்கு ஒத்துழைக்க வில்லை என்றால் மேற்கு நாடுகளை நெருங்கிச் செல்ல முடியாது. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் மிகப் பலமான தமிழ் டயஸ்போரா உண்டு.இந்தியாவில் எட்டுக்கோடி தமிழர்கள் உண்டு. எனவே பலமான தமிழ்ச்சமூகங்களைக் கொண்டிருக்கும் இந்தியா மற்றும் மேற்கு நாடுகளை இந்த அரசாங்கம். ஒரு கட்டத்துக்கு மேல் நெருங்கிச் செல்ல முடியாது என்பது ஒரு ராஜபக்ச யதார்த்தம். குறிப்பாக போர்க்குற்ற விசாரணைகள் பொறுத்து அதிலும் குறிப்பாக ஐநா தீர்மானம் பொறுத்து ஒரு கட்டத்துக்கு மேல் மேற்கு நாடுகளுடன் இணங்கிப் போக முடியாது என்பதும் ஒரு ராஜபக்ச யதார்த்தம். எனவே இந்த யதார்த்தங்களின் விளைவாக அவர்கள் சீனாவை நோக்கி செல்வதைவிட வேறு தெரிவுகள் இல்லை.
      சீனாவில் பலமான தமிழ்ச்சமூகம் இல்லை.செல்லத் தமிழ்பேசும் சில சீன அழகிகள் மட்டும் உண்டு. இது ஒரு காரணம்.இரண்டாவது காரணம்-சீனா கடனோ உதவியோ வழங்கும் பொழுது அதற்கு மனித உரிமைகளை ஒரு முன் நிபந்தனையாக முன்வைப்பதில்லை. மூன்றாவது காரணம் சீனா ஐநாவில் இலங்கை அரசாங்கத்தை நிபந்தனையின்றி பாதுகாக்கும் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. நாலாவது காரணம் சீனாவின் பட்டியும் பாதையும் வியூகத்தில் ஸ்ரீலங்கா எப்பொழுதோ இணைக்கப்பட்டு விட்டது. ஸ்ரீலங்கா விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அதிலிருந்து விடுபடுவது கடினம். 2015இல் ஆட்சி மாற்றத்தின் பின் வந்த சீனாவுக்கு அதிகம் நெருக்கம் இல்லாத ரணில் விக்கிரமசிங்க அரசாங்கமும் அதை நிரூபித்தது. சீனாவின் கடன் பொறிக்குள் இருந்து இலங்கைதீவை மீட்கும் சக்தி இலங்கைதீவில் இனி வரக்கூடிய எந்த ஒரு உள்நாட்டு அரசாங்கத்துக்கும் கிடையாது.
      இதுதான் மாலைதீவுகளின் நிலையும்.மாலைதீவுகள் சீனாவிடம் வாங்கிய கடனை அடைப்பதற்கு அந்நாட்டின் ஆளற்ற  தீவுகளில் ஒன்றை விற்க வேண்டியிருக்கும் என்று ஒர் இந்திய பாதுகாப்புத்துறை விமர்சகர் தெரிவித்திருக்கிறார். சீனாவை பொறுத்தவரை அதன் பட்டியும் பாதையும் திட்டத்தில் இலங்கைத் தீவுக்கு இன்றியமையாத ஒரு முக்கியத்துவம் உண்டு. எனவே இலங்கைத் தீவு விரும்பினாலும் சீனா தன் பிடிக்குள் இருந்து இச்சிறிய தீவை இலகுவில் கழண்டு போக விடாது. அதிலும் குறிப்பாக 2018ஆம் ஆண்டு மாலத்தீவுகளில் நடந்த ஆட்சி மாற்றத்தோடு அத்தீவுக்கூட்டம் ஒப்பீட்டளவில் சீனாவின் கைகளுக்குள் இருந்து சற்று தூரமாக சென்று விட்டது. அது முழுவதுமாக சீனாவிடம் இருந்து விடுபட முடியாதபடிக்கு சீன கடன் பொறிக்குள் சிக்கியிருக்கிறது. எனினும் அரசியல் ரீதியாக அது இப்பொழுது இந்தியாவுக்கு நெருக்கமாக வந்திருக்கிறது. எனவே மாலத்தீவுகளில் நடந்ததுபோல இனிமேலும் சிறிலங்காவிலும் நடக்கக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை சீனாவிடம் இருக்கும்.
      இந்த அடிப்படையில் தொகுத்துப் பார்த்தால் ஒன்று தெளிவாகத் தெரிகிறது. ராஜபக்சக்கள் சீனாவை நோக்கி போனமை என்பது அவர்களைப் பொறுத்தவரை வேறு தெரிவுகள் இல்லாத ஒரு நிலைதான். ஏனெனில் அவர்கள் இறந்த காலத்தின் கைதிகள்.  அதிலிருந்து அவர்கள் விரும்பினாலும் வெளிவர முடியாது.
      தமிழில் ஒரு கிராமியக் கதை உண்டு. இரண்டு நண்பர்கள் ஆற்றங்கரைக்கு போனார்கள். ஆற்றில் ஒரு பொதி மிதந்து வரக் கண்டார்கள். நண்பர்களில் ஒருவன் அந்த பொதியை அடைய விரும்பி ஆற்றில் இறங்கினான். நீந்திச்சென்று பொதியை கரைக்கு கொண்டுவர முயற்சித்தான். ஆனால் நீண்ட நேரமாக முயற்சித்தும் அவனால் பொதியை கரைக்குக் கொண்டு வர முடியவில்லை. கரையில் நின்றவன் கத்தினான் “முடியவில்லை என்றால் அதை விட்டுவிட்டு நீ திரும்பி நீந்தி வா” என்று. அதற்கு ஆற்றில் நின்றவன் கூறினான் “நான் அதை எப்பொழுதோ விட்டுவிட்டேன் ஆனால் அதுதான் என்னை விடுகுதில்லை” என்று. ஏனென்றால் அவன் பஞ்சுப்பொதி என்று நினைத்துப் பிடித்தது வெள்ளத்தில் அள்ளப்பட்டு வந்த ஒரு கரடியை. இப்பொழுது இலங்கைத்தீவின்  நிலையும் சீனா பொறுத்து அப்படித்தானா? ட்ரகனைப் பிடித்தவனின் நிலை? நிச்சயமாக அந்த ட்ராகனும் வத்திராயனுக்கு வந்த ட்ராகனும் ஒன்றல்ல.
       
      http://www.nillanthan.com/4964/

       
       
    • By கிருபன்
      மாகாண சபையை எங்கிருந்து திட்டமிடுவது? நிலாந்தன்!
      April 17, 2021
      மாகாணசபைத்தேர்தல்களை அரசாங்கம் நடத்தினால் இம்முறை வடக்கிலும் கிழக்கிலும் தமிழ்த்தரப்பு பலவீனமான பெரும்பான்மையைத்தான் பெறலாம் என்ற கணிப்பு பரவலாக உண்டு.
      கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட ஏனைய தமிழ் தேசிய கட்சிகள் வாக்குகளை மூன்றாக உடைக்கும். தவிர பிள்ளையான், வியாழேந்திரன், கருணா ஆகிய மூவரும் வாக்குகளைப் பிரிப்பார்கள். இவ்வாறாக தமிழ்வாக்குகள் அங்கே ஆறுக்கும் மேற்பட்ட தரப்ப்புக்களால் பிரிக்கப்படும் ஆபத்து உண்டு. இது ஒரு பலமான பெரும்பான்மையை பெறுவதில் சவால்களை ஏற்படுத்தும். இதனால் முஸ்லிம்களோடு இணைந்துதான் ஆட்சியை நடத்த வேண்டி இருக்கும் என்ற கணிப்பு பலமாக உண்டு. தமிழ்த்தரப்போடு ஒப்பிடுகையில் அங்கே முஸ்லிம்தரப்பும் சிங்களத் தரப்பும் வாக்குகளை சிதறவிடாமல் வைத்திருக்கக் கூடியநிலைமைகள் அதிகமாகத்தென்படுகின்றன.
      இது கிழக்கில். வடக்கிலும் நிலைமை திருப்தியாக இல்லை.. கடந்த வடமாகாண சபை தேர்தலின்போது கிடைத்தது போன்ற அமோக பெரும்பான்மை இம்முறை கிடைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்றே தெரிகிறது. தமிழ்த்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகள் வாக்குகளை மூன்றாக உடைக்கும். அதைவிட முக்கியமாக கூட்டமைப்புக்குள் ஏற்பட்டிருக்கும் சுமந்திரன்-மாவை மோதலும் வாக்குகளைத் திரட்டுவதற்கு தடையாக இருக்கக்கூடும். இவை அனைத்தையும் கூட்டிக் கழித்துப்பார்த்தால் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை கொண்டிராத கட்சிகளின் பேரபலம் முன்னரை விட அதிகமாகலாம் என்று ஒரு கணிப்பும் உண்டு.
      இவ்வாறானதொரு பின்னணியில்தான் மாகாணசபைத் தேர்தல் என்று ஒன்று நடந்தால் அதில் கிழக்கில் முஸ்லிம்களையும் கவரக்கூடிய ஒருவரை முதலமைச்சராக நிறுத்த வேண்டும் என்று கூட்டமைப்புக்குள் ஒரு தரப்பினர் குறிப்பாக சுமந்திரன் தரப்பினர் சிந்திப்பதாக தெரிகிறது.
      அதேசமயம் வடக்கில் மாவையின்அணியை எதிர் கொள்வதற்கு அல்லது மாவையின் அணியை ஓரங்கட்டுவதற்கு யாரை முன்நிறுத்தலாம் என்று சுமந்திரன் அணி சிந்திப்பதாக பரவலான ஊகங்கள் உண்டு. இந்த ஊகங்களின் பின்னணியில் தான் மணிவண்ணனின் கைது செய்யப்பட்ட அன்றே பிணையில் விடுவிக்கப்பட்டதைக் குறித்து ஒருபகுதியினர் வியாக்கியானம் செய்து வருகிறார்கள்.
      சுமந்திரன் கடந்த பொதுத்தேர்தல் வீழ்ச்சிகளின்பின் ஒரு உத்தியைக் கடைப்பிடித்து வருகிறார். அவருடைய முன்னாள் எதிரிகள் பலரை அவர் நண்பர்களாக்கிக் கொண்டுவிட்டார். அப்படித்தான் மணிவண்ணனின் விடயத்திலும் மணிவண்ணன் பிணையில் விடுவிக்கப்பட்ட இரவு நீதிமன்றத்துக்கு அருகே அப்படியொரு தோற்றம்தான் மேலெழுந்தது. இந்தப்பின்னணியில்தான் சுமந்திரன் மாவைக்கு எதிராக மணிவண்ணனை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தக்கூடும் என்றவாறான ஊகங்களும் அதிகம் ஊதிப் பெருப்பிக்கப்படுகின்றன.
      இவ்வாறான ஊகங்களுக்கு காரணமே தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் தலைமைத்துவபோட்டிதான். கடந்த நாடாளுமன்ற தேர்தல் வீழ்ச்சிகளுக்குப்பின் சுமந்திரனுக்கும் மாவைக்கும் இடையில் ஒரு பனிப்போர் நிலவுகிறது. இந்தப்பனிப்போர் முக்கியமாக நமக்கு உணர்த்துவது என்னவென்றால் கூட்டமைப்பின் தலைமைத்துவம் பலவீனமாக இருக்கிறது என்பதைத்தான். கூட்டமைப்பின் தலைவராகிய சம்பந்தரால் தனது கட்சி ஆட்கள் இருவருக்கு இடையிலான முரண்பாட்டை சுமூகமாக தீர்க்க முடியவில்லை என்பதைத்தான். இப்பனிப்போரின் விளைவாக தமிழரசுக்கட்சி இரண்டாக உடைந்து காணப்படுகிறது. மாகாணசபைத் தேர்தலில் யாரை முதலமைச்சராக நிறுத்துவது என்பதில் தொடங்கி எல்லா விடயங்களிலும் அவர்களுக்கிடையே முரண்பாடுகள் கூர்மையாக வெளித்தெரிகின்றன. தேர்தல்களில் வீட்டுச்சின்னத்தின் கீழ் போட்டியிட்டால்தான் வெற்றியை உறுதிப்படுத்தலாம் என்று நம்பினால் இரண்டு அணிகளும் இணைந்து தேர்தலை எதிர்கொள்ளக்கூடும் ஆனால் மாகாணசபைக்குள் எப்படி விக்னேஸ்வரனை சுமந்திரன் அணி சுற்றி வளைத்ததோ அதே நிலைமை தொடரப்பார்க்கும்.
      இந்த மோதலில் ஒப்பீட்டளவில் சுமந்திரன் தலைமைத்துவப்பண்புகள் அதிகமுடையவராகவும் நெளிவு சுளிவு சூழ்ச்சிகள் மிக்கவராகவும் காணப்படுகிறார். மாவை சேனாதிராஜாவிடம் தலைமைத்துவ பண்பு குறைவு. கடந்த வடமாகாணசபைத் தேர்தலில் அவர் ஒரு முதலமைச்சருக்குரிய தகுதிகளை கொண்டிருக்கவில்லை என்று அவருடைய கட்சியே கருதியது. அதனால்தான் விக்னேஸ்வரனை உள்ளிறக்கினார்கள். ஆனால் இம்முறை சுமந்திரனோடு மோதல் வந்த பின் அவரை மறுபடியும் முதலமைச்சர் வேட்பாளராக கட்சியின் ஒரு பகுதியினர் முன்னிறுத்தி வருகிறார்கள்.

      மாவை எல்லாரையும் சமாளிப்பார். எல்லாரையும் அரவணைத்துப் போவார் அவருக்கு கட்சியில் ஒரு நீண்ட பாரம்பரியம் உண்டு. அந்த மூப்பு காரணமாகத்தான் அவர் தொடர்ந்தும் கட்சியின் தலைவராக இருந்து வருகிறார். நிச்சயமாக அவருடைய தலைமைத்துவப் பண்பு காரணமாக அல்ல. கடந்த பன்னிரெண்டு ஆண்டுகாலத்தில் தமிழரசுக் கட்சிக்கு ஏற்பட்ட சரிவுகளுக்கு மாவையும் பொறுப்பு. சுமந்திரனின் எழுச்சியிலும் அவருக்கு கூட்டுப் பொறுப்பு உண்டு. அவருடைய தலைமைத்துவத்தின் தோல்விதான் இப்பொழுது கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் இரு அணிகள். எனினும் தமிழரசுக்கட்சியின் பலமான கட்டமைப்புத்தான் அவரை தொடர்ந்தும் பாதுகாக்கிறது. அது காரணமாகத்தான் சுமந்திரனால் மாவையை நினைத்தபடி அகற்ற முடியவில்லை.
      அடுத்த வடமாகாணசபைக்கு ஓய்வு பெற்ற ஓரு நிர்வாக உத்தியோகத்தரை சுமந்திரன் மனதில் வைத்திருந்ததாக தகவல்கள் உண்டு. மணிவண்ணனின் எழுச்சியையடுத்து அவரை சுமந்திரன் பயன்படுத்த யோசிக்கலாம். மணிவண்ணனை கைது செய்ததன் மூலம் அரசாங்கம் அவருடைய பிம்பத்தை உயர்த்தியிருக்கிறது என்பதே உண்மை. அதனால்தான் அவர் கைது செய்யப்பட்ட அன்று டான் டிவியின் அதிபர் குகநாதன் தனது முகநூலில் பின்வருமாறு பதிவிட்டிருந்தார்…… ”அனந்தி தேர்தலில் முதல்முறையாகபோட்டியிட்டபோது ராணுவம் அவரது வீட்டில் தாக்குதல் நடத்தியது ஞாபகம் வருகிறது……”. முக்கியமான அரசியல் விவகாரங்களின்போது கொடுப்புக்குள் சிரித்தபடி குகநாதன் இவ்வாறு தெரிவிக்கும் பூடகமான கருத்துக்களில் பல அர்த்தங்கள் மறைந்திருப்பதுண்டு. இதன்மூலம் அவர் என்ன கூறவருகிறார்? மணிவண்ணனை கைது செய்ததன்மூலம் இலங்கை அரசாங்கம் அவருடைய இமேஜை உயர்த்தியிருக்கிறது என்றா? 
      மணிவண்ணனை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்துவதன் மூலம் சுமந்திரன் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை விழுத்தலாம். ஒன்று மாவை மற்றது கஜேந்திரகுமார். ஆனால் தமிழரசுக்கட்சி அதற்கு இடம் கொடுக்குமா?

      வடமாகாண சபையில் தமிழ் வாக்குகள் சிதறுவதைத் தடுப்பது என்றால் அல்லது தமிழ்தேசிய நிலைப்பாட்டை கொண்டிராத கட்சிகளின் பேரம் அதிகரிப்பதை தடுப்பதென்றால் ஒரே ஒரு முன்நிபந்தனைதான் உண்டு. அது தமிழ் கட்சிகளுக்கிடையில் ஒரு குறைந்தபட்ச புரிந்துணர்வு உடன்படிக்கையை ஏற்படுத்துவதுதான். ஆனால் இக்கட்டுரை எழுதப்படும் இந்நாள் வரையிலும் அது ஒரு அம்புலிமாமா கதையாகவே இருக்கிறது. இந்த அம்புலிமாமா கதையின் அடுத்த பாகம்தான் ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவது என்ற சிந்தனையும்.

      இது முதலாவதாக கட்சிகளுக்குள் தலைவர்கள் இல்லை என்பதை காட்டுகிறது. இரண்டாவதாக எல்லா கட்சிகளும் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒருவர் கட்சிகளுக்குள் இல்லை என்பதை காட்டுகிறது. மூன்றாவதாக கடந்த 12 ஆண்டுகளில் கீழிருந்து மேல் நோக்கி தலைவர்களை உருவாக்குவதில் கட்சிகள் தோல்வியுற்றுவிட்டதைக் காட்டுகிறது. அவ்வாறு ஒரு பொது வேட்பாளரை நிறுத்த தமிழரசுக்கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு அதிகமாக காணப்படுகிறது. கடந்த வடமாகாண சபை தேர்தலில் விக்னேஸ்வரனை உள்ளே கொண்டுவந்து பட்டபாடு போதும் என்று அவர்கள் வலிமையாக நம்புகிறார்கள். கட்சிப் பாரம்பரியத்தில் வராத ஒருவர் கட்சிக்கும் கட்டுப்படமாட்டார் அது மட்டுமல்ல அவரால் கட்சியின் மாகாண சபை உறுப்பினர்களையும் கட்டுப்படுத்த முடியாது என்ற வாதத்தை அவர்கள் முன்வைக்கிறார்கள். எனவே ஒரு பொது வேட்பாளருக்கு தமிழரசுக் கட்சிக்குள் குறிப்பாக மாவை அணிக்குள் ஆதரவு இல்லை என்று தெரிகிறது. விக்னேஸ்வரன் மாவைக்கு எதிராகக் காணப்படுகிறார். எனினும், இதுதொடர்பில் கருத்து தெரிவிக்கும் பொழுது “ஏன் ஒரு பொது வேட்பாளரை தேடவேண்டும்? எங்களுடைய கட்சிக்குள் ஆட்கள் இல்லையா?” என்று ஒரு நேர்காணலில் கேட்டிருந்தார். கஜேந்திரகுமார் இதுவரையிலும் அப்படி ஒரு உரையாடலைத் தொடங்கவேயில்லை.

      எனவே கூட்டிக்கழித்துப் பார்த்தால் இம்முறை மாகாணசபையில் தமிழ் வாக்குகள் மூன்றாகச் சிதறும் வாய்ப்புகளே தெரிகின்றன. சிவில் சமூகங்கள் தலையிட்டு மூன்று கட்சிகளுக்கும் இடையில் குறைந்தபட்சம் ஒரு பகை தவிர்ப்பு உடன்படிக்கையை ஏற்படுத்தலாமா என்பதும் சந்தேகமே. தேர்தல் முடிவுகள் வந்த பின் மூன்று கட்சிகளுக்கும் அவர்களுடைய உயரம் எதுவென்று தெரிய வந்தபின் ஒரு பொதுவான புரிந்துணர்வு ஏற்படும். அதை குறைந்தபட்ச உடன்படிக்கை ஒன்றுக்கான அடிப்படையாகக் கட்டியெழுப்பலாமா?
      எனவே ஒரு பொது வேட்பாளரை நோக்கி சிந்திப்பது இப்போதைக்கு சாத்தியமான ஒன்றாகத் தெரியவில்லை. மாறாக அதைவிட முக்கியமாக மாகாணசபை தேர்தல் என்று ஒன்று நடந்தால் அந்த மாகாண ஆட்சியை எப்படி வெற்றிகரமாக முன்னெடுப்பது என்பதைக் குறித்து பொருத்தமான அரசியல் பொருளாதார தரிசனங்கள் கட்சிகளிடம் உண்டா? என்ற கேள்விக்கு முதலில் விடைகாணவேண்டும். மாகாணகட்டமைப்பின் அதிகார வரையறைகளை பரிசோதிக்கும் ஓர் அரசியல் பொருளாதார நிகழ்ச்சித்திட்டம் கட்சிகளிடம் இருக்கவேண்டும். ஒரு மாகாண முதலமைச்சருக்கு இருக்க வேண்டிய தகுதியை அந்த அடிப்படையில்தான் தீர்மானிக்க வேண்டும். சரியான பொருளாதாரத் திட்டங்கள் மாகாணசபையிடம் இருக்க வேண்டும். தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சினைகளைத் தீர்வைக் காண கட்டமைப்பை எப்படி ஆகக் கூடிய பட்சம் பயன்படுத்தலாம் அல்லது அவ்வாறு செய்யும்போது ஏற்படக்கூடிய தடைகளை எப்படி அம்பலப்படுத்தலாம் என்று சிந்திக்க வேண்டும்.
      மாகாணக் கட்டமைப்பு ஒரு பொருத்தமான தீர்வு என்ற கற்பனையை இக்கட்டுரை ஊக்குவிக்கவில்லை. ஆனால் தமிழ் மக்களை ஒரு தேசமாகத்திரட்டும் அம்சங்களை ஆகக்குறைந்த பட்சமாவது பலப்படுத்துவதற்கு மாகாணகட்டமைப்பை எப்படி சாதுரியமாக பரிசோதனையாகப் பயன்படுத்தலாம் என்று சிந்திக்கலாம். எல்லாவற்றுக்கும் முதலில் சரியான அரசியல் பொருளாதார திட்டவரைபு ஒன்று கட்சிகளிடம் இருக்கவேண்டும். தமிழ் கட்சிகள் அவ்வாறான திட்டவரைபுகளை அல்லது வழிவரைபடத்தை இப்பொழுதே முன்வைக்க வேண்டும். மாகாணத்தில் யார் ஆட்சிக்கு வருவது என்பதனை அந்த திட்டவரைபு தான் தீர்மானிக்க வேண்டும். மாறாக கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் உட்பூசல்கள் அல்ல.
       
      https://globaltamilnews.net/2021/159522/
    • By கிருபன்
      மணிவண்ணன் ஏன் கைது செய்யப்பட்டார்? ஏன் விடுவிக்கப்பட்டார்? - நிலாந்தன்
       

      நிலாந்தன்
      “அனந்தி தேர்தலில் முதல்முறையாக போட்டியிட்டபோது ராணுவம் அவரது வீட்டில் தாக்குதல் நடத்தியது ஞாபகம் வருகிறது……”
      இவ்வாறு தனது முகநூல் பக்கத்தில் எழுதியிருப்பவர் டாண் டிவியின் அதிபர் குகநாதன். முக்கியமான அரசியல் விவகாரங்களின்போது கொடுப்புக்குள் சிரித்தபடி அவர் இவ்வாறு தெரிவிக்கும் பூடகமான கருத்துக்களில் பல அர்த்தங்கள் மறைந்திருப்பதுண்டு. மேற்கண்டவாறு அவர் பதிவிட்டது மணிவண்ணன் கைது செய்யப்பட்ட அன்று. இதன் மூலம் அவர் என்ன கூற வருகிறார்? மணிவண்ணனை கைது செய்ததன்மூலம் இலங்கை அரசாங்கம் அவருடைய இமேஜை உயர்த்தி இருக்கிறது. இது எதிர்காலத்தில் மாகாண சபை தேர்தலில் சில தரப்புக்கள் அவரை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவதற்கு தேவையான அடிப்படைகளை உருவாக்கிக் கொடுக்கும் என்ற பொருள்பட அவர் அவ்வாறு கூறி இருக்கிறாரா? அதாவது மணிவண்ணனின் பிம்பத்தை உயர்த்த அரசாங்கம் விரும்புகிறது என்று பொருள்.
       
      இருக்கலாம் ஆனால் மணிவண்ணன் கைது செய்யப்பட்டமை என்பது அரசாங்கம் வேண்டுமென்றே திட்டமிட்டு மேற்கொண்ட ஒரு நடவடிக்கையா? என்ற கேள்விக்கு விடை இங்கு முக்கியம்.
      அது ஒரு நாடகம் என்று எடுத்துக் கொண்டால் அந்த நாடகத்துக்கு எதிர்வினை ஆற்றிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்; எனைய சிங்கள கட்சிகளை சேர்ந்த அரசியல்வாதிகள் ; புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் நாடுகளில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள்; மற்றும் வெள்ளைக்கார அரசியல்வாதிகள் ;அரசியல் செயற்பாட்டாளர்கள் ;அதிலும் குறிப்பாக அமெரிக்க கண்டத்தை சேர்ந்த சில மாநகர சபைகளின் வெள்ளைகார முதல்வர்கள்; இவர்களோடு இலங்கையிலுள்ள அமெரிக்க தூதுவர் உட்பட ராஜதந்திரிகள் போன்ற அனைவரும்
      இதுவிடயத்தில் கருத்துக் கூறப்போய் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா?
      அல்லது மணிவண்ணனின் விவகாரத்தை அரசாங்கம் இலேசாக எடுத்துக் கொண்டு கைது செய்யப் போய் அதற்கு உலக அளவில் எதிர்வினை வந்ததும் இதற்குமேலும் அவரை உள்ளே வைத்திருந்தால் அது அவரின் இமேஜை உயர்த்தும் என்று கணித்து பிடித்த அன்றே அவரை விடுதலை செய்தது என்ற வாதம்தான் சரியா?
      ஆனால் இந்த இடத்தில் மேலும் சில கேள்விகளை எழுப்ப வேண்டும். மணிவண்ணனின் இமேஜை உயர்த்துவதால் யார் யாருக்கு லாபம்? அரசாங்கத்துக்கு இதில் என்ன லாபம்? அவர் எதிர்காலத்தில் வட மாகாண முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவதால் அரசாங்கம் என்ன நன்மை அடையும் ? அல்லது இக்கேள்வியை மறுவளமாகக் கேட்கலாம் அவரை அவ்வாறு முதலமைச்சர் வேட்பாளராக முன்நிறுத்த எந்த தரப்பு தயார்?
      கடந்த ஞாயிற்றுக்கிழமை என்னை பேட்டி கண்ட கப்பிட்டல் டிவியின் ஊடகவியலாளர்கள் இதுதொடர்பில் ஒரு கேள்வி கேட்டார்கள். உத்தியோகப்பற்றற்ற தகவல்களை நம்பி ஆய்வுகளைச் செய்ய முடியாது என்று அவர்களுக்குச் சொன்னேன்.
      மணிவண்ணனை அவ்வாறு முதலமைச்சர் வேட்பாளராக தெரிந்தெடுக்கப்போவதாக தாங்கள் எங்கேயும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என்று விக்னேஸ்வரனின் கட்சியைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள். அதேசமயம் சுமந்திரன் அணியே அவரை அவ்வாறு முன்நிறுத்த முயற்சிகிறார் என்ற ஒரு ஊகம் யாழ்பாணத்திலும் கொழும்பிலும் பரவலாக உண்டு.
       
      சுமந்திரனுக்கும் மாவைக்கும் இடையிலான பனிப்போரின் பின்னணியிலேயே இவ்வாறான ஊகங்கள் வெளிக் கிளம்புகின்றன. அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக மாவை நிற்பதை தடுக்கும் நோக்கத்தோடு சுமந்திரன் அவ்வாறு ஒரு பொது வேட்பாளரை முன்னிறுத்த முயற்சிப்பதாக ஊடகங்கள் ஊகிக்கின்றன. ஏற்கனவே சுமந்திரன் ஒரு ஓய்வு பெற்ற அரச அதிபரை அவ்வாறு முன்னிறுத்த யோசித்திருந்ததாக தகவல்கள் வெளிவந்தன.
      கடந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளில் மாவை தோற்றதும் அவருடைய இடத்தை பிடிப்பதற்கு சுமந்திரனும் சிறிதரனும் முயற்சித்தார்கள். கூட்டமைப்பின் நியமன உறுப்பினர் விடயத்திலும் கலையரசனை தெரிவு செய்ததன்மூலம் சுமந்திரன் மாவையை மிகவும் சாதுரியமாக ஓரங்கட்டினார். அதற்கு பின்னரும் சுமந்திரன் மாவையை ஓரம் கட்டும் விதத்தில் நுட்பமாக காய்களை நகர்த்தினார். மாவை கூடும் கூட்டங்களில் சுமந்திரனும் போய்க் குந்திக்கொண்டிருந்தார். இதுவிடயத்தில் மாவையை விடவும் சுமந்திரனிடம் தந்திரங்களும் நெளிவு சுளிவுகளும் தலைமைத்துவப் பண்பும் ஒப்பீட்டளவில் அதிகம் என்பதை இங்கே சுட்டிக்காட்ட வேண்டும்.
      ஆனாலும் சுமந்திரன் திட்டமிட்டது போல மாவையை முழுவதுமாக ஓரங்கட்ட முடியவில்லை. சுமந்திரனின் நகர்வுகளுக்கு பின்னரும் மாவை ஒப்பீட்டளவில் பலமாகவே காணப்படுகிறார். அதற்கு காரணம் மாவையின் தலைமைத்துவ பண்பு அல்ல.அவரிடம் அப்படி ஒன்றும் கிடையாது. மாவை தமிழரசுக் கட்சியின் தலைவராக நீடித்திருப்பது என்பது முதலாவதாக அக்கட்சியின் பாரம்பரியத்தின் பாற்பட்டது எனலாம். இரண்டாவதாக மாவையின் மூப்பின் அடிப்படையிலானது எனலாம். மூன்றாவதாக அவர் தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வந்ததும் ஒரு காரணம்.ஆனால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவர் தோல்வியுற்றதும் அவருடைய பதவி ஆட்டம் காணத் தொடங்கியது. ஏனென்றால் மாவை என்றைக்குமே தனது தலைமைத்துவ பண்பை நிரூபித்திருக்கவில்லை. கடந்த வடமாகாண சபைத் தேர்தலின்போது மாவை இருக்கத்தக்கதாக சம்பந்தர் விக்னேஸ்வரனை உள்ளிறக்கியதும் அதனால்தான். தனது நிலைப்பாட்டை நியாயப்படுத்த சம்பந்தர் அதிக நேரம் பாடுபட்டார். மாவையை ஓரங்கட்டி விக்னேஸ்வரன் உள்ளிறக்கப்பட்டமை என்பது மாவையின் சொந்தக் கட்சியே அவரிடம் தலைமைத்துவ பண்பு இல்லை என்று நம்புவதைக் காட்டவில்லையா?
      அந்த நிலைமை இப்பொழுதும் உண்டு. ஆனாலும் எல்லாரையும் அரவணைத்துப் போகும் சுபாவம் மாவையை பாதுகாத்தது. சுமந்திரனை குறித்து கட்சிக்குள்ளேயே ஏற்பட்ட அதிருப்தி அவருக்கு அணியைத் திரட்டி கொடுத்தது. கட்சியின் தோல்விக்கு சுமந்திரன் காரணம் என்று கருதியவர்களும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியுற்றவர்களும் அவரோடு அணி சேர்ந்தார்கள். இவை எல்லாவற்றுக்கும் அப்பால் தமிழரசுக்கட்சியின் மிகப் பலமான அடித்தளம்தான் மாவையின் பலம். பல தசாப்தகால பாரம்பரியத்தை கொண்ட ஒரு கட்சி என்ற அடிப்படையில் அதன் தலைவராக அவர் தொடர்ந்தும் தன்னை பாதுகாத்துக் கொள்ளக் கூடியதாக இருக்கிறது. அவரிடம் தலைமைத்துவப் பண்பு இல்லை என்ற போதிலும் கட்சியின் பலம் அவரை பாதுகாக்கின்றது. அதுதான் சுமந்திரனுக்கும் பிரச்சினை. சுமந்திரன் அவர் நினைத்தபடி பாவையை வெட்டி ஓட முடியாதிருக்கிறது .வரக்கூடிய மாகாணசபைத் தேர்தலிலும் சுமந்திரன் தனது விருப்பங்களை நிறைவேற்ற அதுதான் தடையும்.
      அதனால்தான் சுமந்திரன் வெளியிலிருந்து பொது வேட்பாளர்களை கொண்டுவர முயற்சிப்பதாக ஒரு ஊகம் பரவலாக நிலவுகிறது. ஆனால் இது விடயத்தில் சுமந்திரனால் விக்னேஸ்வரனை கூட்டுச்சேர்க்க முடியும் என்று தோன்றவில்லை. ஒரு முதலமைச்சராக வரும் தகுதி மாவைக்கிருப்பதாகக் விக்னேஸ்வரன் கருதவில்லை.ஆனால் அதற்காக சுமந்திரனின் பொது வேட்பாளரை அவர் ஏற்றுகொள்வார் என்று எங்கேயும் வெளிப்படையாகக் கூறியிருக்கவில்லை. கூட்டமைப்புக்கு உள்ளேயும் குறிப்பாக தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் அவ்வாறு வெளியிலிருந்து ஒரு வேட்பாளரை இறக்க ஒப்புக் கொள்வார்களா என்று தெரியவில்லை. எனவே சுமந்திரன் திட்டமிடுவது போல கட்சிக்கு வெளியிலிருந்து ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக இறக்குவதற்கு தமிழரசுக் கட்சியோ அல்லது கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளோ ஒத்துக்கொள்ளுமா என்பது சந்தேகமே.
      எனவே மணிவண்ணனை கைது செய்த அன்றே அரசாங்கம் விடுவித்ததை வைத்தும் சுமந்திரன் தலைமையிலான வழக்கறிஞர்கள் அவரை பிணையில் விடுவித்தமை என்பதை வைத்தும் கூட்டிக் கழித்து ஒரு கணக்குப் போட்டு அடுத்த மாகாணசபை தேர்தலோடு அக்கணக்கின் முடிவை முடிச்சுப் போடுவது என்பது காலத்தால் முந்தியது பொருத்தமற்றது என்றே இப்பொழுது தோன்றுகிறது.
      அரசாங்கம் தனது தனிச்சிங்கள வாக்காளர்களை திருப்திப்படுத்தும் நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் மணிவண்ணனை கைது செய்தது. ஆனால் நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் அதற்கு வந்த எதிர்ப்பை கண்டு அரசாங்கம் தன் முடிவை மாற்றியிருக்கலாம். மேலும் அவருக்கு எதிரான குற்றச்சாட்டு பலவீனமானது என்று அரசாங்கம் கருதியிருக்கலாம். எனவே இது விடயத்தில் மணிவண்ணனை விடுவிக்கக்கோரி நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்து வந்த கோரிக்கைகளை கூட்டிக் கழித்துப் பார்த்த அரசாங்கம் இதன்மூலம் மணிவண்ணனின் இமேஜ் மேலும் உயரலாம் என்று கருதி அவரை பிடித்த அன்றே விடுதலை செய்திருக்கலாம். அவரை விடுவிப்பது என்று தீர்மானித்ததின் அடிப்படையில் அவர்மீது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடுக்காமலும் விட்டிருக்கலாம்.கடந்த 12 ஆண்டு கால தமிழ் மிதவாத அரசியல் பரப்பில் மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட ஒருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டமை இதுதான் முதற்தடவை. இதன்மூலம் மணிவண்ணனின் செல்வாக்கு அதிகரித்திருக்கிறது என்பதே சரி. அவரை கைது செய்யப் போய் அரசாங்கம் அவரை பலப்படுத்தி இருக்கிறது என்பதே உண்மை. அதுதான் மற்றவர்கள் அதை வைத்து ஊகிப்பதற்கு அடிப்படையாகவும் காணப்படுகிறது.
       
      https://www.meenagam.com/மணிவண்ணன்-ஏன்-கைது-செய்ய/
       
    • By கிருபன்
      ஆயரும் அரசியல் வாதிகளும்! நிலாந்தன்.
      April 11, 2021
      2013ஆம் ஆண்டு தமிழ் சிவில் சமூக அமையம் தமிழ்த்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளுக்கிடையே ஒரு சந்திப்பை மன்னாரில் ஒழுங்குபடுத்தியது. அப்பொழுது மன்னார் மறைமாவட்டத்தின்ஆயராக இருந்த அமரர் ராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள் சிவில் சமூக அமையத்தின் அழைப்பாளராக இருந்தார். அவருடைய தலைமையில் நடந்த கூட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் தலைவர்களும் சிவில் சமூகத்தில் பிரதிநிதிகளும் ஆர்வமுடையவர்கள் பங்குபற்றினார்கள். இக்கூட்டத்தில்தான் ஒரு தமிழ் தேசியப்பேரவையை உருவாக்குவது என்று முடிவு எடுக்கப்பட்டது. அதற்காக ஒரு ஏற்பாட்டுக்குழு உருவாக்கப்பட்டது. அதில்கூட்டமைப்பின் சார்பாக சுமந்திரனும் மக்கள் முன்னணியின் சார்பாக கஜேந்திரகுமாரும் சிவில்சமூகத்தின் சார்பாக சட்டவாளர் புவிதரனும் குருபரனும் அடங்கிய ஒரு குழு உருவாக்கப்பட்டது. ஆனால் அந்தக் குழு தொடர்ந்தும் செய்யப்படவில்லை. தமிழ் தேசிய பேரவை உருவாக்கப்படவில்லை.
      அப்படி ஒரு தமிழ் தேசிய பேரவை உருவாக்க வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது ? ஏனெனில் 2009ஆம் ஆண்டுக்குப்பின் கூட்டமைப்பு செல்லும் வழி பிழையானது என்ற காரணத்தால் எனைய கட்சிகளும் சிவில் சமூக பிரதிநிதிகளோடும் இணைத்து ஒரு மக்கள் அமைப்பை உருவாக்குவதன் மூலம் கூட்டமைப்பை மாறாத கொள்கைகளுக்கும் இலக்குகளும் பொறுப்புக்கூறவைப்பதே தமிழ் மக்கள் பேரவை என்ற ஒரு கனவின் நோக்கமாகும்.
      இந்த கனவுக்குள் கூட்டமைப்பைத் திருத்தலாம் கூட்டமைப்பை அரவணைத்து மாற்றலாம் என்ற ஒரு நப்பாசை உண்டு என்பதை இக்கட்டுரைஏற்றுக்கொள்கிறது. கூட்டமைப்பின் வர்க்ககுணமது அதை மாற்ற முடியாது; அதனிடம் புரட்சிகரமான மாற்றங்கள் எதனையும் எதிர்பார்க்க முடியாது; அந்த கட்சிக்கு பதிலாக ஒரு புதிய கட்சியை அல்லது அமைப்பை உருவாக்குவதே புரட்சிகரமான மாற்று தெளிவாக இருக்கும் என்ற விவாதத்தை இக்கட்டுரை நிராகரிக்கவில்லை. ஆனால் அப்பொழுது மக்கள் ஆணையைப் பெற்ற ஏகப்பிரதிநிதியாக கூட்டமைப்பே காட்சியளித்தது. எனவே மக்கள் ஆணையை மீறி ஒரு புதிய கட்டமைப்பை உருவாக்க தேவையான வாழ்க்கை ஒழுக்கமோ அல்லது அரசியல் ஒழுக்கமோ அப்பொழுது சிவில் சமூக பிரதிநிதிகளிடம் இருக்கவில்லை என்ற இயலாமையையும் இங்கே சுட்டிக்காட்ட வேண்டும்.
      ஆனால் கூட்டமைப்பு அதன் ஏக பிரதிநிதித்துவம் காரணமாகவே அந்த கனவோடு சேர்ந்து உழைக்க மறுத்தது. கடந்த ஆண்டு நடந்த பொதுத் தேர்தல் வரையிலும் அக்கட்சி ஏனைய கட்சிகளுடன் இணைந்து செயற்படத் தயாராக இருக்கவில்லை. கடந்த பொதுத்தேர்தலில் ஏற்பட்ட தோல்விகளின் விளைவாகத்தான் அது ஏதோ ஒரு இணக்கத்துக்கு வருவது போல ஒரு தோற்றத்தைக் காட்டியது. எனவே கூட்டமைப்பு தமிழ்மக்களின் ஏக பிரதிநிதியாக தோற்றம் காட்டிய ஒரு காலகட்டத்தில் அக்கட்சியை மாறா இலட்சியத்துக்கும் அரசியல் இலக்குகளுக்கும் பொறுப்புக்கூற வைக்கும் உள்நோக்கத்தோடு திட்டமிடப்பட்டதே தமிழ்தேசிய பேரவை ஆகும். ஆனால் அந்தக் கனவு இன்றுவரையிலும் நிறைவேறவே இல்லை.
      அதன்பின் 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னணியில் தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டது. ஆனால் அது தமிழ் தேசிய பேரவை அல்ல. தமிழ் மக்கள் பேரவையில் கூட்டமைப்பு இணையவில்லை. எனினும் அதன் பங்காளிக் கட்சிகள் சில இணைந்திருந்தன. கூட்டமைப்பின் பிரதான கட்சி ஆகிய தமிழரசுக் கட்சி அந்த தமிழ் மக்கள் பேரவைக்குள் சேரவில்லை. தமிழ் மக்கள் பேரவையின் தொடக்கமும் ஏறக்குறைய கூட்டமைப்புக்கு எதிரானதுதான். ஏனெனில் கூட்டமைப்பில் அதிருப்தியடைந்த விக்னேஸ்வரனே பேரவையின் மையமாக இருந்தார். அதாவது 2013ஆம் ஆண்டு சிந்திக்கப்பட்டதைப் போன்று ஒரு தமிழ்த் தேசிய பேரவையை உருவாக்க முடியவில்லை. அதற்கு கூட்டமைப்பு குறிப்பாக தமிழரசுக்கட்சி ஒத்துழைக்கவில்லை. அதனால் கூட்டமைப்பில் அதிருப்தி கொண்ட விக்னேஸ்வரனை மையமாகக்கொண்டு ஒரு தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டது.
      2018 ஆம் ஆண்டு உள்ளுராட்சிசபைத் தேர்தலின்போது பேரவையில் அங்கம் வகித்த இரண்டு கட்சிகளையும் ஒருங்கிணைக்க பேரவையால் முடியவில்லை. தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் ஈபிஆர்எல்எப்பும் ஒன்றுக்கொன்று முரண் நிலைக்கு போயின. தமிழ் தேசிய மக்கள் முன்னணி விக்னேஸ்வரனுக்கு எதிராக திரும்பியது. அதன்தர்க்கபூர்வ விளைவாக பேரவைக்கும் எதிராகத் திரும்பியது. அதோடு உள்ளூராட்சி சபை தேர்தலில் அக்கட்சி பேரவை என்ற பெயரை தனது அணிக்கு பயன்படுத்தியது. எனினும் அதற்குப்பின்னரான தேர்தல்களில் அந்த பெயரை அக்கட்சி பயன்படுத்தவில்லை.
      அதற்கும் சில ஆண்டுகளுக்குப்பின் அதாவது கடந்த ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் கூட்டமைப்பின் பிரமுகர்கள் சிலர் தோல்வியடைந்தனர். இவ்வாறு தோல்வியடைந்த மாவை சேனாதிராஜா கட்சிக்குள்ளேயே தனது தலைமைத்துவத்தை காப்பாற்றுவதற்காக தமிழ்த்தேசிய பேரவை என்ற பெயரில் ஓர் அமைப்பை உருவாக்க போவதாகவும் அதில் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழ் மக்களுக்கு ஆதரவான அரசியல் மற்றும் சட்ட செயற்பாட்டாளர்களையும் இணைக்கப் போவதாக ஒரு தகவலை தனது நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார். எனினும் அது மாவை கண்ட ஒரு கனவாகவே முடிந்தது.
      இவ்வாறாக தமிழ்ப் பேரவை அல்லது தமிழ் மக்கள் பேரவை அல்லது தமிழ்த் தேசிய பேரவை போன்ற வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படும் ஏதோ ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என்ற கனவு தமிழ் தேசிய அரசியலில் கடந்த ஒரு தசாப்த காலத்துக்கும் மேலாக நிலவிவருகிறது. ஆனால் அது தொடர்ந்தும் ஒரு நிறைவேறாத கனவாகவே காணப்படுகிறது. அந்தக் கனவை கருக்கொண்ட தமிழ் சிவில் சமூக அமையத்தின் அழைப்பாளராக இறக்கும் வரையிலும் பொறுப்பை வகித்த ஆயர் ராயப்பு ஜோசப் இப்பொழுது இல்லை. கனவு மட்டும் தொடர்ந்தும் நிறைவேறாமலே தொங்கிக் கொண்டிருக்கிறது.
      தமிழ் சிவில்சமூக அமையம்தான் அந்தக் கனவை கருக்கொண்டது. அதேசமயம் பலஸ்தீன விடுதலை இயக்கத்திடம் பயிற்சி பெற்ற ஈபிஆர்எல்எஃப் உள்ளிட்ட இயக்கங்களிடம் அதுபோன்ற ஒரு கட்டமைப்பை குறித்த சிந்தனை ஏற்கனவே இருந்துள்ளது. பாலஸ்தீனனத்தில் பல்வேறு அமைப்புக்களையும ஒன்றிணைத்து ஒரு தேசிய பேரவை உருவாக்கப்பட்டதைபோன்று தமிழ் அரசியலிலும் அப்படி ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று கனவு காணப்பட்டது.
      அப்படி ஓர் ஐக்கியத்தை முதலில் ஏற்படுத்தியது இந்தியாதான் என்பது இங்குள்ள முரண்நகை ஆகும். திம்பு பேச்சுவார்த்தையின் போது தமிழ் தரப்பை ஓரணியாக திரட்டுவதற்கு இந்தியாவும் பின்புலமாக நின்றது ஆயுதப் போராட்ட காலகட்டத்தில் முதலில் தோன்றிய குறிப்பிட்டுச் செல்லக்கூடிய ஓர் ஐக்கியம் அதுவெல்லாம். எனினும் அதில் இணைந்த இயக்கங்களுக்குள் புளட் இருக்கவில்லை. ஆனால்2015 இல் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவைக்குள் புளட் இருந்தது. பின்னாளில் அது விலகிச் சென்றது.
      தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கம் என்பது ஒருவிதத்தில் விக்னேஸ்வரனின் எழுச்சியின் விளைவுதான். இன்னொரு விதமாகச் சொன்னால் கூட்டமைப்பின் பலம் உடையும்போது இப்படிப்பட்ட அமைப்புகள் தோன்றுகின்றன. அல்லது இப்படிப்பட்ட அமைப்புகளைப் பற்றி சிந்திக்கப்படுகிறது.
      மாவை சேனாதிராஜாவின் பேரவையும் அப்படிப்பட்டதுதான். அதாவது தொகுத்துப் பார்த்தால் கூட்டமைப்பு பலவீனம் அடையும் பொழுது இப்படிப்பட்ட அமைப்புகளுக்கான தேவை அல்லது ஏதோ ஒரு ஐக்கியம் உருவாக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இது தான் கடந்த ஜனவரி மாதம் நடந்தது. ஜெனிவாவை நோக்கி மூன்று கட்சிகள் அனுப்பிய கூட்டு ஆவணமும் அப்படிப்பட்டதுதான். கடந்த பொதுத் தேர்தலில் பெற்ற தோல்விகள் கூட்டமைப்பின் ஏகபோகத்தை கேள்விக்குள்ளாக்கின. எனவே மாற்று அணியை சேர்ந்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து ஐநாவுக்கு ஒரு பொது ஆவணத்தை அனுப்ப கூட்டமைப்பு ஒப்புக்கொண்டது.
      தமிழ்தேசியபரப்பில் உள்ள எல்லாத் தரப்புப்களையும் ஒன்றிணைக்கும் முயற்சிகள் என்று பார்த்தால் கடந்த 12 ஆண்டுகளில் அதை ஒரு முக்கியமான அடைவு எனலாம். ஆனால் அது 2013ல் கனவு காணப்பட்ட தமிழ் தேசிய பேரவை அல்ல. அதுமட்டுமல்ல அந்த அடைவு தற்காலிகமானதே என்பதனை அடுத்த மாதம் வெளிவந்த பூச்சிய வரைபுக்கு எதிர்வினையாற்றும் விடயத்தில் கூட்டமைப்பு நிரூபித்தது. அதோடு அப்பொது ஆவணத்தை தயாரிக்கும் சந்திப்புகளின் போது இனப்படுகொலை என்ற வாசகத்தை இணைக்க ஒப்புக்கொண்ட சுமந்திரன் இப்போது பழைய பல்லவியை பாடத்தொடங்கிவிட்டார்.
      எனவே கடந்த பத்தாண்டுகளில் தமிழ்தேசிய அரசியலை ஒரு பொது அடித்தளத்தின் மீது கூட்டிக் கட்டும் முயற்சிகளை தொகுத்துப் பார்த்தால் மிகத் தெளிவாக சில விடயங்கள் தெரியவரும்.
      முதலாவது கூட்டமைப்பு பலவீனமடையும் பொழுது அல்லது அதில் உடைவு ஏற்படும் பொழுது இது போன்ற முயற்சிகளுக்கு அவர்கள் ஒத்துக்கொள்வார்கள். இரண்டாவது அவ்வாறு ஏதோ ஓர் உடன்பாட்டுக்கு வந்த பின்னரும் அந்த ஐக்கியத்தை கூட்டமைப்பே பெரும்பாலும் உடைக்கிறது. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் உருவாக்கப்பட்ட பதின்மூன்று அம்ச ஆவணத்திற்கு அதுதான் நடந்தது. கடந்த ஜனவரி 15ஆம் திகதி அனுப்பப்பட்ட ஜெனீவாவுக்கான பொது ஆவணத்துக்கும் அதுவே நடந்தது. அதாவது எந்த ஒரு பொது ஏற்பாட்டுக்கும் கூட்டமைப்பை பொறுப்புக்கூற வைப்பதில் அடிப்படையான சவால்கள் தொடர்ந்தும் காணப்படுகின்றன.
      இந்தச்சவால்களை கடந்து மேற்படி கட்சிகளை ஒரு பொது மேசைக்கு அழைத்துக்கொண்டு வரத்தக்க சிவில் ஆளுமைகள் தற்பொழுது பலமாக இல்லை என்பதே தமிழ் அரசியலில் உள்ள மிகப் பாரதூரமான ஒரு வெற்றிடம் ஆகும். தமிழ் மக்கள் பிரதிநிதிகளையும் சிவில் சமூகங்களையும் சந்திக்கும் பெரும்பாலான வெளிநாட்டு தூதுவர்கள் ஒரு குரலில் பேசுங்கள் ஓரணியாக வாருங்கள் என்று கேட்கிறார்கள். ஆனால் அவ்வாறு தமிழ்த்தரப்பை ஒரு பெரும் திரளாகக் கூட்டிக்கட்டவல்ல சிவில் கட்டமைப்புக்கள் எவையும் கிடையாது. சிவில் தலைவர்களும் கிடையாது. மறைந்த ஆயர் அப்படியொரு ஆளுமையாக காணப்பட்டார். கட்சிகளை அழைத்து கூட்டம் கூட்டி தன் கருத்தை வலிமையாகமுன்வைக்கத்தக்க பலம் அவருக்கு இருந்தது. அது அவருக்கு பதவி வழியாகக் கிடைத்தது. அதே சமயம் தனது அரசியல் நிலைப்பாட்டின் காரணமாகவும் செயல்பாட்டின் காரணமாகவும் அவரும் தனது பலத்தை அதிகப்படுத்திக்கொண்டார்.
      ஆனால் தற்பொழுது அவ்வாறான ஆளுமைகள் இல்லை. அது மட்டுமல்ல தமிழ் சிவில் சமூகங்களில் பெரும்பாலானவை அறிக்கை விடும் அமைப்புக்களாகவும் செயற்பாட்டு ஒழுக்கம் பெருமளவுக்கு இல்லாதவைகளாகவும் காணப்படுகின்றன. அதிலும் குறிப்பாக கடந்த 12ஆண்டுகளில் பல்வேறு பெயர்களில் பல்வேறு சிவில்சமூகங்கள் தோன்றி மறைந்துவிட்டன. பல்வேறுதரப்புகளின் நிகழ்ச்சி நிரல்களை முன்னெடுப்பதற்காக இவ்வாறு சிவில் சமூகங்கள் அவ்வப்போது உருவாக்கப்படுகின்றன. பின்னர் காணாமல் போய்விடுகின்றன. சில அமைப்புகள் தொடர்ந்தும் கடிதத் தலைப்பு அமைப்புகளாக காணப்படுகின்றன. இதில் ஆகப் பிந்திய ஓர் அமைப்பே அண்மையில் ஜெனிவா கூட்டத் தொடரையொட்டி நல்லூரில் மேடை அமைத்த ஓரமைப்பும் ஆகும். பலமான சிவில் சமூகங்களற்ற ஒரு வெற்றிடத்தில் அதுபோன்ற அரசின் முகவரமைப்புக்கள் உருவாகின்றன.
      இதுவிடயத்தில் தமது செயட்பாட்டு ஒழுக்கம் காரணமாக ஒரு சக்தி மூலமாக மேலெழுந்து அதன் காரணமாகவே அரசியல் வாதிகளையும் செயற்பாட்டாளர்களையும் தன்னை நோக்கி ஈர்க்கவல்ல ஆளுமைகள் அல்லது அமைப்புக்கள் தமிழ் அரசியல் பரப்பில் மிகக் குறைவு .
      2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின்போது இலங்கையில் சிவில் சமூகங்களின் பங்களிப்பை குறித்து பேசும்போது கலாநிதி உயாங்கொட அதை “அரசியலின் மீது சிவில் சமூகங்களின் தார்மீக தலையீடு ” என்று வர்ணித்தார். அப்படி ஒரு தலையிட்டு செய்யக்கூடிய பலம் மறைந்த ஆயர் ராயப்பு ஜோசப்பிடம் இருந்த காரணத்தால்தான் அவரால் கட்சிகளை மன்னாருக்கு அழைக்க முடிந்தது.
      ஆனால் 2013ஆம் ஆண்டு நடந்த அச்சந்திப்பின் முடிவில் உரை நிகழ்த்திய சம்பந்தர் மறைந்த ஆயரை பார்த்து பின்வரும் தொனிப்பட சொன்னார்” பிஷப் நீங்கள் சொல்லுங்கோ ஆனால் இறுதிமுடிவை நான்தான் எடுப்பேன்” என்று. ஆனால் கடந்த ஜனவரி மாதம் மூன்று கட்சிகளையும் பொது மேசைக்கு கொண்டு வந்த பொழுது அச்சந்திப்பில் பிரசன்னமாகியிருந்த திருமலை ஆயர் நோயல் இமானுவல் அவர்கள் கட்சிப்பிரதிநிதிகளை நோக்கி கண்டிப்பான குரலில் உரை நிகழ்த்திய பொழுது யாரும் அவரை எதிர்த்து கதைக்கவில்லை. அதன் அர்த்தம் சிவில் சமூகங்களின் தார்மீக தலையீட்டுக்கு கட்சிகள் அடங்கிப்போயின என்பதல்ல. ஏனெனில் அந்த ஆவணத்தை ஒன்றாக அனுப்பிய கட்சிகள் பின்னர் எவ்வாறு நடந்துகொண்டன?
      எனவே தமிழ் அரசியலின்மீது தார்மீகத் தலையீட்டைச் செய்யவல்ல சிவில்சமூகங்களை கட்டியெழுப்ப வேண்டும். அவ்வாறு கட்டியெழுப்புவதுதான் மறைந்த ஆயிருக்கு சிவில் சமூகங்களும் அரசியல் செயற்பாட்டாளர்களும் செய்யக்கூடிய மெய்யான அஞ்சலியாக இருக்கும்.
      https://globaltamilnews.net/2021/159201/
       
       
  • Topics

  • Posts

    • வக்கிர எண்ணம் கொண்ட ஆண்களின் சம்பாத்தியத்தில் வாழும் பெண்களின் நிலை எப்பவுமே துயரமானதுதான் என்பதை தெளிவாக சொல்கிறது இக் கதை.....!   😎 பகிர்வுக்கு நன்றி கிருபன்.......!
    • நெஞ்சை உறைய வைத்த சிறிலங்கா கடற்படையினர் நடத்திய குமுதினிப் படுகொலை! குமுதினி படகுப் படுகொலைகள் என்பது 1985 ஆம் ஆண்டு மே 15 ஆம் நாள் நெடுந்தீவிற்கும் புங்குடுதீவிற்கும் இடையில் சேவையாற்றிய குமுதினிப் படகில் பயணம் செய்தவர்கள் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்டு இன்றோடு  36 வருடங்கள் ஆகும். நெடுந்தீவின் மாவலித்துறையில் இருந்து நயினாதீவின் குறிகாட்டுவான் துறைமுகத்திற்கு குமுதினிப் படகில் சென்ற பயணிகள் இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். குழந்தைகள், பெண்கள் உட்பட மொத்தம் 33 பேர் குத்தியும் வெட்டியும் கொல்லப்பட்டனர். முப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் காப்பாற்றப்பட்டனர். நேரில் கண்டவர்களின் சாட்சியத்தின் படி, இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படும் ஆறு நபர்கள் படகில் ஏறினர். படகில் பயணம் செய்தவர்களை முன்னே வரும்படி அழைத்து ஒவ்வோருவரையும் தமது பெயர், வயது, முகவரி, எங்கு செல்கிறார்கள் போன்ற விவரங்களை உரத்துக் கூறும்படி பணிக்கப்பட்டார்கள். பின்னர் அவர்களை வாள்களாலும் கத்திகளாலும் வெட்டிக் கொன்றனர். சாட்சியங்கள் பன்னாட்டு மன்னிப்பு அவையினால் பதியப்பட்டன. பொது வேலைகள் திணைக்களத்திடம் இருந்து தற்போதைய வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கீழிருந்த குமுதினி 1960களில் இலங்கை அரசால் நெடுந்தீவுக்கு போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை நெடுந்தீவு மக்களை வெளியுலகத்தொடர்பில் வைத்திருக்க உதவிய படகு இதுவாகும். இயந்திர அறை முன்பகுதி பின்பகுதி என மூன்று பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளது. குமுதினி படகு 1985 மே 15 காலை 7:15 மணிக்கு நெடுந்தீவு மாவலித் துறைமுகத்தில் இருந்து 64 பயணிகளுடன் புறப்பட்டது. நயினாதீவு நோக்கிச் சென்று கொண்டிருக்கும் போது புறப்பட்ட அரைமணி நேரத்தின் பின் நடுக்கடலில் கண்ணாடி இழைப் படகில் வந்த இலங்கைக் கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டது.       ஆறு பேர் முக்கோண கூர்க்கத்தியும் கண்டங்கோடலிகள் இரும்புக்கம்பிகள் சகிதம் குமுதினியில் ஏறினர். பின்புறமிருந்த பயணிகளை இயந்திர அறையின் முன்பக்கம் செல்லுமாறு மிரட்டினர். அவர்கள் அனைவரும் சென்றுவிட்டனர். பின்புறம் இருபுற இருக்கைகளுக்கு நடுவே பலகைகளினால் இயந்திரத்தில் இருந்து பின்புறம் செல்லும் ஆடு தண்டுப்பகுதியை அவர்கள் அகற்றினர். இருக்கை மட்டத்தில் இருந்து கிட்டத்தட்ட சுமார் 4 அடி ஆழமானதாக அது இருந்தது. இதன்பின் பணியாளர்கள் உட்பட ஒவ்வொருவராக உள்ளே அழைக்கப்பட்டனர். அரைகுறைத் தமிழில் அவர்கள் கதைத்தனர். குமுதினியின் இருபக்க வாசல்களிலும் உள்ளும் வெளியும் கடற்படையினர் இருந்தனர். ஒவ்வொருவராக கடற்படையினர் அழைத்து கத்தியால் குத்தியும் கண்டங்கோடலியால் வெட்டியும் இரும்புக்கம்பியால் தாக்கியும் கொன்று அந்த ஆடு தண்டுப்பகுதியில் போட்டனர். இப்படி கொல்லப்படுபவர்கள் எழுப்பும் அவல ஒலி முன்புறம் இருப்பவர்களுக்கு கேட்கக்கூடாது என்பதற்காக அவர்கள் பெயரையும் ஊரையும் உரக்கச் சொல்லுமாறு பணிக்கப்பட்டனர். அவலக் குரல் எழுப்ப முடியாது இறந்தவர்கள் போல் இருந்தவர்களும் உண்டு. கடுமையாகத் கடற்படை தாக்க குரல் எழுப்பியவர்கள் அதிகளவில் தாக்கப்பட்டு இறந்து விட்டார்கள் என கடற்படையினரால் கருதப்பட்டும் போடப்பட்டனர். பயணிகளில் ஒருவர் கடலில் குதிக்கவே அவருடன் சேர்ந்து வேறு சிலரும் கடலில் குதிக்கத் தொடங்கினர். இதனைக் கண்ட ஆயுத நபர்கள் அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். நேரில் கண்ட ஒருவர் இவ்வாறு கூறுகிறார்.: “எனது தலையில் அடித்தார்கள். நான் விழுந்து விட்டேன். நான் இழுத்துச் செல்லப்படுவதை உணர்ந்தேன். கோடரி போன்ற ஆயுதத்தால் எனது தலையை அடித்தார்கள். வயிற்றிலும் கால்களிலும் அடித்தார்கள். பின்னர் ஒரு பள்ளத்தில் வீழ்ந்தேன். நான் இறந்து விட்டதாக நடித்து அப்பாடியே கிடந்தேன். எனக்கு மேல் மேலும் உடல்கள் விழுந்தன. குழந்தைகள், பெண்களின் அவலக்குரலைக் கேட்கக்கூடியதாக இருந்தது.” சுபாஜினி விசுவலிங்கம் என்ற 7 மாதக் குழந்தை முதல் 70 வயது தெய்வானை உட்பட இப்படுகொலை நிகழ்வில் இறந்தோர் எண்ணிக்கை 36 முதல் 48 வரை எனத் தெரிவிக்கப்படுகிறது. ஆனாலும் பன்னாட்டு மன்னிப்பு அவை இறந்தோர் எண்ணிக்கை 23 எனத் தெரிவிக்கிறது.71 பேர் உயிருடன் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.   பன்னாட்டு மன்னிப்பு அவையினர் இந்நிகழ்வில் பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் விரிவான அறிக்கை ஒன்றை இலங்கை அரசுக்குச் சமர்ப்பித்து குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கெதிராக முறைப்படி சட்ட நடவடிக்கை எடுக்கும் படி வற்புறுத்தியது. இப்படுகொலைகள் நயினாதீவு கடற்படைத்தளத்தைச் சேர்ந்தோரால் மேற்கொள்ளப்பட்டதென குற்றஞ்சாட்டப்பட்ட வேளையில் “ “இக்குற்றத்தை யார் புரிந்தார்கள் என அறிவதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை,” ” இலங்கை அரசின் தேசியப் பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி கூறினார். தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகம் நவம்பர் 22, 2006 விடுத்த அறிக்கையில் படகில் 72 பேர் இருந்ததாகவும் 36 பேர் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறது. உயிர் தப்பியவர்கள் பலரின் வாக்குமூலங்களை அது வெளியிட்டிருக்கிறது. நெடுந்தீவு மக்களின் வாழ்வில் குமுதினிப்படுகொலை மறக்க முடியாதது. ஆண்டுதோறும் இந்தப் படுகொலையை நினைவுகூறும் நிகழ்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ் இனப்படுகொலை வரலாற்றில் மறக்க முடியாத வடுவாக நிலைத்துள்ள குமுதினிப்படுகொலையை நெடுந்தீவு மக்கள் மாத்திரமின்றி உலகமெங்கும் உள்ள தமிழ் மக்களும் நினைவுகூறுகின்றனர். கடலம்மா கடலம்மா… நீயே சொல் குமுதினி ஏன் பிந்தி வந்தாள்? எம்மவரின் அவலங்களைச் சடலங்களாய்ச் சுமந்துகொண்டு ‘குமுதினி’ குருதி வடிய வந்தாள். கடலம்மா கண்டாயோ கார்த்திகேசு என்னவானான்? எந்தக் கரையில் உடலூதிக் கிடந்தானோ? ஓ…! சோழகக் காற்றே நீ, வழம்மாறி வீசியிருந்தால்… ‘குமுதினி’ வரமாட்டாள் என்று நெடுந்தீவுக்குச் சொல்லியிருப்பாய். பாவம் மரணங்களின் செய்தி கூடக் கிட்டாத தொலைதீவில் ஏக்கங்களையும் துக்கங்களையும் கடலலைகளிடம் சொல்லிவிட்டுக் காத்திருக்கும் மக்கள்… கடலம்மா நீ மலடி ஏனந்தத் தீவுகளை அனாதரவாய்த் தனியே விட்டாய்? கடலம்மா… உன் நீள் பரப்பில் அனாதரவாய் மரணித்த எம்மவரை புதிய கல்லறைகளை எழுப்பி ‘அனாதைக் கல்லறைகள்’ என நினைவூட்டு. ஆனால், இனிவருங் கல்லறைகள் வெறும் இழப்புக்களின் நினைவல்ல, எமது இலட்சியங்களின் நினைவாகட்டும்! -நிலாந்தன்   "துவம்சம்" அல்லது நினைவறா நாள். ( 15-05-1985 )   குமுதினி ……… இந்தப் பெயரை, உச்சரிக்கும் உதடுகள்- இன்றும் கூட துக்கத்தால் ஒரு கணம் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்கின்றன!! காகம் கத்தித் துயிலெழும் – என் இனிய தீவினை …….. பட்டணத்தோடு இணைத்த பாலம் அவள்! அவள் மடிமீது ஏறிய பின்புதான், எங்களின் பனாட்டும், பாயும்……. ஓலையும், ஒடியலும் ……… பண நோட்டுக்களாக மாறின !! பிரபஞ்ச உருண்டைக்குள் தான், எத்தனை பிரமிப்புகள் -அத்தனையும் அந்தப் பாவைமீது காலை வைத்த – பின்புதான் நாம் கண்டுணர முடிந்தது !!! ஆயிரம் பேதம் சொல்லி, பனம்கிழங்குக் கூறுகளாய்…….. கிழிபட்டுக் கிடந்த என் மக்களை “மனிதமே, நேயமென்று” தன் மடிமீது சுமந்து …… பரஸ்பரம் புரிந்துண்ர்வுள்ளவர்களாக்கிய புண்ணியவதி அவள் ! பலனை எதிர்பாராமல், கடமையை மட்டும் செய்த கீதை படிக்காத கோதை ! என் கையில் சுமந்த புத்தகங்கள் ….. காலில் நசிபடும் செருப்பு …….. தீபாவளிப் புத்தாடை ….. பொங்கலாய்ப் பொங்கும் புதுப்பானை ……. அப்புவையும்,ஆச்சியையும், கிடத்திவைத்த சவப்பெட்டிகள் ……. எல்லாமே …… எல்லாமே ………. அவள் சுமந்தவை ! கட்டுமரங்களுக்கும் கைவலி-வள்ளங்களுக்கும் கல்தாக் கொடுத்துவிட்டுக் கடும் வேகக் கப்பலாய் – என் துறைமுகத்தில் மிதந்த அழகுராணி ! புள்ளிமானாய் துள்ளிக் குதித்து – அவள் ஏழாற்றுப் பிரிவைக் கடக்கிறபோது ……. மலைபோல் உயரும் அலைகளும் – அவளிடம் கைகட்டிப் பணிந்து, மௌன நுரையாய் சிதறுண்டு போகும் !! அதிகாலையின் பனிச்சிதறலோடு …… அன்றும் அவள் – தன் அரும்புத்திரர்களோடு புறப்பட்டுப் போனாள் !! பிரளயம் என்பதை அறியா – அவளையே பிரளயமாக்கின ஆயுதக் கூலிகள் !! வெடித்து வீசியெறிந்த பட்டாசுத் துண்டுகளாய் ………. காலறுபட்டு ……..கையறுபட்டு …….. துடிக்கத் துடிக்க ……… அவ்ள் மடியில் உயிர் போன, என்னுயிர்த் தங்கைகளின் அழகான கனவுகள் பற்றி ……. இன்னமும் ……. அவர்கள் …….. வாழ விரும்பிய வாழ்க்கையைப் பற்றி ……. பலமாதமாய், பவித்திரமாய், உருவாகி கணப்பொழுதில் கருவுடனேயே …….. சிதையில் எரிந்த என் நண்பனின், மனைவி பற்றி …….. பதைக்கப்,பதைக்க கொலையுண்டு கிடந்த பச்சை மழலை பற்றி ….. மரணிக்கும் போதும், எதிரியிடம் மண்டியிடாது உயிர் விட்ட என்னூர்- வீர அன்னைகள் பற்றி …… என்னினிய உணர்வில் தமிழைக் கலந்து, தன்னுயிரைக் கூலிப்படைக்கு காவு கொடுத்திட்ட தமிழாசிரியன் பற்றி ……. எவரைப்பற்றி ……. எவரைப்பற்றி …….. நான் புலம்பி அழ ????? வெல்லை, பெருந்துறை ……. குடவிலி, குவிந்தா ……. எத்திசை நோக்கினும் எங்கும் அழுகுரல் !! கீழ்த்திசையிருந்து …….. பெருந்துறையீறாய்……… ஈக்களும் கூட இரையற்றிருந்த நாள். என்னூர்க் கொண்டைச் சேவலும், காக்கையும், கூட மார்பில் அடித்த மரண நாளது !! வீகாமனும்,வெடியரசனும், ஆண்ட திருத்தீவு விம்மல்களால் நிறைந்த நாளது ! பூதத்தைக் கொண்டு பொழிந்த – கிணறுகளில் நன்னமுத நன்னீர் குடித்த – மனிதர்களின் கண்ணீர் பெருகிக் கரையுடைந்த நாளது . இந்து மாக்கன்னியின், பொட்டெனப் போற்றிடும் ……. நெடுந்தீவகத்தின் உயிர்களின் பெறுமதி – கேவலம் காட்டிலே வெட்டிய கால்நடை போன்றதா ?? ஈழதேசத்து மூளையாய்த் திகழும் – அழகிய தமிழின் இலக்கணத்தீவு …….. அந்நியன் கண்ணில், துச்சமாய் ஆனதோ ???   கூவியெழும் அலைகளின் கூக்குரல் – இக் காற்றில் தவழ்ந்து காதில் உறைக்கிறது. மரணத்தை வென்ற மாமறவர் நீங்கள் !! மண்ணின் மடிவெடித்து மறுபடியும் பிற்ப்பீர்கள். ஆழ்கடலிருந்து ….. அலைகடலின் மடியிருந்து …… வெட்டத் தளைக்கும் மரங்களாய் …..-நீங்கள் விட்ட இடமிருந்து விழுதுகளை எறிவீர்கள் !!! "மா.சித்திவினாயகம்" ("மாவிலி" மலரிலிருந்து ) குமுதினிப் படுகொலை - நீதி மறுக்கப்பட்ட ஒரு துயரத்தின் கதை: குமுதினிப் படுகொலையானதுமனித உரிமை அமைப்புக்களின் சான்றுகளில் இருந்து மறைக்கப்பட்டு, நீதி மறுக்கப்பட்டதாக, அல்லது நீதி வழங்கப்படாததாக இருபது தசாப்தங்களுக்கு மேலாகிவிட்டது. இத்தனை ஆண்டுகள் கழிந்தபின்னரும் குமுதினிப் படுகொலையில் உயிர் தப்பிய படகுப்பணியாளரையும் மற்றும் உயிர் தப்பிய பயணிகளையும் சிறிலங்கா கடற்படைதேடி வருகிறது. ஊர்காவற்துறை, இறங்குதுறை சிறிலங்கா கடற்படை முகாமாக தொடர்ந்து இருந்து வருகிறது. இதன் அருகேதான் குமுதினி தரையேற்றப்பட்டு திருத்தப் பணிக்கு உட்படுத்தப்பட்டு வந்தது. அங்கு குமுதினியின் சில பணியாளர்கள் தங்கியிருந்தனர். இவர்களிடம் சென்ற சிறிலங்கா கடற்படையினர் 1985ஆம் ஆண்டு குமுதினி படுகொலையில் தப்பிய பயணிகள் எங்கே இருக்கிறார்கள் என விசாரிக்கின்றனர். அதேபோல் குறிகட்டுவான் இறங்குதுறையிலும், நயினாதீவு சிறிலங்காக்கடற்படை இறங்குதுறையிலும் தப்பிய படகுப்பணியாளரைப்பற்றியும்,தப்பிய பயணிகள் பற்றியும் தொடர்ந்தும் சிறிலங்கா படையினர் விசாரித்தே வருகின்றனர். இது ஏன்?. 1985ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் நாள் காலை ஏழு மணிக்கு நெடுந்தீவு மாவிலி துறைமுகத்திலிருந்து 64 பயணிகளுடன் புறப்பட்டபோது, பொதுவேலைகள் திணைக்களத்திடம் இருந்து இப்போதைய வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கீழுள்ள குமுதினிப்படகு அரை மணி நேர பயணத்தின் பின் சிறிலங்காக கடற்படையால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டது. இரு சிறிய பிளாஸ்ரிக் படகில் வந்த சிறிலங்கா கடற்படையினர் குமுதினிப் படகை நிறுத்தச்சொல்லி அதை நிறுத்தியபின்னர் 6 கடற்படையினர் முக்கோணக் கூர்க்கத்திகள், கண்டங் கோடாரிகள், இரும்புக்கம்பிகள் சகிதம் குமுதினிப்படகில் ஏறினர். படகின் பின்புறம் இருந்த பயணிகளை படகின் முன்பக்கம் செல்லுமாறும் மிரட்டினர் அவர்கள் அனைவரும் சென்றுவிட்டனர். படகின் பின்புறம் இரு புற இருக்கைகளுக்கு நடுவே இயந்திரத்திலிருந்து பின்புறம் புறப்புளருக்குச் செல்லும் ஆடுதண்டுப்பகுதி மூடப்பட்டிருந்த பலகைகளை படையினர் களற்றி (இருக்கைகளிலிருந்து 4 அடி ஆழம் உள்ளதாக இது இருந்தது) அதன் பின் படகுப் பயணிகள் ஒவ்வொருவராக உள்ளே அழைக்கப்பட்டனர். குமுதினி இருபக்க வாசல்களிலும் உள்ளும், வெளியும் கடற்படையினர் இருந்தனர். ஒவ்வொருவராக வந்த பயணிகளை அழைத்து கத்தியால் குத்தியும், கண்டம் கோடரிகளால் வெட்டியும், இரும்புக் கம்பிகளால் தாக்கியும் அந்த படகின் நடுப்பள்ளத்தில் போடப்பட்டனர். கொல்லப்பட்டவர் போக குற்றுயிராய்ப்போனவர்கள் குரல் எழுப்ப முடியாது செத்தவர்கள்போல் கிடந்தனர். இச்சம்பவத்தில்,தாக்குதல் நடக்குதென குரல் கொடுக்க முனைந்தவர்கள் அதிகாரிகளால் தாக்கப்பட்டு இறந்தார்கள். உள்ளே பள்ளமாக இருந்த பகுதியில் மக்கள் போடப்பட்டதால் முன்புறமிருந்து செல்லும் பயணிகளுக்கு ஒவ்வொருவராக முன்பு சென்றவர்களுக்கு என்ன நடந்தது என்பது தெரியாதிருந்தது. இதனையறிந்தஒருவர் கடலில் குதித்துக் கொண்டார். அதன் பின் படகில் இருந்த சிலரும் கடலில் குதிக்கத் தொடங்கினர். இதனைக் கண்ட படையினர் துப்பாக்கிகளால் அவர்களைச் சுட்டுக் கொன்றனர். ஏழுமாதக் குழந்தை முதல் வயோதிபர்கள் வரை ஈவிரக்கமற்றமுறையில் படுகொலை செய்யப்பட்டனர். இச்சம்பவத்தில் இறந்தவர் போல கிடந்த சிலர் உயிர்தப்பிக் கொண்டார்கள். இப்படுகொலையின் பின் காயம் அடைந்தவர்கள் புங்குடுதீவு வைத்தியசாலைக்கும், யாழ்.போதனா வைத்தியசாலைக்கும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் கொல்லப்பட்ட விடயத்தை மருத்துவமனையால் சிறிலங்கா காவல்துறையிடம் முறையிட்டும் எதுவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. பதிலாக சில நாட்களில் தப்பியவர்களை மருத்துவமனைக்கு வந்த சிறிலங்கா கடற்படையினர் தேடத்தொடங்கினர். நோயாளிகள் உடனடியாக மருத்துவமனையிலிருந்து விடுதிகளுக்கு இடம் மாற்றப்பட்டு மறைக்கப்பட்டனர். உயிர் தப்பிய படகுப் பயணிகளை படையினர் புங்குடுதீவு மருத்துவமனையில் தேடிச்சென்ற போது சிலர் மறைக்கப்பட்டு தலை மறைவாகியே சிசிச்சை பெற்றனர். சிலரைத் தவிர ஏனையோர் வெளிநாடுகளுக்குத்தப்பிச் சென்றுவிட்டனர். அரசப் படைகள் படகுப்பயணிகள் தப்பி விடக்கூடாது என்பதற்காக அவர்களைத்தேடித்திரிந்தனர். இன்றும் தேடிக்கொண்டே இருக்கின்றனர். எதுவிதவிசாரணைகளும் மேற்கொள்ளப்படாது இக் கடற்படுகொலை மறுக்கப்பட்டு மறைக்கப்பட்டுள்ளது.     ஆனால் சாட்சிகளை தேடியழிக்கச் சிறிலங்காக்கடற்படையினர் தீவிர அக்கறைகாட்டி வருகின்றனர். விசாரணைகளற்று மறைக்கப்பட்ட குமுதினி கடற்படுகொலை வெளிச்சத்துக்கு கொண்டு வரப்படவேண்டும். சிங்கள தேசக் காடையர்களால் நிகழ்த்தி மறைக்கப்பட்ட கொடூரங்கள் அம்பலப்படுத்தப்பட வேண்டும்.உலக நாடுகளின் மனச்சாட்சிகளை தட்டி உலுப்ப வேண்டும். இதற்கு இதில் உயிர் தப்பி மனித உரிமைச் சபைக்குச் சாட்சியமளித்து இன்று அச்சம் காரணமாக தலைமறைவாகியுள்ள சாந்தலிங்கம், குமாரசாமி, கணேசபிள்ளை போன்ற பலரும் உண்மைகளை உலகுக்கு இனியாவது வெளிப்படுத்த வேண்டும். https://www.thaarakam.com/news/da77702d-e7e3-4a39-9f09-2ad710a30986  
    • வெறித்தனமான துடுப்பாட்ட சண்டை காட்சிகள்.☺️.😊  
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.