Jump to content
 • Veeravanakkam
 • Veeravanakkam
 • Veeravanakkam

ஓர் அகதியின் மரணம்...!


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

ஓர் அகதியின் மரணம்...!

ஜேர்மனியில் Hemsbach என்னும் கிராமம்; அந்த கிராமத்தில் மிகச் சொற்பமான தமிழர்களே வாழ்கின்றார்கள்..! ஏன் எண்ணிக்கையில் 15 நபர்கள் என்று சொல்லலாம்..! அதில் அண்மையில் அகதியாக வந்த இளைஞனின் பரிதாப மரணம் என்னையும் எமது வீட்டாரையும் மிகவும் பாதித்திருந்தது...!

அவர் வாழும் பொழுது தனக்கு எந்த உறவுகளும் ஜேர்மனியில் இல்லையென்பதை ஒரு முறை எனது மனைவியுடன் உரையாடும் பொழுது தெரிவித்தாராம்..! தனக்கு என்ன வேலையென்றாலும் எடுத்து தரச்சொன்னாராம்..!
அதுதான் முதலும் கடைசியுமாக என் மனைவி அவரை வீதியில் கண்டது.

அதன் பின்னர் துணைவியார் என்னிடம் இது தொடர்பாக கதைத்திருந்தார்; முடிந்தால் அவருக்காக வேலையொன்று பெற்றுக் கொடுக்குமாறு கேட்டிருந்தேன்..!

அந்த இளைஞன் வாழ்விலும் சோதனை வந்தது..!
ஐரோப்பிய நாடுகளில் அகதி அந்தஸ்த்து மறுக்கப்பட்டவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பும் முடிவை அந்நாடுகளின் அரசுகள் தீவிரப்படுத்தியிருந்தன..! அதன் தொடர்ச்சியாக அதிகாலை வேளையில் அகதிகள் தங்கியிருந்த முகாம்களில், வீடுகளில், வேலை செய்யும் இடங்களில் என பலர் கைதுசெய்யப்பட்டு தடுத்து
வைக்கப்பட்டனர்..!

இவர்கள் யாவரும் ஜேர்மனியின் விமான நிலையங்களில் ஒன்றான Düsseldorf விமான
நிலையத்திற்கு அருகாமையாக தடுத்துவைக்கப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன.

இவர்களை மீட்டுக்கொள்ளும் பொருட்டு அகதிகளின் நலன்களுக்காக போராடும் அமைப்புக்களும், பொது அமைப்புகள், இடதுசாரிய அரசியல் கட்சிகள், தமிழர் அமைப்புகள் என்று பலரும் போராடிக் கொண்டிருக்க ...!

அகதி அந்தஸ்த்து மறுக்கப்பட்ட பல குடும்பங்களும், பிள்ளைகளும், இளைஞர்களும்,
வயதானவர்களும் தமது உயிரைப் பிடித்துக் கொண்டு ஓடி ஒளிந்துகொண்டிருந்தனர்..!
அவர்களில் பலர் தமது பிள்ளைகளை விட்டு தாம் மட்டும் திருப்பி அனுப்பப்படும் சூழல் நிகழுமாயின்,
பொலிஸார் முன்னிலையில் தம்மை கத்தியால் குத்திக் கொள்ளப் போவதாகவும் தெரிவித்தனர்..!

தாம் இவ்வளவு காலமும் சேர்த்த உடைமைகளையும், ஆவணங்களையும் தமது நண்பர்கள், உறவினர்கள் வீட்டில் வைத்துவிட்டு எங்கெல்லாம் ஒளிந்துகொள்ள முடியுமோ அங்கெல்லாம் ஒளிந்து கொண்டனர்..! “ இச்சம்பவங்கள் யூத மக்கள் தம்மை கிட்லரின் நாசி படைகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள தமது உடைமைகள் சகிதம் ஓடி ஒளிந்த வரலாற்றை நினைவூட்டியது...!”

“அவ்வாறே இந்த இளைஞனும் தனது நண்பர் 
வீட்டில் ஒளிந்துகொள்ளப் போவதாக எம்மிடம்
தெரிவித்தவர்; தனது அறையை உள்ளால் தாழிட்டுவிட்டு யாருக்கும் தெரியாது உள்ளே இருந்து விட்டார்...!”

கைதுசெய்யப்பட்வர்கள் விடுவிக்கப்பட வேண்டும்
என்று போராடிய அனைத்து நிறுவனங்களதும், தனிமனிதர்களதும், மனிதவுரிமை ஸ்தாபனங்களினதும்
குரலை அரசு செவிமடுக்காது கைது செய்யப்பட்டவர்களில் ஓரிருவரைத் தவிர
மற்றவர்களை இலங்கைக்கு நாடு கடத்தியது
ஜேர்மன் அரசு..!

“இவ்வாறு ஒளிந்திருந்த இளைஞன் மரணித்து
நான்கு நாட்களின் பின்னர்..! அவனது அறையிலிருந்து சடலமாக எடுக்கப்படுகின்றான்...!”

அவனது மரணம்..! மாரடைப்பினால் நிகழ்ந்துள்ளதாக வைத்தியர்களும், பொலிஸாரும்
உறுதிப்படுத்துகின்றார்கள்..!

சமூக ஊடகங்கள் அவனது மரணதைப் பற்றி செய்தி வெளியிடுகின்றன..!
எல்லோரும் அனுதாபம் தெரிவிக்கின்றார்கள்..!
ஆனால் எம்மில் பலர் நாம் இந்த மண்ணின் பிரஜைகள்..! எம்மை யாரும் ஒன்றும் செய்ய முடியாது..! என்று இவ்வாறாக அகதி அந்தஸத்து
கோரும் புதியவர்கள் விடயத்தை நோக்குகிறார்கள்..! 

“ நாமும் அகதியாக வந்தவர்கள்தான் என்பதை அவர்கள் மறந்து விடாது மற்றவர்களுக்கும் இக்கட்டான காலங்களில் உதவ முன்வர வேண்டும்.!!!”

இந்த மனிதனின் மரணம் பல ஆயிரம் புலம்பெயர்ந்த உறவுகளுக்கு தெரிந்திருந்தது..!
அவனுடைய மரணத்தை மற்றவர்கள் பாதிக்காத
வகையில் மக்கள், அமைப்புக்கள், குறிப்பாக ஐரோப்பிய, ஜேர்மன் மக்களுக்கு எடுத்துரைப்பதன்
மூலம் இன்னும் திருப்பி
அனுப்பப்படவுள்ளவர்களை 
பாதுகாத்திருக்க முடியும்..!
ஆனால் துரதிஷ்டவசமாக இவை நடக்கவில்லை..!

தம்மை தமிழர்களின் இருப்பாக காட்டிக் கொண்ட அமைப்புக்கள் கூட அவன் மரணத்தில் கலந்துகொள்ளவில்லை..!

இலங்கைத் தமிழர் ஒருவர் இறந்துள்ளதாக உள்ளூர் அரச அமைப்பு எமக்கு தொலைபேசியில் அழைப்பு அனுப்பியது..!
பொதுவிடயங்களில் எமது குடும்பம் ஆர்வம் காட்டுவதனாலும், நீண்ட காலம் இந்த கிராமத்தில்
நாம் வாழ்வதாலும் இவ்வாறான நடைமுறையை அவர்கள் கடைப்பிடிப்பது வழமை..!

அந்த இளைஞனுக்கு யாருமில்லை..!
நாமாவது போய் அஞ்சலி செய்து இறுதி மரியாதை செய்துவர முடிவெடுத்து; விடுமுறையும் பெற்றுக்
கொண்டு செல்ல ஆயத்தமான அன்றைய தினம்
எனது துணைவியாருக்கு தொலைபேசி அழைப்பொன்று..! அந்த இளைஞருக்கு வேலை உறுதிசெய்யப்பட்ட செய்தி..! அடுத்த கிழமை அவர் வேலையைத் தொடங்கலாம் என்று..!
வேதனை..! மனதை முட்ட ..! அழுத என் துணைவியாரை அழைத்துக் கொண்டு பூக்களுடன்
அஞ்சலி செய்ய போன பின்னர்தான் அவரின்
உறவுகளும் வந்திருந்ததை காண முடிந்தது...!

அந்த உறவுக்கார பெண் எங்களிடம் அவர் ஒளிந்திருந்ததையும், அதன்மூலம் ஏற்பட்ட
மன அழுத்தம், அதைத் தொடர்ந்த உபாதைகள்,
உணவு உட்கொள்ளாமல் மறைந்திருந்தது அனைத்தும் ஒன்றுசேர அவருக்கு மாரடைப்பு
ஏற்பட்டதுவரை தெளிவுபடுத்தினார்..!

அவரின் குரல் பதிவுகளையும் போட்டுகாட்டியவர்
தேம்பியழுத்தை என்னால் மறக்க முடியவில்லை..!
புலம்பெயர்ந்துள்ள உறவுகளுக்கு உதவுவோம்..!
எம்மால் முடிந்தவரை..! பண உதவிகள் தேவையில்லை...! 
உங்கள் மொழி அறிவு கூட
அவர்களின் வாழ்வில் விளக்கை ஏற்றலாம்..! 
நன்றி!

என்றும் தோழமையுடன்,
தோழர் மாட்டின் ஜெயா.

 

https://www.facebook.com/100000660031979/posts/4142605252438102/?d=n

 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எங்கு   சென்றாலும் துரத்தும் விதியை   யார் வெல்வது ?

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • முள்ளிவாய்க்கால் நினைவை... வீடுகளில் இருந்து நினைவுகூருங்கள் – மாவை அழைப்பு இதுவரை அடைந்த அவலங்கள், துயரங்களை நெஞ்சிற் கொண்டு இலட்சிய தாகத்தை இதயத்தில் நிறைத்து முள்ளிவாய்க்கால் நினைவை வீடுகளில் இருந்து நினைவு கூறுமாறு இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அழைப்பு விடுத்துள்ளார். வாழும் இடங்களிலும் குடியிருக்கும் குடில்களிலுங் கூட நினைவு கூர்ந்து மாலை 6.00 மணிக்கு மணி ஒலியெழுப்பிச் சுடரேற்றி விளக்கேற்றி திடசங்கற்பத்துடன் முள்ளிவாய்க்கால் நினைவலைகளை பாரெல்லாம் பரப்புவோம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவர், இராணுவம் சூழ்ந்திருக்க முள்ளிவாய்க்கால் நினைவிக்கல் அகற்றப்பட்டமை தொடர்பாக இலங்கை அரசு பொறுப்புக் கூறியேயாக வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் தமிழ்பேசும் மக்கள் தேசத்தினதும் மக்களினதும் விடுதலைக்காக, தங்களைத் தாங்களே ஆளுவதற்காக இறைமை கொண்ட மக்கள் கடந்த எழுபதாண்டுகளுக்கும் மேலாகப் போராடி வருகின்றனர். இந்நிலையில் தங்கள் உயிர்களைப் பறிகொடுத்த மக்கள் தங்கள் உறவுகளை நினைவு கூரவும், அஞ்சலி செய்யவும், ஆத்மசாந்திக்கான ஈமக்கடன்களில் ஈடுபடவும் உள்ள உரிமை பண்பாடு நாகரிகம் இங்கையில் மறுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார். தமிழர் தேசமும் மக்களும் அழிக்கப்பட்ட வரலாறுகளையெல்லாம் தாங்கி நிற்கும் முள்ளிவாய்க்கால் நினைவையும் அழிக்க இன்றைய அரசு இராணுவ ஆளுகைக்கூடாகச் செயல்பட்டு நிற்பதாகவும் மாவை சேனாதிராஜா குற்றம் சாட்டினார். இத்தகைய வரலாற்றைப் பிரதிபலிக்கும் முள்ளிவாய்க்கால் அத்திபாரத்திலிருந்துதான் தமிழ்த் தேசமக்களின் எழுச்சி எதிர்கால சந்ததியின் விடுதலை வரலாற்றைப் படைக்கப் போகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2021/1215949
  • பயணத்தடை அமுலில் இருக்கும் போது... யாழில் பிறந்தநாள் கொண்டாட்டம் – 15 பேர் தனிமைப் படுத்தலில்! நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுலில் இருக்கும் போது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 15 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வடமராட்சி கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பிறந்தநாள் கொண்டாட்டம் இடம்பெறுவதாக கிடைத்த தகவலை அடுத்து நெல்லியடி பொலிஸாருடன் சுகாதார பிரிவினர் குறித்த பகுதிக்கு சென்றபோது கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் அங்கிருந்து தப்பி சென்றிருந்தனர். இந்நிலையில் பிறந்தநாள் கொண்டாடியவரின், தொலைபேசியில் காணப்பட்ட படங்களின் அடிப்படையில் அதில் உள்ள 15 பேரும் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். https://athavannews.com/2021/1215958
  • நிவாரணப் பொதிகள் வழங்க அரசாங்கம் தீர்மானம் ! கொரோனா தடுப்பிற்காக முடக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதிளை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பிரதேச செயலகங்களினால் தெரிவு செய்யப்பட்டுள்ள மக்களுக்கு 5,000 ரூபாய் பெறுமதியான 20 அத்தியாவசியப் பொருட்கள் உள்ளடங்கலாக இந்நிவாரண பொதி வழங்கப்படவுள்ளதுன. இந்நிவாரணப் பொதி நாளை மறுதினம் திங்கட்கிழமை முதல் மக்களுக்கு வழங்கப்படவுள்ள அதேவேளை அவற்றினை மூன்று தினங்களுக்குள் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையினை அனைத்து மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம சேவை அதிகாரிகள் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மூலம் முன்னெடுக்கப்படும் என்றும் வர்த்தக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. https://athavannews.com/2021/1215926
  • கந்தையா... அண்ணை,  உங்களுக்கு, தமிழ் அவ்வளவு தெரியாவிட்டால், நீங்கள், ஏன்... உந்த ஆராய்ச்சியில் இறங்கினீங்கள்.  பிற்குறிப்பு: சும்மா... பகிடிக்கு 😜, சனிக்கிழமை நமக்கும் பொழுது போகவேணுமெல்லோ... 🤣
  • இந்தியாவில், கொரோனா பரவ... மதம், அரசியல் சாரந்த கூட்டங்களே காரணம் – WHO இந்தியாவில் மதம் மற்றும் அரசியல் சார்ந்த கூட்டங்களினாலேயே கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்த ஆய்வுகளை மேற்கொண்ட குறித்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மாதிரிகளில் 0.1 சதவீத மாதிரிகள் மட்டுமே மரபணு உருமாற்ற பரிசோதனை செய்யப்பட்டு இருக்கிறது. மதம், அரசியல் சார்ந்த கூட்டங்களால் இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவியிருப்பது தெரியவந்துள்ளது.  இந்தியாவில் கடந்த ஏப்ரல் இறுதியில் பி.1.617.1 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் பரவுவது கண்டுப்பிடிக்கப்பட்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 21 சதவீதமானோர் இந்த வகை வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதேபோல பி.1.167.2 என்ற வைரஸும் பரவி வருகிறது. இந்த வைரஸால் 7 சதவீதமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தின் ஒட்டுமொத்த கொரோனா வைரஸ் பாதிப்பில் இந்தியாவில் மட்டுமே 95 சதவீத பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்த பிராந்தியத்தின் உயிரிழப்பில் இந்தியாவில் மட்டும் 93 சதவீதம் பதிவாகியுள்ளது. சர்வதேச கொரோனா வைரஸ் தொற்றில் இந்தியாவில் 50 சதவீத தொற்றும் சர்வதேச உயிரிழப்பில் இந்தியாவில் 30 சதவீத உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1215749
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.