Jump to content

முல்லைத்தீவு மாவட்டத்தின் பெரும் பகுதி மகாவலி அதிகார சபை வசம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவு மாவட்டத்தின் பெரும் பகுதி மகாவலி அதிகார சபை வசம்

 
IMG-7c649b73100b0242555c12a33cb39b88-V-6
 94 Views

முல்லைத்தீவு மாவட்டத்தின் சுமார் 10 ஆயிரம் ஏக்கர்களுக்கும் அதிகமான தமிழர்களின்  பெரும்பகுதி நிலங்கள்,  தனிச் சிங்களமயமாகும் அபாயத்தில் உள்ளது.

அதாவது முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் 13 கிராம சேவகர் பிரிவுகள் மகாவலி அதிகார சபையின் கீழ் செயல்பட ஏற்பாடு செய்யுமாறு  மகாவலி அதிகார சபை வடக்கு மாகாண  ஆளுநரிடம் நேரில் கோரிக்கை விடுத்துள்ளது.

தற்போதைய வெலிஓயாவில் இருந்து கொக்குளாய் கொக்குத்தொடுவாய், முள்ளியவளை,  தண்ணீரூற்று என மாவட்டச் செயலகத்தை அண்மித்த பிரதேசம் வரையில், மகாவலி அதிகார சபைக்கு உட்பட்ட பகுதியென கடந்த 2018 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதியும் மகாவலி அபிவிருத்தி அமைச்சருமான மைத்திரிபால சிறீசேனாவின் காலத்தில் அரச இதழ் வெளியிடப்பட்டது.

இவ்வாறு அரச இதழ் வெளியிடப்பட்டும் தமது அதிகார சபையின் நிர்வாகத்தின் கீழ் செயல்பட விடாது பல தடைகள் ஏற்படுத்தப்படுகின்றது  என அண்மையில் பொபஸ்வேவாவிற்கு சென்ற ஜனாதிபதி கோட்டாபயவிடம் மகாவலி அதிகார சபை முறையிட்டது. இதன்போது அரச இதழ் இருப்பதனால் அதற்கான ஏற்பாட்டினை மேற்கொள்ளுமாறு கோட்டாபய ஆளுநருக்கு பணித்திருந்தார்.

இதற்கமைவாக கடந்த புதன்கிழமை ஆளுநர் செயலகத்திற்கு வருகை தந்த முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பௌத்த விகாரையின் பிக்குகள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், மகாவலி அதிகார சபையின் மாவட்ட அதிகாரிகள் இது தொடர்பான ஆவணங்கள் மற்றும் அதற்கான வரைபடங்கள் சகிதம் ஆளுநர் உள்ளிட்டோருக்கு காண்பித்து, அதனைத் தொடர அனுமதி கோரியிருந்தனர்.

இந்த கோரிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்த ஆளுநர், கோட்டாபயவும் கூறியதனால் அதனை செய்யுங்கள் ஆனால் வெளியார் எவருக்கும் அங்கே நிலம் வழங்கப்படாமல் இருப்பதனை உறுதி செய்யுங்கள் என தெரிவித்துள்ளார்.

தமது  காணிகளை மகாவலி அதிகாரசபையிடம் வழங்க சம்மதம் தெரிவித்து வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம்  எழுத்துமூல அறிவித்தலும் வழங்கி விட்டது  என்பதனை அறிந்து தாம் அதிர்ச்சி அடைந்துள்ளதாக குறித்த கிராமங்களை சேர்ந்த  தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதில் தமிழ் மக்களுடைய  6 கிராம சேவகர் பிரிவுகளையும் மகாவலி எல் வலயத்தில் இணைப்பதற்கான முயற்சி அண்மைய சில காலமாக நடந்து வருகிறது. ஏற்கனவே இது பற்றிய தகவல்கள் வெளியானதும், தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கையெழுத்திட்டு கடிதமொன்றை மாகாவலிக்கு பொறுப்பான அமைசர் சமல் ராஜபக்சவிடம் கையளித்திருந்தனர். அந்த வகையில் இந்த வேலை  திட்டம் தற்காலிகமாக  நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது  வடக்கு ஆளுநரின் ஊடாக  மீண்டும் இந்த திட்டம்  கையில் எடுக்கப்பட்டுள்ளது.

 

 

https://www.ilakku.org/?p=48784

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவில் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் ஆக்கிரமிப்பு ; அரசுடன் பேசி தீர்வுகாண முயற்சி - மாவை 

முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்றுப் பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட, கொக்கிளாய் கிழக்கு, கொக்களிளாய் மேற்கு, கொக்குத்தொடுவாய் வடக்கு, கொக்குத்தொடுவாய் மத்தி, கொக்குத்தொடுவாய் தெற்கு, கருநாட்டுக்கேணி, செம்மலை கிழக்கு, செம்மலை ஆகிய எட்டு தமிழ் கிராம அலுவலர் பிரிவுகளையும் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை தமது நிர்வாகத்தின் கீழ் கொண்டுவருவதற்கான முயற்சியில் ஈடுபட்டுவருகின்றது.

 

mavai-senathirajah.jpg

 

இந்த ஆக்கிரமிப்புத் தொடர்பில் அரசுடன் பேசி, இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

குறித்த ஆக்கிரமிப்புச் செயற்பாடு தொடர்பாக 03.05.2021அன்று அப்பகுதி மக்களால் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டிருந்தது.

அவ்வாறு கையளிக்கப்பட்ட மகஜரினை இலங்கைத் தமிழரசுக்கட்சத் தலைவர் மாவை சேனாதிராஜாவிடம், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் 04.05.2021 இன்று நேரில் சந்தித்துக் கையளித்திருந்தார்.

இச்சந்திப்பின் பின்னர் ஊடகாங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

தந்தை செல்வா தமிழரசுக்கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து முக்கியமாக இந்த சிங்கள மக்களுடைய குடியேற்றங்கள் தமிழ்ப் பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதனால் எமது இன விகிதாசாரத்தினை மாற்றியமைக்கின்றதான நடவடிக்கைகள் எல்லாம் இடம்பெறுவதாக நாங்கள் தந்தை செல்வாவின் காலத்திலிருந்தே எதிர்ப்புத் தெரிவித்து, தமிழ் மக்களைப் பலபகுதிகளில் குடியேற்றி எமது நிலங்களைப் பாதுகாக்கவேண்டும் என்பதற்காக எமது கட்சி அயராது உழைத்தது.

எங்களுடைய பிரதேசங்களில் சிங்கள மக்களின் பெரும்பான்மைத்துவம் வந்தால் தமிழர்களுடைய பிரதேசம் இல்லாமல் ஆக்கப்பட்டுவிடும்.

நாங்கள் எங்களுடைய பிரதேசத்தினை ஆளப்போகின்றோம் என்ற கருத்திற்கு இடமில்லாமல் போயிருந்திருக்கும். இவ்வளவு காலமும் தமிழரசுக்கட்சி அந்தப் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றது.

அதற்குப் பின்னர் தமிழர் விடுதலைக்கூட்டணி, அதற்குப்பின்னர் தமிழரசுக்கட்சி, விடுதலைப் புலிகள்கூட இந்த தமிழ் பிரதேசங்களினுடைய நிலங்களைப் பாதுகாப்பதற்காக அவர்களும் ஆயுதம் ஏந்திப் போராடியிருக்கின்றனர்.

ஆனால் தற்போது இந்தப் போருக்குப் பின்னரும் சென்ற ஆட்சிக்காலத்தில் நாங்கள் ஆதரித்த சிறீசேனா ஜனாதிபதியின் தலைமையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் மகாவலி அதிகாரசபையினாலே ஆக்கிரமிக்கப்படுகின்ற நிலைமைகளுக்கு எதிராக, அதேவேளை இராணுவத்தினர் குவிக்கப்பட்டு அவர்களுடைய கட்டுப்பாட்டுக்கள் இருக்கும் நிலங்கள் தொடர்பாக கடந்த ஆட்சியாளர்களுடன் நாம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருக்கின்றோம். பல போராட்டங்களும் இடம்பெற்றுவந்திருக்கின்றன.

தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறும் ஆக்கிரமிப்பு நிலைமைகள் தொடர்பாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் என்னிடம் தெரியப்படுத்தியிருக்கின்றார்.

குறிப்பாக நான் அந்த முல்லைத்தீவின் மணலாற்றுப் பிரதேசத்தைப் பார்வையிட்டிருக்கின்றேன். அந்தப் பகுதிகளில் வாழ்ந்திருக்கின்றேன்.

அந்தப் பகுதிகள் தற்போது செம்மலையிலிருந்து, கொக்கிளாய் கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி வரைக்கும் இருக்கின்ற பகுதிகளை மகாவலி அதிகாரசபை ஆக்கிரமித்து, அப் பகுதிகளை தமது நிர்வாகத்தின் கீழ் கொண்டுவருவதற்கு அவர்கள் நடவடிகை மேற்கொண்டுவருவதை நாம் அறிவோம்.

இந்த ஆக்கிரமிப்புச் செயற்பாட்டிற்கு எங்களுடைய கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும், அந்தந்தப் பகுதியைச்சேர்ந்த உறுப்பினர்களும் இவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றார்கள். இதனால் ஏற்படும் ஆபத்துக்கள் தொடர்பில் என்னோடு பேசியிருக்கின்றார்கள்.

அந்தவகையில் இவ்வாறு முல்லைத்தீவில் இடம்பெறும் ஆக்கிரமிப்புத் தொடர்பாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்களான மரியநாயகம் தொம்மைப்பிள்ளை, சின்னராசா லோகேஸ்வரன் ஆகியோர் 04.05.2021 இன்று என்னைச் சந்தித்துக் கலந்துரையாடியதுடன், ஆக்கிரமிக்கப்படும் பகுதிகளிலுள்ள மக்களால் வழங்கப்பட்ட மகஜர் ஒன்றினையும் என்னிடம் வழங்கியிருந்தனர்.

இந் நிலையில் கல்முனை பிரச்சினை தொடர்பாக சமல் ராஜபக்சவுடன் (04) இன்று எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசவுள்ளனர்.

அக்கலந்துரையாடலில் முல்லைத்தீவில் இடம்பெறும் இந்த மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் ஆக்கிரமிப்புத் தொடர்பாகவும், அதனால் தமிழ் மக்களுக்கு ஏற்படப்போகும் பாதிப்புத் தொடர்பிலும் சமல் ராஜபக்சவுடன் பேசுமாறு பாராளுமன்ற உறுப்பினர்சாள்ஸ் நிர்மலநாதனிடம் தொலைபேசியுடாக அழைப்பு ஏற்படுத்தி வலியுறுத்தியிருக்கின்றேன்.

நாங்கள் ஒட்டுமொத்தமாக இதுதொடர்பாக பிரதம அமைச்சருடனும் இதுதொடர்பில் பேசவேண்டும்.

நாங்கள் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பாக, இந்த அரசாங்கத்துடன் இந்த விடயம் தொடர்பில் பேசி இப் பிரச்சினையை ஒருதீரவுக்குக்கொண்டுவரவேண்டும்.

எங்களுடைய நிலங்கள் பாதுகாக்கப்படவேண்டும். எங்கள் மக்கள் பாதுகாக்கப்படவேண்டும்.

எங்களுடைய பெரும்பான்மைத்துவம் தமிழ் பிரதேசங்களில் சீர்குலைக்கப்படக்கூடாது. குடிப் பரம்பலை மாற்றியமைக்கப்படக்கூடாது. அதற்குரிய செயற்பாடுகளால் தொடர்ந்து ஈடுபடுவோம்.

இந்த ஆக்கிரமிக்கு எதிராக பாரிய அளவில் மக்களைத் திரட்டி நாம் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கவேண்டும்.

ஆனால் தற்போது கொரோனாத் தொற்று தீவிரமடைந்திருக்கின்ற நிலையில் நாம் இந்த ஆக்கிரமிப்பு விடயம் தொடர்பாக அரசுடன் பேசி தீர்வினைக் காண்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். அந்த முயற்சி தொடரும் - என்றார்.

முல்லைத்தீவில் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் ஆக்கிரமிப்பு ; அரசுடன் பேசி தீர்வுகாண முயற்சி - மாவை  | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/5/2021 at 00:26, பிழம்பு said:
On 5/5/2021 at 00:26, பிழம்பு said:

இந்த ஆக்கிரமிப்புத் தொடர்பில் அரசுடன் பேசி, இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

கல்முனை பிரச்சினை தொடர்பாக சமல் ராஜபக்சவுடன் (04) இன்று எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசவுள்ளனர்.

நீங்கள் பேசுவது என்னவென்றும் புரிவதில்லை அவர்களுக்கு,  தாங்கள் சொன்னது யாது என்பதும் தெளிவில்லாதவர்களுடன் பேசிக்கொண்டிருப்பதில் பயனேதுமில்லை. விடுதலைப்போராட்டம் மரணித்தபின்னும் தமிழர்களுக்கெதிரான இனவழிப்பு தொடர்ந்து கொண்டேயிருக்கிறது என்பதை சர்வதேசத்துக்கு தெரியப்படுத்துங்கள். காரியம் கைமீறிப்போனபின் இன்னும் என்ன பேச்சுவார்த்தை வேண்டிக்கிடக்கு. இவர்களின் இந்த அடாவடியை தடுத்து நிறுத்தி எமது இருப்பை பாதுகாக்கவே  விடுதலைப்போராட்டம் உருவாகியது, அதை உருவாக்கியவர்கள் இவர்களே என்னும் உண்மையை வெளிப்படுத்துங்கள் மஹா பிரபுக்களே! தந்தை செல்வாவின் காலத்திலிருந்து  பேசிப்பேசி எல்லாவற்றையும் இழந்தும், இன்னும் பேசிக்கொண்டு.....காலத்தை வீணாய்க்கொண்டிராமல். அடுத்த சந்ததி தந்தை செல்வா, மாவை சேனாதிராஜா காலத்திலிருந்து இந்தப் பிரச்சனை தொடர்ந்து கொண்டிருக்கு என்று பட்டியலிட்டு சொல்லவும் வாய்பிருக்காது,  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.