Jump to content
 • Veeravanakkam
 • Veeravanakkam
 • Veeravanakkam

விடுதலைப் புலிகளால் இறுதிப்போரில் பயன்படுத்தப்பட்ட கவச ஊர்திகள்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
 • எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் எவர் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை.. இவை தமிழினத்தின் வரலற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்….!

விடுதலைப்புலிகளிடம் பல்வேறு காலகட்டப் பகுதியில் பல்வேறு கவசவூர்திகள் (armored vehicles) இருந்தன. அவற்றில் பல காலப்போக்கில் அழிந்தும் ஒருசிலது இறுதிவரையிலும் நின்றிருந்தன.. அவ்வாறு இருந்து இறுதிப்போரில் புலிகளால் பயன்படுத்தப்பட்ட கவசவூர்திகளின் குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

→காலம் :(2006-2009).

விடுதலைப்புலிகளிடன் கவசப்படையின் பெயர் சூரன் கவச அணி என்பதாகும் (கிட்டிப்பு(credit): இ.இ. கவிமகன்). இக்கவசப் பிரிவின் கட்டளையாளர் மணியரசன் ஆவார்(நிலை தெரியவில்லை). இவருக்கு முன்னர் 13- 06- 2006 வரை லெப்.கேணல் பார்த்தீபன் அவர்கள் கட்டளையாளராய் இருந்தார். இக்கவச அணியானது இம்ரான் - பாண்டியன் படையணி என்னும் கூட்டுப்படையணியின் கீழ்ச் செயல்பட்ட ஓர் பிரிவாகும். இதுதவிர புலிகளிடம் 'வாகனப் பிரிவு' என்னும் ஒரு பிரிவும் இருந்தது நினைவில் கொள்ளத்தக்கது. அஃது ஊர்திகளைக் கையாண்ட பிரிவாகும்.

தமிழர் தரப்பில் சிங்களப் படைகளிடம் இருந்தது போன்று பெரியளவில் கவசப்படையெதுவும் இருக்கவில்லை. ஆனால் கவசப்படைக்கு மாற்றாக கவச எதிர்ப்புப் படையினை வைத்திருந்தனர்(விக்டர் கவச எதிர்ப்புப் படையணி). அதாவது ஓர் இகல்படையினைக்(Counter force) கைக்கொண்டிருந்தனர். இவர்கள் களத்தில் வலுவெதிர்ப்பு(defence) வலித்தாக்குதல்களின்(offence) போது பகைக்கு சிம்ம சொப்பனமாக இருந்ததுடன் 45 க்கும் மேற்பட்ட எதிரிகளின் கவச ஊர்திகளை அழித்திருந்தனர்(1997-2009). அதில் பெரும்பான்மையானவை தகரிகள் ஆகும். இவர்களின் முதன்மை ஆய்தம் 'உந்துகணை பிலிறுந்திய கைக்குண்டு' (RPG) ஆகும். அத்தோடு தானுந்தும் சுடுகலன், பின்னுதைப்பற்ற சுடுகலன், தோள்-ஏவப்படும் பன்னோநோக்கு தாக்குதல் ஆய்தம்(FGM-17), 9k11 malyukta உட்பட பன்வகையான படைக்கலங்களையும் கைக்கொண்டிருந்தனர்.

சரி, இனி புலிகளிடம் இருந்த கவச ஊர்திகள் பற்றிய ஆய்வுக் கட்டுரைக்குள் செல்வோம்…..


 • முதன்மை சமர் தகரி (Main battle tank)

1) T-55 AM2 மு.ச.த.

இத்தகரியானது சிறிலங்கா இராணுவத்துடனான சமரில் அழிந்துவிட்டது.

முகமாலையில் தாக்குதல் ஒன்றின் போது:

பக்கவாட்டுத் தோற்றம்

main-qimg-003296a88ad580afade8067e9d84dadc

'படிமப்புரவு: யூடியூப்'

முன்பக்கத் தோற்றம் (front side) (மூலைப் பார்வை (corner view))

main-qimg-607361786feaa01cf5bae48cc1d72a11

'படிமப்புரவு : யூடியூப்'

இதன் அலங்கம்(turret):

main-qimg-d5bdba6f051b2f33b59c24a9ec84e34f

'படிமப்புரவு : யூடியூப்'

புதுக்குடியிருப்பில் அழிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட போது:

ஆதாரம்

main-qimg-399d780089925b880d70b3ffbf41223d

2) T-55 மு.ச.த.

இது தவளைப் பாச்சலின் போது கைப்பற்றப்பட்டது ஆகும். இத்தகரியானது சிறிலங்கா இராணுவத்தால் பின்னாட்களில் கைப்பற்றப்பட்டுவிட்டது.

→ இதன் ஓட்டுநரின் பெயர் : இள பேரரையன்(Lt. Col.) சிந்து (மாவீரர்)

புலிகளிடம்:

main-qimg-4b86f5ed324720cb8328f645553d1ecd

சிறிலங்காப் படைகளிடம்:

main-qimg-5e6a2a6fce75d75251cb37e95daf4c65


1)மறுகட்டமைக்கப்பட்ட தகரி (rebuilded tank)

இதன் அலங்கமானது(turret) அல்விசு சலாதீனில்(alvis Saladin) இருந்து எடுக்கப்பட்டு வகை 63 (YW531) கவச சண்டை ஊர்தியின் உடலுடன் பொருத்தப்பட்டுள்ளது. அடிப்பீடத்தை(chassis) குறைப்பதன் மூலம் ஒரு பழைய கவச சண்டை ஊர்தியை புலிகளால் எப்படி ஒரு இலகு தகரியாக (light tank) மாற்ற முடிந்தது என்பது வியப்பானதாகும். அலங்கத்திற்க்கு சக்தியைக் கொண்டுவருவதற்கான மறுசீரமைப்பு பணிகள் விரிவாக இருக்க வேண்டும். ஏற்கனவே மெள்ளமான இக்கவச சண்டை ஊர்தியானது அலங்கத்தின் கூடுதல் எடையால் மேலும் மெள்ளமாகும். அத்துடன் இதில் கவசமும் இல்லை.. ஆனால் போர்க்களத்தில் இருக்கும் போது உடனடியா எது தேவையோ எவ்வளவு செய்ய முடியுமோ அவ்வளவை செய்தே ஆகவேண்டும். புலிகளும் அதையே செய்துள்ளனர்.. இதை உருவாக்கிய புலிகளின் பொறியியலாளர்கள் உண்மையில் மேதைகளே!

 • ஆய்தங்கள்:
  • 76mm தெறுவேயம்(cannon)
  • DShkM வெட்டொளி(flash) அடக்கியுடன் | நன்றி: Gavin Calkins

main-qimg-0b4a33d01d82f88c1ce4b52f1276184a

பக்கவாட்டுத் தோற்றம்:

main-qimg-dd1f5617f65ed3c4dd4eff96146b69d3

இக்கவசவூர்தியின் பின்பகுதி:

main-qimg-a68499249d12ecb5f4567ddf432e95b2


 • காலாட்படை சண்டை ஊர்திகள் (infantry fighting vehicle)

1) BMP-1

இக்கவசவூர்தியானது 'வெற்றியுறுதி'(!?) என்ற ஜெயசிக்குறு சமரத்தில் 09- 10- 1997 அன்று கனகராயன் குளத்தின் வடகிழக்குப் பகுதியில் வைத்து கைப்பற்றப்பட்டது ஆகும்.

கைப்பற்றப்பட்ட போது எடுத்த நிழற்படம்:

main-qimg-172ef9b8dfddc0e7d71cc623a4c423c3

பின்னாளில் தருமபுரத்தில் நடைபெற்ற மும்முனை படையெடுப்பின் முறியடிப்புச் சமரில்….

main-qimg-742302ec7e1b5c4015a155c97c3436f9

பக்கவாட்டுத் தோற்றம்:

main-qimg-5ca9f76210c872c43b9002f7fce2a320

பின்பக்கத் தோற்றம்:

main-qimg-d10572e10b6d04ead10b175dd9c3b825

2 ( ! )

சிறிலங்கா இராணுவத்தால் அழிக்கப்பட்ட புலிகளின் ஓர் கவசவூர்தி... இதற்குள் ஓர் இரட்டைக் குழல் கொண்ட வானூர்தி எதிர்புச் சுடுகலன் (zpu - 2 AAA) பூட்டப்பட்டிருக்கிறது… இக்கவசவூர்தியனது மேலே உள்ள BMP-1 ஊர்தி போன்றது.

இரண்டும் ஒன்றுபோலுள்ளது!

main-qimg-30ad4873e75f3296aca4e071aa61b36c

main-qimg-95ae1c64f5f76fcf0ad6fdf70628b1bc

main-qimg-57813978ff277bab1ad7ad00e2487ae7

'zpu - 2 பூட்டப்பட்டிருக்கிறது'


 • அல்விசு சலாதீன் கவச சகடம்(Alvis Saladin Armoured car)
 • எண்ணிக்கை: 2

இவ்விரண்டும் கனகராயன்குள படைத்தளத்தில் சிறீலங்கா படைகள் கைவிட்டு ஓடிய பின் புலிகளால் கைப்பற்றைப்பட்டவையாகும்.

1)

main-qimg-3e24e0d048a9d45f5b0ea372c89f3817

2)

main-qimg-0d818f0f442b5fbbb685873223b67548


 • சண்டை ஊர்தி 603 அல்விசு சராசென் (FV 603 Alvis Saracen):
 • எண்ணிக்கை: 4

இந்நான்கும் ஓ.அ-3 இல் கனகராயன்குள படைத்தளத்தில் சிறீலங்கா படைகள் கைவிட்டு ஓடிய பின் புலிகளால் கைப்பற்றைப்பட்டவையாகும்.

main-qimg-f37513fd5cf98362d282cd82cf31256f

1) இது விடுதலைப் புலிகளால் மேம்படுத்தப்பட்டு போரில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

main-qimg-36eaf53bf30f657ffc9497a35f802956

மேற்கண்ட கவசவூர்தியின் உட்பக்கம்

main-qimg-de6995547d1af5a27cee5fd58710e6cf

2) இக்கவசவூர்தியானது செம்மைப்படுத்தி(improve) முடிக்கப்படாத நிலையில் சிறீலங்கா தரைப்படைகளால் புலிகளின் கவச ஊர்தி கட்டுமான தொழிற்சாலையில் வைத்து கைப்பற்றப்பட்டது.

main-qimg-864f24e0a11cf3706e13d9c4d2ca59f4

3) & 4) இதே போன்று 2 புலிகளிடம் இருந்தது. அதற்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை.


 • குறிப்பு: நான் கீழே மொத்தம் மூன்று வகையான பஃவெல்கள் பற்றி தகவல் தந்திருக்கிறேன். ஆனால் அவையாவும் எனக்குப் படங்கள் கிடைத்தபடியால் தரப்பட்டவை, படம் கிடைக்காமல் அழிந்து போனவை எத்தனை என்று நானறியேன்.

 • கண்ணிவெடி-தடுப்பு, பதிதாக்குதல்-காப்பாற்றப்பட்ட காலாட்படை நகர்திறன் ஊர்தி ( Mine-resistant, ambush-protected infantry mobility vehicle)- பஃவெல் (unicorn/buffel) mk- 1
 • எண்ணிக்கை: 5

1)

main-qimg-e18ffdf1d47dc2006591ee5f60223b81

2)

main-qimg-19508d9b1585802ba0188d5f68892ea0

மேலேயுள்ள பஃவெல் மேல் பொருத்தப்பட்டிருக்கும் 40mmm AAA :

main-qimg-f58e5a2725e60ed57459f05dc4674664

3)

main-qimg-018cd088ebc7a844c2b1c7f1549b1889

4) மற்றொரு பஃவெல் mk-1 ஆனது 2009, மே மாதம் முதலாம் திகதி அழிக்கப்பட்டது.. அதன் நிழற்படம் ஏதும் எனக்கு கிடைக்கப்பெறவில்லை.

5)

main-qimg-3253ac51daa9de72cc5bb9d89222867c

மூலை பார்வை(cornered view 😞

main-qimg-c0784d8d63ffc701408a95de14f7efc5

கவசவூர்தியின் உள்ளிருந்த அலங்கம்(turret):

main-qimg-837ca4ec100c4fe5a2d4c2a279e6ab1d

கவசவூர்தியின் சுவரில் பொருத்தப்பட்டிருக்கும் ஆய்தம் வைப்பதற்கான ஓர் ஏந்தி:

main-qimg-3f287745a4f6a92b45ed330c5fcda772


 • கண்ணிவெடி-தடுப்பு, பதிதாக்குதல்-காப்பாற்றப்பட்ட காலாட்படை நகர்திறன் ஊர்தி ( Mine-resistant, ambush-protected infantry mobility vehicle) இயூனிபஃவெல் (Unibuffel) - MK-I
 • எண்ணிக்கை: 3

1)

main-qimg-a773eb90e0915904a452210c189c32e0

மேலே காட்டப்பட்டுள்ள கவசவூர்தியின் முகப்புக் பக்கம்:

main-qimg-da57be4275d6f86ff49c8700ffd1401e

2) இவ்வூர்தி கைப்பற்றப்பட்டபோது சேதமடைந்து இருந்ததால் புலிகள் இதன் பின்பகுதிக்கு புதிய இரும்புத்தகடுகளை பொருத்தியுள்ளனர்..

main-qimg-d65242d4fba99ef6d3309dfb7e44fc1d

main-qimg-f0a639c8cfa4499b6dc4919d10df9ac2

மேலே காட்டப்பட்டுள்ள கவசவூர்தியின்(armoured vehicle) உட்பக்கம்:

main-qimg-4c78203f69687cdd50d436c906a02225

3) இவ்வூர்தி கைப்பற்றப்பட்டபோது சேதமடைந்து இருந்ததால் புலிகள் இதன் பின்பகுதிக்கு புதிய இரும்புத்தகடுகளை பொருத்தியுள்ளனர்.. எப்படிக் கூறுகிறேன் என்றால் இதன் பக்கவாட்டுக் கவசங்களை உத்துப்பாருங்கள்.. பஃவெலின் கவசம் போன்றில்லாமல் ஏதோ ஒரு தகரத்தை நிமிர்த்தி ஒட்டியிருக்கிறார்கள்.

main-qimg-8243506999946594b58dac27100b070d

மேற்கண்ட ஊர்தியின் பின்பக்கம்: .. அருகில் தெரிவது பஃவெல் mk-1 ஆகும்

main-qimg-12838d8a2fbfb6001e2125ac8bd9a6c0

மேற்கண்ட ஊர்தியின் பின்பக்கம்: ….

(இந்நிழற்படம் புலிகளால் கிளிநொச்சியில் நடத்தப்பட்ட ஓர் இரணுவக் கண்காட்சியில் எடுக்கப்படது ஆகும்.)

main-qimg-dfac57e845c4b9cc8df1926a86e2f18e


 • கண்ணிவெடி-தடுப்பு, பதிதாக்குதல்-காப்பாற்றப்பட்ட காலாட்படை நகர்திறன் ஊர்தி (Mine-resistant, ambush-protected infantry mobility vehicle) இயூனிபஃவெல் (Unibuffel) - MK-II
 • எண்ணிக்கை: 2

1)

கீழே நீங்கள் பார்க்கப்போகும் கவசவூர்தியானது விடுதலைப்புலிகளால் சிறீலங்கா இராணுவத்தினரிடம் 2007 ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்து கைப்பற்றப்பட்டது . இது பின்னர் புலிகளால் மாற்றியமைக்கப்பட்டது.. அதாவது இதன் ஒரு பக்கம் மட்டும் AAA பொருத்துவதற்காக அலங்கம்(turret) அமைப்பதற்கு ஏற்றவாறு வட்ட வடிவில் மாற்றியமைக்கப்பட்டது..

முகப்புத் தோற்றம்:

main-qimg-5da64d2a0be861fb5b2cf376e5f92633

மாற்றி அமைக்கப்படாத பக்கம்:

main-qimg-e8a32c601cd1e263b2eabda279404dc3

மாற்றி அமைக்கப்பட்ட பக்கம்:

main-qimg-3e36f5311c1ba53a3645a269ad8bfbb2

பின்பக்கம்:

main-qimg-7879b1b07d3dd831ab037e6e3be36009

main-qimg-e12732f918e55a0732791ae45b5127ff

2)

main-qimg-bd833974062fc6cda10a9db472163a9b

main-qimg-32fe6cb49c1eb79d487a16f604242e25

main-qimg-d88daaddd3a140a073d7365efa829a6c


 • உள்நாட்டு கண்ணிவெடி-தடுப்பு, பதிதாக்குதல்-காப்பாற்றப்பட்ட ஊர்தி (indigenous Mine-resistant, ambush-protected vehicle).
 • எண்ணிக்கை : 1

1) புலிகளால் உள்நாட்டில் கட்டப்பட்டு இறுதிப்போரில் பயன்படுத்தப்பட்ட இவ்வூர்தியானது பார்ப்பதற்கு ஏதோ நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது போன்று தோற்றம் கொண்டுள்ளது.

இதன் வடிவத்தின் அடிப்படையில் பார்க்கும் போது கண்ணிவெடிகள் மற்றும் எறிபொருள்களுக்கு(projectile) எதிர்ப்பாக அவர்கள் ஒரு முக்கோண அடிப்பகுதியையும் சாய்வான கவசத்தையும் கொண்ட உடலினை இதற்கு வடிவமைத்துள்ளனர். இதன் உடலமைப்பை முக்கோணமாக அமைத்ததால் இதனை மேலும் விரிவாக்க முடியாமல் போனாலும் ஒண்ணத் தக்கவாறு இருக்கிறது. அது மட்டுமல்லாமல் வெளிப்புறத்தில் உள்ள நீண்ட புறம்போக்கி குழாய் அழகியலைத் தருவதோடு சங்கிலி பாவாடை போன்ற அமைப்பு மிகையாகும். (அதன் பயன்பாடு என்னவென்று தெரியவில்லை) இதன் முகப்பில் உள்ள அந்த முக்கோண வடிவம் முழுவதும் இரும்பால் ஆனதால் எந்தவொறு தடங்கல்களையும் இடித்தழிக்கும் வல்லமை பெற்றுள்ளது. அத்துடன் இதன் நடுவில் அலங்கத்திற்க்கு(turret) ஏற்ப வட்டமான இடைவெளியும் விட்டும் கட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில் மிகவும் நேர்த்தியாக நுட்பத்தில் மிகவும் முன்னேறியதாக கட்டப்பட்டுள்ளது. இதன் முடிவாக்கமும் மிகச் சிறப்பாக உள்ளது.

main-qimg-4aed7422b20fb675606259b4e2f9b04b

மேற்கண்ட ஊர்தியின் உட்பகுதி:

main-qimg-73ff419fb43e19fe76ce8e3e5e29e46d


 • உள்நாட்டு சண்டை ஊர்தி (Indigenous fighting vehicle)

இவ்வூர்தியானது இறுதிச் சண்டையில் அழிந்துபட்டது. இதில் பஃவலின் தோற்றமாக தெரிகிறது!

main-qimg-02d8a6669e01a9fe8e99b6feef67de00


 • உள்நாட்டு கவச சண்டை ஊர்தி (Indigenous armoured fighting vehicle)
 • எண்ணிக்கை : 1

1)

main-qimg-658d82729be7bc379a9e3b3be47193f2


 • செம்மைப்படுத்தப்பட்ட சண்டை ஊர்தி (improvised fighting vehicle)
 • எண்ணிக்கை: கீழே நீங்கள் பார்க்கும் வகையைச் சேர்ந்த கவசவூர்தியகள் புலிகளிடம் மொத்தம் 4 இருந்தன.

1) இவற்றினை பார்ப்பதற்கு ஏதோ நிறுவனத்தால் செய்யப்பட்டது போல மிகவும் சிறப்பான முடிவாக்த்தைக் கொண்டிருந்தன.. அவ்வளவு நேர்த்தியாக உட்புறம் வடிவமைப்பட்டிருந்தது..

main-qimg-3ac6e639a9012de5f96573ab48b5771e

மேலே காட்டப்பட்டுள்ள கவசவூர்தியின்(armoured vehicle) உட்பக்கம்:

main-qimg-71fc0aef63126801dce4c6cc1770d295

மேலே காட்டப்பட்டுள்ள கவசவூர்தியின் பின்பக்கம்:

main-qimg-a2fa799f46ed09d8a4b4095f3391139b

மூலை & பக்கவாட்டு தோற்றம்:

main-qimg-91b43b2e0ea80ba2b74526090b2b16c5

மேலே காட்டப்பட்டுள்ள கவசவூர்தியின் முகப்புக் கதவுப் பக்கம்:

main-qimg-af1150286873e2789c535cbac6245f22

ஓட்டுநர் இருக்கும் உட்பக்கம்:

main-qimg-9eaac422f464abfa9846c7a6f83121b1

main-qimg-3444d37d678c38d3e175954b576cc450

பின்பக்க படிக்கட்டுகள்:

main-qimg-eccf84f96fd724c1d82a0d96edd84334

பின் பகுதியில் உள்ள உள்ளிருந்து சுடுவதற்கான புழைகள்:

main-qimg-bed729bed965fc22c84ae4f959321f12

2) மேற்கண்டதைப் போன்ற மற்றொரு கவசவூர்தி

main-qimg-28c1b4dda084da48a862edea60c3b2fe

3)மேற்கண்டதைப்போன்ற அழிக்கப்பட்ட மற்றொரு கவசவூர்தி:

இக்கவசவூர்தியானது புலிகளால் மேற்கோள்ளப்பட்ட கரும்புலித் தாக்குதலிற்கு எதிராக சிறீலங்கா இராணுவத்துனர் மேற்கோண்ட தகரி தாக்குதலினால் எரிந்து அழிந்தது. இத்தாக்குதலின்போது கவசவூர்தியில் செலவான(travel) ஓட்டுநர் உட்பட்ட 6 கரும்புலிகளும் வீரச்சாவினைத் தழுவிக்கொண்டனர்.

(கவசவூர்தியில் தெரியும் பெரிய ஓட்டையானது தகரியால் ஏற்படுத்தப்பட்டதாகும். நேரான மறுபக்கம் அப்படியே சிதைந்து விட்டது. கவசவூர்தியின் பின்பகுதியில் கோப்பி நிறத்தில் தெரிவது கரும்புலிகளுன் வித்துடல்கள்)

main-qimg-a7df440f0c4e43e8aa84fe6167ed6218

மேற்கண்ட கவசவூர்தியில் தாக்குதல் நடத்தச்சென்ற கரும்புலிகளின் வித்துடல்கள்:

main-qimg-d523f707f4aefbc30107b578c1a8ec49

4) இது கட்டத் தொடங்கும் போதே கைப்பற்றப்பட்டு விட்டது.

main-qimg-a63ec553733bdb2076adc69e1595dcfa


 • செம்மைப்படுத்தப்பட்ட சண்டை ஊர்தி (improvised fighting vehicle)
 • எண்ணிக்கை : 2

1)

main-qimg-de9519d664a2bfd597f000bb7895ccfb

உட்புறம்:

main-qimg-fdc28136d9e68fce75315cb2c8102328

சாளரம்:

main-qimg-4431e169cbefc2aa0bc693fca1cf68f8

2) இது கைப்பற்றப்படும்போது எரிந்த நிலையில் தகரத்தால் மூடி மறைக்கப்பட்டிருந்தது.

main-qimg-5ec999d064d33ccc7afcd27fe6d8e132

முகப்புத்தோற்றம்

main-qimg-9e37720344f4e7ffb08e9b44c7039cca

கதவு:

main-qimg-031f22ad6bfb2a1adacd1f7b75be608d

பின்பகுதி:

main-qimg-2fbac1208bd86e4e7113595c929c49b6

main-qimg-9b62b4869432e4f81cff863a25455fdf

main-qimg-684e9eb82c94edb74b820697a776dd0f


 • செம்மைப்படுத்தப்பட்ட ஆளணி காவிகள் (improvised personnel carriers)
 • எண்ணிக்கை : 1

முன்பக்கத் தோற்றம்:

main-qimg-50c5c5167710fa013cde591c4d2bafa2

உட்புறம்:

இதன் உட்பகுதியை நன்கு உத்துப் பாருங்கள்.. அந்தக் கோடியில் தெரியும் கதிரைக்குப் பின்னால் ஓர் படுக்கை உள்ளது.. அதில் படுத்து ஓய்வெடுக்கலாம்.. மேலும் கதிரைக்கு இருபுறமும் சுவரோடு நீள் இருக்கை உள்ளது

main-qimg-0c116800b0d385c7d81b6318cca7889c

கதவு:

main-qimg-f35de78594c700015d053112d96c7b3c

main-qimg-2df782052de6cc8aca4f6a5fbba8df0c

main-qimg-f3848b6eb2a24b7d400685c7e3fdbb75

கதவின் கீழ்ப்பகுதி:

main-qimg-25dbdb695df88c249fd81b790f5b2199


 • செம்மைப்படுத்தப்பட்ட ஆளணி காவி (improvised personnel carrier)
 • எண்ணிக்கை : 1

main-qimg-67025fe14d6b3d68390e049142858a7d

main-qimg-e4518a3158b9694bad7c6b0179a00e78


 • செம்மைப்படுத்தப்பட்ட ஆளணி காவி (improvised personnel carrier)
 • எண்ணிக்கை : 1

main-qimg-7b962c607b022a699cba68a4ac0df081

main-qimg-5b217758a27eaaef700c7a1448bf1848


 • படைத்துறை பாரவூர்தி (military truck)
 • எண்ணிக்கை : 5–10

கிளிநொச்சி படைத்தளத்திலும் ஆனையிறவிலும் இதுபோல பல பாரவூர்திகள் புலிகளால் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

1)

main-qimg-1d6d3c5ecc7b141cbbcaeaa02c352f89

2)

main-qimg-5bb859112a9767bfbc21d7af8e1bbfc7

3)புதுமாத்தளன் ஏப்பிரல் 24 | படிமப்புரவு: David gray

main-qimg-ca01a6662c38f71f7faeccca91f1b842

4)

main-qimg-5f725599954621c9bde5385a2b8f622b


 • நாடோடியம்(Gypsy)
 • எண்ணிக்கை : 2–4

1)

main-qimg-f6578ec245d62aaaa99b08e07f51a223


 • படைத்துறை பொநோவகம்(military jeep)
 • எண்ணிக்கை : 3–5

1)

main-qimg-9bf51088416340ba60f86b34712847be

2) ஆனையிறவில் ஜெயந்தன் படையணியினர்

main-qimg-13b03f52645e57228ee00d234e4cd018


 • செம்மைப்படுத்தப்பட்ட சண்டை ஊர்தி (improvised frighting vehicle)
 • எண்ணிக்கை : 13–25

இரட்டை இருக்கை கொண்ட pickup

1) ஆய்தம் : இடது - 20mm – GIAT M693

2) ஆய்தம் : வலது - 14.5mm – Type 58 (ZPU-2 )

main-qimg-ad15e72d3a58d423713929a5a9b5089d

3) ஆய்தம் : 12.7mm – Type 54 சுடுகலன்(gun)

மார்ச் அன்று கைப்பற்றாப்பட்டது.. முன்பகுதி முழுவதும் கவசம் போடப்பட்டிருந்தது. இதே போன்று அன்று மேலும் ஒன்று கைப்பற்றப்பட்து. அதிலும் 12.7mm சுடுகலன்(gun) பூட்டப்பட்டிருந்தது

main-qimg-22f0df21ab96c710ea7aca847feaac91

4)

main-qimg-e54591bf0e34399bb8ffdb24705ecdf9

ஓட்டுநர் உட்பகுதி... கவசம் போட்டப்பட்டுள்ளது:

main-qimg-db5c4e793911990b2a848681c22b2203

5)

main-qimg-82db7973426a6a800dd1ddb7d2db6104

6)

main-qimg-5790f5b6250a1a85a9ac609c572320d2

7)

main-qimg-7495b197dce981d01198fb60831d9c0b

😎

main-qimg-9a9cd6c5c12891c47c6ad062e344d9d5

9) இது இரணப்பாலையில் கைப்பற்றப்பட்டது

main-qimg-4493e31a7a97dd2e6c1eef78cc616b18

10) இது நிலத்தினுள் மேலோட்டமாகப் புதைக்கப்பட்டு தரிபெற்றிருந்தது. இதன் முன்பகுதி முழுவதும் கவசம் போடப்பட்டுள்ளது:

main-qimg-60f6e781fee21c9f564558c5fceb8af0

மேற்கண்ட ஊர்தியின் பின்பக்கம்:

main-qimg-49e77c849e18d44abd3822a977d7f24c

11), 12) & 13)→ இவை ஆனந்தபுரத்தில் கைப்பற்றப்பட்டன. அன்று இதே போன்று இரட்டை இருக்கைகொண்ட மொத்தம் மூன்று PICKUP கைப்பற்றப்பட்டன. மூன்றிலுமே 12.7 மி.மீ. சுடுகலன்கள் பொருத்தப்பட்டிருந்தன.

main-qimg-cb7d5a7688f37f971e4cae6d54951381

main-qimg-501913e1443bbdea194a74f93cc8912a

14) 2004 ஆம் ஆண்டைச் சேர்ந்த படம்

main-qimg-6bf2705fe6ab87859af4c1ac5eaa8978

'PK இந்திரச் சுடுகலன் பொருத்திய ஊர்தியில் அமர்ந்திருக்கும் புலிவீரன்'


 • செம்மைப்படுத்தப்பட்ட ஆளணி காவிகள் (improvised personnel carriers)
 • எண்ணிக்கை : 10+

crew cab

1) கீழ்கண்ட ஊர்தியில் புலிகளின் உருமறைப்பு(camouflage) பூசப்பட்டுள்ளது

main-qimg-a2af436da2f36648d02ec5f5f96eca77

2)

main-qimg-f2106425b74537a169ab080315807378


 • செம்மைப்படுத்தப்பட்ட ஆளணி காவிகள் (improvised personnel carriers)
 • எண்ணிக்கை : 14–30

நான்கு இருக்கை கொண்ட pickup

 1. இதே போன்ற உருமறைப்பு கொண்ட 9 ஊர்திகள் தொடரணியாய் செல்வதை புலிகளால் வெளியிடப்பட்ட ஓர் நிகழ்படமொன்றில் (video) கண்டுள்ளேன்..

main-qimg-d62dad2c64cf4cc2e23177187f925a35

கீழ்க்கண்டதுதான் நான் சொன்ன அந்த ஊர்தி தொடரணி.. இது ஒரு 5 நொடி ஓடக்கூடிய நிழற்படம்(video😞

main-qimg-76143574c842b7e9039c4a821fb195dd

2) காவல்துறை

main-qimg-fde4ab63dc61a21155b7f855fe558165.webp

3) காவல்துறை

main-qimg-2768fa66a5e7681e840ca755628d500b.webp

4. மேலும் இதே போன்ற கறுப்புநிற pickup ஒன்று கிளிநொச்சி மாவட்ட வருவாய்த்துறையினரிடம் பயன்பாட்டில் இருந்தது.

5)

main-qimg-76349b03fca1aeaefd1a2c47e282a586

main-qimg-fc073cbfab143c7319683fdf52e81f74


 • செம்மைப்படுத்தப்பட்ட ஆளணி காவிகள் (improvised personnel carriers)
 • எண்ணிக்கை : 15–30

பஜெரோ (pajeros)

இவ்வூர்திகள் விடுதலைப்புலிகளின் பொறுப்பாளர்கள் மற்றும் தளவாய்களால் பயன்படுத்தபட்டன. இவற்றில் ஒரு சில உருமறைப்புகளையும் ஒருசிலது நிறுவன நிறங்களையும் (company colour) கொண்டிருந்தன. இவற்றில் பெருமளவானவை இறுதி நேரத்தில் சிங்கள இராணுவத்தால் எடுக்கப்பட்டு அவர்களின் சொந்த தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டன.

1) & 2) & 3)

main-qimg-c27963ef65c7c6aca4eb7a2028707d70

4.)

main-qimg-f67cf76d13ed7362f04c3afe75cae801

5. கவசம் போட்டப்பட்டுள்ளது:

main-qimg-949196e8bfa719501ee4f2d40707d9d2

6. Limousine pajero -கவசம் போட்டப்பட்டுள்ளது

main-qimg-16b3438e068ca65f02b929c2ef90c280


 • செம்மைப்படுத்தப்பட்ட ஆளணி காவி வையம் (improvised personnel carrier van)

1)Dolphin toyota

 • எண்ணிக்கை : இவ்வாறு மேம்படுத்தப்பட்டது மட்டும் புலிகளிடம் ஒன்று அ இரண்டு இருந்திருக்கலாம் என்று நம்புகீறேன்.

உள்ளே 3 இருக்கைகள் பூட்டப்பட்டுள்ளன.

main-qimg-c528502f27855219e7f2239b72d7700b

main-qimg-1359b143ba8936aba032bf6a43c22ee5

main-qimg-5ab03e9c5fb759861770107905d0b49a

main-qimg-651d3e73aadd47976533103585d5d056

main-qimg-c986d227a9e344deaf8bd45b786ee58a

main-qimg-0f39aa0486297fa3a724f3631daa64fd

2) கயெசு வையம் (kayas van)

 • எண்ணிக்கை : 20+

இவை ஆளணி காவிகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

main-qimg-6a986977b78135c91d26883d1eb9fdad


 • செம்மைப்படுத்தப்பட்ட இழுபொறி (improvised tractor)
 • எண்ணிக்கை : 7–10

புலிகளால் உள்நாட்டில் கட்டப்பட்டு இறுதிப்போரில் வழங்கலுக்கு பயன்படுத்தப்பட்ட மேம்படுத்தப்பட்ட இழுபொறிகள்

1)

main-qimg-25170ff039d31b8421a48b0258f2474c

main-qimg-8f521bc54a56b35a4be781d4a765a35a

'பக்கவாட்டுத் தோற்றம்'

main-qimg-397df71a1637b00c00a3ecb2319f9bdc

'பின்பக்கத்தில் இருந்து முன்னோக்கிய பார்வை'

main-qimg-75344b9645fda8451a24cb7aa8050044

'பின்பக்கம்'

3)

main-qimg-9d7a98ffb2fa661352ca070731fe41a8

4)

main-qimg-8f687051eea5f0f9f432c9a7c4b2e662

main-qimg-fa708f3e35d190d5740f8a6de8552693

'மேற்கண்ட இழுபொறியின் பின்பக்கம்'

main-qimg-3c44a723773f71176de0ec399bef7a03

'மேற்கண்ட இழுபொறியின் பின்பக்கம்'

4)

main-qimg-4b0747093e49ccd98ecb32e83a8624ea

5)

main-qimg-3f3c3cdff7f197cc4d3cc93a5d08aade

6)

main-qimg-b3a952fc814d3c5755e7c00fdec7e4ab

7)

main-qimg-fb3f261fbb982e2cc8df7c5ce875438b


 • கைப்பற்றப் பட்ட இடம்: புலிகளின் கவச ஊர்தி அணியமாக்கல் தொழிற்சாலை

1)உள்நாட்டு கவச சண்டை ஊர்தி (indigenous armored fighting vehicle)

இவ்வூர்தி முக்கால்வாசி கட்டுமானம் முடிந்தநிலையில் சிங்களப்படைகளால் கைப்பற்றப்பட்டது ஆகும்.

இதன் பெரிய சக்கரங்கள் இதனை கரடுமுரடான பாதைகளிலும் இலகுவாக செல்லக்கூடியதாக ஆக்கியிருக்கும். மேலும் அந்த வைர வடிவ உடலமைப்பு இதனை கண்ணிவெடி-எதிர்ப்பாக மாற்றியிருக்கிறது. ஆனால் இதன் கட்டுமானம் முழுமையாக முடிக்கப்படாததால் இதனைப் பற்றி முழுமையாக அறிய முடியவில்லை

main-qimg-50075fd7e5c020b1292bc78b92e9c2ff

சக்கரத்துடன் கூடிய பகுதி:

main-qimg-3f90656497c942b270221f1b50d4b679

முன்பக்கம்:

main-qimg-dcfbe0b0cb03c6da7f49d4f243a2a227

2) இஃவெரெட்டு கவச சகடம் (Ferret armoured car)

செம்மைப்படுத்தி முடிக்காத நிலையில் சிறீலங்காத் தரைப்படைகளால் கைப்பற்றப்பட்டது.

main-qimg-0472a88f7a25d5a40a54539343aa1671


 • பிற்சேர்க்கை (10-17-2020)

→ கவச உழுபொறி (Armoured Tractor)

→ எண்ணிக்கை: 2

இவ்வூர்தியின் வகைப் பெயரோ விதப்பெயரோ எனக்குத் தெரியவில்லை. இறுதிப்போரில் இதற்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. இது ஜயசிக்குறுயி எதிர்ச்சமரக் காலத்தில் பரந்தன் - கிளிநொச்சி படைத்தளம் மீதான விடுதலைப் புலிகளின் ஊடுருவித் தாக்குதலில் நடுவீதியில் வைத்துக் கைப்பற்றப்பட்டதாகும்.

இத புறங்களில் எப்படைப் பிரிவுக்குச் சொந்தமானது என்று எழுதப்பட்டிருந்தது.

main-qimg-ba690c563b1a07bb80715277b78117d5

'கைப்பற்றப்பட்ட போது'

இதன் மேற்பகுதியில் ஒற்றைச் சுடுகலன் கொண்ட அலங்கம் உள்ளது.

main-qimg-08b488a82a6f6077807f4da5f80b78d2

கிட்டத்தட்ட இதே போன்ற ஒன்று 95 க்கு முன்னர் புலிகள் வைத்திருந்தனர். அதன் நிழற்படம் வாசகர் பார்வைக்காக கீழே கொடுத்துள்ளேன்.

இதன் மேற்புறத்தில் இரட்டை சுடுகலன் கொண்ட அலங்கம்(turret) உள்ளது. அதில் உள்ள சுடுகலமானது பெரும்பாலும் .50 கலிபர் பிரவுனிங்ஙாக இருந்திருக்கலாம் என்று எண்ணுகிறேன்.

main-qimg-607722bba505041f8bea0543b20b129d

"இதன் சக்கரங்களை வைத்துப் பார்க்கும்போது, இது ஒரு கவசம் பூட்டப்பட்ட உழுபொறி(Tractor) என்பது புலப்படுகிறது. இதற்கு பவள் கவச ஊர்தியில் பொருத்தப்பட்டிருக்கும் சன்னத் தகை ஆடிகள்(Bullet proof glass) போன்ற ஆடிகள் பூட்டப்பட்டிருக்கிறது. இதன் கவசத்தில் உள்ள நீக்கல்களை வைத்துப் பார்க்கும்போது இதன் தகடுகள் மிகவும் மொத்தமாக உள்ளதாக தெரியவருகிறது. "

என்று திரு Mac Chew Kim Thiam அவர்கள் மேற்கண்ட ஊர்தி பற்றிக் கூறினார்.

(95 இற்குப் பின்னர் இதற்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை..)

கீழ்ப்படத்தையும் மேற்படத்தையும் ஒப்புநோக்குகையில் இரண்டும் வெவ்வேறு தோற்றத்திலான ஆனால் ஒரே விதத்தைச் சேர்ந்தையாக(இரண்டுமே கவச உழுபொறிகள்தாம்) இருக்கின்றன. ஆகையால் இரண்டும் உள்நாட்டு விளைவிப்புக்கள் என்னும் முடிவிற்கு வருகிறேன்.


 • பிற்சேர்க்கை (10-17-2020)

→ நிலத் தோரணம் (Land rover)

→ எண்ணிக்கை: 6–10

 1. இது 2008 வவுனியாவில் நடைபெற்ற சமர் ஒன்றில் விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்டது ஆகும்.

main-qimg-d6fe1111c559aef6446b07d8faa318f4

2)

main-qimg-79a846839a582ec9a941014183a80462

3) தென் தமிழீழத்தில்

main-qimg-c644c1240f5c4498fa4c5a656ae674fc

4) கட்டம் போட்ட சட்டை போட்டிருப்பவர் தான் லெப்.கேணல். சிந்து.. இந்தக் குழுவினர் வைத்திருப்பது SPG 9 என்னும் ஆய்தம்.

main-qimg-e9dee6fa4831dae375f20b49e66eb55d

5)

main-qimg-aa4845c1cab1ea9dba4b8095628c2fec

6)

main-qimg-c3ddf204b125800ba188b1cfd6c34562


 • பிற்சேர்க்கை (11–24-2020)

இது 4-4-2009 அன்று ஆனந்தபுரத்தில் எடுக்கப்பட்ட நிகழ்படத்தில் இருந்து திரைப்பிடிப்புச் செய்யப்பட்டது ஆகும். இங்கு எரிந்து கொண்டிருக்கும் புலிகளின் கவசவூர்தி என்ன வகையைச் சேர்ந்தது என்று என்னால் அடையாளங் காண முடியவில்லை. இது பார்ப்பதற்கு BTR-80இன் தோற்றத்தைக் கொண்டுள்ளது.

main-qimg-fbc71a014688b16fd356dba2dd60b587


 • கூடுதல் செய்திகள்

புலன கிட்டிப்பு(credit): சற்குணநாதன் (Pushpakumar Satkunanathan)

புலிகள் காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஓர் சொல்லாடல்: களநிலை ஊர்தி

"களநிலை ஊர்திகள் என்பது விடுதலைப்புலிகளின் பயன்பாட்டில் இருந்த சொல். அதாவது யுத்தகளத்தில் நிலையாக யுத்தத்தேவைகளுக்காக நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் கவசபாதுகாப்பு கொண்ட ஊர்திகளை அப்படி அழைத்தோம். அவ்வாறான ஊர்திகள் காயப்பட்ட வீர்ர்களை காக்கவும். சில யுத்த பின்கள பணிகளுக்கும் பயன்படுத்தப்பட்டது."

உசாத்துணை:

படிமப்புரவு (image courtesy)

ஆக்கம் & வெளியீடு

நன்னிச் சோழன்

Edited by நன்னிச் சோழன்
 • Like 1
 • Thanks 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இதுதான் மேலே உள்ள வெள்ளை நிற கவச ஊர்தியின் முகப்பு:-

(இன்றுதான் படிமம் கிடைத்தது)

இந்த வெள்ளை நிற கவச ஊர்தியும் அதற்கு கீழே உள்ள கவச  ஊர்தியும் புதுக்குடியிருப்பு சமரின் போது சிங்களப் படைகளால் கைப்பற்றைப் பட்டவையாகும்.

main-qimg-6fefc6944b81c4505ebe770c49530699

மற்றொரு விதயம் என்னவென்றால்.. புலிகளின் சாதாரண ஊர்திகள் எல்லாவற்றையும் 'வாகனப் பிரிவு' தான் கையாண்டது...

 

Edited by நன்னிச் சோழன்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சூரன் கவச அணி கட்டளையாளர் மணியரசன் விடுதலைப் புலிகளின் வகை-55 தகரியுடன் நிற்கிறார்.

May be an image of one or more people, people standing and outdoors

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
 • கண்ணிவெடி-தடுப்பு, பதிதாக்குதல்-காப்பாற்றப்பட்ட காலாட்படை நகர்திறன் ஊர்தி (Mine-resistant, ambush-protected infantry mobility vehicle) - பஃவெல்(A type of Buffel. may be a Unibuffel Mk-I) ... 

main-qimg-255bc4c0265b9d590dcb63361109e078

'படிமப்புரவு: தமிழீழ விடுதலைப் புலிகளின் 'விடுதலை மூச்சு' திரைப்படத்திலிருந்து. இதில் சிங்கள தரைப்படை சீருடையில் உள்ளவர்கள் தவிபு போராளிகள் ஆவர்'

Edited by நன்னிச் சோழன்
 • Like 1
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • முள்ளிவாய்க்கால் நினைவை... வீடுகளில் இருந்து நினைவுகூருங்கள் – மாவை அழைப்பு இதுவரை அடைந்த அவலங்கள், துயரங்களை நெஞ்சிற் கொண்டு இலட்சிய தாகத்தை இதயத்தில் நிறைத்து முள்ளிவாய்க்கால் நினைவை வீடுகளில் இருந்து நினைவு கூறுமாறு இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அழைப்பு விடுத்துள்ளார். வாழும் இடங்களிலும் குடியிருக்கும் குடில்களிலுங் கூட நினைவு கூர்ந்து மாலை 6.00 மணிக்கு மணி ஒலியெழுப்பிச் சுடரேற்றி விளக்கேற்றி திடசங்கற்பத்துடன் முள்ளிவாய்க்கால் நினைவலைகளை பாரெல்லாம் பரப்புவோம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவர், இராணுவம் சூழ்ந்திருக்க முள்ளிவாய்க்கால் நினைவிக்கல் அகற்றப்பட்டமை தொடர்பாக இலங்கை அரசு பொறுப்புக் கூறியேயாக வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் தமிழ்பேசும் மக்கள் தேசத்தினதும் மக்களினதும் விடுதலைக்காக, தங்களைத் தாங்களே ஆளுவதற்காக இறைமை கொண்ட மக்கள் கடந்த எழுபதாண்டுகளுக்கும் மேலாகப் போராடி வருகின்றனர். இந்நிலையில் தங்கள் உயிர்களைப் பறிகொடுத்த மக்கள் தங்கள் உறவுகளை நினைவு கூரவும், அஞ்சலி செய்யவும், ஆத்மசாந்திக்கான ஈமக்கடன்களில் ஈடுபடவும் உள்ள உரிமை பண்பாடு நாகரிகம் இங்கையில் மறுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார். தமிழர் தேசமும் மக்களும் அழிக்கப்பட்ட வரலாறுகளையெல்லாம் தாங்கி நிற்கும் முள்ளிவாய்க்கால் நினைவையும் அழிக்க இன்றைய அரசு இராணுவ ஆளுகைக்கூடாகச் செயல்பட்டு நிற்பதாகவும் மாவை சேனாதிராஜா குற்றம் சாட்டினார். இத்தகைய வரலாற்றைப் பிரதிபலிக்கும் முள்ளிவாய்க்கால் அத்திபாரத்திலிருந்துதான் தமிழ்த் தேசமக்களின் எழுச்சி எதிர்கால சந்ததியின் விடுதலை வரலாற்றைப் படைக்கப் போகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2021/1215949
  • பயணத்தடை அமுலில் இருக்கும் போது... யாழில் பிறந்தநாள் கொண்டாட்டம் – 15 பேர் தனிமைப் படுத்தலில்! நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுலில் இருக்கும் போது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 15 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வடமராட்சி கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பிறந்தநாள் கொண்டாட்டம் இடம்பெறுவதாக கிடைத்த தகவலை அடுத்து நெல்லியடி பொலிஸாருடன் சுகாதார பிரிவினர் குறித்த பகுதிக்கு சென்றபோது கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் அங்கிருந்து தப்பி சென்றிருந்தனர். இந்நிலையில் பிறந்தநாள் கொண்டாடியவரின், தொலைபேசியில் காணப்பட்ட படங்களின் அடிப்படையில் அதில் உள்ள 15 பேரும் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். https://athavannews.com/2021/1215958
  • நிவாரணப் பொதிகள் வழங்க அரசாங்கம் தீர்மானம் ! கொரோனா தடுப்பிற்காக முடக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதிளை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பிரதேச செயலகங்களினால் தெரிவு செய்யப்பட்டுள்ள மக்களுக்கு 5,000 ரூபாய் பெறுமதியான 20 அத்தியாவசியப் பொருட்கள் உள்ளடங்கலாக இந்நிவாரண பொதி வழங்கப்படவுள்ளதுன. இந்நிவாரணப் பொதி நாளை மறுதினம் திங்கட்கிழமை முதல் மக்களுக்கு வழங்கப்படவுள்ள அதேவேளை அவற்றினை மூன்று தினங்களுக்குள் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையினை அனைத்து மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம சேவை அதிகாரிகள் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மூலம் முன்னெடுக்கப்படும் என்றும் வர்த்தக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. https://athavannews.com/2021/1215926
  • கந்தையா... அண்ணை,  உங்களுக்கு, தமிழ் அவ்வளவு தெரியாவிட்டால், நீங்கள், ஏன்... உந்த ஆராய்ச்சியில் இறங்கினீங்கள்.  பிற்குறிப்பு: சும்மா... பகிடிக்கு 😜, சனிக்கிழமை நமக்கும் பொழுது போகவேணுமெல்லோ... 🤣
  • இந்தியாவில், கொரோனா பரவ... மதம், அரசியல் சாரந்த கூட்டங்களே காரணம் – WHO இந்தியாவில் மதம் மற்றும் அரசியல் சார்ந்த கூட்டங்களினாலேயே கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்த ஆய்வுகளை மேற்கொண்ட குறித்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மாதிரிகளில் 0.1 சதவீத மாதிரிகள் மட்டுமே மரபணு உருமாற்ற பரிசோதனை செய்யப்பட்டு இருக்கிறது. மதம், அரசியல் சார்ந்த கூட்டங்களால் இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவியிருப்பது தெரியவந்துள்ளது.  இந்தியாவில் கடந்த ஏப்ரல் இறுதியில் பி.1.617.1 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் பரவுவது கண்டுப்பிடிக்கப்பட்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 21 சதவீதமானோர் இந்த வகை வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதேபோல பி.1.167.2 என்ற வைரஸும் பரவி வருகிறது. இந்த வைரஸால் 7 சதவீதமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தின் ஒட்டுமொத்த கொரோனா வைரஸ் பாதிப்பில் இந்தியாவில் மட்டுமே 95 சதவீத பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்த பிராந்தியத்தின் உயிரிழப்பில் இந்தியாவில் மட்டும் 93 சதவீதம் பதிவாகியுள்ளது. சர்வதேச கொரோனா வைரஸ் தொற்றில் இந்தியாவில் 50 சதவீத தொற்றும் சர்வதேச உயிரிழப்பில் இந்தியாவில் 30 சதவீத உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1215749
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.