Jump to content

பிரபாகரனின் மகனுக்கு விமானப்பயிற்சி வழங்கியது இஸ்ரேலின் மொசாட் அமைப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலைப் புலிகள் இயக்கம் உருவாக்கியுள்ள விமானப்படையணியின் சிறிய ரக விமானங்கள் அண்மையில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை அடுத்துள்ள விமானப்படை முகாம்கள் மீதும் மற்றும் கொலொன்னாவை எண்ணெய்த்தாங்கித் தொடர்கள் அமைந்துள்ள நிலையத்தின்மீதும் தாக்குதல் நடத்தியிருக்கும் நிலையில், புலிகள் இயக்கத்தின் விமானப்படை பலம் பற்றி வெளியாகியிருக்கும் தகவல்களில் மேற்படி விமானப்படையணிக்கு பிரபாகரனின் மகன் சாள்ஸ் அன்ரனியே தலைமைதாங்கி வழிநடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தத் தகவல்களின் அடிப்படையில் பிரபாகரனின் மகனின் செயற்பாடுகள் பற்றி அறிந்து கொள்வதற்காக இந்திய இரகசிய புலனாய்வு சேவையினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாக இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புலிகள் இயக்கத்தின் விமானப்படையணிக்குத் தலைமைதாங்குபவர் எனவும் அண்மையில் கட்டுநாயக்க விமானப்படைத்தளம் மற்றும் கொலொன்னாவ எண்ணெய்த்தாங்கி நிலையம் ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட விமானத்தாக்குதல்களின் போது விமானத்தைச் செலுத்திவந்து தாக்குதலைத் தொடுத்தவர் எனவும் நம்பப்படும் பிரபாகரனின் மகன் சாள்ஸ் அன்ரனி இவ்வாறு திட்டமிட்ட முறையில் விமானங்களைச் செலுத்திவந்து குண்டுத்தாக்குதலை நடத்திவிட்டு வன்னியிலுள்ள குறித்த புலிகளின் விமானப்படையணி நிலையத்துக்குப் பாதுகாப்பாக விமானங்களை ஓட்டிச் சென்றுள்ளார்.

இவ்வாறு சிறந்த முறையில் சாள்ஸ் அன்ரனி விமானப்பயிற்சிகளை எவ்வாறு கற்றுக்கொண்டார் என்பது பற்றித் தெரிவிக்கப்படும் தகவல்களுக்கேற்ப அவர் இஸ்ரேல் நாட்டின் பிரபல அரச உளவுப் பிரிவாகிய "மொசாட்" அமைப்பினரிடமே விமானப்பயிற்சிகளை பெற்றுக்கொண்டார் என்ற விபரம் தெரியவந்துள்ளது. இந்தக் தகவலைத் தொடர்ந்தே இந்திய அரசு இரகசியப் புலனாய்வுப் பிரிவினர் சாள்ஸ் அன்ரனியின் செயற்பாடுகள் பற்றி அறிந்து கொள்வதற்காக அவருடைய நடமாட்டங்களைப் பின் தொடர்ந்து அவதானிப்பதற்காக நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், இவ்வாறு இஸ்ரேல் "மொசாட்" அமைப்பினரிடம் சாள்ஸ் அன்ரனி விமானப்பயிற்சி பெற்றிருப்பதும் அவருடைய விமானத்தாக்குதல் திறமையும் அறிவும் எவ்வாறாயினும் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடும் என்ற அடிப்படையிலேயே இந்திய அரசு இரகசியப் புலனாய்வுப் பிரிவின் இந்தப் புலனாய்வு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளதாக மேலும் இந்தியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட இரகசிய புலனாய்வு விசாரணைகளிலிருந்து இந்தியப் புலனாய்வுப் பிரிவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவல்களில் இவ்வாறு புலிகள் இயக்கத்திடம் 7 விமானங்கள் இருப்பதாகவும் விமானத்தாக்குதல் பயிற்சிபெற்ற 9 விமானமோட்டிகள் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், தற்போது புலிகள் இயக்க விமானப் படையிணியினர் இஸ்ரேலின் "மொசாட்" அமைப்பிடமிருந்து விமானத்தாக்குதல் பயிற்சியைப் பெற்றிருக்கும் நிலையில், தரையில் யுத்தம் ஒன்று நடத்துகொண்டிருக்கும் வேளையில் குறித்த களத்தின் மேலாக விமானங்களைச் செலுத்தி வந்து குண்டுகளை வீசுவதற்கும் அவர்களால் முடியும் எனவும் இந்திய புலனாய்வுப் பிரிவு தரப்பில் கூறப்படுகிறது. இவ்வாறு இந்தியப்புலனாய்வுத் துறை பிரபாகரனின் மகன் சாள்ஸ் அன்ரனி பற்றிய புலனாய்வு விசாரணைகளை ஆரம்பித்து விட்ட நிலையில் ஷ்ரீலங்கா இராணுவப் புலனாய்வு பிரிவும், அரச இரகசிய புலணாய்வு சேவையும் சாள்ஸ் அன்ரனி பற்றிய தகவல்களை அறிந்துகொள்வதற்கான தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளன என சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் ஞாயிறு லங்காதீபவுக்கு தெரிவித்துள்ளார்.

லங்காதீப: 24.06.2007

http://www.thinakkural.com/

Link to comment
Share on other sites

லன்காதீபவினை பார்கையில் சிரிப்பாய் சிரிக்க வேண்டி இருக்குது என்ன கொடுமையப்பா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப இனி உதவி வழங்கிய நாடுகள் மேலயும் படையெடுக்கப்போகினம் போல.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.