Jump to content

பிரேமதாஸவை படுகொலை செய்ய ‘பாபு’எப்படி வந்தார்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரேமதாஸவை படுகொலை செய்ய ‘பாபு’எப்படி வந்தார்?

சைக்கிளை தள்ளிக்கொண்டு வந்தார் என்பது பிழை

கையை விரித்து பாபு செலவு செய்தார்

காதலுக்கு உதவினார்

பால்கடைக்கு கைகொடுத்தார் 

 

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ரணசிங்க பிரமேதாஸாவின் மீது, 1993 மே 1ஆம் திகதி ஆமர்வீதியில் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்தப் படுகொலை தொடர்பில், வெளிச்சத்துக்கு வராததும் வெளிச்சத்துக்கு கொண்டுவரப்படக்கூடாத கதைகள் பல உள்ளன. அதுதொடர்பில், சுதத் சில்வா, சகோதர பத்திரிகையான ‘லங்காதீப’விடம் பேசியுள்ளார்.  

சுதத் சில்வா, இந்நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஐந்து ஜனாதிபதிகளின் கீழ் கடமையாற்றிய உத்தியோகபூர்வ புகைப்படப்பிடிப்பாளர். அரச தலைவர்களுக்கு மிகநெருக்கமாக இருந்த அவர், ‘தகவல் களஞ்சியம்’ போன்றவர். அவரிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில், இக்கட்டுரை எழுதப்பட்டது.

ஜனாதிபதி பிரேமதாஸ வாழ்க்கையின் கடைசி தருணம் நெருங்கிக்கொண்டிருந்தது. அன்றையதினம், ஐக்கிய தேசிய கட்சியின் மேதினப் பேரணி, இரண்டு வழிகளில் வந்துகொண்டிருந்தது. மெசஞ்சர் வீதி பேரணியில் பெரும் எண்ணிக்கையிலான ஆதரவாளர்கள் திரண்டிருந்தனர். பகல் 12.15யை அண்மித்திருந்தது.

“சுதத், மைத்தானத்தில் மக்களின் எண்ணிக்கை எவ்வளவாக இருக்கும்”?  

ஜனாதிபதி பிரேமதாஸ சுதத் சில்வாவிடம் கேட்டார். அப்போது, பிரேமதாஸ, சுகததாஸ உள்ளரங்கத்துக்கு அண்மையிலுள்ள வீதியொன்றில் இருந்தார்.

 “சேர், மைதானம் நிரம்பி வழிகிறது” என ஜனாதிபதியிடம் சுதத் தெரிவித்தார். 

அந்த வசனத்தை கேட்டவுடன், பிரேமதாஸவின் முகத்தில் ஒருவிதமான புத்துணர்ச்சி தென்பட்டது. பெரும் சந்தோஷம் சூழ்கொண்டிருந்தது. அதற்கான காரணங்களும் இருந்தன. ஐ.தே.கவின் பிரபலங்களான லலித் அத்துலத்முதலி, காமினி திஸாநாயக்க ஆகிய இருவரும், கட்சியில் இருக்கவில்லை. ஜனாதிபதி பிரேமதாஸ, தனியாகவே மே தினப் பேரணியை நடத்தினார். அதில், பெருந்திரளான மக்கள் கூட்டத்தை கூட்ட முடியாமல் போய்விடுமோ, என்ற பயம் அவருக்கு இல்லாமலும் இல்லை.  

சுகததாஸ, விளையாட்டரங்குக்கு அருகில் வாகனத்திலிருந்து இறங்கிய ஜனாதிபதி பிரேமதாஸ, ஆமர்வீதிவரை நடந்தே வந்தார்.  

 

நேரம் 12.30 மணியிருக்கும், கைக்கடிகாரத்தை பார்த்த ஜனாதிபதி, அருகிலிருந்த ஜனாதிபதியின் செய்திச் செயலாளரான எவன்ஸ்ட் குரே என்பவரை அழைத்தார். “வானொலியில் 12.45க்கு செய்தி இருக்கிறது. ஐக்கிய தேசிய கட்சியின் மேதினப் பேரணியில், இலட்சத்தை விடவும் அதிகமான சனத்திரள்” என, செய்தியை ஒலிபரப்புமாறு கேட்டுக்கொண்டார்.  

அச்செய்தியை வழங்குவதற்கான தொலைபேசியை எடுத்துகொண்டு, ‘சுலைமான்’ வைத்தியசாலையின் பக்கமாக, எவன்ஸ்ட் குரே சென்றுவிட்டார். நானும் வாகனத்தில் ஏறிக்கொண்டு, குரேக்கு பின்னாலே சென்றுவிட்டேன்.  

அப்போது, ஜீப்பில் ஏறுவதற்கு ஜனாதிபதி தயாராகிக்கொண்டிருந்தார். மெசஞ்சர் வீதியிலிருந்து வந்துகொண்டிருந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் பிரபல ஆதரவாளர்களுக்கு சமிக்ஞையை காட்டுவதற்கே, அச்சந்தியில் திட்டமிடப்பட்டிருந்தது. அதற்காகவே, ஜனாதிபதியும் காத்திருந்தார்.  

மெசஞ்சர் வீதியின் ஊடாக வந்துகொண்டிருந்த பேரணி, முன்னோக்கி நகர்கையிலேயே குண்டு வெடித்தது. சுமார் 15 மீற்றர் கூட, நாங்கள் இருவரும் சென்றிருக்கமாட்டோம். குண்டு வெடித்துவிட்டது. 

“அதற்குப் பின்னர் நடந்ததை நினைத்துகூடப் பார்க்கமுடியவில்லை” எனத் தனது ஞாபகங்களை பகிர்ந்துகொண்ட சுதத் சில்வா, ஜனாதிபதி பிரேமதாஸவின் அருகிலிருந்தவர்களை நினைவுபடுத்தினார். “உண்மையில், இறுதி சில நிமிடங்கள் கடுமையாக பாதுகாப்பு வலயத்துக்குள்ளே, ஜனாதிபதி பிரேமதாஸ இருந்தார். சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலர் இருந்தனர். அந்த வலயத்துக்குள் இருந்த எவருமே மிஞ்சவில்லை”  

“எனது முதுகின் இடதுபக்கத்தில் ஏதோவொன்று விழுந்ததைப் போல உணர்ந்தேன், அந்த அதிர்ச்சியில் கையை வைத்துப்பார்த்தேன், சதையொன்று தொங்கிக்கொண்டிருந்தது. ஜனாதிபதி பிரேமதாஸ ரணசிங்க நின்றிருந்த திசையைப் பார்த்தேன், மனிதர்களின் அங்கங்கள் மட்டுமே சிதறி கிடந்தன. அவ்விடத்திலிருந்த பிரதிப் பொலிஸ் அதிகாரியின் பணிப்பில், புகைப்படங்கள் சிலவற்றை எடுத்துகொண்டேன்.  

அத்தனை புகைப்படங்களும் என்னிடம் இருக்கின்றன. சிலவற்றை ஊடகங்களில் பயன்படுத்த முடியாது. அந்த உயரதிகாரியிடம், ஜனாதிபதி எங்கே? எனக்கேட்டேன், வாகனத்தில் ஏறிச் சென்றுவிட்டார் என்றார். அதன்பின்னர், ஆமர் வீதி பொலிஸ் நிலையத்துக்குச் சென்று, என்னுடைய வீட்டுக்கு தொலைபேசி அழைப்பை எடுத்தேன். அப்போது, நானும் இறந்துவிட்டதாகவே என்னுடைய தந்தைக்கு யாரோ தகவல் கொடுத்திருந்தனர்.  

அதன்பின்னர், நான், காரியாலயத்துக்குச் சென்றுவிட்டேன், அப்போது தொலைபேசியொன்று அலறிகொண்டிருந்தது; எடுத்தேன். 

“சுதத், இப்போதா வந்தீர்கள்” என, பிரேமதாஸவின் மனைவி கேட்டார். “ஒவ் மெடம்” என்றேன். “சேர் எங்கே?... சேர்க்கு என்ன நடந்தது”? எனக் கேட்டார். “தெரியாது மேடம், அவரை பார்க்கத்தான், காரியாலயத்துக்கு நான் வந்தேன்” எனப் பதிலளித்தேன்.  

அந்த இரண்டொரு நிமிடங்களில்தான், ஜனாதிபதி பிரேமதாஸ, குண்டுவெடிப்பில் இறந்துவிட்டார் என்ற செய்தியை அறிந்துகொண்டேன்.  

“ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் மீது தற்கொலை தாக்குதல் நடத்தியவர், ‘பாபு’ என்பவர்தான் என்பதைப் பலரும் கேள்விபட்டிருப்பீர்கள். அது நீண்டதொரு கதையாகும்” எனக் கதையைத் தொடர்ந்தார்.  

டயஸ் ப்ளேஸின் மாடிவீடுகளின் கீழ், சிங்களவருக்குச் சொந்தமான பால் கடையொன்று இருந்தது. அதில் உதவியாளராகவே ‘பாபு’ வந்திருந்துள்ளார். அந்த கடையிலிருந்து கொஞ்சம் தூரத்திலிருக்கும் வீட்டில், பாபுவின் நண்பர் இருந்துள்ளார். அவரும் சிங்களவர், மதுபானம் அருந்துதல், புகைத்தல் உள்ளிட்ட எந்தவிதமான கெட்டபழக்கங்களும் இன்றி, நல்லொழுக்கமுள்ள நபராக பாபு இருந்துள்ளார்.  

அந்த மாடிவீட்டுத் திட்டம் பிரேமதாஸவால் உருவாக்கப்பட்டது. பாற்கடையின் உரிமையாளருக்கும், மேல்மாடியில் இருக்கும் பாபுவின் நண்பரின் தங்கைக்கும் இடையில் காதல் மலர்ந்துள்ளது. காதலுக்கு உதவி செய்த பாபு, மேல்மாடிக்கு ஒருநாள் சென்றுள்ளார். அவ்வீட்டில் பிரேமதாஸவின் புகைப்படங்கள் சுவர்களில் தொங்கிக் கொண்டிருந்துள்ளன.  

இதுதொடர்பில், பால் முதலாளியிடம் பாபு கேட்டுள்ளார். அப்போது, மாடிவிட்டு நண்பருக்கும், ஜனாதிபதி பிரேமதாஸவுக்கும் இடையிலிருக்கும் நெருக்கத்தை பாபு புரிந்துகொண்டார்.  

“ஜனாதிபதி வெளியிடங்களுக்குச் செல்லும் போது, சமைப்பதற்கான உதவியாளர், தேவையான பொருள்கள், உடற்பயிற்சி செய்வதற்கான உபகரணங்கள் உள்ளிட்டவை, முதல்நாளன்றே வாகனத்தில் அனுப்பிவைக்கப்படும். அதில், முதலாளியின் நண்பரும் செல்வார். சில நாள்களில் முதலாளியும் செல்வர். பாபுவும் அவர்களுடன் செல்வார். இது சாதாரணமாகவே நடந்தது. என்றாலும், ஒருநாளேனும், ஜனாதிபதி பிரேமதாஸவை பார்ப்பதற்கு, முகத்தைக் காட்டுவதற்கு பாபு வரவில்லை; நானும் காணவே இல்லை” என்றார் சுதத் சில்வா, 

ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ, சென்றிருந்த தூரப்பயணங்கள் பலவற்றுக்கு, பாபுவும் முதல் நாளன்றே சென்றிருக்கின்றார். முதலாளியின் நண்பர்தான், பிரேமதாஸவின் கண்ணாடி முதல் சகலவற்றையும் ஏற்பாடு செய்து முகாமைத்துவம் செய்பவர். ஜனாதிபதிக்குத் தூக்கம் வரும் வரையிலும் தலையை ‘மசாஜ்’ செய்துவிடுவார். அவருடன் பாபுவும், காரியாலயத்துக்கு பலமுறை சென்றிருக்கின்றார்.  

அங்கெல்லாம், பாதுகாப்பு கடமைகளில் இருப்போருக்கும் பாபு ஒரு விருந்தாளி அல்ல. பாதுகாப்பு பிரிவினருக்கு பாபு, நெருக்கமானவர். கோவிலுக்குச் செல்வதை பாபு பழக்கமாக கொண்டிருந்தார். எந்தநாளும் கோவிலுக்கு சென்றிருக்கின்றார்.   

இவ்வாறு சென்றுகொண்டிருந்த போது, பாற்கடை நட்டமடைந்தது. எனினும், அக்கடையை மீள கட்டியெழுப்புவதற்கு பாபு பணம் கொடுத்துள்ளார். அதுமட்டுமல்ல, பிரேமதாஸ தூரப்பயணம் செல்லும் போது, முதல்நாளன்று செல்வோருக்கு கையை விரித்து பாபு செலவழித்துள்ளார். அப்பணம் எங்கிருந்து வந்தது என்பதை யாராவது கேட்டார்களா என்பது பிரச்சினையாகும்.  

பிரேமதாஸ, படுகொலை செய்யப்படுவதற்கு முன்னர், இறுதியாக தூரப்பயணமாக, கதிர்காமத்துக்கு பயணித்திருந்தார். அங்கும் பாபு இருந்துள்ளார். ஜனாதிபதி இரவை கழித்த பங்களாவின் ஒருபகுதியில், பாபும் அவருடைய நண்பர்களும் இருந்துள்ளனர். அன்றிரவு, அவர்கள் மதுவிருந்துபசாரத்தில் ஈடுபட்டிருந்துள்ளனர்.  

தன்னுடைய இலக்கை எட்டும் வரையிலும் பாபு, பொறுமையாகக் காத்திருந்துள்ளார். இலக்கை விரைவில் அடைவதற்கு பாபு அவசரப்படவில்லை. பங்களாவில் ஜனாதிபதி இருந்தபோது, அச்சந்தர்ப்பத்தை அவர் பயன்படுத்தவில்லை, எந்தநேரமும் தான் ஒரு நம்பிக்கையானவர் என்பதைப் பாதுகாத்தார். சந்தேகமில்லாத இலக்குக்காக, மே 1ஆம் திகதி வரையிலும் காத்திருந்தார்.  

மே1 பகல் 11 மணிளவில் வாழைத்தோட்ட கூட்டம் நிறைவடைந்து விட்டது என்பதை குணசிங்புர ஏற்பாட்டாளரிடமிருந்து பாபு அறிந்துகொண்டுள்ளார். ஆமர்வீதி சந்தியில், எந்தப்பக்க பேரணியுடன் ஜனாதிபதி பிரேமதாஸ, இணைந்துகொள்வர் என்பதையும் ஐ.தே.கவின் பிரபல ஆதரவாளர்களின் ஊடாக, பாபு தெரிந்துவைத்துள்ளார்.  

இந்தப் பேரணியை, முன்னோக்கி நகர்த்துவதற்கான சமிக்ஞையைக் கொடுப்பதற்கு சில விநாடிகள் இருக்கும்போது, மனிதக் குண்டு வெடித்துச் சிதறியுள்ளது. அப்போது, பாபு நடந்தே வந்துள்ளார். அவர், சைக்கிளில் வந்தார் என்ற கதை தவறானது. ஏனைய நபர்களின் மீதான தாக்குதல்களின் பின்னர், பாபுவின் தலை, 3 அல்லது 4 மீற்றர் தூரத்தில் கிடந்தது.  

 

ஜனாதிபதி பிரேமதாஸவின் உடலில் பெரும்பகுதி எரிகாயங்களுக்கு உள்ளாகியிருந்தது. என்றாலும் இனங்கண்டுகொள்ளும் வகையில் இருந்தது. கை உடைந்திருந்தது. அண்மையில் கிடந்த சடலங்களுக்கு இடையே, ஆகக் கூடுதலான பாதிப்புகள், ஜனாதிபதிக்கு அருகிலிருந்த மொஹீதினின் உடலுக்கே ஏற்பட்டிருந்தது, குண்டு வெடிக்கும் போது, ஜனாதிபதிக்கு அருகில், மொஹீதீனே இருந்திருக்கலாமெனத் தன்னுடைய ஞாபகங்களை சுதத் சில்வா பகிர்ந்துகொண்டார். 

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/பிரேமதாஸவை-படுகொலை-செய்ய-பாபு-எப்படி-வந்தார்/91-270754

 

Link to comment
Share on other sites

விடுதலைப் போரின் முடிவுரை ஈழத்தமிழர்களுக்கு எதிராக எழுதப்பட காரணமாக இருந்த பல காரணங்களில் இந்த சம்பவமும் ஒரு சிறு பங்களிப்பை செய்துள்ளது என்பதை எவராலும் மறுக்க முடியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

விடுதலைப் போரின் முடிவுரை ஈழத்தமிழர்களுக்கு எதிராக எழுதப்பட காரணமாக இருந்த பல காரணங்களில் இந்த சம்பவமும் ஒரு சிறு பங்களிப்பை செய்துள்ளது என்பதை எவராலும் மறுக்க முடியாது. 

அப்ப  எப்படி போராடி இருந்தால் சரி வந்து இருக்கும் ?

உங்களின் புலி எதிர்ப்பு அரசியலுக்கு யாழை உபயோக படுத்துகிறீர்கள் நான் எங்கு புலியை  பற்றி எழுதினேன் என்று அப்பாவி போல் கேள்வி கேட்கவேண்டாம் .

Link to comment
Share on other sites

5 hours ago, பெருமாள் said:

அப்ப  எப்படி போராடி இருந்தால் சரி வந்து இருக்கும் ?

உங்களின் புலி எதிர்ப்பு அரசியலுக்கு யாழை உபயோக படுத்துகிறீர்கள் நான் எங்கு புலியை  பற்றி எழுதினேன் என்று அப்பாவி போல் கேள்வி கேட்கவேண்டாம் .

நான் முன்னரே கூறியபடி கண்மூடித்தனமான புலியதிர்ப்பு, கண்மூடித்தனமான புலியாதரவு ஆகிய இரு அரசியலையும் செய்யும் இரு தரப்பும் ஆபத்தான, புறந்தள்ள வேண்டியவர்களே. ஆகவே அந்த இரு தரப்புக்குள்ளும் என்னை சேர்ககவேண்டாம். இத்திரியில் எனது கருத்துடன் உங்களுக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, tulpen said:

நான் முன்னரே கூறியபடி கண்மூடித்தனமான புலியதிர்ப்பு, கண்மூடித்தனமான புலியாதரவு ஆகிய இரு அரசியலையும் செய்யும் இரு தரப்பும் ஆபத்தான, புறந்தள்ள வேண்டியவர்களே. ஆகவே அந்த இரு தரப்புக்குள்ளும் என்னை சேர்ககவேண்டாம். இத்திரியில் எனது கருத்துடன் உங்களுக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். 

கருது இல்லை என்றால் உடன்பாடு இல்லை என்று நழுவ வேண்டாம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் செய்தியா??

இவற்றை எல்லாம் எதற்காக தேடி தேடி இங்கே இணைக்கிறார்கள்??

இருக்கும் ஒற்றுமையை குலைக்கும் வேலை இது

ஏதோ நடாத்தட்டும். 😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல கொலைகள் புலிகள் தலையில் போடப்பட்டன.

பிரேமாவால் தூக்கப்பட்டவர் லலித். காமினி கொலையும் அவ்வாறே என்ற சந்தேகமும் உண்டு.

அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு, பர்சனல் அலுவல் பார்க்க (அவர்களும் மனிதர்கள் தான்: கருத்தடை சாதனங்கள், வயாகரா மாத்திரை, கருத்தடை மாத்திரை, மாதவிடாய் pad போன்றன அவர்களால் வாங்க முடியாது) பர்சனல் வலட் என்னும் ஒருவர் இருப்பார். அவர் மிக ஆரம்ப காலத்தில் இருந்தே அண்மையாக இருப்பார். 

தமிழரான பாபு என்பவர், பிரேமதாசாவை நெருங்கும் அளவுக்கும், மசாஜ் பண்ணுமளவுக்கும் அவ்வளவு நெருக்கம் இருக்க வாய்பில்லை. 

இந்தியாவுடன் மிக மோசமாக முரண்பட்டவர் என்பதால், பாபு, ராஜிவ் காந்தியின் கொலை 7 தமிழர்கள் போல, ஒரு பெரும் சதியின் சிறு சாட்டுதல். 

ரகுராஜ் என்ற தமிழ் இளைஞர், லலித்தினை கொலை செய்தபின்னர், தனது தலையில் சுட்டு இறந்து வீதி ஓரத்தில் உடல் கண்டு எடுக்கப்பட்டது என்று கதை முடிக்கப்பட்டது. 

ஒரு சதிக்கு ஹோட்டலில் சர்வர் வேலை செய்து கொண்டிருந்த அப்பாவி தமிழ் இளைஞர் பலியானார்.

ரோகண விஜேவீர கைதான பின்னர், ரஞ்சன் விஜேரத்தின உத்தரவில், சுடப்பட்டு, போலீசார் துப்பாக்கியை பறித்து, சுட்டு தப்பி ஓட முனைந்த போது, சுடப்பட்டார் என்று முடித்தார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி இதை எல்லாம் இப்ப அலச என்ன காரணம். இதெல்லாம்.. பிழைப்பு வாதங்கள் மட்டுமே.

கிளாலிக் கடலில் பிரேமதாச அரசின் இனவெறியாட்டத்துக்கு உறவுகளைப் பறிகொடுத்த எவருமே இது அவருக்கான கடவுளின் தீர்ப்பென்றே தான் எண்ணுவர். அதேபோல்.. அப்பாவி சிங்கள இளைஞர்களை ஜே வி பி சந்தேக நபர்கள் என்று கொன்று மனிதப் புதைகுழி சரிசத்தை இலங்கையில் அதிகப்படுத்திய ஒரு மனித இனப்படுகொலையாளி தான் இவர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, nedukkalapoovan said:

சரி இதை எல்லாம் இப்ப அலச என்ன காரணம். இதெல்லாம்.. பிழைப்பு வாதங்கள் மட்டுமே.

கிளாலிக் கடலில் பிரேமதாச அரசின் இனவெறியாட்டத்துக்கு உறவுகளைப் பறிகொடுத்த எவருமே இது அவருக்கான கடவுளின் தீர்ப்பென்றே தான் எண்ணுவர். அதேபோல்.. அப்பாவி சிங்கள இளைஞர்களை ஜே வி பி சந்தேக நபர்கள் என்று கொன்று மனிதப் புதைகுழி சரிசத்தை இலங்கையில் அதிகப்படுத்திய ஒரு மனித இனப்படுகொலையாளி தான் இவர். 

அலச காரணம், மாதனமுத்தாக்கள் அலம்பறை.

கோத்தாவுக்கு இன்று பேத்தி பிறந்த கதை தெரியுமே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/5/2021 at 01:42, கிருபன் said:

ஜனாதிபதி பிரேமதாஸவின் உடலில் பெரும்பகுதி எரிகாயங்களுக்கு உள்ளாகியிருந்தது. என்றாலும் இனங்கண்டுகொள்ளும் வகையில் இருந்தது. கை உடைந்திருந்தது

ஓ இனம் கண்டுகொள்ளக்கூடிய வகையில் இருந்ததா?

பிரேமதாஸ ஆட்சிக்காலத்தில் டயர் போட்டு எரிக்கப்பட்டும்  படுகொலைசெய்யப்பட்டு குழிதோண்டி புதைக்கப்பட்டும் இனம் காணமுடியாது ஆக்கப்பட்ட பல பத்து ஆயிரம்  ஜேவிபியின் குடும்ப உறுப்பினர்கள்..

தென் தமிழீழத்தில்  பெரும் எடுப்பில் நடத்தப்பட்ட படுகொலைகள் இவற்றின்போதெல்லாம் கொல்லப்பட்டவர்களை இன்றும்கூட இனம் காண முடியவில்லை, இன்றுவரை அவர்கள் எங்கே என்றும் தெரியவில்லை, 

அப்படி பார்க்கையில் பிரேமதாஸவை இனம் காணகூடிய அளவில் பாபு நடந்து கொண்டவிதம் பாராட்ட தக்கது.என்ன இருந்தாலும் பாபு பாபுதான். கிரேட்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, tulpen said:

விடுதலைப் போரின் முடிவுரை ஈழத்தமிழர்களுக்கு எதிராக எழுதப்பட காரணமாக இருந்த பல காரணங்களில் இந்த சம்பவமும் ஒரு சிறு பங்களிப்பை செய்துள்ளது என்பதை எவராலும் மறுக்க முடியாது. 

இடம், பொருள், ஏவல் என்று ஒன்று இருப்பது துல்பனுக்குத் தெரியாதோ..?

☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

பல கொலைகள் புலிகள் தலையில் போடப்பட்டன.

அதை இங்கு கதைக்க போக ஜஸ்டின் ஐயா மிரண்டவர் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

இதெல்லாம் செய்தியா??

இவற்றை எல்லாம் எதற்காக தேடி தேடி இங்கே இணைக்கிறார்கள்??

இருக்கும் ஒற்றுமையை குலைக்கும் வேலை இது

ஏதோ நடாத்தட்டும். 😡

தமிழர்களிடம் இருக்கும் ஒற்றுமை என்பது “நான் சொல்லுறன், நீ கேள்” என்று ஒரு சிலரிடம் இருக்கும் ஒற்றுமைதான்!😂

மேதினக் கூட்டத்தில் பிரேமதாஸ கொல்லப்பட்டார். அதுதான் தமிழ் மிரர் நினைவாக கட்டுரை போட்டது. 

 

3 hours ago, Nathamuni said:

தமிழரான பாபு என்பவர், பிரேமதாசாவை நெருங்கும் அளவுக்கும், மசாஜ் பண்ணுமளவுக்கும் அவ்வளவு நெருக்கம் இருக்க வாய்பில்லை. 

கட்டுரையில் அப்படி இல்லையே. கவனம் எடுத்துப் படியுங்கள்.

பிரேமதாஸ புலிகளுக்கு ஆயுதம் கொடுத்தவர். அதே நேரத்தில் ஜேவியை ஈவிரக்கம் இல்லாமல் அழித்தவர். அதே ஈவிரக்கம் இல்லாத தன்மையை தமிழர்கள் மேல் காட்ட அதிக காலம் எடுத்திருக்காது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

கட்டுரையில் அப்படி இல்லையே. கவனம் எடுத்துப் படியுங்கள்.

முடியல்ல.

வெளுத்ததெல்லாம் பால் தானே உங்களுக்கு?

எழுதுவதை எல்லாமே நம்புவதா?

Link to comment
Share on other sites

5 hours ago, Nathamuni said:

 

தமிழரான பாபு என்பவர், பிரேமதாசாவை நெருங்கும் அளவுக்கும், மசாஜ் பண்ணுமளவுக்கும் அவ்வளவு நெருக்கம் இருக்க வாய்பில்லை. 

 

நாதம்,

கட்டுரையில் பாபு பிரேமதாசாவுக்கு மசாஜ் செய்தார் என குறிப்பிடப்படவில்லை. முதலாளியின் நண்பர் தான் அவ்வாறு செய்வது.

பாபு கொழும்புத்துறை துண்டி சந்தியில் இருந்த புலிகளின் முகாமில் தான் இருந்தவர். சிங்கள ஊர் ஒன்றில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் சரளமாக சிங்களம் கதைக்கவும் எழுதவும் தெரிந்தவர். சில விடயங்களுக்காக நான் துண்டி முகாமுக்கு செல்லும் போது எனக்கும் சிங்களம் தெரியும் என்பதால் அவருடன் சிங்களத்தில் கதைத்து பழகியுள்ளேன்.

கொழும்புக்கு வந்தபின் பிரேமதாசா வசிக்கும் சுச்சரித்த பகுதிக்கு அருகில் இருக்கும் ஒரு இடத்தில் தான் நான் தங்கியிருந்தேன். ஒரு நாள்  தெருவில் பாபுவை கண்டு கதைத்து இருவரும் ரோல்சும் பிளேன் ரீயும் உண்டுள்ளோம். புலிகளில் இருந்து களவாக தப்பி ஓடி கொழும்பு வந்து வெளினாடு செல்ல ஏஜென்சிக்கு காசு கொடுத்து விட்டு காத்து இருக்கின்றேன் என்று சொன்னார். 

அவரை அதன் பின் பிரேமதாசா கொலை தொடர்பான செய்திகளிலேயே காண முடிந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, நிழலி said:

நாதம்,

கட்டுரையில் பாபு பிரேமதாசாவுக்கு மசாஜ் செய்தார் என குறிப்பிடப்படவில்லை. முதலாளியின் நண்பர் தான் அவ்வாறு செய்வது.

பாபு கொழும்புத்துறை துண்டி சந்தியில் இருந்த புலிகளின் முகாமில் தான் இருந்தவர். சிங்கள ஊர் ஒன்றில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் சரளமாக சிங்களம் கதைக்கவும் எழுதவும் தெரிந்தவர். சில விடயங்களுக்காக நான் துண்டி முகாமுக்கு செல்லும் போது எனக்கும் சிங்களம் தெரியும் என்பதால் அவருடன் சிங்களத்தில் கதைத்து பழகியுள்ளேன்.

கொழும்புக்கு வந்தபின் பிரேமதாசா வசிக்கும் சுச்சரித்த பகுதிக்கு அருகில் இருக்கும் ஒரு இடத்தில் தான் நான் தங்கியிருந்தேன். ஒரு நாள்  தெருவில் பாபுவை கண்டு கதைத்து இருவரும் ரோல்சும் பிளேன் ரீயும் உண்டுள்ளோம். புலிகளில் இருந்து களவாக தப்பி ஓடி கொழும்பு வந்து வெளினாடு செல்ல ஏஜென்சிக்கு காசு கொடுத்து விட்டு காத்து இருக்கின்றேன் என்று சொன்னார். 

அவரை அதன் பின் பிரேமதாசா கொலை தொடர்பான செய்திகளிலேயே காண முடிந்தது.

ஆகா... சிங்கன் wanted ஆக வந்து வண்டீல ஏறி மாட்டிக்கிட்டாரு... 😎

உங்களை தான் தேடிக்கொண்டிருக்கிறம்.... வாழைத்தோட்டத்தில, தெருவோர சின்ன சிவன் கோவிலுக்கு பக்கத்தில இருந்த ஒருத்தரோட, ரோல்சும் பிளேன் ரீயும் அடிச்சு தான் திட்டம் தீட்டினார்கள் என்று தான் ரெக்கோர்டில இருக்குது. 🤠

(சப்பா... வேணுமெண்டு பிழையா எழுதினா, தூண்டிலில வந்து எப்படி மாட்டுகினம் பாருங்கோ மக்களே) 🧐

😁

Link to comment
Share on other sites

10 minutes ago, Nathamuni said:

உங்களை தான் தேடிக்கொண்டிருக்கிறம்.... வாழைத்தோட்டத்தில, தெருவோர சின்ன சிவன் கோவிலுக்கு பக்கத்தில இருந்த ஒருத்தரோட, ரோல்சும் பிளேன் ரீயும் அடிச்சு தான் திட்டம் தீட்டினார்கள் என்று தான் ரெக்கோர்டில இருக்குது. 🤠

 

😁

இரவு ஷாம்னாத் வீடியோக் கடையில எடுத்த தமிழ் பட காசட்டுகளில் படம் பார்த்து போட்டு காலம எழும்பி அங்கு இருக்கும் வாளிக் கிணத்துல குளிச்சு போட்டு தான் பிளான் போட்டது என்பதை எழுத மறந்து விட்டீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறிய குண்டை வெடிக்க வைத்து புலிகளின் குறியிலிருந்து தப்பியதாக பிரச்சாரம் செய்ய பிரேமதாச திட்டம் போட, பாவுவோ கிலோ கணக்கில் குண்டை வைத்து பிரேமதாசாவை போட்டு விட்டார்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

ஆகா... சிங்கன் wanted ஆக வந்து வண்டீல ஏறி மாட்டிக்கிட்டாரு... 😎

உங்களை தான் தேடிக்கொண்டிருக்கிறம்.... ரோல்சும் பிளேன் ரீயும் அடிச்சு தான் திட்டம் தீட்டினார்கள் என்று தான் ரெக்கோர்டில இருக்குது. 🤠

(சப்பா... வேணுமெண்டு பிழையா எழுதினா, தூண்டிலில வந்து எப்படி மாட்டுகினம் பாருங்கோ மக்களே) 🧐

நிழலி  இருந்த நேரத்தில் வாழைதோட்டம் சிங்கராசபுரம் பகுதியில் எனக்கு தெரிந்த நண்பர்கள் அந்த நேரம் இருந்தார்கள் .சில கரும்புலிகளின் வரலாறு இப்படியும் அசுரத்தனமான வேலைகள் செய்வார்களா என்ற எல்லை தாண்டி சாதனைகளையும் தியாகத்தையும் செய்த ஒரு இயக்கத்தை இங்கு வந்த சிலர் எள்ளி  நகையாடுவதை  என்னவென்று சொல்வது ?

Link to comment
Share on other sites

15 minutes ago, பெருமாள் said:

.சில கரும்புலிகளின் வரலாறு இப்படியும் அசுரத்தனமான வேலைகள் செய்வார்களா என்ற எல்லை தாண்டி சாதனைகளையும் தியாகத்தையும் செய்த ஒரு இயக்கத்தை இங்கு வந்த சிலர் எள்ளி  நகையாடுவதை  என்னவென்று சொல்வது ?

இத்தகைய அர்ப்பணிப்புகள் நிறைந்த ஆயிரக்கணக்கானோரின் தியாங்களின் முடிவு தமிழ் மக்களுக்கு முன்னர் இருந்ததை விட அரசியல் ரீயிலும், பொருளாதார ரீதியிலும் மிக மோசமான விளைவுகளை கொடுத்து இருப்பதால், அதற்கான காரணங்களை பின்னோக்கி சென்று ஆராய முற்படுவதிலும் கேள்விக்குட்படுத்துவதிலும் தவறு இல்லை. 

ஏதாவது ஒரு வழியில் போராடியே ஆக வேண்டும் என்ற நிலையை தொடர்ந்து சிங்களம் தமிழ் மக்களுக்கு ஏற்படுத்திக் கொண்டே இருப்பதால் எமது இன்றைய இளைய தலைமுறையும் எதிர்காலத் தலைமுறையும் கண்டிப்பாக விருப்பு வெறுப்பு அற்று பின்னோக்கி சென்று ஒவ்வொரு விடயத்தையும் ஆராயவும் கேள்விக்குட்படுத்தவும் செய்யும். இது ஆயிரக்கணக்கான போராளிகளின் தியாகங்களையும் அர்ப்பணிப்புகளையும் கொச்சைப்படுத்துவதாக அமையாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, நிழலி said:

இத்தகைய அர்ப்பணிப்புகள் நிறைந்த ஆயிரக்கணக்கானோரின் தியாங்களின் முடிவு தமிழ் மக்களுக்கு முன்னர் இருந்ததை விட அரசியல் ரீயிலும், பொருளாதார ரீதியிலும் மிக மோசமான விளைவுகளை கொடுத்து இருப்பதால், அதற்கான காரணங்களை பின்னோக்கி சென்று ஆராய முற்படுவதிலும் கேள்விக்குட்படுத்துவதிலும் தவறு இல்லை. 

ஏதாவது ஒரு வழியில் போராடியே ஆக வேண்டும் என்ற நிலையை தொடர்ந்து சிங்களம் தமிழ் மக்களுக்கு ஏற்படுத்திக் கொண்டே இருப்பதால் எமது இன்றைய இளைய தலைமுறையும் எதிர்காலத் தலைமுறையும் கண்டிப்பாக விருப்பு வெறுப்பு அற்று பின்னோக்கி சென்று ஒவ்வொரு விடயத்தையும் ஆராயவும் கேள்விக்குட்படுத்தவும் செய்யும். இது ஆயிரக்கணக்கான போராளிகளின் தியாகங்களையும் அர்ப்பணிப்புகளையும் கொச்சைப்படுத்துவதாக அமையாது.

அதை நீங்களோ நானோ அல்லது நடுநிலையானவர்கள் ஆராய்வது பிழையில்லை 

ஆனால் புலிகளால் தண்டனை பெற்றவர்களும் புலி மீது கொலைவெறியில் இருப்பவர்களும் கொலை கொள்ளைக்கு இயக்கம் என்று பெயர் வைத்தவர்கள்  ஆராய முட்படுவது குரங்கு அப்ப  கதை போல் முடியும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குருநகர் சேர்ந்த பாபுவுக்கு காதலியும் இருந்தார் யாழ்ப்பாணத்தில் 

Link to comment
Share on other sites

9 hours ago, nedukkalapoovan said:

சரி இதை எல்லாம் இப்ப அலச என்ன காரணம். இதெல்லாம்.. பிழைப்பு வாதங்கள் மட்டுமே.

கிளாலிக் கடலில் பிரேமதாச அரசின் இனவெறியாட்டத்துக்கு உறவுகளைப் பறிகொடுத்த எவருமே இது அவருக்கான கடவுளின் தீர்ப்பென்றே தான் எண்ணுவர். அதேபோல்.. அப்பாவி சிங்கள இளைஞர்களை ஜே வி பி சந்தேக நபர்கள் என்று கொன்று மனிதப் புதைகுழி சரிசத்தை இலங்கையில் அதிகப்படுத்திய ஒரு மனித இனப்படுகொலையாளி தான் இவர். 

இது கடவுளின் தீர்ப்பு என்று உண்மையில் நீங்களும் இக்கருத்துக்கு விருப்பகுறி இட்டவர்களும் நம்புவீர்களானால் முள்ளிவாய்கால் இறுதி பேரழிவையும் கடவுள் கொடுத்ததாக நீங்கள் நம்பியேயாகவேண்டும். ஆனால் இரண்டுமே மனித  வக்கிரத்தின் செயற்பாடு என்றே நான் நினைக்கிறேன். 

6 hours ago, Kapithan said:

இடம், பொருள், ஏவல் என்று ஒன்று இருப்பது துல்பனுக்குத் தெரியாதோ..?

☹️

மன்னிக்கவும் நீங்கள் கூறிய இடம் பொருள் ஏவலுக்கும் இக்கருத்துக்கும் என்ன தொடர்பு? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, tulpen said:

இது கடவுளின் தீர்ப்பு என்று உண்மையில் நீங்களும் இக்கருத்துக்கு விருப்பகுறி இட்டவர்களும் நம்புவீர்களானால் முள்ளிவாய்கால் இறுதி பேரழிவையும் கடவுள் கொடுத்ததாக நீங்கள் நம்பியேயாகவேண்டும். ஆனால் இரண்டுமே மனித  வக்கிரத்தின் செயற்பாடு என்றே நான் நினைக்கிறேன். 

மன்னிக்கவும் நீங்கள் கூறிய இடம் பொருள் ஏவலுக்கும் இக்கருத்துக்கும் என்ன தொடர்பு? 

சிந்தனையாளர், துல்பன் என்கிற கடவுள் மறுப்பாளர் எங்களுக்கு கிடைத்ததும், கடவுள் செயல் தான்.  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, விசுகு said:

இதெல்லாம் செய்தியா??

இவற்றை எல்லாம் எதற்காக தேடி தேடி இங்கே இணைக்கிறார்கள்??

இருக்கும் ஒற்றுமையை குலைக்கும் வேலை இது

ஏதோ நடாத்தட்டும். 😡

ஏதோ  இந்த செய்தியை இங்கு போட்டு உருட்டுவது நல்லதுக்கில்லை போல் படுது  கெடு  குடி சொல் கேளாது .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ் அரசின் தலைமையை ஏற்கத் தயாராகவே உள்ளேன் – சுமந்திரன் தெரிவிப்பு March 19, 2024   இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைமைப் பதவியை பெறுவதற்கு தான் இன்னமும் தயாராகவே இருக்கிறேன் என்று அந்தக் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைமை மற்றும் நிர்வாகம் பதவியேற்பு விவகாரம் நீதிமன்றில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில், தலைமை பதவி மற்றும் கட்சியின் நிர்வாகத்துக்கு மீளவும் தேர்தலை நடத்தத் தயராகவுள்ளதாக தமிழ் அரசு கட்சியினர் நீதிமன்றத்துக்கு தெரிவித்திருந்தனர். இந்த வழக்கு மீண்டும் ஏப்ரல் 5ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது. இந்த நிலையில், கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு சுமந்திரன் அளித்த நேர்காணலின் முக்கிய அம்சங்கள் வருமாறு, “தமிழ் அரசு கட்சியின் தலைவர் பதவிக்கு தெரிவானால் இணைந்து செயல்படுவோம் என்றே அறிவித்தோம். மற்றைய பதவிகளுக்கும் இருவரும் இணைந்து – இணக்கமாக யாரை நியமிப்பது என்பதைத் தீர்மானித்தோம். அதற்கு ஏற்பவே தீர்மானங்களை பொதுச் சபைக்கு அறிவித்தோம். அங்கு குழப்பங்கள் ஏறபட்டன. அவர்கள் கேட்டதன் பெயரில் வாக்கெடுப்புக்கு விட்டோம். அதுவும் நிறைவேற்றப்பட்டது. மறுநாளே கட்சியின் தேசிய மாநாடு நடந்து முடிந்திருக்க வேண்டும். புதிய நிர்வாகம் முடிவான பிறகும் சிலர் குழப்பத்தை ஏற்படுத்தினர். தேசிய மாநாட்டை பிற்போட வேண்டாம் என்று தலைவா் மாவை சேனாதிராசாவுக்கும் புதிய தலைவருக்கும்சொன்னேன். மாநாட்டில் புதிய தலைவர் பதவியை பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறினேன். பிறகு கடிதம் மூலம் பகிரங்கமாகவும் கூறியிருந்தேன். ஆனால், அதன் பின்னரும் 3 வாரங்கள் மாநாடு நடக்கவில்லை. பின்னர் தொடுக்கப்பட்ட வழக்கில் ஜனவரி 21, 27ஆம் திகதிகளில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் எவற்றையும் நடைமுறைப்படுத்தக்கூடாது என்று திருகோணமலை நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்தது. இதன் பின்னர் புதிய தலைமை – புதிய நிர்வாகத்தை தெரிவு செய்வதாக கட்சியினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். கட்சி சார்பான அனைத்து வழக்குகளையும் இதுவரை நானே கையாண்டிருக்கிறேன். இது விடயத்தில் என்னிடத்தில் ஆலோசனை கேட்கப்படவில்லை. நானும் எதிராளியாக இருப்பதாலோ என்னவோ என்னிடம் ஆலோசனை கேட்கப்படவில்லை. தலைமைப் பதவிக்கான தேர்தலில் எனது பெயரை பிரேரிக்கிறபோது நான் இணக்கம் தெரிவித்தே அதில் போட்டியிட்டேன். இனிமேல் தலைவராக இருக்க மாட்டேன் என்று நான் சொல்லப்போவது இல்லை” என்று கூறியிருந்தார்.   https://www.ilakku.org/தமிழ்-அரசின்-தலைமையை-ஏற்/  
    • யாழ். பல்கலையில் இன்று போராட்டம்!   பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி யாழ். பல்கலையில் இன்று போராட்டம்! (புதியவன்) ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடளாவிய ரீதியில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில் பல்கலைக்கழக ஊழியர்களால் இன்று பணிப்புறக்கணிப்பும் கவனவீர்ப்புப் போராட்டமும் மேற்கொள்ளப்படவுள்ளன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் இந்தப் போராட்டம் இன்று இடம்பெறவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வை உறுதிப்படுத்துமாறும், சம்பள முரண்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்குமாறு கோரியும் பல்கலைக்கழகங்களின் ஊழியர் சங்கத்தால் விடுக்கப்பட்ட கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டமையைத் தொடர்ந்தே இன்றையதினம் இலங்கையில் உள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களிலும் இந்தப் போராட்டம் ஏற்பாடாகியுள்ளது. இந்தப் போராட்டம் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்குக் கடிதம் மூலம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. (ஏ) https://newuthayan.com/article/யாழ்._பல்கலையில்_இன்று_போராட்டம்!
    • உண்மைதான் காதலுடன் நிப்பாட்டி இருக்கலாம்.......கல்யாணம் வரை போயிருக்கக் கூடாது..........!  😂 நன்றி ஏராளன் .......!
    • அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்! 19 MAR, 2024 | 10:01 AM வெப்பமான காலப் பகுதியானது வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கும் ஆபத்தான நோய்களை ஏற்படுத்தும் எனக் கால்நடை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். பகல் வேளையில் விலங்குகளை மூடிய வாகனங்களில் ஏற்றிச் செல்வதைத் தவிர்க்குமாறும் இந்த நாட்களில் நாய் போன்ற விலங்குகளுடன் விளையாடுவதைத் தவிர்க்குமாறும் கால்நடை வைத்தியர் அருண சந்திரசிறி தெரிவித்தார்.  விலங்குகளின் உடல் சூடாக இருப்பதனால் தினமும் செல்லப்பிராணிகளை குளியாட்டுதல், கூந்தல் உள்ள விலங்குகளுக்கு இரண்டு அல்லது மூன்று முறை குளியாட்டுதல், குடிப்பதற்குத் தேவையான அளவு சுத்தமான தண்ணீர் கொடுத்தல், பகல் வேளையில் ஐஸ் கட்டிகள் கொடுத்தல் போன்றவற்றை  செய்யலாம். வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் மயங்கி கீழே விழுந்தால், கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் செல்வதற்கு முன் குளிர்ந்த நீரில் உடலைக் கழுவுவதால் உயிரைக் காப்பாற்ற முடியும் என வைத்தியர் அருண சந்திரசிறி சுட்டிக்காட்டினார்.  செல்லப்பிராணிகள் மாத்திரமின்றி வீட்டில் வளர்க்கப்படுகின்ற  விலங்குகள் அனைத்தும் அதிக வெப்பநிலையால் பாதிக்கப்படுகின்றன,  அதிக வெப்பநிலையால்  மென்மையான  தோல் கொண்ட விலங்குகளுக்குக் காயங்கள் கூட ஏற்படலாம்  என்றும்  அவற்றை எப்போதும் நிழலான இடங்களில் கட்டி வைக்கலாம் என்றும் கால்நடை வைத்தியர்கள்  சுட்டிக்காட்டுகின்றனர். https://www.virakesari.lk/article/179087
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.