Jump to content

3.8 டூ 6.6% வாக்குகள்... தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி! - நாம் தமிழர் சாதித்தது எப்படி?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

234 தொகுதிகளிலும் தனியாகக் களம் கண்ட நாம் தமிழர் கட்சி ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. அதேவேளை, 6.5 சதவிகித வாக்குகளைப் பெற்று தி.மு.க, அ.தி.முகவுக்கு அடுத்தபடியாக தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாகப் பரிணமித்திருக்கிறது.

தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள சட்டமன்றத் தேர்தலில், மாற்றத்தை முன்வைத்து தேர்தலில் பங்கேற்ற அணிகளில், ''உண்மையான மாற்று நாங்கள்தான்'' என சொல்லி அடித்து ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது நாம் தமிழர் கட்சி.

தமிழகத்தில் நேற்று முன்தினம் வெளியான தேர்தல் முடிவுகள் தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரண்டு கூட்டணிக்குமே ஓரளவுக்கு சாதகமாகத்தான் வந்திருக்கின்றன. பத்தாண்டுகளுக்குப் பிறகு ஆட்சிக் கட்டிலில் அமரப்போகிறது தி.மு.க. கடந்தமுறை சட்டமன்ற வாய்ப்பை தவறவிட்ட கம்யூனிஸ்ட்கள் இந்தமுறை வெற்றி பெற்றிருக்கின்றனர். போட்டியிட்ட 25 தொகுதிகளில் 18 தொகுதிகளை வென்றிருக்கிறது காங்கிரஸ். அதேபோல, ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உறுப்பினர்கள் பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு சட்டமன்றத்துக்குள் நுழைகின்றனர்.

சீமான், கமல், தினகரன்
 
சீமான், கமல், தினகரன்

மறுபுறம் அ.தி.மு.க அணியில் எடுத்துக்கொண்டாலும், அதிகபட்சம் 50 தொகுதிகளில் வெல்வதே கடினம் என எதிர்பார்க்கப்பட்ட அ.தி.மு.க யாரும் எதிர்பாராத வகையில் 66 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஒரு தொகுதியில் கூட மலர்வது கடினம் என சொல்லப்பட்டு வந்த நிலையில் நான்கு தொகுதிகளில் தாமரை மலர்ந்திருக்கிறது. கடந்த தேர்தலில், தனித்து நின்று படுதோல்வியைச் சந்தித்த பா.ம.கவும் இந்தமுறை ஐந்து தொகுதிகளில் வெற்றிக்கனியைச் சுவைத்திருக்கிறது. தவிர, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, புரட்சிபாரதம் உள்ளிட்ட பல கட்சிக்கு இந்தத் தேர்தலில் ஏறுமுகம்தான்.

 

ஆனால், மாற்று அணிகளாகப் போட்டியிட்ட, அ.ம.மு.க, தே.மு.தி.க, எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட கட்சிகளை உள்ளிட்ட டி.டி.வி தினகரன் தலைமையிலான அணியோ, மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக் கட்சி உள்ளிட கட்சிகளை உள்ளடக்கிய கமல்ஹாசன் தலைமையிலான அணியோ, 234 தொகுதிகளிலும் தனியாகக் களம் கண்ட நாம் தமிழர் கட்சியோ ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. அதேவேளை, 6.5 சதவிகித வாக்குகளைப் பெற்று தி.மு.க, அ.தி.முகவுக்கு அடுத்தபடியாக தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாகப் பரிணமித்திருக்கிறது நாம் தமிழர் கட்சி.

நாம் தமிழர் கட்சி
 
நாம் தமிழர் கட்சி

நாம் தமிழர் கட்சி கடந்து வந்த பாதை!

2009-ம் ஆண்டு இயக்கமாகத் தொடங்கப்பட்ட அமைப்பு அடுத்த ஓராண்டில் தேர்தலில் போட்டியிடும் கட்சியாக மாற்றப்பட்டது. ஆனால், 2011 சட்டமன்றத் தேர்தல், 2014 மக்களைவைத் தேர்தல் ஆகியவற்றில் நாம் தமிழர் கட்சி போட்டியிடவில்லை. முதன்முறையாக 2016 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதியிலும் தனித்துப் போட்டியிட்டு, 4,58,104 வாக்குகளைப் பெற்றது. வாக்கு சதவிகிதத்தைப் பொறுத்தவரை 1.07 சதவிகிம் பெற்று கட்சிகளின் பட்டியலில் ஒன்பதாமிடத்தைப் பெற்றது. அந்தத் தேர்தலில், பொதுத்தொகுதியில், பட்டியலின வேட்பாளர்கள்; பெண்களுக்கு அதிக இடங்களில் வாய்ப்பு; அரசியல் ரீதியாக மிகவும் புறக்கணிக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்குப் போட்டியிட வாய்ப்பு; தொகுதியில் பெரும்பான்மை சமூகமாக இல்லாதவர்களுக்கு வாய்ப்பு; திருநங்கையை வேட்பாளராக்கியது என பல பரிசோதனை முயற்சிகளில் ஈடுபட்டார் சீமான்.

 

அதனைத் தொடர்ந்து நடந்த, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள நாற்பது தொகுதிகளில் இருபது தொகுதிகளில் ஆண் வேட்பாளர்களையும் இருபது தொகுதிகளில் பெண் வேட்பாளர்களையும் களமிறக்கியது நாம் தமிழர் கட்சி. ஒட்டுமொத்தமாக 16,45,185 வாக்குகளைப் பெற்று ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியது. அந்தக் கட்சியின் வாக்கு சதவிகிதம் 1.1-ல் இருந்து 3.87 ஆக அதிகரித்தது. அப்போதே நாம் தமிழர் கட்சியின் மீது அனைவரின் கவனமும் லேசாகத் திரும்பியது. ஆனால் இந்தமுறை, 234 தொகுதிகளில் தனித்து போட்டியிட்ட அந்தக் கட்சி யாருமே எதிர்பாராத வகையில், 30,41,974 (6.6%) வாக்குகள் பெற்று தி.மு.க, அ.தி.மு.கவுக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

வேட்பு மனுத் தாக்கல் செய்ய கரும்புடன் மாட்டு வண்டியில் வந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்
 
வேட்பு மனுத் தாக்கல் செய்ய கரும்புடன் மாட்டு வண்டியில் வந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்

வாக்கு எண்ணிக்கையில் வளர்ச்சி!

நாம் தமிழர் கட்சியின் அரசியல் வளர்ச்சி என்பது படிப்படியாக நிகழ்ந்து வருகிறது. இந்தத் தேர்தலில், மாற்று அணிகளில் மற்ற இரு அணிகளின் மீதிருந்த அளவுக்கு எதிர்பார்ப்போ, மீடியா வெளிச்சமோ நாம் தமிழர் கட்சியின் மீது இல்லை. ஆனாலும், 30 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்துக்கு வந்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் போட்டியிட்ட 234 தொகுதிகளில் கிட்டத்தட்ட 183 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள்தான் மூன்றாமிடம். தவிர, நாற்பதாயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை ஒரு தொகுதியிலும் முப்பதாயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை முன்று தொகுதியிலும் இருபதாயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை 19 தொகுதிகளிலும் பதினைந்தாயிரத்துக்கும் அதிகமாக 36 தொகுதிகளிலும் பத்தாயிரத்துக்கும் அதிகமாக 103 தொகுதிகளிலும் 6 -9 ஆயிரம் வாக்குகளை 68 தொகுதிகளிலும் பெற்றிருக்கிறது. ஐந்தாயிரத்துக்கு குறைவான வாக்குகளை வெறும் நான்கு தொகுதிகளில் மட்டுமே பெற்றிருக்கிறது.

 

கடந்த 2016 தேர்தலில், ஒவ்வொரு தொகுதியிலும் ஐந்தாயிரத்துக்கும் அதிகமாக வாக்குகளைப் பெறுவதே அந்தக் கட்சிக்கு பெரிய விஷயமாக இருந்தது. அதேபோல, அந்தத் தேர்தலில் பல தொகுதிகளில் மூன்றிலக்க வாக்குகளையே அந்தக் கட்சி பெற்றது. சீமான் பெற்ற 12,497 வாக்குகளே அந்தக் கட்சி பெற்ற அதிகமான வாக்காக இருந்தது. ஆனால், இந்தத் தேர்தலில் அது அப்படியே மாறியிருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலுடன் ஒப்பிடும்போது அந்தக் கட்சிக்கு இது அபார வளர்ச்சியே. கட்சி மட்டுமல்ல, சீமான் மீதான மக்களின் கவனமும் அதிகரித்திருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில், கடலூரில் தொகுதியில் போட்டியிட்டு, வெறும், 12,497 வாக்குகளைப் பெற்று ஐந்தாவது இடத்துக்குத்தான் சீமானால் வரமுடிந்தது. ஆனால், இந்தமுறை கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்துக்கு வந்திருக்கிறார். பெண்களை ஒப்புக்காக வேட்பாளர்களாக நிறுத்துகிறார்கள் என்கிற விமர்சனமும் சரிபாதி பெண் வேட்பாளர்களை நிறுத்தியபோது எழுந்தது. ஆனால், தற்போது அந்தக் கட்சி பெற்றுள்ள 30 லட்சம் வாக்குகளில் 16 லட்சம் வாக்குகள் பெண் வேட்பாளர்கள் வாங்கியதுதான் என பெருமிதமாகச் சொல்கிறார்கள் அந்தக் கட்சி நிர்வாகிகள்.

உதவிகள் வழங்கும் நாம் தமிழர் கட்சியினர்
 
உதவிகள் வழங்கும் நாம் தமிழர் கட்சியினர் நா.ராஜமுருகன்

சாதித்தது எப்படி?

தேர்தல் காலங்களிலும் மற்ற நேரங்களிலும் சரி எப்போதும் களத்தில் மக்களோடு மக்களாக நிற்கின்றனர் நாம் தமிழர் கட்சியினர். உறுப்பினர் சேர்க்கையில் ஆரம்பித்து ஏரி, குளங்குளைத் தூர் வாருவது, நிலவேம்புக் கசாயம் கொடுப்பது, பன விதைகளை நடுவது, இரத்த தான முகாம் நடத்துவது, பகுதிப் பிரச்னைகளுக்காகக் குரல் கொடுப்பது என எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கிறார்கள். அந்தக் கட்சியின் உறுப்பினர்கள் பெரும்பாலும் இளைஞர்களாக இருப்பது அந்தக் கட்சிக்கு மிகப்பெரிய பலம். தமிழகத்தில் தற்போது ஊருக்கு நான்கு பேர் இருந்தாலும், அந்தக் கட்சிக்கு கிளை இல்லாத ஊர்களே இல்லை என்றளவுக்கு ஆகிவிட்டது.

கொரோனா காலத்திலும் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து வந்தனர் நாம் தமிழர் கட்சியினர். கொரோனா மீட்புப் பணிகளைக் கருத்தில்கொண்டு, பேரிடர் மீட்புப் பாசறை என தனி அமைப்பையே உருவாக்கினார்கள். ``கிருமிநாசினி தெளிக்கும் பணி முதல் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது வரை மாநகராட்சி, நகராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து தன்னார்வலர்களாகச் செயல்பட்டனர். மக்களுக்கு சாப்பாடு சமைத்துக் கொடுக்கும் வேலையில் மட்டும், தொகுதிக்கு 40 பேர் இருந்தனர். தமிழகம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் களத்தில் இறங்கிப் பணியாற்றினர். தவிர தேர்தலுக்கு மூன்று, நான்கு மாதங்களுக்கு முன்பே வேட்பாளர்கள் களத்தில் இறங்கி பிரசாரம் செய்ய ஆரம்பித்ததுதான் தற்போது அவர்களுக்குக் கைகொடுத்திருக்கிறது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையும் அவர்களால் மேம்படும் கட்சிக் கட்டமைப்பு அந்தக் கட்சியின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியிருக்கிறது. தவிர, அரசியல் விமர்சகர்களால் அந்தக் கட்சிக்கு மைனஸாகப் பார்க்கப்படும்,'' தனித்துப் போட்டி என்கிற விஷயம்தான் எங்களை நோக்கி இளைஞர்கள் வருவதற்கும் மக்களின் கவனம் எங்கள் மீது திரும்புவதற்குக் காரணம். அதுவே எங்கள் பலம்' என்கிறார்கள் நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள்.

3.8 டூ 6.6% வாக்குகள்... தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி! - நாம் தமிழர் சாதித்தது எப்படி?
 

நாம் தமிழர் கட்சியின்மீது அனைவரும் முதன்மையாக வைக்கக்கூடிய விமர்சனம் அவர்கள் சமூக வலைத்தளங்களில் மட்டுமே ஆக்டிவ்வாக இருக்கிறார்கள் என்பதுதான். சோஷியல் மீடியாவில் தேர்தல் வைத்தால் சீமான்தான் முதலமைச்சர் ஆவார் என மாற்றுக் கட்சியினரால் அவர்கள் கேலி செய்யப்படுவதும் உண்டு. ஆனால், அது போன்ற விமர்சனங்களை எல்லாம் தவிடுபொடியாக்கி இருக்கிறது இந்தத் தேர்தல் முடிவுகள். அதேபோல கிராமப்புறங்களில் மட்டும்தான் செல்வாக்கு இருக்கிறது. படித்தவர்கள் அதிகம் உள்ள மாநகரங்களில் நாம் தமிழர் கட்சிக்கு செல்வாக்கு இல்லை என்கிற கருத்துகளும் முன்வைக்கப்படுவதுண்டு. ஆனால், அதுவும் இல்லை என இந்தத் தேர்தலில் நிரூபணமாகியிருக்கிறது.

தமிழகத்தில், வட தமிழகத்தில் மட்டும் செல்வாக்குப் பெற்ற கட்சி, தென் மாவட்டங்களில் மட்டும் செல்வாக்கு உள்ள கட்சி, மாநகரங்களில் மட்டும் செல்வாக்கு பெற்றுள்ள கட்சி என எந்தவித சட்டகத்துக்குள்ளும் அகப்படாமல் தமிழகம் முழுவதும் பரந்து விரிந்திருக்கிறது நாம் தமிழரின் ராஜ்ஜியம். அது வெற்றி பெறும் அளவுக்கு இல்லாவிட்டாலும் தமிழகம் முழுவதும் அனைத்துப் பகுதிகளிலும் வேருன்றியிருக்கிறது நாம் தமிழர் கட்சி. எதிர்காலத்தில் இதைவிட அதிகமான களப்பணி, புதிதான் அரசியல் வியூகங்களை வகுத்தால் நிச்சயமாக கணிசமான இடங்களில் வெற்றியைக் கூட பெற அந்தக் கட்சியால் முடியும் என்பதே கள எதார்த்தமாக இருக்கிறது!

3.8 டூ 6.6% வாக்குகள்... தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி! - நாம் தமிழர் சாதித்தது எப்படி? | The third largest party in Tamil Nadu - Nam tamilar party's success story! - Vikatan

Link to comment
Share on other sites

  • Replies 115
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மூன்றாவது இடத்தில் சீமான்: நாம் தமிழருக்கு விழுந்த வாக்குகள் சொல்வது என்ன?

  • எம்.மணிகண்டன்
  • பிபிசி தமிழ்

நாம் தமிழர் கட்சி இந்தத் தேர்தலில் ஓர் இடத்தில் கூட வெற்றிபெறவில்லை.

ஆனாலும் 170-க்கும் அதிகமான இடங்களில் அதிமுக மற்றும் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு அடுத்த இடத்தைப் பிடித்திருக்கிறது நாம் தமிழர் கட்சி.

இது எப்படி சாத்தியமாயிற்று. அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கூறுவதைப் போல திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் கட்சி உருவெடுத்து வருகிறதா?

நாம் தமிழர் கட்சி 2016-ஆம் ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு 1.1 சதவிகித வாக்குகளைப் பெற்றது. ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியவில்லை.2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு தோல்வியடைந்தது. அதில் 3.9 சதவிகித வாக்குகளைப் பெற்றது. அந்தத் தேர்தலில் முதன் முறையாகக் களமிறங்கிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் 5.5 சதவிகித வாக்குகளையும், கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் 3.7 சதவிகித வாக்குகளையும் பெற்றன.

நடந்து முடிந்திருக்கும் 2021 சட்டப் பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சுமார் 7 சதவிகித வாக்குகளைப் பெற்றிருக்கிறது. இது கடந்த சட்டப் பேரவைத் தேர்தலைவிட ஆறரை மடங்கு. மக்களவைத் தேர்தலில் பெற்றதை விட ஏறத்தாழ இரண்டு மடங்கு. ஒரு தொகுதியில்கூட வெற்றபெற முடியவில்லை என்றாலும், ஆட்சியைப் பிடித்திருக்கும் திமுக, எதிர்க்கட்சி வரிசையில் அமரப்போகும் அதிமுக ஆகிய கட்சிகளுக்கு அடுத்தபடியாக அதிக வாக்குகளைப் பெற்ற கட்சியாக நாம் தமிழர் இருக்கிறது.

நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்டு மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

அவர் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 48 ஆயிரத்துக்கும் சற்று அதிகம். வாக்கு சதவிகிதம் 24.3%. மற்ற தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் பெற்ற வாக்கு சதவிகிதம் இந்த அளவுக்கு இல்லையென்றாலும், 170-க்கும் அதிகமான தொகுதிகளில் மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் அளவுக்கு வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

இந்தத் தரவுகள் தமிழர் கட்சியின் படிப்படியான முன்னேற்றத்தைக் காட்டுகிறது என்கிறார் மூத்த பத்திரிகையாளர் கணபதி.

"சிந்தாந்த ரீதியாக தொடர்ந்து உறுதியுடன் இருக்கும் அரசியல் இயக்கங்கள் தேர்தல் அரசியலில் வெற்றி பெறுவதை வரலாற்றில் பார்த்திருக்கிறோம். திமுகவும் இப்படி வளர்ந்த இயக்கம்தான். அந்த வகையில் கடந்த 3 தேர்தல்களிலும் நாம் தமிழர் கட்சி படிப்படியாக வளர்ந்திருக்கிறது " என்கிறார் அவர்.

நாம் தமிழர் கட்சியின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான இடும்பாவனம் கார்த்திக்குக்கு தேர்தல் முடிவுகளில் திருப்தியில்லை. "தேர்தலில் நாங்கள் எதிர்பார்த்த அங்கீகாரம் கிடைக்கவில்லை" என்றார் அவர். இருப்பினும் தங்களுக்குக் கிடைத்திருக்கும் சுமார் 30 லட்சம் வாக்குகளையும் 7% வாக்கு விகிதத்தையும் மாற்றத்துக்கான விதைகளாகவே கருதுவதாக அவர் கூறுகிறார்.

"வரலாற்றில் நாம் தமிழர் கட்சியைப் போல தேர்தல் சமரசம் செய்து கொள்ளாத கட்சி எதுவுமில்லை. திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்பட அனைத்துக் கட்சிகளும் அவ்வப்போது சமரசம் செய்துகொள்கின்றன" என்கிறார் இடும்பாவனம் கார்த்திக்.

நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்திருக்கும் வாக்குகள் தொடக்கத்தில் இருந்தே பலரையும் கவனிக்க வைத்திருக்கின்றன. காங்கிரஸ் எம்.பி.யான கார்த்தி சிதம்பரம் இதை "ஏற்கெனவே நிறுவப்பட்டிருக்கும் அரசியல் கட்டமைப்பை எதிர்க்கும் வாக்கு" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அவர்களுக்கு வாக்களிப்போரைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்றும் அவர் பதிவு செய்துள்ளார்.

இதேபோன்றதொரு கருத்தைப் பதிவு செய்திருக்கும் இயக்குநர் சேரன், வேட்பாளர்கள் தோல்வி கண்டாலும் கட்சி வளர்ச்சியைக் கண்டிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

 

நாம் தமிழர் கட்சி வாக்கு விகிதங்களில் வளர்ந்து வந்தாலும் அந்தக் கட்சிக்கு பலவிதமான சவால்களும் நெருக்கடிகளும் இருப்பதாக மூத்த பத்திரிகையாளர் கணபதி கூறுகிறார்.

"சீமானின் பேச்சுக்கு இளைஞர்களை ஈர்க்கும் ஆற்றல் இருக்கிறது. அவரை நம்பி ஏராளமான இளைஞர்கள் வருகிறார்கள். அவர்களைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். கட்சியில் இருந்து முக்கியத் தலைவர்கள் தொடர்ந்து விலகினால் தொண்டர்கள் நம்பிக்கை இழக்க நேரிடும். அதேபோல கூடிய விரைவில் அரசியல் பதவிகளைப் பிடிக்க வேண்டும்." என்கிறார் கணபதி.

Seeman

பட மூலாதாரம்,NAAM THAMILAR

"தற்கால அரசியல் சூழலில் கொள்கை மட்டுமே அரசியலில் வெற்றிபெறப் போதுமானது இல்லை. காலத்துக்குத் தக்கபடி நவீன உத்திகளைக் கடைப்பிடிக்க வேண்டும். பிற கட்சிகளில் இருந்து பெரிய தலைவர்கள் நாம் தமிழர் கட்சிக்கு வந்தால் கட்சி அரசியல் ரீதியான ஆற்றல் கிடைக்கும். அதிமுக, தேமுதிக போன்ற கட்சிகளின் தொடக்க காலம் இப்படிக் கட்டமைக்கப் பட்டதுதான்." என்று குறிப்பிடுகிறார் கணபதி.

"அரசியல் அதிகாரத்தை நோக்கிய பாய்ச்சல்" என்று தங்களது தேர்தல் உத்தியைப் பற்றிக் குறிப்பிடும் இடும்பாவனம் கார்த்திக், நாம் தமிழர் கட்சியின் இலக்கு அதுதான் என்கிறார். திமுக , அதிமுக ஆகிய இரு கட்சிகளில் இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்யும் மக்களின் எதிர்ப்பு வாக்கு மனநிலையே தங்களது வளர்ச்சிக்குத் தடையாக இருப்பதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

ஆயினும் தற்போது அமையும் திமுகவின் ஆட்சியால் இரு திராவிடக் கட்சிகளின் மீதும் மக்கள் நம்பிக்கை இழப்பார்கள் என்றும் அவற்றுக்கு மாற்றாக நாம் தமிழருக்கு வாக்களிப்பார்கள் என்றும் இடும்பாவனம் கார்த்திக் நம்புகிறார்.

"2024 மக்களவைத் தேர்தலிலும், 2026 சட்டப் பேரவைத் தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும்" என்கிறார் அவர்.

மூன்றாவது இடத்தில் சீமான்: நாம் தமிழருக்கு விழுந்த வாக்குகள் சொல்வது என்ன? - BBC News தமிழ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, பெருமாள் said:

1 நபர் மற்றும் , ’SUN NEWS தேர்தல் செய்திகள் நாம் தமிழருக்கு விழுந்த வாக்குகளை நினைத்து கவலைகொள்கிறேன் -ப.சிதம்பரம் 1:17 நாம் தமிழருக்கு விழுந்த வாக்குகளை நினைத்து கவலைகொள்கிறேன் ப.சிதம்பரம்... Sun News 9.5K views 54 minutes ago’ எனச்சொல்லும் உரை இன் படமாக இருக்கக்கூடும்

இந்த நரி  வாலை  கிளப்புது .

இவர் மேலும் மேலும்/நிரந்தரமாக கவலை கொள்ள அந்த இயற்கையை வேண்டுகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனது வாக்கு வங்கியை உயர்த்திக் கொண்ட நாம் தமிழர் கட்சி!

நாம் தமிழர் கட்சி போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் சேர்த்து 7% சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது. பெரிய கட்சிகள் எதுவும் தனித்துப் போட்டியிடாத நிலையில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி சுமார் 30 லட்சம் வாக்குகளைப் பெற்றுள்ளது.
நாம் தமிழர் கட்சி 2016-ஆம் ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு 1.1 சதவிகித வாக்குகளைப் பெற்றது. ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியவில்லை.2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு தோல்வியடைந்தது. அதில் 3.9 சதவிகித வாக்குகளைப் பெற்றது. 2021 சட்டப் பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சுமார் 7 சதவிகித வாக்குகளைப் பெற்றிருக்கிறது. இது கடந்த சட்டப் பேரவைத் தேர்தலை அதிகம்.

ஒவ்வொரு தொகுதியிலும் மூன்றாயிரம் முதல் பதினைந்தாயிரம் வரை வாக்குகளைப் பெற்றுள்ள நாம் தமிழர் கட்சி முதல் தலைமுறை வாக்காளர்களைக் கவர்ந்துள்ளது எனலாம். சீமான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்டு மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.அவர் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 48 ஆயிரம். திருவொற்றியூரில் பதிவான வாக்குகளில் 24.3 சதவிகித வாக்குகளை சீமான் பெற்றுள்ளார்.
3 தேர்தலகளை எதிர்கொண்டுள்ள நாம் தமிழர் கட்சி படிப்படியாக வளர்ந்து வருவதை இந்த தேர்தல் டேட்டாக்கள் நமக்கு உணர்த்தும். 

ஆனால் இதை அடுத்தடுத்த தேர்தல்களில் தக்க வைத்துக் கொள்ளலாம் என்றாலும் இதே நிலையில் கூடுதலாக சில சதவிகிதங்கள் கூடுமே தவிற ஒரு தொகுதியில் கூட வெல்லும் நிலை ஏற்படாது. காரணம் திமுக, அதிமுக என்ற இரு பெறும் கட்சிகளும் சராசரியாக 30 முதல் 37 சதவிகிதம் வரையிலான வாக்கு வங்கியை கடந்த 30 ஆண்டுகளாக வைத்துள்ளன. தேமுதிக வந்த போதும், கமல் வந்த போதும் சீமான் வந்த போதும் இந்த வாக்கு வங்கியில் சேதங்களை உருவாக்க முடியவில்லை.எஞ்சியிருக்கும் 30 சதவிகித வாக்குகளில் அதிக பட்சம் 15% வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற முடியும். ஏதாவது ஒரு பெரிய கட்சியோடு மறைமுக கூட்டணி வைத்துக் கொண்டு இன்னொரு கட்சியின் வெற்றியை நான் பறித்து விடுவேன் என்றுதான் நாம் தமிழர் பயணிக்க முடியும்.

இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி பொது எதிரியாக திமுகவை அறிவித்தது. நேரடியாகவே அதிமுகவை ஆதரித்தது. திமுக,திராவிட இயக்க எதிர்ப்பு என்ற அடிப்படை கோட்பாட்டோடு பயணிக்கும் சீமான் தனக்கு கிடைக்க இருக்கும் அதிக பட்சமான 10 முதல் 15 சதவிகித வாக்கு வங்கியை வைத்து அதற்குரிய விலையை பேரங்கள் மூலம் பெற்றுக் கொண்டு தமிழக அரசியலில் இருக்கலாம். ஆனால் திராவிட இயக்கம் தேசிய இயக்கங்களை வீழ்த்திய அரியணை ஏறியது போல ஒரு போதும் ஒரு பரந்து பட்ட மக்கள் இயக்கமாக மாற வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.


https://inioru.com/தனது-வாக்கு-வங்கியை-உயர்/

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓடமும் ஓர் நாள்??

நாம் தமிழர் கட்சியின் செய்திகளை தேடிப்பிடித்து இணைக்கும் காலமும் வரும். வந்து விட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, விசுகு said:

ஓடமும் ஓர் நாள்??

நாம் தமிழர் கட்சியின் செய்திகளை தேடிப்பிடித்து இணைக்கும் காலமும் வரும். வந்து விட்டது.

பிஜேபியுடன் கூட்டுச் சேராமல் ஸிம்மான் அதிகாரத்தில் பங்காளியாக முடியாது. அதிகம் கல்வியறிவு கொண்ட இடதுசாரி பாரம்பரியத்தில் வளர்ந்த மேற்கு வங்கத்தில் பிஜேபி முக்கிய சக்தியாக வளர்ந்துள்ளது. அதுபோல தமிழகத்திலும் அடுத்த பத்தாண்டுகளில் நடைபெறலாம். அதற்கு ஸிம்மான் உதவி செய்வார். தனித்தே இருக்கவேண்டும் என்று நினைத்தால் தொடர்ந்தும் தங்கமுட்டைகள்தான்😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தா சிக்னல் போகுது. சேர்ந்து பயணிப்பமாம். ஏ டீமா? பி டீமா? சி டீமா? 😁

 

ஊழல் செய்ய/ செய்த ஊழலை மறைக்க எதுவும் செய்வார்கள். மகிந்தவை சந்தித்து வாழ்த்து சொன்னது போல்....

Pawan Khera on Twitter: "Year 2010. Kanimozhi and Baalu honouring Mahinda  Rajapaksa. Wasn't he a war criminal in 2010? http://t.co/SE8dvKQPar"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, கிருபன் said:

பிஜேபியுடன் கூட்டுச் சேராமல் ஸிம்மான் அதிகாரத்தில் பங்காளியாக முடியாது. அதிகம் கல்வியறிவு கொண்ட இடதுசாரி பாரம்பரியத்தில் வளர்ந்த மேற்கு வங்கத்தில் பிஜேபி முக்கிய சக்தியாக வளர்ந்துள்ளது. அதுபோல தமிழகத்திலும் அடுத்த பத்தாண்டுகளில் நடைபெறலாம். அதற்கு ஸிம்மான் உதவி செய்வார். தனித்தே இருக்கவேண்டும் என்று நினைத்தால் தொடர்ந்தும் தங்கமுட்டைகள்தான்😁

கருத்துக்கு பஞ்சம் என்றால் ஒதுங்கி செல்லுங்கள்

அதை விடுத்து கேட்ட ஊருக்கு வழி சொல்வதை விடுத்து வேறு சளாப்பல் தேவையற்ற நேரவிரயம் 

முதலில் யாழ் களத்தின் விதிமுறைகளின் படி ஒரு தலைவருக்கு பட்டப்பெயர்கள் வைத்து எழுதுவது தவறு 

செய்தியை இணைப்பவர் என்ற வகையில் உங்களுக்கு அது இன்னும் இறுக்கமாக தெரிந்து இருக்கணும். 

இனி வரும் காலங்களில் உங்களுக்கு அதிக அளவில் தூக்கம் கலையும். தயாராகுங்கள். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, குமாரசாமி said:

இந்தா சிக்னல் போகுது. சேர்ந்து பயணிப்பமாம். ஏ டீமா? பி டீமா? சி டீமா? 😁

 

 

 

இந்த காணொளியில் கனிமொழி அம்மையார் இறுதியில் ஒரு வசனம் கூறுகின்றார்
......தேர்தல் முடிந்து விட்டதால் கடந்த ஆட்சியின்
குறைகளை பற்றித் நான்  கூறவிரும்பவில்லை
ஆனால் மக்கள் சரியான தீர்ப்பை வழங்கியுள்ளார்கள்.......

இப்படி ஒரு கருத்தை யாரும் எதிர்பார்த்தார்களா
தெரியவில்லை
சபை நாகரீகம் அவருக்கும் தெரிகின்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பத்து ஆண்டுகளின் முன் ஆட்சியை கைப்பற்றுவோம் என்று சொன்னார்கள், அடுத்த தேர்தலில் ஒரு ஆசனமாவது கிடைக்கின்றதா பார்ப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

பத்து ஆண்டுகளின் முன் ஆட்சியை கைப்பற்றுவோம் என்று சொன்னார்கள், அடுத்த தேர்தலில் ஒரு ஆசனமாவது கிடைக்கின்றதா பார்ப்போம்.

கட்டுக்காசு கிடைக்கிறதா என்று பார்ப்போம்

நெட்டோவை விட முன்னுக்கு வந்து காட்டுங்கள் பார்ப்போம் என்பதெல்லாம் போய்  ஆசனம் எடுத்து காட்டுங்கள் பார்ப்போம் என்று வந்து நிற்கிறது.

எழுதி வைத்து கொள்ளுங்கள்

ஆட்சி அமைத்தது காட்டுங்கள் என்று எழுத உங்களுக்கு அடுத்த முறை (2026) சந்தர்ப்பமே வராது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

பத்து ஆண்டுகளின் முன் ஆட்சியை கைப்பற்றுவோம் என்று சொன்னார்கள், அடுத்த தேர்தலில் ஒரு ஆசனமாவது கிடைக்கின்றதா பார்ப்போம்.

ஆட்சியை கைப்பற்றுவதென்பது இன்றைய நிலைமையில் ஒரு கனவுதான்.
ஆனாலும் தலைமை விடும் பிழைகளை சுட்டிக்காட்டி சரி செய்து
அல்லது தேவையேற்பட்டால் தலைமையைக்  கடந்து அடுத்த தலைமையுடன் கூட அந்தக் கனவு நினைவேறலாம். கால ஓட்டத்தில் பல நிகழ்வுகள் நடக்கலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, விசுகு said:

இனி வரும் காலங்களில் உங்களுக்கு அதிக அளவில் தூக்கம் கலையும். தயாராகுங்கள். 

கனவில் ஸிம்மான் (சமஸ்கிருதப் பெயர்!) வந்து உறுமி வெருட்டப் போகின்றாருக்கும்😁

எனது கருத்துக்கு பொழிப்புரையை தமிழகன் வந்து வழங்குவார்! அப்பவாவது உங்களுக்கு புரியும் என நினைக்கின்றேன்!

spacer.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விசுகு said:

எழுதி வைத்து கொள்ளுங்கள்

ஆட்சி அமைத்தது காட்டுங்கள் என்று எழுத உங்களுக்கு அடுத்த முறை (2026) சந்தர்ப்பமே வராது

அது தான் எனது விருப்பமும்.

ஆனாலும் சூழல் இன்னும் சில காலங்கள் அப்படியே தான் இருக்கும்.

எல்லாம் கடந்து செல்லும்வரை சீமான் நிலைதடுமாறாது இருக்க வேண்டுமே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, விசுகு said:

கருத்துக்கு பஞ்சம் என்றால் ஒதுங்கி செல்லுங்கள்

அதை விடுத்து கேட்ட ஊருக்கு வழி சொல்வதை விடுத்து வேறு சளாப்பல் தேவையற்ற நேரவிரயம் 

முதலில் யாழ் களத்தின் விதிமுறைகளின் படி ஒரு தலைவருக்கு பட்டப்பெயர்கள் வைத்து எழுதுவது தவறு 

செய்தியை இணைப்பவர் என்ற வகையில் உங்களுக்கு அது இன்னும் இறுக்கமாக தெரிந்து இருக்கணும். 

இனி வரும் காலங்களில் உங்களுக்கு அதிக அளவில் தூக்கம் கலையும். தயாராகுங்கள். 

 

நாம் தமிழர் கட்சிக்கான கேவல துணுக்குகளும்,கேவல பெயர்களும் யாழ்களத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது போல் தெரிகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

பிஜேபியுடன் கூட்டுச் சேராமல் ஸிம்மான் அதிகாரத்தில் பங்காளியாக முடியாது. அதிகம் கல்வியறிவு கொண்ட இடதுசாரி பாரம்பரியத்தில் வளர்ந்த மேற்கு வங்கத்தில் பிஜேபி முக்கிய சக்தியாக வளர்ந்துள்ளது. அதுபோல தமிழகத்திலும் அடுத்த பத்தாண்டுகளில் நடைபெறலாம். அதற்கு ஸிம்மான் உதவி செய்வார். தனித்தே இருக்கவேண்டும் என்று நினைத்தால் தொடர்ந்தும் தங்கமுட்டைகள்தான்😁

சீமான் எந்தக்கட்சியுடன் கூட்டுச்சேர்கிறாரோ  அந்தக்கட்சி தெலுங்கர் வாக்கை  இழக்கும்  அதாவது20000தொடக்கம் 50000வரை ...(100 சட்டமன்றத்தொகுதிகளில்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, கிருபன் said:

கனவில் ஸிம்மான் (சமஸ்கிருதப் பெயர்!) வந்து உறுமி வெருட்டப் போகின்றாருக்கும்😁

எனது கருத்துக்கு பொழிப்புரையை தமிழகன் வந்து வழங்குவார்! அப்பவாவது உங்களுக்கு புரியும் என நினைக்கின்றேன்!

 

சீமானை  சைமன் என எள்ளி நகையாடி களைத்து விட்டீர்கள். இப்போது ஸிம்மான் என  சமஸ்கிருத ஆதாரத்துடன் புது வேடம் புகுந்துள்ளீர்கள். நீங்களும் உங்களைப்போன்றவர்களும் பாடம் படிக்க அதிக காலம் எடுக்குமென நினைக்கின்றேன்

நன்று.

காலங்கள் மலரும்.அப்போது சந்திக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

நாம் தமிழர் கட்சிக்கான கேவல துணுக்குகளும்,கேவல பெயர்களும் யாழ்களத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது போல் தெரிகின்றது.

இது இண்டைக்கா உங்க‌ளுக்கு தெரிஞ்ச‌து தாத்தா
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kandiah57 said:

சீமான் எந்தக்கட்சியுடன் கூட்டுச்சேர்கிறாரோ  அந்தக்கட்சி தெலுங்கர் வாக்கை  இழக்கும்  அதாவது20000தொடக்கம் 50000வரை ...(100 சட்டமன்றத்தொகுதிகளில்)

கந்தையா57! தமிழ்நாட்டு அரசு மத்திய அரசை மீறி ஈழத்தமிழருக்கு எதையுமே செய்ய முடியாது என கூறுபவர்கள் ஏன் சீமான் அரசியலை பற்றி இங்கு வெட்டி விளாசுகின்றார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

சீமானை  சைமன் என எள்ளி நகையாடி களைத்து விட்டீர்கள். இப்போது ஸிம்மான் என  சமஸ்கிருத ஆதாரத்துடன் புது வேடம் புகுந்துள்ளீர்கள். நீங்களும் உங்களைப்போன்றவர்களும் பாடம் படிக்க அதிக காலம் எடுக்குமென நினைக்கின்றேன்

நன்று.

காலங்கள் மலரும்.அப்போது சந்திக்கலாம்.

யாழ் க‌ள‌ம் முக‌ நூலை மிஞ்சி விட்ட‌து தாத்தா

இதில் ப‌ன்பான‌ முறையில் க‌ருத்தாட‌னும் என்று விதிமுறையாம்.........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

கந்தையா57! தமிழ்நாட்டு அரசு மத்திய அரசை மீறி ஈழத்தமிழருக்கு எதையுமே செய்ய முடியாது என கூறுபவர்கள் ஏன் சீமான் அரசியலை பற்றி இங்கு வெட்டி விளாசுகின்றார்கள்?

ஆம் அது எங்களுக்கு அனுபவம் கற்றுத்தந்தது. அனுபவமென்பது  ஒர்ஆசிரியாரல் கற்றுக் கொடுப்பதில்லை ..பல தோல்விகளால். கற்றுக்கொடுக்கப்படும் ..தமிழ்நாட்டு அரசியல் பேசும்போது கருணநிதி பற்றிப்பேசாதே....எம.ஜி.ஆர். பற்றிப்பேசாதே....என்க்கூறமிடியுமா? சீமான் தமிழ் நாட்டு அரசியலில் இருப்பதாலும் ...மேதகுவின் விம்பமெனப் புலுடா விடுவாதாலும்  ..கதைக்கிறோம்...இப்படி நாங்கள் கதைப்தால் சீமான் வளர இடமுண்டு  புகழ்ச்சியால் ஒருவனும் ஒரபோதும்  வளர்த்ததில்லை மாறாக அவனுடைய சிந்தனை ஆற்றல் முடக்கப்படுகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, குமாரசாமி said:

கந்தையா57! தமிழ்நாட்டு அரசு மத்திய அரசை மீறி ஈழத்தமிழருக்கு எதையுமே செய்ய முடியாது என கூறுபவர்கள் ஏன் சீமான் அரசியலை பற்றி இங்கு வெட்டி விளாசுகின்றார்கள்?

யாழ்க‌ள‌த்தில் வ‌ய‌தில் மூத்த‌வ‌ர் என‌க்கு சொன்ன‌ அறிவுரை 
த‌ம்பி நீங்க‌ள் எம் போராட்ட‌ம் ம‌ற்றும் த‌மிழ‌க‌ அர‌சிய‌லை ப‌ற்றி ந‌ல்லாக‌ தெரிந்து வைத்து இருக்கிறீங்க‌ள்..........இந்த‌ த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு ந‌ல்ல‌துக‌ளை சொல்லி கொடுக்க‌ சொன்னார்..........

அந்த‌ ஜ‌யா வேற‌ யாரும் இல்லை நொச்சி என்ற‌ உற‌வு தான்.........யாழ்க‌ள‌த்தில் ந‌ட‌க்கும் கேலி கூத்துக‌ளை பார்த்து அருவ‌ருப்பில் யாழை விட்டு ஒதிங்கின‌ உற‌வுக‌ள் ப‌ல‌ர்...........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kandiah57 said:

ஆம் அது எங்களுக்கு அனுபவம் கற்றுத்தந்தது. அனுபவமென்பது  ஒர்ஆசிரியாரல் கற்றுக் கொடுப்பதில்லை ..பல தோல்விகளால். கற்றுக்கொடுக்கப்படும் ..தமிழ்நாட்டு அரசியல் பேசும்போது கருணநிதி பற்றிப்பேசாதே....எம.ஜி.ஆர். பற்றிப்பேசாதே....என்க்கூறமிடியுமா? சீமான் தமிழ் நாட்டு அரசியலில் இருப்பதாலும் ...மேதகுவின் விம்பமெனப் புலுடா விடுவாதாலும்  ..கதைக்கிறோம்...இப்படி நாங்கள் கதைப்தால் சீமான் வளர இடமுண்டு  புகழ்ச்சியால் ஒருவனும் ஒரபோதும்  வளர்த்ததில்லை மாறாக அவனுடைய சிந்தனை ஆற்றல் முடக்கப்படுகிறது. 

சீமான் தன்னை தலைவர் பிரபாகரனின் பிம்பம் என சொன்னாரா? எங்கே? எப்போது?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.