Jump to content

சீனாவின் தடுப்பூசி குறித்து, உலக சுகாதார நிறுவனம் தகவல்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவின் தடுப்பூசி குறித்து உலக சுகாதார நிறுவனம் தகவல்!

சீனாவின் தடுப்பூசி குறித்து, உலக சுகாதார நிறுவனம் தகவல்!

சீனாவின் சினோவக் பயோடெக் தயாரித்த கொரோனா தடுப்பூசி 60 வயதிற்குட்பட்ட பெரியவர்களுக்கு கொரோனா தொற்றைத் தடுப்பதில் திறமையானது என உலக சுகாதார நிறுவன வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர்.

எனினும், குறித்த தடுப்பூசியால் கடுமையான பாதகமான விளைவுகளின் ஆபத்து குறித்து இன்னும் சரியான முடிவுகள் கிடைக்கவில்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

உலக சுகாதார அமைப்பின் மூலோபாய ஆலோசனைக் குழுவின் சுயாதீன வல்லுநர்கள், சீனா, பிரேசில், இந்தோனேசியா, துருக்கி மற்றும் சிலி ஆகிய நாடுகளில் மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளிலிருந்து சினோவக்கின் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டிருந்தனர்.

இதேவேளை, சில கொரோனா நோயாளிகளுக்கு கடுமையான பக்கவிளைவுகளின் ஆபத்து உள்ளமை தொடர்பாக சீன அரசுக்குச் சொந்தமான மருந்து தயாரிப்பு நிறுவனமான சினோபார்ம் நிறுவனமும் தகவலை வெளியிட்டுள்ளது.

இதனிடையே, சினோவக் தடுப்பூசி 32 நாடுகளால் உள்ளநாட்டு அதிகார வரம்புகளின்கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன் 260 மில்லியன் தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டுள்ளதைாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

https://athavannews.com/2021/1214184

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவின் கொரோனா தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல்

1-28-696x392.jpg
 16 Views

சீன அரசுக்கு சொந்தமான சீனோஃபார்ம் நிறுவனம் தயாரித்த கோவிட்-19 தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் அவசரகாலப் பயன்பாட்டு அனுமதி வழங்கியுள்ளது.

மேற்கத்திய நாடு ஒன்றால் தயாரிக்கப்படாத தடுப்பூசி ஒன்று உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரத்தை பெறுவது இதுவே முதல் முறையாகும் .

சீனாவிலும் வேறு சில உலக நாடுகளிலும் இந்த தடுப்பூசி ஏற்கனவே கோடிக்கணக்கான மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக ஃபைசர் அஸ்ட்ராஜெனீகா, ஜான்சன் & ஜான்சன் மற்றும் மாடெர்னா ஆகிய தடுப்பூசிகளின் பயன்பாட்டுக்கு மட்டுமே உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல் அளித்திருந்தது.

மேலும் சீனா தயாரித்துள்ள இன்னொரு தடுப்பூசியான ‘சீனோவேக்’ குறித்த முடிவு அடுத்து வரும் சில நாட்களில் உலக சுகாதார நிறுவனத்தால் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்யாவின் ஸ்புட்னிக்-V தடுப்பூசி ஏற்கனவே உலக சுகாதார நிறுவனத்தால் மதிப்பிடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

https://www.ilakku.org/?p=49076

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.மாவட்ட மேலதிக அரச அதிபர் உள்ளிட்ட 15 பேருக்கு யாழில் கொரோனா!

May 9, 2021

 

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 15 பேர் உள்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 21 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை இன்று கண்டறியப்பட்டுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அவர்களில் யாழ்ப்பாணம் மேலதிக அரச அதிபருக்கும் கோரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 486 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அதில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 15 பேரும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மாவட்டஙகளில் தலா 2 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட 2 பேருக்கும், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 4 பேருக்கும் , தெல்லிப்பழை வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் மூவருக்கும் (அவர்களில் ஒருவர் யாழ்ப்பாணம் மேலதிக அரச அதிபர்) சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட இருவருக்கும் , பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை, காரைநகர் பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட தலா ஒருவருக்கும் , திருநெல்வேலியில் உள்ள நோதேர்ன் தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும், வேலணை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவருக்கும் என 15பேருக்கு தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை கிளிநொச்சி தர்ம்புரம் வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைக்குச் சென்ற இருவருக்கும் , வவுனியா பொது வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சேர்க்கப்பட்ட இருவருக்கு , முல்லைத்தீவு பொது வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவுக்கு சிகிச்சைக்குச் சென்ற இருவருக்கும் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

 

https://globaltamilnews.net/2021/160671/

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.