Jump to content

பிரேஸில்: ரியோ டி ஜெனிரோ துப்பாக்கிச் சூட்டில் 25 பேர் கொல்லப்பட்டனர்!


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

பிரேஸில்: ரியோ டி ஜெனிரோ துப்பாக்கிச் சூட்டில் 25 பேர் கொல்லப்பட்டனர்!

பிரேஸிலில் போதைப்பொருள் கடத்தர்காரர்களை குறிவைத்து ரியோ டி ஜெனிரோவின் மிகப்பெரிய சேரி பகுதியில் ஆயுதமேந்திய பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலில் குறைந்தது 25 பேர்  கொல்லப்பட்டுள்ளனர்.

imrs.jpg

இது நகர வரலாற்றில் பதிவான மிகக் கொடூரமான சோதனை நடவடிக்கை ஆகும்.

ரியோவின் சிவில் காவல்துறையின் சுமார் 200 உறுப்பினர்கள் வியாழக்கிழமை அதிகாலையில் குறித்த பகுதிக்குள் நுழைந்து போதைப்பொருள் கடத்தல் காரர்களை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டனர்.

இதன்போது மெட்ரோ ரயிலில் இருந்த இரண்டு பயணிகள் தோட்டாக்களால் தாக்கப்பட்டாலும் உயிர் தப்பினர்.

ரியோவில் நடத்தப்பட்ட பொலிஸ் நடவடிக்கையில் அதிகளவிலான உயிரிழப்புகள் பதிவாகிய முதல் சந்தர்ப்பம் இதுவென பிரேஸில் பொலிஸ்மா அதிபர் ரொனால்டோ ஒலிவேரா ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

இந்த சோதனையில் குறிவைக்கப்பட்ட கும்பல் போதைப்பொருள் கடத்தல், மோசடி, கொலைகள் மற்றும் கடத்தல் ஆகியவற்றில் ஈடுபடுகிறது என்று அந் நாட்டு செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன.

ரியோ டி ஜெனிரோ பிரேசிலின் மிகவும் வன்முறை மாநிலங்களில் ஒன்றாகும், மேலும் பரந்த பகுதிகள் குற்றவாளிகளின் கட்டுப்பாட்டில் உள்ளன, அவற்றில் பல சக்திவாய்ந்த போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுடன் இணைக்கப்பட்டுள்ளன.

பிரேஸிலில் பாதுகாப்புப் படைகள் பெரும்பாலும் முக்கிய நகரங்களில் குற்ற எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது பொதுமக்களுக்கு எதிராக அதிகப்படியான சக்தியைப் பயன்படுத்துவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளன.

கடந்த ஜூன் மாதம் ஒரு நீதிமன்றத் தீர்ப்பு, தொற்றுநோய்களின் போது ரியோவின் வரிய பகுதிகளில் பொலிஸ் நடவடிக்கையை தடை செய்தது.
 

 

https://www.virakesari.lk/article/105042

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

 

imrs.jpg

குற்றவாளிகளை சுடும் போது... அந்தத் தாயையும், சிறுவனையும் அந்த இடத்தில் இருந்து அப்புறப் படுத்தி இருக்கலாம்.

அந்தச் சிறுவனின் முகத்தில் தெரியும் அச்ச உணர்வு, எத்தனை வருடம் கடந்தாலும் மறையாது.

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • இந்த Greak freak என அழைக்கப்படும் Giannis Sina Ugo Antetokounmpoவின் கூடைபந்தாட் கோல்களை பார்த்திருக்கிறீர்களா? இன்று நடந்த போட்டியில் Brooklyn Nets தோற்கடித்து அரையிறுதிக்கு போகும் Milwaukee Bucksன் Greak freakன் சில actions..   
  • ரணில் எப்பவும் சும்மா வரமாட்டார். கையில கோடாரியோடு தான் வருவார். இந்த தடவை யாரை பிழக்க போகிறார்? சமாதான தூதுவராக அமெரிக்கா ஐரோப்பாவுக்கும் போவாரோ?
  • தமது முக்கியமான போராளிகளை கொன்றுவிட்டார்கள் என்று புலிகள்மேல் ஆறாத வன்மம் கொண்டிருந்தார்கள் புளொட் இயக்கத்தினர். ஆனால் ஆரம்பகால தகராறுகளுக்கு வேறு காரணங்கள் என்று பலரும் பேசிகொள்வார்கள். இதில் முரண்நகை என்னவென்றால் புலிகளால் கொல்லப்பட்ட புளொட் இயக்கத்தினரின் எண்ணிக்கையைவிட புளொட் இயக்கத்தினால் கொல்லப்பட்ட புளொட் தளபதிகள் போராளிகள் எண்ணிக்கை பல மடங்கு அதிகம். செல்லரித்ததுபோல் சொந்த இயக்க போராளிகள்,தளபதிகள் ஆதரவாளர்கள் என்று கொஞ்சம் கொஞ்சமாக போட்டுக்கொண்டுபோய்  கடைசியில் அவர்கள் தலைவரையும் கொன்றுதள்ளிவிட்டு வவுனியாவில் இலங்கை ராணுவத்தின் பாதுகாப்புடன் வதைமுகாம்களை அமைத்து புலிகள் எம்மை அழித்துவிட்டார்கள் என்று சொல்லி போற வாறவன் எல்லோரையும் புலிகள் ஆதரவாளர்கள் என்று கொன்று குவித்து புலிகளுக்கெதிராக போராட்டம் நடத்துகிறோம் என்று வீராப்பு பேசினார்கள் மாணிக்கதாசன் குறூப். ஒருகாலகட்டத்தில்  தமிழர்பகுதிகளில் நிலைகொண்டிருந்த ராணுவத்தினரின் தொகையை காட்டிலும்  அனைத்து இயக்கங்களில் இருந்த ஆயுதபயிற்சிபெற்ற போராளிகள் தொகை அதிகம் என்று பேசி கொள்வார்கள். திடகாத்திரமான போராளிகளை பெரும் எண்ணிக்கையில் கொண்டிருந்த புளொட் ரெலோ இயக்கங்கள் உட்பட அனைத்து இயக்கங்களும் ஒன்று சேர்ந்தால் ஆயுதம் தேவையில்லை சிங்கள ராணுவத்தை தலைமயிரில் பிடிச்சு தூக்கி வரலாம் என்றும் பேசிக்கொண்டார்கள். ஆனால் அத்தனையையும் விடுதலைபோராட்டம் என்ற பெயரில் புகை குடி பொம்பள சோக்கு என்று பொழுது போக்கியும்  தமது தனிப்பட்ட வன்மங்களை தீர்க்க விழலுக்கிறைத்த நீராக்க்கியும்விட்டு இன்று அஞ்சலியும் கட்டுரைகளும் வரைந்து கொண்டிருக்கிறார்கள். கேட்டால் புலிகள் தம்மை அழித்துவிட்டார்களாம், புலிகள் அரவணைத்து போறமாதிரி உங்கள் தரம் இருந்ததா? இந்த அமைப்புகளில் இருந்து சிங்களவனுக்கெதிராக போராடி மடிந்த ஒரு சில போராளிகளை தவிர மற்ற எதுவும் எவரும், இருந்தாலும் இறந்தாலும் மரியாதைக்குரியவர்களாகவோ அனுதாபத்துக்குரியவர்களாகவோ இல்லை.  
  • நயூட்ரினோ கூட ஒளியை விட சற்று வேகம் குறைவாகவே பயணிக்கும்...
  • வளரி என்றதை தேடியபோது பின்வரும் செய்தி கிடைத்தது.. SBS வானெலியில் வந்த செய்தியை இதில் இணைக்கிறேன் இணையவன் அண்ணா!.  பூமராங்கிற்கு வேறு பல தமிழ்சொற்களும் உள்ளது..  //தமிழ்நாட்டில் யானைத்தந்தத்தால் தயாரிக்கப்பட்ட பூமராங்குகள் பயன்பாட்டில் இருந்திருக்கின்றன என்னும் தகவல் நமக்கு வியப்பளிக்கிறது அல்லவா? பழங்காலத்தில் பயன்பாட்டில் இருந்த அவை இன்று அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. பூமராங்குகளுக்கு தமிழில் வளரி என்று பெயர். வளரியின் வேறுசில பெயர்கள் வளைதடி, பாறாவளை, சுழல்படை, படைவட்டம் போன்றவை. வளரிகள் பெரும்பாலும் அடிமரத் தண்டுகளிலிருந்து தயாரிக்கப்பட்டன. சிறப்பாக சில உலோகத்திலும் யானைத்தந்தங்களிலும் தயாரிக்கப்பட்டிருக்கின்றன.//  https://www.sbs.com.au/language/tamil/audio/boomerang-known-and-unknown-facts
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.