Jump to content

வெளிநாடு வாழ் தமிழர் நலன் என்ற பெயரில் அமைச்சக பெயர் மாற்றம் : மு. க. ஸ்டாலின் அறிவிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக அமைச்சரவையில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் என்ற பெயரில் ஒரு அமைச்சகம் செயல்பட்டு வருகிறது தற்போது இந்த அமைச்சகத்தின் பெயர் மாற்றம் நடைபெற்று இருக்கிறது.

 

india.JPG

 

 

தமிழக அமைச்சரவையில் சில துறைகளின் பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, 

 

 

 

 

'தமிழகத்திலுள்ள அமைச்சகங்கள், துறைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் இன்றுள்ள சூழலில் மிகுந்த மாற்றங்களை அடைந்துள்ளன. மக்களின் எதிர்பார்ப்பு, பணியாளர்கள் நலன், எதிர்கொள்ளும் சவால்கள், நிர்ணயிக்கப்படும் அரசின் இலக்குகள் ஆகியவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு சில அமைச்சகங்களின் பெயர்களையும், துறைகளின் பெயர்களையும் தொலைநோக்குப் பார்வையோடு மாற்றியமைக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

 

 

 

 

அந்தவகையில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் என்கிற துறை 'வெளிநாடு வாழ் தமிழர் நலன்' என்று பெயர் மாற்றம் அடைகிறது. உலகெங்கும் பரவியுள்ள தமிழர்களுடனான தாயகத் தமிழர்களின் உறவை மேம்படுத்தவும், வெளிநாடு வாழ் தமிழ் குடும்பங்களிடமும், அவர் தம் வருங்கால தலைமுறையினரிடமும் தமிழைக் கொண்டு சேர்த்து வளப்படுத்தும் நோக்கத்துடன் இப்பெயர் மாற்றம் நடைபெற உள்ளது. இனி தமிழும், தமிழகமும் வெல்லும்.

 

 

 

 

உலக அளவில் கடைப்பிடிக்கப்படும் உயர்ந்த செயல்பாடுகளை மனதில் வைத்து தமிழக அரசு 'உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்' என்கிற சிறந்த நோக்கத்தின் அடிப்படையில் இந்தப் பெயர் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. இவை பெயர் மாற்றமாக இல்லாமல், செயல்பாட்டிலும் மிகப்பெரிய மாற்றங்களை திட்டங்களாக கொண்டு செயல்பட தூண்டுகோலாக இருக்கும்.'என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

image_poli_3_75.jpg

 

 

இந்நிலையில் திமுக சார்பில் செஞ்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற செஞ்சி கே எஸ் மஸ்தான், சிறுபான்மையினர் நலம் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சராக பதவி ஏற்றிருக்கிறார்.

வெளிநாடு வாழ் தமிழர் நலன் என்ற பெயரில் அமைச்சக பெயர் மாற்றம் : மு. க. ஸ்டாலின் அறிவிப்பு | Virakesari.lk

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி வரவேற்கிறோம்....

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிழம்பு said:

திமுக சார்பில் செஞ்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற செஞ்சி கே எஸ் மஸ்தான், சிறுபான்மையினர் நலம் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சராக பதவி ஏற்றிருக்கிறார்.

சிறுபான்மையினர் நலம் ஓகே. 

எதிலிகள் நலம் / வெளிநாடு வாழ் தமிழர் நலன் இரண்டும் இவருக்கு செற் ஆகாது..

சிறிது நாள் கழித்து மாற்றம் இருக்கும் ..👍

IMG-20210508-012144.jpg

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடு வாழ் தமிழர் நலன் என்கின்ற துறை உலகத் தமிழர் எல்லோருக்குமானதா அல்லது தமிழகத்தவர்களுக்கு மட்டுமே உரியதா.. ? 

பெயரில் மிகப் பெரிய மயக்கம்/சூழ்ச்சி உள்ளது. 

தெளிவுபடுத்தப்படல் வேண்டும். 

🤥

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kapithan said:

வெளிநாடு வாழ் தமிழர் நலன் என்கின்ற துறை உலகத் தமிழர் எல்லோருக்குமானதா அல்லது தமிழகத்தவர்களுக்கு மட்டுமே உரியதா.. ? 

பெயரில் மிகப் பெரிய மயக்கம்/சூழ்ச்சி உள்ளது. 

தெளிவுபடுத்தப்படல் வேண்டும். 

🤥

உலக தமிழர் என வரும்போது பிரச்சனை பெரிதாகி விடும். எனவே அடக்கி வாசிப்பார்கள்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இந்நிலையில் திமுக சார்பில் செஞ்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற செஞ்சி கே எஸ் மஸ்தான், சிறுபான்மையினர் நலம் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சராக பதவி ஏற்றிருக்கிறார்.

வாசிக்கவே தெரியுதில்லை....இது அந்த முசுலிம்களுக்கு மட்டும்தான்...விரைவில் இலங்கை அரபு உலகம் தமிழ்நட்டில் உருவாகும்....இதில் அரபு வசந்தம் மிளிரும்..

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.