Jump to content

டெலோ முன்னாள் தலைவர் ஸ்ரீசபாரெத்தினத்தின் 35வது ஆண்டு வீரவணக்க நிகழ்வு!


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

டெலோ முன்னாள் தலைவர் ஸ்ரீசபாரெத்தினத்தின் 35வது ஆண்டு வீரவணக்க நிகழ்வு!

 

DSCN0013.jpg
(துதி)
தமிழீழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் தலைவர் ஸ்ரீசபாரெத்தினம் அவர்களின் 35வது ஆண்டு வீரவணக்க நிகழ்வு நேற்றைய தினம் மட்டக்களப்பில் அமைந்துள்ள தமிழீழ விடுதலை இயக்க காரியாலயத்தில் அதன் உபதலைவரும், கிழக்கு மாகாணசபை முன்னாள் பிரதித் தவிசாளருமான இந்திரகுமார் பிரசன்னா தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபை பிரதி மேயர் க.சத்தியசீலன், மண்முனை தென் எருவில் பற்றுப் பிரதேச சபைத் தவிசாளர் ஞா.யோகநாதன், மாநகரசபை உறுப்பினர்களான த.இராஜேந்திரன், சீ.ஜெயந்திரகுமார், பு.ரூபராஜ், ச.கமலரூபன் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது மறைந்த தலைவரின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து, ஈகைச் சுடரேற்றப்பட்டதுடன், தலைவருடன் இணைந்து மறைந்த அத்தனை இயக்க உறுப்பினர்களுக்குமாக அகவணக்கம் செலுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
DSCN0023.jpg
 
DSCN0016.jpg
DSCN0007.jpg
 
DSCN0003.jpg
 
 

spacer.png

 

http://www.battinews.com/2021/05/35.html

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பலருக்கு வயது போன பின் சுடலை ஞாணம் கிடைத்து விட்டுது ஆக்கும் இணைய தளம்களில் உண்மையை எழுகின்றார்கள் என்று எழுதுகிறார்கள் இலங்கை அரசை விட முக்கியமா புலிகளைதான் முதன்மை எதிரியாக அனைத்து இயக்கமும் பார்த்துள்ளார்கள் சகோதர படுகொலைகளை ஆரம்பித்தவர்களும் அவர்கள் தான் அப்படி சாகோதர படுகொலைகளை செய்து விட்டு வெளிநாடுகளில் ஓடி வந்து ஒழித்துக்கொண்டு கந்தன் கருணை என்று இணையம்களில் ஒப்பாரி வைத்துக்கொண்டு இருக்கினம் .

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

பலருக்கு வயது போன பின் சுடலை ஞாணம் கிடைத்து விட்டுது ஆக்கும் இணைய தளம்களில் உண்மையை எழுகின்றார்கள் என்று எழுதுகிறார்கள் இலங்கை அரசை விட முக்கியமா புலிகளைதான் முதன்மை எதிரியாக அனைத்து இயக்கமும் பார்த்துள்ளார்கள் சகோதர படுகொலைகளை ஆரம்பித்தவர்களும் அவர்கள் தான் அப்படி சாகோதர படுகொலைகளை செய்து விட்டு வெளிநாடுகளில் ஓடி வந்து ஒழித்துக்கொண்டு கந்தன் கருணை என்று இணையம்களில் ஒப்பாரி வைத்துக்கொண்டு இருக்கினம் .

தமிழ் என்ற அடையாளத்தை நிலைநாட்ட மரணித்த சகல தமிழ் போராளிகளுக்கும் அஞ்சலிகள் ...

 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, putthan said:

தமிழ் என்ற அடையாளத்தை நிலைநாட்ட மரணித்த சகல தமிழ் போராளிகளுக்கும் அஞ்சலிகள் ...

நான் கூட பல சமயங்களில்  உங்களை போலவே சிந்தித்தேன் தீருவிலில்  குமரப்பா புலேந்தி அம்மான் தூபிக்கு அருகில் அனைத்து இயக்க மாவீரர்க்கும் பொது  தூபி வேணும் என்று கொடுக்கு கட்டிக்கொண்டு சிவாஜிலிங்கம் அடிபட  அவர்களும் நாடு காண என்றுதானே கிளம்பினவர்கள் என்ற பரிதாப பார்வை இருந்தது .

ஆனால் அவர்கள்  கொடுக்கும் ஒப்புதல் வாக்கு மூலம்களை படித்தபின் எமக்குள் இவ்வளவு குரூரர்கள் இருந்தனரா  ? அப்படியானவர்களை புலிகள் அழித்ததில் எந்த பிழையும் என்னால் காண முடியவில்லை .

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

உண்மையான போராளிகள் தாயக கனவுடன் கிளம்பியவர்களுக்கு மரியாதை கொடுக்கத்தான் வேணும் . ஆனால்  டெலோவிலும் புளொட்டிலும் ஆரம்ப காலங்களில் சகோதர படுகொலை கொலை கொள்ளை வல்லுறவு செய்துவிட்டு முன்பே ஓடிவந்து இங்குள்ள நாடுகளில் கிழடு தட்டி  இருக்கின்றனர் அவர்களின் முகம்களும்  வெளிச்சத்துக்கு வரணும் . இல்லாவிட்டால் கோடியக்கரை சவுக்கம் காடுகளில் தாம் ஏன் கொல்லப்படுகின்றோம் என்று கூட தெரியாமல் கும்பல் கும்பலாக வெறும்புலி உளவாளி  சந்தேகத்தில் கொல்லப்பட்டு பாரிய கிடங்குகளில் போட்டு புதைக்கப்பட்ட மாற்று இயக்க உண்மையான போராளிகளின் ஆன்மா சாந்தியடையாது .

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

உணரவுடன் போராட சென்று உயிர் நீத்த அனைத்து போராளிகளும் நினைவு மரியாதை செய்யத்தக்கவர்களே. அந்த வகையில் ஶ்ரீசபாரத்தினம் என ற போராளிக்கும் அவருடன் மாவீரர் களான அனைவருக்கும் நினைவு வணக்கங்கள். குரூரர்களும் கொலைஞர்களும் எல்லா இயக்கங்களிலும் இருந்தார்கள். அதேபோல தம்மை அர்பணித்த தியாக சீலர்களும் எல்லா இயக்கங்களிலும் இருந்தார்கள். 

 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

. குரூரர்களும் கொலைஞர்களும் எல்லா இயக்கங்களிலும் இருந்தார்கள். அதேபோல தம்மை அர்பணித்த தியாக சீலர்களும் எல்லா இயக்கங்களிலும் இருந்தார்கள். 

 

மட்டக்களப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட பிறகு உடல்களை யாருமே தொடக்கூடாது அப்படி தொட்டால் தொட்டவரும் சுடப்படுவார் என எச்சரிக்கை கொடுத்தே மாறி மாறி சுட்டுக்கொன்றார்கள். உழவு இயந்திரத்தில் உடல்களை  கட்டி இழுத்த சம்பவங்களும் உண்டு எல்லாம் எமது சகோதரர்கள் .

 • Sad 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

35 வருடங்களின் பின் இப்போதும் என்ன எம்மிடையே சகோதரத்துவம் வளர்ந்துவிட்டதா.. என்ன?

யூனியன் கல்லூரி மாணவர்களின் தலையில் அண்மையில் விழுந்த பொல்லாங்கட்டையே எமது இப்போதைய நிலை பற்றி பல விடயங்களை சொல்லாமல் சொல்கின்றது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

35 வருடங்களின் பின் இப்போதும் என்ன எம்மிடையே சகோதரத்துவம் வளர்ந்துவிட்டதா.. என்ன?

யூனியன் கல்லூரி மாணவர்களின் தலையில் அண்மையில் விழுந்த பொல்லாங்கட்டையே எமது இப்போதைய நிலை பற்றி பல விடயங்களை சொல்லாமல் சொல்கின்றது.

இதுக்கு லாடம் கட்ட மீரா தான் சரி .

 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அனைத்து இயக்கங்களும் இருந்த சமகாலத்தில் ,

ஆயுதவளம் இயங்குநிலை போராளிகள் எண்ணிக்கை என்ற வகையில் தமிழீழத்தில் பலம் வாய்ந்த ராணுவமாக முதலிடத்தில் இருந்தது  ரெலோதான்.

இரண்டாம் இடத்தில்தான் ஆயுதம்,போராளிகள் எண்ணிக்கையில் புலிகள் இருந்தார்கள்.

உறுப்பினர்களில் மட்டும் பெரிதாக வைத்துக்கொண்டு எந்த இயங்கு நிலையிலும்  இருந்திராத புளொட்டை எல்லாம் பெரிய இயக்கம் என்று எந்த கணக்கிலும் எடுக்க முடியாது .

ஆனால் ரெலோ ஓரிரு தாக்குதல்களை தவிர தம்மிடம் இருந்த எந்த வளங்களையும் போராட்டத்துக்கு பயன்படுத்தவில்லை.

ரெலோவின் போராளிகளிடம் போர்க்குணம் என்பது அறவே இல்லாமல்போய் ஊருக்குள்ள கலர் காட்டுவதே அவர்கள் போராட்டமாய் போனதால் எளிதாக புலிகளால் துடைத்து அகற்றப்பட்டார்கள்.

ரெலோவின் யாழ்மாவட்ட பொறுப்பாளராக இருந்த பொபியின் தான் தோன்றிதனமான....நடவடிக்கைகளுக்குசன்மானமாக  சல்லடையாக்கப்பட்டதுதான் ஸ்ரீ சபாரத்தினத்தின் உடல்,.

ஆம் ஸ்ரீ சபாவின் உடலில் 28 குண்டுகள் பாய்ந்திருந்ததாக பேசிக்கொள்வார்கள். அதாவது ஏறத்தாள ஒரு ஏகே-யின் முழு மகசீனும் முடியும்வரை கிட்டர் ஸ்ரீக்கு ஓட்டோவில் பிடிச்சிருக்கிறார்.

புலிகளின் நடவடிக்கையின்போது ரெலோ என்ற பெயரில் அழிந்தது எந்த பக்கம் ஓடுறது எண்டு தெரியாமல் சிக்கிக்கொண்ட மட்டக்களப்பு திருமலை மன்னார் போராளிகள்தான், சிகரெட்டும் கொக்கோகோலாவுடனும் வாழ்ந்த யாழ்ப்பாணத்து ரெலோ வீரர்கள் ஒழுங்கைகளினால் ஓடிதப்பி இந்தியா உட்பட்ட  வெளிநாடுகளில் தஞ்சமடைந்தார்கள்.

இலங்கை ராணுவத்துக்கு எதிரான ஓரிரு பாரிய தாக்குதல்களை வழிநடத்திய அந்த ஸ்ரீசபாரத்தினத்துக்கு மட்டும் எப்போதும் அஞ்சலிகள் இருக்கும்.

அஞ்சலிகள்.

 

 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, valavan said:

இலங்கை ராணுவத்துக்கு எதிரான ஓரிரு பாரிய தாக்குதல்களை வழிநடத்திய அந்த ஸ்ரீசபாரத்தினத்துக்கு மட்டும் எப்போதும் அஞ்சலிகள் இருக்கும்.

வயது  போய்க்கொண்டு இருக்குதுசிறி சபா எங்கு தாக்குதல் இலங்கை ராணுவத்துக்கு எதிராக செய்தார் என்று மறந்து விட்டது சொல்ல முடியுமா ? இப்படியான விடயங்களுக்கு கம்பர் மலை புவனியார் விளக்கம் தருவார் அவரும் மாரடைப்பில் இறந்து விட்டார் .

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஓரு  போலீஸ் நிலைய தாக்குதல், வங்கிகள் மீதான தாக்குதல், ரயில் வண்டி தொடர் மீதான தாக்குதல் நினைவில் இருக்கிறது. மேலதிக விபரங்கள் தெரியவில்லை. 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Sasi_varnam said:

ஓரு  போலீஸ் நிலைய தாக்குதல், வங்கிகள் மீதான தாக்குதல், ரயில் வண்டி தொடர் மீதான தாக்குதல் நினைவில் இருக்கிறது. மேலதிக விபரங்கள் தெரியவில்லை. 

அவையெல்லாம் உடுப்பிட்டி தாஸ் முன்னின்று செய்த தாக்குதல்கள். பொபி தாஸை யாழ் ஆஸ்பத்திரியில் வைத்து சுட்டது மட்டும்தான் செய்தவர்.

 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Sasi_varnam said:

ஓரு  போலீஸ் நிலைய தாக்குதல், வங்கிகள் மீதான தாக்குதல், ரயில் வண்டி தொடர் மீதான தாக்குதல் நினைவில் இருக்கிறது. மேலதிக விபரங்கள் தெரியவில்லை. 

சாவகச்சேரி  காவல்நிலைய தாக்குதலின் தொடராக நாவற்குழி ராணுவ தொடரணிமீதான தாக்குதல், முறிகண்டி ராணுவ தொடரூந்து மீதான தாக்குதல், மற்றும் கொக்காவில் கிளிநொச்சி ராணுவ முகாம்கள்மீதான தாக்குதல் முயற்சியென்று  குறிப்பிடதக்க ராணுவ நடவடிக்கைகளில் ரெலோ இறங்கியிருக்கிறது,

ஆனால் கிருபன் சொன்னதுபோல் அவை அனைத்தும் ரெலோவின் வடமராட்சி பிரிவான தாஸ்குரூப்பினால்தான் செய்யப்பட்டது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, valavan said:

சாவகச்சேரி  காவல்நிலைய தாக்குதலின் தொடராக நாவற்குழி ராணுவ தொடரணிமீதான தாக்குதல், முறிகண்டி ராணுவ தொடரூந்து மீதான தாக்குதல், மற்றும் கொக்காவில் கிளிநொச்சி ராணுவ முகாம்கள்மீதான தாக்குதல் முயற்சியென்று  குறிப்பிடதக்க ராணுவ நடவடிக்கைகளில் ரெலோ இறங்கியிருக்கிறது,

ஆனால் கிருபன் சொன்னதுபோல் அவை அனைத்தும் ரெலோவின் வடமராட்சி பிரிவான தாஸ்குரூப்பினால்தான் செய்யப்பட்டது.

தாஸ் இல்லையென்றால் டெலோ இல்லை அந்த வீர மாமனிதனுக்கு முழங்காலிட்டு அஞ்சலி செலுத்தும் மாற்று இயக்க நபர்களில்  தாஸ் ஒருத்தர் சிறியர் என்ன செய்தவர் என்பதை இன்னும் அறிய ஆவல் .அவருக்கு காலில் வெடிபோட்டவர் கனடாவில் இருக்கிறார் ? 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

யூனியன் கல்லூரி மாணவர்களின் தலையில் அண்மையில் விழுந்த பொல்லாங்கட்டையே எமது இப்போதைய நிலை பற்றி பல விடயங்களை சொல்லாமல் சொல்கின்றது.

அது இரண்டு சபைக்கு இடையிலான பிரச்சனை என்று சொல்வினம் இங்க சிலர்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பெருமாள் said:

தாஸ் இல்லையென்றால் டெலோ இல்லை அந்த வீர மாமனிதனுக்கு முழங்காலிட்டு அஞ்சலி செலுத்தும் மாற்று இயக்க நபர்களில்  தாஸ் ஒருத்தர் சிறியர் என்ன செய்தவர் என்பதை இன்னும் அறிய ஆவல் .அவருக்கு காலில் வெடிபோட்டவர் கனடாவில் இருக்கிறார் ? 

 சிறி எதுவுமே தாஸுக்கு கொடுக்கவில்லை,

தாஸுக்கும் ரெலோவுக்கும் சம்பந்தமேயில்லை,

தாஸுக்கு தலைவராக குன்னகுடி வைத்தியநாதன் இருந்தார்.

தாஸ் தானாக போராளிகளை சேர்த்து பயிற்சி கொடுத்து சொந்தமா  கொட்டன் பொல்லுகள்  சீவி மற்றும் அலவாங்கு மண்வெட்டி  போன்ற கனரக ஆயுதங்களை செய்து அவற்றைக்கொண்டு  இலங்கை பாதுகாப்புபடைகளின்மீது தாக்குதல் செய்தார் .

உங்கள் ஆவலை பூர்த்தி செய்ததில் ஆனந்தம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Just now, valavan said:

 சிறி எதுவுமே தாஸுக்கு கொடுக்கவில்லை,

தாஸுக்கும் ரெலோவுக்கும் சம்பந்தமேயில்லை,

தாஸுக்கு தலைவராக குன்னகுடி வைத்தியநாதன் இருந்தார்.

தாஸ் தானாக போராளிகளை சேர்த்து பயிற்சி கொடுத்து சொந்தமா  கொட்டன் பொல்லுகள்  சீவி மற்றும் அலவாங்கு மண்வெட்டி  போன்ற கனரக ஆயுதங்களை செய்து அவற்றைக்கொண்டு  இலங்கை பாதுகாப்புபடைகளின்மீது தாக்குதல் செய்தார் .

உங்கள் ஆவலை பூர்த்தி செய்ததில் ஆனந்தம்.

ரென்சன் ஆக வேண்டாம் இன்றும் பழைய டெலோ ஆட்களுடன் நல்ல நட்ப்புடனே  உள்ளேன் சரித்திரம் மாற கூடாது பாருங்க .

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

46-B3-FBA5-2-B22-405-D-9656-2-AB6-FD8-AB

8 minutes ago, valavan said:

 சிறி எதுவுமே தாஸுக்கு கொடுக்கவில்லை,

தாஸுக்கும் ரெலோவுக்கும் சம்பந்தமேயில்லை,

தாஸுக்கு தலைவராக குன்னகுடி வைத்தியநாதன் இருந்தார்.

தாஸ் தானாக போராளிகளை சேர்த்து பயிற்சி கொடுத்து சொந்தமா  கொட்டன் பொல்லுகள்  சீவி மற்றும் அலவாங்கு மண்வெட்டி  போன்ற கனரக ஆயுதங்களை செய்து அவற்றைக்கொண்டு  இலங்கை பாதுகாப்புபடைகளின்மீது தாக்குதல் செய்தார் .

உங்கள் ஆவலை பூர்த்தி செய்ததில் ஆனந்தம்.

சிறி தாசுக்கு எதுவுமே கொடுக்க வில்லையா..... 

 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

35 வருடங்களின் பின் இப்போதும் என்ன எம்மிடையே சகோதரத்துவம் வளர்ந்துவிட்டதா.. என்ன?

யூனியன் கல்லூரி மாணவர்களின் தலையில் அண்மையில் விழுந்த பொல்லாங்கட்டையே எமது இப்போதைய நிலை பற்றி பல விடயங்களை சொல்லாமல் சொல்கின்றது.

தலைப்பிற்கு தொடர்பில்லாத விடயங்களைத் தவிர்ப்பது தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்க உதவும். 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Just now, Kapithan said:

தலைப்பிற்கு தொடர்பில்லாத விடயங்களைத் தவிர்ப்பது தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்க உதவும். 

உங்கட கண்ணிற்கு இப்படியானவை மட்டும்  தெரிந்து விடுகிறது.... 😂

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, MEERA said:

46-B3-FBA5-2-B22-405-D-9656-2-AB6-FD8-AB

சிறி தாசுக்கு எதுவுமே கொடுக்க வில்லையா..... 

சத்தமாக பேசாதீர்கள் அப்புறம் யாராவது இதேபோல ஒரு போஸ்டரை இங்கே கொண்டுவந்து ஒட்டிவிட்டு  கருணாவிற்கும் மாத்தையாவிற்கும் தலைவர் எதுவுமே கொடுக்கவில்லையா என்று கேட்டுவிடபோகிறார்கள்.

காட்சிகள் ஒன்றாகதான் அனைத்து இயக்கங்களிலும் இருந்தது, காரணங்கள்தான் வேறுவேறாக சொல்லப்பட்டது.

தாஸ்குரூப்பின் அழிவை நடத்தியதே பொபி என்பது பலருக்கும் தெரிந்திருக்கும், யாழ்ப்பாணத்தில் ரெலோ என்பது 100% பொபியின் கட்டுப்பாட்டிலேயே இயங்கியது, தாஸ் பொபி பிரிவின் முன்னர் இந்தியாவிலிருந்தபடி பலமான ரெலோவை வழிநடத்தியது ஸ்ரீ. இந்தியாவிலிருந்து யாழ் வந்தபின் ஸ்ரீயும் பல்லு புடுங்கிய பாம்பாக பொபி கட்டுப்பாட்டில் ஏறக்குறைய சூழ்நிலை கைதி நிலையிலேயே இருந்தார் என்பது வரலாறு.

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, MEERA said:

உங்கட கண்ணிற்கு இப்படியானவை மட்டும்  தெரிந்து விடுகிறது.... 😂

மீரா,

சாதி சமயத்தில எனக்கு நம்பிக்கையில்ல, உங்களுக்கிருக்கெண்டா நான் என்ன செய்யிறது....😏

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் இறந்ததை நினைவு கூற அவர் சார்ந்தோருக்கு உரிமை உண்டு. 

ஆனால்.. இவர் என்ன வீரத்தைச் செய்தற்காக வீரவணக்கம் செய்யினம்..??! நினைவஞ்சலி செய்யுங்கோ அது தப்பில்ல.

ஆனால்.. மக்களுக்கு முன் வீரர்களாக்க நினைக்க வேண்டாம்.. துரோகிகளை. 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, nedukkalapoovan said:

ஒருவர் இறந்ததை நினைவு கூற அவர் சார்ந்தோருக்கு உரிமை உண்டு. 

ஆனால்.. இவர் என்ன வீரத்தைச் செய்தற்காக வீரவணக்கம் செய்யினம்..??! நினைவஞ்சலி செய்யுங்கோ அது தப்பில்ல.

ஆனால்.. மக்களுக்கு முன் வீரர்களாக்க நினைக்க வேண்டாம்.. துரோகிகளை. 

நீங்கள் கூறுவது சரி என்றால் கோத்தபாய கூறுவதும் சரி என்று ஆகிவிடும். யார் தியாகி , யார் துரோகி என்று முடிவெடுத்து,  சான்றிதழ் கொடுக்கும் உரிமையை நீங்கள் யாரிடம் இருந்து எப்போது பெற்றீர்கள்?   ஶ்ரீசபாரத்தினமும் மக்களுக்காக போராடவந்து அநியாயமாக கொல்லப்பட்ட ஒரு போராளிதான். எமக்காக போராடி இறந்த ஒரு போராளிக்கு வீரவணக்கம் செய்வதில் கூட பாரபட்சம் காட்டுவீரகள் என்றால் இதை விட கோத்தபாய மேல்.  

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • சாப்பிடும் பொழுது கைக்கும் வாய்க்கும் interpreters(spoon and fork) தேவையில்லை என்பது சரியே..
  • நான் நினைக்கவில்லை  வழக்கம் போல் சுமத்திரன்  ராகவனை பார்த்து நாய் போல் குரைக்க வேண்டாம் என்று வெண்ணெய் திரண்டு வரும் தாழியை  உடைக்குதுகள் எங்கடை தலையெழுத்து. சுமந்திரனுக்கும், சுரேன் ராகவனுக்கும் இடையில் நாடாளுமன்றில் கடும் வாக்குவாதம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கும், ஆளும் கட்சி தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவனுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றில் உரையாற்றிய போது சுமந்திரன் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். ஆளும் கட்சியில் இருந்து கொண்டு அரசியல் கைதிகளை விடுதலை செய்ய சுரேன் ராகவன் எதனையும் செய்யவில்லை என அவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நாயைப் போன்று குரைக்க வேண்டாம் என சுரேன் ராகவனை சுமந்திரன் கோரியிருந்தார். அரசாங்கத்தின் அடிவருடியாக ராகவன் செயற்பட்டு வருவதாகவும், நலன்களுக்காக அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளும் சரியென கூறி வருவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார். இதேவேளை, 15 ஆண்டுகள் நாடாளுமன்றில் இருந்து தமிழ் மக்களுக்கு என்ன செய்திருக்கின்றீர்கள் என சுரேன் ராகவன், சுமந்திரனிடம் கேள்வி எழுப்பியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.  https://tamilwin.com/article/sumanthiran-at-parliament-1624439780    சுமத்திரன்  பதவியில் இருந்தபோது என்ன செய்தார் ?
  • 80-களின் காதல் மன்னர்களுக்கு இந்தக் கட்டுரை சமர்ப்பணம்! - நீங்கா கலைஞன் 2 #MyVikatan விகடன் வாசகர் இளையராஜா - எஸ்.பி.பி... "காதலின் தீபமொன்று", காதல் அறியாதவன், புரியாதவன் கூட ஒருமுறை பாடலைக் கேட்டால் காதலின் மயக்கம் கொண்டு, காதல் தீபம் ஒன்று நெஞ்சிலே ஏற்றி வைப்பான். பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்! கவிதையைக் கொடுத்து, இசையைத் தொடுத்து, நாடகம் நடித்து பல்வேறு உணர்வுகளை பரிதவித்த பொழுதெல்லாம் பசி நிறைந்த பிள்ளைக்கு பசி மறக்கச் செய்த தமிழ் முத்தமிழ். அந்த முத்தமிழை ரசிக்க பற்பல வழி இருந்தாலும் 90களின் முற்பகுதியில் பிறந்த எனக்கு சினிமா கற்றுக்கொடுத்த பாடம் அதிகம். தேடல் இனிது, மனம் நாடியதைத் தேடி அடைதல் இனிதினும் இனிது, நாடியதை பிறரிடம் ரசித்து உணர்தலின் பொழுது அலாதி இன்பம். நான் ரசித்த சினிமா கலைஞர்களை பற்றி இங்கே பகிர்கிறேன்.. நீங்கா கலைஞன் பாகம் 1 : இந்தக் கூட்டணியை 70s கிட்ஸ் மறக்கவே மாட்டாங்க..!   ராஜா, எஸ்.பி.பி *இளையராஜா - எஸ்.பி.பி* 1966 ஆம் ஆண்டு சினிமாவில் ஒரு புதிய இசை ஒலித்தது. அதே வருடம், கன்னட சினிமாவும் அவரை வரவேற்று வாய்ப்பளித்தது. பின்பே, வந்தோரை வாழவைக்கும் சென்னை அவர் கரத்தைபிடித்து அரவணைத்தது. தன் முதல் பாடல், தமிழில் பாடி வெளிவராமலே சென்றது, இத்தனைக்கும் அது மெல்லிசை மன்னரின் இசையில். பின் கே.வி மகாதேவன் இசையில் மக்கள் திலகத்திற்கும் எம்.எஸ்.வி இசையில் காதல் மன்னனுக்கும் ஆக, "ஆயிரம் நிலவே வா" மற்றும் "இயற்கை என்னும் இளைய கன்னி" என்று 1969 ஆம் ஆண்டில் தமிழில் எஸ்.பி.பி சிப்பிக்குள் இருந்து முத்துக்களாய் வெளிவந்தார். கமலின் திரையுலக வரலாற்றிலேயே அவருக்கு தமிழில் பின்னணி குரல் கொடுத்தது இந்த இசைச்சிற்பி தான். ஆம், கமலுக்கு சிப்பிக்குள் முத்து படத்தில் எஸ்.பி.பி. பின்னணி குரலாக ஒலித்தார்.   "நிலவே என்னிடம் நெருங்காதே" என்ற பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடலை பாடி வாய்ப்பு கேட்டு பின் எம்.எஸ்.வி இசையில் "ஆயிரம் நிலவே வா" என்று முதலில் ஒலித்து "வான் நிலா நிலா அல்ல" என்று மீண்டும் இணைந்து எம்எஸ்வி - எஸ்பிபி கூட்டணி நிலவை வர்ணித்தது. அந்த நிலவை எஸ்பிபியும் விடவில்லை, நிலவும் எஸ்பிபி ஐயும் விடவில்லை. பின் இணைந்த இளையராஜா கூட்டணி நிலவை வர்ணிக்க ஒன்றா, இரண்டா? பல பாடல்கள். "இளைய நிலா" பொழிகிறதே என்று இசைஞானியின் இசையோடு முதலில் இசைந்து, பின் "நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா" என நிலவையும் சொக்க வைத்து, பின் "வா வெண்ணிலா என வெண்ணிலவையும் மயக்கி காதல் நிலவையும் மயக்கினார். "நிலாவே வா" என மனைவியின் பிரிவையும்,மன தடிசலனமும் வெளிப்படுத்தினார். "நிலவு தூங்கும் நேரம்" நிலவையும் நம் மனதையும் எத்தனை கவலைகள் இருந்தாலும் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வழிவகுத்தது. இப்படி நிலவுக்கும் தனக்கும் இருந்த பந்தத்தை "வண்ணம் கொண்ட வெண்ணிலவே" என்ற பாடலின் மூலம் அவர் இசையில் அழகாக இசைந்தார் இசைத்தார்.   ‘பாடும் நிலா’ எஸ்.பி.பி இசைஞானி இந்த நவரச கலைஞனை பற்பல சூழலுக்கு பாடவைத்தார். ஒன்றா, இரண்டா? எஸ்பிபி ஆறு தேசிய விருது வாங்கினார், அதில் சாகர சங்கமம், ருத்ர வீணை போன்ற இளையராஜாவின் இசையில் அமைந்த படங்கள் உண்டு. ஒரு கலைஞனுக்கு இத்தனை முகங்களா என வியக்கும் வண்ணம் இருக்கும் எஸ் பி பி யின் பல பாடல்கள். "காதலின் தீபமொன்று", காதல் அறியாதவன், புரியாதவன் கூட ஒருமுறை பாடலைக் கேட்டால் காதலின் மயக்கம் கொண்டு, காதல் தீபம் ஒன்று நெஞ்சிலே ஏற்றி வைப்பான். அத்தகைய தன்மை கொண்டது. எண்பதுகளில் வாழ்ந்த காதல் மன்னர்களின் தேசிய கீதமாக கூட இருந்திருக்கும் இந்தப் பாடல். கொடுத்த மயக்கத்திலும், காதல் தந்த இணக்கத்திலும் தன்னை மறந்தவர் பலர்.   காதல் இனிது, காதலில் தேடல் இனிது. கடைசி வரை காதலில் ஒரு தேடலை நம் மனதில் கொண்டு செல்லும் பாடல், "கூட்டத்திலே கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா" என்ற பாடல். மைக் மோகனின் வளர்ச்சியில், மிக முக்கியமான மூவரில், எஸ்பிபி ஒருவர் மற்ற இருவர் இளையராஜா, சுரேந்தர். மிக எதார்த்த வரிகள் கொண்டு பாடல் செல்கையில், மிக அழகான கர்நாடக சங்கீதத்தை நுழைத்திடுவர் இந்த கூட்டணி. கேட்கையிலே ஏதோ கோவில் திருவிழாவில் இசை கச்சேரி கேட்பது போல இருக்கும். கிராமத்துக்கு அப்படி ஒரு பாடல், புதுமையான நகரத்திற்கு எப்படி கொடுப்பது? இருக்கிறது, இந்த கூட்டணியின் இசைச்சரம் , "சங்கீத மேகம்". இன்று அவர் நம்மோடு இல்லாவிட்டாலும், அப்பாடலின் வரிகள் போல, "இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்"என்று மலர்ந்து கொண்டிருக்கிறது. உண்மையில் இவர் மூச்சும் இவர் பாட்டும் அணையா விளக்கு தான்.   எஸ்.பி.பி அழகான மனைவி, அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே என்று ஒவ்வொரு இளைஞனும் ஒவ்வொரு பொழுதும் மனதோடு ரீங்காரமிட அமைந்த "கல்யாணமாலை கொண்டாடும் பெண்ணே" இசைஞானியின் இசையை தட்டி எழுப்பும் அந்த சந்தங்கள் அடடா!!! ராஜாவா எஸ்பிபி? யார் சிறந்தவர் என்று எண்ணாமல், இந்தக் கூட்டணி ஒன்று சேர்ந்து பிறர்க்கு போட்டி தரும் கூட்டணி ஆகவே அமைந்தது! தமிழக அளவில் அல்ல இந்திய அளவில் நவரசத் கலைஞன் தான், வாழ்ந்த வாழ்க்கைக்கும் படித்த படிப்புக்கும் சம்பந்தம் இல்லாத வகையில் பாடிய பாடல் , "ஆடி மாச காத்தடிக்க வாடி புள்ள" போன்ற பாடல்கள் கிராமத்தில் பிறந்து கிராமத்திலேயே வாழும் கிராமியக் கலைஞர்களின் இசைக்கு மிகுந்த போட்டி தரும் பாடல். பிறர் குரல் மாற்றிப் பேசுவர், இவர் குரல் மாற்றிப் பாடுவதிலும் வல்லவராய் இசையின் மன்னவராய் ஆகியிருப்பது மிக சுலபமன்று அதீத பயிற்சியால் மட்டுமே முடியும்.   Folk பாடுவதிலும் வல்லவர், கிராமத்தில் "மாங்குயிலே பூங்குயிலே" சேதி ஒன்று என்று தாரை தப்பட்டை கிழிய நகரத்திலே "அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ தென்னாட்டு வேங்கை தான் ஒத்துக்கோ" என்று கால் நடனமாட செய்பவரும் இந்த இன்னிசை கலைஞன் தான். பட்டிதொட்டியெங்கும் பாடல்கள் சேர்ந்தால் தான் படத்தின் வெற்றி. இந்தக் கூட்டணியின் மகத்துவம் இதிலும் தனித்தன்மை வாய்ந்தது. கர்நாடக இசை முறையாய் சிறுவயதில் பயிலவில்லை என்றாலும், பின் நாட்களில் பயின்றார். "சங்கீத ஜாதி முல்லை" எஸ்பிபியின் இசை வாழ்வில் ஒரு மணிமகுடம். இந்தப் பாடல் தரும் சோகம், தேடல், பரிதவிப்பு, எப்படி புனைவது எழுத்தில். "நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம்" என்ற வரிகளின் போது எஸ்பிபி குரலுக்கும் மேலத்திற்கும் கடும் போட்டி நடக்கும். பாடல் முடியும் தருணம் "ஆஸ்கர் அவார்ட்" புண்ணியம் செய்யவில்லை என்றுதான் தோன்றும்.   எஸ்.ஜானகி, இளையராஜா மற்றும் எஸ்.பி.பி Photo: Vikatan " மணியோசை கேட்டு எழுந்து" இருமிக்கொண்டே பாடவேண்டும்! இருப்பினும் பாடல் அழகான தான் இருக்கவேண்டும்!! இது சாத்தியமா? சாத்தியம்! பாடினார், பாடி முடித்தார் இசையை அடுத்த நிலைக்கு அழைத்து தொடுத்தார். " மண்ணில் இந்த காதல்" வைரமுத்துவின் வைர வரிகளில், இசைஞானியின் இசையில்,எஸ்பிபி இன் கந்தர்வக் குரலில், அதிலும் மூச்சுவிடாமல் பாடல் அழகுக்கு அழகு சேர்த்து திரைத்துறைக்கே அழகு சேர்த்தனர் இளையராஜா- எஸ்பிபி!!! அமுதும் தேனும் போல், தமிழருக்கு மெல்லிசையில் அற்புத பாமாலைகள் பல தந்து இந்நாள்வரை இசையால் வசமாகா இதயம் எது என்று நாம் உணரும் படி நம்மை பல சந்தர்ப்பங்களிலும் மன ஓட்டத்திற்கு இணங்க இந்தப் பாடல்கள் நம் நெஞ்சை அள்ளி அணைத்து அரவணைக்கும் தன்மை உடையது. மீண்டும் இப்படிப்பட்ட ஒரு அற்புதம் தமிழ் திரையில் அமைவது சாத்தியம் இல்லை என்றே கூற வேண்டும். -த.செங்கதிர் தாசன் (இளையராஜா- எஸ்.பி.பி காம்போவில் உங்களுக்கு பிடித்த பாடலை மறக்காமல் கமெண்ட் பண்ணுங்க...!)   https://www.vikatan.com/oddities/miscellaneous/article-about-spb-and-ilayaraja-combo
  • நான் அடிக்கடி சொல்லுறனான் கண்டியளோ....😎 இலங்கைக்கு வருமானம் வாறதெண்டால் அழிவுகளாலை தான்....💣
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.