Jump to content

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
குழாய் நீர் வசதி எங்கள் ஊருக்கு வந்த பிறகும் எங்கள் வீட்டிற்கு மட்டும் இணைப்பைப் பெறாமலிருந்தோம். எந்தக் காலத்திலும் வற்றாத கிணறு வளவில் இருந்தது. நல்ல தண்ணீர். எந்தக் குறையும் இல்லை. எதற்கு குழாய் நீர் என்று நான் சாதாரணமாக கேட்டுவிட்டு இருந்துவிட்டேன்.
ஊரில் வீட்டில் வசிக்கும் உம்மா, ”இந்த பீ.எச்.சைகளின் தொல்லை தாங்கவில்லை” என்று அடிக்கடி புலம்பிக் கொண்டேயிருந்தார். (Public Health Inspector (PHI)
”ஊரில் உள்ள எல்லா சீமெந்துத் தண்ணீர் தொட்டிகளையும் உடைத்துக் கொண்டு வருகிறார்கள். ஆர்பிக்கோ டாங்கி மட்டுந்தான் பயன்படுத்தலாம்” என்றார்கள். சீமெந்து டாங்கிகள், சுத்தமாக கழுவிப் பயன்படுத்தினால் எந்தக் குறைபாடுகளும் இல்லாதது. முதலாளித்துவத்திற்கு இந்த அதிகாரிகள் எப்படியெல்லாம் வால்பிடிக்கிறார்கள் என்று எரிச்சல்படத்தான் முடிந்ததே தவிர, வேறு வழி தெரியவில்லை. நன்றாக எந்தக் குறைகளும் இல்லாமல் பயன்படுத்திக் கொண்டிருந்த சீமெந்து நீர்த்தாங்கியை கூலி கொடுத்து ஆள்பிடித்து உடைத்துவிட்டு, பிளாஸ்டிக் நீர்தாங்கியை வாங்கிவைத்தோம்.
மருத்துவமனைக்கு என்ன நோய் என்று சொல்லிக் கொண்டு போனாலும், கிணற்று நீரா, குழாய் நீரா குடிப்பதென்று கேட்பது வேறு வழக்கத்திற்கு வந்துவிட்டது. கிணற்று நீர் குடிப்பதால் நோய்கள் வருவதாக ஊரில் 90 சதவீதமான மக்கள் நம்பத் தொடங்க, உம்மாவுக்கு அந்தப் பயமும் தொற்றிக் கொண்டது. ”என்னம்மா, நம் மூதாதையர்கள் எல்லாம் குழாய் நீர் குடித்தா வாழ்ந்தார்கள். ஆரோக்கியமாக வாழவில்லையா? என்ன கோதாரி இது?” என்று எரிச்சல்பட்டுக் கொண்டே குழாய் இணைப்பையும் எடுத்துக் கொடுத்தேன்.
குழாய் நீர் இணைப்பும், பிளாஸ்டிக் நீர் தாங்கியிற்கும் 50 ஆயிரம் ரூபா அளவில் செலவானது.
ஊரில் வளவுகளில் இருந்த பெரும்பாலான கிணறுகளை காங்ரீட் போட்டு மூடிவிட்டார்கள். ஆனால் நாங்கள் வளவில் வற்றாமல் நீர் ஊறும் கிணற்றை மூடுவதில்லை என்ற எண்ணத்தில் உறுதியாக இருந்தோம். இன்னுமொரு 30 ஆயிரம் ரூபாவு செலவு செய்து கிணற்றுக்கு மூடி தயாரித்தோம். சூரிய ஒளி, காற்று புகும்படியாக சதுரக்கட்டங்களால் இடைவெளி கொண்ட வலைபோன்ற ஆனால் உறுதியான இரும்பு மூடி.
ஆனாலும் பிரச்சினை முடிந்தபடியாக இல்லை. ஒவ்வொரு முறையும் பி.எச்.ஐ. கண்காணிப்புக்காக வரும்போது அந்தக் கிணற்றுக்குள் பூதம் தேடுவதே வேலை.
இத்தனைக்கும் குளிப்பதற்கு துணிகள் துவைப்பதற்கு செடிகளுக்கு நீர்வார்ப்பதற்கு என்று தினமும் கிணற்றில் தண்ணீர் அள்ளுகிறோம். அது மிகவும் சுத்தமாகவே இருக்கின்றது.
இரண்டு தினங்கள் முன்பு கண்காணிப்புப் பணிக்காக வீடுவீடாகச் சென்ற பி.எச்.ஐ. கிணற்றிலிருந்து நுளம்புகள் உருவாகும் அபாயம் பற்றி வகுப்பெடுத்துள்ளார்கள். கிணற்றுக்குள் மீன்கள் உயிர் வாழ்கின்றன. அதெப்படி அங்கு நுளம்பு இருக்கும்? என்று உம்மா கேட்டுள்ளார்.
”மீனுள்ளதா தெரியவில்லையே?” என்று உற்று உற்றுப் பார்த்திருக்கிறார்கள்.
அவ்வளவு பெரிய மீன் தெரியவில்லை!
அதனால் அற்புதமான ஒரு தீர்வு சொல்லியிருக்கிறார்கள்.
புதிய மீன்களைக் கொண்டுவந்து கிணற்றுக்குள் விடுங்கள் என்று.
”மீன்கள் தான் இருக்கே!”
”இந்த மீன்கள் சரிவராது. இதனைத் தூண்டில்போட்டு பிடித்து வெளியேற்றுங்கள்”
இப்போது இஸ்தான்புல்லில் இருக்கும் என் தொலைபேசி அலறியது.
இது என்ன லாஜிக் எதுக்கு கிணற்றில் இருக்கும் மீனைத் தூண்டில்போட்டுப் பிடிக்கவேண்டும். எனக்கு உண்மையில் விளங்கவில்லை.
உம்மாவின் பிரச்சினை, யார் தூண்டில்போடுவது, பழக்கமில்லாத வேலையை எப்படிச் செய்வது இப்படியாக.
அவர்களைத் தூண்டில் போட்டு வெளியேற்றக் கேட்டிருக்கலாமே! என்றேன் நான். நேற்று வாட்ஸ்அப் அதிரும்படியாக குடுபத்திற்குள் இதே கதைதான். நோன்பின் பிடியில் காய்ந்து கிடக்கும் வயிற்றில் வலி எடுக்கச் சிரித்தாயிற்று.
அதுவும், மீன்களை வாங்கிக் கொண்டு எம்.ஓ.எச் அலுவலகத்திற்குச் சென்று மீன்வாங்கிவிட்டோம் என்று காண்பிக்க வேண்டுமாம். அதன் பிறகே அவற்றைக் கிணற்றில் இறக்க வேண்டுமாம். மீண்டும் எம்.ஓ.எச் அலுவலகத்திற்குச் சென்று, மீன்களைக் கிணற்றிற்குள் இறக்கிவிட்டோம் என்று அறிவித்தல் செய்ய வேண்டுமாம். அவ்வாறு செய்தால் அவர்கள் அளிக்கும் ஒரு ரிசிப்டை வீட்டில் பத்திரமாக வைத்திருக்க வேண்டும். கிணற்றுக்குள் மீன்கள் இருப்பதற்கு அந்த ரிசிப்ட்தான் சாட்சி.
(Medical Officer in Health- சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) இந்த அலுவலகத்தில்தான் (Public Health Inspector (PHI) இருப்பார்.)
இப்படிச் செய்யாவிட்டால் வழக்கு எழுதிவிடுவோம் என்று எச்சரித்துப் போயுள்ளார்கள். உம்மா ஒரே பதற்றமாக இருக்கிறார். டெங்கு ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரில் ஊரையே வெறும் காங்கரீட் காடாக்கிக் கொண்டு வருபவர்கள் மீது நாம் தான் வழக்குத் தொடுக்க வேண்டும், சும்மா இருங்கள் என்றேன். பத்ரியோ, வழக்கு ஒத்திகை வரைச் செய்து காட்டி உம்மாவோடு ஒரண்டை இழுத்துக் கொண்டு இருக்கிறான்.
ஒரு கிணற்றைப் பாதுகாக்க நினைத்தது குற்றமாங்க? பாழ்கிணறு என்றால்கூடப் பரவாயில்லை. வீட்டோடு இருக்கும் பயன்படுத்தும் கிணறு!
 

Sharmila Seyyidக்கு  நன்றி 

Writer, Activist & Mentor
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

மேல் உள்ளவரை சமூக போராளி என்று தராளமாக அழைக்கலாம் சர்மிளா சையத்துக்கு  வாழ்த்துக்கள் . 

Edited by பெருமாள்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

குழாய் மூலம் தண்ணீர் வர தொடங்கினால் யாழ்ப்பாணத்திற்கும் இதே போல செய்வாங்களோ?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மித்ரா என்ற பெயரில் எழுதுபவர் . சுடர் ஒளி, தினக்குரல், வீரகேசரி, தினகரன் போன்ற வாசகர்களுக்கு இவரை தெரிந்து இருக்கும் .

1 minute ago, ஏராளன் said:

குழாய் மூலம் தண்ணீர் வர தொடங்கினால் யாழ்ப்பாணத்திற்கும் இதே போல செய்வாங்களோ?

வடமராட்சியில் குழாய் மூலம்தான் நன்நீர் சப்பிளை  நண்பரின் கதையும் இவவின்  கதையும் எந்த வித்தியசமும் இல்லாமல் இருக்கின்றது நாங்கள் சிறு வயதில் தேடி பருகிய நன் நீர் கிணறுகளை சீமெந்து  மூலம் மூடி வைத்து உள்ளார்கள் .

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, பெருமாள் said:

மித்ரா என்ற பெயரில் எழுதுபவர் . சுடர் ஒளி, தினக்குரல், வீரகேசரி, தினகரன் போன்ற வாசகர்களுக்கு இவரை தெரிந்து இருக்கும் .

வடமராட்சியில் குழாய் மூலம்தான் நன்நீர் சப்பிளை  நண்பரின் கதையும் இவவின்  கதையும் எந்த வித்தியசமும் இல்லாமல் இருக்கின்றது நாங்கள் சிறு வயதில் தேடி பருகிய நன் நீர் கிணறுகளை சீமெந்து  மூலம் மூடி வைத்து உள்ளார்கள் .

கிணறு நுளம்பு பெருக்கத்திற்கு காரணமாகுமோ? வாளி பாவிக்காத கிணற்றில் நுளம்பு உற்பத்தியாகும் என்று நினைக்கிறன்.

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

கிணறு நுளம்பு பெருக்கத்திற்கு காரணமாகுமோ? வாளி பாவிக்காத கிணற்றில் நுளம்பு உற்பத்தியாகும் என்று நினைக்கிறன்.

மீன்  உள்ள கிணற்றில் நுளம்பு பெருகாது 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆக மொத்தத்தில் நம் இயற்கையை பாழாக்க போட்டி போடுகிறோம். அது ஏற்கனவே சீற்றங் கொள்ள ஆரம்பித்து விட்ட்து .   இந்த மனித சமுதாயத்தை  யார் காப்பாற்றுவார்.? 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 8/5/2021 at 10:32, பெருமாள் said:

மித்ரா என்ற பெயரில் எழுதுபவர் . சுடர் ஒளி, தினக்குரல், வீரகேசரி, தினகரன் போன்ற வாசகர்களுக்கு இவரை தெரிந்து இருக்கும் .

வடமராட்சியில் குழாய் மூலம்தான் நன்நீர் சப்பிளை  நண்பரின் கதையும் இவவின்  கதையும் எந்த வித்தியசமும் இல்லாமல் இருக்கின்றது நாங்கள் சிறு வயதில் தேடி பருகிய நன் நீர் கிணறுகளை சீமெந்து  மூலம் மூடி வைத்து உள்ளார்கள் .

நேரில் கண்ட உண்மை, 5 பரப்பு தோட்ட காணிக்கும் எங்கள் குடும்பத்திற்கு மட்டுமல்லாது அயலவர்களுக்கும் அலுக்காமல் நல்ல தண்ணீர் கொடுத்த ஊற்று கிணறு. 18 முழ ஆழம் (30 அடி), ஒரு முழு பனை அளவு துலா,  நீர் தொட்டிகள்,  பத்தல் இப்படி full suite. இப்ப கிணற்றை வலைக் கம்பி போட்டு மூடி விட்டார்கள். மோட்டார் இயந்திரம் மட்டும் வேலை செய்கிறது. வாய்க்கால்களில் தண்ணீர் தேங்கி நிக்க கூடாது, புல் பூண்டுகள் பெரிதாக வளர்ந்து நிக்க கூடாது. இப்படி பல சட்டங்கள். நாங்கள் இயக்கையில் இருந்து ரொம்ப தூரம் விலகி வந்து விட்டோம்.

எனது ஆங்கிலேய நண்பர், லண்டனில் வாழ்ந்தவர் , இப்போ வடக்கிற்கு போய் தேனீ வளர்ப்பில் ஈடுபட்டுள்ளார், முழு குடும்பமும் மரக்கறி மட்டும் சாப்பிடுகிறார்கள். எனது பக்கத்து வீட்டு ஆங்கிலேயர்கள் கணவனை தவிர இரு பிள்ளைகளுடன் தாய் மரக்கறி மட்டும் பிறந்த காலம் தொட்டு சாப்பிடுகிறார்கள்.

 • Thanks 1
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.