Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

புலிகளின் தலைவரின், ஒளிப்படம் பொறிக்கப்பட்ட உடையுடன் வந்த தமிழக மீனவர்கள்- விசாரணை முன்னெடுப்பு

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
7 minutes ago, பெருமாள் said:

விளங்கப்படுதுங்க ?

நாளைக்கு எமது மீனவர்களை சுட்டு கொன்றபின், அவர்களுக்கு தலைவரின் படம் பொறித்த உடைகளை அணிவித்து அவர்களை புலி என்று சொல்லலாம். தலைவரின் படத்துடன் TAG பன்னியவரை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் உள்ளே வைத்திருப்பதை நீங்கள் அறியவில்லையா? 

Edited by zuma
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, zuma said:

நாளைக்கு எமது மீனவர்களை சுட்டு கொன்றபின், அவர்களுக்கு தலைவரின் படம் பொறித்த உடைகளை அணிவித்து அவர்களை புலி என்று சொல்லலாம். தலைவரின் படத்துடன் TAG பன்னியவரை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் உள்ளே வைத்திருப்பதை நீங்கள் அறியவில்லையா? 

வடகிழக்கில் நடக்கிற பிரச்சனைகளை  பற்றி அழுவதுக்கு ஆள் இல்லை  உங்கடை கற்பனையான பிரச்சனைக்கு சீமானை இழுத்து கடைசியில் அப்படி நடந்தால் எனும் நிலையில் கேவலமாய் இல்லை ?

Link to comment
Share on other sites

இலங்கை படை வெட்டும் சுடும் என்றார்கள் எமது தம்பிகள் ஒரு ஐவர் மட்டும் போய் ஒட்டுமொத்த இலங்கை கப்பல் படையையே பயத்தில் உறைய வைத்துள்ளார்கள்.

புகைப்படம் எடுத்து விட்டு விடுதலை செய்வதை தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. அவர்கள் அண்ணனின் போர்குணத்தை நன்கறிந்தே உள்ளார்கள். 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

எல்லை தாண்டி வந்த இந்திய மீனவர்களை கைது செய்து, அவர்களது படகு, இயந்திரங்களையும் பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் நிறுத்திய இலங்கை கடற்படை. உடையில் புலிகளின் தலைவரின் பெயரும் படமும் பொறிக்கப்பட்டிருந்ததை  கண்டவுடன்: வந்த மீனவரை புகைப்படம், காணொளி எடுத்துப்போட்டு அனுப்பிவிட்டு விசாரணை செய்யினமாம். அச்சாப்பிள்ளையள். இதுக்குப் பின்னால, வடக்கில் எத்தனை அப்பாவிகள் இவர்கள் எழுதும் இந்தக் கதையில், வந்த மீனவர்களுடன் தொடர்பை பேணினார் என்று  கைது செய்யப்படப் போகிறார்களோ, யானறியேன் பராபரமே? வாறது வாறதெல்லாம் நமக்குத்தான் வரவேணுமா? சேருகிற தமிழ் கடற்படையையும் தமிழக மீனவர்களை சுடுங்கோடா என்று கட்டளை போடபோறானுகள். 

Link to comment
Share on other sites

12 hours ago, zuma said:

நான் சொல்ல விளைவது எதுவெனில் உயர்திரு சீமான் அவர்களின் வெட்டி போச்சை உண்மையென நம்பி செயற்படக்கூடிய சில இளஞ்சர்கள் உள்ளனர் என்பதே.

தற்போதைக்கு தமிழ்நாட்டில்மட்டும் 30 இலட்சம் பேருக்கு மேல் உள்ளார்கள்.  உலகம் பூராவும்!  கணக்கெடுக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 8/5/2021 at 06:15, தமிழ் சிறி said:

இலங்கை கடற்படையினரால் சுற்றிவளைக்கப்பட்ட நிலையில், அதில் ஒரு படகில் இருந்தவர்கள் அணிந்திருந்த உடையில் புலிகளின் தலைவரின் பெயரும் படமும் பொறிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இதனை அவதானித்த கடற்படையினர் குறித்த மீனவர்களை ஒளிப்படம் மற்றும் காணொளி எடுத்தபின்னர் அவர்களை விடுவித்திருந்தனர்.

ச்சே....  கொரோனாவெல்லே! மறந்தே போச்சு. அதுதான் காணொளி ஒளிப்படத்தோட நிறுத்திற்றினமாமில்லே. ஆமா....  சுற்றி வளைக்கேக்க தொற்றாதோ அது? அதுதான் அவன்பிள்ளை துணிஞ்சு போட்டாந்திருக்கான்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தமிழகன் said:

இலங்கை படை வெட்டும் சுடும் என்றார்கள் எமது தம்பிகள் ஒரு ஐவர் மட்டும் போய் ஒட்டுமொத்த இலங்கை கப்பல் படையையே பயத்தில் உறைய வைத்துள்ளார்கள்.

புகைப்படம் எடுத்து விட்டு விடுதலை செய்வதை தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. அவர்கள் அண்ணனின் போர்குணத்தை நன்கறிந்தே உள்ளார்கள். 

தமிழகன்,

வீறாப்புப் பேசாமல், சாதுரியமாக நடக்க முனையுங்கள். பிரபாகரனின் படம் போட்ட உடையணிந்தவர் சொந்தச் செலவில் சூனியம் வைத்துக் கொண்டார். பிரச்சனை அவருக்கு மட்டுமல்ல அவரோடு கூட வந்தவர்களுக்கும். 

விரும்பிய உடையை அணியலாம். அதில் தவறேதும் இல்லை. ஆனால் இலங்கையின் கடற் பரப்புக்குள் செல்லும்போது மூளையையும் கொஞ்சம் பாவிக்க வேண்டுமல்லவா..?

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Kapithan said:

விரும்பிய உடையை அணியலாம். அதில் தவறேதும் இல்லை. ஆனால் இலங்கையின் கடற் பரப்புக்குள் செல்லும்போது மூளையையும் கொஞ்சம் பாவிக்க வேண்டுமல்லவா..?

முதலில் இன்னொருநாட்டு பிரஜையான அவர்  அவர் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்ததே தவறு,

தவறுக்குமேல் தவறு செய்தவரை மூளையை பாவிக்க சொல்லி கேட்பது வேடிக்கை,

சிறு பராயத்திலிருந்து தனது முதுமை எட்டி பார்க்கும் காலம்வரை எந்தவித விளம்பரமும் இல்லாது, மாவீரர்நாளில் மட்டும் ஒரேயொரு சிற்றுரையாற்றுவதைதவிர தன்னை பற்றிய எந்தவித அலப்பறைகளும் இல்லாது வாழ்ந்த ஒருவரின் பெயரை வைத்து  தாய் தமிழகத்திலும், தப்பியோடி தட்டச்சு தளபதிகளாய் மற்றவர்களுக்கு இன்று சுத்தி சுத்தி துரோகிபட்டம் வழங்கும் ’’உச்சா’’ நீதிமன்ற தளபதிகளான எம்மவர்களில் ஒரு சிலரும் பண்ணும் விளம்பரம் கலந்த அலப்பறை இருக்கிறதே....

அதுவும் ஒருவகை இந்த எல்லைதாண்டி கரிகாலன் படம் பதித்த டீ சேர்ட்டுடன் இலங்கை கடற்பரப்பில் நுழைந்து சிங்களவன் கடற்படையிடம் சிக்கிகொண்டவர்களின் மூளையில்லாத செயற்பாடுதான்.

 • Like 1
Link to comment
Share on other sites

16 hours ago, தமிழகன் said:

இலங்கை படை வெட்டும் சுடும் என்றார்கள் எமது தம்பிகள் ஒரு ஐவர் மட்டும் போய் ஒட்டுமொத்த இலங்கை கப்பல் படையையே பயத்தில் உறைய வைத்துள்ளார்கள்.

புகைப்படம் எடுத்து விட்டு விடுதலை செய்வதை தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. அவர்கள் அண்ணனின் போர்குணத்தை நன்கறிந்தே உள்ளார்கள். 

வணக்கம் தமிழகன்! உங்கள் அண்ணனின் "போர்க்குணத்தை" நாங்கள் கண்ட ஒரு சம்பவத்தை இங்கே பகிர அனுமதியுங்கள்!

2020 டிசம்பர் 12 இல் அமெரிக்காவின் இலங்கைத் தமிழ்ச்சங்கம் வருடாந்த "தமிழர் சங்கமம்" நிகழ்ச்சியை இணையம் மூலம் நடாத்தியது. உங்கள் அண்ணனும் பேச்சாளராக இணையவழியில் கலந்து கொண்டார். அவர் உரையாற்ற தமிழகத்தில் இருந்து இணைந்து கொண்ட நேரம் யாரோ ஆர்வக் கோளாறுத் தம்பிகள் மேசையின் வலது மூலையில் கட்சிக் கொடியை வைத்து விட்டார்கள். அண்ணன் கமெராவைப் பார்த்தபடியே வலது கையால் கொடியை கமெராவின் பீல்டில் இருந்து தள்ளி வைத்து விட்டார்! அதன் பிறகு 45 நிமிடம் வரை ஆக்ரோஷமாகப் பேசினார்!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, தமிழகன் said:

இலங்கை படை வெட்டும் சுடும் என்றார்கள் எமது தம்பிகள் ஒரு ஐவர் மட்டும் போய் ஒட்டுமொத்த இலங்கை கப்பல் படையையே பயத்தில் உறைய வைத்துள்ளார்கள்.

புகைப்படம் எடுத்து விட்டு விடுதலை செய்வதை தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. அவர்கள் அண்ணனின் போர்குணத்தை நன்கறிந்தே உள்ளார்கள். 

உங்கள் அண்ணரின் வீடியோ பேச்சுக்களை வெளிநாடுகளில் வாழ்கின்ற  ஈழதமிழர்கள் கேட்பது போன்று இலங்கை படையினரும் கேட்டிருப்பார்கள்.அதனால் தான் பயம் ஏற்பட்டிருக்கும்.

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 9/5/2021 at 19:21, valavan said:

தமிழகத்திலும், தப்பியோடி தட்டச்சு தளபதிகளாய் மற்றவர்களுக்கு இன்று சுத்தி சுத்தி துரோகிபட்டம் வழங்கும் ’’உச்சா’’ நீதிமன்ற தளபதிகளான எம்மவர்களில் ஒரு சிலரும் பண்ணும் விளம்பரம் கலந்த அலப்பறை இருக்கிறதே....

அதுவும் ஒருவகை இந்த எல்லைதாண்டி கரிகாலன் படம் பதித்த டீ சேர்ட்டுடன் இலங்கை கடற்பரப்பில் நுழைந்து சிங்களவன் கடற்படையிடம் சிக்கிகொண்டவர்களின் மூளையில்லாத செயற்பாடுதான்.

என்னத்த சொல்ல ஓமென்றும் சொல்ல ஏலா , இல்லையென்றும் சொல்ல ஏலாமல் இருக்கு எங்களுக்கு பச்சை குத்தியாச்சு தெரியுமா என்ன ??  
பல பேரை பார்த்தாச்சு அதனால கண்டுக்கிறதில்ல 

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.