Jump to content

மநீம நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா... கமல்ஹாசனின் சர்வாதிகாரம்தான் காரணமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மநீம நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா... கமல்ஹாசனின் சர்வாதிகாரம்தான் காரணமா?

கமல்ஹாசன்

கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யத்திலிருந்து நிர்வாகிகள் ராஜினாமா செய்திருக்கிறார்கள். பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், கமலின் சர்வாதிகாரப் போக்குத்தான் காரணம் எனப் பலரும் விமர்சனம் செய்கின்றனர். உண்மையான காரணம் என்ன என விசாரித்தோம்...

தமிழக சட்டப்பேரவை முடிவுகளுக்குப் பிறகு தமிழக அரசியலில் எதிர்பாராத வகையில் பல்வேறு காட்சிகள் அரங்கேறிவருகின்றன. அவற்றில் சமீபத்தில் மக்கள் நீதி மய்யத்தின் முக்கியப் பொறுப்பிலிருந்து எட்டுப் பேர் வெளியேறியிருப்பது மிக முக்கியமான விவாதப் பொருளாகியிருக்கிறது. மக்கள் நீதி மய்யம் தொடங்கப்பட்டது முதல் பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளாகிவந்தது. பா.ஜ.க-வின் பி டீம். தி.மு.க ஆட்சிக்கு வருவதைத் தடுக்கவே பா.ஜ.க வழிகாட்டுதலின் பேரில் கமல்ஹாசன் கட்சியைத் தொடங்கியிருக்கிறார். தேர்தல் முடிந்ததும் கட்சியைக் கலைத்துவிடுவார் எனப் பல விமர்சனங்கள் மக்கள் நீதி மய்யம் மீது வைக்கப்பட்டது. இந்த விமர்சனங்களையெல்லாம் தாண்டி நாடாளுமன்றத்தில் கணிசமான வாக்கு விகிதத்தைப் பெற்றது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம். அதேபோல தனியாகக் கூட்டணி அமைத்து, சட்டப்பேரவைத் தேர்தலையும் சந்தித்தது. இதில் கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிட்ட கமல், சிங்காநல்லூர் தொகுதியில் டாக்டர் மகேந்திரன், மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட பத்மப்ரியா ஆகியோர் கணிசமான வாக்குகளைப் பெற்று கவனம் ஈர்த்தனர். தேர்தலில் மக்கள் நீதி மய்யம் எதிர்பார்த்த அளவுக்கு வாக்குகளைப் பெறவில்லை.

 
மக்கள் நீதி மய்ய அறிக்கை
 
மக்கள் நீதி மய்ய அறிக்கை

தேர்தல் தோல்விகளுக்குப் பிறகு கட்சியைச் சீரமைக்க உள்ளதாகக் கூறி மூத்த நிர்வாகிகளைப் பதவி விலகக் கோரியுள்ளார் கமல்ஹாசன். அந்தக் கூட்டத்திலேயே துணைத் தலைவராக இருந்த டாக்டர் மகேந்திரன் கட்சியின் பதவியை மட்டுமல்ல, கட்சியிலிருந்தும் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். கமலின் நடவடிக்கையில் இருக்கும் அதிருப்தியே அதற்குக் காரணம் என பத்திரிகையாளர்கள் சந்திப்பிலும் மகேந்திரன் கூறினார். கமீலா நாசர் சில வாரங்களுக்கு முன்புதான் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகினார். கட்சி தொடங்கப்பட்டது முதல் கமல்ஹாசனுடன் இருந்த பலரும் தற்போது கட்சியிலிருந்து விலகிவருகின்றனர். இதற்கு, கமலின் சர்வாதிகாரப் போக்கும் காரணம் எனக் கட்சியிலிருந்து வெளியேறுபவர்கள் கூறிவருகின்றனர்.

 

கமல்ஹாசன், கட்சி உறுப்பினர்களிடம் சர்வாதிகாரமாக நடந்துகொள்கிறாரா என மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகிய வழக்கறிஞர் ராஜசேகரிடம் பேசினோம். “கமல்ஹாசன் திரைத்துறையில் எப்படி சர்வாதிகாரமாக இருக்கிறாரோ, அதேபோலத்தான் கட்சியிலும் நடந்துகொள்வார். மக்கள் நீதி மய்யத்தில் சேரும் ஒருவரையும் கட்சியில் தக்கவைத்துக்கொள்ளும் வகையில் முதலில் அதிக கவனம் கொடுத்து, ஈர்ப்புடன் பேசுவார் கமல். ஆனால், இரண்டு மாதம் ஆன பின்னர்தான் அவரது சுயரூபம் வெளியே வரும். தன்னுடைய சுயலாபத்துக்கு ஒருவரை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பது கமல்ஹாசனுக்கு அத்துப்படி. அதைப் புரிந்துகொண்டு முதல் ஆளாகக் கட்சியிலிருந்து வெளியேறியவன் நான்தான். இப்போது இன்னும் சிலரும் அதைப் புரிந்துகொண்டு வெளியேறிவருவதைப் பார்க்க முடிகிறது. வெளியேறுபவர்களின் எண்ணிக்கை இனி அதிகரிக்கும். கட்சியில் கமல் சர்வாதிகாரத்தனத்துடன் மட்டுமல்ல, பணத்தைக் குறிக்கோளாக வைத்து, அதைப் அடைவதற்காகவும் எந்த எல்லைக்கும் செல்வார். இப்போது கமல் கட்சியிலிருக்கும் பலரும் பெரும் பணக்காரர்கள்தான். மாற்று அரசியலை எதிர்பார்க்கும் யாரும் இப்போது மக்கள் நீதி மய்யத்தில் இல்லை. ஊதியத்துக்காகப் பணியில் இருப்பவர்கள்தான் இப்போது கட்சியில் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார்கள். கட்சியில் யாருக்கும் அதிகாரம் இருக்காது. `பிக் பாஸ்’ நிகழ்ச்சிபோலத்தான் மக்கள் நீதி மய்யக் கட்சியின் செயல்பாடுகள் அனைத்தும் இருக்கும். உணர்வும் உணர்ச்சியும் பிணைந்து இருக்கும் அரசியல் கட்சிகள்தான் மக்கள் மத்தியில் வெற்றிபெறும். கமல்ஹாசன் தனக்கு சினிமாவில் இருக்கும் புகழைவைத்து அரசியலில் வெற்றி பெறலாம் என்ற ஆசையில் கட்சியைத் தொடங்கினார். ஆனால், ஒரு நாள் எந்த அறிவிப்பும் இல்லாமல் ட்விட்டரிலேயே கட்சியைக் கலைத்துவிட்டு நடிக்கச் சென்றுவிடுவார் பாருங்கள்.

 
வழக்கறிஞர் ராஜசேகர்
 
வழக்கறிஞர் ராஜசேகர்

கட்சியிலிருக்கும் எந்த உறுப்பினரும் சுயமரியாதையோடு நடத்தப்படுவதில்லை. மாறாக, கார்ப்பரேட் கம்பெனிகளின் பாணியில் ஆண்டான், அடிமை முறையில்தான் நடத்தப்படுகிறார்கள். தலைவரே தொண்டர்களை அவமானப்படுத்துவது மக்கள் நீதி மய்யத்தில்தான் நடக்கும். இதைத்தான் நான் கட்சியிலிருந்து வெளியில் வந்தது முதல் சொல்லிவருகிறேன். தற்போது டாக்டர் மகேந்திரனும் அதைச் சொல்லியிருக்கிறார்.”

 

மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்துள்ள முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி மௌரியாவிடம் பேசினோம். “கட்சி ஜனநாயகரீதியில்தான் நடக்கிறது. எடுக்கும் முடிவுகள் அனைத்தும் பொதுக்குழுவில் விவாதிக்கப்பட்டு, பொதுக்குழு உறுப்பினர்களின் ஆலோசனையுடன்தான் செயல்படுத்தப்படுகின்றன. கட்சியில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் அனுபவம் இருக்கும். அவற்றை எப்படி எதிர்கொள்கிறோம், எடுத்துக்கொள்கிறோம் என்பதைப் பொறுத்துத்தான் நமக்கான அனுபவங்களும் அமையும். அப்படித்தான் கட்சியிலிருந்து வெளியில் செல்லும் ஒவ்வொருவரும் தங்கள் அனுபவங்களை வெளிப்படுத்துகிறார்கள் என்று நினைக்கிறேன். தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தோல்வி அடைந்த பின்னர் அது குறித்து விவாதிக்க, செயற்குழு உறுப்பினர்கள் அனைவரையும் தலைவர் கமல்ஹாசன் அழைத்தார். “சட்டமன்றத் தேர்தல் தோல்வியை ஒட்டி, கட்சியைப் புனரமைக்க வேண்டியிருக்கிறது. அதனால் தற்போது பதவியில் இருப்பவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். கட்சியைப் புனரமைக்க வேண்டும் என்பதில் எல்லோருக்கு ஒத்த கருத்து இருந்ததால், அதை ஏற்று, பதவியை ராஜினாமா செய்தோம். இதில் எந்த முரண்பாடும் யாருக்கும் இல்லை. முரண்பாடு இருந்தவர்கள் வெளியேறியிருக்கிறார்கள். அவர்களைத் தலைவர் தடுக்கவும் இல்லை. இன்னும் ஒன்றிரண்டு நாள்களில் கட்சியில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படவுள்ளனர். அதற்கான அனைத்து அதிகாரத்தையும் தலைவருக்குச் செயற்குழு உறுப்பினர்கள் அளித்துள்ளோம்.

மௌரியா - மநீமா முன்னாள் பொதுச்செயலாளர்
 
மௌரியா - மநீமா முன்னாள் பொதுச்செயலாளர்
 

மக்கள் நீதி மய்யத்தைப் பொறுத்தவரை, கட்சியின் தலைமை எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்பட்டு, தொடர்ந்து நான் மக்கள் நீதி மய்யத்துடன் இணைந்து செயல்படுவேன். மற்றபடி கட்சியில் சர்வாதிகாரப்போக்கு நிலவுவதாகப் பேசுவதிலெல்லாம் எனக்கு உடன்பாடு இல்லை” என்றார்.

 

https://www.vikatan.com/government-and-politics/politics/kamal-is-the-is-reason-behind-the-mahendran-and-all-resign-form-party

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.