Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

No photo description available.

'படிமப்புரவு: NTT'

இம்மறத்தியைப் பற்றி எனக்கு ஏதும் தெரியாது. வேசுபுக்கில் மேய்ந்து கொண்டு போகும்போது இவர்தொடர்பாய் கிடைத்த வைரத்திற்குச் சமனான சிறு தகவலை விரித்து எழுதியிருக்கிறேன். 

இவர் முதலில் மாலதி படையணி போராளியாய் இருந்து பல களங்கள் கண்டவர். அப் படையணியில் '2ம் லெப்டினன்' (துய தமிழில் 'அரையர்') தர நிலையில் இருந்தார். சிங்களத்தை எதிர்த்து சுடுகலனால் களத்திலும், தூவலால்(பேனா) கவிதையாலும் ஆடினார். ஓம், நன்றாக கவிதை எழுதுவார். தான் எழுதிய கவிதையை தானே கவிமொழிவார். நான்காம் ஈழப்போர் காலத்தில் இவர் எழுதி, இவரே கவிமொழிந்த ஒரு கவிதை த.தே.தொ. இன் 'கவிப்பயணம்' என்னும் நிகழ்ச்சியில் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

அந்நிகழ்ச்சி: kavippayanam-poem-travel

 பின்னாளில், தன் தாய் நிலம் தொடர் சிங்கள ஆக்கிரமிப்புக்குள்ளாகிக் கொண்டிருந்தபோது, அதை மீட்க தானுமொரு கரும்புலியாய் செல்ல முடிவெடுத்தார். கரும்புலிகள் அணியில் இணைவதற்காய் காத்திருந்து அனுமதிபெற்றார். கரும்புலிகளின் கடைசிப் பயிற்சிப் பாசறையில் பயிற்சி முடித்து தரைக்கரும்புலியாய் வெளியேறியவர், முள்ளிவாய்க்காலில் சிங்கள ஆக்கிரமிப்புப் படைகளை இறுதிவரை தீரத்தோடு எதிர்த்து களமாடி வீரகாவியம் ஆனார்.

 

இலைமறை காயாய் இருந்திட்ட இவர்கள் உலகம் வியக்க நடந்தார்!

 

ஆக்கம் & வெளியீடு
நன்னிச் சோழன்

 

May be an image of 1 person and text

'படிமப்புரவு: NTT'

May be an image of 1 person

'படிமப்புரவு: NTT'

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • விடுதலை புலிகளின் கனவு ஈழம் ..........தமிழரின் நிலைப்பாடு வடக்கு கிழக்கு தாயகம் .... விடுதலைப்புலிகள் ஈழம் தருவோம் என்றார்கள் ஆதரவு வழங்கினார்கள் தமிழர்கள் அதை செயல்படுத்தி காட்டினார்கள் ..... தமிழர் தாயக கோட்பாடு இன்னும் தொடர்கிறது ,....அதை அழிப்பதில் சிங்களமும் தொடர்ந்து செயற்படுகிறது .... யூதர்களின் கனவாக இருக்கலாம் நிச்சயம் எமது காலத்தில் நனவாக மாறது என்பதும் எமக்கு தெரியும் ....சிறிலங்காவில் தொடர்ந்து மகிந்தா குடும்பம் ஆட்சியிலிருக்க போவதில்லை என்பதும் தெரியும் அரசியலில் எதுவும் நடக்கும்.... யூதர்களின் கனவு ஆயிரம் வருடங்களுக்கு பின்பு நனவாக முடியுமென்றால் ஏன் எங்கள் கனவு நனவாக முடியாது ....எதுவும் நடக்கலாம்....தமிழர்களிடையே ஒற்றுமை இல்லை  என்ற வாதத்தை வைப்பீர்கள்.....மனித சமுகம் ஒற்றுமையில்லாமல் தான் வாழ்ந்து கொண்டிருக்கு.....ஒற்றுமையாக வாழ்ந்தால் அவன் மனிதனல்ல....யூதர்களிடையே மோதல்கள் உண்டு...
    • "பேசு தமிழா, பேசு"  என்ற  இணையத்தையும்... முடக்கி விட்டார்கள் போலுள்ளது. "ஸ்ராலின்... வாறாரு, விடியல் தரப்  போறாரு" என்ற வாசகத்தை... நம்பிய... தமிழன் வாழ்க்கையில் மண்ணு. 
    • வேறை வழியே இல்லை .  
    • ஜகமே தந்திரம் என்ற தனுஷ் நடித்து நேற்று வெளிவந்த திரைப்படத்தை சற்று முன்னர்தான் பார்த்து முடித்தேன், படம் பார்ப்பதற்கு முன்னதாகவே ஈழத்தமிழர்களைப் பற்றிய ஒரு கதையைச் சொல்ல வேண்டும் என்பதற்கான ஒரு திரைப்படத்தை தான் எடுத்துக் கொண்டதில் பெருமைப்படுவதாக இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார், ஆனால் படம் என்னவோ ஈழத்தமிழர்களை கையாலாகாதவர்கள் ஆகாதவர்கள் ஆக காட்டும் சித்தரிப்பு இடம்பெற்றிருக்கிறது, ஒரு நாட்டுக்கான அத்தனை கட்டமைப்புகளையும் ஏற்படுத்தி முப்படைகளையும் கொண்டு சாதித்துக் காட்டி துரோகத்தால் விழுந்த ஒரு இனத்தை, புலம்பெயர் நாடுகளில் இருந்து திரட்டப்பட்ட நிதியில், பலர் கண்களில் மண்ணை தூவி கடல்வழியாக ஆயுதங்களைக் கொண்டுவந்து சேர்த்த வல்லமையுள்ள புலம்பெயர் தமிழ் மக்களை, அந்த நாட்டுக்கு அகதியாக வருபவர்களை அரவணைத்துஅவர்களுக்கான சட்ட உதவிகளை செய்து வந்த ஒரு குழுவை கையாலாகாதவர்கள் என்றும் மதுரையில் பிறந்து வந்த ஒருவர் லண்டனுக்கு வந்து, வியூகம் அமைத்து இனவாத வெள்ளையர்களுடன் சேர்ந்து அக்குழுவின் தலைவரை உட்பட பலரை கொன்று குவித்து  பின்னர் தன் தவறை உணர்ந்து தானே அந்த இனவாத வெள்ளையர் குழுவை அளிப்பது அல்லது இல்லாதொழிப்பது என்பதனை நிறைவேற்றியுள்ளார்.   படம் போன போக்கில் ஏதோ தனுஷ் வந்து ஈழத்திலும் தனி நாட்டை பெற்றுக் கொடுத்து விடுவாரோ என்பது போல ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது (நகைச்சுவை) ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள் இன்றைய நிலையில் உங்கள் இந்திய தமிழ் சினிமாவை தாங்கி தூக்கி நிறுத்தி நிற்பவர் ஒரு ஈழத்தமிழர் என்பதையும் மறந்துவிடாதீர்கள் ( LYCA) எனக்கு எழுந்த பல கேள்விகள் 1.     புலம்பெயர்ந்த நாடுகளில் இனவாத வெள்ளையர்கள்தான் எங்கள்முதல் எதிரிகளா? 2.     லண்டன் தெரு வீதிகள் சட்ட ஒழுங்கு அற்ற ஆபிரிக்க நாடுகள் போன்றவையா? எங்கேயும் எப்பொழுதும் ஆயுதங்களுடன் ரவுடிக் கும்பல்கள் திரியக்கூடிய இடமா? 3.     காதலிப்பது போன்று நடித்து பழி வாங்கும் குணம் உடையவர்களா ஈழத்து தமிழ் பெண்கள் 4.     ஈழத்தமிழர்கள் கையாலாகாதவர்கள் என்றும் மதுரையிலிருந்து வந்த ஒரு தனி மனிதன் அவர்களின் நீண்ட கால சாம்ராஜ்ஜியத்தை அழித்து பின்னர் தன் தவறை உணர்ந்து அவர்களின் இலக்கை நிறைவேற்றி கொடுத்தார் என்பது நடக்கக் கூடியதா? சாத்தியமானதா  ?நடந்திருக்கிறதா? 5.       நீங்கள் உண்மையில் ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளை சொல்வதற்காக படம் எடுக் க முயல் கிறீர்களா அல்லது அதை சொல்வதன் மூலம் உலகளாவிய ரீதியில் உங்கள் வியாபார இலக்கை அடைய முயல் கிறீர்களா? 6.       இவ்வளவு பெரிய பணச்செலவில் 17 மொழிகளில் வெளியிடப்படும் ஒரு திரைப்படத்துக்கு முறையான உள்ள ஈழதமிழ் பேச்சு முறையை ஏன் உள்வாங்க முடியவில்லை? 7.       படத்தின் நாயகனே தனது சொந்த ஊரில் வந்தேறிகள் ஆக உள்ளவர்களை எதிர்ப்பதாக காட்டிவிட்டு வெள்ளை இனத்தவரின் நாடுகளில் மட்டும் அவர்களிடம் இவ்வாறான ஒரு பண்பு இருக்கக்கூடிய கூடி யற்கான தான நியாயத்தை ஏன் கூற மறந்து விட்டீர்கள் ( தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய உள்ள ஈழதமிழ் அகதிகள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பது உங்களுக்கும் தெரிந்திருக்கும்)  
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.